Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்சன் மண்டேலா காலமானார் South Africa's Nelson Mandela dies

Featured Replies

ஒரு விடுதலை போராளியின் வாழ்வு எண்றும் முடிந்து விடுவதில்லை... !!!   அப்பழுக்கில்லாத அந்த உன்னத லட்ச்சிய வடிவில் வாழ்த்து கொண்டே இருக்கும்... 

  • Replies 51
  • Views 3.3k
  • Created
  • Last Reply

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அடிமை.. போராளியாகி.. பயங்கரவாதியாகி.. சுதந்திரத் தியாகியாகி.. சமாதானத் தூதன் ஆன வரலாறு முடிவடைந்துவிட்டது..!

 

நெல்சன் மண்டேலாவுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்சன் மண்டேலாவுக்கு எனது அஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

 

Nelson Mandela, A terrorist branded by US, became A Nobel peace prize winner
  • கருத்துக்கள உறவுகள்

Nelson-Mandela-Quote.jpg

மனவுறுதி படைத்த மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
mandela-mahintha-150-seithy.jpg

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியும் இனவிடுதலை போராட்ட வீரருமான அமரர் நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அந்த அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறைந்த நெல்சன் மண்டேலா உலகளவில் அழிக்கமுடியாத புகழ்வாய்ந்த புனிதராவார். 1994 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்கா மீண்டும் பொதுநலவாயத்தில் இணைந்ததனால் பொதுநலவாயம் மேலும் வளப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  

மறைந்த தலைவர் விட்டுச்சென்ற முதுசம் விஞ்சமுடியாததென என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மறைந்த மண்டேலா, நிகழ்கால வரலாற்றில் மனித கௌரவம் மற்றும் உன்னத தலைமைத்துவ பண்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்ந்தார். இவர் வெறுப்புக்குரிய நிறவெறி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தனது இலட்சிய வாழ்வின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்தார். இவர் தென் ஆபிரிக்க மக்களுக்கு மட்டுமன்றி தென் ஆபிரிக்க மக்கள் யாவருக்கும் புதிய வாழ்வு,கௌரவம்,சுதந்திரம் என்பவற்றை கொண்டுவந்தார்.

இந்த மாமனிதனுக்கு நாம் செலுத்தக்கூடிய அதிகூடிய அஞ்சலி அவர் நேசித்த ஜனநாயகம், பல்வகைமை,ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனுதாப செய்தி தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98432&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

டெல்லி: தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபரும், தென் ஆப்பிரிக்காவின் இனவெறிக் கொடுமைக்கு எதிராக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் 5 நாள் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான முடிவை இன்று மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் எடுத்தது. அமைச்சரவைக் கூட்டத்தில் மண்டேலாவின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், மண்டேலா உயர்ந்த தலைவர். அவருடைய தலைமுறைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் உகந்த பெரும் தலைவர். அவருடைய கடுமையான போராட்டத்தால்தான் இனவெறிக் கொடுமையிலிருந்து அவரது நாடு விடுபட முடிந்தது. அது மிகவும் அசாதாரணமானது.

 

06-nelson-mandela45-600.jpg

 

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர் மண்டேலா. உலகுக்கு தலைமைத்துவத்தின் அருமையையும், மாண்பையும் எடுத்துக் காட்டிய பெரும் தலைவர் மண்டேலா.

ஒட்டுமொத்த இந்திய மக்களும், தென் ஆப்பிரிக்க மக்களின் துயரத்தில் துணை நிற்கின்றனர். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்துகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் மண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஐந்து நாள் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

 

http://tamil.oneindia.in/news/india/5-day-state-mourning-india-as-mark-respect-nelson-mandela-189020.html

 

A great light has gone out in the world. Nelson Mandela was a hero of our time. I've asked for the flag at No10 to be flown at half mast.

I've spoken to the Speaker and there will be statements and tributes to Nelson Mandela in the House on Monday.

 

Thank you to the staff at South Africa House where I've signed the Nelson Mandela book of condolence.

 

1474593_694091643948490_1257307073_n.jpg

 

What I wrote in the Nelson Mandela condolence book, quoting, "Blessed are the peacemakers..."

 

1463885_694107720613549_892369493_n.jpg

 

The Union flag and South African flag are flying at half mast above No10 today.

 

1464685_694119573945697_331422565_n.jpg

 

David Cameron

(facebook, twitter)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

1475776_10153600755680637_1681782679_n.j

  • கருத்துக்கள உறவுகள்

இன விடுதலைக் காக தன்னம்பிக் கையுடன் போரடியவனுக்கு அஞ்சலி

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mandela-mahintha-150-seithy.jpg

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியும் இனவிடுதலை போராட்ட வீரருமான அமரர் நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அந்த அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறைந்த நெல்சன் மண்டேலா உலகளவில் அழிக்கமுடியாத புகழ்வாய்ந்த புனிதராவார். 1994 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்கா மீண்டும் பொதுநலவாயத்தில் இணைந்ததனால் பொதுநலவாயம் மேலும் வளப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  

மறைந்த தலைவர் விட்டுச்சென்ற முதுசம் விஞ்சமுடியாததென என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மறைந்த மண்டேலா, நிகழ்கால வரலாற்றில் மனித கௌரவம் மற்றும் உன்னத தலைமைத்துவ பண்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்ந்தார். இவர் வெறுப்புக்குரிய நிறவெறி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தனது இலட்சிய வாழ்வின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்தார். இவர் தென் ஆபிரிக்க மக்களுக்கு மட்டுமன்றி தென் ஆபிரிக்க மக்கள் யாவருக்கும் புதிய வாழ்வு,கௌரவம்,சுதந்திரம் என்பவற்றை கொண்டுவந்தார்.

