Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

 

யாழ் களத்திற்கு இருக்கும்  பண்பும் சிறப்பும் நோக்கமும் போல 

விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும்

ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும்.

 

களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத்  தட்டிக் கொடுத்தும் 

தட்டிக் கேட்டும்  களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும்

உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர்.

 

மேலும் பல ஆயிரம்  பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன்

வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா 

 

 

 

வணக்கம் வாத்தியார்

நலமா?

 

என்னிடம் சில  பழக்கங்கள் உண்டு

ஒரு இடத்தில் சேர்ந்து விட்டால்

அவர்களுக்கு இடையூறு செய்யேன்.

பிழையை  நேரிலும்

நல்லவைகளை வெளியிலும் சொல்வேன்.

 

தாயகம் மற்றும் யாழ் இவற்றிலும் எனது நிலை இதுவே.

 

இவை  இரண்டுக்கும் சார்பாக  

நேரடியாக எழுதுபவர்களுடன் நான் என்றும் முரண்பட்டதில்லை

வேறு கருத்துக்களில் முரண்பட்டாலும்

இந்த தெளிவு காரணமாக அவற்றை மறந்துவிடுவேன்

 

இவை இரண்டுக்கும் எதிராக நேரடியாக எழுதுபவர்களுக்கான பதிலை

அவர்களும் எமது மக்கள் என்றநிலையிலேயே  எடுத்து எழுதிவருகின்றேன்

 

இவை  இரண்டுக்கும்

மறைமுகமாக எழுதுபவர்கள் மீதே எனது கருத்து கொஞ்சம்  காரமாக இருக்கும்.

 

நன்றி  வாத்தியார்

வாழ்த்துக்கும்

திரிக்கும்

நேரத்திற்கும்

அன்புக்கும்........

  • Replies 63
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து கருத்தாடும் விசுகு  
மேலும் பல ஆயிரம்  பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புற விசுக்குவை வாழ்த்துகின்றேன். 

 

 

நன்றி  தமிழ் அரசு

உங்கள் பெயரை  இப்படித்தான்  எழுதுவேன்

காரணம்

ஒருமுறை  நிறுத்தி பலமாக தமிழை உச்சரிக்கணும்

என்ற ஆசை.

உங்களது பெயரில்

எனக்கு விருப்பமான இரண்டும் உள்ளது. :icon_idea:

 

நன்றி  தமிழ் அரசு

வாழ்த்துக்கும் 

நேரத்திற்கும்

அன்புக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் விசுகு அண்ணா....! இன்னும் பல ஆயிரம் கருத்துக்களை எம்முடன் பகிர எமது வாழ்த்துக்கள்........!

நன்றி  சகோதரி தமிழ் இனி

உங்கள் பெயரை  இப்படித்தான்  எழுதுவேன்

ஆனால் தமிழ் என்று சொல்லும் போது வரும் 

உற்சாகம்

இனி???  என்று முடிக்கும்போது போய்விடுகிறது

(இன்றையநிலையில்)...

ஆனால் காலம் பதில் சொல்லும் என்ற  நம்பிக்கையுண்டு என்பதால்

இனி  என்பதை நல்லது நடக்கவேண்டிய  காலமாக எடுத்துக்கொள்கின்றேன்

ஆனால் அதற்காக நாமெல்லாம் 

உழைக்கின்றோமா?

ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே  கே ட்கவேண்டிய  கேள்வி இது........

 

நன்றி  சகோதரி தமிழ் இனி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அண்ணன் மீதான பாசத்துக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா,

உண்மையில் எனக்கு பிரான்ஸ் நடைமுறை பெரிதாக தெரியாது. நான் இங்கு அதிகம் பலருடன் பழகுவதில்லை என்பதால் இந்த இரு வருடங்கள் சில மாதங்களில் பல விடையங்கள் உரிய உரிய நேரத்தில் செய்யாமல் தவற விட்டிருக்கிறேன். விசுகு அண்ணா பலதடவை யாழில் திண்ணையில் தகவல்கள் தந்து உதவியிருக்கிறார். அந்த அன்பை என்றும் மறக்க மாட்டேன். நன்றி அண்ணா.

