Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுக்கு விஜயம் செய்த மேர்வின்! கருணாவுடன் இணைந்து பாலத்தினை பார்வையிட்டார்! (படங்கள்)

Featured Replies

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் யுத்தத்தால் பாதிக் கப்பட்ட கிழக்கில் படுவான்கரையயும் - எழுவான்கரை யையும் இணைக்கும் மண்முனை பாலத்தின் நிர்மாண பணிகளை மக்கள் தொடர்பாடல் மற்றும் மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா நேரில் சென்று பார்வையி ட்டார். 

இதன்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்(கருணா) மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். வேலைத்திட்டம் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.

ஜப்பான் அரசாங்கத்தின் 1473 மில்லியன் ரூபா நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 397 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இப்பாலம் பாலம் 2014 மே மாதமளவில் இந்தப் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

1.jpg2.jpg3.jpg4.jpg5.jpg

  • Replies 51
  • Views 3.7k
  • Created
  • Last Reply

சரியாகக் கட்டியிருப்பாங்கள். இவங்கள் போய்ப் பார்த்ததால் கண்படப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் எப்ப பெண்ணாக மாறினவர். நிறை மாதக் கர்ப்பிணி போலக் காட்சி அளிக்கிறார். எப்படி இருந்தனான்.. இப்படி ஆகிட்டனே என்ற செய்திக்கு முரளிதரன் நல்ல பொருத்தமாக இருக்கிறார். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். களத்தினர் கருத்துச் சுதந்திரம் தொடர்பில் இனிமேல் கருத்து தெரிவிக்கக் கூடாது.

நான் பதிவு செய்கின்ற கருத்துக்களை நீக்குகின்றீர்கள். இதே நீங்கள் எப்படி சிறிலங்காவில் கருத்துச் சுதந்திம் கருத்து தெரிவிக்க முடியும்?

உங்களுக்குப் பிடிக்காதவர்களை விமர்சித்தால் ஆஹோ, ஓஹோ என்று தூக்கிப் பிடித்து பின்னர் அதற்கு வால்பிடிகள் கொஞ்சம் கருத்து எழுதுங்கள். இதுதான் உங்கள் கருத்துச் சுதந்திரமா?

உங்களை விட எல்லாம் சிறிலங்காவில் அதிக கருத்துச் சுதந்திரம் உண்டு என்றே கூற முடியும். ஏன் புலிகள் இருந்த காலத்தில் கூட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லாத சுதந்திரம் சிறிலங்காவில் இருந்திருக்கின்றது. இதனை நான் கூறவில்லை. கொழும்பில் இருக்கக்கூடிய பத்திரிகை ஆசிரியர்களே தெரிவித்து இருக்கின்றனர்.

இதனை எல்லாம் படித்துவிட்டு என்னை தூற்றிப் பிரயோசனம் இல்லை. முதலில் இங்கே கருத்துச் சுதந்திரத்தினை அனுமதியுங்கள். பின்னர் அனுமதிக்காதவர்கள் தொடர்பில் உங்களுக்கு எல்லாம் விமர்சிக்கின்ற உரிமை இருக்கின்றதா என ஆராயலாம்.

நிர்மலன், இலங்கையில் கடந்த 5 - 6 வருடங்களில் சரியாக 25 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப்பட்டியல் வெறும் 1999 இலிருந்துதான். இதற்குமுன்னர் கொல்லப்பட்டவர்கள் இதற்குள் இல்லை. அதேபோல காணாமல்ப் போன ஊடகவியலாளர்கள் 6 பேர். இவர்களுள் பிரகீத் எக்னலிகொடவும் அடங்குகிறார். 

நீங்கள் கூறுவது மெத்தச்சரி. இலங்கையில் ஊடகச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் கொடிகட்டிப் பறக்கிறது. புலிகளின் ஆளுகைக்கு உற்பட்ட இடங்கலளைக் காட்டிலும் இலங்கையில் கருத்துச்சுதந்திரம் அதிகம் காணப்படுவதற்கு இதுவே சாட்சியாகும். உங்களுக்குக் கூறிய ஊடக ஆசிரியர்களும் இதையே கூறுவர்.

ஒருமுறை இந்த இணைப்பிலுள்ள செய்தியையும் பாருங்கள். சிலவேளை உங்களுக்கு இலங்கையின் கருத்துச் சுதந்திரம் ஏன் உலகில் மிகவும் உயர்வாகப் பேசப்படுகிறதென்பது புரியும்.

http://cpj.org/killed/asia/sri-lanka/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஊடகவியலாளரை மேலே அனுப்பும்போது நிர்வாண நிலையை.. அல்லது இந்த மாயலோகத்தில் இருந்து சுதந்திரத்தை வழங்குகிறார்கள்.. ஆகவே நிர்மலனின் கருத்து சரிதான்.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் எப்ப பெண்ணாக மாறினவர். நிறை மாதக் கர்ப்பிணி போலக் காட்சி அளிக்கிறார். எப்படி இருந்தனான்.. இப்படி ஆகிட்டனே என்ற செய்திக்கு முரளிதரன் நல்ல பொருத்தமாக இருக்கிறார். :D:icon_idea:

நிர்மலன் சொல்வது மெத்த சரி.நிர்மலன் முதல் எழுதிய கருத்தை நீக்கிய நிர்வாகம் நெடுக்கர் எழுதிய கருத்தை இந்த மட்டும் வைத்திருப்பதன் நோக்கம் என்ன?...அது தனி மனித தாக்குதல் இல்லையா :unsure:

ரதி,

முக்கியமான ஒரு விடயம், யாழ் களம் பக்கச்சார்பற்ற முற்றிலும் நடுநிலை சார்ந்த ஒரு களம் அல்ல.  தமிழ் தேசிய போராடத்துக்கும், விடுதலைப்லிகளுக்கும், தமிழ் மக்களின்  விடுதலைக்கும் சார்பான விட்யங்களை முன்னிலைப்படுத்தி தமிழ் ஊடகப் பரப்பில் அவற்றை பலப்படுத்த முனையும் ஒரு அரசியல் சார்ந்த கருத்துக்களம்.  இதன் வழி, விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் வைக்கப்படும் ஆரோக்கியமான விமர்சனங்கள் தவிர்ந்த ஏனைய எவற்றையும் அனுமதிக்கப் போவதில்லை. மிக முக்கியமாக தலைவர் பிரபாகரன் அவர்களை நையாண்டி பண்ணி எழுதும் எந்த எழுத்துக்களையும் வரவேற்கப் போவதும் இல்லை.  

