Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவின்றி தொடரவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் - அமைச்சரவை கையிறுழுத்தல் தொடர்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவை கையிறுழுத்தல் தொடர்கிறது – 2 அமைச்சர்கள் தமிழரசுக் கட்சிக்கு ஏனைய 2 அமைச்சுப் பொறுப்புகளும் தவிசாளர் பொறுப்பும் 3 கட்சிகள் தமக்கிடையே பகிரவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உறுதியாக உள்ளதாக தெரிய வருகிறது. 

இன்று கொழும்பில் கூடிய கூட்டம் நீண்ட இழுபறிகளின் பின் முடிவுற்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இறுதி முடிவு கொழும்பில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் முன்  சத்தியப்பிரமாணம் எடுத்தல் என்பதில் கூட்டமைப்பின் தலைமை விருப்பம் கொண்டுள்ளதாகவும் அது குறித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் தொடர்ந்ததாகவும் தெரிய வருகிறது. 

இந்த சத்தியப்பிரமான விடயத்தில் கிளிநொச்சி முல்லைத் தீவு மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் என்ற விடயத்தில்  கடுமையான எதிர்ப்பலைகளைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97247/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

5 மாவட்டத்தை சேர்ந்தவர்களும் எதிர்த்தால் அப்ப யார்தான் ஆதரித்து பேசியது? ஓ!!! திருகோணமலைச் சம்பந்தரும் கொழும்பு விக்னேஸ்வரனும்!

இதத்தானோ பிரதேசவாதம் பேசாமல் பிரதேசவாதம் பேசல் என்பது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியெல்லாம் சும்மா குழப்ப எழுதப்படும் செய்தி. கூட்டமைப்பின் தலைமை சரியோ பிழையோ உறுதியாக இருக்கிறதுதான் உண்மை. தங்களைத் தாங்களே திருப்திபடுத்துவதற்கு எழுதப்படும் செய்திகள் இதுபோன்றன. அமைச்சர்களைத் தெரிவுசெய்வதில்கூட அவர்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. கூட்டமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பு, அதில் பலர் பலதையும் சொல்வார்கள். கூடி ஒரு முடிவுக்கு வர நேரம் எடுப்பது இயல்பே.

முதலமைச்சர் தேர்வுபோல் நல்ல முடிவாக எடுக்கட்டும். எடுத்தபின் collective responsibility க்கு அமைய அந்த முடிவை எல்லோரும் ஆதரிப்பார்கள் என நம்பலாம்.

ஜனநாயக விழுமியங்கள் பழக்கமில்லாத நமக்கு, நம்து ஊடகங்களுக்கு இது இழுபறிபோலவும் பதவிச்சண்டைபோலவும்தான் தெரியும்.

ஏனென்றால் நாம் தனிமனித முடிவுகளுக்கு கீழ் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.

ஆனாலும் நான்கு அமைச்சர்களைத் தெரிவு செய்வதற்கு நான்கு தடவை கூடி ஆராய்வது றொம்ப ஓவராகத் தான் இருக்கிறது.

மாறாக அடுத்த ஒருவருடத் திட்டம் குறித்து நான்கல்ல நாற்பது முறை கூடி ஆராய்ந்தாலும் அதில் பொருள் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை வடக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க தயாராக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது இன்னமும் முடிவாகவில்லை. அதற்காக மேற்கொள்ளப்பட்ட நேற்றைய பேச்சுவார்த்தை முடிவு ஏதும் எடுக்கப்படாமல், முடிவடைந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தேர்வு செய்து ஆட்சியில் அமர்த்துவது என இலங்கை வடக்குப் பகுதி தமிழ் மக்கள் முடிவு செய்து, வாக்களித்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்போ, தமது அமைச்சர்களாக யாரை தேர்வு செய்வது என முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது!

‘இறுதி’ vs ‘இறுதியோ இறுதி’

புதிய ஆட்சியில் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்று முடிவு எடுக்கவே, இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நாள் குறித்துவிட்டு கலைந்தார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள்.

‘இறுதி’ முடிவு எடுக்க அடுத்த ஆலோசனைக் கூட்டம், நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுமாம். அதற்கு அடுத்த ஆலோசனைக் கூட்டம் ‘இறுதியோ இறுதி’ முடிவு எடுக்க எப்போது கூடும் என்று வெள்ளிக்கிழமை சொல்வார்களோ, என்னவோ!

மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள 30 உறுப்பினர்களில், பதவி கிடைக்கப் போவது, 5 பேருக்கு மட்டுமே (முதல்வர், 4 அமைச்சர்கள்). கூட்டமைப்பில் மொத்தமாக உள்ள (ஜெயித்த) கட்சிகள், நான்கு.

சின்ன வயதில் எதுவோ அப்பங்களை பிரித்த கதையாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை, 5 அப்பங்களை 4 கட்சிகளுக்கு பிரிக்க வேண்டும். சிரமமான காரியம்தான். காரணம், பதவி பெற்று மக்களுக்கு சேவை செய்ய 5-க்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

தலைவர் உச்சத்தில்! மற்றையவர்கள் அச்சத்தில்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், தமிழரசு கட்சியை சேர்ந்தவர். முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரனை பரிந்துரைத்ததும் இந்தக் கட்சிதான். இதனால், கைவசமுள்ள 5 பதவிகளில் 1 ஏற்கனவே இந்தக் கட்சியிடம் உள்ளது. மீதியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளில், 2 பதவிகளை கேட்கிறார், தலைவர்!

மீதியாகவுள்ள 4 பதவிகளையும் தமக்கே எடுத்துக் கொள்ளாமல், 2 பதவிகளை 3 கட்சிகளுக்கு விட்டுத்தர சம்மதித்த இவரது பெருந்தன்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டால்தானே, இலங்கை அரசிடம் உள்ள அதிகாரங்களை தமிழர்களுக்கு விட்டுத்தர சிங்கள அரசை இவரால் சம்மதிக்க வைக்க முடியும்?

“இரண்டை, மூன்றால் எப்படி வகுப்பது?” என்று கேட்கிறார்கள், மற்றையவர்கள்.

“அது என்ன பிரம்ம வித்தையா?” என்று கேட்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், “3 கட்சிகளில் 2 கட்சிகள் அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள 1 கட்சி, சபாநாயகர் பதவியை பெற்றுக் கொள்ளட்டும். ப்ராப்ளம் சால்வ்ட்” என்கிறார்.

நல்லவேளையாக 1 கட்சிக்கு அமைச்சர் பதவி, 1 கட்சிக்கு சபாநாயகர் பதவி.. மீதமுள்ள கட்சிக்கு மாகாணசபையில் பியூன் வேலை தருகிறோம் என்று தலைவர் சொல்லவில்லை.

இங்கே அடிக்காதிங்க.. தலைவரே.. அங்கே அடியுங்க!

“ஏங்க.. முதல்வர் உங்க ஆள். 1 அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு, மற்றைய மூன்று கட்சிகளுக்கும் தலா 1 அமைச்சர் பதவிகளை பிரித்துக் கொடுக்கலாமே” என்று கேட்டால், தமிழர் தலைவர் அடிக்க வருகிறாராம்.

சிங்கள அரசிடம் குவிந்து கிடப்பதாக கூறப்படும் அதிகாரத்தை, தமிழர்களுக்கும் நியாய அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப் போகிறாராம், இந்த தலைவர்.

ஆனால், தமிழர்களை கொண்ட ஒரே கூட்டணிக்குள் உள்ள தமிழ் கட்சிகளுக்கு, நியாய அடிப்படையில் அதிகாரத்தை பிரித்துக் கொடுக்கவே இவர் இந்தத் திணறு திணறுகிறாரே…  அப்புறம் எப்படி…?

இதுவரை அனுபவித்தே இராத அமைச்சர் அதிகாரங்களை சொந்தக் கூட்டணிக்குள் பிரித்துக் கொள்ளவே இவர்களுக்கு பல சுற்று பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டால்… சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து அதிகாரங்களை அனுபவித்த சிங்களவரிடம் இருந்து அதை பிரித்து எடுக்க எத்தனை சுற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமோ… விடிந்தமாதிரிதான்!

கூட்டமைப்பின் பதவி அடிபாட்டால்!! குதூகலத்தல் மகிந்த பட்டாளம்….

