Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாகக் கூறுவது வேடிக்கையானது :பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாகக் கூறுவது வேடிக்கையானது :பொன்சேகா

நாட்டின் இன்­றைய சர்­வா­தி­கார போக்­கு­ட­னான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங்களுக்கு மத்­தியில் வாழ்க்­கையை கொண்டு செல்லும் அதே­வேளை ராஜபக் ஷ குடும்­பத்தினர் அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் அனு­ப­வித்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனே இந்­நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்­ற­தாக கூறு­வது வேடிக்­கைக்­கு­ரிய விட­ய­மாகும் என முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும், ஜன­நா­யக கட்­சியின் தலை­வ­ரு­மான சரத் பொன்­சேகா குற்­றஞ்­சாட்­டினார். 

Sarath.jpg
 
இவ்­வ­ர­சினால் எங்­க­ளு­டைய போராட்­டங்­களை தடை செய்ய முடி­யாது. நாங்கள் எதற்கும் அஞ்­சியவர்­க­ளில்லை. அர­சாங்கம் எங்கள் மீது எவ்­வ­கையில் தடை விதித்­தாலும் நாங்கள் அப்­பாவி மக்­க­ளுக்­காக தொடர்ந்து போரா­டுவோம். அதே­போன்று எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் பெரு­ம­ள­வி­லான வாக்­கு­களை பெற்று வெற்­றி­கொண்டு நாட்டின் முன்­னணி கட்­சி­யாக பரி­ண­மிப்போம் எனவும் அவர் கூறினார். அர­சுக்கு எதி­ராக நேற்று முன்தினம் ஜன­நா­யகக் கட்சி ஏற்­பாடு செய்த ஆர்ப்­பாட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
 
தற்­போது இந்­நாட்டை ஆட்சி செய்யும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­யினால் ஊழல், மோசடி அதி­க­ரித்துள்ளதுடன் கசினோ சூதாட்­டத்தை .கொண்­டு­வந்து கலா­சா­ரத்தை சீர­ழி­வுக்குள் தள்­ளி­யுள்­ளது. அதே­போன்று சர்­வா­தி­கார போக்­குடன் இந்­நாட்டை ஆட்சி செய்கிறது. இவ்­வ­ரசின் சர்­வா­தி­கார போக்­கிற்கு இட­ம­ளிக்கக் கூடாது.
 
இதே­வேளை, தற்­போது மக்­களால் நிம்­ம­தி­யாக வாழ்க்­கை­யை­கொண்டு செல்ல முடி­யாது. பல வரு­டங்­க­ளாக கொழும்பில் வாழும் மக்கள் சிறிய வீடு­க­ளி­லேயே வசித்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய வீடு­களை அரசு வழங்­காமல் அவர்­க­ளு­டைய வீடு­களை உடைத்து அவ் இடங்­களை அர­சாங்கம் சுவி­க­ரித்து வரு­கி­றது.அத்­துடன், இந்­நாட்டு மக்கள் தொடர்பில் எவ்­வித சிந்­த­னையும் அர­சிற்கு கிடை­யாது.
 
கல்வி மற்றும் போக்­கு­வ­ரத்­திற்கு போதி­ய­ளவில் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தில்லை. இந்­நி­லையில் அர­சாங்கம் பொய் வாக்­கு­று­தி­களை வழங்கி பொய்மை மிகு ஆசி­யாவின் ஆச்­ச­ரி­ய­மாக இலங்­கையை மாற்­றி­யுள்­ளது. தற்­போது மக்­க­ளுக்கு மூவே­ளைகள் சாப்­பிட முடி­யாது. ஒரு வேளை உண­வையே மூவே­ளையும் உண்­ணு­கின்­றனர். நமது மூதா­தை­யர்­களை விடவும் உணவு உட்­கொள்ள வழி­யின்றி மக்கள் தவிக்­கின்­றனர். இவ்­வ­ரசு ஐந்து தலை­மு­றை­யி­னரை கட­னா­ளி­யாக மாற்­றி­யுள்­ளது.
 
வெளி­நா­டு­க­ளு­டானான உறவு
 
தற்­போது அர­சாங்கம் சர்­வ­தே­சத்தின் வல்­ல­ரசு நாடு­க­ளுடன் நட்­பு­றவை கொள்­ளமால் சர்­வா­தி­கார ஆட்­சி­க­ளை­யு­டைய நாடு­க­ளு­டனே நட்­பு­றவு கொள்­கி­றது. இதனால் தற்­போது நாடு பெரும் வலைக்குள் சிக்­கி­யுள்­ளது.
 
அரச ஊட­கங்­களின் குற்­றச்­சாட்­டுக்கள்
 
இதே­வேளை, பிர­தான எதிர்க்­கட்­சிகள் மீது குற்­றங்­களை சுமத்­தாமல் அரச ஊட­கங்கள் ஜன­நா­யக கட்­சியின் மீதே குற்­றங்­களை சுமத்­தி­வ­ரு­கின்­றன.
 
கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு பிர­பா­க­ர­னு­டைய மயி­ரி­ழைக்கு கூட இவ்­வாட்சி யாளர்கள் தகு­தி­யற்­ற­வர்க.ௌன கூறி­ய­மைக்கு அரச ஊட­கங்கள் என்னை தேசத்­து­ரோகி என பெயர் சூட்­டி­யுள்­ளன. நான் மனச்­சாட்­சிக்கு உடன்­ப­டவே கூறு­கிறேன்.
 
இந்­நாட்டில் விடு­தலை புலி­களின் தலைவர் பிர­பா­கரன் பொது மக்­களை இலக்­காக வைத்தே தாக்­கு­தல்கள் மேற்­கொண்டார். பிர­பா­கரன் இந்­நாட்டை சீர­ழித்­ததை விடவும் இவ்­வ­ர­சாங்கம் மக்­களை பெரும் கஷ்­டத்­திற்குள் தள்­ளி­யுள்­ளது.
 
அத்­துடன், 2009ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பிர­பாக ரனுக்கு 500 மில்லியன் ரூபாவை வழங்­கி­யது யார்? இவ்­வ­ர­சாங்க மாகும்.
 
தற்­போது தீவி­ர­வா­திகள் அனை­வரும் அமைச்­சர வையி­லேயே உள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உப­த­லைமைப் பத­வியை பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு வழங்­கி­யது யார்? இவ்­வ­ர­சாங்­க­மே­யாகும்.
 