ஏனைய அரசியல் தலைவர்களை நையாண்டி பண்ணும் போதும், தரக்குறைவாக எழுதும் போதும் காட்டப்படும் மென்போக்கினை கண்டிப்பாக தலைவர் பிரபாகரன் விடயத்தில் காட்டப்போவது இல்லை. இது ஒரு பக்கச்சார்பான நடுநிலை தவறிய செயல்பாடுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில இப் போக்கினை மாற்றி யாழினை 100 வீத நடுநிலை ஊடகம் ஆக்கி மார்தட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.

உலகில் நடுநிலையான ஊடகம் என்று ஒன்றும் இல்லை.உலகின் எந்தவொரு ஊடகத்துக்கும் என்று ஒரு அரசியல் இருக்கின்றது. அது அமெரிக்க அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் ஊடகங்களாக இருந்தாலும் சரி, எங்கோ ஒரு மூலையில் இருந்து வரும் ஆபிரிக்க சிறுபத்திரிகையாக இருந்தாலும் சரி, அனைத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அரசியல் இருக்கின்றது. அந்த அரசியல் தான் அதன் போக்கினை தீர்மானிக்கின்றது. யாழும் அவ்வாறுதான்.

நன்றி

இதை நீங்கள் எழுதி நாங்கள் விளங்கவேண்டிய தேவை இல்லை ,ஆனால் அதை விளங்காத தாங்கள் எழுதுவதுதான் சரி என்று மார் தட்ட ஒரு கூட்டம் இருக்கு ,

உலகில் நடுநிலையான ஊடகம் என்று ஒன்று இல்லை ஆனால் ஊடக சுதந்திரம் தாராளமாக இருக்கு ,அதற்காகத்தான் பலர் உயிரை கொடுத்து வேறு போராடுகின்றார்கள்

நான் தலைவர் பற்றி நிர்மலன் எழுதியதை ஆதரிக்கவில்லை.ஏன் நெடுக்கரின் கருத்தை வெட்டவில்லை என்பதே என் கேள்வி

அரிசுன் உங்களுக்கு தெரியும் யாழின் ஊடக சுதந்திர கொள்கைகளை இலங்கைக்கு சரியாக கொண்டுவர வேண்டுமாயின் நிழலிலை மேர்வின் சில்வால் மாற்றீடு செய்ய வேண்டும். 

இணையவன் கோத்தபயாவால் மாற்றீடு செய்யப்பட வேண்டும். 

நியானி நியாயம் பேசுவத்தால் செயலாளர் நாயகத்தால் மாற்றீடு செய்யப்பட வேண்டும் அப்போதுதான் உதயன் காரியாலத்துக்குள் உள்ளட்டு சுட்டு போட்டு கோட்டில் உதனுக்கு எதிராக வழக்கும் போட்டு காசும் பறிக்காலம்.

மற்றும் படி இவையல் வெட்ட முடியும், அல்லது அங்கத்துவத்தை பறிக்க முடியும். மற்றது என்ன முடியும்? 

ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள். நிழலி பேசுவது யாழின் நடு நிலைமை பற்றி. நிர்மலனின் சர்வாதிக்காரக்கருத்து தன்னை மட்டுவாக போடாவிட்டால் யாழ் ஊடக சுதந்திர கொள்கைகளுக்கு எதிரானது என்பது. 

யாழ் மாதிரியே எல்லா ஊடகங்களும் தங்களுக்கு சார்பான நிலையை எடுத்து எழுதுவதுதான் ஊடக சுதந்திரம். அதைதான் நிமலன் மறுக்கிறார். உதாரணத்துக்கு இலங்கையின் ஊட்கங்கள் எல்லாம் அவை அரச பத்திரிகைகளோ அல்லது தனி உடமைகளோ சிங்கள் அரசுக்கு சார்பாக மட்டுமே எழுதுகின்றன. (அரச பத்திரிகைகள் அரச குடும்ப சொத்தாக மாறிவிட்டன) அவற்றில் நிர்மலனால் தமிழர் சார்பாக ஒரு கட்டுரை எழுதி பிரசுரிக்க வைக்க முடியாது. இங்கேதான் அவரின் சர்வாதிகார குணம் வெளி வருகிறது.

நடு நிலைமையாக கருத்து வைக்காத ஊடகத்தை கழித்து வைப்பது மக்களின் விருப்பம். யாழை நாங்கள் மட்டும் அல்ல நிர்மலனாலும் விட்டுப்போக முடியவில்லை. அதனால்த்தான் யாழால் நடு நிலைமையாக இருக்க முடியவில்லை. அதாவது அது நடு நிலைமையாக இருப்பதை நிர்மலனும் விரும்பவில்லை. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைவர் பற்றி நிர்மலன் எழுதியதை ஆதரிக்கவில்லை.ஏன் நெடுக்கரின் கருத்தை வெட்டவில்லை என்பதே என் கேள்வி

தலைவர் இருக்கிறார் / இல்லை என்கிற விவாதங்களுக்கப்பால் தலைவர் "இல்லை" என்பதே தற்போது உள்ள உலக நிலைப்பாடு. இல்லாத ஒருவரை விமர்சித்தல் அழகல்ல. கருணாவை விமர்சிப்பதும், தலைவர் கருணாநிதியை விமர்சிப்பது நடந்துகொண்டு இருப்பதுதான். ஆனால் தனிப்பட்ட ரீதியில், உடற்தோற்றத்தை விமர்சிப்பதை நான் ஆதரிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். களம் தான் எங்கே நிற்கின்றது என்பதில் பாரிய குழப்ப நிலையில் உள்ளது.