வட மாகாண சபையில் தேர்தலில் களம் இறங்கும் போது எமக்கு சலுகைகள் அல்ல உரிமை வெல்ல வாக்களியுங்கள் என பலத்த ஆரவாரத்துடன் வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் இன்று எதுவுமற்ற மாகா சபையின் பதவிகட்கு ஆசைப்படுவது தமிழ் இனத்தின் போராட்டத்தை எண்ணி வெட்கப் படும் சூழல் பல் வகை கட்சிகளைக் உடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு மக்களின் அரசியல் தீர்வல்ல மாறாக சுயநலம் சார்ந்த பதவி ஆசை.

இவற்றுக்காகவா இன் நிமிடம் வரை தமிழ் இனம் பல்வகைகளில் போராடியது ஒரு இனம் விடுதலை வேண்டி போராடுகின்ற நிலையில் சிற் சில இடங்களில் சூழ்நிலை கருதி ஏற்படுத்தப் படுகிற பதவிகள் போச்சுக்களில் அரசியலுக்கு அப்பால் சென்று பதவிகளை பகிர வேண்டும் காரணம் போராட்ட இயக்கம், கட்சியின் உள்ளக பாதுகாப்பை அடிப்படையாக வைத்து இவ்வாறான தவறை கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் செய்தது மட்டுமல்லாது அதனால் வந்த விளைவுகளையும் அறுவடை செய்து இன்றைய தமிழரின் அனாதை நிலமைக்கு இவ்வாறான செயற்பாடும் ஒரு காரணியாக கருதப்படுகிறது.

இவ்வாறான வாழ்க்கை அரசியல் பாடத்தை அனுபவமாக கற்ற தமிழ் தலைமைகள் மீண்டும் ஏன் இவ்வாறான பதவி மீதான ஆசை. இவ்வாறான சூழலில் அமைச்சுப் பதவிகள் அன்றி பதவியேற்பு தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலையில் பதவிகட்காய் பதவியேற்பிற்கு தடுமாறுவது சுயநலத்தை வெளிப்படுத்துகிறது.

சாதாரண மாகாண சபையை இயக்க கூட கூட்டுப் பெறுப்பற்ற தமிழ் தலைமைகளிடம் தமிழர் பகுதியின் ஆட்சியை ஒப்படைத்தால் நாளடைவில் தமிழர்கள் தென்பகுதிக்குச் செல்லத் தவற மாட்டார்கள், காரணம் அவ்வாறான நிலையில் ஏற்படுத்தப்படும் சாதாரண காவலாளி தொடக்கம் உயர்நிலை பதவிகள் வரை உறவுகளும் வீட்டுக்காறர்களும் மட்டும் உள்வாங்கப்படுவர் இங்கும் சுய நலம் ஏற்பம் என்பது மறுப்பதற்கில்லை.

மக்கள் மக்கள் என சத்தமிடுபவர்களில் எல்லாருமல்ல ஒரு சிலர் சுயநலத்துடன் செயற்படுவது முழு தமிழரையும் அழிக்கும் முன்னர் நல்ல தலைமைகள் மக்களைக் காக்குமா??

இவ்வாறான தொடர்ந்து எம் சிங்கள இனத்தை இனவாதியா கூறுவது வழமை முதலில் உங்களைத் திருத்துங்கள். அதன் பின் எம்மிடம் விவாதியுங்கள்! எம் இனத்தை கொலையாளி என கூட்சலிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புனிதமானதா? எத்தனை தமிழச்சிகளின் மார்பகங்களை மானபங்கப்படுத்தி தாய்மையையும் தமிழனையும் சித்திரவதைப்படுத்திய கொலையாளிகள், குற்ற வாளிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்கள்! நீதி மன்றத்தின் அதி உச்ச குற்றங்களைப் புரிந்து விட்டு இன்று வெள்ளையாய் வலம் வருகிறார்கள்.

எம்மை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்துவதற்கு முன்னர் தமிழனை கொலை செய்த தமிழனை பட்டியலிட முடியுமா ? அல்லது நீதி மன்றத்தில் நிறுத்த முடியுமா? இல்லை இப்படிப் பட்ட நிலையில் வெட்கம் கெட்ட நிலையில் தமிழர்களின் தீர்வுக்காக! கூட்டமைப்பின் இணைத் தலைவர்கள், உங்களுக்கு என்ன தகுதி தமிழார்கள் மீது?

