Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரும் உலகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்!

புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன்.

யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது.  சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும்,  எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக்கை உள்ளது.

சரி. எப்படியான விடயங்களை எழுதலாம்?

ஒருவர் தான் பிறந்த இடம், வளர்ந்த இடம், வசித்த இடங்கள், பயணித்த இடங்கள் பற்றிய தகவல்கள், அங்கு நடைபெற்ற சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். கூடுதலானவரை தாயகத்தில் உள்ள இடங்களாக இருந்தால் அவை பற்றிய தகவல்கள் பலருக்குப் பிரயோசனமாக இருக்கும். யாழ் களத்தில் பலர் தம்மையும் தமது தாயகப் பின்னணி, தற்போதைய இருப்பிடம் பற்றி வெளிக்காட்ட விரும்புவதில்லை என்று தெரியும். அப்படி வெளிக்காட்ட விருப்பமில்லாதவர்கள் தமக்கு நன்கு தெரிந்த இடங்களையும்,  அவை பற்றிய தகவல்களையும் தம்மை வெளிக்காட்டாது பகிர்ந்துகொள்ளமுடியும் என்று நினைக்கின்றேன். இதன் மூலம் அதே இடங்களுடன் பரிச்சயமானவர்கள் தெரியாத மேலதிக அனுபவங்களை பகிர்ந்துகொண்டால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம்.

வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து சொந்தமாக எழுதவேண்டும் என்பதுதான் ஒரேயொரு வேண்டுகோள்!

ஆரம்பிப்போமா?

  • Replies 103
  • Views 23.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி!

எங்கள் தலைமுறை, நீண்ட காலங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்த போதிலும், அது இன்னும் 'புலன்' பெயர்ந்து போகவில்லை!

மண்ணோடும், அதன் மணத்தோடும் இன்னும் தனது உறவுகளை, ஏதோ ஒரு விதத்தில் தொடர்புகளைப் பேணியே வருகின்றது!

அந்தத் தொடர்பை, நீடித்துக்கொள்வதில் 'யாழின்' பங்கு மிகவும் முக்கியமானது!

ஆனால், இளைய தலைமுறை, தன்னை வெகு விரைவாகத் தாயகத்தில் இருந்து துண்டித்துக்கொள்ளவே முனைப்புக் காட்டுகின்றது! இது மிகவும் கவலையைத் தரும் விடயம்!

குறிப்பாகச் சுபேஸ், ஜீவா, அஞ்சரன், ரதி, கவிதை, கிருபன், யாயினி  போன்றவர்களின் ஆக்கங்கள் மிகவும் அருகிச் செல்கின்றதை, அவதானிக்கக் கூடியதாக உள்ளது! 

நிழலி, நுணா, யாழ் வாலி, தப்பிலி போன்றவர்களையும் இளையவர்களுடன் சேர்க்கலாம் என எண்ணுகின்றேன்!

யாழில் நடைபெறும் சில கருத்தாடல்களை, இவர்கள் தங்களை நோக்கிய கல்லெறிதலாகப் பார்க்கின்றார்களோ தெரியாது! அப்படியாயின் அது தவறு என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்! 

தன்னையே ஆழ முனைந்த ஒரு இனத்தின் போராட்டம், ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டது என்பதே உண்மையாகும்! இதில் எமக்குள் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம்! கட்டாயம் இருக்க வேண்டும்!

அதிலிருந்து, நாம் மீண்டு வரும் வழி வகைகளை ஆராய வேண்டுமேயன்றி, மேலும் மேலும் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்திச் செல்வது, எமது இனத்தின் தற்கொலைக்கே நிகரானது!

இனியொரு விதி செய்வோம் ! யாழிலாவது, ஒன்றாக இணைந்திருப்போம்!

எனது மண்ணைப்பற்றி நான் அறிந்திருக்காத பல விடயங்களை நான் 'யாழ்' மூலம் அறிந்திருக்கின்றேன்!