யாழ். களத்தில் கருத்து எழுதுபவர்களுக்கோ யாழ். கள நிர்வாகத்துக்கோ ஊடக சுதந்திரம் தொடர்பாக உரையாட எந்தத் தகுதியும் இல்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரபாகரன் தொடர்பில் விமர்சிப்பதனால் நீக்குகின்றீர்கள் என்கிறீர்கள். பிரபாகரன் என்கின்ற தனிமனிதனின் விருப்பு-வெறுப்பினால்தான் ஒட்டு மொத்த தமிழ்த் தேசியமும் கையேந்தி நிற்கின்றது என்பதனை மறந்து விடாதீர்கள்.

இங்கே சில அறிவுக் கொழுந்துகள் சிறிலங்காவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

அப்படியானால் விடுதலைப் புலிகளின் காலத்தில் மாற்றுக் கருத்தளார்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டும் காணாமல் போனதும் இல்லையா? மனச்சாட்சியின் படி உரையாடுங்கள். இந்தளவோடு ஒப்பிடும் போது சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் பரவாயில்லை.

புலிகளின் பகுதியில் எத்தனை ஊடகங்கள் வந்தது? எத்தனை வானொலிகள் இயங்கின? எத்தனை தொலைக்காட்சிகள் இயங்கின? கூறுங்கள் பார்க்கலாம் அறிவுக்கொழுந்து மாணிக்கங்களே!

போரின் இறுதிக்கால கட்ட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு அறிவுரை கூற முற்பட்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு, வெளிச்சம் ஆசிரியர் கருணாகரன், க.வே.பாலகுமாரன் உள்ளிட்ட எத்தனையோ பேரை விடுதலைப் புலிகள் ஒதுக்கி வைத்த கதை எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் ஒருபக்க சார்பாக கருத்துக்கள், செய்திகள், ஆக்கங்கள் போடுவீர்களாம். மற்றவர்கள் செய்தால் அவன் அவன்ரை ஆள். இவன் இவன்ரை ஆள். என்ன ஐயா உங்கள் நியாயம்?

இங்கே புலிகளுக்கு எதிராக கருத்து போட்டாலே அவர்களின் பணத்தை சுருட்டி சுகபோக வாழ்வு வாழ்கின்றவர்கள் போல் இருப்பவர்கள் அட அட அட இவன் இப்படி தெரிவித்துவிட்டானே என்று கடுப்பாகி பதிலடி கொடுக்கின்றோம் என்று தம்மை யார் என்றே காட்டிக் கொள்கின்றார்கள்.

இவர்கள் எல்லாம் போருக்குப் பின்னைய காலத்தில் வன்னி மக்களுக்கு எதனைத்தான் கொடுத்து கிழித்தார்களோ தெரியாது.

கேட்டால், உமக்கு என்ன தெரியும் நாம் அங்கோ கொடுத்தோம் இங்கே கொடுத்தோம் என்பார்கள். இதனை எல்லாம் உமக்கு நாம் தெரிவிக்க முடியாது என்பார்கள்.

அங்கே எத்தனையோ தனியார் தொண்டு நிறுவனங்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் தமது சொந்த முயற்சியால் நிதி திரட்டி வன்னி மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

அவர்களிடம் புலம்பெயர் நாட்டில் இருந்து நிதி ஏதாவது என்று கேட்டால், அதனை ஏன் கேட்கின்றீர்கள். புலிகளுக்கு எல்லாம் நிதி கொடுத்தார்கள் அவ்வாறு எமக்கு எல்லாம் தந்தால் நாம் எவ்வளவோ செய்து அந்த மக்கள் மூச்சுவிட வழி செய்து விடுவோம் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டு உரையாடினார்கள் அந்த தொண்டு நிறுவன பிரதிநிதிகள்.

Edited by nirmalan

சன் டி வி ,ஜெயா டி வி ,கலைஞர் டி வி பார்த்துகொண்டுதானே இருக்கின்றீர்கள்  .இதையும் பாருங்கோ என்கின்றார்கள் .

வெளிநாடுகளிலிருந்து வன்னி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையா?

மாற்றுக்கருத்துகளுக்கு நியாயமான குழப்பம் இருக்கு என்றதை உணர்த்தி வைக்கும் நிலையில் இருக்கு

யாழ். களத்தில் கருத்து எழுதுபவர்களுக்கோ யாழ். கள நிர்வாகத்துக்கோ ஊடக சுதந்திரம் தொடர்பாக உரையாட எந்தத் தகுதியும் இல்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அது உங்களின் சர்வாதிகார போக்கு. இதை பலமுறை சண்டமாருதன் என்ற உறவும் சொல்லியிருக்கிறார்.  அரசு தமிழருக்கு என்ன உரிமை இருக்கலாம் என்றதை நிர்ணயிப்பது போல அரசை ஆதரித்து எழுதும் நீங்கள் எங்களின் உரிமைகளை நிர்ணயிக்க முயல்கிறீர்கள். உங்களுக்கிடையில் கருத்து ஒற்றுமை இருக்கு.

பிரபாகரன் தொடர்பில் விமர்சிப்பதனால் நீக்குகின்றீர்கள் என்கிறீர்கள். பிரபாகரன் என்கின்ற தனிமனிதனின் விருப்பு-வெறுப்பினால்தான் ஒட்டு மொத்த தமிழ்த் தேசியமும் கையேந்தி நிற்கின்றது என்பதனை மறந்து விடாதீர்கள்.

நாங்கள் பிரபாகரனோடு பிறந்தவர்கள் அவரின் காலத்து தமிழர்கள் எல்லோரும் சிந்திப்பது மாதிரியே சிந்திக்கிறோம். பதியுதின் கல்வியை சிதைத பின்னர் படித்த சிலருக்கு இலங்கையில் நடந்தது தெரியாது. ஏன் தனி மனிதன் ஆயுதம் ஏந்த நினைத்தார் என்ற சரித்திரத்தில் எள்ளாவும் தொடுகை இல்லாதவர்கள் இவர்கள். உங்களை பார்க்க எங்களுக்கு ஒன்றும் ஆச்சரியமாக இல்லை. தனிய பதியுதின் தமிழ்ரை அழிக்க வேண்டும் என்று எடுத்த எடுப்பில் நிச்சயமாக வெற்றி கண்டார் என்பது மட்டும் புரிகிறது. 