எம் சிங்களச் சிப்பாய்கள் பெண்களை கண்டு பாவப்பட்ட வேளையில் எல்லாம் முந்திச் சென்று அனியாயம் செய்தது யார்? இன்றைய தமிழர்களின் தலைவர்கள் இவர்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதி மகிந்தவிடம் தீர்வு எதிர் பாற்பது முட்டாள் தனம்..

அது மட்டுமல்லாது இவ்வாறான கூட்டமைப்பாரின் செயற்பாட்டால் ஜனாதிபதி மகிந்தவும் உறவுகளும் பலத்த குதுகலமாக இருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாது சிறு மாகாண சபையை இயக்க திறமையிருந்தாலும் பதவிகளை நிர்வகிப்பதில் தினரும் உங்களை தமிழன் நம்பினான்? ஜனாதிபதி மகிந்த காலத்தை கடத்துகிறார். என்ன செய்வது தமிழரின் தீர்வு யாரிடம்………………

http://www.jvpnews.com/srilanka/49601.html

Share News:
  •  

அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்களை தரவும்: இரா. சம்பந்தன்.

வடமாகாண அமைச்சர் தெரிவில் இழுபறி நிலவுவதால், அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்களை தருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்களுக்கிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (2) இரவு கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஆராயப்பட்ட வேளையில், இலங்கை தமிழரசு கட்சி முக்கிய அமைச்சுக்களான கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை தருமாறு தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இக்கோரிக்கைகளை ஏனைய கட்சி தலைவர்கள் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அமைச்சுப் பதவிகளை கோருபவர்கள் தமக்கான விண்ணப்பப் படிவங்களை தருமாறு உறுப்பினர்களுக்கு இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் தெரிவு குறித்த கலந்துரையாடலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/84470-2013-10-03-05-05-01.html

அப்பாடி இப்பத்தான் நிம்மதியா இருக்கு... நானும் ஏதோ இவங்க ஒற்றுமையா இருந்து சனந்த்துக்கு சேவை செய்வாங்களாக்கும் எண்டு பயந்து போனேன்.

இப்பத்தான் இவங்கள் சுத்த தமிழங்கள்.

கூட்டமைப்பின் பதவி அடிபாட்டால்!! குதூகலத்தல் மகிந்த பட்டாளம்….

வட மாகாண சபையில் தேர்தலில் களம் இறங்கும் போது எமக்கு சலுகைகள் அல்ல உரிமை வெல்ல வாக்களியுங்கள் என பலத்த ஆரவாரத்துடன் வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் இன்று எதுவுமற்ற மாகா சபையின் பதவிகட்கு ஆசைப்படுவது தமிழ் இனத்தின் போராட்டத்தை எண்ணி வெட்கப் படும் சூழல் பல் வகை கட்சிகளைக் உடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு மக்களின் அரசியல் தீர்வல்ல மாறாக சுயநலம் சார்ந்த பதவி ஆசை.

இவற்றுக்காகவா இன் நிமிடம் வரை தமிழ் இனம் பல்வகைகளில் போராடியது ஒரு இனம் விடுதலை வேண்டி போராடுகின்ற நிலையில் சிற் சில இடங்களில் சூழ்நிலை கருதி ஏற்படுத்தப் படுகிற பதவிகள் போச்சுக்களில் அரசியலுக்கு அப்பால் சென்று பதவிகளை பகிர வேண்டும் காரணம் போராட்ட இயக்கம், கட்சியின் உள்ளக பாதுகாப்பை அடிப்படையாக வைத்து இவ்வாறான தவறை கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் செய்தது மட்டுமல்லாது அதனால் வந்த விளைவுகளையும் அறுவடை செய்து இன்றைய தமிழரின் அனாதை நிலமைக்கு இவ்வாறான செயற்பாடும் ஒரு காரணியாக கருதப்படுகிறது.

இவ்வாறான வாழ்க்கை அரசியல் பாடத்தை அனுபவமாக கற்ற தமிழ் தலைமைகள் மீண்டும் ஏன் இவ்வாறான பதவி மீதான ஆசை. இவ்வாறான சூழலில் அமைச்சுப் பதவிகள் அன்றி பதவியேற்பு தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலையில் பதவிகட்காய் பதவியேற்பிற்கு தடுமாறுவது சுயநலத்தை வெளிப்படுத்துகிறது.