நல்ல முயற்சி. எனக்கு எழுத தெரியாது என்பதால் வாசகியாக இத்திரியில் இணைந்திருக்கிறேன். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய்

கரணவாய் என்பது யாழ் வடமராட்சிப் பகுதியில் உள்ள ஒரு பெரிய கிராமம். இது கரணவாய் தெற்கு, வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு என்று பல பிரிவுகளாக உள்ளது. தெற்கு எல்லையாக உப்புவெளியும், கப்பூதூக் கிராமமும், கிழக்கே கரவெட்டியும், மேற்கே வல்லை வெளி, இமையாணன், உடுப்பிட்டி போன்ற பகுதிகளும், வடக்கே கொற்றாவத்தை, பொலிகண்டி போன்ற இடங்களும் உள்ளன. தெற்கே போகும் வீதி வல்லை வெளியில் இருந்து துன்னாலை நோக்கிப் போகின்றது. இந்த வீதியில்தான் பிரபல்யமான சுருட்டு தயாரிக்கும் மண்டான் என்ற இடமும், உப்பங்களியும் உள்ளன. ஊருக்குக் குறுக்காகச் செல்லும் யாழ் பருத்தித்துறை வீதி (750 பஸ் இலக்கம்) தெற்கு, மத்தி பகுதிகளைப் பிரிக்கின்றது. இந்த வீதியில் உள்ள குஞ்சர்கடை எனும் சந்தியில் இருந்து இரு கிளைவீதிகள் தெற்காக கல்லுவம் நோக்கியும், வடக்காக உடுப்பிட்டி-வதிரி வீதியை நோக்கியும் பிரிகின்றன.

கரணவாய் என்ற பெயர் வர என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. முன்னர் இங்கு வசித்த சைவக் குருமார் பரம்பரை கணக்குப் பார்ப்பவர்கள் என்றும் அதனால் அவர்கள் கர்ண பரம்பரையினர் என்று அழைக்கப்பட்டதால் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு கர்ணவாய் என்று பெயரிட்டனர் என்றும் இதுவே பின்னர் கரணவாய் என்று மாறியது என கதைகள் உள்ளன. அத்தோடு பெயரை மேலும் சிறப்பாக்க கருணையம்பதி என்றும் அழைப்பார்கள்.

தோட்டங்களும், பனங்கூடல்களும், வயல்களும் அதிகமுள்ள கிராமம். இங்கு வாழும் மக்களும் அதிகம் விவசாயிகளாக உள்ளார்கள். அத்தோடு ஏறக்குறைய எல்லோருமே சைவர்களாகக்த்தான் இருக்கின்றனர். எனக்குத் தெரிந்து ஒரு தேவாலாயம் கூட கரணவாயில் இல்லை. வாழ்பவர்கள் சைவர்களாக இருப்பதால் பல சைவக் கோயில்கள் நிறைந்துள்ள இடம். பிள்ளையார், அம்மன், வைரவர், காளி, நாகதம்பிரான் போன்ற பல தெய்வங்களுக்குத் தனிக் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிள்ளையார் கோவில்கள் திருவிழாக்களுக்கு மிகவும் பிரசித்திபெற்றவை.

திருவிழாக்கள் சில குடும்பத்தாரினது என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் யாழ்ப்பாண சமூகத்திற்குரிய இறுக்கமான சாதிக்கட்டமைப்புக்கள் நிலவுகின்ற ஊராக இருப்பதால் அவை சாதியடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருந்தன. திருவிழாக் காலங்களில் ஏட்டிக்குப் போட்டியாக நாதஸ்வர, மேளக் கச்சேரிகளும், சின்ன மேளக் கூட்டுக்களும், பாட்டுக் கச்சேரிகளும் இரவிரவாக நடக்கும். நான் சிறுவனாக இருந்தபோது கோவில் திருவிழாக்களுக்குப் போய்வந்த நினைவுகள் உள்ளன. எப்போதும் கிழக்கு வீதியில் சனக்கூட்டம் அதிகமாக இருப்பதால், சிறுவர்களாகிய நாங்கள் தேர்முட்டியில் அல்லது தீர்த்தக் கேணியில் நின்று விளையாடுவோம். பூசைமுடியும்போது மடப்பள்ளியில் பஞ்சாமிர்தத்தை அடிபட்டு வாங்கி நக்குவதும், இருட்டிய பின்னர் ஆளரவம் குறைந்த மேற்கு வீதியில் எமது எதிர்க் கோஸ்டிகளுடன் மல்லுக் கட்டி சண்டைபிடிப்பதுதான் தொழில்.