ஆகவே, இவ்­வ­ர­சாங்கம் எங்­களுக்கு எவ்­வ­கையில் தடை விதித்­தாலும் எங்­க­ளு­டைய போராட்­டங்­களை நாம் நிறுத்­த­மாட்டோம். எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் பெரு ­ம­ளவில் வெற்றி பெற்று நாட்டின் முன்னணி கட்சியாக பரிணமிப்போம் என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் யார், எவர் வந்தாலும் பிரபாகரன் என்ற அச்சாணி இல்லாமல் அரசியல் செய்ய முடியாது!  உறுதிப்படுத்தும் பொன்சேகா!

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் யார், எவர் வந்தாலும் பிரபாகரன் என்ற அச்சாணி இல்லாமல் அரசியல் செய்ய முடியாது!  உறுதிப்படுத்தும் பொன்சேகா!

சரியாகச் சொன்னீங்கள்

தமிழ் நாட்டிலும் அதே நிலைமைதான்

புலிளை பற்றி நல்லாதாக விமர்சனம் வைக்காத சம்பந்தன் தலைமைதான் நாட்டில் தேர்தலில் வென்றது .கஜேந்திரன் கோஷ்டிக்கு கட்டு காசும் இல்லை .

புலிகளை அந்த மாதிரி வாங்கு வாங்கென்று வாங்கிய ஜெயலலிதாதான் தேர்தலில் வென்றார் .சீமான் ,வைகோ நெடுமாறன் கட்டு காசு எடுப்பார்களோ தெரியவில்லை .

புலபெயர் நாடுகளில் புலிகளின் பேச்சாளராக இருந்தவர்கள் நசனல் போஸ்ட் கட்டுரை வெளிவர அவர்களுக்கும் எமக்கும் தொடர்பே இல்லை என்கின்றார்கள் .

இதுதான் யதார்த்த அரசியல் ,அதைவிட்டு பேப்பர்ல பெயர் வரவேண்டும் என்று இப்ப அறிக்கை விடுபவர்களை பார்த்து இப்பவும் அச்சாணி ,பிரியாணி என்று கொண்டு . :icon_mrgreen:

உந்த ஆளை உள்ளுக்க போட்டதிற்கே கேட்க ஆளில்லை ,உவர் தரவளிகள் தான் இப்ப புலிகளை வைத்து அரசியல் செய்கின்றார்கள் .

ஆமா ஆமா ........... இந்த  யாதார்த்த பிரியாணிதான் ரொம்ப சுவையானது.
எல்லா மக்களுக்கும் அதுதான் பிடிச்சிருக்கு.
ஜெயலலிதா சும்மா இருந்துவிட்டு போகட்டும்  என்று ... வென்ற காங்கிரசும் கருணாநிதியும் போட்ட பிச்சையில் முதலம்மைச்சர் ஆனவர்.
சம்பந்தன் ஐயா தேர்தல் மட்டும் பொத்திக்கொண்டுதான் இருந்தார் ....
வென்ற பின்பு சிங்களவனின் தண்ணி பாட்டிகளில் தண்ணியடிச்சுட்டு வெறியில்தான் யாதர்த்தத்தை உளறினார். பாவம் முன்பே உளறி இருந்தால் சிங்களவரும் வந்து வாக்கு போட்டு ஓகோ ஆகா என்று வென்றிருப்பார்.
புலிகளை 95 வீத மக்கள் நாட்டில் வெறுக்கிறார்கள்.
வெறும் 5 வீதம்தான் சும்மா அலட்டிக்கொண்டிருக் கிறது புலம்பெயர்ந்து.
 
இந்த கணக்கும் சரியோ தெரியவில்லை .....  போன ஆடி மாதம் அம்மா ஊரில் இருந்து கடிதம் போட்டவாவாம் 
இன்னுமொரு 4 மாதம் கழிச்சு இங்கு வந்து சேரும்.
அது வந்து படிச்சால்தான் உண்மை தெரியும். இந்த பூமியிலே அங்க நடப்பது இங்கு தெரிய ஒரு இரண்டு மூன்று வருஷம் ஆகுது. இப்பிடியே வாழ்க்கை போகுது.
 
எதோ இந்த யாதர்த்த பிரியாணி கிடைப்பதால் ..........
மக்கள் பிரிச்சு சாப்பிட்டு பசியாறுகிறார்கள்.
 
சுப்ரமணிய சுவாமி இல்லை என்றால் தமிழ் நாட்டு மக்கள் உண்மை தெரியாமலே போயிருப்பார்கள்.
 
தமிழ் நாட்டில் நாம் இல்லையே  என்ற கவலை உங்களால் எமக்கு இல்லை.

அதேவேளை பிரபாகரன் ஒரு போராளியாக இல்லாமல் அரசியல்வாதியாக மாறியிருந்தால்  தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றிகளை  ஈட்டி  உப்பு சப்பு இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு  அரச உயர் பதவியில் இருந்திருப்பார்.  மிகப்பபலமான படையணிகளை உருவாக்கி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அவரின் பலவீனமே அடைந்தால் தமிழீழம் அன்றேல் சுடுகாடு என்று இருந்ததுதான். கொண்ட கொள்கையில் அதி உச்ச நேர்மை என்பது தற்போதய யதார்த்த உலக அரசியல் சூழ்நிலைக்கு பொருத்தம் இல்லாதது என்பதை அவர் உணரவில்லை.

1948 இல் இருந்து 1977 வரையான தேர்தல் மேடைகளில்  அகிம்ஸாவாதிகளால் பதவிகளை பெறுவதற்காக மட்டும்  முழங்கபட்ட( திரு சம்பந்தன் அவர்கள் உட்பட)  மாபெரும் தேர்தல் கோசங்களான   செய் அல்லது செத்து மடி, உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு, தமிழை பழித்தவன் தாயானாலும் தண்டித்தே தீருவேன், ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை போன்ற கோசங்களை உண்மை என நம்பியதும் பிரபாகரனின் பலவீனங்களில் ஒன்று.

கடைசி மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன் சற்று சுயநலவாதியாக மாறியிருந்தாலும்  தனது கடைசி இரு பிள்ளைகளை காப்பாற்றி வேறு நாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம். ஏனென்றால் தமிழீழம் என்று வீரவசனங்களை பல ஆண்டுகளாக பேசிய அகிம்ஸாவாதிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருப்பது தானே யதார்த்தம். அந்த யதாரத்த அரசியலை புரிந்து கொள்ளாத பிரபாகரன்.