சாதாரண மாகாண சபையை இயக்க கூட கூட்டுப் பெறுப்பற்ற தமிழ் தலைமைகளிடம் தமிழர் பகுதியின் ஆட்சியை ஒப்படைத்தால் நாளடைவில் தமிழர்கள் தென்பகுதிக்குச் செல்லத் தவற மாட்டார்கள், காரணம் அவ்வாறான நிலையில் ஏற்படுத்தப்படும் சாதாரண காவலாளி தொடக்கம் உயர்நிலை பதவிகள் வரை உறவுகளும் வீட்டுக்காறர்களும் மட்டும் உள்வாங்கப்படுவர் இங்கும் சுய நலம் ஏற்பம் என்பது மறுப்பதற்கில்லை.

மக்கள் மக்கள் என சத்தமிடுபவர்களில் எல்லாருமல்ல ஒரு சிலர் சுயநலத்துடன் செயற்படுவது முழு தமிழரையும் அழிக்கும் முன்னர் நல்ல தலைமைகள் மக்களைக் காக்குமா??

இவ்வாறான தொடர்ந்து எம் சிங்கள இனத்தை இனவாதியா கூறுவது வழமை முதலில் உங்களைத் திருத்துங்கள். அதன் பின் எம்மிடம் விவாதியுங்கள்! எம் இனத்தை கொலையாளி என கூட்சலிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புனிதமானதா? எத்தனை தமிழச்சிகளின் மார்பகங்களை மானபங்கப்படுத்தி தாய்மையையும் தமிழனையும் சித்திரவதைப்படுத்திய கொலையாளிகள், குற்ற வாளிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்கள்! நீதி மன்றத்தின் அதி உச்ச குற்றங்களைப் புரிந்து விட்டு இன்று வெள்ளையாய் வலம் வருகிறார்கள்.

எம்மை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்துவதற்கு முன்னர் தமிழனை கொலை செய்த தமிழனை பட்டியலிட முடியுமா ? அல்லது நீதி மன்றத்தில் நிறுத்த முடியுமா? இல்லை இப்படிப் பட்ட நிலையில் வெட்கம் கெட்ட நிலையில் தமிழர்களின் தீர்வுக்காக! கூட்டமைப்பின் இணைத் தலைவர்கள், உங்களுக்கு என்ன தகுதி தமிழார்கள் மீது?

எம் சிங்களச் சிப்பாய்கள் பெண்களை கண்டு பாவப்பட்ட வேளையில் எல்லாம் முந்திச் சென்று அனியாயம் செய்தது யார்? இன்றைய தமிழர்களின் தலைவர்கள் இவர்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதி மகிந்தவிடம் தீர்வு எதிர் பாற்பது முட்டாள் தனம்..

அது மட்டுமல்லாது இவ்வாறான கூட்டமைப்பாரின் செயற்பாட்டால் ஜனாதிபதி மகிந்தவும் உறவுகளும் பலத்த குதுகலமாக இருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாது சிறு மாகாண சபையை இயக்க திறமையிருந்தாலும் பதவிகளை நிர்வகிப்பதில் தினரும் உங்களை தமிழன் நம்பினான்? ஜனாதிபதி மகிந்த காலத்தை கடத்துகிறார். என்ன செய்வது தமிழரின் தீர்வு யாரிடம்………………

http://www.jvpnews.com/srilanka/49601.html

Share News:
  •  

எப்படித்தான் இப்படி செய்திகள் உங்களுக்கு கிடைக்குதோ?

  • கருத்துக்கள உறவுகள்

முடிவின்றி தொடரவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் - அமைச்சரவை கையிறுழுத்தல் தொடர்கிறது

03 அக்டோபர் 2013

2ஆம் இணைப்பு - வடமாகாண அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன:-

வடமாகாண அமைச்சர் தெரிவில் இழுபறி நிலவுவதால், அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்களை வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (2) இரவு கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஆராயப்பட்ட வேளையில், இலங்கை தமிழரசு கட்சி முக்கிய அமைச்சுக்களான கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை வழங்குமாறு தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இக்கோரிக்கைகளை ஏனைய கட்சி தலைவர்கள் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அமைச்சுப் பதவிகளை கோருபவர்கள் தமக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்குமாறு கட்சிகளுக்கு இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் தெரிவு குறித்த கலந்துரையாடலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97247/language/ta-IN/article.aspx

தமிழண்டா...!   பெருமையை காப்பாத்தீட்டாங்கப்பா...     இதுதான் தமிழருக்கு தீர்வு வாங்கி தாற இராஜதந்திரம் எண்டு சொல்லுகிறார்கள்...    

