Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது?

Featured Replies

சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது?

bond_between_brother_and_sister_quotes.j

சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள்.

ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள்.

சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிலையையும் உணர முடியும். தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வுடன் இல்லாத உறவுகளை கொண்ட குடம்பத்தினர்களை உடைய சகோதரர்களின் வாழ்க்கை சற்றே மன வேறுபாடுகளுடனேயே இருக்கும். அதே சமயம், மிகவும் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கும் குடும்பங்களில் உள்ள சகோதரர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.

எனவே தான் ஒரு குழந்தையின் மன மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு சகோதர உறவு முறை மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த கட்டுரையில் சகோதர உறவு முறை ஏன் முக்கியமானதாக உள்ளது என்று நாம் சில கருத்துகளை விவாதிப்போம். இதனை விளக்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

நண்பன், வழிகாட்டி மற்றும் ஆசான்

சகோதரர்கள் தங்களுக்குள் ஆரோக்கியமான உறவை பராமரிக்க வேண்டும். சகோதரர் அல்லது சகோதரிகள் தான் தனிமையில் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் உற்ற நண்பர்களாவார்கள். அவர்கள் உங்களை புரிந்து கொள்வதுடன், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் விளக்கமாக தெரிந்தும் வைத்திருப்பார்கள். நீங்கள் குழப்பத்தில் இருக்கும் வேளைகளில் சகோதரர்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். கடினமான நேரங்களில் ஒரு நல்ல ஆசானாகவும, வழிகாட்டியாகவும் சகோதரர்கள் இருப்பார்கள். இந்த குணங்களை கொண்ட சகோதரர்கள் நண்பர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும் பாசத்துடன் இருப்பார்கள்.

உணர்வு ரீதியான ஆதரவு

சகோதரர்கள் ஒரே மாதிரியான குடும்ப சூழல் மற்றும் மனநிலையில் வளர்க்கப்படுகிறார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த மன மற்றும் கலாச்சார வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்க வகை செய்கிறது. இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்திருக்கவும் உதவுகிறது. இவர்கள் உறவினர்கள் மட்டுமல்லாமல், இருவரும் தங்களுக்குள் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆதரவாக இருக்க முயலுவார்கள். அவர்களுக்குள் சொந்தமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படும் போதும், குடும்ப பிரச்னைகளின் போதும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள்.

புரிதல்

சகோதரர்கள் அல்லது சகோதரிகள் ஒருவரையொருவர் நன்றாக புர்pந்து கொள்வார்கள். நீங்கள் பெரியவராக வளர்ந்த பின்னரும் கூட சகோதர உறவுகளை நன்றாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். ஆதன் மூலம் தனர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் குவலைகளையம், பிரச்னைகளையும் நம்பிக்கையான ஒருவரிடம் மனம் விட்டுப் பேச முடியும். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்வார்கள். உங்களுக்கு சகோதரர்கள் இருந்தால், உங்களை ஊக்கப்படுத்த அலலது ஆதரவு தெரிவிக்க வேறு எவரும் தேவையில்லை.

குடும்ப ஒற்றுமை

குடும்பத்தை ஒற்றுமையுடன் வழி நடத்த சகோதர உறவு மிகவும் முக்கியமானதாகும். சகோதரர்கள் பாசத்துடன் இணைந்திருக்கும் வரையில் குடும்பத்தின் உறவும் நீடித்து ஒற்றுமையுடன் இருக்கும். இதன் மூலம் சகோதரர்கள் தாய் தந்தையரை சந்திக்கவும், அவர்களுடைய குழந்தைகள் மற்ற சகோதரர்களின் குழந்தைகளை சந்திக்கவும் முடிகிறது. குடும்பமாக இணைந்திருத்தல், குடும்பமாக வெளியே செல்லுதல் மற்றும் இரவு உணவு சாப்பிடுதல் போன்றவை இந்த உறவுகளை சகோதர, சகோதரிகளிடம் மேம்படுத்தி வளர்க்கின்றன.