இங்கே சில அறிவுக் கொழுந்துகள் சிறிலங்காவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த அறிவுக் கொழுந்த்துகள் லேக்கவுசை இலங்கை அரசு அரசுடமை ஆக்கியதையும் அறிவார்கள். ஆனல் அதை எழுதவில்லை. பத்திரிகைகளை பிரச்சார ஊடகங்களாக்கியதையும் அறிவார்கள். ஆனால் எழுதவில்லை............ இலங்கையில் ஊடக சௌதந்திரங்களை தேடிதேடி அழித்தவற்றை எல்லாம் எழுத முடியாது. அது 1970 இருந்து இன்னமும் போய்கொண்டிருக்கு. புலிகள் ஆரம்ப காலத்தில் சில கட்டுப்பாடுகள் விதித்தார்கள். அது அரசு என்று அமைக்க முதல், ஆயுத போராட்டம் நடந்து கொண்டிருந்த போது செய்தவை. வ.செ. ஜெயபாலன் புலிகளின் காலத்தால் வந்த ஊடகவியலராக கூறுபவர். இன்னமும் நிறைய எழுதுகிறார். புலிகள் இதுவரையும் ஒன்றும் செய்யவில்லை. 

அப்படியானால் விடுதலைப் புலிகளின் காலத்தில் மாற்றுக் கருத்தளார்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டும் காணாமல் போனதும் இல்லையா? மனச்சாட்சியின் படி உரையாடுங்கள். இந்தளவோடு ஒப்பிடும் போது சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் பரவாயில்லை.

நீங்கள் இன்று மாற்று என்று கூறுகிறீகள். ஆனால் அவர்கள் துரையப்பா, தியாகாரசா, கதிர்காமர் போன்ற மாற்றுக் கருத்துகளை துரோகிகள் என்று கூறினார்ர்கள். 

புலிகளின் பகுதியில் எத்தனை ஊடகங்கள் வந்தது? எத்தனை வானொலிகள் இயங்கின? எத்தனை தொலைக்காட்சிகள் இயங்கின? கூறுங்கள் பார்க்கலாம் அறிவுக்கொழுந்து மாணிக்கங்களே!

மாணிக்கங்களுக்கு TV வளர்த்தி தேவையோடுதான் வந்தது. சீனா 50% கமிசன் அந்த நாட்களில் கொடுக்க ஆரம்பிக்காததால் ஒரு TV க்கு கூட சொல்லெயுமை வால் பிடிக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் அறிய எத்தனை தனியார் TV நிலையங்கள் ஆரம்பிக்க அனுமதி கேட்ட போது அதை புலிகள் மறுதார்கள் என்பது என்னிடம் விபரம் இல்லை. உங்களிடம் இருப்பதை நீங்கள் கட்டாய்யம் அவிட்டுவிட வேண்டும். 

போரின் இறுதிக்கால கட்ட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு அறிவுரை கூற முற்பட்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு, வெளிச்சம் ஆசிரியர் கருணாகரன், க.வே.பாலகுமாரன் உள்ளிட்ட எத்தனையோ பேரை விடுதலைப் புலிகள் ஒதுக்கி வைத்த கதை எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

உள்ளெ ந்டந்த மந்திரலோசனை கூட்டங்களின் பேசியவற்றை அறிந்தவர்கள், அவர்களை ஒதுக்காவிட்டால் வேறு எததனை பேரை ஒதுக்க வேண்டியிருந்திருக்கும் என்பது பற்றியும் சொல்லலாமே

நீங்கள் ஒருபக்க சார்பாக கருத்துக்கள், செய்திகள், ஆக்கங்கள் போடுவீர்களாம். மற்றவர்கள் செய்தால் அவன் அவன்ரை ஆள். இவன் இவன்ரை ஆள். என்ன ஐயா உங்கள் நியாயம்?

நீங்கள் உங்கள் கருத்துக்களை இலங்கை ஊடகங்களில் போட மறுப்பதால் வரும் கருத்து முரண்பாடே இது.  நீங்கள் விபரிப்பது போல இலங்கை முழுவதும் ஊடகங்கள் பொங்கி பிரவாகிக்கின்றன. அத்தனை ஆயிரம் ஊடகங்கள் இருந்த்தும் நீங்கள் அங்கே போட மறுக்கிறீர்கள். நாம் போட யாழ் ஒன்றுதான் இருக்கிறது. எனவே நீங்கள் இலங்கையில் போடாமல் யாழில் வந்து போடுவது எங்களுக்கு ஏற்புடையதல்ல. இதை பார்க்க பத்து கொடேல்களில் சாப்பிட மடி முட்ட காசு வைத்திருப்பவன் கெலி காரணமாக பிச்சைக்காரனின் புட்டை பறிப்பது போலிருக்கு. நீங்கள் அந்த சுதந்திர ஊடகங்களில் எழுதுவதுதானே.

இங்கே புலிகளுக்கு எதிராக கருத்து போட்டாலே அவர்களின் பணத்தை சுருட்டி சுகபோக வாழ்வு வாழ்கின்றவர்கள் போல் இருப்பவர்கள் அட அட அட இவன் இப்படி தெரிவித்துவிட்டானே என்று கடுப்பாகி பதிலடி கொடுக்கின்றோம் என்று தம்மை யார் என்றே காட்டிக் கொள்கின்றார்கள்.

இவர்கள் எல்லாம் போருக்குப் பின்னைய காலத்தில் வன்னி மக்களுக்கு எதனைத்தான் கொடுத்து கிழித்தார்களோ தெரியாது.

வன்னிமக்களுக்கு அரசு கொடுத்து கிழித்தது போதாதென்றா நாம் கொடுக்க வேண்டும். நாம் கிழிப்பதை பார்க்க 50% திருடும் இராணுவத்தை அங்கிருந்து அகற்ற முடியுமா. சந்திர சிறியை வீட்டுக்கு அனுப்பிவிட முடியுமா? நாம் கொடுக்க போனால் எமக்கு 50% யார் தருவார்கள்?