தொண்டமனாறு செல்வச்சந்நிதி, வல்லிபுரக் கோயில் திருவிழாக் காலங்களில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி அளிப்பதற்காக தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்து சக்கரைத் தண்ணியும், மோரும் வழங்குவது பெரிய இளைஞர்களின் திருப்பணி. அந்த வயது வரமுதலே ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டதால் அடியார்களுக்குத் திருப்பணி செய்யும் பாக்கியம் கிட்டவில்லை.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முதலில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் கிருபன்.உங்களின் இந்த முயற்சியை மனப்பூர்வமாக ஆதரிக்கின்றேன்.
 
அடுத்தது துளசி அவர்கட்கு!
 
உங்களுக்கு எழுதத்தெரியாது? 
 
ஆனால் பிழைகள் குறைகள் கண்டு பிடித்து நாட்கணக்கில் இருந்து எழுதுவதற்குமட்டும் வார்த்தைகளாய் வந்து குவியும்!!!!!
  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய் எனக்கு மிகவும் பரிச்சயமான ஊர். எனது சிறிய தாயார் உட்பட இன்னும் சிலர் அங்கு வாழ்க்கைப் பட்டிருந்தனர். பொயிலைத் தோட்டங்கள் நிறைந்திருக்கும் அழகிய இடம் .

  • கருத்துக்கள உறவுகள்

'புறாப் பொறுக்கி'யும் 'குஞ்சர் கடையும்'  எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்ட இடங்கள்! 

ஏன், எதுக்கு எண்டெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! :D

அடுத்தது துளசி அவர்கட்கு!
 
உங்களுக்கு எழுதத்தெரியாது? 
 
ஆனால் பிழைகள் குறைகள் கண்டு பிடித்து நாட்கணக்கில் இருந்து எழுதுவதற்குமட்டும் வார்த்தைகளாய் வந்து குவியும்!!!!!

கருத்து எழுத தெரியும். மற்றவர்கள் ரசிக்கும்படி ஆக்கம் எழுத தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய் எனக்கு மிகவும் பரிச்சயமான ஊர். எனது சிறிய தாயார் உட்பட இன்னும் சிலர் அங்கு வாழ்க்கைப் பட்டிருந்தனர். பொயிலைத் தோட்டங்கள் நிறைந்திருக்கும் அழகிய இடம் .

பரிச்சயமான இடம்தானே. நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'புறாப் பொறுக்கி'யும் 'குஞ்சர் கடையும்'  எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்ட இடங்கள்! 

ஏன், எதுக்கு எண்டெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! :D

:lol:

புறாப்பொறுக்கி வல்லைவெளியைத் தாண்டி வரும்போது முதலாவதாகக் குடிசனம் இருக்கும் பகுதி. இது இமையாணன் பகுதிக்குள் வரும். அருகில் துவாளி அம்மன் கோயில் இருக்கின்றது.

சில இடங்களினதும், தோட்டங்களினதும் பெயர்கள் மிகவும் வேடிக்கையானவை. ஏன் அப்படிப் பெயர் வந்தது என்று தெரியாது!

குஞ்சர்கடைக்குக் காரணம் மிகவும் எளிது. அங்கு குஞ்சர் என்பவர் சந்தியில் இருந்த ஆலமரத்தின் அருகில் ஒரு கடை போட்டிருந்தார். அவ்வளவுதான். இப்போது அங்கு ஆலமரம் இல்லை. வீதியை அகலப்படுத்துவதற்காகத் தறித்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

'புறாப் பொறுக்கி'யும் 'குஞ்சர் கடையும்'  எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்ட இடங்கள்! 

