Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 01:14.40 AM GMT ]

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 213,907

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 35,995
ஐக்கிய தேசியக் கட்சி - 855

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 253,542
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20,279
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 273,821
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 426,813

இலங்கை தமிழரசுக் கட்சி - 14 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

 

 

செய்தி, லங்காசிறீ.

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பயும் சம்பந்தரையும் திட்டிய புலம் பெயர் தமிழரும் விக்னேஷ் வரனை பூனை என்ற சீமானும் இப்ப என்ன சொல்ல போகினம்

 

 

 

யாரும் சொல்ல என்ன இருக்கிறது.
விக்கினேஸ்வரன் இப்போ என்ன புலியா? புலி என்றால் அதற்கு என்று ஒரு தனி குணம் இருக்கிறது. தண்ணி கரையில் இருக்கும் முதலைக்கும் தண்ணி காட்டிவிட்டு தண்ணி குடித்துவரும் ஒரே மிருகம் புலி. இதற்கும் விகினெசிட்கும் வெகு தூரம்.
 
சீமான் யாரையும் அவருக்கு வோட்டு போடாதீர்கள் என்று சொல்லவில்லை. 
அடுத்தவனை தட்டிவிடும் வேலைகளை செய்யாதீர்கள் என்றுதான் சொல்லி இருந்தார் 
 
நீங்களும் வெருண்ட கூட்டத்துடன் சேர்ந்து விட்டதால் ............. உங்களுக்கும் இருட்டாய் இருப்பதெல்லாம் பேயாய் தெரிகிறது.
 
ஒரு மனிதனை உருவாக்குவது.......... நான் எங்கிருந்து வந்தேன் என்ற ஒரே சிந்தனைதான். அதை இழந்தவன் மனிதானாகவே இருந்ததில்லை.
இந்த உலகத்தில் படைக்கப்படும் அனைத்து படைப்புக்களும் எதிர்கால மனித வாழ்வை கருத்தில் கொண்டே உருவாக்க படுகிறது. அதற்கு கடந்த கால இல்லாமை உந்துதலாக இருக்கிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 01:14.40 AM GMT ]

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 213,907

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 35,995

ஐக்கிய தேசியக் கட்சி - 855

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 253,542

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20,279

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 273,821

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 426,813

இலங்கை தமிழரசுக் கட்சி - 14 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

 

 

செய்தி, லங்காசிறீ.

 

கள்ள வாக்குகள் என்று ஒரு 30 ஆயிரத்தை விட்டாலும்...............
5ஆயிரம் பேர் துரோகம் இழைக்க அங்கே இருக்கிறார்கள்  என்பது. தேர்தல் வெற்றியை விட முக்கியமான செய்தி.
இதற்கு மேலாகத்தான் 30 வருடம் மக்களை பாதுகாத்து காப்பரணை கட்டி வைத்து காவல் காத்தார்கள் என்பது அதிசயமானது. 
இந்த இனத்திற்கு இக்கேடே பொருத்தமானது ! 
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு வென்றது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

புலி, பூனை, புனுகு எதுவென்றாலும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்வோம் என்றால் மக்கள் தெரிவு செய்வார்கள் என்பது தெரிந்ததே. அரசியல் அபிலாஷைகளை வெல்லவும், தேசியத்தை மேலும் வலுவாக்கவும் இந்தத் தேர்தலில் வாக்களித்த மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய கூட்டமைப்பு உறுதியோடு செயற்படவேண்டும்.


மீண்டும் தொடங்கும் மிடுக்கு

மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர்
ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான்

ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று
வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு

தங்கநகைகள் தலைக்கணிந்த பெண்களே
கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப்
பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல்
முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும்
பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும்
அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத
எந்தச் சொல்லுண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி
உள்ளம் நெகிழ்ந்தான் ஒரு கதிரைக் கொத்தாகக்
கிள்ளி முகர்ந்தான் கிறுகிறுத்துப் போகின்றான்.