இரத்த பந்தம்

சகோதர உறவுகளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இரத்த பந்தம். ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தங்களுடைய சிறப்பான உறவு முறைகளால், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான குடும்பத்தை பராமரித்து வருகிறார்கள். இந்த இரத்த பந்தம், குடும்ப கலாச்சாரம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றை பாதுகாத்தும், பராமரித்தும் வருவதற்கு சகோதர, சகோதரிகளிடம் நல்ல உறவு முறை இருந்து வர வேண்டும்.

http://raonenews.blogspot.com/2014/02/blog-post_8.html

  • கருத்துக்கள உறவுகள்
இந்தக் காலத்தில் சகோதரமாவது,உற்வுமுறையாவது,பாசமாவது....மண்ணாங்கட்டி :huh:
 
  • தொடங்கியவர்

இந்தக் காலத்தில் சகோதரமாவது,உற்வுமுறையாவது,பாசமாவது....மண்ணாங்கட்டி :huh:

தானாடாவிட்டாலும் தசையாடும் என்று ஏன் சொல்கின்றார்கள் அக்கை :D ??

தானாடாவிட்டாலும் தசையாடும் என்று ஏன் சொல்கின்றார்கள் அக்கை :D ??

அது எல்லாம் இப்ப போலி, அதுவும் புலம் பெயர் நாடுகளில்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறுகடக்கும்வரை அண்ணன் தம்பி. ஆறுகடந்தபின் நீயாரோ, நான்யாரோ. :(

தானாடாவிட்டாலும் தசையாடும் என்று ஏன் சொல்கின்றார்கள் அக்கை :D ??

இது பிள்ளைகள் தாய்ப்பால் குடித்த காலத்தில் எழுதப்பட்டது. புட்டிப்பால் குடிக்கும் இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. :D :D

ஆறுகடக்கும்வரை அண்ணன் தம்பி. ஆறுகடந்தபின் நீயாரோ, நான்யாரோ. :(

இது பிள்ளைகள் தாய்ப்பால் குடித்த காலத்தில் எழுதப்பட்டது. புட்டிப்பால் குடிக்கும் இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. :D :D

தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களும் புலம் பெயர்ந்த பின்பு, புட்டிப்பால் குடித்து வளர்ந்தவர்களை விட மோசம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை மனுசிக்கு சகோதரங்கள்....சகோதரியள் கொஞ்சப்பேர் லண்டன் கனடா அவுஸ்ரேலியாவிலை இருக்கினம்.....அவவுக்கு அதுகளை கண்ணிலையும் காட்டப்படாது....அதுவும் லண்டனிலை இரண்டுபேர் இருக்கிறாங்கள்.....வேண்டாம் சோலி கதையை விடுவம்... :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலகில் மனிதம் கவிண்டுபோய்க் கிடப்பதற்கு உந்த லண்டன்தானே முழு முதற்காரணம். எனக்கும் ஒன்று லண்டனில் இருக்கு. என்னிடமும் எனக்குத் தெரிந்த பலரிடமும் புடுங்கிக்கொண்டு. ஆனால் நல்ல வசதியாய் இருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க.!! :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக யோசித்துப் பார்த்தால் திருமணம் செய்வதற்கு முன் சகோதர உறவுமுறைகள் நன்றாக இருக்கும்.. அவரவர் திருமணங்களை முடித்த பின்.. :unsure:

"நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு??" :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ எல்லா சுத்து மாத்துக்காரர்களும் லண்டனில்தான் வந்து பதுங்கியிருக்கின்றார்கள் என்பது மாதிரியல்லவா தெரிகின்றது! நாங்களும் பிரித்தானியாவில்தான் இருக்கின்றோம். ஒற்றுமையான சகோதரர்களையும் ஊர்க்காரர்களையும் நிறையவே கண்டிருக்கின்றேன்.

என்ன முன்வீட்டில் 10 வருடமாக இருப்பவர்கள் தமிழர்கள் என்றாலும் வணக்கம், ஹலோ சொல்லிக் கதைப்பதில்லை என்பது உண்மைதான். அது கொழும்பு நகரத் தமிழர்களிடம் இருந்து கற்றது மாதிரித் தெரிகின்றது!