அனந்தி அக்காவை இதுக்கை வாழ்த்த வேணும்...  புடுங்கலிலை இருந்து மனிசி தானாய் விலகீட்டுது... 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. கூட்டமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பு, அதில் பலர் பலதையும் சொல்வார்கள். கூடி ஒரு முடிவுக்கு வர நேரம் எடுப்பது இயல்பே.

முதலமைச்சர் தேர்வுபோல் நல்ல முடிவாக எடுக்கட்டும். எடுத்தபின் collective responsibility க்கு அமைய அந்த முடிவை எல்லோரும் ஆதரிப்பார்கள் என நம்பலாம்.

ஜனநாயக விழுமியங்கள் பழக்கமில்லாத நமக்கு, நம்து ஊடகங்களுக்கு இது இழுபறிபோலவும் பதவிச்சண்டைபோலவும்தான் தெரியும்.

ஏனென்றால் நாம் தனிமனித முடிவுகளுக்கு கீழ் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.

அப்ப சம்பந்தன் ஐயாவின் முடிவு.........
கடவுள் எடுக்கும் முடிவா??
 
அது தனிமனித முடிவு ஆகாது அது அது பரோலோக முடிவாகும்.
பூமிக்கு பொருந்துமா........?
அப்படி என்று பொறுத்திருந்துதான் பார்க்கனும்.
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு  என்பது ஒரு பெரும் முயற்சி.

அதில்

பல தலைவர்கள்

பல இயக்கங்கள்

பல கொள்கையை  உடையவர்கள்

நல்லவர்கள்

கெட்டவர்கள்

கொள்கைக்காக  வந்தவர்கள்

அதைக்குலைக்க  வந்தவர்கள்.........  என்று பலரும் இருக்கக்கூடும்.

எனவே ஒரு முடிவுக்கு வருவது என்பது அவ்வளவு  சுலபமல்ல  என்பது

இது போன்ற சமூக சேவைகளை  செய்பவர்களுக்கு

செய்தவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனாலும்   நல்ல முடிவை  எதிர்பார்ப்போம்

கூட்டமைப்பு  என்பது இன்றைய  எமது தேவை.

இன்று நாம் கொண்டு ஓடும் தடி.

அதை  உணர்ந்து பொறுமை  காப்போம்............. 

அப்ப சம்பந்தன் ஐயாவின் முடிவு.........
கடவுள் எடுக்கும் முடிவா??
 
அது தனிமனித முடிவு ஆகாது அது அது பரோலோக முடிவாகும்.
பூமிக்கு பொருந்துமா........?
அப்படி என்று பொறுத்திருந்துதான் பார்க்கனும்.

நுளம்பெண்ணை அடிக்கவே இந்த அடிபாடு எண்டால் ...   மன்னிக்க வேணும்  ஜனநாயகம் எண்டால்  தீர்வை வாங்க சிங்களவனோடை எப்பிடி அடிபட வேணும்  எண்டு பயிற்ச்சி எடுக்கினம் எண்டு அர்த்தமாம் ...

கடுமையான பயிற்சியே இலகுவான சண்டை..   ( கிட்டண்ணை என்னை மன்னிக்க வேணும்... ) 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு  என்பது ஒரு பெரும் முயற்சி.

அதில்

பல தலைவர்கள்

பல இயக்கங்கள்

பல கொள்கையை  உடையவர்கள்

நல்லவர்கள்

கெட்டவர்கள்

கொள்கைக்காக  வந்தவர்கள்

அதைக்குலைக்க  வந்தவர்கள்.........  என்று பலரும் இருக்கக்கூடும்.

எனவே ஒரு முடிவுக்கு வருவது என்பது அவ்வளவு  சுலபமல்ல  என்பது

இது போன்ற சமூக சேவைகளை  செய்பவர்களுக்கு

செய்தவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனாலும்   நல்ல முடிவை  எதிர்பார்ப்போம்

கூட்டமைப்பு  என்பது இன்றைய  எமது தேவை.

இன்று நாம் கொண்டு ஓடும் தடி.

அதை  உணர்ந்து பொறுமை  காப்போம்............. 

நீங்கள் சொல்வதெல்லாம் சரியானவை ......
 