Edited by tulpen

இதைத்தானே நாங்கள் தொடர்ந்து எழுதுகின்றோம் பிரபாகனுக்கு அரசியல் தெரியாது என்று .தனி மனிதன் தனது வாழ்க்கையை எப்படியும் நடத்தலாம் ஒரு இனத்தின் தலைவன் என்பவன் சர்வதேச யதார்த்த உலக அரசியலை  புரிந்துகொள்ளவேண்டும் .தனது நேர்மைக்கும் உண்மைக்கும்  தன்னை அழிக்க அவருக்கு உரிமை இருக்கு , நம்பி வந்த போராளிகளையும் பொதுமக்களையும் பலி கொடுக்க அவருக்கு எதுவித உரிமையும் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கு போறதுக்கு வன்வே ரிக்கற் கிடைச்சால் அர்யூன் பெரியவரைதான் முதலில் அனுப்பிவைக்கவேணும் புலி எதிர்ப்பு அட்டகாசாம் தாங்க முடியலை .புலி,பிரபாகரனை ஒரு கிழமைக்கு திட்டாவிடின் ஒருத்தருக்கும் சிலவுவைக்காமலேயே செவ்வாயில் பயணம் செய்வியளாக்கும் அர்யுன்! :icon_mrgreen:

நான் கூறியது காலம் காலமாக வீர வசனங்கள் பேசி மக்களை மேடைகளில் உசுப்பேற்றி போராட தூண்டிவிட்டு பதவிகளை பெற்று   தாங்களும் தங்கள் பிள்ளைகளுக்காவும்  சுகபோக வாழ்க்கையை தேடிய தமிழ் மாபெரும் தலைவர்களையும் ஒரு  விடுதலைப் போராளியாக  கொள்கை நேர்மையுடன் தனது குடும்பத்தையே அர்பணித்த  பிரபாகரனையும் பற்றிய ஒரு ஒப்பீடு மட்டுமே. அதைத்தவிர விடுதலை போராட்டம், விடுதலை புலிகள் மற்றும் அதன் வெற்றிகள் தோல்விகள், போராட்டத்தவறுகள்  தொடர்பான  தொடர்பான விமர்சனம் அல்ல.  அதைப்பற்றி  நேர்மையுடனும் இதய சுத்தியுடனும்  எவர்மீதும் காழ்புணர்ச்சி இல்லாமலும்  விமர்சிப்பதானால் பல விடயங்களை அலசி ஆராய வேண்டும். தங்களை போல புலி எதிர்ப்பு மனநிலையுடன் அதை செய்ய முடியாது.

பிரபாகரனுக்கு இருந்த அந்த கொள்கை நேர்மை அர்ப்பணிப்பில் ஒரு இருபத்தைந்து  வீதம்  மட்டும் தமிழ் அகிம்ஸை தலைவர்களுக்கு இருந்திருந்தால் ஆயுத போராட்டமே ஆரம்பித்திருக்காது. மெத்த படித்த அந்த அறிஞர் குழாம் தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கி கொடுத்திருக்கும். இதுவும் யதார்த்தமே.

கேம்பிறிஜ். ஒக்ஸ்போர்டில் அரசியல். சட்டம் படித்த கலாநிதிகள், இரட்டை கலாநிதிகள் பட்டம் பெற்ற அரசியல்வாதிகளுக்கே அரசியல் ராஜதந்திரம் தெரியாமல் 30 வருடங்கள் (1948 -1977) வீணாக்கி  வீர வசனங்கள் மேடையில் பேச  மட்டும் தெரிந்திருந்த போது  ஒரு போராளியான பிரபாகரனுக்கு எப்படி?

தமிழ் சூழலி்ல் நீங்களை கூறியது போல் அரசியல் தெரிந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால் அவர்கள் மட்டும் வெற்றி பெறுவார்கள். மக்கள் அல்ல.

பெருமாள் செவ்வாய் கிரகவாசிகளிடம் அதி நவீன தொற்று நீக்கி மருந்துகள் இருந்தால் என்ன செய்வது.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே நாங்கள் தொடர்ந்து எழுதுகின்றோம் பிரபாகனுக்கு அரசியல் தெரியாது என்று .தனி மனிதன் தனது வாழ்க்கையை எப்படியும் நடத்தலாம் ஒரு இனத்தின் தலைவன் என்பவன் சர்வதேச யதார்த்த உலக அரசியலை  புரிந்துகொள்ளவேண்டும் .தனது நேர்மைக்கும் உண்மைக்கும்  தன்னை அழிக்க அவருக்கு உரிமை இருக்கு , நம்பி வந்த போராளிகளையும் பொதுமக்களையும் பலி கொடுக்க அவருக்கு எதுவித உரிமையும் கிடையாது .

வாந்தி என்பது (ஒன்றுக்கும் உதவாத, அஜீரனிக்க முடியாததை) எடுத்து விடுவதாகும்.
 
கருத்து என்பது ஒன்றை பற்றிய ஆதாரங்களின் ஊடான ஒரு எண்ணம் அல்லது ஒறுவரின் நம்புதல் ஆகும்.
 
பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது என்பதை. யாராலும் மறுக்க முடியாது காரணம் 
பிரபாகரனுக்கு அரசியல் தெரியும் என்று யாராலும் நிறுவ முடியாது. 
அரசியல் பற்றிய தெரிவை ஒரு அளவு கோலால் அளக்க முடியாதவரை. வேதாந்த தனமான கருத்துக்களை யாருக்கும் பிரயோசனமற்ற ஒரு வாந்தி தனத்தை முன்னெடுக்க முடியும்.
 
அது மேல் இருக்கும் கருத்தில் நிறையவே இருப்பதால் அது பற்றி எழுத தேவை இல்லை.
 
"பிரபாகரனுடைய" புலிகளின் ராஜதந்திர அரசியல்தான் 30 வருட காலம் எந்த நாட்டின் உதவியும் இன்றி அயல் நாடான ஒரு வல்லரசு நாட்டுடன் நேராக போராடிக்கொண்டும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உலக மேடைக்கு கொண்டு சென்றது. பல மில்லியன் டொலர் செலவில் உளவு படையை இயக்கிகொண்டிருக்கும் இந்தியாவும். இராணுவ ரீதியான தந்திரோபாயங்களை இலங்கைக்கு கொடுத்து கொண்டிருந்த உலக தரமிக்க இஸ்ரேலின் மொசாத்  உளவு படையும். புலிகளின் தலைமையை தகர்த்து விட்டால்  இந்த புலிகளை சிதறடித்து விடலாம் எனும் எண்ண கருவை 1987ஆம் ஆண்டே கொண்டிருந்தன. 
இதை இலங்கை இராணுவமும் .... இந்திய இராணுவ அதிகாரிகளும் எழுதுகிறார்கள்.  
பல கோடி ரூபாய் செலவில் முப்படைகளை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தை ...... வெறும் மக்களின் உதவியுடன்  முகாம்களில் முடக்கி வைத்து கொண்டு பாரிய இராணுவ அழிவையும் கொடுக்க முடிந்தது என்றால். அது வெறும் இராணுவ பலத்தால் முடிய கூடிய ஒன்றல்ல ............. அப்படி நடந்ததுமில்லை.
ஓவரு காலகட்டத்திலும் புலிகளை குறுக்கு வழியில் வீழ்த்தி விட நடத்தபட்ட அரசியல் நகர்வுகளை யாரும் எதிர்பார்க்காத  முடிவுகளால் புலிகள் முறியடித்து நகரும்போதுதான். போர் திணிக்க பட்டது.
 