கேட்டால், உமக்கு என்ன தெரியும் நாம் அங்கோ கொடுத்தோம் இங்கே கொடுத்தோம் என்பார்கள். இதனை எல்லாம் உமக்கு நாம் தெரிவிக்க முடியாது என்பார்கள்.

அங்கே எத்தனையோ தனியார் தொண்டு நிறுவனங்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் தமது சொந்த முயற்சியால் நிதி திரட்டி வன்னி மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

எதனையோ தொண்டு நிறுவனங்கள் தாம் இயங்கமுடியாமல் தம்மை அரசு கமிசன் கொள்ளை அடிப்பதாக சொல்கிறார்கள். உண்மை இத்தனை தொண்டு நிறுவனகள் இயங்கியும் இன்னமும் அகதிகளை குடியேற்றமுடியாமைல் புலம் பெயர் மக்களிடம் பிடுங்க பார்ப்பதில் மானமே இல்லாத அரசு  தாங்களில் அடிக்கும் 50% வீதத்தை மறைக்க கூட முயவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

அவர்களிடம் புலம்பெயர் நாட்டில் இருந்து நிதி ஏதாவது என்று கேட்டால், அதனை ஏன் கேட்கின்றீர்கள். புலிகளுக்கு எல்லாம் நிதி கொடுத்தார்கள் அவ்வாறு எமக்கு எல்லாம் தந்தால் நாம் எவ்வளவோ செய்து அந்த மக்கள் மூச்சுவிட வழி செய்து விடுவோம் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டு உரையாடினார்கள் அந்த தொண்டு நிறுவன பிரதிநிதிகள்.

புலிகள் பறித்தெடுத்தார்கள் என்று எழுதிய அதே பொய்யர்கள் இன்று தொண்டு நிறுவனங்கள் தங்களிடம் புலிகளுக்கு அள்ளிக்கொடுத்தது போல அள்ளிக்கொடுகவில்லை என்றார்கள் என்று கதை அளக்கிறார்கள். தொண்டு நிறுவனங்களை ஒற்றர்கள் என்று சாயம் பூசி துரத்தும் ஒரேஒரு நாடு இலங்கை. இந்தவருடம் ஆமி தன்னிடம் கூட பட்டா கேட்கிறது என்று அமெரிக்கா வடக்கில் தன்னால் ஒரு உதவியும் செய்ய முடியாது என்று இலங்கைக்கான கொடுப்பனவுகளில் $400 மில்லியனை வெட்டியது.  

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச்சொல்பவர்களே,

இங்கே நாம் ஒன்றும் புனல் வாதம் அனல் வாதம் செய்யவில்லை. சும்மா கருத்து சொல்கிறோம் அவ்வளவே.

நமது நிலையை யாருக்கும் நிறுவத்தேவையில்லை. எமது கருத்தாடல்களை வழமையாக இங்கே வருபவர்கள் தவிர வேறுயாரும் கவனிப்பதாயும் தெரியவில்லை. ஆக சொல்லவருவதை கண்ணியமாக சொல்லுவோம். நிர்வாகம் தன் நிலையை தெளிவாக சொல்லிவிட்டது. இது அவர்களின் எல்லைக்கோடு. அதை நாம் தாண்டினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பர்.

நாம் பூரண கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவராயின் எமக்கு பிடிக்காத கருத்து எழுதப்படும் போது, என் கருத்தை வெட்டினீர்கள், ஏன் அவர் கருத்தை வெட்டவில்லை என்று கேட்பது அழகல்ல.

நிர்மலன் நீங்கள் சொன்ன புலி/அரசு ஊடக சுதந்திரத்தி ஒப்பீட்டில் ஓரளவு உண்மையுண்டு.

அரச கட்டுப்பாட்டில், பல உட்டகவியளாலர் கொல்லப்பட்டனர், காரணம் அவர்கள் அதுக்கு முன் அரசுக்கெதிராக கருத்து எழுதிவந்தனர்.

ஆனால் புலிகள் கட்டுப்பாட்டில் ஊடகவியளாலர் செத்தது குறைவு, ஏனெண்டால் புலிபகுதியில் எந்த ஒர் சுயாதீன ஊடகமும் ஊடகவியலாலனும் இயங்க விட்ப்படவில்லை. UTHR ஶ்ரீதரன் போனவர்களே உயிர்காக்க கொழும்புக்கு ஓடித்தப்பினர். புட்போல் விளையாடியதர்க்காக அதிபர் ஆனந்தராஜாவை போட்டு தள்ளியவர்கள், ஒரு எதிர்ப்பு ஊடகத்தையா தம்மிடையே விட்டுவைத்திருப்பர். தினக்குரல், தினகரனை மட்டுமல்ல, வீரகேசரி தினக்குரலையே தடை செய்த அமைப்பல்லவா இது?

அரசு 95% ஊடக அடக்குமுறை செய்தது. புலிகள் 100% ஊடக அடக்குமுறை செய்தனர். இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

முக்கியமான ஒரு விடயம், யாழ் களம் பக்கச்சார்பற்ற முற்றிலும் நடுநிலை சார்ந்த ஒரு களம் அல்ல.  தமிழ் தேசிய போராடத்துக்கும், விடுதலைப்லிகளுக்கும், தமிழ் மக்களின்  விடுதலைக்கும் சார்பான விட்யங்களை முன்னிலைப்படுத்தி தமிழ் ஊடகப் பரப்பில் அவற்றை பலப்படுத்த முனையும் ஒரு அரசியல் சார்ந்த கருத்துக்களம்.  இதன் வழி, விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் வைக்கப்படும் ஆரோக்கியமான விமர்சனங்கள் தவிர்ந்த ஏனைய எவற்றையும் அனுமதிக்கப் போவதில்லை. மிக முக்கியமாக தலைவர் பிரபாகரன் அவர்களை நையாண்டி பண்ணி எழுதும் எந்த எழுத்துக்களையும் வரவேற்கப் போவதும் இல்லை.  

