Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் அநியாயங்களை நியாயப்படுத்துவது இஸ்லாத்தின் பார்வையில் சரிதானா?- Abdul Haq Lareena.

Featured Replies

அண்மையில் முள்ளிவாய்க்காலில் கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிப் படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைப் பிரியா தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒருசில முஸ்லிம் சகோதரர்கள் புலிகளால் காத்தான்குடிப் பள்ளிவாயிலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பான படங்களைப் பதிவேற்றி, சேனல் 4 இனால் ஏன் இதை வெளியிட முடியவில்லை என்ற ரீதியில் கேள்வி எழுப்பிப் பதிவுகள் இட்டு வருவதை அவதானித்தேன். இது தொடர்பில், காய்தல் உவத்தல் அற்ற வகையில் என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய விழைகின்றேன்.

விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மிக வெளிப்படையானது. ஏராளமான தமிழ் அன்பர்கள் இதை அறிவார்கள்; அது குறித்துத் தமது கருத்தை/ வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். அண்மையில் சகோதரர் சுமந்திரன் அவர்கள்கூட அதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் மிகக் கொடூரமானவை. மனித குலத்தின் மனசாட்சியையே உலுக்கும் மாபெரும் அக்கிரமங்களில் ஒன்று. இதை சகலவித பேதங்களுக்கும் அப்பால் மனசாட்சியுடைய யாரும் ஒப்புவார்கள். போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, தம்முடைய வாழ்வாதாரத் தையே இழந்து தவிக்கும் ஒரு சமூகம், தனக்கான நீதியை, நல்வாழ்வை எதிர்நோக்கித் தவிப்போடு காத்திருக்கும் ஒரு தருணத்தில் அவர்களின் நியாயமான குரலை வலுப்படுத்த வேண்டியது மனித நேயமுள்ள அனைவரினதும் தார்மீகக் கடமையாகும். இஸ்லாமும் அதையே எதிர்பார்க்கிறது.

ஆக, எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் ஒன்றுகூடலை மையப்படுத்தி இலங்கை அரசுக்கு இவ்விடயத்தில் அழுத்தம் கொடுக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் பல்வேறு குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பழைய புண்ணைக் கிளறும் வகையில், நொந்துபோன ஒரு சமூகத்தின் ஒருசாரார், - அவர்கள் மிகவும் வன்மமாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில்- முன்னர் செய்த பிழையைக் காரணம் காட்டி, குறித்த முன்னெடுப்பைத் திசைதிருப்பும் வகையில் பதிவுகள் இடுவது எந்த வகையிலும் தார்மீகமான செயல் அல்ல மனிதாபிமான செயலும் அல்ல.

பழைய கசப்புகளைப் புறந்தள்ளி புதிய இன நல்லுறவும் இணக்கமும் முளைவிடும் இத்தருணத்தில் இதுபோன்ற பதிவுகளை மீளவும் மேலெழுப்புவதன் மூலம் நாங்கள் என்ன நன்மையை அடைய முடியும்?

முள்ளிவாய்க்கால் அநியாயங்களை நியாயப்படுத்துவதாக இது அமைந்துவிடாதா? இஸ்லாத்தின் பார்வையில் அது சரிதானா? தனக்குத் தீங்கிழைத்த பெண்மணியைக்கூட நோய் விசாரிக்கப் போன அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிக்கு இது முற்றிலும் முரணானது அல்லவா? ஜெனீவாவில் ஜம்மியத்துல் உலமா செய்த வரலாற்றுத் துரோகத்தையும் பொருட் படுத்தாமல், தம்புள்ளை முதல் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்ந்து இடிக்கப்பட்ட துர்ப்பாக்கியமான நிகழ்வுகளைக் கண்டித்து (சகோதரர் அஸாத் சாலி தவிர) நமது முஸ்லிம் அமைச்சர்கள் வாய்மூடி மௌனிகளாய் இருந்த போது, அவற்றை எதிர்த்துக் குரல் எழுப்பிய சகோதரர் மனோ கணேசன் போன்ற தமிழ் அன்பர்களுக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு இதுதானா? சற்று நடுநிலைமையோடு சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே, பல்லின சமூகத்தில் வாழ்கின்ற, மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டி அமைதியை நிலைநிறுத்தும் இறை பணியைச் செய்யும் கடமையைச் சிரமேற்கொண்ட முஸ்லிம்களாகிய நாம், இதுபோன்ற விடயங்களில் இதைவிட சற்றுப் பொறுப்புணர்வோடு நடந்துகொள்வது கட்டாயமானது.

THANKS - Abdul Haq Lareena.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98509/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய சமூகத்திலிருந்து வந்திருக்கும் நியாயமான கருத்து. வரவேற்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களும் சரி விடுதலைப்புலிகளும் சரி திறந்த ஓரு நேர் சிரான ஆதரவையே ஏதிர்பார்த்தனர் முஸ்ஸிம் சமுகத்தில் இருந்து ஆனால் ஒரு சிலரை தவிர பெரும்பாலான நடவடிக்கைகள் ஏமாற்றத்தையே எமக்கு தந்துள்ளது.

 அண்மையில் சகோதரர் சுமந்திரன் அவர்கள்கூட அதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய  கனடா கூட்டத்திலும் எதிரொலித்தது .