வாடும் வயலுக்கு வார்க்கா முகில் கதிர்கள்
சூடும் சிறுபயிர்மேல் ‘சோ’ வென்று நள்ளிரவிற்
கொட்டும் உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய்
எட்டுத் திசையும் நடுங்கி முழங்கி எழும்
ஆட்டத்து மங்கையர்போல் அங்கு மொய்த்து நின்ற பயிர்

பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே
கொள்ளைபோல் வந்து கொடுமை விளைவித்து
வெள்ளம் வயலை விழுங்கிற்று……..பின்னர் அது
வற்றியதும் ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி
பற்றி, அதோ பார் பழையபடி கிண்டுகிறான்
சேர்த்தவற்றை முற்றும் சிதறவைக்கும் வானத்தைப்
பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்
ஈண்டு முதலில் இருந்து முன்னேறுதற்கு
மீண்டும் தொடங்கும் மிடுக்கு.


படைப்பு மகாகவி( து.உருத்திரமூர்த்தி)

mullai_2192013_1.jpgkili_2192013_1.jpgmannar_2192013_1.jpgvavunija_2192013_1.jpg


Name of the Party/Independent Group No. of Votes Received
Percentage  %
No. of Members Elected
Ilankai Tamil Arasu Kadchi 213,907
84.37 %
14
United People's Freedom Alliance 35,995
14.20 %
2
United National Party 855
0.34 %
 
Democratic Unity Alliance 525
0.21 %
 
Independent Group 1 406
0.16 %
 
Independent Group 6 356
0.14 %
 
Sri Lanka Mahajana Pakshaya 292
0.12 %
 
Independent Group 7 271
0.11 %
 
Independent Group 3 215
0.08 %
 
United Socialist Party 165
0.07 %
 
Democratic Party 111
0.04 %
 
Socialist Equality Party 101
0.04 %
 
Jana Setha Peramuna 74
0.03 %
 
Independent Group 9 63
0.02 %
 
Independent Group 8 59
0.02 %
 
People's Liberation Front 56
0.02 %
 
Independent Group 4 28
0.01 %
 
Independent Group 2 24
0.01 %
 
Independent Group 5 23
0.01 %
 
Sri Lanka Labour Party 16
0.01 %
 
Total Valid Votes
253,542
92.59 %
 
Rejected Votes
20,279
7.41 %
 
Total Votes Polled
273,821
64.15 %
 
 

 

மிகவும் சந்தோசமான செய்தி. அந்த நாட்களில் எங்கள் பகுதியில் கூட்டணி வெல்ல முடியாத நிலையில், யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டு தொடர்ச்சியாக வெடி கொளுத்தி கொண்டாடுவோம். அபிவிருத்தி என்று படம் காட்டினாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

கிளிநொச்சி மாவட்ட உறுதிப்படுத்தப்படாத விருப்பு வாக்கு விபரம்

இல 1 - ப அரியரத்தினம் -. 27264 விருப்பு வாக்குகள்

இல 5 - த குருகுலராசா -. 26427 விருப்பு வாக்குகள்

இல 7 - சு பசுபதிப்பிள்ளை -. 26132 விருப்பு வாக்குகள்

from FB(

வட மாகாணசபை
  • கருத்துக்கள உறவுகள்

எந்த எந்த வேட்ப்பாளர்கள் வெற்றி பெற்றது யாரு தோல்வியை தழுவினது பட்டியல இனைங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்

3 ஆம் இணைப்பு வடக்கில் மலர்ந்தது தமிழர் ஆட்சி: கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!


[sunday, 2013-09-22 05:40:19]

Thamilarasu-ilangai-150.jpg

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.

  

முழு உலகத்தாலும் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் 7 ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி கண்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆசனம் 3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக, ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமாக வென்றது.

வவுனியாவில் 6 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது. யாழ்ப்பாணத்தில் 16 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியது. இரு ஆசனங்களை மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றது. மன்னார் மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் பெற்றுக் கொண்டன. வடக்கில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கியது.