தமது தலைமைதான் தமது ஒரே பலம் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கி அதற்கு செயல் வடிவம் கொடுத்து  அதை ஒரு 30 வருட காலம் தக்க வைத்தார்கள் என்பதுதான் ராஜதந்திர அரசியல்.
புலிகளின் இராணுவ பலம் என்பது கூட ..... அவர்களின் மன தைரியத்தையும் தியாக உறுதியையும் தவிர்த்தால்  வேறு ஏதும் இல்லை என்பதுதான் உண்மை.  தனக்கு நோகாமல் புலிகள் தமிழ் ஈழம் எடுத்து தர  அதில் எந்த கெடுபிடியும் இல்லாமல்  கால் நீட்டி வாழலாம் என்று நினைத்து கொண்டிருந்த நபர்களுக்கு விடுதலை போராட்டம்  சில இடையூறுகளை செய்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 
 
இவளவு காலமும் எழுதிகிறோம் .... இவளவு காலமும் கத்துகிறோம் என்பதில். முழுமையான உண்மை நிறைந்து இருக்கிறது. யாருக்கும் புரியாததை இல்லாத ஒன்றை எவளவு காலம் கத்தினாலும் முடிவு இதுதான். இன்னுமொரு 30 வருடம் ஆயுள் மட்டும் கத்திவிட்டு ..... 60 வருடமாக கத்துகிறோம் என்றும் கூச்சல்  இடலாம். துரதிஸ்ட வசமாக ஆகபோவது ஒன்றுமில்லை என்பது கல்வெட்டு எழுத்து போன்ற உண்மையாகும்.
என்ன கத்துகிறார்கள் என்றுதான் யாரும் பார்ப்பார்கள் ... எவளவு காலம் கத்துகிறார்கள் என்று யாரும் பார்ப்பதில்லை.
 
"பிரபாகரனுக்கு அரசியல்  தெரியாது"
இதை ஒரு மனிதன் சொன்னால்.... அது அவனுடைய கருத்தாக அல்லது அவனுடைய நம்பிக்கையாக இருக்கும்போது. அது ஏன் என்று தனது ஆறாம் அறிவை உபயோகித்து எழுத வேண்டும். 
இந்த காலகட்டத்தில் இப்படியொரு நிலைமை வந்த போது ........ இந்த அரசியல் தந்திரத்தால் இதை சாத்தித்திருக்க  முடியும். அப்படி என்று எழுத வேண்டும்.
"அந்த அரசியல் தந்திரம்" எவளவு ஆதாரம் ஆனது என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
 
ஆறாம் அறிவு செயல்பாடு குன்றியவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் போன்று. இராஜீவ் காந்தியை  கொல்லாது  விட்டிருந்தால் இந்திய ஈழம் கொடுத்திருக்கும் என்று. எந்த பகுதைவுமின்றி  எழுத கூடாது. இராஜீவ் காந்தியே புலிகளை கொல்ல  போய்தான் ... புலிகளின் இலக்கானார் என்பது உண்மையாக இருக்கும்போது. இராஜீவ் காந்தியை அயல் நாட்டின் பிரதமாராக வைத்துகொண்டு புலிகளால் விடுதலை போரை  தொடர்ந்திருக்க முடியுமா? அப்படி என்ற சிறு பிள்ளைக்கே இருக்க கூடிய கேள்வி கூட இல்லாத. கருத்துக்களை  ஆறாம் அறிவு செயல்பாட்டில் இருக்கும் ஒருவரால் முன்வைக்க முடியாது.
 
"பிரபாகரன்" என்பது ஒரு தனிமனிதன் அல்ல ...... எனது  இனத்தின் அடையாளம். பிரபாகரன் என்பது ஒரு கோட்பாடு. அதற்கு எதிரான எண்ணம் இருந்தால் ..... அதை நிறுவு. என்று  தட்டி கேட்க வேண்டியது. பிரபாகரன் எனும்  கோட்பாட்டை நம்பியவர்களால்   கேட்க படுவது சாதாரணம் ஆனது.
அதுக்கும் இது ஒரு கருத்து களம் என்பதால்.......
கேட்டே தீர வேண்டும்.
 
(தங்களுக்கே நம்பிக்கை இல்லாத ஒன்றை நீங்கள் நம்புங்கள் என்று திணிக்கும்போது. இந்த கேள்விகள் வருகின்றது என்பதை ஐயா நியனி அவர்கள் கருத்தில் எடுப்பாராக) 

நான் கூறியது காலம் காலமாக வீர வசனங்கள் பேசி மக்களை மேடைகளில் உசுப்பேற்றி போராட தூண்டிவிட்டு பதவிகளை பெற்று   தாங்களும் தங்கள் பிள்ளைகளுக்காவும்  சுகபோக வாழ்க்கையை தேடிய தமிழ் மாபெரும் தலைவர்களையும் ஒரு  விடுதலைப் போராளியாக  கொள்கை நேர்மையுடன் தனது குடும்பத்தையே அர்பணித்த  பிரபாகரனையும் பற்றிய ஒரு ஒப்பீடு மட்டுமே. அதைத்தவிர விடுதலை போராட்டம், விடுதலை புலிகள் மற்றும் அதன் வெற்றிகள் தோல்விகள், போராட்டத்தவறுகள்  தொடர்பான  தொடர்பான விமர்சனம் அல்ல.  அதைப்பற்றி  நேர்மையுடனும் இதய சுத்தியுடனும்  எவர்மீதும் காழ்புணர்ச்சி இல்லாமலும்  விமர்சிப்பதானால் பல விடயங்களை அலசி ஆராய வேண்டும். தங்களை போல புலி எதிர்ப்பு மனநிலையுடன் அதை செய்ய முடியாது.

பிரபாகரனுக்கு இருந்த அந்த கொள்கை நேர்மை அர்ப்பணிப்பில் ஒரு இருபத்தைந்து  வீதம்  மட்டும் தமிழ் அகிம்ஸை தலைவர்களுக்கு இருந்திருந்தால் ஆயுத போராட்டமே ஆரம்பித்திருக்காது. மெத்த படித்த அந்த அறிஞர் குழாம் தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கி கொடுத்திருக்கும். இதுவும் யதார்த்தமே.