  • கருத்துக்கள உறவுகள்

   தோழமைக் கவிதாயினி லறீனா அப்துல் ஹக் அவர்களது கருத்தை நானும் வழிமொழிகிறேன். உங்கள் பேட்டி ஒன்றில் “ இலங்கை போன்றதொரு பன்மைத்துவ சமூக ஒழுங்கில் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்பும் வகையிலான சமூக மாற்றத்தில் ஒரு துளியளவேனும் பங்குகொள்ள முடியுமானால் அதுவே நான் செய்த பெருந்தவம் எனக் கொள்வேன் என குறிப்பிட்டதை மனம் நெகிழ்ந்து வாசித்தேன். தமிழக தொடர்புள்ள மாத்தளையைச் சேர்ந்த சித்த வைதியம் தமிழ் இசை தொடர்பான  பெரும் கலைக் குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு என மரியாதையும் வனக்கங்க்லளும்.

நான் முஸ்லிம்களின் அவலங்கள் பற்றி எழுதும்போது  தமிழர் தரப்பில் இருந்தும் தமிழர் தரப்பு அவலங்கள் பற்றி எழுதும்போது முஸ்லிம் தரப்பில் இருந்தும் சில குறுந்தேசிய வாதிகள் கொச்சையாக பின்னூட்டம் எழுதுவார்கள் அதகையவர்களுக்கு முகநூலில் நான் எழுதிய எச்சரிக்கை இங்கு தங்கள் முன்வைத்த கருத்தை ஒட்டி இருப்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறேன்.

Jaya Palan நம் தாய்மண்ணின் பிள்ளைகளான முஸ்லிம்களின் துயருக்கு விடிவு நாடும் என் விவாதங்களைக் கொச்சைப்படுத்த முயன்ற தமிழ் குறுங்குழுவாதிகளையும் அதுபோல தமிழர் தொடர்பான என் கவலைகளைக் கொச்சைப்படுத்த முயன்ற முஸ்லிம் குறுங்குழு வாதிகளையும் என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து அகற்றிவிட்டேன். அவர்கள் கருத்துக்களையும் அழித்துவிட்டேன். என் உறுதியான நிலைபாட்டினால் பல கொலைக் களங்களை சந்தித்தவன் நான். இரண்டு தரபில் இருந்தும் அது புலிகளாக இருந்தால் என்ன முஸ்லிம் தீவிரவாதிகளாக இருந்தாலென்ன ஆலோசனைகளை மட்டுமே வரவேற்றிருக்கிறேன். இந்த வகையில் தர்மம்தான் முக்கியம் உசிர் மசிருக்கு சமானம் என்றே வாழ்ந்து வருகிறேன். மற்றப்படி எந்தத் தரப்பில் இருந்தும் எந்தக் கொம்பனும் என்னை மிரட்டவோ எனக்கு உத்தரவிடவோ நிர்பந்திக்கவோ அனுமதித்ததில்லை. இனியும் இதுதான் என் வழியாக இருக்கும். தயவு செய்து குறுங்குழு வாதிகள் என் நிலைபாட்டை புரிந்துகொள்ள வேனும்
 
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மதவாத (ஜிகாத்) கும்பல்களாலும் ஊர்காவல் படைகளாலும் காடைக்குழுக்களாலும் தென் தமிழீழத்திலும் வடக்கு தமிழீழத்திலும் மேற்கொள்ளப்பட்ட பேரழிவுகள்.. பெண்கள் மீதான கொடுமைகளை இந்த மனிதநேயம் கொண்டவர் எப்படி மறந்தார் என்று புரியவில்லை. விடுதலைப்புலிகளின் அநியாயங்களைச் சுட்டிக்காட்ட முனையும் இந்த முஸ்லீம் மனிதாபிமானிகள்.. தங்களின் சொந்த முதுகு அழுக்குகளை முதலில் சுரண்டிப் பார்த்துக் கொண்டு.. அதனைச் செய்வது நல்லது. உங்களின் மனிதாபிமான உணர்வு என்பது சுய தவறுகளை ஏற்றுக் கொள்ளும் திருத்தும் அடிப்படையில் இருந்து வருவதில் தான் அதன் நம்பகத்தன்மை என்பதும் இருக்க முடியும். சுயதவறுகளை முற்றாக மூடிமறைத்துக் கொண்டு.. உங்களைப் புனிதர்களாக்கி வைச்சுக் கொண்டு.. அடுத்தவர்களின் தவறுகளை மட்டும் முன்னிறுத்த வெளிக்கிட்டால் எவரும் உங்களின் மனிதாபிமானத்தை மதிக்கமாட்டார்கள். இதனை இந்தக் கட்டுரையை வரைந்தவர் உட்பட (நல்ல நோக்கம் இருந்தாலும்... புலிகளை இழுத்துவிட்டு தங்களை புனிதர்களாக்கும் கெட்ட நோக்கம் இதில் உள்ளது.) புரிந்து கொள்வது அவசியம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
திறக்கிற கதவுகளை மூடி ஆணி அடிப்பதும் எஞ்சி இருக்கிற பாலங்களை உடைத்து விடுவதும் சர்வதேசத்தின் முன் உடன்பட்ட அர்சியல் பேச்சுவார்த்தைகளில் எதிரியை முடக்கித் தனிமைப் படுத்துவதற்க்குப் பதிலாக பேச  மறுப்பதும் நம் எதிரிகளில்  பலமானவன் அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதிப்பதும். அவன் நம்மை சகோதரர்களிடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்து தனிமைப் படுத்தவும் சுற்றி வளைக்கவும்  இடமழிப்பதும் என்ற எங்கள் அழிவுக்குக் காலான தவறுகளை ஈழத் தமிழர்கள்  இனியொருபோதும் செய்துவிடக்கூடாது. ஏனெனில் மீண்டும் அரசியல் மட்டத்தில்கூட ஒரு தோல்வியை எங்கள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