எனக்கு நினைவு தெரிந்த வயதில் இருந்து நித்திரையால எழும்பியதும் அண்ணனுடன் சண்டை பிடிப்பதுதான் வேலையாக இருந்தது. ஒருநாள் அது கொஞ்சம் முற்றி அம்மா இரண்டுபேருக்கும் அடிபோட்டு இனிமேல் இருவரும் கதைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டா. தாய் சொல்லைத் தட்டமுடியாத தனயர்களாக இருந்ததால் பல வருடங்கள் நேரடியாகக் கதைத்ததில்லை. இடையில் பாலமாக இருப்பது தம்பிதான். ஆனால் நாங்கள் எப்போதும் சகோதரர்களாகவே இருக்கின்றோம்.

எப்போது கேட்டாலும் என்னை நெகிழச் செய்யும் பாட்டு.

http://www.youtube.com/watch?v=gaXGGYusLfM

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தில் ஒரு சகோதரம் வில்லத்தனத்தோடு இருந்தாலும் போதும்.அந்த குடும்பத்தில் பிறந்த பெண்ணின் நிலை சொல்ல வேண்டியதில்லை...சில குடும்பங்களில் சகோதரங்கள் மற்றச் சகோதரங்களைப்படுத்தும் பாடு பக்கம்,பக்கமாக எழுதலாம்....அப்படியான மனிதர்களிடம் எனக்கு தெரிந்த ஒரே மொழி மௌனம் என்றதால் சமாளிக்க கூடியதாக இருக்கு..எப்போதும் எனக்கு ஒரு அக்கா,தங்கை இல்லையே என்று கவலைப்படுவதும் உண்டு.

அண்ணன் தம்பி சண்டை அடி தடியோடு முடிந்துவிடும். அக்கா தங்கை சண்டை அத்திவாரத்தையே தகர்த்துவிடும். இது நானாக எழுதவில்லை. நகமும் சதையுமாக வாழ்ந்த சகோதரிகளின் சண்டை தந்த அனுபவம் சொல்ல எழுதுவது. :o

ரொம்ப 'பழுத்த பழம்' போலக் கிடக்கு. :o

பாசமெல்லாம் சரிதான், ஆனால் அனைவரும் திருமணமானதும், பெற்றோர்கள் மறைந்தவுடன் குடும்ப சொத்திற்காக வருமே பாருங்கள் சச்சரவுகள், சொல்லிடக்க முடியாது. சாகும்வரை சேராத குடும்பங்கள் பல உண்டு.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கோ

நல்லதொரு தேவையான  பதிவும் வாழ்வும் கூட

இங்கு எழுதிய பலரும் மறுபக்கமாகவே  எழுதியுள்ளனர்

ஆனால் நாம் இங்கு பார்க்கவேண்டியது

சகோதர  உறவு முறை  என்றால் என்ன என்பதும்

அதை எவ்வாறு வளர்த்தெடுப்பதுமென்பதுமாகும்.....

எந்த ஒரு அன்பும்

உறவும்

கொடுக்கல் வாங்கல் கணக்குகளை  வைத்து வரக்கூடாது

அவை அன்பாக  

உறவாக இருக்கமுடியாது

அவையே  தடம்புரள்கின்றன

அன்புக்குள் சுயநலங்கள் புகுவதே

அதனை ஆட்டம் காணவைக்கமுடியும்.

நாங்கள் ஒன்பது பேர்

சகோதரர்கள் என்றால் இப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணமாக உள்ளோம்

எந்த பிரிவும்

எந்த இடைவெளியும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்

பலர் இதற்குள் இடையிட்ட போதும்

எமக்குள் அவற்றை  பேசிக்கொள்ளும் பழக்கத்தால்

அக்கா

அண்ணன்

தம்பி

தங்கை 

ஆகியவற்றுக்கான அவரவருக்கான மதிப்பையும்

அவர்களுக்கான முதல் மரியாதையையும்  கொடுக்க  தவறுவதில்லை.