கேம்பிறிஜ். ஒக்ஸ்போர்டில் அரசியல். சட்டம் படித்த கலாநிதிகள், இரட்டை கலாநிதிகள் பட்டம் பெற்ற அரசியல்வாதிகளுக்கே அரசியல் ராஜதந்திரம் தெரியாமல் 30 வருடங்கள் (1948 -1977) வீணாக்கி  வீர வசனங்கள் மேடையில் பேச  மட்டும் தெரிந்திருந்த போது  ஒரு போராளியான பிரபாகரனுக்கு எப்படி?

தமிழ் சூழலி்ல் நீங்களை கூறியது போல் அரசியல் தெரிந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால் அவர்கள் மட்டும் வெற்றி பெறுவார்கள். மக்கள் அல்ல.

அப்ப ராஜபக்சா விமர்சனம் செய்யும் போதும் இதய சுத்தியுடனும் காழ்புணர்வு இல்லாமலும் சிங்கள அரச எதிர்ப்பு மனநிலையுடன் அதை செய்ய முடியாது என்பீர்களா ?

சிங்கள அரசு எமது எதிரி  அதற்கெதிராக போராட எமது போன இயக்கங்கள் விட்ட பிழைகளைத்தான் விமர்சனம் செய்கின்றோம் .புலிகளை விமர்சனம் செய்யும் போது மட்டும் புலி ஆதரவாளர்களுக்கு அதை தாங்கமுடியாமல் இருக்கு .

போராட்டம் ஏன்  தோற்றது,அதற்காகான காரணங்கள் எவை என்று ஆராயும்போது புலிகள் ,அவர்களின்  அரசியல் விமர்சனதிற்கு  உள்ளாவது தவிர்க்க முடியாதாது .குழந்தைதனமாக அவர் வெளிநாடு போயிருந்தால் குடும்பத்துடன் சந்தோசமாக இருந்திருக்காலம் என எழுதுகின்றீர்கள் .இது போராட போன அனைவருக்கும் பொருந்தும் .( அமீர் ஏன் சூடு வாங்கிசாகவேண்டும் அவரும் வெளிநாடு போயிருக்கலாம் தானே )

முப்பது வருடம் ஆயுத போராட்டம் ,ஊடக அதிகாரம் ,புலம் பெயர் அமைப்புகள் என்று அவர்களின் பரப்புரையிலேயே ஊறியதால் பலருக்கு அதைவிட்டு வெளியில் வந்து சிந்திக்க முடிவதில்லை ,அவர்கள் செய்த தாக்குதல்களும் தியாகங்களும் தான் எல்லாவற்றையும் விட முன் நிற்கின்றது .இந்த தியாகங்கள் எல்லாம் தமிழரின் விடிவிற்காத்தான் ஆனால் அவை வீணாகும் போது அதை விமர்சிப்பது தவிர்க்கமுடியாமல் போகின்றது .

எமது நாடு எமது மக்கள் சார்ந்த ஒரு போராட்டம் என்ற அக்கறை இருப்பதால்தான் புலிகளை விமர்சிக்க   வேண்டிய தேவை வருகின்றது  அதைவிட்டு  நானும் ஒரு விசுவாசியாக காட்டிக்கொண்டு எவனாவது அழிந்து தொலையட்டும் என்று இருக்கலாம் .

குறிப்பு -பிழை விடுபவர்களை விட தமது தேவைக்கு அதை ஆமோதிப்பவர்களும் அதை பார்த்துக்கொண்டு மௌனமாக இருப்பவர்களும் தான் உலகில் அதிகம் .(இந்தியா அதற்கு மிக நல்ல உதாரணம் )

புலிகள் மேற்கொண்டது ஒரு இனத்திற்கான விடுதலை போராட்டம்....
 
அந்த போராட்டம் ஏன் தோற்றுப்போனது என்ற கேள்வி ஓவரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். 
அப்படி ஒரு கேள்வி இல்லாதவன் தமிழனாகவே இருக்க முடியாது.
 
"புலிகளால்தான் தோற்றுபோனோம்" அதை எடுத்த எடுப்பில் யாராலும் மறுக்க முடியாது என்பதால் அது உண்மை என்று ஆகிவிடாது. 
புலிகள் தமிழ் இனத்தின் விடுதலை போரை தமது உயிரை கொடுத்து நடத்திகொண்டிருந்த கடந்த 30 வருட காலம் தமிழ் இனம் என்ன செய்துகொண்டிருந்தது?
கல்விமான்கள்  கவரிமான்கள் கஸ்துரிமான்கள் எல்லாம் இராணுவ பதவி நிலைகள்போல். புலிகளால் சுடப்படும்போது அவர்களுக்கு கொடுக்கபட்டது. புலிகள சுடுவதற்கு முன்பு இந்த மான்கள்  எல்லாம் என்ன செய்துகொண்டிருந்தது??
1987 ஆம் ஆண்டில் இருந்து புலிகள் ஊருக்கு ஊர் மேடை போட்டு சொன்னார்கள்.....  மக்கள் போராட்டம் ஒன்றுதான் எமது விடுதலையை நிர்ணயிக்கும். இராணுவ போரால் இராணுவத்தை முகாம்களில் முடக்க மட்டுமே முடியும் .......... போரை நீள்வடைய செய்வதே எதிரியின் திட்டம் ... அதன் மூலம்தான் தமிழ் இனத்தை   அழிப்பது எனும் அவனின் எண்ணம் ஈறேடும் என்று சொன்ன போதெல்லாம். தமது விடுதலை பற்றி இனம்  சிந்தித்ததா?
முள்ளி வாய்க்கால் மக்களுக்குத்தான் புதிது. புலிகளுக்கு அது புதிதாக இருக்க வாய்ப்பில்லை................. அதைவிட  ஆழமான வாய்கால் களையே பல தடவை தாண்டி வந்திருக்கின்றார்கள். மீண்டு வந்த போதெல்லாம்  அவர்கள் சொல்லிவந்தது .... நாம் உயிரோடு இருக்கும் வரைதான் போராட முடியும் என்றதுதான். 
 
அதைவிட முக்கியமானது பூகோள அரசியல் ஆனது. பொருள்வாத முதலாளித்துவம் என்பது இன்று  ஆப்ரிக்க குக்கிரமங்களையே  தொட்டு நிற்கும்போது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை அதற்குள் சதுரங்க  காய்கள் என்றாவது தவிர்க்க முடியாமல் போனதொன்று. அப்படி தவிர்க்க வாய்ப்பு இருந்திருப்பின்  ...
அதை விளக்கங்கள் ஊடாக எழுத வேண்டும்.
 