70 களில் இருந்து பேசிப் பேசி ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகி என்ன நடந்தது ஆயுதப்போராட்டம் வெடித்தது பின்னர் 2009 க்கு பிறகு சுமார் நான்கு வருடங்களாக என்ன நடந்தது கேட்டால் பேசிக் கொண்டே இருக்கின்றோம் உடன் தீர்வுகள் எப்படி சாத்தியமாகும் பேசுவோம் என்றீர்கள் இன்று மட்டும் பேசிக் கெண்டே இருக்கின்றீர்கள் விடை பூச்சியம்தான் மறுடிபடியும் போராட்டம் அதன் மூலம்தான் தீர்வு எமக்கு. சிங்களத்துடன் பேசி தீர்வு என்றால் அது வாய் பேச்சு வார்த்தையில்தான் யாராக இருந்தாலும் சரி சிங்களத்துடன் பேசி தீர்வு கிடைக்கபோறதில்ல!!!

முஸ்லிம் சமுகம் பற்றி கதைக்கும் முன் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக எமக்கு இழைத்தவற்றை கொஞ்சம் பாருங்கள்  முக்கியமாக நில அபகரிப்பு, தமிழ் பிரதேசங்களுக்கான பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு இன்னும் பல விடயங்கள் எமது மக்களுக்கு இல்லை இது ஒரு சில முஸ்லிம் சகோரதர்களால் மட்டும்மல்ல ஒட்டு மொத்த முஸ்லிம் சமுகத்தால் எமக்கு தீங்கிழைக்ப்படுகின்றது. ஒரு நேர் சீரான திறந்த மனதோடு பேச வந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம் ஆகும். அத விட்டுத்து ஆணி அடிக்கிறதும், பாலம் உடைகிற கதைகள் எல்லாம் காலம் கடந்தாயிற்று!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் அரசியல் தலைமைகள்நான் ஒன்றுக்கும் உதவாதவை.. இவற்றைத் தாங்கிப் பிடிக்கும் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏமாற்றம் தருபவர்கள்..

தமிழகத்திலும்தான் முஸ்லிம்கள் உள்ளார்கள்.. தமக்கென்ற பிரத்தியேகமான கலாச்சாரத்துடன் தமிழர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.. தொண்ணூறுகளில் அவர்கள் மத்தியில் தீவிரவாதத்தைத் தூண்ட மேற்கொண்ட முயற்சிகள் பெருமளவில் பயனளிக்கவில்லை..

இலங்கை முஸ்லிம்கள் தமிழகத்தின் இஸ்லாமியரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்..

சுமெந்திரன் மிக தெளிவாக பேசினார் ,கிழக்கில் ராஜபக்சா அரசிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்று பின்னர் அரசுடன் கூட்டு சேர்ந்ததில் பல முஸ்லிம் அமைப்புகளுக்கு உடன்பாடில்லை என்றும் இன்றும் அவர்களுடன் ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுவதாகவும் சொன்னார் .

உண்மை பொய் சில வருடங்களில் தெரிந்துவிடும் .

முஸ்லீம் அமைப்புகள்  தமிழருக்கு எதிராக வன்முறை செய்ததும் தமிழ் இயக்கங்கள்  முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செய்ததும் அனைவரும் அறிந்ததுதான் அதற்காக ஓட்டு மொத்த இனத்தையும் குற்றம் சொல்ல முடியாது .

நாலு முஸ்லிம்கள் காட்டிகொடுத்தற்கு முழு முஸ்லிம்களை வெளியேற்றினால் இன்று வரை சில தமிழர்களும்  காட்டி கொடுத்து கொண்டே இருக்கின்றேன் அப்ப ஓட்டு மொத்த தமிழனையும் எங்கு அனுப்பவது ?

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க வேண்டிய கருத்து. அரசுக்கு இப்படி இனவாதத்தை கிளறும் முஸ்லிம்களும், இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள்,மசூதிகளை இடிக்கும் பௌத்த இனவாதிகளும் தமிழர்களை காட்டிக்கொடுக்கும் ஒட்டுக்குழுக்களும் தான் மிண்டு கொடுக்கிறார்கள்.இனவாதத்தை மையமாக வைத்து தான் பண்டாரநாயக்காவில் இருந்து மகிந்த வரை அரசியல் செய்கிறார்கள். ஆகவே இப்படி முற்போக்கான கருத்துக்களை  தெரிவிக்கும் முஸ்லிமோ சிங்களவரோ, தமிழர்கள் அவர்களை அரவணைப்பதில் எந்த தவறும் இல்லை.

சுமெந்திரன் மிக தெளிவாக பேசினார் ,கிழக்கில் ராஜபக்சா அரசிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்று பின்னர் அரசுடன் கூட்டு சேர்ந்ததில் பல முஸ்லிம் அமைப்புகளுக்கு உடன்பாடில்லை என்றும் இன்றும் அவர்களுடன் ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுவதாகவும் சொன்னார் .

உண்மை பொய் சில வருடங்களில் தெரிந்துவிடும் .

