Jump to content

வா...என்னை வருடு!


Recommended Posts

ஹி..ஹி :icon_mrgreen:

 

இந்தக் கவிதைக்கான உங்களின் ஒட்டு மொத்த reaction னே இதுதானா...? ஹையோ ஹையோ..

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிண்டல் மானிடர்கள் எல்லாரும் இங்கு கோலி விளையாடி இருக்கிறீர்கள்... மகிழ்ச்சியாக இருக்கிறது........ பொறுங்கப்பா எல்லாருக்குமான பதில்களை இரவு பதிவிடுகிறேன்...

 

என்னாமா கிளறியிருக்கிறாங்கப்பா..... :lol:  :lol:  :icon_mrgreen:  :D  இருங்கடி வாறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைச்சீலையை ஆராவது 'உதட்டில' வைப்பாங்களா" ? :D

 

ஏதாவது ' கிழு கிழுப்பான' கதைப் புத்தகமாய் இருக்கும்! :o

 

கிளுகிளுப்பான புத்தகம் என்றால் உதட்டுக்குப் போகுமோ ரோமியோ? :D

சென்ட் பொட்டில்?

கதை எழுதும் பேனா?

 

மல்லை நீங்களுமா ?!! :rolleyes:

சகாறா அக்காவின் வாயில் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

படத்தை பார்த்தாலே புரியல . :icon_mrgreen:

 

எழுதின கதையில சகாறா அக்கா எங்கே வந்தா???? :icon_mrgreen:

புரிஞ்சுது, அர்ஜுன்! :lol:

 

ஆனால், ஆராவது இந்தக்காலத்தில, 'கசியிற' பேனை, அதுவும் படுக்கையறையிலை....! :o

 

அவனவன் விசைப்பலகையில தட்டிக்கொண்டிருக்கிறான்! 

 

இவ மட்டும்...! :icon_idea:

 

ரோமியோ உண்மையைச் சொல்லுங்கோ நாங்க தட்டுற வேகத்திற்கு விசைப்பலகை என்ன வேதனைப்படும்.....அதன் வேதனையில் அதற்கு நம்ம விரல்களில் மோகம் வரும் என்கிறீங்கள்!!!!!!!!!!!!!! :o    

புரிகிறது அருச்சுன். அதுவும் பொருத்தம் போல இருக்கு. அறையில் யன்னல் ஒரம் இருக்கும் ஒரு பூ கண்ரு கூட அந்த விபரங்களுக்கு பொருந்தும் போலிருக்கு.  

 

மேலும் மனத்தில் பல கேல்விகள். எழும். அவ்ற்றுக்கெல்லாம் பதில் வேண்டும். வல்வை கதை எழுதிய பிறக்கு அதற்க்கு ஏன் இந்தக் கவலை?

மேலும் இசை கதையைக்கிழப்பும் வரைக்கும் யாருக்கும் சிந்திக்கவும் தோன்றவில்லைப்போலிருக்கு.

 

இப்பிடி எல்லாரையும் அவரவர் பார்வைக்கு குழப்புவம் என்றுதான் இப்பிடி எழுதி வைத்தனாக்கும் மல்லை. இருந்தாலும் இசையின் ஆவலுக்கு நான் தலை வணங்கத்தான் வேண்டும்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்படியும் கதை எழுதலாமோ? அட சீ எனக்கு தெரியாம போயிற்று ... :D

புத்தன் உங்களுடையவை யதார்த்தமான கிறுக்கல்கல்கள் இது மாயத்தோற்றம்.  :)

அந்தப் பெரிய படத்தைப் பார்த்துவிட்டும்....! அந்த அந்தரங்கத்துக்குள் அலைமோதியதை அறிவதற்கு உறவுகள் படும் பாடு.....!!. அவள் பூத்தகாலம் தொட்டுக் காத்திருந்தவன் துணைவனாகிக் கட்டிலில்...! அவள் துணையின்றி அவன் தூங்கவும் அவள்தான் விடுவாளா..!! :wub:.  விட்டுவிட்டுத் தன் கற்பனை ஊற்றை வடிக்க உன்னைத் தேடுவாளா...? இறக்கையின் வாரிசுவே..?? :o:D

