Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது  இன்னும் முடியலையா :o  ,சட்டுப்புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா  யாழ்கள வரலாற்றில்

இப்பிடி ஒரு இழுவையை பாத்ததில்லை :wub::(

  • Replies 286
  • Views 20.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது முடியாது தொடரும்.......முடிவே இல்லாதது.....நேரமும் காலமும் கைகொடுக்க மறுப்பதனால் தமிழ் தொலைக்காட்ச்சி சீரியல் மாதிரி இழுபடும்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இழுங்க,என்ர சீவன் போயிரும்போல இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அட எங்கங்ட ஆட்களும் நயந்தார,திரிசா,குஸ்பு ரெஞ்சில் வந்திருப்பாங்கள் ........இந்த பாழப் போன போராட்டம் வந்திரிக்காவிட்டால்......

  • தொடங்கியவர்

அஞ்சரன் மேடைக்கு அழைக்கப்படுகின்றார் :D :D .

 

 

announcing.jpg

மின் ஒலிகள் ஒளிகள் மேடை அலங்காரம் போன்றவற்றை பார்வையிடும் விழா ஏற்ப்பாட்டளர்களுடன் சுற்றியபடி நிலைகளை அவதானிக்கும் நானும் சுண்டலும் .

303982_1850747248252_368821871_n.jpg


மண்டபத்துக்கு வருவோர்க்கு வாகன ஒழுங்கு செய்யபட்டு உள்ளது சிட்னியில் இருந்து நேரா இடப்பக்கம் நடந்து வரலாம் ..

மெல்போன் போன்ற பிற இடங்களில் இருந்து அப்டியே செங்குத்தா ஓடி வரலாம் .

அனைவரையும் அன்புடன் மண்டபத்துக்கு அழைக்கிறேம் எனதருமை உறவுகளே .

254663_1681957548615_2330638_n.jpg?lvh=1

  • கருத்துக்கள உறவுகள்

மைக் டெஸ்டிங்குக்கு சரியான ஆளைத்தான்  பிடித்திருக்கிறீங்கள்   அஞ்சரன் ! :D

மின் ஒலிகள் ஒளிகள் மேடை அலங்காரம் போன்றவற்றை பார்வையிடும் விழா ஏற்ப்பாட்டளர்களுடன் சுற்றியபடி நிலைகளை அவதானிக்கும் நானும் சுண்டலும் .

303982_1850747248252_368821871_n.jpg

மண்டபத்துக்கு வருவோர்க்கு வாகன ஒழுங்கு செய்யபட்டு உள்ளது சிட்னியில் இருந்து நேரா இடப்பக்கம் நடந்து வரலாம் ..

மெல்போன் போன்ற பிற இடங்களில் இருந்து அப்டியே செங்குத்தா ஓடி வரலாம் .

அனைவரையும் அன்புடன் மண்டபத்துக்கு அழைக்கிறேம் எனதருமை உறவுகளே .

254663_1681957548615_2330638_n.jpg?lvh=1

 

வாசிக்கும்போது மாறி வாசித்து விட்டேன் அஞ்சரன். :lol: :lol:

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பார்வையாளர் தான் குந்தியிருக்கிறார். :D

ஒரு பார்வையாளர் தான் குந்தியிருக்கிறார். :D

 

mm கோமகன் அண்ணை மட்டும் தான் அவரு :icon_idea:

 

நிகழ்ச்சி முடியமுன் வேகமா வரும் களஉறவுகள் .

moodar_koodam_tamil_movie_stills_12e400f

  • தொடங்கியவர்

smooth-slider-copy3.jpg

 

 

மண்டப வாசலுக்கு அருகில் கார் பாக்கிங்கு கிட்டவாக கட்டிங் வாசித்துக் கொண்டிருந்த குமாரசாமியரை எங்கள் சுண்டல் மடக்கி எடுத்த கலக்கல் பேட்டியின் ஒருபகுதியைத் தருகின்றோம்

 

சுண்டல்: வணக்கம் குசா தாத்ஸ்  :)  .

குசா : கையை நெற்றியில் வைத்தவாறு யாளு ?