முஸ்லீம் அமைப்புகள்  தமிழருக்கு எதிராக வன்முறை செய்ததும் தமிழ் இயக்கங்கள்  முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செய்ததும் அனைவரும் அறிந்ததுதான் அதற்காக ஓட்டு மொத்த இனத்தையும் குற்றம் சொல்ல முடியாது .

நாலு முஸ்லிம்கள் காட்டிகொடுத்தற்கு முழு முஸ்லிம்களை வெளியேற்றினால் இன்று வரை சில தமிழர்களும்  காட்டி கொடுத்து கொண்டே இருக்கின்றேன் அப்ப ஓட்டு மொத்த தமிழனையும் எங்கு அனுப்பவது ?

சரி தான் அர்ஜீன். இரு பகுதியினரும் வன்முறைகளில் ஈடுபட்டத்து கண்டிக்கதக்கது. புலிகள் முஸ்லீங்களின் மீது மேற்கொண்ட அநீதிகளை நீதியுடன் நீங்களும் நானும் கண்டிப்பது போல, சுமந்திரன் கண்டித்து வருத்தம் தெரிவிப்பது போல முஸ்லீம்களும் தாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட முக்கியமாக (காட்டிகொடுப்பு அல்ல)  கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மிலேச்சதனமாக அக்கிரமங்களுகாகவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது முஸ்லீம் தமிழ் உறவு மேம்பாடு அடையும்.  செய்வார்களா?

Edited by tulpen

சிலர் ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரையும் காத்திருந்துவிட்டு இந்த திரியில் வந்து இறங்கியிருக்கிறார்கள் இவர்கள் இந்த திரியை ப்யன் படுத்துவது வழமையான் ஆப்பிறுக்கல்களுகே. இது குறந்த பட்சம் சுமந்திரன் பேசிய பேச்சுக்களுக்களை கூட  ஊக்கம் கொடுத்து கருத்து எழுத காணாத மயோப்பிய்ய கண்களுக்கு இந்த பெண்ணின் பேச்சு மட்டும் தெரிகிறது. ஆனால் அந்த பெண் கண்ட இன்றைய சர்வ்தேசம் பேசும் இசைப்பிரியாவின் கொலை தென்படவில்லை.

இந்தப்பெண் சமூகத்தையஓ தலைமையோ பிரதிந்திப்படுத முடியாதவர்.  விக்கிரசிங்காவுக்காக சிங்கள இனத்தின் கொலைக்குற்றங்களை மறந்து போக வேண்டும் என்று யாரும் வாதிடலாம். தமிழ் மக்கள் தங்கள் பாதையை த்ரிப்ப போவத்தில்லை. 

இவர்கள் தாங்கள் புகழ வெளிக்கிடும் அந்த பெண்ணின் கருத்துக்களை கூட ஏற்கத்தயாராக இல்லை என்றதை தங்கள் கருத்துக்களில் வெளிக்க்ட்டுகிறார்கள். அந்த பெண் இதில் சொல்லும் மிகப்பெரிய கருத்துக்கள் இரண்டு. 

1. "அற்பர்களே உங்கள் புழகுக்காக பழைய புண்களைக் கிளறாதிகள். அவற்றை திரும்ப திருமப எழுதி சமூகங்களை பிரிக்காதீர்கள்". - இந்த புகழ்தேட முயலும் அற்பர்கள்  தங்கள் பழைய வீரப் பிரதாபங்களை தொடர்பில்லாத பாணியில் இங்கே இழுத்துவந்து வெந்த புண்ணில் வேல்பாசி புகழ் தேடுகிறார்கள்.

2. "இசை பிரியாவின் கொலைக்காக குரல் கொடுங்கள்"- இவர்கள் அந்த பெண்ணின் கருத்தை ஆதரித்து ஒரு கருத்து இங்கே எழுதுதவில்லை. இங்கே திசை திர்ப்பதும், பழைய முஸ்லீம் தமிழ் சண்டைகளில் தமிழர்கள் அடாத்தாக ந்டந்தார்கள் என்றும் காட்ட முயல்வது மக் ரேயின் செய்தியை அடித்து மூடவே. 

ஈனத்தனமாக அந்த கருத்தை திரித்து அது தங்களின் கருத்தை ஆதரிக்கிறதாக வலிந்து திருப்ப முயல்கிறார்கள். அந்த பெண்ணின் கருத்தை ஆதரித்து ஒரு வசன் வசனம் எழுத த்யாரில்லை.

இந்த முஸ்லீம் பெண் தனது பாதுகாப்பை மறந்து இசைப்பிரியாவுக்கு நியாம் கேடுக்கும் போது அதை ஆதரித்து ஒரு வசனம் எழுத்தாவர்கள், அதை இசைப்பிரியாவின் நீதி கேட்டும் கருத்தாக இருந்து விடாமல் தங்கள் சுயதம்மபட்டத்தை புகழ்வதாக திரிப்பவர்கள் யாராவது முஸ்லீம் உரிமைகளை, பெண்கள் உரிமைகளை பேச தகுதியானவர்களா? 

சுமெந்திரன் மிக தெளிவாக பேசினார் ,கிழக்கில் ராஜபக்சா அரசிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்று பின்னர் அரசுடன் கூட்டு சேர்ந்ததில் பல முஸ்லிம் அமைப்புகளுக்கு உடன்பாடில்லை என்றும் இன்றும் அவர்களுடன் ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுவதாகவும் சொன்னார் .