ஏன், எதுக்கு எண்டெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! :D

ஏன் எதுக்கு எண்டதை நீங்கள் சொல்லாட்டி என்ன ? எங்களுக்குத் தெரிஞ்ச கதைதானே. :lol:

அருமையான திரி... கள உறவுகளே உங்கள் ஊர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள். நானும் சுண்டிக்குளி பற்றி எழுதுகின்றேன் (சரி சரி கட்டாயம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பற்றியும் கொஞ்சம் சொல்கின்றேன் :) )

நீங்கள் சுண்டிக்குளியா? :rolleyes::) குளத்தடி பிள்ளையார் கோவில், பொஸ்கோ பாடசாலை போன்றவற்றுக்கு அருகிலா? :rolleyes: அல்லது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பக்கமா? :rolleyes: சுண்டிக்குளி பற்றி எழுதுங்கள். வாசிக்க ஆவல். :)

Edited by துளசி

நல்ல விடயம் கிருபன் ,

யாழில் பலர் தம்மை இனம் காட்டவிரும்பாதாதாலும் ,பலர் மனம் திறந்து வெளிப்படையாக இருக்கவும் தயங்குவதால் இப்படியான திரிகள் இங்கு குறைவு என நம்புகின்றேன் .

அப்படி சிலர் எழுத முயன்றாலும் படம் போடுகின்றார் பந்தா கட்டுகின்றார் என்று சேறடிக்க தொடங்கிவிடுவார்கள் .

முயற்சிக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கே கரவெட்டியும்

கரவெட்டியும் எனது ஊரைப்போல் மிகவும் பரீட்சயமான ஊர். தந்தையாரின் ஊர் என்பது ஒரு காரணம். பாடசாலை விடுமுறைக்கு உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதுண்டு. கோழிப் புக்கை அவர்களின் பிரத்தியேகமான ஒரு உணவு. சாப்பிட்டால் மண்டை வேர்க்கும். :D  உறைப்பு சொல்லி வேலை இல்லை.காலையில் பெண்கள் தண்ணீர் சேகரிக்க செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.தலையில் ஒரு குடமும் இடுப்பின் இரு பக்கமும் ஒவ்வொரு குடமுமாக தண்ணீருடன் நடக்கும் நடையை ஒரு ஜிம்னாஸ்ரிக் பயிற்சியாகவே பார்க்கிறேன். :)
 
முதலில் கரவெட்டிக்கு சென்று ஒழுங்கைகளூக்குள் மாறுப்பட்டு சென்றது மறக்க முடியாது.(இப்பவும் தான்) எல்லா ஒழுங்கைகளும் ஒரே மாதிரி தான் தென்படும். :D  இந்தியன் ஆமி இந்த ஒழுங்கைகளுக்குள் தடக்குப்பட்டது நல்ல ஞாபகம். :D
 
பஸ்ஸுக்கு நிற்க்கும் போது பஸ்நிலையத்தில் கரியால் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் முதல் வசனங்கள் வரை வாழ் நாளில் மறக்க முடியாதவை. :)  படிக்கும் காலத்தில் கம்பராமாயணம் ஞாபகம் இருக்கோ இல்லையோ சுவரில் யாரோ கிறுக்கிய வரிகள் ஞாபகம் இருக்கும். :) பாடசாலையில் இவற்றை நண்பர்களிடம் சொல்லி சிரித்த நாட்கள் என்றுமே மறக்க முடியாதவை.
 
கிருபன் இத்திரியை திறந்தமைக்கு நன்றிகள். பல ஊர்கள் பற்றி அறிய ஆவல்.

Edited by nunavilan

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்!

புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன்.

யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது.  சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும்,  எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக்கை உள்ளது.

சரி. எப்படியான விடயங்களை எழுதலாம்?

