Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உளுந்து.

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply

தக்காளி

 

 

பரிசு உங்களுக்குத் தான்.

 

 

அவர் பதில் எழுதிய போது TV யும் பார்த்துக்கொண்டிருந்தவர். :lol:

  • தொடங்கியவர்

உழுந்து/உளுந்து

 

வணக்கம் பிள்ளையள் !!!  எல்லாரும் நல்லாய்தான் தோசை சுட்டுருக்கிறியள்  :lol:  :D  .  நல்ல விசையம் . நவீனன் எண்ணை தோசை சுட்டதால் அவருக்கு ஒரு பச்சை சம்பல் குடுக்கிறன்  :D  :icon_idea:  .

  • தொடங்கியவர்

35  ஊசியிலை மரம் ( Pines tree or Pinus )

 

6his.jpg

 

 

இவை உலகத்திலுள்ள மிகப் பெரிய மரங்கள் என்று பெயர் பெற்றவை. இவற்றின் தண்டு நேராக உயர்ந்து வளர்ந்து ,கீழ் நோக்கி சற்றுச் சாய்வாக கிளைகளைப் பரப்புகின்றன. கிட்டத்தட்ட 8 -12 அடி வரை விட்டமுள்ள தண்டுடன் 300 அடிக்கு மேல் உயர்ந்து வளர்கின்றன. இந்த அசாதாரண உயரத்தினால். வேர்களினால் உரிஞ்சப் படும் நீர் உச்சிவரை செலுத்தப் படுவதில்லை. இதன் உச்சியில் காணப்படும் ஊசி முனைகள் அங்கே படியும் பனியைத் தேக்கி வைத்து உறிஞ்சும் தன்மையுள்ளன. இதனால் பனி கொட்டும் பிரதேசங்களில் தான் இந்த மரங்கள் பெருகிக் காணப்படுகின்றன. 20 வீதம் விதைகளாலும், 80 வீதம் இயற்கைப் பதியத்தாலும் இவை இனத்தைப் பெருக்குகின்றன.

இந்த மரங்களில் சில டைனசர் இருந்த காலங்களிலிருந்து உயிர் வாழ்கின்றன. உலகில் பல இடங்களில் காணப்பட்டாலும் சில பாரிய, பழைய மரங்கள் கலிபோனியாவிலும், நெவேடா மலையடிகளிலும், சீனாவிலும் காணப்படுகின்றன.

இந்த மரத்தின் பட்டை மிகத் தடிப்பானது. நெருப்பினால் அழியாதவண்ணம் ஒரு கவசம் போல் இது காக்கின்றது. தண்ணீராலும் இந்த மரங்கள் இலகுவில் உக்கிப் போவதில்லை. இந்தப் பட்டையின் சுவை பூச்சிகளினால் விரும்பப்படாததாகவும், நச்சுத் தன்மையுள்ளதாகவும் இருப்பதால், இந்த மரம் பூச்சிகளினால் பாதிக்கப்படுவதில்லை. இதனால் தளபாடங்கள் செய்யவும், விசேடமாக கட்டட வேளைகளில் விரும்பிப் பாவிக்கப்படுகிறது. அமிலங்களைத் தாங்கக் கூடிய சக்தியுள்ளவை என்பதால், 1930-1960 கால கட்டத்தில் விமானங்களில் பட்டரிகளில் இவை பாவிக்கப்பட்டனவாம்.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

 

http://en.wikipedia.org/wiki/Pine

Edited by கோமகன்

கிறிஸ்மஸ்மரம்/பைன் மரம்/ஊசியிலைமரம்/தேவதாரு மரம்.

கிழக்கு அல்லது வடக்கு வெள்ளை பைன் மரம்  :D    (Pinus strobus)

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ்மரம்/பைன் மரம்/ஊசியிலைமரம்/தேவதாரு மரம்.