உண்மை பொய் சில வருடங்களில் தெரிந்துவிடும் .

முஸ்லீம் அமைப்புகள்  தமிழருக்கு எதிராக வன்முறை செய்ததும் தமிழ் இயக்கங்கள்  முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செய்ததும் அனைவரும் அறிந்ததுதான் அதற்காக ஓட்டு மொத்த இனத்தையும் குற்றம் சொல்ல முடியாது .

நாலு முஸ்லிம்கள் காட்டிகொடுத்தற்கு முழு முஸ்லிம்களை வெளியேற்றினால் இன்று வரை சில தமிழர்களும்  காட்டி கொடுத்து கொண்டே இருக்கின்றேன் அப்ப ஓட்டு மொத்த தமிழனையும் எங்கு அனுப்பவது ?

இதில் சில நியாயம் இருக்கிறது. ஆத்னால் இது அந்த ஒரே ஒரு சம்பவத்தை பெரித்தாக்கி முடிக்கிறது. இருபக்கமும் செய்தது நியாயமில்லை. ாஅனால் அதை கடக்க மறுப்பது முஸ்லீகளின் தலைமைக்களுக்கு அரசில் இடம் இருப்பத்தால் அந்த சம்பவத்தை காசாக்கிக்கொள்ளவே. அந்த சம்பவத்தை நிவிர்த்திக்க அரசில் இருந்த எந்த முஸ்லீம் மந்திரியியும் இதுவரையில் முயற்சிக்காததின் ஒரே ஒரு காரணம் அதை காசாக்கும் முயற்சியே அல்லாமல் அடிப்படை கவலையால் அல்ல. 

தமிழகத்திலும்தான் முஸ்லிம்கள் உள்ளார்கள்.. தமக்கென்ற பிரத்தியேகமான கலாச்சாரத்துடன் தமிழர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.. தொண்ணூறுகளில் அவர்கள் மத்தியில் தீவிரவாதத்தைத் தூண்ட மேற்கொண்ட முயற்சிகள் பெருமளவில் பயனளிக்கவில்லை..

இலங்கை முஸ்லிம்கள் தமிழகத்தின் இஸ்லாமியரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்..

ஒவ்வொரு இனத்துக்கும் இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகளில் 'தான் என்ன அடையாளங்களை பேண வேண்டும்' என்பதும் 'எந்த இனமாக தாம் அடையாளப்படுத்த வேண்டும் என்பதும்' அமைகின்றன. இன்னொருவரைப் பார்த்தோ அல்லது இன்னொருவரோ அதனை திணிக்க முடியாது.  இன்னாரை பார்த்து திருந்து என்று சொல்ல முனைவது கூட அடிப்படையில் திணிப்புத் தான்.

தமிழக முஸ்லிம்கள் இன்றுவரைக்கும் தாம் தமிழராக உணர்வதற்கு காரணம் அங்குள்ள அரசியல்.

அங்கு அநேக அதிகாரங்கள் படைத்த மானில அரச இயந்திரம்  பிரித்தாளும் சூழ்சிகளை செய்வதில்லை. இனவாதத்தினை தம் இருப்பாக பாவிக்கவில்லை. அதே போன்று மத்திய அரசும் தமிழகத்துக்குள் இனவாத அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவையில் இன்னும் வரவில்லை (அப்படி வந்தால் மத்திய அரசு அதனை முன்னெடுக்க தயங்காது என்பதும் தெளிவானது). தமிழ் அரசியல்வாதிகள் / போராளிகள் போன்றோ அல்லது இங்குள்ள முஸ்லிம் தமைமைகள் போன்றோ பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் வசமாக மாட்டிக் கொள்ள வேண்டிய நிலை இல்லை. தமிழக முஸ்லிம்களால் தொடர்ந்து தமிழராக தம்மை அடையாளப்படுத்துவதன் மூலம் தம் கலாச்சார அடையாளங்களை பேணக் கூடியதாக, தம் இருப்பை தொடர்க்கூடியதாக இருப்பதால் அவர்களால் அப்படி தொடர்ந்து இருக்க முடிகின்றது.

ஈழத்தில் சிறுபான்மை தேசிய இனங்கள் தமக்குள் ஒன்றுபடாவிடின் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. இந்த உண்மையை ஈழத்தில் இன்று தமிழர்களும் முஸ்லிம்களும் உணர்ந்து  வருகின்றனர். அண்மையில் கிழக்கில் மாகாணசபைகளின் அதிகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இந்த விடயத்தில் இன்னொரு முன்னேற்ற படிக்கல்தான். அதே போன்றுதான் இந்த திரியின் செய்தியில் சொல்லப்பட்டுள்ள விடயமும். இந்த ஆரோக்கியமான சூழ்நிலையை குழப்பி அடிக்க கண்டிப்பாக பேரினவாதம் தன் அனைத்து விடயங்களையும் அரங்கேற்றும் எனபதையும் மறுப்பதற்கு இல்லை.

சில காயங்களை ஆற்றலாம் சில காயங்கள் ஆற்ற முடியாதவை .

இரு பகுதியும் மேற்கொண்ட வன்முறைகள் ஆற்ற படக்கூடியது முஸ்லிம்களின் வெளியேற்றம் ஆற்றபட முடியாதது அல்லது காலம் தான் அதை ஆற்றும் .வெளியேற்றபட்ட முஸ்லிம்கள் இன்னமும் மீள்குடியேற்ற படாமல் தான் இருக்கின்றார்கள் .