இன்றும் ஒரு சபையில் 

மேடைக்கு நாங்கள் ஒன்றாக சென்றால்

அவரவர் பிறந்த ஒழுங்கிலேயே நிற்போம்

என்னைத்தாண்டி என் தம்பி  செல்லான்

அவன் மனைவியும்   செல்லார்

அதேபோல்

என் அக்கா  அத்தான்மாரைத்தாண்டி நான் சென்றதில்லை

என் மனைவியும் அப்படியே.முதலில் உறவு முறை  வேண்டுமா  என்பதை நாமும்

நமது நடவடிக்கைகளும்  சொல்லவேண்டும்...........

அத்துடன் சகோதரர்களிடையே  பணக்கொடுக்கல்வாங்கல்களை  முடிந்தவரை  தவிர்க்கணும்

ஒருவருக்கு உதவவேண்டிவரின்

கொடுத்துவிட்டு மறந்துவிடணும்

நான் அப்படித்தான் செய்தேன்...........

அம்மா எப்பொழுதும் பெண் பிள்ளைகள் பக்கம் நிற்பார்

அப்பா

எங்கள் பக்கம் நிற்பார்

ஆனால் பெண் பிள்ளைகள் கண்ணீர்  விட்டால் அப்பாநிலையும் மாறிவிடும்..........

நாம் வெளியில் கண்ணீரைக்காட்டமாட்டோம்

அதை அவர்களும் அறிவர்..... :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக யோசித்துப் பார்த்தால் திருமணம் செய்வதற்கு முன் சகோதர உறவுமுறைகள் நன்றாக இருக்கும்.. அவரவர் திருமணங்களை முடித்த பின்.. :unsure:

"நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு??" :huh::D

100% உண்மை.

கலியாணம் கட்டிற பெண்கள்.. தங்கள் கணவன்மார்களை மட்டும் மாத்திறதில்லை.. அவங்கட சகோதரங்கள்.. தாய் தந்தை சொந்தங்கள்.. மற்றும்.. தங்கட சகோதரங்களையும் எனிமியாக்கிடுகிறார்கள்.

இதில்.. பெண்களின் சூழ்நிலைக்கு அமைய எழும்.. சுயநலத்தால் தான்.. இந்த பேரழிவே...! மற்றும்படி.. வேறு ஒன்றும் காரணமல்ல. தான் தான் அந்த ஆணின் எல்லாத்தையும் அனுபவிக்கனும் என்ற வெறி பெண்களிடம் திருமணத்தின் பின் ஏற்பட்டுப் போகிறது. இது மோசமான ஒரு வெறி ஆகும்.

எங்கள் வீட்டில் கூட.. சின்னனில் இருந்தே நாங்கள் எல்லோரும் மிகவும் ஒற்றுமை. சண்டை என்று வந்ததில்லை. அந்தளவுக்கு.. புரிந்துணர்வுடன் கூடிய சகோதரர்கள். திருமணம் என்று மூத்த சகோதரர்களுக்கு ஆகிச்சு.. அதோடு.. சரி. எங்கிருந்து தான் இந்தப் பெண்களுக்கு ஆட்களை கொழுவி விடுற.. குறை பிடிக்கிற.. மூளை வருகுதோ.. அந்த பிரம்மாவுக்கு தான் வெளிச்சம். அதுவும் அவங்க கண்டுபிடிக்கிற காரணங்கள் கடவுளே.. நாங்க மனசால எண்ணி இருக்க முடியாத கொடுமைகளாக இருக்கின்றமை.. இந்தப் பெண்களை பெற்று வளர்க்கிற பெற்றோர்கள் என்ன விசத்தையா ஊட்டி வளர்க்கிறார்கள் என்று எண்ணவே தோன்றுகிறது.

அண்ணிகள்.. சரியாக அமைந்தால்..கணவர்மாரின்.. சகோதர பாசம்.. கணவர்மாரின் குடும்ப உறவு நல்லா அமையும். அண்ணிகள்.. எங்க.. எல்லாம்.. மோசமான.. உண்ணிகளாக எல்லோ இருக்கின்றன. அதுவும் தமிழ் பெண்கள் கேவலம். :icon_idea::)

