Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எனது மகன் நிரபராதி; திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளான்"! – கதறும் ரவீந்திரனின் தாய்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mother-240114-150.jpg

தன்னுடைய மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான் என டூபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரவீந்திரன் கிருஸ்பிள்ளையின் தாயார் தெரிவித்தார். தனது மகனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலை தொடர்பிலும் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு காரினால் ஒருவரை மோதி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொம்மாதுறையைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் நிரபராதியென அவரது தாயார் நாகரெட்னம் தெரிவித்தார்.

  

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையானது மட்டக்களப்பு வாழைச்சேனை –மட்டக்களப்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாகவுள்ள கிராமமாகும்.மிகவும் வறிய மக்கள் வாழும் கிராமமான இங்கிருந்து அதிகளவான இளைஞர் யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிந்து வருகின்றனர்.

இங்கு கிருஸ்ணபிள்ளை-நாகரெட்னம் தம்பதியினரின் மூன்றாவது பிள்ளையே ரவீந்திரன். இவர்கள் குடும்பத்தில் 11 பிள்ளைகள். இவர்களில் ஒருவர் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதக்குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மூத்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் 1990ஆம் ஆண்டு கடமையாற்றி வந்த நிலையில் வீட்டில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்துள்ளார்.

தங்களது வீட்டின் வறுமை நிலைமை காரணமாகவே தங்களது பிள்ளைகளை வெளிநாடு அனுப்பினோம்.ஆனால் அவர்கள் பிணங்களாக திரும்பியமை தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார்.தனது மூத்த மகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றிய வேளையில் அந்த வீட்டில் இருந்து காஸ் சிலின்டர் வெடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பலைக்கூட நாங்கள் காணவில்லை. அவரை இழந்து நின்ற நாங்கள் இன்று எமது மகனையும் இழந்து அவரின் சடலத்தினையும் காணமுடியாதது வேறு எந்த தாய்க்கும் ஏற்படாத நிலையெனவும் தெரிவித்தார்.

கடந்த ஐந்தாம் திகதி டூபாய் சென்று சிறையில் தனது மகனை சந்தித்தபோது தான் நிரபராதியெனவும் தன்னைக் காப்பாற்றும்படியும் எங்களிடம் மன்றாடினார். தன்னை தனது எஜமானாரும் வேறு மூவரும் இணைந்து பாலைவனப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக காரை எடுத்து ஓட முயன்றபோது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

அவரை கைது செய்த பொலிஸாரிடமும் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் இவருக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை என்றே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவை திடிரென மாற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ தொலைபேசி அழைப்பு மூலம் வழங்கிய தகவலின் மூலமே தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தனது மகன் தெரிவித்ததாகவும் தாயார் தெரிவித்தார்.

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து மன்னிப்புக்கோரி தனது சகோதரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தலாம் என்று உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்திக்க முயற்சி செய்த போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்த ரவீந்திரனின் சகோதரியான கோமளாவதி என்பவர் தெரிவித்தார்.

எனது சகோதரன் எமது குடும்ப நிலைமை காரணமாகவே வெளிநாட்டுக்காக தொழிலுக்காக சென்றார்.இன்று அவரது மனைவியினைக்கூட அவரது சடலத்தினை பார்க்க அனுமதிக்கவில்லை. இந்த கொலையில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிமும் முறையிட்டும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.

எங்களது சகோதரனின் உடலையாவது இங்கு கொண்டுவர நடவடிக்கையெடுக்க வேண்டும். இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டுள்ளோம். ஆனால் எதுவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை. எங்கள் சகோதரனின் முகத்தினை கடைசி ஒரு தடவையாவது பார்க்க ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=102121&category=TamilNews&language=tamil

ஒரு ரிசானாவுக்காக குரல் எழுப்பிய எந்த அமைப்புகளும் பத்திரிகைகளும் ரவீந்திரன் விடயத்தில் மெளனம் காத்தது ஏன்? 'அம்மா' வை விட 'உம்மா' என்று அழைப்பதற்குத் தான் மதிப்பு அதிகம் போல.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரிசானாவுக்காக குரல் எழுப்பிய எந்த அமைப்புகளும் பத்திரிகைகளும் ரவீந்திரன் விடயத்தில் மெளனம் காத்தது ஏன்? 'அம்மா' வை விட 'உம்மா' என்று அழைப்பதற்குத் தான் மதிப்பு அதிகம் போல.

 

 

நாதியற்ற  இனம் நாம்..

இப்படியே

அநாதைகளாய்

அநாதரவாய்

அழிந்து போவோமா.................? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாயின் வேதனை. நெஞ்சு கனக்கிறது.

