Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'அக்னிப் பரீட்சை' நிகழ்ச்சியில் ராதிகா சிற்சபேசன்!!

Featured Replies

பகுதி (1)

http://www.youtube.com/watch?v=Q86VFK5lR7o

பகுதி (2)

http://www.youtube.com/watch?v=gEZDnBN3br0

பகுதி (3)

http://www.youtube.com/watch?v=zlocoU5JKiI

பகுதி (4)

http://www.youtube.com/watch?v=Zy1IuiQc99E

பகுதி (5)

http://www.youtube.com/watch?v=EXRAYLqosQ8

  • கருத்துக்கள உறவுகள்

இதனை யாழில.. யாரும் இன்னும் பார்க்கல்லையோ...???! இல்ல பார்த்தும்.. தங்களுக்கு வசதியா இல்லை என்று விட்டிட்டினமோ..???! குறிப்பாக.. ராதிகா.. போய் வந்து மாத்திச் சொல்லுவா என்று எதிர்பார்த்த மாற்றுக் கருத்தாளர்களுக்கு பெரிய ஏமாற்றமாய் எல்லோ இது இருக்குது. :icon_idea::)

அதுவும் சனம் சொல்லுதாம்.. "போர்.. காலத்தில.. எந்தப் பக்கம் செல் வரும்.. பொம்பர் வரும் என்றாவது தெரியும்.. இது எப்ப என்ன நடக்கும் என்றே தெரியாமல் கிடக்கு" என்று. நிஜம் அதுதான். இதனை யாழில் இருந்து கொழும்புக்கு நகர்ந்த போதே போர் காலத்தில் தெரிந்து கொண்டு விட்டோம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இணைப்பிற்கு நன்றி சோழியன்....
 
பேட்டி எடுத்த அந்த பத்திரிகையாளருக்கும் நன்றி.
 
ஒற்றுமை அது யாழ்களத்திலும் பரவட்டும்.

தற்போதைய பல யதார்த்தங்களையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இணைப்புக்கு மிக்க நன்றி சோழியன் :)

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சோழியன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
ராதிகாவின் நிதானத்தையும் அரசியல் இராஜதந்திரத்தையும் இந்தப் பேட்டி மூலம் உணர முடியும். மிகவும் புத்திசாலித்தனமான அவரது உரையாடல் அரசியலில் நிச்சயம் நிறைய சாதிக்கவும் அதேநேரம் எங்கள் இனத்திற்கு நன்மைகள் நிகழவும் ராதிகா நிச்சயம் தனது ஆற்றலை பயன்படுத்தும் ஆற்றல் உள்ள பெண்ணாகவே வெளிப்பட்டுள்ளார்.
 
ஒருவரின் உடையில் குறைகாண்பதும் விமர்சிப்பதும் எங்கள் தமிழ் இயல்புகளில் ஒன்று. ராதிகா பற்றிய சர்ச்சையான விவாதங்களிற்கெல்லாம் தனது செவ்வி மூலம் சிறந்த பதில்களை வழங்கியுள்ளார். 10வருடம் கனடாவென்றாலே ஆங்கிலத்தில் தான் அடித்து விழுத்துவார்கள். 5வயதில் கனடா போன பிள்ளை 27வருடத்திற்கு பின்னரும் அருமையாக தனது தாய்மொழியில் பேசியிருப்பது பாராட்டுக்குரியது. 
 
பெண்ணே நீயென் இனத்தவளாயிருப்பதில் பெருமையடைகிறேன் பெண்ணாய்.

இணைப்புக்கு நன்றி சோழியன் .நமது தாயக நிலைமையை மிகவும் தெளிவாக திருமதி ராதிகா சிற்சபேசன் எடுத்த்து கூறியுள்ளார். இவரை போல திறமையான பெண்கள் தமிழனத்திற்கு கிடைத்ததது மிகவும் மகிழ்ச்சி.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகாவின் நிதானத்தையும் அரசியல் இராஜதந்திரத்தையும் இந்தப் பேட்டி மூலம் உணர முடியும். மிகவும் புத்திசாலித்தனமான அவரது உரையாடல் அரசியலில் நிச்சயம் நிறைய சாதிக்கவும் அதேநேரம் எங்கள் இனத்திற்கு நன்மைகள் நிகழவும் ராதிகா நிச்சயம் தனது ஆற்றலை பயன்படுத்தும் ஆற்றல் உள்ள பெண்ணாகவே வெளிப்பட்டுள்ளார்.
 