இந்திய தொலைகாட்சியில் இசைப்பிரியா காணொளி பற்றிய  விவாதம் சுவாமியின் குளறுபடியால் ஒரு முற்று பெறாத விவாதம் மாதிரி முடிந்தது ,இருந்தும் நாகனாதன் ,இளங்கோவனின் கருத்திற்கு நிகழ்சியை தொகுத்தவர் ஒரு செய்தியை சொன்னார் "ஒன்றை மறந்து போய்விட வேண்டாம் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் புலிகள் என்று " அந்த ஒற்றை வசனம் இந்தியர்களின் மனதில் என்றும் நிரந்தர இடத்தில் இருக்கத்தான் போகின்றது ,நாங்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம் ஆனால் அவர்கள் அதை மன்னிக்க தயாரில்லை .

அதாவது மற்றவர்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் எவ்வளவு பெரியன வென்றாலும்  அனைத்தும் மறக்கபட வேண்டியவை. எம்மால் அவர்களுக்கு  இழைக்கபட்ட அநீதிகள் சிறியனவென்றாலும் என்றும் மன்னிக்கபட முடியாதவை. அப்படிதானே அரஜீன். தங்கள் விளகத்திற்கு நன்றி

இதே போல முள்ளிவாய்கால் முடிவும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நிகழ்வாகத்தான் என்றேன்றும் தமிழர் மனதில்  இருக்கும் .

இந்தியன் ஆமி செய்த கொடுமைகளும் மறந்து மன்னிக்க பட கூடியவையா என்ன ?

Edited by arjun

திறக்கிற கதவுகளை மூடி ஆணி அடிப்பதும்
எந்த கதவும் புதிதாக திறக்கவில்லை. எந்த பேச்சுவார்த்தையிலும் உபயோகம் வரவில்லை. சம்பந்தர் அல்ல பேச்சுவார்த்தையை விட்டு விலகியது. ஜெனவரி 16,17 திகதிகளின் பேச்சுவார்த்தைகளில் சம்பந்தர் போயிருக்க பேச்சுவாத்தைக்கு அரசிலிருந்து  யாரும் போகவில்லை. இதையேதான் கிழக்கு மாகாண தேர்தல் முடிய கக்கீம் செய்தது. கொட்டேலில் இருந்து கக்கீமுக்கு தெலிபோன் கோல் போட்டு பார்த்த போது அவர் அலரி மாளிகையில் இருந்து கொண்டு அலை பேசியை நிறுத்தியிருந்தார். இது தமிழரை குறை கூறும் பொய் குற்றச்சாட்டு. தெரிவிக்குழுவுக்கு சம்பந்தர் போகாததை மேற்குநாடுகளும், இந்தியாவும் விளங்கிக்கொள்கின்றான. "மூடி ஆணி அடிப்பது" என்பது பின்னால் நிகழ்வுகளால் தாங்கப்படாத பொய் பிரசார வசனம் மட்டும்.
 
எஞ்சி இருக்கிற பாலங்களை உடைத்து விடுவதும் சர்வதேசத்தின் முன் உடன்பட்ட அர்சியல் பேச்சுவார்த்தைகளில் எதிரியை முடக்கித் தனிமைப் படுத்துவதற்க்குப் பதிலாக பேச  மறுப்பதும் 
 
எல்லா போரிலும் பாலங்களை தகர்ப்பது ஒருவகை தந்திரம். பாலம் எதிரிக்கு துணையாக இருக்கும் போது தகர்ப்பது தவிர்க்க முடியாதது. உதாரணத்துக்கு மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் போய் விக்கினேஸ்வரனுடன் பேசுவாராயிலும் அந்த பேச்சு வார்த்தை பொதுநலவாய நேரம் நடை பெறாமலிருக்கத்தக்கத்தாக சம்பந்தர், மன்மோகன் சிங் பொதுநலவாயம் வருவதை தமிழர்கள் விரும்பவில்லை என்று கூறினார். இதில் சம்பந்தர் யாழ்ப்பாணத்தில் நடை பெறக்கூடிய பேச்சுவார்த்தைகளை தடுக்கிறார் என்றாலும் பேச்சு வார்த்தைகளால் மன்மோகன்சிங் தமிழருக்கு செய்ய கூடிய உதவிகளிலும் பார்க்க பொதுநலவாய கூட்டத்தில் வைத்து இலங்கைக்கு ஆதரவு கொடுத்து எதிரி தனிமை படுவதை தடுப்பார் என்பதே உண்மை. இதனால் இந்த பேச்சுவார்த்தைக்கான பாலம்  உடைக்கப்பட வேண்டும்.
 
நம் எதிரிகளில்  பலமானவன் அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதிப்பதும். அவன் நம்மை சகோதரர்களிடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்து தனிமைப் படுத்தவும் சுற்றி வளைக்கவும்  இடமழிப்பதும் என்ற எங்கள் அழிவுக்குக் காலான தவறுகளை ஈழத் தமிழர்கள்  இனியொருபோதும் செய்துவிடக்கூடாது.
 