சுண்டல் : நான் சுண்டல் தாத்ஸ் .

குசா : இப்ப அதுக்கென்ன :D ?

சுண்டல் : உங்கடை சிட்ணி அனுபவங்கள் எப்பிடி தாத்ஸ் ?

குசா : தம்பிளியா உன்ரை காளை காட்டு இங்கை எல்லாம் பெளிசாய் கிடக்கு ?

சுண்டல் : என்ன பெரிசாய் கிடக்கோ  :o  .

குசா : ஓமடாம்பி றோட்டிலை இருந்து பொம்பிளையள் வரைக்கும் எல்லாம் தானடாப்பா அண்டைக்கு அந்த இங்கை இருக்கிறவையளின்ரை குத்தாட்டம் பாத்த பிறக்கு நான் ஒரு நிலையிலை இல்லை கண்டியோ :icon_mrgreen::lol: .

சுண்டல் : இந்த நிகழ்ச்சிய பற்றி என்ன சொல்ல விரும்புறியள் :) ?

குசா : பொறு வாறன் தம்பிளியா .... :lol:

என்று கையிலிருந்த பிளாவுடன் எழும்ப திரும்பவும் தடுமாறி  விழுகின்றார் . சுண்டல் நந்து....................
என்று அலறுகின்றார் :D :D .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

எமது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அவுசுக்கு வந்த பவர்ஸ் ஸ்டாரை நண்டர் நிகழ்வு மண்டபத்துக்கு அழைத்து வரும் காட்சி ஒன்று :D :D .

 

golisoda.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அங்கொடயில் இடப்பற்றாக் குறை காரணமாக.... சிட்னியில் அதற்கான கிளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அங்கொடயின் மூத்த உறுப்பினர்களால், கிளையில் நடாத்தப்பெறும் களியாட்ட நிகழ்வுகளை யாழ் உறவுகள் அனைவரும் தவறாது பாஞ்சுவந்து... கண்டுகளிக்குமாறு பெருமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.  :):D:lol:

 

இப்படிக்கு,

அன்புறவு, பாஞ். :wub:

  • தொடங்கியவர்

அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் பெருந்திரளாக கூடியிருக்கும் யாழ் இணையத்தின் வாசகர்களே !! சிட்ணிக்கு நேரடியாக வருகை தந்திருக்கும் கள உறவுகளே !! உங்கள் எல்லோரையும் இதமான இன்றைய மாலை பொழுதில் சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம்  :D  . இந்த நிகழ்வு பல தடைகளையும் நடைமுறை சிரமங்களையும் தாண்டி உங்கள் முன் ஜனநாயக முறைபடி பொது தேர்தல் ஒன்றை நிகழ்த்தி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதற்கமைய விருதுகளுக்கு கள உறவுகள் தெரிவு செயப்படுள்ளார்கள் :) . இந்த நிகழ்வில் விருது பெற்றவர்களுக்கு விருதும் , நிர்வாகத்தின் சார்பில் அவர்களது சுய விபரக்கோவையில் அவர்களது விருது  சம்பந்தமான விபரங்கள் நிர்வாகத்தால் இடப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம் :D  . இந்த முறையானது வெற்றி பெற்ற கள உறவுக்கு மிகுந்த உற்சாகத்தையும் , அவரது ஆக்குதிறனை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என நம்புகின்றோம் . அதே வேளை விருது பெற்ற கள உறவினது சுய விபரக்கோவையை பார்வை இடுகின்றவர்கள் அந்தக் கள உறவை அறிவதற்கும் வழிவகுக்கும் என்பதால் கள உறவு செங்கொடியின் சிபார்சின் பேரில் எங்களாலும் நிர்வாகத்தாலும் இந்த நடைமுறை கொண்டு வரப்படுகின்றது :) . எம்முடன் சகல விதத்திலும் ஒத்துழைத்த யாழ் இணய நிர்வாகிகளுக்கு நாங்கள் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் :) . எங்களுடன் கடமை புரிந்த கண்காணிப்பாளர்கள் , செய்தி மற்றும் மக்கள் தொடர்பாளர்  :lol:  அனைவருக்கும் எமது கோடானு கோடி நன்றிகள் . இதோ நிகழ்வுகள் விருது வழங்கும் நிகழ்வு  ஆரம்பமாகின்றது  ................. :D

வணக்கம் அன்பு உறவுகளே உங்களை இந்த மேடையில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி .

 

ஒலிவாங்கி எந்தப்பக்கம் பிடிப்பது என்று தெரியாத என்னை நம்பி கையளித்திருக்கும் உங்களுக்கு என்னால் முடிந்த அறிவிப்பை செய்யலாம் என்று மேடையில் நான் மீண்டும் வணக்கம் இனிய மாலை பொழுது 48 டிகிரி வெயிலுக்கு ஈடு கொடுத்து போடப்பட்டு இருக்கும் ஏசி உங்களை குளுமையுடன் வைத்து இருக்கும் என்னும் நம்பிக்கையில் நாம் .

 

பேசலாம் நிறைய பேசலாம் நிறைவா பேசலாம் அதுவரை  சிறிய இடைவேளை .

 

மண்டப கழிவறைகளை பாவிப்பது பற்றி சிறிய விளக்கம் :icon_idea:

 

  • தொடங்கியவர்

இந்த நிகழ்வுக்கு சிறப்புரை ஆற்ற எமது மதிப்புக்குரிய கலக்கல் மன்னன் மல்லையூரானை மேடைக்கு அழைக்கின்றோம் :lol: :lol: :D:icon_idea: .
 

 

Edited by கோமகன்

அண்ணன் மலையூரான் மேடைக்கு பின்பக்கம் வரவும் உங்களுக்கான உடைகள் மேக்கப் செட் தயார இருக்கு :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னும் முடியேல்லையே

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பார்வையாளர் தான் குந்தியிருக்கிறார். :D

 

நான்  குந்தியிருப்பதுதான் அஞ்சரன் என எண்ணினேன். அப்பா அவரில்லையா அது ???

 

தனது ஆறுதல் நேரங்களை தனது ஆறுதலுக்கு பயன்படுத்தாது யாழை உருவாக்கி, தனது குடும்பத்தின் நலங்கள் பாராது யாழின் நலத்தை, யாழின் உறவுகளின் நலத்தை, தமிழ் ஈழத்தின் நலத்தை கருத்தாக கொண்டு உழைக்கும் மோகனுக்கும், அவரை மன்னித்து அவரின் விருப்பத்தின்படி செயலாற்ற இடம் அளிக்கும் குடுமபத்தினருக்கும், பல கஸ்டங்களுக்கு மத்தியில் முகம் சுளிக்காமல் இனாமாக தமது சேவையை அளித்து வரும் நிர்வாக, மட்டிறுத்தினர்களுக்கும், "2012/2013 யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா"வுக்ககாக சிட்ணியில் இடத்தை தெரிந்து மேடையை அமைத்து சிறப்பித்த ஆஸ்திரேலிய அன்புகளுக்கும், உலகம் பூர இருந்து வந்து குழுமியிருக்கும் உறவுகளுக்கும், எனது வணக்கம்,  என்னையும் இந்த விழாவுக்கு அழைத்துச் சிறப்பித்த விழா அமைப்பாளர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துவிட்டு எனது சிறு குறிப்பை வழங்கலாமென நினைக்கிறேன்.

 

நான் நின்று கொண்டிருக்கும் இந்த உயர்ந்த மேடையில் இருந்து பார்க்கும் போது, கீழே அமர்ந்து இருந்து எனது வாயில் இருந்து என்ன சொல் வரவிருக்கிறது, எனது மனத்தில் என்ன கருத்து உதிக்கிறது,  நான் தங்களை அறிந்தவன் தானா, தங்களின் விருபத்திற்கு,எதிர்பார்ப்புக்கு ஏற்றதை சொல்லத்தான் வந்தவனா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் பெருந்தகைளை பார்க்கும் போது அப்துல் கலாம் தனது ராஸ்டிரபதி நியமனத்தின் கன்னிப்பேச்சை ஆரம்பிக்கும் போது சொன்ன "எந்தரோ மாகனு பாவலு........." என்ற பாடல் தான் எனது நினைவுக்கும் வருகிறது. இன்று கீழே அமர்ந்திருந்து இருந்து கேட்பவன் நானாகவும், மேலே நின்று  சொல்லியிருந்திருக்க வேண்டியது நீங்களுமாகவல்லவா இருந்திருக்க வேண்டும். எப்படி இது தவறாக நிகழ்ந்து அடிதலை மாறிப்போனது  என்றுதான் நான் இப்போது ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். 