 

இறக்கையின் வாரிசை இப்பிடி அழுவிக்கக்கூடாது பாஞ்ச்.....பாவமெல்லோ.. :rolleyes:

கதையைப் படிச்சுட்டு பேசாமல் போயிருக்கலாம் , நாங்கள் எல்லாம் போகலை...!  இப்ப பாருங்கள் அவ கைதட்டிச் சிரிக்கிறா ...! :D

 

இதுக்குள்ள இனியென்ன மிச்சம் கிடக்கு...!

 

 

இஞ்ச பாருங்கோவன் நாம சிரிக்கிறதைப் பாத்திட்டு சும்மா போற மனுசனை எப்பிடிச் சீண்டி விடுறார் என்று......சுவியண்ணை இது நல்லா இல்லை.... :D  :icon_mrgreen:

உங்களுக்காக இப்படி ஏங்கும் அதனை இப்படி தவிக்கவிடலாமா அக்கா???  

அதை திருப்திப்படுத்தினால்தான் எங்களுக்கும் திருப்தியாய் இருக்கும்...!

புனைவு அருமை!  நிறைய எழுதுங்கோ..... அக்கா! 

 

புனைவு அப்பனே.... இப்பிடி ஒரு ஏக்கம் எழுதுகோலுக்கு இருந்தால் எப்படி இருக்கும்... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொஞ்சம் வாசிக்கவே விளங்கிவிட்டுது. நன்றாக இருந்தது வாசிக்க.

 

நன்றி சுமே... பெண்ணின் எழுத்தில் இப்படியான எழுத்துக்களை எமது சமூகப்பெண்கள் பெரிதாக வரவேற்பதில்லை.... உங்களுக்கும் இதில் ஏற்பு நிலை இருக்கிறதோ தெரியவில்லை... இருப்பினும் வெளிப்படையாக வந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் :rolleyes:

திரில் கதை படித்த உணர்வு வந்தது... :icon_idea: பேனாவை பற்றித்தானே :blink::D

 

இந்தக்கதையை வாசித்து திரில் என்று சொல்லுவது தமிழினி ஒருவராகத்தான் இருக்கும் இப்பிடி அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே.... :o  :D

Link to comment
Share on other sites

இன்றுதான் இக்கதையை வாசித்தேன். கருத்துக்களை பார்க்கும் வரை நீங்கள் பேனாவையே எழுதியிருக்கிறீங்கள் என்றது விளங்கவில்லை சகாரா. அடுத்து தொடருமோ எனத்தான் நினைச்சேன். கற்பனை அபாரம். ஆனால் ஒரோயர குறைமட்டும் வாசகனை ஒரு மயக்கத்தில் வைத்திருந்தது கதை. காரணம் நீங்கள் போட்ட படம் இல்லாமல் கதையை வாசித்தால் கதையின் வெற்றி முற்றுப்பெறாமல் இருந்திருக்கும். 
 
வாசகர் புரிந்தால் தான் கதையின் வெற்றி முழுமையாகும். இசையின் குளப்பமே இக்கதையை வாசித்து முடிய எனக்கும் இருந்தது.  :lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இக்கதையை வாசித்தேன்.

 

வாசகர் புரிந்தால் தான் கதையின் வெற்றி முழுமையாகும்.  :lol:

 

இது கதையா..? நான் கட்டுரை என்றல்லவா பொருள் கொண்டேன்!. கதை என்றால்! விவாதித்து பகுப்பாய்வு செய்யும் பண்பு இங்கு எழுந்திருக்காதே!!!. :o

 

பொறுங்கப்பா எல்லாருக்குமான பதில்களை இரவு பதிவிடுகிறேன்...