தொடர்ந்து பலவற்றை எழுத வாழ்த்துக்கள். :)

நன்றி  துளசித்தங்கச்சி 

 

மனமிருந்தால் இடமுண்டு என்று எம்முன்னோர் சொல்வார்கள்

உதவி  செய்வதற்கு

மனமிருந்தால் போதும்

எவருக்கும்

எப்பொழுதும்

எந்தவகையிலும் 

ஏதாவது செய்யலாம்.

 

உங்களுடைய  இந்த கருத்தைப்பார்த்தபோதே  எனக்குத்தெரிந்தது

நான் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியிருக்கின்றேன் என்று.

மற்றும்படி நான் அப்படி நினைத்திருக்கவில்லை.

இதன்படியே பாருங்கள்

எந்த இழப்புமில்லாமல்

எமக்கே தெரியாமல்

நல்லவற்றைச்செய்யணும் என்ற ஒரு மனம் மட்டுமே இருந்தால் போதும்  உதவலாம்.

 

போராட்டங்கள் பற்றி  நீங்கள் யாழில் செய்துவரும் சேவைகள் அளப்பரியன.

அதற்காக நீங்கள் செலவிடும் நேரம் அளப்பரியது.

சேவை மனம் கொண்ட

பரிதவித்து நிற்கும்  எமது இனத்துக்காக

எந்நேரமும் ஏதாவது செய்யணும் என்ற

மனம் கொண்ட ஒரு  தங்கை

எனக்கு யாழ் மூலம் கிடைத்தற்காக கடவுளுக்கு  நன்றி    சொல்கின்றேன்.

வாழ்க  வளமுடன்..

 

 

நன்றி  துளசித்தங்கச்சி 

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அண்ணன் மீதான பாசத்துக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

 

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா....
2009ம் ஆண்டு தான் விசுகு அண்ணாவின் நல்ல குண‌த்தை பார்த்து தெரிந்து கொண்டேன்..ஈழப் போராட்டம் என்றால் விசுகு அண்ணா போன்றவர்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்கலாம் ஆவத்து வராது....அடைய வேண்டிய இலக்கையும் அடையலாம் நம்பிக்கையுடன் :)

 

 

நன்றி  தம்பி

 

யாழில்

எமது அடுத்த தலைமுறையும் 

தெளிவான பாதையில் செல்கிறது என்பதற்கு உதாரணமானவர்களில் நீங்கள் முக்கியமானவர்.

 

கனக்க  எழுதணும்

ஆனால் தொழிலில் நின்று அதிகம் எழுதமுடியாதுள்ளது.

 

இந்தப்பாடல்

மிகுதியைச்சொல்லும்.........

 

 

நன்றி  தம்பி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அண்ணன் மீதான பாசத்துக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

 

மேலும் பல்லாயிரம் பதிவுகள் உங்களிடமிருந்து  வரவேண்டும்! :D

 

 

நன்றி  என்னூரவரே....

 

நிச்சயமாக வரும்.....

இனி  அதுதானே எமது வேலை.

(ஐம்பதைக்கடந்து) :D

வாழும் வரை போராடு :icon_idea: 

 

 

 

 

நன்றி  அண்ணா :D

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

தம்பி மீதான பாசத்துக்கும்... :D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

 

மேலும் பல்லாயிரம் பதிவுகள் உங்களிடம் இருந்து  வரவேண்டும்.!

 

கொள்கைதான் ஒரு மனிதனின் வெற்றிக்கு முதல் ஆயுதம் கூட இது நிறையவே உங்களிடம் இருக்கு எழுதுங்கள் கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம் :) :)

 

நன்றி  அஞ்சரன்

 

 

உங்களுக்கு அண்ணனாக ஒன்றைச்சொல்லணும் என்று எதிர்பார்த்தேன்

இந்த இடத்தை அதற்காக பாவித்துக்கொள்கின்றேன்.

 

எழுத்துத்திறமையும்

நகைச்சுவை உணர்வும்

கற்பனைத்திறமையும் 

பெருவாரியாக கிடக்கிறது  தங்களிடம்.

 

தேவையற்ற சீண்டல் திரிகளில் நேரத்தை வீணாக்காமல்

எமது இனத்துக்கான எழுத்துக்களைத்தரணும்.

 

வெளிநாடுகளில்  எமக்கான நேரம்

மிக மிக குறுகிறது

ஒவ்வொருவரும் தத்தமது திறமைகளை

அதற்கான நேர்கோடுகளில்  செலவிடணும்.