ஒருவரின் உடையில் குறைகாண்பதும் விமர்சிப்பதும் எங்கள் தமிழ் இயல்புகளில் ஒன்று. ராதிகா பற்றிய சர்ச்சையான விவாதங்களிற்கெல்லாம் தனது செவ்வி மூலம் சிறந்த பதில்களை வழங்கியுள்ளார். 10வருடம் கனடாவென்றாலே ஆங்கிலத்தில் தான் அடித்து விழுத்துவார்கள். 5வயதில் கனடா போன பிள்ளை 27வருடத்திற்கு பின்னரும் அருமையாக தனது தாய்மொழியில் பேசியிருப்பது பாராட்டுக்குரியது. 
 
பெண்ணே நீயென் இனத்தவளாயிருப்பதில் பெருமையடைகிறேன் பெண்ணாய்.

முதல் கருத்துக்கு பதில் எழுதும் போது .... புலிகளுக்கு அரசியல் தெரியாது அதுதான் தோற்றார்கள் என்று எழுதிவிட்டு.
30 வினாடி கூட இல்லை மற்றைய தலைப்பில்..... இவா அரசியல் செய்கிறா என்று ஒரு பெரும் குற்றசாட்டு.
 
அவர்கள் செய்யாட்டிலும் தப்பு 
இவர்கள் செய்தாலும் தப்பு.
 
வாயாலே  வாழ என்றே ஒரு கூட்டம் பிறந்திருக்கு ..... அதுகளை அப்படியே விட்டு விட்டு நகருவதே நன்மை  தரும்.
மாரி  தவளைகள் போல் கத்துவதை தவிர ..... செய்தது என்றும் ஏதும் இரா.
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு சிலவற்றை சுற்றிக்காட்ட விரும்புகின்றேன். எனது கருத்து தவறாகவும் இருக்கலாம். இருந்தால் அடியேனை மன்னித்து ஏற்றுக்கொள்ளவும். 

இதில் தனிநாடு பற்றி அங்கு உள்ளவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று நிருபர் கேள்வி கேட்பார். ராதிகா அவர்கள் தான் பேசிய மக்களின் கருத்தை தெரிவிப்பார். அவர்கள் தனிநாடு பற்றி பேசவில்லை என்பது போல் அந்த கருத்து அமைந்தது. ஆனால் அதனை பதிவி செய்துவிட்டு அங்கே மக்கள் சுதந்திரமாக பேச முடியாமல் உள்ளது எப்பொழுதும் பயத்துடனேயே உள்ளார்கள் என்பதையும் சொல்கின்றார். அப்படியென்றால் இவர் பேசிய மக்கள் மட்டும் சுதந்திரமாகவும் பயம் இல்லாமலும் பேசினார்கள் என்பதை எப்படி உறுதிசெய்யமுடியும்? எந்த சுதந்திரமும் இல்லாத ஒரு நாட்டில் மக்களின் கருத்தை எப்படி கண்டறிவது? அங்கே உள்ளவர்களின் தேவையை அவர்களிடமே கேட்க வேண்டும் என்று சொல்கின்றார். இங்கே ராதிகா அவர்களும் தெரிந்தோ தெரியாமலோ சர்வதேச மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு தேவை என்பதை பதிய மறந்துவிட்டார். 

தனிநாடு தேவையா இல்லையா என்பதை அங்கு வாழும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்து அனைத்து விவாதங்களிலும் பரவலாக வருகின்றது. அப்படியென்றால் நாங்கள் (புலம்பெயர்ந்தவர்கள்) யார்? அந்த உரிமை எங்களிற்கில்லையா? அவர்களிற்கிருக்கும் உரிமை எங்களிற்கில்லையா? எந்த நாட்டு குடியுரிமை பெற்றிருந்தாலும் வெளிநாட்டில் வாழ்ந்து வருபவர்கள் தங்களின் நாட்டு தேர்தலில் வாக்களிக்கு அனுமதியளிக்கப்படுகிறார்கள். இது தமிழர்களாகிய எங்களின் விடயத்தில் பேணுவதில் என்ன தவறு?

புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் என்ற பிரிவிணையை இது தூண்டிவிடுகின்றது. 

இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் புலம்பெயர்தமிழர்களின் வாரிசுகள் அவர்கள் வாழும் நாட்டிலயே குடியுரிமை பெற்றுவிடுவார்கள். அதன் பின்னர் அவர்களிற்கும் சிறீலங்காவிற்குமான அரசியல் உரிமை இல்லாமல் போய்விடும். ஈழத்தில் நடைபெறும் சிங்களகுடியேற்றங்களால் அங்கே தமிழர் பகுதிகளிலும் சிங்களவர்களும் தமிழர்களின் எண்ணிக்கையில் சரிசமமாக வந்துவிடுவார்கள். போருக்கு பின்னரும் இனஅழிப்பு தொடர்கின்றது என்பதை இங்கே சுற்றிக்காட்டுகின்றேன். அதன் பின்னர் ஒரு பொதுவாக்கெடுப்பு என்பது பலனற்று போய்விடும். 

ஆனால் இதில் பேட்டி காண்பவர் இலங்கைத்தமிழர்கள் என்ற சொல்லை தவிர்த்து ஈழத்தமிழர்கள் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். ஈழம் என்பதே தமிழர்களின் நாடு தானே. 

Edited by செங்கொடி

  • தொடங்கியவர்

இங்கே ஒரு சிலவற்றை சுற்றிக்காட்ட விரும்புகின்றேன். எனது கருத்து தவறாகவும் இருக்கலாம். இருந்தால் அடியேனை மன்னித்து ஏற்றுக்கொள்ளவும். 

இதில் தனிநாடு பற்றி அங்கு உள்ளவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று நிருபர் கேள்வி கேட்பார். ராதிகா அவர்கள் தான் பேசிய மக்களின் கருத்தை தெரிவிப்பார். அவர்கள் தனிநாடு பற்றி பேசவில்லை என்பது போல் அந்த கருத்து அமைந்தது.

உங்கள் கருத்து தவறு.. திரும்ப அவரது பதில்களைக் கவனிக்கவும். 

ஆனால் அதனை பதிவி செய்துவிட்டு அங்கே மக்கள் சுதந்திரமாக பேச முடியாமல் உள்ளது எப்பொழுதும் பயத்துடனேயே உள்ளார்கள் என்பதையும் சொல்கின்றார். அப்படியென்றால் இவர் பேசிய மக்கள் மட்டும் சுதந்திரமாகவும் பயம் இல்லாமலும் பேசினார்கள் என்பதை எப்படி உறுதிசெய்யமுடியும்?

பயத்துடன் பேசினாலும் அந்தப் பயமானது எங்கே யாருடன் பேசும்போது வெளிப்படும் என்பதைக் கூடவா உங்களால் உணர்ந்து கொள்ள முடியாதவாறு ராதிகாவின்மேல் குற்றம் காணும் நோக்கு கண்ணை மறைக்கிறது?!

எந்த சுதந்திரமும் இல்லாத ஒரு நாட்டில் மக்களின் கருத்தை எப்படி கண்டறிவது? அங்கே உள்ளவர்களின் தேவையை அவர்களிடமே கேட்க வேண்டும் என்று சொல்கின்றார்.

மக்களின் விருப்பில் அமைந்த தலைமை ஊடான கருத்து என அவர் கூறுவதை அவதானிக்கவில்லையா?

இங்கே ராதிகா அவர்களும் தெரிந்தோ தெரியாமலோ சர்வதேச மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு தேவை என்பதை பதிய மறந்துவிட்டார். 