 

ஆங்கிலத்தில் "ஒரேஇறக்கைக் குருவிகள் ஒன்றாகக் கூடும்" என்பார்கள். நமது வாழ்வு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு, நமது சொந்தத் தாய்வீட்டில் நாம் அகதிகளாக்கப்பட்டபோது மாற்றாந்தாய் நம்மை ஆதரித்து நமக்கு மறுவாழ்வு தந்திருக்கிறாள். நாம் பாதுகாப்பும் வாழ்வும் தேடி புலம் பெயர்ந்த பட்சிகள். வந்த இடத்தில் நமது இறகுகள் ஒரேமாதிரியாக இருக்கக்கண்டு  ஒன்றாயிருக்கிறோம்.  நாம் ஏழைகள் அல்ல, எளியதுகள் அல்ல. இயலாதவர்கள் அல்ல. ஆனல் வருடத்தில் ஒருதடவை பொங்கள் பிறந்திருக்கும், புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரின் வீட்டில் பால் பொங்கியிருக்காது. பல பெருநாட்கள் கடந்து போயிருக்கும். அந்த வீடுகளில் பூசை நடந்திருக்காது. ஆனால் யாழின் உறவுகளான நாம்மட்டும் இந்த விசேடங்கள்  எதையும் அனுபவிக்க தவறுவதில்லை.  நமது மனங்களை குறைகள் நிறைப்பதில்லை. நமக்கு நமது நாட்டில் எமது பண்பாடு மூலம் கிடைக்க வேண்டியவை எல்லாமே யாழில் கிடைத்துவிடுகிறது. புலம் பெயர் நாடுகளில் நமக்கு நாம் படிக்கும் பள்ளியாக, நாம் தொழும் கோவிலாக, கண்டு களிக்கும் கலை மண்டபமாக, போய் மகிழும் களியாட்டுவிழாக் கூடமாக இருந்து வருகிறது யாழ். ஒரே இறக்கை கொண்ட பறவைகளாகிய நாம்  இந்த அரிய யாழ் என்ற ஏரியை சுற்றி சூழ்ந்திருந்து  நமது விம்பங்களை அதில் கண்டு நம்மை நாம் ஒரே இனமாக அடைடையாளம் கண்டு குதுகலம் அடைகிறோம் இன்று.

 

யாழ் என்ற ஏரி தனது 15 வயதை அடையப் போகிறது.  சாகரம் போன்ற பரந்த இந்த ஏரிக்கு பல புள்ளினங்கள் பறந்து வந்திருக்கின்றன. சிலது பறந்தும் போயிருக்கலாம். ஆனால் இங்கே தங்கிவிட்டவை இந்த ஏரியை நிறைக்கும் அதன் நீர்  போன்று, அதன் நீண்ட கரை போன்று அதனை சுற்றி அடர்ந்திருக்கும் பசும் காட்டின் காட்சி போன்று "இந்த ஏரி"யின் ஒரு பாகமாக கலந்துவிட்டன. அந்த பட்சிகள் இரையாவிட்டால் இந்த யாழுக்கு ஒலி இல்லை. அந்த பட்சிகள் சிறகடிக்காவிட்டால் இந்த யாழுக்கு இயக்கம் இல்லை. அந்த பட்சிகள் சுற்றி அமர்ந்திருந்து சிறகைக் கோதாவிட்டால் இந்த யாழுக்கு இதே அழகிருக்காது. இது எம்மை சுற்றி நாம் அமைத்துக்கொண்டுவிட்ட கோடைகால சுற்றுலாத்தளம். 