புலிகள் எமது பிள்ளைகள் .... தமிழன் என்று தன்னை எண்ணுபவன் யாருக்கும் அவர்களை கண்டிக்கவும் தண்டிக்கவும்  உரிமை உண்டு. அதே இருக்கும்போது இந்த விமர்சன பூச்சாண்டி .... தீண்டாமையை உருவாக்கிய  பூசாரிகளின் பூச்சாண்டி போன்றதொன்று. ஆறு அறிவு எங்கு செயற்பாட்டில் இல்லையோ அங்கே அதை  நன்றாக வள வைக்க முடியும்.

சிங்களவன் பிரபாகரனை ஒரு  worst level reference point ஆகா தான் காட்டுகிறான் .. எங்களுக்கு அதிலே நிறைய சந்தோசம்...சிங்களவன் பிரபாகரனை மதிக்கிறான் என்று... :)

சிங்களவனை பொறுத்தவரையில் பிரபாகரனை விட கேவலமான ஆள் இருக்க முடியாது... இப்போ ராஜபக்ஷே குடும்பம் பிரபாகரனை விட தாழ்ந்தவர்கள் என்று...(மேற்கு நாடுகள்  Hitler, Saddam, Gaddafi போன்றவர்களை "மதிப்பது" போன்று)

Edited by naanthaan

  • தொடங்கியவர்

அப்போ ஏன் சிங்களவர் பிரபாகரனின் வீத  மண்ணை எடுத்து போனாஅர்கள் மாறாக காறித்துப்பாமல்?? உங்களின் லெவலில் சிங்களவரை எடை போடுகிறீர்கள். :)  கொழும்பில் குண்டுகள் வெடித்த போது சிங்களவர்கள் சொன்னது அது மகிந்தவின் ஆளாக அல்லது இராணுவ இலக்காக தான் இருக்கும் என்று. அவ்வளவுக்கு அவர்களுக்கு பிரபாகரனில்(புலிகளில்) நம்பிக்கை சிங்கள மக்களில் கை வைக்க மாட்டார்கள் என்று.

புலிளை பற்றி நல்லாதாக விமர்சனம் வைக்காத சம்பந்தன் தலைமைதான் நாட்டில் தேர்தலில் வென்றது .கஜேந்திரன் கோஷ்டிக்கு கட்டு காசும் இல்லை .

புலிகளை அந்த மாதிரி வாங்கு வாங்கென்று வாங்கிய ஜெயலலிதாதான் தேர்தலில் வென்றார் .சீமான் ,வைகோ நெடுமாறன் கட்டு காசு எடுப்பார்களோ தெரியவில்லை .

புலபெயர் நாடுகளில் புலிகளின் பேச்சாளராக இருந்தவர்கள் நசனல் போஸ்ட் கட்டுரை வெளிவர அவர்களுக்கும் எமக்கும் தொடர்பே இல்லை என்கின்றார்கள் .

இதுதான் யதார்த்த அரசியல் ,அதைவிட்டு பேப்பர்ல பெயர் வரவேண்டும் என்று இப்ப அறிக்கை விடுபவர்களை பார்த்து இப்பவும் அச்சாணி ,பிரியாணி என்று கொண்டு . :icon_mrgreen:

உந்த ஆளை உள்ளுக்க போட்டதிற்கே கேட்க ஆளில்லை ,உவர் தரவளிகள் தான் இப்ப புலிகளை வைத்து அரசியல் செய்கின்றார்கள் .

ஏன் ஆனந்தி புளட்டோ?? ஒருக்கால் சம்பந்தரை சுயேட்சையில் நின்று வெல்ல சொல்லுங்கள் பார்ப்போம்.

யதார்த்த அரசியல் என்றால் தாடியை தடவிக்கொண்டு தோழர் என்பதோ?? :icon_mrgreen:  :icon_mrgreen:

நுனாவிலான் ரொம்ப புல்லரிக்க வைக்காதீங்கோ....நீங்களே சொல்லுறீங்கள் சிங்களவர் எல்லோருமே தமிழரை அழிக்க/அடக்க எப்போதும் ஆதரவு என்று....

அப்போ பிரபாகரனின் காலடி மண்ணெடுத்து பொட்டு வைக்கும் சிங்களவன் மட்டும் எப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவன் பிரபாகரனை ஒரு  worst level reference point ஆகா தான் காட்டுகிறான் 

எதை ஆதாரமாக வைத்து இதனை சொல்கிறீர்கள்??

அப்ப ராஜபக்சா விமர்சனம் செய்யும் போதும் இதய சுத்தியுடனும் காழ்புணர்வு இல்லாமலும் சிங்கள அரச எதிர்ப்பு மனநிலையுடன் அதை செய்ய முடியாது என்பீர்களா ?

 .குழந்தைதனமாக அவர் வெளிநாடு போயிருந்தால் குடும்பத்துடன் சந்தோசமாக இருந்திருக்காலம் என எழுதுகின்றீர்கள் .இது போராட போன அனைவருக்கும் பொருந்தும்

நிச்சயமாக அர்ஜுன்  ராஜபக்சவை விமர்சனம் செய்யும் போதும் அந்த இதய சுத்தியும் காழ்புணர்வு் இல்லாமலும் விமர்சனம் செய்யவேண்டும். தனியே சிங்கள இனத்தின் மீதான காழ்புணர்வுடன் விமர்சனம் செய்ய கூடாது.ராஜபக்ச என்ற மனிதரில் உள்ள வெறுப்பு காரணமாகவும் விமர்சனம் கூடாது.  அவர் தமிழர் என்ற தனது நாட்டில் வாழும் இனத்திற்கு எதிராக செய்த இன அழிப்பு நடவடிக்கைகளையும்  இன ஒடுக்கு முறைகளை விமர்சனம் செய்யலாம். அதேபோல் பிரபாகரன் சிங்கள இனத்தை அடிமைப்படுத்தும் ஒடுக்குமறைகளை செய்திருந்தால் அதையும் விமர்சனம் செய்யலாம்.  ஸ்ரீலங்கா அரச எதிர்ப்பு மனநிலையிலும் விமர்சனம் இருக்க கூடாது. விமர்சனம் என்பது நல்லதையும் கெட்டதையும் ஆய்வு செய்யும் அறிக்கையாகும். தனியே காழ்புணர்வுடன் சேற்றை வாரி இறைப்பதல்ல.   இந்த சிறிய விடயம் கூட தெரியாமல் இருக்கின்றீர்களே.