தமிழருக்குள் தவறுகளை செய்தவர்கள் பொன்னம்பலம், குமாரசூரியர், துரையப்பா, தியாகராஜர், கதிர்காமர், சில எழுதாளர்கள். இவர்கள் சிங்களத்துடன் சமாதானம்  என்ற போர்வையில் மிக பெரிய அரசியல் அழிவை தமிழருக்கு செய்தவர்கள். மேற்படி வசனம் அவர்களை சுட்டுகிறதாயின் அது சரி. ஆயுத போராட்டத்தை தூற்றுகிறதாயின் அது சிலவ்ற்றை மூடி மறைக்க்க முயல்கிறது. மற்றய படி 80%,12% வீதமாக இருக்கும் போது ஜனநாயகத்தால் செய்யத்த்க்கது மிக மிக சில.  ஆயுத போராட்டம் என்பது பெரும்பாலும் பேச்சுவார்த்தையால் முடிக்கப்படுவது அல்ல. 
 
ஏனெனில் மீண்டும் அரசியல் மட்டத்தில்கூட ஒரு தோல்வியை எங்கள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
 
மனச்சாட்சியாக இசைப்பிரியாவின் கொலையை எதிர்த்து டேவிட் கம்றுன், மன்மோகன் சிங் பொதுநலவாயம் போக கூடாது என்று எழுத வேண்டியதுதான் அவசியம் அதை செய்ய மறுப்பவர்கள்தான் அரசியல் தவறு செய்கிறார்கள். லீன தனது கட்டுரையில் உலாமாக்கள் சபை ஜெனீவாவில் தமிழருக்கு எதிராக செய்த பிரசாரத்தை பற்றி சொல்லியிருக்கிறார், கூட்டமைப்பு அந்த மகாநாட்டில் பங்கு பற்றி துரோகத்தனமான உலாம்க்கள் சபையின் பிரசாரத்தை எதிர்க்கவில்லை. 
 
முஸ்லீம் கட்சிகளுடான தொடர்பை கூட்டமைப்பு சரியான திசையில் திருத்தியிருக்கிறது. அடுத்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் தான் முஸ்லீம் கட்சி ஒன்றுடன் கூட்டு சேர தேவையான நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. மு.கா அதன் பின்னர் கூட்டமைப்பை வருடி அழைத்து பல அறிக்கைகள்விட்டுவிட்டது. கூட்டமைப்பின் பாதை சரி என்பதை இதை காட்டுகிறது.  நிலாந்தன் கூட கூட்டமைப்பின் வெற்றியின் பின்னர் அதற்கு ஆதவு புதிதாக சேருவத்தாக குறிப்பிட்டிருந்தார். 

பழையை புண்களை கிழறி அதில் புகழ் தேடுவோர் நிறுத்தினால் புலம் பெயர் தேசத்தில், தமிழகத்தில் போர்க்குற்ற, இனவழிப்பு விசாரணையும், தாயகத்தில் சுயநிர்ணய உரிமையும்  சரியான பாதையில் முன்னெடுக்கபட்டுகொண்டிருப்பது  குழம்பாது.

இதே போல முள்ளிவாய்கால் முடிவும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நிகழ்வாகத்தான் என்றேன்றும் தமிழர் மனதில்  இருக்கும் .

இந்தியன் ஆமி செய்த கொடுமைகளும் மறந்து மன்னிக்க பட கூடியவையா என்ன ?

இதுதான் லீனாவின் கருத்தில் பிரதான பாகம் அவர் முஸ்லீம்களிடம் கேட்பது பழைய புண்களை கிழற வேண்டாம் என்பது. அது தமிழருக்கும்தான்.

கூட்டமைப்பில் என்றுமே வடமாகாண நிகழ்வுக்கு வருத்தம் இருந்தது.  இன்று முஸ்லீம்கள் வடக்குக்கு போகமுடியாமல் இருபதன் காரணத்தை அவர்கள் உணர்ந்தார்களானால், அவர்களை வடக்கிலிருந்து வெளியேற்றுவத்தில் புலிகள் நிரந்தர நோக்கம் வைத்திருக்கவில்லை என்பதும் ஆனால் சிங்கள அரசு அவர்களை நிரந்தரமாக வெளியேற்ற விரும்பியது என்ற உண்மையும் புலப்படும். இதை முஸ்லீம்கள் உணர்ந்தவுடன் கூட்டமப்புடன் சேர்ந்து அரசை எதிர்க்க வேண்டும். 

அதாவது மற்றவர்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் எவ்வளவு பெரியன வென்றாலும்  அனைத்தும் மறக்கபட வேண்டியவை. எம்மால் அவர்களுக்கு  இழைக்கபட்ட அநீதிகள் சிறியனவென்றாலும் என்றும் மன்னிக்கபட முடியாதவை. அப்படிதானே அரஜீன். தங்கள் விளகத்திற்கு நன்றி

tulpen,

துரதிஷ்டவசமாக நாம் வாழும் உலகம் பொருளாதாரத்தின் அது வழங்கும் அதிகாரத்தின் அதீத செல்வாக்கு கொண்டாதாக இருக்கின்றது. இங்கு பலம் ஒன்று மட்டும்தான் தீர்மானிக்கும் சக்தி. நாம் வளங்களில், பொருளாதாரத்தில், அதிகாரத்தில், எண்ணிக்கையில், உற்பத்தித் திறனில்  பலம் குன்றியவர்களாகத்தான் இருக்கின்றோம். எம்மை விட பாரியளவு பலம் கொண்டதாக அவர்கள் இருக்கின்றனர். எப்பவும் பலம் குன்றியவர்களின் கண்ணீருக்கும் துயரத்துக்கும் மதிப்பில்லை. எம் துயரம் பெரிதென்றாலும், அதை யாரும் கணக்கெடுக்கப் போவதில்லை. உலகம் இப்படித்தான் இன்னும் இருக்கப போகின்றது.  நாமும் அப்படித்தான் இருக்கின்றோம். எந்த ஒரு பாமர / வறிய மக்களின் துயரத்துக்காக நாமும் குரல் கொடுக்காதவர்களாகத் தான் இருக்கின்றோம்.