 

டார்வினின் தத்துவத்தில் தக்கன வாழும், தககாதன அழியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் வாழ தொடந்தும் தக்கவர்களாகவே இருக்கிறோம். வாழ தகுந்த பண்புகளை பலவற்றை மேலும் எமக்கு ஊட்டிக்கொள்ளவும் தாயாராக உள்ளவர்களாகவும் இருக்கிறோம். எந்த மொழியையும் உள்வாங்கி தன்னை மலரச்செய்யும் திசை சொல் இலக்கணத்தை உடைய தமிழை பேசுபவர்களாக இருக்கிறோம். எந்த மதத்தையும் உள்வாங்கி அதை தமிழ் மதமாக மாற்றும் மான்பு உள்ளவர்களாக இருக்கிறோம். எந்த பண்பாட்டையும் உள்வாங்கி அந்த பண்பாட்டை தமிழர் பண்பாடாக இணைத்து மலரவைக்கும் சால்பை பெற்றிருக்கிறோம்.  தமிழர்களாகிய நாம் கட்டுமானக்கலையையும், கணிதத்தையும், தத்துவத்தையும், வான வெளிச்சாத்திரத்தையும் கண்டறிந்து அதை உலகெங்கும் சொல்லித் தந்திருக்கிறோம். அகிலம் அதை மேலும் ஆராய்ந்து அறிந்து நமக்குச் சொல்லித்தரும் போது அதை கேட்டுக் கற்கும் ஆர்வப் பக்குவம் கொண்டிருக்கிறோம்.  திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் திறன் உள்ளவ்ர்களாக இருக்கிறோம்.  நாம் தொடர்ந்து இப்புவியில் வாழத் தகுதியானவர்களே என்று சொல்ல எத்தனையோ உயர்வுகள் நம்மிடம் இருக்கிறது.

 

அன்று நம்மிடம் வந்தாரை வாழவைத்த தமிழர் நாம் இன்று எமக்கு வாழ்வு தேடி புலம் பெயர்ந்திருக்கிறோம்.  புலம் பெயர் தேசமெங்கும் வீடுகள் எத்தனோ இருக்கின்றன நமக்கு. ஆனல் உலகத்தில்  நாடு ஒன்றில்லாத இனத்தவர்களாக நம் மொழி, நம் இனம், நமது பண்பாடு ஆகிய நமது சிறப்பியல்புகள் இனியும் நிலைக்குமா என்ற நடுக்க நிலைக்கு நாம் இன்று வந்திருக்கிறோம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பரந்த மனப்பான்மையைப் போற்றி வளர்த்து போகப் பாதை ஒன்றில்லாத நாடோடிகளாக மாறியிருக்கிறோம். நாம் போகப் பாதை என்று ஒருபாதை இல்லாதிருந்தாலும் யாழுடன் இணைந்திருப்பதால், நாம் இன்னமும் நோக்கம் என்று ஒன்றுள்ளவர்களாகவேதான் இருக்கிறோம். ஆயிரம் காலம் காத்திருந்தும் நமது அன்னைப்பூமியை மீட்க வேண்டும் என்ற வேட்கை உள்ளவர்களாக இருக்கிறோம். நமது மண்ணை நாம் மீட்க வேண்டும்! நமது இனத்தை நாம் காக்க வேண்டும்! பத்தாயிரம் ஆண்டுகாலம் பாரினில் புகழோடு விளங்கும் நமது தாய் மொழி தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும்! இன்னொரு பத்தாயிரம் ஆண்டுகாலம் இந்த பூமியில் அதன் பெருமை நிலைத்திட தேவையான தியாகம் புரிந்திடவேண்டும்!