மற்றது பிரபாகரன் வெளிநாடு போயிருந்தால் குடும்பத்துடன் சந்தோசமாக இருந்திருக்காலாம் என்று நான் எழுதவில்லை.  நான் எழுதியதை கவனமாக வாசியுங்கள். சுயநலத்துடன் சிந்தித்திருந்தால் தனது இளைய பிள்ளைகளையாவது  வெளிநாடு அனுப்பியிருக்கலாம் என்றே கூறியிருந்தேன். இளைய பிள்ளைகளை வெறு ஒரு நாட்டிற்கு அனுப்பகூடிய சக்தி அவருக்கு இறுதிக் கணம் வரை  இருந்தது. அவர் கண் அசைத்திருந்தால் அவரது பிள்ளைகளை ஆபத்திற்கு மத்தியிலும் தமது உயிரை பயணம் வைத்து வெளியே கொண்டுபோய் விட்டிருப்பார்கள் அவர் அதை செய்ய விரும்பவில்லை. தனது பிள்ளைகளுக்காக தனது அதிகாரத்தை துஷ்பியோகம் செய்ய விரும்பவில்லை என்பதையே கூறியிருந்தேன்.  தமிழீழம் என்று காலாகாலமாக  வீரவசனம்  பேசிய அமிரின் எல்லா பிள்ளைகளையும் அவர் வெளிநாட்டிற்கு ஏற்கனவே அனுப்பிவிட்டிருந்தார். அவர் மட்டுமல்ல கிட்ட தட்ட எல்லா புத்திஜவி தமிழீழ பிரச்சாரார பீரங்கிகளும் அப்படியே செய்தார்கள்

மற்றயது புலிகளின் விடுதலை போரட்டதவறுகளை விமர்சிக்கும் உரிமை தமிழருக்கு உண்டு என்று நினைப்பவன் நான். நானே இங்கு யாழ்களத்தில் ஒரு முறை அல்ல பல முறை விமர்சித்திருக்கின்றேன். ஒர  பலருடன் விவாதமும் செய்திருக்கின்றேன். ஒரு போராட்ட தலைவர் என்ற முறையில் அவரின் பலத்தையும் பலவீனங்களையும், தவறுகளையும்  விமர்சிக்கும் உரிமை சகலருக்கும் உண்டு.

உலகின் எந்தப் பெரிய கெட்டவன் என்றாலும் புலிகளின் எதிரி என்ற ஒரே காரணத்திற்காக அவனை விமர்சிக்காமல் மெளனம் காக்கும், சிலவேளை  வக்காலத்தும் வாங்கும் ஆராதிக்கும் நீங்கள் பிழை விடுபவர்களை ஆமோதிப்பவர்கள் பற்றி கூறியுள்ளது நகைப்புக்கிடமாது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அன்பரே அர்யுன்! நீங்கள் உண்மையானவர்..! அதனால் எந்நேரமும் சூடாகவே கொதிநிலையிலும் இருக்க முடிகிறது..!! கனடாவின் கடும் குளிரினால்க் கூட உங்களை உறையவைக்க முடியவில்லை....? நீங்கள் உண்மையானவராக இருப்பதன் இரகசியம் சூரியத்தேவனின் கதிர் வீச்சா.?? :):D   

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே நாங்கள் தொடர்ந்து எழுதுகின்றோம் பிரபாகனுக்கு அரசியல் தெரியாது என்று .தனி மனிதன் தனது வாழ்க்கையை எப்படியும் நடத்தலாம் ஒரு இனத்தின் தலைவன் என்பவன் சர்வதேச யதார்த்த உலக அரசியலை  புரிந்துகொள்ளவேண்டும் .தனது நேர்மைக்கும் உண்மைக்கும்  தன்னை அழிக்க அவருக்கு உரிமை இருக்கு , நம்பி வந்த போராளிகளையும் பொதுமக்களையும் பலி கொடுக்க அவருக்கு எதுவித உரிமையும் கிடையாது .

அதாவது

முள்ளிவாய்க்கால்வரை

அர்யூன் அண்ணா

புலிகளையும் தலைவரையும்

தமிழினத்தின் தலைவராகவும்

போராளிகளாகவும் மதித்தார்

முள்ளிவாய்க்கால் அழிவுக்குப்பின் தான் அவருக்கு  எதிர்க்கருத்தும்

கோபமும்  உண்டு

யாழில் இதற்கான சாட்சியத்தை தேடினேன்  கிடைக்கவில்லை

யாராவது கண்டால்

இங்கு இணைத்தால்

எம்மை   நாம்  திருத்திக்கொள்ளபெரும் உதவியாக இருக்கும்.............. :(  :(

அவர்

வெள்ளைத்துணியுலுள்ள ஒரு கறுப்பு புள்ளியைப்பார்க்கும் அறிவுயீவி... :(  :(  :(

இதைத்தானே நாங்கள் தொடர்ந்து எழுதுகின்றோம் பிரபாகனுக்கு அரசியல் தெரியாது என்று .தனி மனிதன் தனது வாழ்க்கையை எப்படியும் நடத்தலாம் ஒரு இனத்தின் தலைவன் என்பவன் சர்வதேச யதார்த்த உலக அரசியலை புரிந்துகொள்ளவேண்டும் .தனது நேர்மைக்கும் உண்மைக்கும் தன்னை அழிக்க அவருக்கு உரிமை இருக்கு , நம்பி வந்த போராளிகளையும் பொதுமக்களையும் பலி கொடுக்க அவருக்கு எதுவித உரிமையும் கிடையாது .

அண்ணா,

புலிகள் கெரில்லா அமைப்பு. கெரில்லா அமைப்பின் தொழில் பீதி கிழப்புவது. அவர்களின் குறிக்கோள் அரசியல் இல்லை.

உங்களின் கேள்விபடி பார்க்க போனால் ஜெயலலிதா, சம்பந்தன், சீமான் போன்றோர் அரசியல்வாதிகள். அவர்களுக்கும் கெரில்லா அமைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

இப்போது சிறி லங்காவை திட்டி, யாழ்பாணம் போய் புலியின் மனைவியை சந்திப்பது தான் நடக்கிறது.

உங்கள் வாழைபழ கொலை அரசியல் வேந்தரிடம் யாராவது செல்கிறார்களா?

புலிகளை அழிக்க துணை போனவர் அல்லோ கூட விருப்பு வாக்கு பெற்றிருக்கவேண்டும்?

மற்றும் உங்கள் கடைசி வரி உங்களது இராணுவ, அரசியல் அறிவின்மையை காட்டுகிறது.

பொதுமக்களை கொன்றது உங்களது இராணுவம்.