இறுதியாக நாங்க எடுத்த முடிவு.. அண்ணிகளோடு.. எந்த விடயத்தையும் பகிர்ந்து கொள்வதும் இல்லை.. நல்லது கெட்டது விசாரிக்கிறதும் இல்லை... எங்கட விசயத்தை நாங்களே தீர்மானிப்பது என்று. அண்ணிகளை.. எனிமியாவே வைச்சுக் கொள்ளுறது என்று. அதன் பின்னர் தான் ஓரளவுக்கு சகோதரர்களிடையே பழைய உறவு நிலையை பேண முடிகிறது. அது போலியோ நிஜமோ.. அதுவே போதும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒன்பது பேர்

சகோதரர்கள் என்றால் இப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணமாக உள்ளோம்

நீங்கள் ஆயிரத்தில் ஒருவர்.! வாழ்த்துக்கள்..!! :):D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆயிரத்தில் ஒருவர்.! வாழ்த்துக்கள்..!! :):D

இதில் பொய்யும் இருக்கலாம் ,கூடப்பிரந்தவர்களை  ஏன் காட்டிக்கொடுப்பான் என்று  :(

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பொய்யும் இருக்கலாம் ,கூடப்பிரந்தவர்களை  ஏன் காட்டிக்கொடுப்பான் என்று  :(

இது தான் பிரச்சினை

இப்ப  நோண்டிக்கொண்டு திரிஞ்சா......

சகோதரம் என்ன

எவனுடனும் உறவோட  இருக்கமுடியாது..... :(  :(

நம்மை திருத்துவம் ராசாக்கள். :D

இந்த திரியை பார்க்க உண்மையில் சகோதர பாசத்தை பற்றி இத்தனைபேர் குறையாக எழுதியிருப்பதை நம்பமுடியவில்லை. ஒரு தாய் வயிற்றில் பிறந்து, ஒரே இரத்தமாக இருக்கும் உறவுகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையா? :o அப்போ வேறு யாரோடு உங்களால் ஒற்றுமையாக இருக்கமுடியும்? :huh: விட்டுக்கொடுப்பும், அனுசரிக்கும் மனப்பான்மையும் இல்லாமையே இதற்கு முதல் காரணம். அண்ணி வந்தபின்பு அத்தான் வந்த பின்பு என்பது எல்லாம் நொண்டி சாட்டுக்கள்....சகோதரங்களுக்குள் உண்மையான உறுதியான அன்பிருந்தால் எவராலும் அந்த அன்பை உடைக்கமுடியாது. வாழ்க்கை மிகவும் குறுகியது இதற்குள் எம் உறவுகளுடன் ஒற்றுமையாக இருக்காமல், போகும் போது எதை கொண்டு போகப்போகின்றோம்? அண்ணா,அக்கா,தம்பி, தங்கை என்று ஒரு பாசக்கயிற்றால் கட்டுண்டு அன்பை மட்டுமே பரிமாறி வாழ்ந்து பாருங்கள் - வாழ்க்கை சொர்க்கம் தான்.

உண்மை.. ஆனால் புலம்பெயர் வாழ்வில், நேரமில்லாமல் (அல்லது இவற்றுக்கு நேரத்தை ஒதுக்காமல்) ஓடிக்கொண்டிருக்கும்போது தவறுகள் ஏற்படுவது சகஜமானது. மனிதன் வளர்ந்து வரும்போது தனக்கு ஏற்படும் அனுபவங்களின் ஊடாகத்தான் தனது நடவடிக்கைகளை ஒருங்கமைத்துக் கொள்கிறான்.

ஊரில் இருக்கும்போது வயதில் பெரியவர்கள் யாழ்கள மட்டுறுத்தினர்கள்போல் இருந்து :D , பிள்ளைகளை ஒருங்கிணைத்து நடத்திச் செல்வார்கள் (பெரும்பாலும்). புலம்பெயர் வாழ்வில் அவை இழக்கப்படும்போது தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. பின்னர் அவற்றை உணர்ந்து திருத்திக்கொல்ள காலம் எடுத்துவிடுகிறது. பிறகு உடைந்த பானை ஒட்டாது என்கிற கதைதான்.