ஏனைய அரசியல் தலைவர்களை நையாண்டி பண்ணும் போதும், தரக்குறைவாக எழுதும் போதும் காட்டப்படும் மென்போக்கினை கண்டிப்பாக தலைவர் பிரபாகரன் விடயத்தில் காட்டப்போவது இல்லை. இது ஒரு பக்கச்சார்பான நடுநிலை தவறிய செயல்பாடுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில இப் போக்கினை மாற்றி யாழினை 100 வீத நடுநிலை ஊடகம் ஆக்கி மார்தட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.

உலகில் நடுநிலையான ஊடகம் என்று ஒன்றும் இல்லை.உலகின் எந்தவொரு ஊடகத்துக்கும் என்று ஒரு அரசியல் இருக்கின்றது. அது அமெரிக்க அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் ஊடகங்களாக இருந்தாலும் சரி, எங்கோ ஒரு மூலையில் இருந்து வரும் ஆபிரிக்க சிறுபத்திரிகையாக இருந்தாலும் சரி, அனைத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அரசியல் இருக்கின்றது. அந்த அரசியல் தான் அதன் போக்கினை தீர்மானிக்கின்றது. யாழும் அவ்வாறுதான்.

நன்றி

இதற்கு ஆயிரம் பச்சை குத்தவேண்டும். ஒன்றுக்கு மேல் குத்த முடியாமல் உள்ளது.
 
தேசம் சார்ந்தும் ....
தேச நலன் சார்ந்தும். யார்ல் களமோ ...... கார் களமோ எந்த ஊடகம் வேண்டுமானாலும் இருக்க வேண்டுமே தவிர சொந்த இனத்தையே விற்று பிழைப்பு நடத்த திரியும் எந்த கும்பலையும் உலகம் ஒருபோது ஏற்றதில்லை.
 
சிங்களவர்கள் ஒரு நாளில் கூட புலிகளை ஏற்றுகொள்வார்கள். இந்த நாதாரிகளை அவர்கள் ஏற்று மொள்ள போவதில்லை.
ஒரு மனிதன் தாயின் கருவில் உருவெடுத்து .... தேசத்தின் காற்றை சுவாசித்தே உயிர் பெறுகிறான். அந்த தேசத்திற்கு எதை கொடுத்தாலும் அது தகும்.
எல்லோராலும் கொடுக்க முடிவதில்லை...... அதை ஏற்று கொள்ளலாம்.
கெடுக்க நிற்பவர்களின் நாதாரி தனங்களை காதுகொடுத்து கேட்க.....
நாம் நாதாரிகள் அல்ல.
 
எந்த கடவுளை மேல் இருந்து கொண்டு வந்தாலும்.............. பூமி உருண்டை உருண்டைதான்.
இதில் மாற்று கருத்து ...... மாயா கருத்து என்று முட்டையில் மயிர் புடுங்குபவர்களின் தொல்லையை  ஓரளவுக்குத்தான் தாங்க முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச்சொல்பவர்களே,

இங்கே நாம் ஒன்றும் புனல் வாதம் அனல் வாதம் செய்யவில்லை. சும்மா கருத்து சொல்கிறோம் அவ்வளவே.

நமது நிலையை யாருக்கும் நிறுவத்தேவையில்லை. எமது கருத்தாடல்களை வழமையாக இங்கே வருபவர்கள் தவிர வேறுயாரும் கவனிப்பதாயும் தெரியவில்லை. ஆக சொல்லவருவதை கண்ணியமாக சொல்லுவோம். நிர்வாகம் தன் நிலையை தெளிவாக சொல்லிவிட்டது. இது அவர்களின் எல்லைக்கோடு. அதை நாம் தாண்டினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பர்.

நாம் பூரண கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவராயின் எமக்கு பிடிக்காத கருத்து எழுதப்படும் போது, என் கருத்தை வெட்டினீர்கள், ஏன் அவர் கருத்தை வெட்டவில்லை என்று கேட்பது அழகல்ல.

நிர்மலன் நீங்கள் சொன்ன புலி/அரசு ஊடக சுதந்திரத்தி ஒப்பீட்டில் ஓரளவு உண்மையுண்டு.

அரச கட்டுப்பாட்டில், பல உட்டகவியளாலர் கொல்லப்பட்டனர், காரணம் அவர்கள் அதுக்கு முன் அரசுக்கெதிராக கருத்து எழுதிவந்தனர்.

ஆனால் புலிகள் கட்டுப்பாட்டில் ஊடகவியளாலர் செத்தது குறைவு, ஏனெண்டால் புலிபகுதியில் எந்த ஒர் சுயாதீன ஊடகமும் ஊடகவியலாலனும் இயங்க விட்ப்படவில்லை. UTHR ஶ்ரீதரன் போனவர்களே உயிர்காக்க கொழும்புக்கு ஓடித்தப்பினர். புட்போல் விளையாடியதர்க்காக அதிபர் ஆனந்தராஜாவை போட்டு தள்ளியவர்கள், ஒரு எதிர்ப்பு ஊடகத்தையா தம்மிடையே விட்டுவைத்திருப்பர். தினக்குரல், தினகரனை மட்டுமல்ல, வீரகேசரி தினக்குரலையே தடை செய்த அமைப்பல்லவா இது?

அரசு 95% ஊடக அடக்குமுறை செய்தது. புலிகள் 100% ஊடக அடக்குமுறை செய்தனர். இதுதான் உண்மை.

உங்களின் கிணத்துக்குள் இதுதான் செய்தி.....
உலக செய்தி அதுவல்ல 
உலகம் உருண்டை என்றால் ஒரு கருத்துதான் இருக்க முடியும்.
 
மாற்று கருத்துகளை கொண்டு சென்று கொழும்பில் வைப்பதே தகும். 
அடுத்தவனை எய்த்து பிழைக்கும் கூடத்தின் தலை நகரம் அதுதான். அங்கேதான் அப்படியான கருத்துக்க்களுக்கு மவுசு உண்டு. வியாபாரிகளை வியாபரம் செய்ய உகந்த இடங்களை காட்டி அனுப்பிவிட்ட புலிகள் இப்போ குற்ற வாளிகள்?
 
