Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் - தாயார்- வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:-

ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர். 

நேற்றைய தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close  பகுதிக்கு சென்ற பொலிசாரே இந்த சடலங்களை மீட்டுள்ளனர். 

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையினால் சம்பவித்ததா? என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த பொலிசார், இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தனர். 

அயலவர்களில் 34 வயதுடைய தஸ்மா என்பவர் கூறுகையில் சக்த்திவேல் வாகீஸ்வரன் மற்றும் ஜெயவானி வாகிஸ்வரன் ஆகிய இளம் தம்பதியினர் தனது அயல்வீட்டில் வசித்து வந்ததாக தெரிவித்தார். அடிக்கடி அவர்களை பார்க்க முடிவதில்லை. ஆனால் ஒருவர் மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் சத்தம் போட்டு வாதிட்டு சண்டை பிடிப்பது கேட்பதாகவும் பின்னர் அமைதியாகி விடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Scene: police were called to the house at around 5.20pm on Thursday

18 வருடங்களாக அந்தப் பகுதியில் வசிக்கும் லெஸ்லி கொற் கூறுகையில் கடந்த 1 வருடமாக இந்த மாடிவீட்டு தொடரில் இலங்கை வம்சாவழி என நம்பப்படும் இந்தக் குடும்பம் வசித்து வந்ததாக தெரிவித்தார்.

இந்த மரணங்கள் குறித்த விசாரணையை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் மேற்கொள்கின்றனர். 

For confidential support about issues involving suicide call the Samaritans in the UK on 08457 90 90 90.

Evening standard - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101544/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இன்று செய்தியில் யார் என்று தகவல்களைக் கூறாமல் சொல்லும்போதே தமிழர்களாக இருக்கலாம் என்று ஏனோ நினைத்தேன். பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்யும் அளவிற்கு நடந்துகொள்கின்றார்களே (முன்னரும் ஒரு தமிழ்ப்பெண் இப்படிச் செய்திருந்தார்).

  • கருத்துக்கள உறவுகள்

இன்று செய்தியில் யார் என்று தகவல்களைக் கூறாமல் சொல்லும்போதே தமிழர்களாக இருக்கலாம் என்று ஏனோ நினைத்தேன். பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்யும் அளவிற்கு நடந்துகொள்கின்றார்களே (முன்னரும் ஒரு தமிழ்ப்பெண் இப்படிச் செய்திருந்தார்).

நல்ல வடிவாய்ப் பாத்தீங்கள் எண்டால், உள்ளுக்கு ஒண்டும் தலை போகிற பிரச்சனையாய் இருக்காது!

 

கலியாணம் கட்ட முந்தித் தண்ணி, கிண்ணி, சிகரட் ஒண்டும் பாவிக்காத மனுசன் எண்டு 'புறோக்கர்' மார் புழுகித் தள்ளியிருப்பினம்!

 

அல்லது 'எஞ்சினியர்' அல்லது 'டாக்குத்தர்' எண்ட லைனிலை கதை விட்டிருப்பினம்!

 

இஞ்சை வந்து பாத்தாக் கொஞ்சம் 'வித்தியாசமா' இருந்திருக்கும்!

 

பிறகென்ன, நான் 'ஏமாத்துப்பட்டுப் போனன்' எண்டு ஊரில இருக்கிற அப்பா, அம்மாவுக்குச் சொல்ல, அவை அதை மாமா, மாமிக்குச் சொல்லக், குடும்பக்கவுரவங்கள், இவை இரண்டு பேரிலையும் தான் இருக்கிற மாதிரி, தேவையில்லாத சண்டைகள்......!

 

இறுதியில், கவுரவம் மட்டும் வெல்லும்! குடும்பம் குலையிறது தான் முடிவாக இருக்கும்! :o

 

மற்றும் படி, வேற பிரச்சனைகள் நம்மட சனத்துக்குள்ள வாறது குறைவு! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவத்தின் பின்னணியில்..postnatal depression இருந்ததாகச் சொல்லப்படுகிறது. விசாரணை மற்றும் பிரதே பரிசோதனைகளின் பின் தான் உண்மை வெளிக்கும்.

 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கொடூர செயல் .................இதை செய்தவன் தண்டிக்கபடனும் ...............தமிழனாய் இருந்தால்  பின் துவாரத்திற்குள் வெடிவைக்கனும்..........................
:blink:
 
 
 
 
 
இவர்களது ஆன்மா இறைவனில் நித்தியா இளைப்பாற்றி அடைய பிரார்த்திக்கிறேன் 
  • கருத்துக்கள உறவுகள்
Woman and two young boys found dead in Brent.

http://www.bbc.co.uk/news/uk-england-london-25686711

கவலை தரும் செய்தி.