தனிநாடு தேவையா இல்லையா என்பதை அங்கு வாழும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்து அனைத்து விவாதங்களிலும் பரவலாக வருகின்றது. அப்படியென்றால் நாங்கள் (புலம்பெயர்ந்தவர்கள்) யார்? அந்த உரிமை எங்களிற்கில்லையா? அவர்களிற்கிருக்கும் உரிமை எங்களிற்கில்லையா? எந்த நாட்டு குடியுரிமை பெற்றிருந்தாலும் வெளிநாட்டில் வாழ்ந்து வருபவர்கள் தங்களின் நாட்டு தேர்தலில் வாக்களிக்கு அனுமதியளிக்கப்படுகிறார்கள். இது தமிழர்களாகிய எங்களின் விடயத்தில் பேணுவதில் என்ன தவறு?

புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் என்ற பிரிவிணையை இது தூண்டிவிடுகின்றது. 

அங்கு வாழும் தமிழர்களுக்கு நன்மை விளையுமானால் பிரிவினை வளர்ந்தாலும் தவறில்லை!! வசதிக்காகவும் வாய்ப்புக்காகவும் புலம்பெயர்ந்த பல தமிழர்கள் தமது வறட்டுக் கௌரவ முகமூடிகளாகவே தாயகத் தமிழர்களைப் பயன்படுத்தி குளிர்காய்கிறார்கள்... வேண்டாம் இந்த இழிநிலை. 

இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் புலம்பெயர்தமிழர்களின் வாரிசுகள் அவர்கள் வாழும் நாட்டிலயே குடியுரிமை பெற்றுவிடுவார்கள். அதன் பின்னர் அவர்களிற்கும் சிறீலங்காவிற்குமான அரசியல் உரிமை இல்லாமல் போய்விடும். ஈழத்தில் நடைபெறும் சிங்களகுடியேற்றங்களால் அங்கே தமிழர் பகுதிகளிலும் சிங்களவர்களும் தமிழர்களின் எண்ணிக்கையில் சரிசமமாக வந்துவிடுவார்கள். போருக்கு பின்னரும் இனஅழிப்பு தொடர்கின்றது என்பதை இங்கே சுற்றிக்காட்டுகின்றேன். அதன் பின்னர் ஒரு பொதுவாக்கெடுப்பு என்பது பலனற்று போய்விடும். 

ஆனால் இதில் பேட்டி காண்பவர் இலங்கைத்தமிழர்கள் என்ற சொல்லை தவிர்த்து ஈழத்தமிழர்கள் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். ஈழம் என்பதே தமிழர்களின் நாடு தானே. 

ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும். அதனுள் தமிழீழம் உள்ளது. 

சில வேளைகளில் குழந்தைத்தனம் தெரிந்தாலும் உண்மையான நேர்மையான பதில்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றாதிகா சிற்சபேசன் புதிய தலைமுறை தொலைக்காற்சியிற்கு அளித்த பேட்டி 

தனக்கு இலங்கை அரசு கொடுத்த அச்சுறுத்தல்...மனம் விட்டு பேசுகின்றார்...

தாயகத்தில் தற்போது மக்களுக்கு தேவையானது ..

1) வேலைவாய்ப்பு 

2) பசியிற்கு சாப்பாடு...மக்கள் முறைப்பாடு...

4 வருடங்கள் தாண்டியும் தாயகத்தில் பசி பட்டினியால் மக்கள் இன்னமும் பயத்துடன் வாடுகின்றனர்..

புலம் பெயர் மக்களின் ஒற்றுமை இன்மை...

ஐனாவிற்கு ஒருமித்த குரலில் குரல் கொடுக்கவேண்டும்...

தாயகத்தில் ஐனனாயகம் என்பற்கு இடம் இல்லை...

PART 1 http://www.youtube.com/watch?v=Q86VFK5lR7o

PART 2 http://www.youtube.com/watch?v=gEZDnBN3br0

PART 3 http://www.youtube.com/watch?v=zlocoU5JKiI

PART 4 http://www.youtube.com/watch?v=Zy1IuiQc99E

PART 5 http://www.youtube.com/watch?v=EXRAYLqosQ8

ராதிகா அருமையாக பேட்டி அளித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.