இந்த அனுபவம் கூடியவர்கள்.
பதவிகளுக்கு பொருத்தமானவர்கள்.
 
ஏன் தேர்தலில் நின்று மக்களின் வாக்குகளை பெறவில்லை???
 
குழப்ப வந்தவர்கள் கைகளுக்கு பதவிகள் போவதை எப்படி ஏற்க முடியும்?? 
  • கருத்துக்கள உறவுகள்

இளையவர்களின் வயதளவு அல்லது அதற்குக் கூடிய அனுபவம் முதியவர்களுக்கு உள்ளதால் அகவை, கல்வி, பட்டறிவு உள்ளவர்களையும் அரசியல் சாணக்கியம், இராஜதந்திரம் தெரிந்தவர்களையும் கிடைக்கப்பெறும் மூத்தோரின் விண்ணப்பங்களில் இருந்து சம்பந்தன் ஐயா தெரிந்தெடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதெல்லாம் சரியானவை ......
 
இந்த அனுபவம் கூடியவர்கள்.
பதவிகளுக்கு பொருத்தமானவர்கள்.
 
ஏன் தேர்தலில் நின்று மக்களின் வாக்குகளை பெறவில்லை???
 
குழப்ப வந்தவர்கள் கைகளுக்கு பதவிகள் போவதை எப்படி ஏற்க முடியும்?? 

கனக்க  போவானேன்

இங்கு நாடு கடந்த அரச  தேர்தலில்  நீங்கள் நின்றால்

எல்லோரும் ஆதரிப்பார்கள் நில்லுங்கள் என  என்னைக்கேட்டார்கள்

சொன்ன  பதில் புலி தேர்தலில்  நிற்கும்   காலம் வரும்

அப்பொழுது நிற்கின்றேன் என்று.

(இதன் மூலம் குழப்பவாதிகளுக்கு இடம்   கொடுக்கின்றேன் என்றா  சொல்கிறீர்கள்??)

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரும்.. சுமந்திரனும் தங்களுக்கு ஏற்ற ஒருவரை தான் முதலமைச்சர் ஆக்கி வைச்சிருக்கினம். இதில சனம் வேற பெரிய எதிர்பார்ப்போடு. உந்த 3 மே ஒன்றையும் வெட்டிப் புடுங்கப் போறதில்லை. புலம்பெயர் மக்கள் தரும் அழுத்தங்கள் மட்டுமே இவர்களை வழிநடத்த முடியும். இவர்களை இவர்களின் போக்கில் விட்டால்.. தமிழ் மக்களை கூறு போட்டு சிங்களவனுக்கே விலைக்கு விற்றுவிடுவார்கள்.

சம்பந்தன் நம்பக் கூடிய ஒரு தலைவர் கிடையாது. சம்பந்தனைப் பயன்படுத்தலாம்.. ஆனால் நம்ப ஏலாது. இதைத்தான் அவர் அந்தக் காலம் தொடங்கிச் செய்துக்கிட்டு இருக்கிறார். :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா யாரிடம் சத்தியபபிரமாணம் எடுக்கிறது என்பதிலும்,அமைச்சரவையைத் தீர்மானிக்குறதுக்கும் இடையில அடுத்த தேர்தல் வந்துடும் போல இருக்கு?????????????????

நெடுக்குக்கு ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரும்.. சுமந்திரனும் தங்களுக்கு ஏற்ற ஒருவரை தான் முதலமைச்சர் ஆக்கி வைச்சிருக்கினம். இதில சனம் வேற பெரிய எதிர்பார்ப்போடு. உந்த 3 மே ஒன்றையும் வெட்டிப் புடுங்கப் போறதில்லை. புலம்பெயர் மக்கள் தரும் அழுத்தங்கள் மட்டுமே இவர்களை வழிநடத்த முடியும். இவர்களை இவர்களின் போக்கில் விட்டால்.. தமிழ் மக்களை கூறு போட்டு சிங்களவனுக்கே விலைக்கு விற்றுவிடுவார்கள்.