 

என்ன நடந்தது என தெரிய வந்தால் இங்கு எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சி செய்தி

வேலையால் திரும்பிய கணவன் கண்ட கோர காட்சி

http://www.dailymail.co.uk/news/article-2537211/BREAKING-NEWS-Woman-dead-two-children-suspected-murder-suicide.html

Edited by Ahasthiyan

புலத்து வாழக்கை அழுத்தங்களின் மத்தியி தான் அநேகருக்கு ஊதுகிறது.

 

பிரசவத்துக்கு முன்னரும் பின்னருமான மனவுளைச்சலை இந்த புலத்து வாழ்கை எம்மவருக்கு பெர்ருத்தர்வதில்லை.

 

ஊரோடும் உறவோடும் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:-

ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர்.

-----

 

எமது இறப்புகள்... ஊரில் தான் நடந்ததற்கு, போர் என்ற நியாயம்.. கற்பிக்க முடியும்.

ஆனால்... அந்தக் குழந்தைகள்... என்ன பாவம் செய்தார்கள்?

அவர்களுக்கு... இந்த உலகில் வாழ வழி மறித்த, கயவர் கூட்டம்.... கூண்டோடு அழிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

article-2537211-1A8E2F7B00000578-230_634

 

article-2537211-1A8E2F8A00000578-315_634

 

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....!

 

செய்தி மூலம்!

http://www.dailymail.co.uk/news/article-2537211/BREAKING-NEWS-Woman-dead-two-children-suspected-murder-suicide.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... கடவுளே....
அழகிய, பிஞ்சு முகங்கள்.
ஏன் இவர்கள், இந்தக் குடும்பத்தில் உதித்தார்களோ...

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதே இல்லை,சில பெண்களை புரிந்துகொள்ள முடிவதேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கொடூரமான  செயல்

பயங்கரமான அதிர்ச்சி  தரும்  செய்தி......

 

ஆத்ம சாந்திக்கு வேண்டுகின்றேன்

 

செய்தியின் உண்மை அறியாமல்

எமது கருத்துக்களை

எவர் சார்ந்தும் கற்பனைப்படுத்துவது

இந்த கொடூர செயலுக்கு ஒப்பானது........

அமைதி காப்போம்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

இலண்டன் கென்ரன் பகுதியில் இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
 

Kenton.jpg

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த ஜெயவாணி வாகீஸ்வரன் (வயது 33) என்ற இளம் பெண்ணே இவ்வாறு தனது குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

அனோபன் என்றழைக்கப்படும் இவரது மூத்த புதல்வனுக்கு ஐந்து வயது என்றும், நதீபன் என்றழைக்கப்படும் இவரது இரண்டாவது புதல்வன் எட்டு மாதமுடைய கைக்குழந்தை என்றும் தெரிய வருகின்றது.

Kenton1.jpg

கடந்த 09.01.2014 வியாழக்கிழமை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய இப்பெண்ணின் துணைவரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கணக்காளரான சக்திவேல் வாகீஸ்வரன் (வயது 36) என்ற இளைஞர், தனது வீட்டில் இரண்டு கறுப்புப் பொலித்தீன் பைகளுக்குள் கட்டப்பட்ட நிலையில் தனது பிள்ளைகளின் உடலங்களையும், அருகில் தனது துணைவியின் உடலத்தையும் மீட்டெடுத்துள்ளார்.

இதுபற்றி பிரித்தானிய காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின்படி மன அழுத்தம் காரணமாக இப்பெண் தனது குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் கென்ரன் வூட்கிரேஞ்ச் குளோஸ் எனும் முகவரியில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.sankathi24.com/news/37404/64/2/d,fullart.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவத்தின் பின்னணியில்..postnatal depression இருந்ததாகச் சொல்லப்படுகிறது. விசாரணை மற்றும் பிரதே பரிசோதனைகளின் பின் தான் உண்மை வெளிக்கும்.