உங்கள் பதிலைக் காண இன்னும் எத்தனை இரவுகள் நானும் விழித்திருக்க வேண்டும் ??? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா

ஆகா..........

முழக்கம் அகோராமாகத்தான் இருக்கு....

 

எனக்கும் இப்படி நிலை  வந்ததுண்டு

அந்த  தவிப்பு

காத்திருப்பு

நடக்குமா

நடக்காதா  என்றநிலை...

அதை  அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்

 

ஆனால் இறுதிக்காட்சி  நம் கையில்

பல அம்புகள்  எம்மிடமிருப்பதால்......

(என் சகோதரன் மீண்டும் வந்த சந்தோசம் இங்கே...... :icon_idea: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுமே... பெண்ணின் எழுத்தில் இப்படியான எழுத்துக்களை எமது சமூகப்பெண்கள் பெரிதாக வரவேற்பதில்லை.... உங்களுக்கும் இதில் ஏற்பு நிலை இருக்கிறதோ தெரியவில்லை... இருப்பினும் வெளிப்படையாக வந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் :rolleyes:

 

எழுத்து என்று வந்து விட்ட பின்னர் மற்றவர் என்ன நினைப்பாரோ என்று யோசித்தால் தரமான ஆக்கத்தைத் தரமுடியாது. நான் நன்றாக இரசித்தேன். உங்கள் எழுத்தாளுமையும் நன்றாகத்தான் இருந்தது.

எனக்கு என்னவோ பேனா என்பது வரவில்லை. வெளியே எத்தனை நேரம்தான் பார்ப்பது என்றவுடன் பூனை என்றுதான் எண்ணினேன். நீங்கள்தான் சொல்ல வேண்டும் எதுவென்று

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுத்தாளனின் ..பேனா  மெளனமாய் கண்ணீர் விட்டால் இப்படிதான் இருக்குமோ ..? புனைவு அபாரம் .

 

நிலாக்கா இது ஒரு ஏக்கம் நிறைந்த புனைவு...இதையே மிகவும் கடுமையாகவும் எழுதலாம்... அப்படியானதை வாசித்தால் கண்ணீருக்குப் பதில் கோபம் வரும்.. :rolleyes:

இவ்வளவத்தையும் ஏக்கத்தோடை சொன்ன பேனை அங்காலை நடந்த மிச்சத்தையும் சொல்லாதோ எண்டொரு நப்பாசைதான்..... :lol:  :D

 

திரையை மூடிப்போட்டு போட்டா பிறகென்னத்தை நான் பார்க்கிறது என்று ஒரு முணுமுணுப்பு காதில விழுகுது அண்ணே. :D

இதே ஆசைதான் எனக்கும்... :icon_mrgreen:

 

ஆகா எத்தனைபேர் இப்படி கிளம்பி இருக்கிறீர்கள்?

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றுதான் இக்கதையை வாசித்தேன். கருத்துக்களை பார்க்கும் வரை நீங்கள் பேனாவையே எழுதியிருக்கிறீங்கள் என்றது விளங்கவில்லை சகாரா. அடுத்து தொடருமோ எனத்தான் நினைச்சேன். கற்பனை அபாரம். ஆனால் ஒரோயர குறைமட்டும் வாசகனை ஒரு மயக்கத்தில் வைத்திருந்தது கதை. காரணம் நீங்கள் போட்ட படம் இல்லாமல் கதையை வாசித்தால் கதையின் வெற்றி முற்றுப்பெறாமல் இருந்திருக்கும். 
 