 

கோமகன் ஒருவர் ஒரு பெயரை மட்டும் தான் எழுதலாம் என்று புதிய சட்டம் கொண்டு வாருங்கள். உலகத்துப் பெயரெல்லாம் எழுதி வச்சிருக்கிறார். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு மரம் :D

  • கருத்துக்கள உறவுகள்

கசூரினாபீச் மரம்..!

கசூரினாபீச் மரம்..!

 

உங்களுக்குதான் பரிசு இந்த முறை :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கசூரினா பீச்சில கவர் எடுக்கிற மரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை தூரக்கண் பார்வைக்கு கஞ்சா மரம்மாதிரி தெரியுது.... :unsure:


6his.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குதான் பரிசு இந்த முறை :lol: :lol:

 

பொபினில (bobiny)  விசாபுதுப்பிக்கிற மாதிரி நாலுமணிக்கே சனம் கியூவில நிக்குது நானென்ன செய்யிறது...! :)

  • தொடங்கியவர்

கிறிஸ்மஸ்மரம்/பைன் மரம்/ஊசியிலைமரம்/தேவதாரு மரம்.

 

வணக்கம் பிள்ளையள் நல்லாய் தான் கசூரினா பீச்சிலை விளையாடி இருக்கிறியள்  :lol:  :D  . நாங்கள் பைன் மரமெண்டு சொன்னாலும் இதுக்கு ஒரு நல்ல தமிழ் பேர் இருக்கு , அதுதான் " தேவதரு " மல்லையர் சொன்னதாலை அவருக்கு பரிசு போகுது  :)  :)  .

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

36 நீல எருக்கு , அருக்கன்,ஆள்மிரட்டி , எருக்கன் அல்லது எருக்கலை செடி ( gigantic swallow wort , Crown flower or Calotropis gigantea )

 

cewy.jpg

 

நீல எருக்கு என்பது கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்சு, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைத் தாயகமாககக் கொண்ட கலோட்ரோபிசு இனத் தாவரம்.

இது 4 மீட்டர் வளரும் தாவரம். இதன் பூக்கள் கொத்தாகவும் மிதுருவாகவும், வெள்ளை அல்லது மென் நீல நிறமுடையதாகக் காணப்படும். ஒவ்வொரு பூவும் ஐந்து முனை இதழ்களையும், நடுவிலிருந்து உயர்ந்த சிறிய அழகிய "கிரீடத்தை"யையும் கொண்டு மகரந்தக் கேசரத்துடன் காணப்படும். இதன் இலைகள் முட்டை வடிவிலும் இளம் பச்சை நிறத்தில், தண்டில் பால் கொண்டு காணப்படும்.

எருக்கன் செடி வகையைச் சேர்ந்தது. வறண்ட பிரதேசத்திலும் வளரும்.ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும்.எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும்.
இதன் இலை சாம்பல் நிறத்தில் இருக்கும். 3 செ.மீ. கனமும் 10 செ.மீ. நீளமும் சுமார் 5 - 6 செ .மீ. அகலமும் முட்டை வடிவத்தில் இருக்கும். வெள்ளெருக்கனை மாந்தீரீக சம்பந்தமான காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர் எல்லாமே மருத்துவ குணம் உடையன.

இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்களல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளை உடையது.

1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.

2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

4. 200 மி.லி. உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.

5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.

மலர் பூத்துப் பிஞ்சாகி, காயாகி கொத்தாக இருக்கும். சுமார் 7 - 9 செ.மீ. நீளத்துடன் 3 - 4 செ.மீ. கனமுள்ளதாக இருக்கும். நன்கு முற்றிய பின் வெடித்து பஞ்சாக மாறி காற்றில் பறந்து சென்று விழுந்த இடத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்கிறது.

எருக்கம்பூவினால் செய்த மருந்து -சுவாசகுடாரி மாத்திரை -சளி ,இளைப்பு ,சுவாசம் போன்ற நோய்களை தீர்க்கும்.