மன்னிக்கணும் !
புலிகளின் இடங்களில் இருந்த மக்களுக்கும்  ஏன் ஆடுமாடுகளுக்கும்.....
உண்மையான உணவும் ..... உரிமையும் தேவை பாடதே தவிர. எங்களுக்கு இந்த மாயா ஜாலங்கள் தேவை படவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலிருந்து வன்னி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையா?

எது உண்மையோ அதைமட்டுமே அவர் எழுதுவார்.
 
அப்ப்டிஎன்று பிரதிநிதிகள் தான் சொல்கிறாகோ ..............
  • கருத்துக்கள உறவுகள்

 இராணுவத்தினர்  குண்டுகள் போட்ட நேரம் சிஎன் என் இலங்கைக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை நடுநிலையாக எழுத நினைத்தது. அவர்கள் சென்று ஈ.பி.டி.பியில் ஒருவரை பேட்டி கண்டார்கள். அவரும் புலிகள் தனக்கு அடித்து போட்டார்கள்  என அழுதழுது கூறினார். அவ்வளவு தான் சி.என்.என் இன் நடுநிலைமை.  குண்டால் தாக்கு பட்டவர்களையோ அல்லது சாதாராண மக்கள் ஒருவரையும் கூட பேட்டி காணவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது இலங்கையில் கருத்துச் சுதந்திரம் நிலவுகிறது என்று ஒருவர் எழுத ஆரம்பிக்கிறாரோ அன்றே அவர் சிங்கள அரசு சார்பாக செயற்பட்டு வருகிறார் என்றே அர்த்தம். இதைவிட இதற்கு வேறு எந்தக் காரணமும் இருக்கமுடியாது.

நடுநிலை என்று ஒன்றில்லை. அப்படி எப்போதுமே இருந்ததில்லை. எல்லோரும் தமக்கு ஏற்றவாறே செய்தி வெளியிடுகின்றனர். இங்கு புலிவிமர்சனம் செய்வோரே நடுநிலமை என்றில்லாமல் புலியை மட்டும் விமர்சித்துவிட்டு யாழ்க்களம் நடுநிலமை தவறிவிட்டது என்று புலம்புவது வேடிக்கை. புலியை விமர்சிக்க மட்டுமே கருத்தெழுதுபவர்கள் இங்கே எழுதாமல் வேறு புலியெதிர்ப்பிற்கென்றே இயங்கும் தளங்களில் எழுத முயற்சித்துப் பார்க்கலாம். ஆனால் விடமாட்டார்கள். ஆக இவர்களுக்குக் கூட களம் அமைத்துக்கொடுப்பது யாழ்க்களம். இவர்களது புலிக் காய்ச்சல் கருத்துக்களுக்குப் பின்னரும் கூட யாழ்க்களம் இவர்களை இன்னும் எழுத அனுமதிப்பதே பெரிய விடயம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் செய்வதெல்லாம் புலியை விமர்சிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அரச இனவழிப்பை நியாயப்படுத்துவதுதான். பலமுறை உங்களது கருத்துக்களில் அது தெரிந்திருக்கிறது. புலியை வசை பாடும் அளவிற்கு அரசுக்கெதிராக உங்கள் கருத்துக்கள் ஒருபோதுமே அமைந்ததில்லை. வேண்டுமென்றே அரச பயங்கரவாதத்தை மூடி மறைத்து எழுதிகிறீர்கள் அல்லது புலிகளை விட அரசு பரவாயில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறீர்கள். 

விமர்சனம் வெறுமனே வாரித்தூற்றூவது மட்டும்தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் அதிலிருந்து மீள் எழ வழியமைப்பதுமே ஆக்கபூர்வமான விமர்சனமாக இருக்கமுடியும். ஆனால் இங்கு புலியெதிர்ப்புப் பாடுபவர்கள் ஒருபோதுமே அதைச் செய்ததில்லை. புலியெதிர்ப்பைக் கக்கி விட்டால் தமது கடமை முடிந்துவிட்டதென்று நினைக்கிறார்கள். 

நீங்களெல்லாம் நடுநிலமை பற்றி பேசக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச்சொல்பவர்களே,

ஆனால் புலிகள் கட்டுப்பாட்டில் ஊடகவியளாலர் செத்தது குறைவு, ஏனெண்டால் புலிபகுதியில் எந்த ஒர் சுயாதீன ஊடகமும் ஊடகவியலாலனும் இயங்க விட்ப்படவில்லை. UTHR ஶ்ரீதரன் போனவர்களே உயிர்காக்க கொழும்புக்கு ஓடித்தப்பினர். புட்போல் விளையாடியதர்க்காக அதிபர் ஆனந்தராஜாவை போட்டு தள்ளியவர்கள், ஒரு எதிர்ப்பு ஊடகத்தையா தம்மிடையே விட்டுவைத்திருப்பர். தினக்குரல், தினகரனை மட்டுமல்ல, வீரகேசரி தினக்குரலையே தடை செய்த அமைப்பல்லவா இது?

அரசு 95% ஊடக அடக்குமுறை செய்தது. புலிகள் 100% ஊடக அடக்குமுறை செய்தனர். இதுதான் உண்மை.

இன்று தமிழ் பத்திரிகைத்துறையில் முன்னணியில் உள்ள பலர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தவர்கள். வளர்ந்தவர்கள்.

புலிகள்... கருத்துச் சுதந்திரத்தை பறிக்கவில்லை. இனப்படுகொலை.. சிங்கள அரச சார்பு ஊடக.. அரசியலை.. தமிழ் மக்களின் போராட்ட காட்டிக்கொடுப்பு கருத்தியலையே அவர்கள் மட்டுறுத்தினார்கள். அமெரிக்காவிலும் அமெரிக்காவை காட்டிக்கொடுக்க எவருக்கும் கருத்துச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை. அண்மையில் அப்படிக் காட்டிக்கொடுத்த ஒருவருக்கு நடக்கும் அவர் நடத்தப்படும் விதம் உங்கள் போன்றோரின் கண்ணுக்குத் தெரியவில்லை.