வாசகர் புரிந்தால் தான் கதையின் வெற்றி முழுமையாகும். இசையின் குளப்பமே இக்கதையை வாசித்து முடிய எனக்கும் இருந்தது.  :lol:

 

 

சாந்தி

 

புதுமைப்பித்தன் கதைகளை வாசித்துப் பாருங்கள்.... திணறிப்போவோம்... அவருடைய கதைகள் பூடகமாகவே இருக்கும் வாசிக்கும் வாசகர்களை பல கோணத்தில் சிந்திக்கத்தூண்டும். எழுத்துலகில் ஒரு தனித்துவத்தை அவருடைய எழுத்துகள் எப்போதுமே ஏந்தி நிற்கும்.  சாதாரணமாக பார்த்தால் ஏதோ குழப்பம்போலவும் மயக்கம் போலவும் தெரியும். அவரின் எழுத்துக்களை வாசித்தால் நிச்சயமாக என்னுடைய இப்பதிவை வாசிக்கும்போது உங்களுக்கு குழப்பம் தோன்றவே தோன்றாது. :rolleyes:  <_<

 

உங்கள் பதிலைக் காண இன்னும் எத்தனை இரவுகள் நானும் விழித்திருக்க வேண்டும் ??? :blink:

ஐயய்யோ... இன்னும் எத்தனையோ இரவுகள் இப்படி வீணே கழியப்போகின்றனவோ :D ... பாஞ்ச் திருமதி பாஞ்ச் பாஞ்சு சளார் சளார் என்று சாத்தமுன்னம் போய் உறங்குங்கள்... :icon_mrgreen:

ஆகா

ஆகா..........

முழக்கம் அகோராமாகத்தான் இருக்கு....

 

எனக்கும் இப்படி நிலை  வந்ததுண்டு

அந்த  தவிப்பு

காத்திருப்பு

நடக்குமா

நடக்காதா  என்றநிலை...

அதை  அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்

 

ஆனால் இறுதிக்காட்சி  நம் கையில்

பல அம்புகள்  எம்மிடமிருப்பதால்......

(என் சகோதரன் மீண்டும் வந்த சந்தோசம் இங்கே...... :icon_idea: )

 

ரொம்ப அனுபவிச்சிருக்காரு போல :D

எனக்கு கொஞ்சம் வாசிக்கவே விளங்கிவிட்டுது. நன்றாக இருந்தது வாசிக்க.

 

எழுத்து என்று வந்து விட்ட பின்னர் மற்றவர் என்ன நினைப்பாரோ என்று யோசித்தால் தரமான ஆக்கத்தைத் தரமுடியாது. நான் நன்றாக இரசித்தேன். உங்கள் எழுத்தாளுமையும் நன்றாகத்தான் இருந்தது.

எனக்கு என்னவோ பேனா என்பது வரவில்லை. வெளியே எத்தனை நேரம்தான் பார்ப்பது என்றவுடன் பூனை என்றுதான் எண்ணினேன். நீங்கள்தான் சொல்ல வேண்டும் எதுவென்று

 

 

அதில் எது சரியான கூற்று சுமே?

Link to comment
Share on other sites

பூனை என்று விளங்கிவிட்டது..  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைச்சீலையா இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.. :huh:

 

இசை இந்தக்கதையில் திரைச்சீலை ஏன் வந்தது என்று விளங்கித்தானே கேள்வி கேட்டனீங்கள்? :D  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

திரைச்சீலை கடைசிப் பந்தியில் வந்ததால் அப்பிடி நினைத்துவிட்டேன்.. :D

 

பேனா என்பதும் சரியல்ல.. பேனாவின் மை காயாது. அப்படிக் காய்ந்தால் அது நல்ல பேனா அல்ல..  :huh:  கெட்டுப்போன பேனா கண்டதுக்கும் ஆசைப்படக்கூடாது..  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக கடைசிப்பந்தியில் வந்ததால் உங்களுக்கு திரைச்சீலை கவனத்தில் தட்டுப்பட்டு விட்டதா?...... நானும் ஏதோ பூடகமாக விளங்கிட்டுதாக்கும் என்று நினைச்சன் :lol:

Link to comment
Share on other sites

ஆக கடைசிப்பந்தியில் வந்ததால் உங்களுக்கு திரைச்சீலை கவனத்தில் தட்டுப்பட்டு விட்டதா?...... நானும் ஏதோ பூடகமாக விளங்கிட்டுதாக்கும் என்று நினைச்சன் :lol:

 