 

ஆரம்பத்தில் தமிழ்சிறி

ஒரு வரியில் உங்களுக்கு ஒரு பதில் எழுதியிருந்தார்.

அதில் பெரும் எதிர்பார்ப்பும்

வாழ்த்தும் இருந்தது.

புரிந்து கொள்வீர்கள் என

ஒரு அண்ணனாக எதிர்பார்க்கின்றேன்.

 

இன்னொரு காரணமும் உண்டு

நீங்கள் வளரும் ஒவ்வொரு படியும்

எனக்கு இரட்டிப்பு மகிழ்வு தரும்.. :icon_idea:

 

நன்றி  அஞ்சயன்

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அன்புக்கும்..

 
  • கருத்துக்கள உறவுகள்

 

வாழ்த்துக்கள் விசுகர்!   :)
உங்கடை உந்த பதினையாயிரத்திலை கூட்டிக்கழிச்சு பார்த்தால் அர்ஜுனுக்கு மட்டும் ஐயாயிரம் தேறும். :D

 

நன்றி  அண்ணா

 

எனக்கும் அந்த வருத்தம் உண்டு

உண்மையில் அவருக்கு எழுதுவது என்றால் 50 ஆயிரத்தை தாண்டியிருப்பேன்........ :icon_idea:

 

நீங்களே பொறுமை  இழந்து அவருக்கு எழுதுவதைக்கண்டிருக்கின்றேன்

உங்கள் வயசுக்கு அது

எனது வயசுக்கு இது (5000) :lol:  :D

(நீங்கள்  நிறுத்தச்சொன்னால் உடனேயே  நிறுத்திவிடுகின்றேன் :) )

 

நன்றி  அண்ணா  :D

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

தம்பி மீதான பாசத்துக்கும்...  :D

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

 

நன்றி  தம்பி

 

உங்களிடம் ஒரு வேண்டுகோள்

எழுதுங்கள்

கொஞ்சம் எமக்காக........

 

 

நன்றி  தம்பி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்.........

 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் விசுகர்!!

 

அப்படியா நேரத்தை வீணாக்கினார்?!!!!!  :o  :D

 

நன்றி சோழியான்

 

உண்மை கசக்கும்

எனது நேரவிரயத்தை உணர்கின்றேன்

ஆனாலும்...........

 

 

 

உடம்பைக்கவனியுங்கள் சோழியான்

நன்றி  சகோரனே

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

 

 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..!

 

 

நன்றி  தம்பி

 

நீங்கள்  தற்பொழுது அதிகம் எழுதுவதில்லை  ஏன்???

 

நன்றி  தம்பி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

வாழ்த்துக்கள் விசுகு !

 

நன்றி  அலை

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

பாராட்டுக்கள் விசுகு அண்ணா....! இன்னும் பல ஆயிரம் கருத்துக்களை எம்முடன் பகிர எமது வாழ்த்துக்கள்.

 

 

நன்றி  தம்பி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

வாழ்த்துக்கள் விசுகுக்கு!

 

 

நன்றி  அண்ணா

 

உங்களுடைய  எழுத்துக்களையும்

பன்முக  திறமைகளையும் பார்த்து வியப்பதுண்டு

யாழின் சொத்து  நீங்கள்

தொடர்ந்து எழுதுங்கள்

கனக்க  படிக்க இருக்கு தங்களிடம்.....

 

 

 

நன்றி  அண்ணா :icon_idea:

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா!

 

நன்றி  யாழ்கவி

 

 

ஏன் தற்பொழுது அதிகம் வருவதில்லை

உங்கள் போன்றவர்களின் 

எழுத்துக்களுக்காகவும்

கவிதைகளுக்காகவும் காத்துக்கிடக்கின்றோம்

 

நன்றி  யாழ்கவி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..!          

 

நன்றி  தம்பி சேரன்

 

எழுதுவதைக்குறைத்தது போலிருக்கு... :(

தொடர்ந்து எழுதுங்கள்

 

 

நன்றி  தம்பி சேரன்

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்.....

 

15000.png

 

congrats23.gif

வாழ்த்துக்கள்.... விசுகு.