<*> யாழ் மாவட்டம்

* சாவக்கச்சேரி தேர்தல் தொகுதி

இலங்கை தமிரசுக்கட்சி 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193
ஐக்கிய தேசியக் கட்சி - 89
செல்லுப்படியான வாக்குகள் 27,415
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,378
அளிக்கப்பட்ட வாக்குகள் 29,793
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 49,479

* பருத்தித்துறை தேர்தல் தொகுதி

இலங்கை தமிரசுக்கட்சி - 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953
ஐக்கிய தேசியக் கட்சி - 26

செல்லுப்படியான வாக்குகள் 21,038
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,444
அளிக்கப்பட்ட வாக்குகள் 22,482
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 35,054

* கோப்பாய் தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசுக்கட்சி - 26,467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386
ஐக்கிய தேசியக்கட்சி - 127

* மானிப்பாய் தேர்தல் தொகுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 28,210
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 3, 898

* வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசு கட்சி - 23442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3763
ஐக்கிய தேசியக் கட்சி - 173

* ஊர்காவத்துறை தேர்தல் தொகுதி

தமிழ் தேசிய கூட்டமைப்பு ......8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி .......4164

* யாழ்.தேர்தல் தொகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 16421 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2416 ஐக்கிய தேசியக் கட்சி - 60

*நல்லூர் தேர்தல் தெகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 23733 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2651 ஐக்கிய தேசியக் கட்சி - 148

* உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 18855 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2424 ஐக்கிய தேசியக் கட்சி - 57

<*> முல்லைத்தீவு மாவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு .....28266 ...4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ......7209 ..1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ........199
ஜக்கிய தேசிய கட்சி .......197

<*> கிளிநொச்சி மாவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ......37079.......3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி .......7897........1 ஆசனம்

<*>மன்னார் மாவட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 33,118 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 15,104 (1 ஆசனம்)
முஸ்லிம் காங்கிரஸ் - 4471 (1ஆசனம்)
ஐக்கிய தேசியக் கட்சி - 180

<*> வவுனியா மாவட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 41,225

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644

இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

 

 

நன்றிகள்

http://seithy.com/breifNews.php?newsID=93417&category=TamilNews&language=tamil

 

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1187300_481101178664250_413690274_n.jpg


995190_619904208062201_285864837_n.jpg

 

இப்ப என்னா செய்வீங்க?


558851_387017284759088_985427761_n.jpg

 

ஈ.பி.டி.பியின் கோட்டை தகர்ந்தது.
==========================

சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலான மக்கள் மீதான அடக்குமுறை ஊடாக, ஊர்காவற்துறையை தமது கோட்டையாக்கியது சிறீலங்கா அரசின் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி.

 

fb

  • தொடங்கியவர்
முல்லைத்தீவு மாவட்ட விருப்பு வாக்குகள்
 
அன்ரனி  ஜெகநாதன் 9 309 
சிவப்பிரகாசம் சிவயோகன் 9 296 
துரைராஜா ரவிகரன் 8 868 
கனகசுந்தரம் சுவாமி வீரபாகு 8 702 

கிளிநொச்சி மாவட்ட உறுதிப்படுத்தப்படாத விருப்பு வாக்கு விபரம்

இல 1 - ப அரியரத்தினம் -. 27264 விருப்பு வாக்குகள்

இல 5 - த குருகுலராசா -. 26427 விருப்பு வாக்குகள்

இல 7 - சு பசுபதிப்பிள்ளை -. 26132 விருப்பு வாக்குகள்

from FB(

வட மாகாணச

 

கட்சியைத் தெரிவு செய்வதில் மட்டுமல்ல சரியான நபர்களைத் தெரிவு செய்வதிலும் மக்கள் தமது அரசியல் முதுமையை வெளிப்படுத்தியள்ளனர்