தமிழர் அமைப்புகள் எல்லாம் எங்கு சென்று விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ! அதிர்ச்சியான வருத்தமான செய்தி. காட்டுமிராண்டிகளிடம் மனிதநேயத்தை எதிர்பார்க்க முடியாது! :o

  • கருத்துக்கள உறவுகள்

mother-240114-150.jpg

தன்னுடைய மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான் என டூபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரவீந்திரன் கிருஸ்பிள்ளையின் தாயார் தெரிவித்தார்.

 

resss.jpgbeheading.jpg

 

மூதூர் முஸ்லீம் ரிசானாவுக்கு, சவூதி அரேபியாவில்... விதிக்கப் பட்ட மரண தண்டனையை எதிர்த்து...

அகில உலக தமிழ்ச் சமூகமும் உரக்கக் குரல் கொடுத்தார்களே....

 

ரவீந்திரன், தமிழன் என்ற படியால்...கேட்க நாதியற்று....

உழைக்கப் போன இடத்தில், காட்டு மிராண்டி முஸ்லீம்களால்... பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளான்.

 

யாழ்களத்தில் கூட... எத்தனை பேர், பக்கம் பக்கமாக... ரிசானுவுக்கு வக்காலத்து வாங்கிய தமிழர்கள்... மௌனமாக இருப்பது, அவர்களது சுயநலத்தைக் காட்டுகின்றது. :huh:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
அவரை தூக்கில் போட்டப் பிறகு தான் விசயமே வெளியாலா வந்திருக்குது.ரிசானா உள்ளுக்குள்ள[ஜெயிலில்] கண காலம் இருந்த படியால் அவரை காப்பாற்ற போராடினார்கள்
 
  • கருத்துக்கள உறவுகள்

 

அவரை தூக்கில் போட்டப் பிறகு தான் விசயமே வெளியாலா வந்திருக்குது.ரிசானா உள்ளுக்குள்ள[ஜெயிலில்] கண காலம் இருந்த படியால் அவரை காப்பாற்ற போராடினார்கள்

 

 

அதனைக் கூட...

எமது பத்திரிகைகளோ... இணையச் செய்தியாளர்களோ.... வெளிக்கொண்டு வர முடியாத, இழிவு வாழ்க்கை வாழ்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள கருணாவும், பிள்ளையாணும்...

தனது மக்களை காப்பாற்றாமல்... இப்ப என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்.

 

 

அவரை தூக்கில் போட்டப் பிறகு தான் விசயமே வெளியாலா வந்திருக்குது.ரிசானா உள்ளுக்குள்ள[ஜெயிலில்] கண காலம் இருந்த படியால் அவரை காப்பாற்ற போராடினார்கள்

 

 

அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக காரை எடுத்து ஓட முயன்றபோது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார்

 

.

 

அதுவும் தான். இவர் தமிழர் என்பதும்தான். இவர் தன் வாயால் குற்றத்தை ஒப்புகொண்டமையும்தான். ரிசானா NGOக்கள் சந்திக்க சென்ற போது குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை. குழந்தை பிரக்கடித்து இறந்ததாகத்தான் சொன்னார். ரிசான 16 வயதுப்பெண் இலங்கையில் நடந்த திருகுதாள்ங்களால் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படார். இது இலங்கை குடியரசுக்கு ஒரு அவப்பேர் ஏற்படுத்தியிருந்தது. அதனால் இலங்கை அரசர் தலையிட்டிருந்தார். அதை வைத்து அவரை விடுவிக்க அவர்கள் முயன்றார்கள். இந்த வழக்கில் குற்றம் ஒத்துக்கொள்ளப்பட்ட இடம் எதிர்த்து வழக்காட சிக்கலாக முடிந்திருக்கலாம். வழக்கில் பையன் காரை எடுத்து கொலை பண்ண வேண்டிய அளவுக்கு பல விடையங்கள் நடந்திருக்கு. அவற்றை வெளியே கொண்டுவர்த்தக்க குடும்பமாக இவர்கள் இருக்கவில்லை. 

 

 

தாயின் மற்றப் பிள்ளையையும் யாராவது கொலை பண்ணியிருக்கலாம். ஆனால் நன்றாக சடையப்பட சந்தர்ப்பம் இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் தான். இவர் தமிழர் என்பதும்தான். இவர் தன் வாயால் குற்றத்தை ஒப்புகொண்டமையும்தான். ரிசானா NGOக்கள் சந்திக்க சென்ற போது குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை. குழந்தை பிரக்கடித்து இறந்ததாகத்தான் சொன்னார். ரிசான 16 வயதுப்பெண் இலங்கையில் நடந்த திருகுதாள்ங்களால் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படார். இது இலங்கை குடியரசுக்கு ஒரு அவப்பேர் ஏற்படுத்தியிருந்தது. அதனால் இலங்கை அரசர் தலையிட்டிருந்தார். அதை வைத்து அவரை விடுவிக்க அவர்கள் முயன்றார்கள். இந்த வழக்கில் குற்றம் ஒத்துக்கொள்ளப்பட்ட இடம் எதிர்த்து வழக்காட சிக்கலாக முடிந்திருக்கலாம். வழக்கில் பையன் காரை எடுத்து கொலை பண்ண வேண்டிய அளவுக்கு பல விடையங்கள் நடந்திருக்கு. அவற்றை வெளியே கொண்டுவர்த்தக்க குடும்பமாக இவர்கள் இருக்கவில்லை. 