ஒருவர் தான் பிறந்த இடம், வளர்ந்த இடம், வசித்த இடங்கள், பயணித்த இடங்கள் பற்றிய தகவல்கள், அங்கு நடைபெற்ற சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். கூடுதலானவரை தாயகத்தில் உள்ள இடங்களாக இருந்தால் அவை பற்றிய தகவல்கள் பலருக்குப் பிரயோசனமாக இருக்கும். யாழ் களத்தில் பலர் தம்மையும் தமது தாயகப் பின்னணி, தற்போதைய இருப்பிடம் பற்றி வெளிக்காட்ட விரும்புவதில்லை என்று தெரியும். அப்படி வெளிக்காட்ட விருப்பமில்லாதவர்கள் தமக்கு நன்கு தெரிந்த இடங்களையும்,  அவை பற்றிய தகவல்களையும் தம்மை வெளிக்காட்டாது பகிர்ந்துகொள்ளமுடியும் என்று நினைக்கின்றேன். இதன் மூலம் அதே இடங்களுடன் பரிச்சயமானவர்கள் தெரியாத மேலதிக அனுபவங்களை பகிர்ந்துகொண்டால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம்.

வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து சொந்தமாக எழுதவேண்டும் என்பதுதான் ஒரேயொரு வேண்டுகோள்!

ஆரம்பிப்போமா?

நீண்ட காலத்துக்குப் பின்னர் ஓர் ஆக்கபூர்வமான விடயம் கிருபன்ஜி யினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . எனது நண்பன் புங்கையூரன் எழுதிய கருத்தே எனது சுருக்கமான கருத்தாகும் . இந்தக் கருத்துக்களத்திலே பல திறமையான சுய ஆக்கங்களை தரக்கூடிய இளைய தலைமுறைகள் உண்டு . ஆனால் அவர்கள் காயடிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்ற வலியான உண்மையையும் நாங்கள் ஒத்துகொள்ளதான் வேண்டும் . இதை சொல்ல எனக்குத் தகுதி இருக்கா என்ற கேள்வியும் இதில் எழலாம் . புதிதாக எழுதுகின்ற அனைத்துக் கள உறவினது ஆகத்திலும் தவறாது கோமகனது கருத்தும்  ஊக்கமும் இருப்பதால்தான் எனது சொந்தக் கருத்தையும் சேர்த்து எழுதுகின்றேன் . நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும் இனி நடக்கப்போவது நல்லவையாகவே இருக்கவேண்டும் .

நான் பிறந்து தவண்டு செம்பாட்டு மண் குளித்த இடம் கோப்பாய் . பல கல்விமான்களையும் பல விவசாயிகளையும் உள்ளடக்கிய வளங்கொளிக்கும் கிராமம் . இதன் எல்லைகளாக வடக்கே இருபாலையும் , கிழக்கே கைதடியும் , மேற்கே உரும்பிராயும் , தெற்கே நீர்வேலியையும் உள்ளடிக்கியது . நல்லூர் இராசதானியின் இறுதி மன்னனான சங்கிலியின் அரண்மனை எனது கிராமத்தில் உண்டு . எனது ஊரின் ஊடாக செல்லும் பருத்தித்துறை வீதியின் சிறப்பு என்னவென்றால் , வலது பக்கம் நரை மண்ணையும் (களி மண் ) இடது புறம் செம்பாட்டு மண்ணையும் சரி சமனாக பிரித்து செல்கின்றது . கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியும் , நாவலர் பாடசாலையும் , சரவண பவானந்தா பாடசாலையும் பல கல்விமான்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது . கோப்பாய் கோமகன் கு வன்னிய சிங்கமும் ,சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளை ஐயா ,சபாபதி நாவலர் , பஞ்சாட்சர சர்மா ,  கோப்பாய் எஸ் சிவம் , அருளம்பலம் போன்ற பிரபலங்கள் பிறந்ததும் கோப்பாயில் தான் . எனது வீட்டிற்குப் பின்னால் கோப்பாய் வெளி தொடங்கி கைதடி உப்பங்கழி வரை செல்கின்றது . இந்த கோப்பாய் வெளி முன்பு பயிர் செய்கின்ற நிலமாக இருந்து ,இப்பொழுது வெறும் சம்பு புல்லு தரவையாகதான் இருக்கின்றது. கோடைகாலத்தில் கைதடி உப்பங்கழி வற்றி உப்பு படர்ந்திருக்கும் . நாங்கள் இயற்கை உப்பு எடுக்க போனது இப்பொழுதும் நினைவில் உள்ளது . மழை காலத்தில் எங்கள் நீச்சல் குளம் கைதடி பாலத்தடிதான் .  எனது வீட்டிற்க்குப் பின்னால் ஒரு பெரிய தாமரை குளம் உண்டு . மழைகாலங்களில் குளம் வலசை போகும் பறவைகளால் நிரம்பியிருக்கும் . நாங்கள் மீன் பிடிப்பதும் இந்தக் குளத்தில் தான் . வேறு ஏதாவது நினைவில் வந்தால் எழுதுகின்றேன் .கிருபன்ஜி க்கு மீண்டும் பாராட்டுக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நான் தற்போது வசிக்கும் ஊாின் படம் அதன் வரலாறு போன்றவற்றை சேகரித்து விரைவில் ஒரு தொகுதியாக இணைக்கின்றேன்