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு போடாமல் இருந்த பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டு இருந்தால் இன்னும் ஒரு 4 சீட் கூட எடுத்து இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முல்லைத்தீவு மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 07:54.09 AM GMT ]
mullai_22913_3.jpg
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்த வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 

இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக

அன்ரனி ஜெகிநாதன் 9,309 விருப்பு வாக்குகளையும்

சிவப்பிரகாசம் சிவயோகன் 9,296 விருப்பு வாக்குகளையும்,

துரைராஜா ரவிகரன் 8,868 விருப்பு வாக்குகளையும்

கனகசுந்தரம் சுவாமி வீரபாகு 8,702 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக அகமட்லெப்பை காசீம் 1,726 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளார்.

mullai_22913_1.jpg

mullai_22913_2.jpg

mullai_22913_3.jpg

mullai_22913_4.jpg

 


கிளிநொச்சி மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்! - மூவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 07:39.47 AM GMT ]
kili_2292013_3.jpg
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.       பசுபதி அரியரத்தினம் -27264 விருப்பு வாக்குகள்

2.       தம்பிராசா குருகுலராசா  26427 விருப்பு வாக்குகள்

3.       சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை  26132 விருப்பு வாக்குகள்.

வேட்பாளர் இல பெயர் விருப்பு வாக்கு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
1 பசுபதி அரியரத்தினம் 27264
5 தம்பிராஜா குருகுலராஜா 26427
7 சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 26132
3 கந்தசாமி திருலோகமூர்த்தி 4199
4 கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி 2953
2 வீரசிங்கம் ஆனந்த சங்கரி 2896
6 பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம்   1188
   
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

7 வை. தவநாதன் 3753
1 அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன் 3531
3 கந்தசாமி பிரகலாதன் 3435
4 வேணுகோபால் கீதாஞ்சலி 1866
5 பொன்தம்பி தர்மசிறீ 1533
2 அருணாசலம் விஜயகிருஷ்ணன் 977
6 மாரிமுத்து மகாதேவன் 404

kili_2292013_1.jpg

 

kili_2292013_2.jpg

kili_2292013_3.jpg

kili_2292013_4.jpg

kili_2292013_5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில், வடக்கு மாகாணத் தேர்தலில் மொத்தம் உள்ள 36 தொகுதிகளில், 28 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று இருக்கிறது.

ராஜபக்சே கட்சியும், துரோகக் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வி அடைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில் 4 இடங்கள், முல்லைத் தீவில் 4 இடங்கள், வவுனியாவில் 4 இடங்கள், கிளிநொச்சியில் 3 இடங்கள், மன்னாரில் 3 இடங்கள் ஆக 28 தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்யும் நோக்கோடு ராணுவ உதவியுடன் வன்முறைக் குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளான ஆனந்தி சசிதரன் தேர்தல் முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தந்தை செல்வா காலத்தில் சிங்கள அரசு அறிவித்த மாகாணக் கவுன்சில் அதிகாரங்களோ, அதிபர் ஜெயவர்த்தனா காலத்தில் மீண்டும் அறிவிக்கப்பட்ட மாவட்டக் கவுன்சில் அதிகாரங்களோ கூட இப்போது மாகாண சபைகள் மூலம் கிடைக்காது.

வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு சிங்கள அரசு செயல்படுவதாக ராஜபக்சே செய்த பொய்ப் பிரச்சாரத்தையும் ராணுவம், போலீஸ் மற்றும் வன்முறையாளர்களைக் கொண்டு ஏவிய அடக்குமுறை அச்சுறுத்தலையும் மீறி ஈழத் தமிழர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குகள், சிங்கள அரசின் அராஜாக அரசுக்கு எதிரான வாக்குகளே ஆகும்.