நாங்களும் புலம் பெயர் நாட்டில் தானே இருக்கிறம் இசை அண்ணா? :) ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது ஒரு வீட்டில் எல்லோரும் சந்திப்போம். மனம் உண்டானால் இடம் உண்டு...உண்டு   :)  :D  :icon_idea:

Spoiler
சில வேளை சகோதரங்கள்  ஒன்பது பேராக இருந்தால் தான் ஒற்றுமையாக இருப்பாங்களோ!!!!!! :icon_idea: 

பாரதூரமான புடுங்குப்பாடுகள் இங்கு இல்லை.. ஆனால் மைக்ரோசாஃப்ட் கம்பனி, கூகிள், அமசான் இவர்கள் சந்தித்தால் எப்பிடி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். :lol:

பாரதூரமான புடுங்குப்பாடுகள் இங்கு இல்லை.. ஆனால் மைக்ரோசாஃப்ட் கம்பனி, கூகிள், அமசான் இவர்கள் சந்தித்தால் எப்பிடி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். :lol:

:lol: :lol: இந்த இடைவெளியை இன்னும் குறைக்க இடமுண்டு  :)

இந்த திரியை பார்க்க உண்மையில் சகோதர பாசத்தை பற்றி இத்தனைபேர் குறையாக எழுதியிருப்பதை நம்பமுடியவில்லை. ஒரு தாய் வயிற்றில் பிறந்து, ஒரே இரத்தமாக இருக்கும் உறவுகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையா? :o அப்போ வேறு யாரோடு உங்களால் ஒற்றுமையாக இருக்கமுடியும்? :huh: விட்டுக்கொடுப்பும், அனுசரிக்கும் மனப்பான்மையும் இல்லாமையே இதற்கு முதல் காரணம். அண்ணி வந்தபின்பு அத்தான் வந்த பின்பு என்பது எல்லாம் நொண்டி சாட்டுக்கள்....சகோதரங்களுக்குள் உண்மையான உறுதியான அன்பிருந்தால் எவராலும் அந்த அன்பை உடைக்கமுடியாது. வாழ்க்கை மிகவும் குறுகியது இதற்குள் எம் உறவுகளுடன் ஒற்றுமையாக இருக்காமல், போகும் போது எதை கொண்டு போகப்போகின்றோம்? அண்ணா,அக்கா,தம்பி, தங்கை என்று ஒரு பாசக்கயிற்றால் கட்டுண்டு அன்பை மட்டுமே பரிமாறி வாழ்ந்து பாருங்கள் - வாழ்க்கை சொர்க்கம் தான்.

உண்மைதான் தமிழினி. எனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டுமே இருப்பதால் இதில் அதிகம் எழுதுவது சரியாகாது. ஆனால் என் அனுபவத்தில் சகோதரம் என்பது அருமையான ஒரு உறவு. தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது உண்மை, இன்று வரைக்கும் என் சகோதரி ஒரு நல்ல தோழியாகவே எனக்கு இருக்கின்றார்.

பல வீடுகளில் கணவன் தன் சகோதரத்துக்கு உதவுவதை மனைவி எதிர்ப்பதற்கு காரணம் மனைவியிடம் அது பற்றி கதைத்து தெளிவுபடுத்தாமல் விடுவதே. பல அண்ணிமார்களுக்கு  சகோதரங்களுக்கு காசு அல்லது உதவி செய்வதை அண்ணன்மார்கள் முற்றாக மறைக்க முயல்வதுதான் பிரச்சனையின் மூல காரணமாக இருப்பதைக் கண்டுள்ளேன். அத்துடன் மனைவியின் அப்பா அம்மாக்களும் தேவையில்லாமல் இந்த விடயங்களில் வேலை வெட்டி இல்லாத தம் மூக்குகளை நுழைப்பதும் காரணம்.

எனக்கு ஒரு டவுட் இருக்கு, இந்த தமிழகத்து தொடர் நாடகங்களால் (ரீ வி சீரியல்கள்) எம் மக்கள் அதிகம் பாதிப்புறுகின்றனரோ என்று. 90 வீதமான தொடர் நாடகங்களில் சகோதரங்களை வில்லன்கள் மாதிரிக் காட்டுவதும், சகோதரிகளே சகோதரிகளை வெறுப்பதாகக் காட்டுவதும் வழமை என்று நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.