நான் பிறந்து தவண்டு செம்பாட்டு மண் குளித்த இடம் கோப்பாய் . பல கல்விமான்களையும் பல விவசாயிகளையும் உள்ளடக்கிய வளங்கொளிக்கும் கிராமம் . இதன் எல்லைகளாக வடக்கே இருபாலையும் , கிழக்கே கைதடியும் , மேற்கே உரும்பிராயும் , தெற்கே நீர்வேலியையும் உள்ளடிக்கியது .

இது தவறான தகவல். கோப்பாயின் வடக்கில் தான் நீர்வேலி உள்ளது. :rolleyes: இருபாலை தெற்காக இருக்கலாம். தெரியவில்லை. :unsure:

கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லமும் உள்ளது. (இராசவீதியில் அமைந்துள்ளது. இப்பொழுது உள்ளதா அல்லது அண்மைக்காலத்தில் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டவற்றில் இதுவும் அழிக்கப்பட்டு விட்டதா தெரியவில்லை)

கிருஷ்ணர் கோவில் உள்ளது. வேறு கோவில்களும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

neervely++location.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கு கரவெட்டி அதிகம் பரிச்சயமாக இருப்பது புதிய தகவல்! வடமராட்சிப் பகுதி யாழின் பிறபகுதிகளில் இருந்து நீரேரி, உப்புகடல் போன்றவற்றால் பிரிக்கப்பட்டிருப்பதால் பிற ஊர்களைச் சேர்ந்தவர்கள் அலுவல்கள் இல்லாமல் வருவதில்லை.

கரவெட்டி அருகாமையில் இருந்தும் அதிகம் எனக்கு பரிச்சயமற்ற ஊர். பிரதான வீதிகளைத் தாண்டி ஒழுங்கைகளால் அதிகம் கரவெட்டியினூடு பயணிக்கவில்லை. ஆனாலும் சம்பந்தர் கடையடிப் பகுதியில் வசித்த நண்பர்களை சந்திக்க சில தடவை போயிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கிருபன்  திரிக்கும் நேரத்திற்கும்...........

எனது ஊரைப்பற்றி  எழுதணும் என்று ஆசை

அதற்கு வழி அமைத்ததற்கு  நன்றிகள்...........

மீண்டும் வருவேன்....

இது தவறான தகவல். கோப்பாயின் வடக்கில் தான் நீர்வேலி உள்ளது. :rolleyes: இருபாலை தெற்காக இருக்கலாம். தெரியவில்லை. :unsure:

கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லமும் உள்ளது. (இராசவீதியில் அமைந்துள்ளது. இப்பொழுது உள்ளதா அல்லது அண்மைக்காலத்தில் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டவற்றில் இதுவும் அழிக்கப்பட்டு விட்டதா தெரியவில்லை)

கிருஷ்ணர் கோவில் உள்ளது. வேறு கோவில்களும் இருக்கலாம்.