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அரசருக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, பின்னர் சரியான சந்தர்ப்பத்தில் சுதந்திர அயர்லாந்தை டிவேலாராவும் சின்பென் இயக்கமும் பிரகடனம் செய்ததுபோல, அத்தகைய வரலாறு தமிழ் ஈழத்திலும் மீண்டும் திரும்பும் என்பதுதான் காலத்தின் தீர்ப்பாக இருக்கும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததுடன், நான்கு லட்சம் தமிழர்களை அகதிகள் என்ற பெயரில் ஆடு மாடுகளைப் போல கொட்டடியில் அடைத்து வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தியது. போருக்குப் பிறகும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. வடக்கு மாநிலம் முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

ஜனநாயகத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்ற மாயத் தோற்றத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்து வதற்காகவும் இந்தத் தேர்தலை இராஜபக்சே அரசு நடத்தியது.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது.

ராஜபக்சே கட்சியால் வெறும் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக பதிவான சுமார் 5 லட்சம் வாக்குகளில் 80% வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது தமிழீழக் கோரிக்கைக்கு வலு சேர்த்து விடும் என்பதால், அக் கூட்டமைப்பை முறியடிக்க வேண்டும் என இராஜபக்சே கட்சி பிரச்சாரம் செய்தது. ஆனால், இராசபக்சே கட்சிக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்திருப்பதன் மூலம் இலங்கை பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

எனவே, இலங்கை வடக்கு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க விருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஈழ மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும்.

தேர்தல் முடிவு தமிழீழ கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்பதால், ஈழத் தமிழர்களின் இந்த விருப்பத்தை ஐ.நா. மூலம் நிறைவேற்ற இந்தியாவும், உலக நாடுகளும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இலங்கை வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் தேர்தல் சர்வதேச நிர்ப்பந்தங்களின் காரணமாகவே நடத்தப்பட்டது. தேர்தலை அறிவித்தாலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்கும் விதமாகப் பல்வேறு இடையூறுகளை இலங்கை அரசு செய்துவந்தது.

அங்கு தமிழ் மக்கள் தமது கருத்து என்ன என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். சிங்கள அரசின் அடக்கு முறைகளுக்குப் பணியமாட்டோம் எனத் துணிச்சலோடு அறிவித்துவிட்டனர்.

ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் அவர்கள் வெளிப்படுத்திவிட்டனர். முஸ்லிம் அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என அறிக்கை விடுத்த ஒரே தமிழக அரசியல் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும் தான். இனியும் கூட அதே தொலைநோக்கோடுதான் இந்தப் பிரச்சனையை விடுதலைச் சிறுத்தைகள் அணுகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Maalaimalar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்!
 
வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பினை வவுனியா மாவட்ட செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அறிவித்துள்ளது.

 

இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக

வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 விருப்பு வாக்குகளையும்,

கந்தர் தாமோதரம் லிங்கநாதன் 11,901 விருப்பு வாக்குகளையும்

ம. தியாகராசா 11,681 விருப்பு வாக்குகளையும்

ஐ.இந்திரராசா 11, 535 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பகா தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும் ஏ.ஜயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 

  • தொடங்கியவர்

யாழ் மாவட்ட  விருப்பு வாக்கு (உறுதியான செய்தி அல்ல)

1. திரு.விக்னேஸ்வரன்
2. அனந்தி சசிதரன்
3. சித்தார்த்தன்
4. கஜதீபன்
5 சயந்தன்

சீமான் ஒன்றும் சொல்ல வில்லையா?

1235983_664520193558248_1197132653_n.jpg


1236666_398181483638748_1874784173_n.jpg
சப சபா... உந்த வடக்கு மாகாண சனங்களைப் புரிஞ்சுக்கவே முடில்ல... வீணைய வாசிங்கடா எண்டன் நரம்பை அறுத்தாங்க...வெற்றிலை தெய்வீகப் பொருள் எண்டன் அத சப்பி என்ர முகத்திலையே துப்புறாங்க...லொல்.