 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

postnatal depression இதற்குரிய முறையான வைத்திய வசதி கிடைக்க பெறாமையே இக்கொலைகளுக்கு மூல காரணம் நமது சமூக கட்டைமைப்பு ஒரிரு தப்பாண விடயங்களாக விளங்கிக் கொண்டைமையே இந்த பயங்கரத்திற்க்கு காரணம் ஆம் பயங்கரம் தான் இரண்டாவது கொல்லப்படுதை பார்த்து விட்டு மூத்தது ஓட கையையும் காலையும் கட்டிபோட்டுவிட்டு தலைக்கு பிளாஸ்ரிக் பை மூலம் மூச்சு திணறடிக்கபட்டு மரணம் பின்பு முன்பே வேண்டபட்ட நஞ்சு மூலம் தானும் ஆனாலும் பொலிஸ் பல கோணங்களில் இக்கொலைகளில் தேடுதல் நடத்துகிறது .

 

என்ன மாறி மெயில் அனுப்பப்பட்டதால் நடந்த சண்டையால் இப்பரிதாகரமான முடிவு :( 

  • கருத்துக்கள உறவுகள்

postnatal depression இதற்குரிய முறையான வைத்திய வசதி கிடைக்க பெறாமையே இக்கொலைகளுக்கு மூல காரணம் நமது சமூக கட்டைமைப்பு ஒரிரு தப்பாண விடயங்களாக விளங்கிக் கொண்டைமையே இந்த பயங்கரத்திற்க்கு காரணம் ஆம் பயங்கரம் தான் இரண்டாவது கொல்லப்படுதை பார்த்து விட்டு மூத்தது ஓட கையையும் காலையும் கட்டிபோட்டுவிட்டு தலைக்கு பிளாஸ்ரிக் பை மூலம் மூச்சு திணறடிக்கபட்டு மரணம் பின்பு முன்பே வேண்டபட்ட நஞ்சு மூலம் தானும் ஆனாலும் பொலிஸ் பல கோணங்களில் இக்கொலைகளில் தேடுதல் நடத்துகிறது .

 

என்ன மாறி மெயில் அனுப்பப்பட்டதால் நடந்த சண்டையால் இப்பரிதாகரமான முடிவு :( 

ஐயோ

ஐயோ........... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆள் வளர்ந்தால் மட்டும் போதாது. அறிவும் வளரணும் என்பதை சொல்கிறது இந்தச் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ

ஐயோ........... :(  :(  :(

சிங்கள இன அழிப்பில் தப்பி வந்து இங்கு இப்படி  :(

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதே இல்லை,சில பெண்களை புரிந்துகொள்ள முடிவதேயில்லை.

உண்மைதான் நந்தன் அற்ப காரணங்களுக்கு இப்படியாண பரிதாகரமாண முடிவெடுத்தவர்களை என்ன செய்வது இவர் உபயோகித்த நஞ்சு இலகுவாக கிடைக்க கூடிய ஒன்றாய் உள்ளது அதை கண்டு பிடித்து உபயோகித்தது மற்றொரு கேள்வியாகவுள்ளது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது இந்த மாதியான முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியாது.   

 

இந்த செய்தியை படித்ததில் இருந்து என்னால் தூங்க முடியவில்லை அந்த குழந்தைகள் கண்முன்னே வந்து போகிறார்கள்..  :(

 

 

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக 2வது குழந்தை பிறந்த உடன் கொஞ்சகாலத்திற்கு கடுமையான மன அழுத்தம் தாய்மாருக்கு ஏற்படுமாம்.முதற் குழந்தையைப் பார்க்கவேண்முட் 2 வது குழந்தையை கவனிக்க வேண்டும்.உதவிக்கு யாரும் இல்லை.கணவன் வேலைக்குச் சென்று விட்டால் மனம் விட்டுக்கதைப்பதற்கு யாருமில்லை.அநேகமான குடும்பங்களில் அடிக்கடி தேவையற்ற வாக்குவாதங்கள்.திடிரென்று கோபம் வரும்.ஊரில் என்றால் தாய் அல்லது மாமியார் அல்லது உறவினர்களின் உதவியிருக்கும்.தேவை சரியான கவுன்சிலிங்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரைக்கும் காவல் துறை இதை தீவிர விசாரிக்கணும் சும்மா எல்லா மரணத்தையும் depression இல் சாட்டி விட முடியா

இந்த அக்கா நான் படித்த பாடசாலையில் படித்தவா தைரியமான அக்கா ஏன் இப்படி செய்தா என்றே புரியல, பிள்ளைகள் பாவம்

  • கருத்துக்கள உறவுகள்

 ஆழ்ந்த அனுதாபங்கள்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.