இது நான் வேலையாலை வந்து வேலை களைப்போடைகிருபனின்ரை ஆக்கத்தை ஊக்கப்டுத்த வேணும் எண்டதுக்காக  எழுதினது . என்னட்டை திசையறி கருவி இல்லை . கோப்பாய் சந்தியிலை நிண்டு கொண்டு  திசையளை சொன்னன்.  யாழ்ப்பாண பக்கம் போனால் அடுத்தது இருபாலை . கீழை கோப்பாய் தாண்டினால் பருத்தித்துறை பக்கம் அடுத்தது நீர்வேலி . இங்காலை கோப்பாய் சந்தியிலை இடக்கை பக்கம் திரும்ப  கைதடி . வலக்கை பக்கம் திரும்பினால் இராசபாதையை கடந்து உரும்பிராய்க்கு வரலாம் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி  கிருபன்  திரிக்கும் நேரத்திற்கும்...........

எனது ஊரைப்பற்றி  எழுதணும் என்று ஆசை

அதற்கு வழி அமைத்ததற்கு  நன்றிகள்...........

மீண்டும் வருவேன்....

வேண்டாம் விசுகர் வேண்டாம்   :(  :( .......கருவில் இருக்கும் சிசுவிற்கும் புங்கையூர் வரலாறு தெரியும். :lol:  :D  :)

images.jpeg

இது நான் வேலையாலை வந்து வேலை களைப்போடைகிருபனின்ரை ஆக்கத்தை ஊக்கப்டுத்த வேணும் எண்டதுக்காக  எழுதினது . என்னட்டை திசையறி கருவி இல்லை . கோப்பாய் சந்தியிலை நிண்டு கொண்டு  திசையளை சொன்னன்.  யாழ்ப்பாண பக்கம் போனால் அடுத்தது இருபாலை . கீழை கோப்பாய் தாண்டினால் பருத்தித்துறை பக்கம் அடுத்தது நீர்வேலி . இங்காலை கோப்பாய் சந்தியிலை இடக்கை பக்கம் திரும்ப  கைதடி . வலக்கை பக்கம் திரும்பினால் இராசபாதையை கடந்து உரும்பிராய்க்கு வரலாம் .

திசையறி கருவி இல்லை என்றால், கோப்பாயிலிருந்து யாழ்ப்பாண நகர பக்கம் போனால் அது தெற்கு. :) இப்ப திசையை சரிபாருங்கள். :)

நுணா அண்ணா இணைத்த படத்திலும் பார்க்கலாம். கோப்பாய்க்கு வடக்கு பக்கம் நீர்வேலி உள்ளது. :rolleyes: இருபாலை பற்றி அதில் இல்லை. இருபாலை கோப்பாய்க்கு தெற்கு பக்கமாக இருக்கலாம்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சுண்டிக்குளியா? :rolleyes::) குளத்தடி பிள்ளையார் கோவில், பொஸ்கோ பாடசாலை போன்றவற்றுக்கு அருகிலா? :rolleyes: அல்லது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பக்கமா? :rolleyes: சுண்டிக்குளி பற்றி எழுதுங்கள். வாசிக்க ஆவல். :)

துளசி, நீங்க சொல்லுற குளத்தடிப் பிள்ளையார் கோவில் குளத்தில வளரிற நுளம்புகளின் 'சங்கீதம்' கொஞ்சம் வித்தியாசமான இனிமை கலந்து இருக்கும்! :D

றக்கா ரோட்டுக்கும், நாவலர் வீதிக்கும் இடையால தொடுத்து ஒரு றோட்டுப் போகும்! பேர் என்னவோ 'அரசடி வீதியோ' என்னவோ!

நல்ல 'குளுமையான' வீதி! :D

இதுக்குள்ள தானா சீனா வந்து கருத்து வைச்சால், அதுக்கு நான் பொறுப்பில்லை! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.