578665_205208232986861_1271993504_n.jpg
இப்படி கவுத்துப்புட்டாங்க Bro! "றெயின்" ஒன்று குடுத்ததும் வேஸ்ட் Bro!!! ... 

'மக்கள் பெரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்' - விக்னேஸ்வரன்(BBC)

வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

.130811180140_vigneswaran_srilanka_304x17

மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, எமது நிருபரிடம் பேசிய அவர், இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.

சம்பந்தர் பெருமிதம்

இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் அவர்கள், மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள் என்றும், அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றும், அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம் என்றும் கூறினார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள எமது செய்தியாளர், அங்கு தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் நிலைமை ஓரளவு அமைதியாக இருப்பதாகவும், காலையில் எந்தவிதமான ஆரவார தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களையும் காணமுடியவில்லை என்றும் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/09/130921_vigneswaranonresult.shtml

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

இப்ப என்னா செய்வீங்க?

558851_387017284759088_985427761_n.jpg

 

ஈ.பி.டி.பியின் கோட்டை தகர்ந்தது.

==========================

சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலான மக்கள் மீதான அடக்குமுறை ஊடாக, ஊர்காவற்துறையை தமது கோட்டையாக்கியது சிறீலங்கா அரசின் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி.

 

fb

இந்த வெள்ளை நிற உடுப்பில் இருக்கிறவன்..ரொம்ப கெட்டவன் மச்சி..படு கேவல‌மாய் எல்லாம் எழுதுவான் முகப் புத்தகத்தில் எங்கட போராட்டதையும் அந்த போராட்டத்தில் வீரச்சாவு அடைந்தவர்களை பற்றியும்....இவன இப்ப முகப்புத்தகத்தில் காணக் கிடைப்பது இல்லை....சுருக்கமாய் சொல்லப் போனால் இவன் ஒரு பல்லு இல்லாத பாம்பு‍............. .,...........ஓட ஓட விரட்டி அடிக்கனும் இவன‌      

  • கருத்துக்கள உறவுகள்

அமோகமாய் வெற்றியடைந்த  எமது தமிழரசுக் கட்சிக்கு மனமுவர்ந்த வாழ்த்துக்கள்! :D  :D

 

நேற்றுக் காணவில்லை , இன்று பார்த்தால் பதினாறு பக்கம் . கண்களில் நீரோடத் துடைத்துத் துடைத்துப் படித்துக் கொண்டிருந்தேன்.

உலக நாடுகளே ! இனியாவது கண்திறந்து பாருங்கள் , எமது பலத்தை உடைத்தீர்கள் , போகட்டும் ,தமிழ் மக்கள் தமது ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு உடுக்கை இழந்தவனாய் கையின்றி நிக்கிறார்கள்.

இனியாவது  கருணைகூர்ந்து கைதந்து எமது சொத்தை மீட்டுத் தாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை அடக்குமுறைக்குள் இருந்தாலும் மக்கள் நேரம் வரும்போது தம் எதிர்ப்பைக் காட்டுவது இதிலிருந்து தெரிகிறது. இத்தனை கேவலமான நிலையிலும் அரசுக்கும் ஒட்டுக்குழுவுக்கும் ஆதரவளித்துள்ள கேடுகேட்டவர்களை என்ன செய்வது???

  • கருத்துக்கள உறவுகள்
3sic.jpg
3w7w.jpg
 
 
 
 
யாழ்ப்பாணம் முதலாவது விக்கி ஐயா,இரண்டாவது அனந்தி அக்கா,
பின் சித்தாத்தன் ,அர்னோல்ட்,சிவஞானம் ஐயா    

அமோகமாய் வெற்றியடைந்த  எமது தமிழரசுக் கட்சிக்கு மனமுவர்ந்த வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
apoe.jpg
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள்! சி.வி.விக்னேஸ்வரன் முதலிடம்
 
vikki_judge.jpg
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக

சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும்

அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும்

தர்மலிங்கம் சித்தர்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும்

பெற்றுள்ளனர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.