ச்ச்ச்ச்சின்னப்பசங்க எங்களுக்கு பலதும் விளங்க காலம் எடுக்கும்..  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்ச்ச்ச்சின்னப்பசங்க எங்களுக்கு பலதும் விளங்க காலம் எடுக்கும்..  :D

 அடச்சா...இன்று எனது வேலையிடத்தில் பணி புரியும் ஒரு இம்சை அரசியும் நீங்கள் சொன்ன அதே திரைச்சீலையைப்பற்றி சந்தேகம் கேட்டார்... என்னென்ன கோணத்தில எல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. நானும் நினைச்சன் நம்ம இம்சை அரசிகளின் மூளையைப் போல இசையின் மூளையும் வேலை செய்யுதாக்கும் என்று...... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின்.... எழுத்துக்களில் ஒரு, வீரியமும், திரிலும் இருக்கும்.
அதை... விட, அவ போடும்.. தலைப்பும் அழகானது.
வாழ்த்துக்கள்... வல்வை சகாறா. :)  

Link to comment
Share on other sites

வல்வை வீட்டில் நாய்க்குடியா பூனைக்குட்டியா இருக்கிறது? எங்கோ நாய்க்குட்டி என்றது மாதிரித்தானே படித்திருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனை, நாய், திரைச்சீலை இவையெல்லாம் கசியாது. இறகின் வாரிசுதான் கசியும். மனிசி முறைக்கிறா.! நான் படுக்கப்போறன். பை...பை.!! ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் நினைக்கிறேன் என்ட புத்திக்கு :huh: எட்டின வரை ஒரு கணவன் தனது மனைவியின் ஸ்பரிசத்திற்கு :lol: ஏங்குவதாக கதை எழுதப்பட்டு உள்ளது :unsure:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் எது சரியான கூற்று சுமே?

 

இரண்டும் சரியானதுதான். ஏனெனில் நான் பூனை என்று நினைத்துத்தான் எழுதினேன். இசையின் கருத்துக்கு நீங்கள் எழுதிய பதிலில் இருந்துதான். திரைச் சேலை என்பது தெளிவாகியது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளங்காத கதைகள் எத்தனையோ படித்திருக்கின்றோம். சில வேளைகளில் கதாசிரியர் நினைத்துப் பார்த்திராத விளக்கங்கள் கூட கதைக்குப் பொருந்தி வரும்! <_<
 

"எனது கதை சொல்லாத எதையும் நான் கதைக்கு வெளியே சொல்லிவிட முடியாது" என்ற ஜெயகாந்தன் சொல்லியிருப்பதாக அண்மையில் படித்திருந்தேன். :icon_idea: எனவே பதவுரை, பொழிப்புரைகள் எல்லாம் தேவையா?

பி.கு: நான் பச்சை போட்டது "வருடு" என்ற சொல் தந்த கிறக்கத்தினால்தான் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

விளங்காத கதைகள் எத்தனையோ படித்திருக்கின்றோம். சில வேளைகளில் கதாசிரியர் நினைத்துப் பார்த்திராத விளக்கங்கள் கூட கதைக்குப் பொருந்தி வரும்! <_<

 

"எனது கதை சொல்லாத எதையும் நான் கதைக்கு வெளியே சொல்லிவிட முடியாது" என்ற ஜெயகாந்தன் சொல்லியிருப்பதாக அண்மையில் படித்திருந்தேன். :icon_idea: எனவே பதவுரை, பொழிப்புரைகள் எல்லாம் தேவையா?

பி.கு: நான் பச்சை போட்டது "வருடு" என்ற சொல் தந்த கிறக்கத்தினால்தான் :icon_mrgreen:

 

"எனது கதை சொல்லாத எதையும் நான் கதைக்கு வெளியே சொல்லிவிட முடியாது"
 
அந்தக்கூற்று கதைசொல்லிக்கு மட்டுமே பொருத்தமானது. வாசகனிற்கு அல்ல. மனிதனை ஒத்த அகத்தோடான றோபோட்டை விஞ்ஞானத்தால் இப்போதைக்கு உருவாக்க முடியாது என்பது மட்டும் போதுமானது மனிதனின் அகத்தின் பிரமிப்பை உணர்த்துவதற்கு. 
 