தினமும் களத்துக்கு வந்து எழுதுபவர்களில்.... விசுகரும் ஒருவர்.

இப்போ தானா.... 15, 000 பதிவுகள். அதிகம் எழுதியுள்ளார் போல்.... உணர்வு ஏற்படுகின்றது.

இவரின் தாயகப் பற்றும், கொண்ட கொள்கையில் உறுதியும்.... இவரின் மேல், மிகுந்த மரியாதையை ஏற்படுத்தும்.

பாராட்டுக்கள்... விசுகு. :) 

 

 

 

நன்றி   சகோதரா............

எல்லாம் உங்கள்   ஊக்கமும்   உற்சாகமும்  தைரியமும் தான்.

 

தாயகப்பற்று

சிங்களம் அடித்து எனக்கு கற்பித்தது.

 

நன்றி  சகோதரா

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அன்புக்கும்.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் இருக்கும் மட்டும் விசுகு அண்ணாவின் சேவை தொடர வாழ்த்துகிறேன்
 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு ,  மென் மேலும் தங்கள் கருத்துக்களைக் காண ஆவலுடன்  அன்புடன் சுவி ......! :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திற்கு இருக்கும் பண்பும் சிறப்பும் நோக்கமும் போல

விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும்

ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும்.

களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத் தட்டிக் கொடுத்தும்

தட்டிக் கேட்டும் களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும்

உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர்.

மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன்

வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் மேலும் பல பதிவுகளைத் தர வாழ்த்துக்கள்!!!!!விசுகர் யாழ் களத்தின் தூண்.அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் வல்லவர்.தேசியத்திற்கு எதிரானவர்களுடன் மட்டும் முரண்படுவார்.

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

வாழ்த்துகள்! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!!  :D

வாழ்த்துக்கள் விசகு அண்ணா... :) எல்லோரையும் ஊக்குவிக்கும் உங்கள் பண்பு பிடிக்கும். தோழனை போன்ற ஒரு அப்பா... :) பல ஆயிரங்கள் தாண்ட வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தும்போது வானத்தில் பறக்காமல், தூற்றும்போது விசனம் கொள்ளாமல், பிறந்தமண் மணம் வீசும் ஒரு உறவாக விளங்கும் விசுகு அவர்களே!. உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!! :) :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர்...! :D

விசுகு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் 30000 கருத்துக்கள் எழுதி முடிக்கமுன்னர் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.

 

 

நன்றி நுணா

 

எனக்கு மிகவும் பிடித்த மரியாதைக்குரிய  தம்பி  நீங்கள்

ஏனோ  தெரியவில்லை

மரியாதைக்குரியவர் என  எழுதுகின்றேன்

 

நீங்கள்  நிர்வாகத்திலிருந்தாலும்

ஒரு  போதும்

நான் அவ்வாறு உணர்ந்ததில்லை

உங்களது விட்டுக்கொடா  தமிழர் தாகம் ஒரு காரணமாக  இருக்கக்கூடும்

 

நன்றி  தம்பி

தங்கள்  வாழ்த்துக்கும்  அன்புக்கும்.

 

வாழ்க  வளமுடன்....

 

 

யாழ் இருக்கும் மட்டும் விசுகு அண்ணாவின் சேவை தொடர வாழ்த்துகிறேன்

 

 

 

நன்றி சகோதரி

யாழ் என்றும் இருக்கும்

ஆனால் நானிருக்கும்வரை  யாழில் தொடர  முயற்சிக்கின்றேன்

 

நன்றி வாழ்த்துக்கும் அன்புக்கும் தங்கையே...

வாழ்க  வளமுடன்....

வாழ்த்துக்கள் விசுகு ,  மென் மேலும் தங்கள் கருத்துக்களைக் காண ஆவலுடன்  அன்புடன் சுவி ......! :D  :D

 

நன்றி  அண்ணா

 

முடிந்தவரை முயற்சிக்கின்றேன் அண்ணா

கனக்க  எழுத  ஆசையண்ணா

ஆனால் நேரமும் 

சிலவேளை அனுபவமும் :icon_mrgreen: தடுத்துவிடுகிறது

ஆனால் தொடரும்..........

 

நன்றி  அண்ணா

அன்புக்கும் நேரத்திற்கும் வாழ்த்துக்கும்...

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.