 

போதூக்கீசர் வந்து நமது நாட்டைக்கைப்பற்றி ஆண்டார்கள். நாம் நம்மை இழக்கவில்லை. ஒல்லாந்தர்கள் வந்தார்கள். கூரையில்  சாப்பாட்டு  இலையை செருகித்தன்னும் நம்மை நாம் இழக்காமல் வாழ்ந்தோம். ஆங்கிலேயர் தமது மொழி, சட்டம், நடவடிக்கைகள் என்பவற்றை தெரியாவிட்டால் உழைப்பில்லை, உணவில்லை என்று ஆக்கிய போதும் நாம் எமது மொழியை, எமது பண்பாட்டை இழக்கவில்லை. ஆனால் இன்று தோன்றியிருக்கும் இந்த ஆபத்து அவ்வளவு இலகுவாக நம்மை விட்டு நீங்கிவிடும் போல்ப்படவில்லை. இந்த அடி சுனாமி அடிக்கும் போது இன்னும் எத்தனைகாலம் நமது மொழி, நமது பண்பாடு நிலைக்கும் என்று ஒவ்வொருநாளும் நாம் ஏங்கியதுண்டு. யாழ் இன்று நமது கவலையில் பெரும் பாகத்தை போக்கிவிட்டது. இன்னும் மிகுதியையும் போக்கிக்கொள்ள ஒரு போராட்டத்துக்கான தளமும் அமைத்துக் கொடுத்திருக்கிறது.  தாகத்தோடும் பசியோடும் அலைந்திரிந்த எமக்கு உண்டு களையாற அமிர்தமாக தித்திக்கும் தண்ணீர் தந்திருக்கிறது, இந்த வற்றாத ஏரியாகிய யாழ். சோர்வு போய் நமது மீனை நாம் உழைத்துகொள்வதற்கு தேவையான நீர்நிலையும் தந்திருக்கிறது. யாழை வைத்து நமது விடுதலையை தேடுவது நமது கடமையாகட்டும்! சுதந்திரம் என்பது ஒவ்வொருவரும் தான் தான் தேடிக்கொள்ள வேண்டியது. ஒருவனுக்கு உதவுவதற்காக பிடிக்கப்பட ஒரு மீனைக்கொடுத்தால் அவனுக்கு ஒரு நேரப்பசி மட்டும்தான் போகும். ஆனால் ஒரு மீனைப்பிடிக்க காட்டிகொடுத்தால் அவனது வாழ்வையே அதை வைத்து போக்கிக்கொள்ள முடியும்.  யாழ் வழியை திறந்து விட்டிருக்கிறது. பயன் படுத்திக்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொருவரையும் பொறுத்தது. 

 

"வாழ், வாழவிடு" என்பது தமிழரின் வாழ்க்கை. 1948 லிருந்து தானும் வாழாமல் தமிழரையும் வாழவிடாமல் கெடுக்கிறது சிங்களம். ஒருதடவை ஒரு அறிஞர் எழுதிய நல்லதொரு ஒப்புவமையை இந்த மேடையில் இப்பொழுது குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.  பூலோக மக்களை காப்பாற்ற பரலோகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேவ தூதான் இஜேசுபிரான். அவர் "பகமையை பாராட்டாதே, இணங்கிப்போ, எதிரியுடனும் நட்பாயிரு" என்றதை சொல்ல வந்து " உனது ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றக்கன்னத்தையும் காட்டு" என்று சொல்லிக்கொடுத்தார்.  ஆனால் பழந்தமிழர் கண்டு வைத்திருந்த தத்துவம் அதற்கும் இன்னொரு படி மேலே போகிறது என்கிறார் அந்த அறிஞர். அதற்கு அவர் காட்டும் உதாரணம் இதுதான்.  யாராவதொருவன் அவர்களுக்கு ஒரு கன்னத்தில் அடித்தால் அவன் நாணும்படியாக அவனுக்கு நல்லதொரு உதவி செய்து அனுபிடுவதுதான் அவர்களின் பண்பு என்கிறார் அவர். தோட்டத்தில் மாடக உழைத்து நாட்டுக்கு அன்னியச் செலவாணியைச் சேர்த்து வந்தார்கள் தமிழர்கள். நாடு முழுவதும் பரந்து சென்று வியாபாரத்தை பெருக்கி வந்தார்கள் தமிழர்கள். நாட்டின் சகலகலா சாலையாக  வடக்கை மாற்றி சகல இனத்துக்கும் கல்விச் சேவையாற்றி வந்தார்கள் தமிழ்ர்கள். நாட்டை நன்றாக நிர்வகித்து மற்ற்ய நாடுகள் போற்ற, புகழ செய்து வைத்திருந்தார்கள் தமிழர்கள். இந்த நற்பண்பால், தமிழர்கள் மீது வந்த பொறாமையின் காரணத்தால் நாட்டை குரங்கின் கையில் பட்ட பூமாலையாக்கினார்கள் சிங்கள்வர்கள். நாட்டு முன்னேற்றம் பின்னால் சரியத்தொடங்கியது.  அது மட்டுமல்லாமல் அவர்களையும் முன்னேற்றி வாழ வைத்து தமது நாட்டை அவர்களுடன் இணைத்து அவர்களுடன் சேர்ந்து வாழ நினைத்த தமிழரின் நாட்டை குரங்கிற்கு புத்திமதி சொன்ன தூக்கனாங்குருவியின் கூட்டை குரங்கு கிழித்தெறிந்தது போல கிழித்து எறிந்திருக்கிறார்கள். அந்த கூட்டிலிருந்த குருவியின் குஞ்சுகள்தான் பல நாடுகளில் போய் விழுந்து, தட்டுத்தடுமாறி இன்று யாழால் இணைக்கப்பட்டு தம்முள் பல ஆறுதல்கள் காணத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் யாழையும் போற்றி, நாட்டையும் தேற்ற அவர்கள் நீண்ட தூரம் போக இருக்கிறது. போகும் பாதை தூரமாக இருந்தாலும் தீரத்துடனும் தீர்க்கத்துடனும் பயணிக்கும் போது பாதையின் முடிவை எட்டுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. 