இந்த மாமனிதனுக்கு நாம் செலுத்தக்கூடிய அதிகூடிய அஞ்சலி அவர் நேசித்த ஜனநாயகம், பல்வகைமை,ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனுதாப செய்தி தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98432&category=TamilNews&language=tamil

 

 

ஏனப்பா இந்தமனிசன்ரை நியூசை இதுக்கை கொண்டு வாறியள்?   :(  :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

வாஷிங்டன்(யு.எஸ்): தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபராக இருந்த நெல்சன் மண்டேலாவுக்கு, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் பராக் ஒபாமா சிறப்பு அஞ்சலி செலுத்துகிறார்.

மறைந்த மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த மனைவி மிஷல் ஒபாமா மற்றும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது மனைவி லாரா புஷ் ஆகியோருடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா செல்கிறார்.

 

07-obama543-600.jpg

 

முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனும் அஞ்சலி செலுத்த தென்னாப்பிரிக்கா செல்லவிருக்கிறார். அதிபர் ஒபாவுடன் செல்கிறாரா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அவருடன் ஹிலரி க்ளிண்டனும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், அவர் தந்தையும் முன்னாள் அதிபரும் ஆன ஹெச்.டபுள்.யூ புஷ்ஷும் நேரில் சென்று மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த விரும்பினார். ஆனால் 89 வயதான அவருடைய உடல் நிலை கருதி அந்த முடிவு கைவிடப்பட்டது.

இந்த நான்கு அமெரிக்க அதிபர்களும் நெல்சன் மண்டேலாவுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மண்டேலா மறைவுச் செய்தி கேட்டவுடன், அமெரிக்க கொடிகளை அரைக் கம்பத்திற்கு பறக்கவிட உத்தரவிட்டு, திங்கள் வரை துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வெளி நாட்டு தலைவர்களுக்கு இப்படிப்பட்ட மரியாதை கிடைப்பது அமெரிக்காவில் மிகவும் அரிதானதாகும்.

மூன்று இந்நாள் முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரு சேர சென்று. ஒரு வெளிநாட்டு தலைவருக்கு நேரடி அஞ்சலி செலுத்துவதும் இதுவே முதல்முறையாகும்.

 

http://tamil.oneindia.in/news/international/obama-pay-tribute-mandela-189049.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இருண்ட கண்டத்தை மூடிக்கிடந்த வெள்ளைப் பனியை விலக்க வந்த கறுப்புச் சூரியன்!!!!!!!! ஆழ்ந்த இரங்கல்கள்!!!!!

06.12.2013

 

நெல்சன் மண்டேலா மரணம். 5 நாட்கள் இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.

 

(facebook)

மண்டேலாக்கு இரங்கல் மட்டுமே தெரிவிக்கலாம் அதை விடுத்து புரட்சி ..ஒடுக்கப்பட்டவர்களின் தூதர் என்பது எல்லாம் ஓவர்

ஒரு இன விடுதலைக்கு போராடியவர் தாங்கள் சுகந்திரம் (சமஉரிமை )பெற்றவுடன் முடித்து கொண்டார் ஒடுக்கபட்ட எந்த இனத்துக்குள் அவர் குரல் கொடுக்க வில்லை என்பது வேதனை எமது எண்ணம் எல்லாம்  ஒரு காலம் அப்படிதான் இருந்தது கருப்பா இருக்கிறவன் யாராவது பெரிய பதவிக்கு வந்தா எமக்கு உதவுவான் என்பதே ..மண்டேலா முதல் ஒபாமா வரை நம்பி கேட்டதுதான் மிச்சம் எமக்காக நாம் போராடுவோம் போராடவேண்டும் என்பதுதான் எமக்கான ஒரே வழி. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நகரம், நெல்சன் மன்டேலாவுக்காக, ஒரு வித்தியாசமான முறையில், அஞ்சலி செய்கின்றது!

 

தென்னாபிரிக்காவின் கொடியின் நிறங்களுடன் ஐபல் ரவர்!

 

999205_10151833487803564_1013628305_n.jp

பிரான்ஸ் நகரம், நெல்சன் மன்டேலாவுக்காக, ஒரு வித்தியாசமான முறையில், அஞ்சலி செய்கின்றது!

 

தென்னாபிரிக்காவின் கொடியின் நிறங்களுடன் ஐபல் ரவர்!

 

999205_10151833487803564_1013628305_n.jp

 

இதை எங்கிருந்து பெற்றீர்கள்? முகநூலிலிருந்து எனின் எனக்கு இணைப்பு தருவீர்களா? :)

 

  • கருத்துக்கள உறவுகள்

-https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/1472931_680930291940789_159769762_n.jpg

 

இணைப்பு மேலே உள்ளது, துளசி!

 

http க்கு முன்னாலுள்ள சிறிய - ஐ நீக்கி விடுங்கள்! 

 

படம் மட்டுமே வருமென்பதால், இணைப்பைக்காட்டுவதற்காக, அந்தக் கோட்டைப் போட வேண்டி வந்தது!

 

இப்போது யாழ் அன்புவும், யாயினியும் தங்கள் முகப்புத்தகத்திலும் இணைத்துள்ளார்கள்! :D  

நன்றி அண்ணா.

 

நீங்கள் இணைத்த இணைப்பு https://fbcdn-sphotos-a-a.akamaihd.net என ஆரம்பிக்கிறது. கவனம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா.

 

நீங்கள் இணைத்த இணைப்பு https://fbcdn-sphotos-a-a.akamaihd.net என ஆரம்பிக்கிறது. கவனம். :rolleyes:

நன்றிகள், துளசி!

 

இப்பிடியும் ஒரு விசயம் இருக்கின்றது இண்டைக்குத் தான் தெரியும்!

 

இனிமேல் கவனமாக இருக்க முயல்கிறேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.