எம் பொருளாதார பலம் அதிகரிக்கப்பட்டு, எம் வளங்கள் அதிகரிக்கப்பட்டு ஒரு இனமாக அணி திரண்டால் மாத்திரம் எம் துயரங்கள் பெரிசாக பேசப்படும் காலம் உருவாகும்.

நன்றி நிழலி. தங்கள் கருத்து நிதர்சனமானது. ஆனால் ஒரு சில எம்மவர்களே  எங்கள் பக்கத்தில் போராளிகள்  பிழைகளை பேசும் போது  தங்களை தர்மத்தின்பாற் பட்டவர்களாகவும் தர்மத்தின் காவலர்களாகவும்  போராளிகள் தர்மத்தின் எதிரிகள் போலவும்  அதேவேளை எதிரியின் ஆக்கிரமிப்பு அக்கிரமங்களை படுகொலைகளை பாலியல் வல்லுறவுகள் என்று வரும்போது  பேசும்போது அவை  உலக ஒழுங்கு சாதாரணம் என்று  என்று தத்துவமும் பேசுவதால் அவர்களுக்கான பதிலாகவே தெரிவித்திருந்தேன்.

Edited by tulpen

இன்று சரியான பதையிலோ அல்லது பிழையான பாதையிலோ தமிழரின் துன்பங்களை தீர்க்க எடுத்து வைக்க்ப்ப்ட்டிருக்கும் ஒரே ஒரு படி வடமாகாணசபை தேர்தல். புலம் பெயர் மக்களோ அல்லது தமிழக தமிழரோ  அதை ஆதரிக்கவோ கேடவோ இல்லை. ஆனால் அது நடந்ததின் காரணம் அவர்கள் இருவரும், பிரதானமாக தமிழகத்தார். இது காகம் இருக்க பனம் ப்ழம் விழுந்த கதை அல்ல. ஒரு ஊத்துப்பெட்டி முட்ட பருப்பை போட்டு கிட்டியில் ஆட்டி எடுத்த ஒரு குப்பி எண்ணை. தமிழக்த்தில் சென்ற மார்ச்சில் இந்தியா ஐ.நா பிரேரரணையை பகிஸ்கரிக்க வேண்டும் எந்த பெரிய போர்ட்டத்தில் வடிந்த சிறிய எண்ணைத்தான் தேர்தல். இல்லையேல் இந்தா இந்தா என்று ஏமாற்றப்பட்ட தேர்தல் எப்போதும் வந்திருக்காது. இதே போலத்தான் கனடா, இங்கிலாந்தில் காணப்ப்டும் சிறிய மாற்றம் மாற்றம் புலம் பெயர் உறவுகள் சாதித்தவை. எவ்வளவு சாதித்திருக்காலாம், இவ்வளவுதான் செய்தார்களா? எல்லாம் வேறு கதை. அப்படி இந்த சிறிய வெற்றிகளை தன்னும் கொண்டுவந்தவர்களை உற்சாகப்படுத்தி மேலும் உழைக்க வைக்காமல் ஆணி அடித்து மூடுபவர்கள் என்று ப்ழிச்சொல் கூறுவது அவர்களை  மிகவும் புண்படுத்தி பின்னால் தள்ளவைக்கும் முயற்சி. 

இவற்றை விளங்கிகொள்ளாமல் அரசியல் இல்லை ,எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்வு எவர்மீதும்  இல்லை அவர்கள் அரசியலில் தான் கோவம் .

புலம் பெயர்ந்து எமது தனிப்பட்ட வாழ்வில்  எத்தனை சந்தர்ப்பங்களில் வாயை மூடி கையை கட்டி நின்று எமது காரியங்களை சாதித்தோம் .மனதிற்குள் எத்தனை பேரை திட்டி கொலை செய்யும் கோவம் வந்தாலும் பொறுத்து இருந்தது நாளைக்கு நடுரோட்டில் நானும் நின்று குடும்பத்தையும் நடு ரோட்டில் விட முடியாது .அந்த தருணங்களில் சுப்பர்வைசர் முகத்திலோ அல்லது மனேஜர் முகத்திலோ உமிழ்ந்து துப்பிவிட்டு வெளியேறியிருக்க முடியும் ,அந்த தருணங்களில் எடுத்த முடிவுகள் தான் எம்மை இன்று இந்த இடத்தில் வைத்திருக்கின்றது .

இதுதான் எமது அரசியலிலும் நாம் செய்திருக்கவேண்டியது .

வீரம் காட்டுவது கெட்டித்தனமல்ல விவேகம் தான் முக்கியம் .

நீங்கள்   எப்பொழுதுமே

பக்கத்து வீட்டுக்காரனின் குடும்பப்பிரச்சினை என வேடிக்கை  பார்த்த முறையிலிருந்து எழுதுகின்றீர்கள்

எதில் விட்டுக்கொடுத்தார்கள்

எதை விட்டுக்கொடுக்கமுடியவில்லை என்பது உள் வீட்டுக்காரருக்கு நன்கு தெரியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.