சம்பந்தன் நம்பக் கூடிய ஒரு தலைவர் கிடையாது. சம்பந்தனைப் பயன்படுத்தலாம்.. ஆனால் நம்ப ஏலாது. இதைத்தான் அவர் அந்தக் காலம் தொடங்கிச் செய்துக்கிட்டு இருக்கிறார். :icon_idea::rolleyes:

சம்மந்தன் ஐயாவிற்கு .............
 
blood pressure, diabetic, cancer அப்படி என்று ஏதும் வருத்தம் இல்லையா??
மேல் நாட்டு வைதியங்களால் இலகுவாக குண படுத்தலாம். 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிடம் ஆளுமை திறன் இல்லை ....

இவர்களை வழிநடத்த நிச்சயமாக தேசியத்தலைவர் வேண்டும். 

EPRLF இன் நோக்கம் தான் வடமாகணத்தை கைப்பற்றுவதே அல்லாமல் போராட்டத்தை தொடர்வதல்ல.  அதுதான் முதலில் வெளியில் போடப்படவேண்டிய கட்சி ஆகப்போகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பதவி இழுபறி முகம் சுழிக்க வைக்கிறது உண்மைதான். ஆனால் அவர்களும் தமிழர்கள்தானே, தமிழர் எனும் பானையில் இருப்பதுதானே கூட்டமைப்பு எனும் அகப்பையில் வரும். இப்ப கூடப் பாருங்கோ கூட்டமைப்பு இப்படி இழுபடுறத பார்த்து அரசை விட புலம் பெயர் புண்ணியவான்கள் தானே அதிகம் சந்த்ஹோசப் படிறீனம். தமிழண்டா!

இருந்தாலும் கூட்டமைப்பை தவிர இப்போ வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பு பலதரப்பட்டவர்களை இணைத்து செயற்படுவதால் ஆரம்பத்தில் உறுப்பினர்களை தெரிவதில் இருந்தே பலத்த விவாத பிரதிவாதங்கள் மூலம்  தேர்த்தல் இனிதே முடிந்து வெற்றிவாகையும் சூடி உள்ளார்கள்.இனி அமைச்சர்களுக்கான தெரிவும் அப்படியே நடக்கும்.எல்லோரையும் திருப்திப்படுத்துவதற்கான முடிவு என்றுமோ எங்கும் கிடைத்ததில்லை.(we cannot satisfy everyone)
தமிழர்களுக்கான தீர்வை பெற்று தருவதில் தமிழர் கூட்டணி சிங்கள இனவாதிகளிடம் இருந்து தான் தீர்வை பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 
சம்பந்தர் மிக நீண்ட காலமாக கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர். அவர் பிழையாக நடக்கிறார் என்று சொல்லிக்கொண்டே இருக்காமல் அவரை சரியான வழிப்படுத்துவதும் தமிழ் மக்களின் கடமை.எமக்கு உள்ள ஒரே தெரிவு கூட்டமைப்பு என்பதால் அவர்களை சரியான வழியில் செல்ல தமிழ் மக்கள் முன் வரவேண்டும்.(பாடம் எடுப்பது என்பதல்ல)
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் இதற்குள் குழப்பியடித்துக் கொண்டு இருக்கின்றாராம். அதாவது, பிற இயக்க கட்சிகளுக்கு அமைச்சுப் பதவி கொடுக்காது கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவான குருகுலராஜாவுக்கு பதவி கொடுக்குமாறு மிரட்டிக் கொண்டு இருக்கின்றாராம்.

தமிழரசுக் கட்சி சார்பில் தேர்வான குருகுலராஜாவுக்கு எப்படி பதவி கொடுக்க முடியும்? ஏலவே விக்கினேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர். ஆகவே, மிகுதியானவற்றை பிற இயக்க கட்சிகளுக்கு கொடுப்பதுதான் அழகு.

இங்கே இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டேயாக ஆக வேண்டும்.

பிற இயக்கத்தின் கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைந்து போட்டியிட்டு இராது விட்டால் இந்தளவு பாரிய வெற்றியினைப் பெற்றிருக்க முடியாது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி பெற்ற ஆசனங்களை விட பிற இயக்க கட்சிகள் பெற்ற ஆசனங்களே அதிகம்.

ஆகவே, அனைத்து இயக்க கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சென்றால்தான் பலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும்.

இதனை விடுத்து சிறீதரன் தனது தம்பியாரின் தமிழ்வின் இணையத்தளத்தினை வைத்துக் கொண்டு தமிழரசுக் கட்சியின் தலைமையினை மிரட்டுவது நீண்டகால அரசியலுக்கு அழகு அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.