 

தாயின் மற்றப் பிள்ளையையும் யாராவது கொலை பண்ணியிருக்கலாம். ஆனால் நன்றாக சடையப்பட சந்தர்ப்பம் இருந்தது. 

 

இப்படியான, விடயங்களில்....

தமிழ் சட்ட ஆலோசகர்களின்... உதவி தேவை.

யாழ்களத்தில்... சட்ட ஆலோசக உறுப்பினர்கள், இது வரை இருந்ததில்லை.

இன்னும்... ஒரு தமிழ் உயிர், அநியாயமாக.... செத்துப் போய் விட்டதே...

எல்லாம்... செய்கின்றோம்,

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னும்...

அந்த... ஏழைத் தாயின், கதறலுக்கு... குரல் கொடுக்கக் கூடாதா...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு ஒரு நாடு இருந்திருந்தால் இப்படியான அனுதிகளை கேட்டிருக்கும். அதில்லாத நாங்கள் நாதியறவர்களாக இருக்கவேண்டியதுதான். :(    

Edited by தமிழரசு

அநியாய பலி ,ஊடகங்களுக்கு இந்த செய்தி இரண்டு நாட்களுக்கு முதல் தான் தெரியும் .சிறைத்தண்டனை கொடுத்ததை எவரும் பெரிதாக எடுக்கவில்லை ஆனால் திடீரென்று அதை மாற்றி மரணதண்டனை ஆக்கிவிட்டார்கள் .

இதற்குள்ளும் சாதி ,மதம் இனம் என்று இழுத்து அரசியல் செய்ய  சிலர் .

அமெரிக்கனே இவர்களிடம் நியாயம் கேட்பதில்லை .அள்ள மட்டும் அள்ளுவம் என்பது அவர்கள் நிலை .

 

  • கருத்துக்கள உறவுகள்

சடலத்தைக் கொண்டுசெல்ல உதவுங்கள்!- மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உறவினர்கள் வேண்டுகோள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொலை குற்றஞ்சாட்டப்பட்டு துப்பாக்கி சூட்டின் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மட்டக்களப்பு, கொம்மாதுறையை சேர்ந்த 32 வயதான கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் என்பவரின் சடலத்தை பெற்றுத் தர உதமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2006ம் ஆண்டு கட்டார் நாட்டு பிரஜை ஒருவரை வாகனத்தால் மோதி கொலை செய்ததாக ரவீந்திரன் மீது அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து அவருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக அந்த நாட்டு சிறைச்சாலையொன்றில் ரவீந்திரன் மரண தண்டனைக் கைதியாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதுவராலய அதிகாரிகள் ரவீந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவரை பார்வையிடுவதற்கு அவரது தாயாரை அழைத்திருந்தது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பாக அறிவிக்கப்பட்டவுடன், முதல் நாள் இரவு தங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ரவீந்திரன், கொம்மாதுறையிலுள்ள அவரது குடும்ப உறவுகளுடனும் உரையாடியதாக அவரது சகோதரர்களில் ஒருவரான விஜேந்திரன் குறிப்பிட்டார்.

மரண தண்டனைக்குள்ளான ரவீந்திரனின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோரும் தற்சமயம் தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே தங்கியுள்ளார்கள். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் அந்நாட்டு பொலிஸாரினால் தான் அழைக்கப்பட்டதாகவும் மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை இறுதியாக சந்தித்து பேச அவர்கள் வாய்ப்பளித்ததாகவும் ரவீந்திரனின் சகோதரி ஆனந்தி கூறினார்.

 

raveenthiran_death_001-150x150.jpg
சகோதரன் கெஞ்சியதாகவும் தெரிவித்த ஆனந்தி, அவரைக் காப்பாற்றும் முயற்சி தங்களால் முடியாமல் போனதாகவும் வேதனை வெளியிட்டார்.

 

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் சடலத்தை பார்வையிட தனக்கும் அவரது மனைவிக்கும் சில நிமிடங்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டதாக கூறும் ஆனந்தி, சடலத்தை எப்படியாவது இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இதற்கு மனிதாபிமான சேவையிலுள்ளோர் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

http://www.lankamurasu.com/10746/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.