இலைகள்​ :

 

எருக்​கன் செடி​யின் இலைகளை எரித்து,​​ அதன் புகையை முகர்ந்தால்,​​ வாய் வழியாகச் சுவாசித்தால்,​​ மார்புச் சளி வெளியேறும்.​ ஆஸ்துமா,​​ இருமல் கட்டுப்படும்.
இதன் இலைகள்,​​ பூக்கள்,​​ வேர்,​​ பட்டைகள்,​​ எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.
 
மொட்டுகள்​ :

 

இதன் மொட்​டு​கள்,​​ சுக்கு,​​ ஓமம்,​​ கறுப்பு உப்பு ஆகியவற்றை மெல்லியதாகப் பொடியாக்கி,​​ சிறிதளவு தண்ணீர் கலந்து பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.​ தினசரி இரண்டு மாத்திரைகள் வீதம் காலை,​​ மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம்,​​ பசியின்மை,​​ வாயு கோளாறு,​​ வயிறு உப்புசம் ஆகியவை கட்டுப்படும்.பூக்கள்​ : காலரா,​​ வயிற்​றுப் போக்கு,​​ வாந்தி,​​ குமட்டல் போன்றவற்றால் உடல் பலவீனம் அடைவதிலிருந்து காக்க இரண்டு எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும்.பால்​ : எருக்​கம் பால் தலைப் பொடுகு,​​ படை,​​ மூட்டு வலி​கள்,​​ மூட்டு வீக்கம்,​​ மூலநோய்க்கு மருந்தாகப் பயன்தருகிறது.

கிராமப்புறங்களில் காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால் அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவுவர். இதனால் வலி குறைவதுடன் முள் குத்திய இடம் விரைவில் பழுத்துச் சீழ் வெளியே வரும். அத்துடன் முள்ளும் வந்துவிடும். குதிகாலில் வலி வந்தால், செங்கல்லைச் சூடாக்கி அதன்மீது பழுத்த எருக்கிலையை வைத்து அதன்மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும். உடம்பில் கட்டிகள் தோன்றி உடையாமல் வேதனை கொடுத்தால் எருக்கு இலையை நெருப்பில் வாட்டி, தாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும். எருக்கஞ் செடியின் குச்சியை, கருப்பைக்குள் செலுத்துவது கொடூரமான கருச்சிதைவு முறைகளில் ஒன்றாக உள்ளது.

வெள்ளெருக்கம்பூ Bronchitis, asthma ஆகியவற்றுக்குச் சிறந்தது.

தேவ மூலிகை அல்லது விருட்சம் என்று கூறப்படும் வெள்ளெருக்கு அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குப்பை மேடுகளிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.

ஆஸ்துமா குணமடையும்:

வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.

10 கிராம் இஞ்சி,3வெள்ளெருக்கன் பூ,6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் இருவேளை பருகி வர இரைப்பு குணமாகிவிடும்.

வாதவலி வீக்கம்:

எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.

பாம்பு கடி விஷமருந்து:

நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.

மருத்துவப் பயன்கள்.-

இதன் பால் தீ போல சுடும். பட்ட இடம் புண்ணாகும். புழுக்களைக் கொல்லும். விஷக்கடிகளை குணமாக்கும். பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும்.இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை, ஆகியவை கோழையகற்றுதல் பசியுண்டாக்குதல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது.

பாம்பு - தேள் கடி :

 

இதன் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிடவும். அரைத்து கடிவாயில் கட்டவும். விஷம் இறங்கும். எலிக் கடிக்குக் கொடுக்கலாம்.

குதிங்கால் வலி :

 

பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.

மலக்கட்டு :

 

20 மி.லி. சிற்றாமணக்ககு எண்ணெயில் 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுக்க மலர்ச்சிக்கல் தீரும்.

வயிற்றுப் பூச்சி :

 

சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.

காது நோய் :

 

எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு, பெருங்காயம், இலவங்கம், பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து வைக்கவும். இதனைச் சொட்டு மருந்தாகக்காதில் விட காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலி ஆகியன குணமாகும்.