போராளியின் உயிரை பலியெடுக்க இராணுவ தலைமைக்கு உரிமை இல்லையா? (அண்ணா, உங்களுக்கு எங்களை கழுத்தறுத்து கொல்ல உரிமை இருக்கு)

அப்படியென்றால் கனடிய ஜெனரலும் பிரபாகரன் போல் குற்றவாளிதான். உடனே இராணுவம் இல்லா நாட்டுக்கு கள்ளத்தோணியில் கிழம்ப வேண்டியது தான்.

நசனல் போஸ்ட் பிளாக் $100 மில்லியன் டொலரை களவெடுத்துவிட்டு தனக்கு தெரியாது என்று சொன்னது உங்களுக்கு தெரியாதா?

ராஜபக்சே ஏன் டொரொண்டொ வர பயப்படுறார் என்று கேட்டால் பதிலே சொல்லாமல், லெபனான் பயிற்சியை பாவித்து வேலி பிரித்து கோடியால் விழுந்து ஓட உங்களுக்கு மட்டும் உரிமை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கடும்போக்காளர்களும்.. பேரினவாதிகளும்.. அரசியல்வாதிகளும்.. சிங்களப் படைகளும்.. பிரபாகரன்  மீது கடுப்பாக இருந்தாலும்.. தமிழ் அமைப்புக்களால்.. பாதிப்புக்களைச் சந்திக்காத சாதாரண சிங்கள மக்களும்.. நியமாகவே படித்த உலக நடத்தைகளை உணர்ந்து கொண்ட சிங்கள மக்களும்.. பிரபாகரனை மதித்தார்கள்.

இங்கு.. ஒருவர் சொல்வது போல.. பிரபாகரனை ஒரு மட்டமான எடுத்துக்காட்டுக்காக சிங்களவர்கள் எல்லோரும் பாவிக்கிறார்கள் என்பது மகா தவறு. இதனை சொல்ல முடிவதுக்கு காரணம்.. இதே சிங்கள மக்களோடு.. 8 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து அவர்களோடு கூடிப் பழகிப் படித்த...அனுபவத்தில்.

சிங்கள மக்கள் மத்தியிலும் அவர்களை ஆள்பவர்களின் போக்கினை.. வெறுக்கும் குறிப்பிடத்தக்க அளவினர் உள்ளனர். :icon_idea:

அன்பரே அர்யுன்! நீங்கள் உண்மையானவர்..! அதனால் எந்நேரமும் சூடாகவே கொதிநிலையிலும் இருக்க முடிகிறது..!! கனடாவின் கடும் குளிரினால்க் கூட உங்களை உறையவைக்க முடியவில்லை....? நீங்கள் உண்மையானவராக இருப்பதன் இரகசியம் சூரியத்தேவனின் கதிர் வீச்சா.?? :):D   

உண்மைதான் பாஞ்ச் ,

வெறுமன இணையத்தில் தேசியம் கொட்டிவிட்டு மிக சுயநலமாக இருப்பவர்கள் தான் அதிகம் .மாறாக கொஞ்சம் சமூக அக்கறையுடன் எமது மக்களின் விடிவு பற்றி உண்மையாய சிந்திப்பவர்கள் சிலர் தான் .

அண்மையில் தேசியம் கொட்டோ என்று கொட்டும்  எனது நண்பர் 91 ஆம் ஆண்டு இலங்கையில் நண்பர்களுடன் எடுத்த படத்தை காட்டினார் .நான் கேட்டேன் பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரம் எப்படி புலிகளில் சேராமல் இருந்தீர்கள் என்று ?

புலம்பெயர்ந்த பின் தான் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதாம் .எம்மவர் நோகாமல் நொங்கு சாப்பிடுவதில் வல்லவர்கள் (யாழை பார்த்தால் தெரியும் எத்தனை பேர் அதே காலகட்டத்தில் நாட்டை விட்டு ஓடிவந்து இப்போ தேசியம் கொட்டுகின்றார்கள் ).

புலிகள் போற போக்கில் தாமும் அழிந்து மக்களையும் அழிய பண்ண போகிறார்கள் என்று பலர் தொடர்சியாக குரல் கொடுத்துத்தான் வந்தார்கள் ,அவர்களை துரோகிகள் ஆக்கி ஒவ்வொரு கொலைக்கும் விசில் அடித்துகொண்டிருந்தவர்கள் முள்ளிவாய்காலின் பின் நீலிகண்ணீர் வடிக்கின்றார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது

முள்ளிவாய்க்கால்வரை

அர்யூன் அண்ணா

புலிகளையும் தலைவரையும்

தமிழினத்தின் தலைவராகவும்

போராளிகளாகவும் மதித்தார்

முள்ளிவாய்க்கால் அழிவுக்குப்பின் தான் அவருக்கு  எதிர்க்கருத்தும்

கோபமும்  உண்டு

யாழில் இதற்கான சாட்சியத்தை தேடினேன்  கிடைக்கவில்லை

யாராவது கண்டால்

இங்கு இணைத்தால்

எம்மை   நாம்  திருத்திக்கொள்ளபெரும் உதவியாக இருக்கும்.............. :(  :(

உவரை போல ஆட்களுக்கு புளட்டில் ஊட்டி வளர்த்ததே புலி எதிர்ப்பு வாந்தி தான்.உருப்படியாக ஒன்றும் செய்ததும் இல்லை .செய்யப்போவதும் இல்லை. ஆக புலிகளை விமர்சிக்கிறோம் என்று வசை பாடியதை இவரின் 99.9 வீதமான கருத்துக்கள் சான்று பகிரும். புலிகளின் வீழ்ச்சி இவரை போன்றவர்களுக்கு புலி வாந்தி எடுக்க  வாய்ப்பாகியது மட்டுமில்லாமல் விழுந்த  மாட்டுக்கு குறி சுட வல்லவர்கள் இவர்கள் என்பதையும் இனம் காட்டி நிற்கிறது.

சிங்களவன் பிரபாகரனை ஒரு  worst level reference point ஆகா தான் காட்டுகிறான் .. எங்களுக்கு அதிலே நிறைய சந்தோசம்...சிங்களவன் பிரபாகரனை மதிக்கிறான் என்று... :)

சிங்களவனை பொறுத்தவரையில் பிரபாகரனை விட கேவலமான ஆள் இருக்க முடியாது... இப்போ ராஜபக்ஷே குடும்பம் பிரபாகரனை விட தாழ்ந்தவர்கள் என்று...(மேற்கு நாடுகள்  Hitler, Saddam, Gaddafi போன்றவர்களை "மதிப்பது" போன்று)

புலிகளால்  கொல்லப்பட்ட காமினி திசநாயக்கா, அத்துலத்முதலி போன்றவர்களின் வீட்டில் சிங்கள மக்கள் சென்று மண் எடுத்து சென்றதாக  யாரும் சொல்லவில்லை. அப்படி உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.