 

போகும் பாதையில் பல அரிய படைப்புக்களை பலவற்றை யாழுக்காக செய்திருக்கிறார்கள் யாழின் உறவுகள். யாழில் பல படைப்புக்களை செய்யும் அவர்களை ஊக்குவிக்கும் சிறப்பு விழாத்தான் இப்போது நடந்துகொண்டிருக்கும் "யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா".  தமது சீரிய திறமைகள் மூலமாக யாழையும் பெருமைப்படுத்தி தமக்கும் பெருமை தேடிக்கொண்ட படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.  

 

யாழின் தன்னலமற்ற சேவை தரணி எங்கும்  புகழ் பெறட்டும் என்று எனது வாழ்த்தை யாழுக்கு   தெரிவித்துக்கொள்கிறேன்.

 

என்னையும் பெருமைப்படுத்தி, எனக்கு இந்த சிறப்புரை வழங்கும் சந்தர்ப்பத்தை கொடுத்து, என்னைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த உங்களுக்கு நன்றி.

 

சிறு குறிப்பாக ஆரம்பித்து உங்களின் பொறுமையை சோதித்தமைக்காகவும், எனது பேச்சில் ஏதாவது சொற்பிழை கருத்துப்பிழைகள் இருந்தால் அவற்றுக்காவும் உங்களிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டு "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்று சொல்லி எனது சிறப்புரையை முடித்துக்கொள்கிறேன்.

 

 

 

நன்றி. வணக்கம். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

applause.gifapplaus.gif?w=425&h=284

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான ஒரு உரை மல்லை!

 

ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் நிகழ்த்தும் உரையை நிகழ்த்திருக்கின்றது!

 

இதை விடவும், யாழ் களத்தின் தேவையையும், பெருமையையும், தமிழரின் தாகத்தையும், தேவையையும் எவராலும் தொட்டுச் சென்றிருக்க முடியும் என நாம் நம்பவில்லை!

 

'கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று எனது தாயார் எனக்கு அடிக்கடி கூறுவார்! உங்கள் உரையில் அதன் சாரத்தைக் காண்கிறேன்!

 

வாழ்க, யாழ்களம்!  விளங்குக, தமிழ் ஈழம்!