குட்டநோய் :

 

இதன் இலையும். வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் ஆளவு பசு எண்ணெயில் கலந்து நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும், யானைக்கால் வியாதியும் குணமாகும். உப்பில்லாமல பத்தியம் இருத்தல் வேண்டும்.புளி காரம் எதுவும் கூடாது. தயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ குணமடையும்.

காக்கை வலிப்பு :

 

எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.

பல்வலி :

 

எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.

ஆஸ்த்துமா :

 

வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்கும்ப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை,மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48-96 நாளில் ஆஸ்த்துமா, இழப்பு, இரைப்பு, இருமல், காசம், ஜன்னி குணமடையும்.

சிற்றின்பம் :

 

இதே மாத்திரை இரண்டையும், 5 கிராம் ஜாதிக்காய்த் தூளையும் பாலில் கலந்து தினமும் இரவில் சாப்பிட்டு வர சிற்றின்பம் பெருகும்.

வாதவலி, வீக்கம்  :

 

எருக்கம் பால் வாதக்கடிகளைக் கரைப்பதன்றி வாத நோய், சந்நிபாதம் ஐவகைவலி இவற்றைப் போக்கும்.  

ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயில் 7 துளி எருக்கம் பாலை விட்டு நன்றாய்க் குலுக்கி நாசிக்குள் 2-3 துளி விட அளவு கடந்த தும்மல் உண்டாகும். சிரசிலுண்டான நீரையெல்லாம் வெளிப்படுத்தும். காக்கை வலிக்குச் சிகிச்சை செய்யும் போது முதலில் இச்சிகிச்சை செய்வதினால் மூளையை அனுசரித்த சீதளத்தை அகற்றும் அந்தத் தும்மலை நிறுத்த வேண்டுமாயின் முகத்தில் சலத்தால் அடித்துக் குளிர்ந்த சலத்தைக் கொண்டு நாசியைச் சுத்தப் படுத்த வேண்டியது.

எருக்கன் பூவால் முறை சுரம் ,போகா நீர் பிநசம் சுவாசகாசம், கழுத்து நரம்பின் இசிவு ஆகியவை நீங்கும்.

எருக்கன் பூவிற்குச் சமனெடை மிளகு சேர்த்து மெழுகு வண்ணம் அரைத்து இரண்டு குன்றிப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்திக் கொண்டு தினம் 2 வேளை ஒவ்வொரு மாத்திரை வீதம் கொடுத்துவர முரைசுரம் நீங்கும்.

5 பலம் ஆவின் நெய்யில் 10-12 எருக்கம் பூவைப்போட்டுக் காய்ச்சி வடித்தெடுத்து வேளைக்கு அரை அல்லது ஒரு தோலா வீதம் கொடுக்க சுவாச காசம், நீர்ப்பீநசம் போம்.

10 மில்லி விள‌க்கெண்ணெயில் 3  துளி எருக்கு இலைச்சாறு விட்டு சாப்பிட்டு வ‌ந்தால் மலச்சிக்கல் குறைந்து ம‌ல‌ம் இள‌கும்.

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை வீட்டிலும் வளர்க்கலாம்.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2_%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

 

http://mooligaikal.blogspot.fr/2012/04/blog-post_19.html

 

http://en.wikipedia.org/wiki/Calotropis_gigantea

Edited by கோமகன்

நீல எருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

எருக்கலை மரம்.. :D (வித்தியாசமா சொல்லிப் பார்ப்பம்.. :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளெருக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

எருக்கலை

  • கருத்துக்கள உறவுகள்

எருக்கலஞ்செடி

இசை எருக்கலையை மரம் என்ற படியால் எருக்கலை என்ற பெயரை சொன்ன நிலா அக்காதான் இந்த முறை வின்னர் போல இருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

எருக்கஞ்செடி

  • கருத்துக்கள உறவுகள்

பால் எருக்கலஞ் செடி...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.