சும்மா பெயர் வைச்சாப் போல.. அவை ஊடகங்கள் அல்ல. ஒட்டுக்குழு ஊடகங்கள் எவையும் ஊடக தர்மத்தை.. நாகரிகத்தைப் பின்பற்றியதில்லை. விடுதலைப்புலிகள்.. எந்த ஒரு நடுநிலை ஊடகத்தையும் தடை செய்யவில்லை. சிறீலங்கா அரசு தடை செய்த போதும்.. புலிகள் வீரகேசரி.. தினக்குரல்.. ஏன் சிங்கள தேச ஆங்கில ஊடகங்களைக் கூட அனுமதித்தனர். ஆனால் 1990 களில் சிங்களம் இவற்றிற்கு தடை போட்டு.. விமானத்தில் இருந்து தனது ஊதுகுழல்களான தினகரன்.. போன்ற ஏரிக்கரைப் பத்திரிகைகளை வீசியது..!

மேலும்.. UTHR ஶ்ரீதரன் என்பவர் நடுநிலையான.. நேர்மையான மனித உரிமை செயற்பாட்டாளர் கிடையாது. அவர் சந்திரிக்கா அரசுக்காக அதன் இராணுவ இலக்குகளை அரசியல் இலக்குகளை அடைய.. அன்றைய பொழுதுகளில் சந்தர்ப்பவாத பொய் மனித உரிமை அறிக்கைகளைத் தந்த நபர். அவர் இவற்றில் இருந்து தண்டனை இன்றி.. தப்பிக்க.. கொழும்பை தஞ்சம் அடைந்தார். இதையே அமெரிக்காவில் அமெரிக்க அரசுக்கு எதிராக.. செயற்படும்.. ஒரு அரசுக்கு சார்ப்பாகச் செய்திருப்பின்.. அமெரிக்கா கொஞ்சி மகிழ்ந்திருக்குமாக்கும்..???!

அண்மையில்.. அண்ணன் சீமானை ஒரு கூட்டத்தில் கூட பேச விடாமல் தடுத்து அனுப்பியது கனடா. அவர் என்ன ஆயுதமா வைச்சுக் கொண்டு நின்றார்... இல்லையே. வெறும் மனிதனாக வார்த்தைகளைத் தானே வைச்சிருந்தார்.  ஆக.. இந்த உலகில் நிழலி குறிப்பிடுவது போல.. எல்லாம் அவரவரின் தேவைகளை பூர்த்தி செய்யும்.. ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் தான் இயங்குகின்றன. புலிகள் மட்டும் அதனை விட்டிட்டு இருக்கனுன்னு ஒட்டுக்குழுக்கள் எதிர்பார்க்கின்றன. ஆனால் தமக்கு அந்த விதியை அவை பொருத்திப் பார்க்க விரும்புவதில்லை..!

=======================

முரளிதரனின்.. உருவ மாற்றத்தை விமர்ச்சிக்கக் கூடாது என்று தடைவிதிக்க முடியாது. அது ஒரு பொதுமகன்... அரச அதிகாரங்களூடு தன்னை தான் சார்ந்த மக்களைக் கட்டுப்படுத்தும் பட்டினியில் போடும்.. மிக மோசமாக.. மக்கள் வயிற்றில் அடித்து தன் வயிறு வளர்த்த..அமைச்சன் மீது வைக்கும் விமர்சனமாகும். அது தனிமனித தாக்குதல் அல்ல. அண்மையில் சிறீலங்கா இராணுவத் தளபதி கூட வயிறு பெருத்த இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வில்லை என்று கூறி இருந்தார். நிறைமாதக் கர்ப்பிணி போல காட்சி அளிக்கும் முரளிதரன் போன்றவர்களுக்கும் அதே காரணத்தைக் காட்டி அமைச்சுக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். அமைச்சர்கள் ஆரோக்கியமானவர்களாகவும் அரசியல் சமூக அறிவுள்ளவர்களாகவும் சமூக முன் மாதிரிகளாகவும் இருக்க வேண்டுமே தவிர சண்டியர்களாக இனத்துரோகிகளாக இருக்கக் கூடாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

இதை நீங்கள் எழுதி நாங்கள் விளங்கவேண்டிய தேவை இல்லை ,ஆனால் அதை விளங்காத தாங்கள் எழுதுவதுதான் சரி என்று மார் தட்ட ஒரு கூட்டம் இருக்கு ,

தற்பெருமை கூடிய ஆக்களில் உங்களையும் நிர்மலனயும் விட வேறை யாரும் இல்லை... உங்களை தவிர மற்றயோர் எல்லாம் முட்டாள்கள் எனும் கருத்து வாதம் கூட உங்களது தான்..

உங்களின் கருத்துக்கு பின்னால் மக்கள் தொகை இல்லாத போது புலம்பெயந்தவன் எல்லாம் கேவலமானவனாக உருவகிக்கும் உங்களின் செயல்கள் ஜனநாயகமானதுதானா...?

அவர்களிடம் புலம்பெயர் நாட்டில் இருந்து நிதி ஏதாவது என்று கேட்டால், அதனை ஏன் கேட்கின்றீர்கள். புலிகளுக்கு எல்லாம் நிதி கொடுத்தார்கள் அவ்வாறு எமக்கு எல்லாம் தந்தால் நாம் எவ்வளவோ செய்து அந்த மக்கள் மூச்சுவிட வழி செய்து விடுவோம் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டு உரையாடினார்கள் அந்த தொண்டு நிறுவன பிரதிநிதிகள்.

விடுதலை புலிகள் தமிழ் மக்களின் விடிவுக்காய் போராடினார்கள்.. ஆகவே ஆயுதம் தூக்கி போராட முடியாத மக்கள் பணம் கொடுத்தார்கள்...

தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவி செய்கிண்றன...! தமிழ் மக்கள் எல்லாராலும் அந்த உதவிகளை நேரடியாக செய்ய முடியும் போது எதுக்காக தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்...!

பலர் குழுக்களாக சேர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்... நீங்கள் அதை இல்லை எண்டு தான் சொல்வீர்கள் எண்டதும் எனக்கு தெரியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.