 

Whistleblower1.png

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை ஒரு முல்லை. அந்த முல்லையில் இருந்து புறப்பட்ட தமிழ் மணம், தரணியெங்கும் பரவி மணக்கிறது. ''பழம் நீ அப்பா'' என்று முருகனைப் பார்த்துப் பாடிய ஒளவையார் இன்று இருந்திருந்தால் ''தமிழ்மணம் நீ அப்பா'' என்று மல்லையைப் பார்த்துப் பாடியிருப்பார். யாழ்களத்திலிருந்து எழுத்தால் ஒளியேற்றி யாழைப் பிரகாசிக்கவைக்கும் கள உறவுகளில் ஒருவரான மல்லையூரான், இன்று தனது பேச்சால், யாழில் இனிய ஒலியெழுப்பி உலகையே உவகையில் ஆழ்த்தியுள்ளார்!. இதில் ஐயம் ஏதும் இருந்தால்! இத்திரியின் 146வது பின்னூட்டத்தைப் பார்க்கவும்!!. இத்தகய திறனும் சிறப்பும் கொண்ட ஒருவரை இனம்கண்டு மேடைக்கு அழைத்து, சிட்னியின் அகோர வெயிலிலும் எங்களைக் குளிர்வித்த கோமகனுக்கு தனியாக ஒரு வாழ்த்து!. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

------

ஆங்கிலத்தில் "ஒரேஇறக்கைக் குருவிகள் ஒன்றாகக் கூடும்" என்பார்கள். நமது வாழ்வு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு, நமது சொந்தத் தாய்வீட்டில் நாம் அகதிகளாக்கப்பட்டபோது மாற்றாந்தாய் நம்மை ஆதரித்து நமக்கு மறுவாழ்வு தந்திருக்கிறாள். நாம் பாதுகாப்பும் வாழ்வும் தேடி புலம் பெயர்ந்த பட்சிகள். வந்த இடத்தில் நமது இறகுகள் ஒரேமாதிரியாக இருக்கக்கண்டு  ஒன்றாகிருக்கிறோம்.  நாம் ஏழைகள் அல்ல, எளியதுகள் அல்ல. இயலாதவர்கள் அல்ல. ஆனல் வருடத்தில் ஒருதடவை பொங்கள் பிறந்திருக்கும், புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரின் வீட்டில் பால் பொங்கியிருக்காது. பல பெருநாட்கள் கடந்து போயிருக்கும். நமது வீடுகளில் பூசை நடந்திருக்காது. ஆனால் யாழின் உறவுகளான நாம்மட்டும் இந்த விசேடங்கள்  எதையும் அனுபவிக்க தவறுவதில்லை.  நமது மனங்களை குறைகள் நிறைப்பதில்லை. நமக்கு நமது நாட்டில் எமது பண்பாடு மூலம் கிடைக்க வேண்டியவை எல்லாமே யாழில் கிடைத்துவிடுகிறது. புலம் பெயர் நாடுகளில் நமக்கு நாம் படிக்கும் பள்ளியாக, நாம் தொழும் கோவிலாக, கண்டு களிக்கும் கலை மண்டபமாக, போய் மகிழும் களியாட்டுவிழாக் கூடமாக இருந்து வருகிறது யாழ். ஒரே இறக்கை கொண்ட பறவைகளாகிய நாம்  இந்த அரியயாழ் என்ற ஏரியை சுற்றி சூழ்ந்திருந்து  நமது விம்பங்களை அதில் கண்டு நம்மை நாம் ஒரே இனமாக அடைடையாளம் கண்டு குதுகலம் அடைகிறோம் இன்று.

-------

 

Whistle3.jpeg

அருமையான சிறப்புரையை நிகழ்த்திய.. மல்லையூரானுக்கு நன்றி.hands-clapping-applause-smiley-emoticon.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான்  மிகவும் அருமையான உரை.  நல்ல  செய்திகளை நயமுடன்  சொல்லியுள்ளீர்கள், பாராட்ட வார்த்தை தேடினால் வார்த்தை வலுவிழந்து தவிக்கிறது . வாழ்த்துக்கள் மல்லையூரான்...! பிடியுங்கள் பொன்னாடையை ...! :D :D

 

இதை இவன் முடிப்பான் என்று தெரிந்து அதை அவனிடம் விடவேண்டும் , என்பதற்கிணங்க சரியான ஆளைத்தான்  சிறப்புரையாற்ற அழைத்திள்ளீர்கள் கோமகன்...! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.