மொழியினை அனைவரும் ஒருவாறு பயன்படுத்துவதில்லை. ஆழ்மனதின் வெளிப்பாடுகளை அடித்துக்கூறிவிட அனைவராலும் முடிந்துவிடுவதில்லை. இதனால் தான் ஒவ்வொரு நூலும் அதன் வாசகரளவு எண்ணிக்கையான பிரதிகளைக் கொண்டிருப்பதாகப் பேசப்படுகிறது. மொழி கலாச்சாரம் முதலிய அனைத்தும் அந்நியமான இரு மனிதர்களிற்கிடையே மொழியைத் தாண்டிய அதிர்வு சாத்தியப்படுகிறது. மனிதனிற்கும் விலங்குளிற்குமிடையே அதிர்வு சாத்தியப்படுகிறது. 
 
நான் நினைக்கிறேன், இயற்கையின் கூர்ப்பைப்போல, பொளிப்புரை இலக்கியத்தின் கூர்ப்பு. ஏதோ ஒன்று உள்ளிற்குள் பிசைய, படைப்பாளி அதனை ஏதோ ஒரு வடிவில் வைத்துவிடுகிறார். படைப்பாளி அந்தப் படைப்பை வைத்தநேரத்தில, உள்ளுரத் தனக்கிருந்த அந்த அதிர்விற்கு மட்டுமே அவர் உண்மையாக இருக்கிறார். அந்த அதிர்வின் பிரகாரம் ஏதோ ஒரு வகையில் அதை வெளிப்படுத்திவிடுகிறார். ஆனால், வெளிப்படுத்தியதன் பின்னர், தான் வெளிப்படுத்தியதற்குப் பொளிப்புரை வழங்க பிறிதொரு தருணத்தில் அவர் முயலின், அவரின் பொளிப்புரை கூட அவரது படைப்பிற்குக் காரணமான உணர்விற்கு உண்மையாக இருக்கமுடியாது (இதைத்தான் ஜெயகாந்தன் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்). அதற்கு இரு காரணங்கள். ஒன்று உள்ளார்ந்த அதிர்வை ஆட்டிகுலேட் பண்ணுவது எல்லோரிற்கும் எப்போதும் சாத்தியப்படுவதில்லை. இரண்டாவது, படைப்பை வெளியில் போட்டதன் பின்னர் பீட்பாக்லூப் ஆரம்பித்துவிடும் (அதாவது உள்ளுணுர்வு எப்படியோ பிறந்தது. அது படைப்பிற்குக் காரணமானது. அந்த வகையில் உள்ணுணர்வின் வெளிப்பாடு படைப்பு. ஆனால் படைப்புப் பிறந்த மாத்திரத்தில் படைப்பு, மீண்டும் உள்ணுர்விற்கு உள்ளீடாகத் தொடங்கிவிடும். ஆதனால் உள்ளீடு சற்று மாறி, புதிய வெளிப்பாடு தோன்றும்..இவ்வாறு வெளியீடு உள்ளீட்டில் மாறிமாறி செல்வாக்குச் செலுத்துவதையே பீட்பாக்லூப் என்று கூறியுள்ளேன்). இந்த பீட்பாக்லூப்பின் காரணம் ஒரு படைப்புச் சார்ந்து மற்றவர்களின் எதிர்வினை மட்டுமல்ல, எழுதியவரே தான் எழுதியதைப் படிக்கும் போது வாசகராகிவிடுகிறார்.
 
இந்தக் கதையில் கூட, பேனை, பூனை அது இது என்று ஏகப்பட்ட விடயங்களை, 'யாரின் பார்வையில் இக்கதை கூறப்பட்டது?' என்ற கேள்வி சார்ந்து சகாரா தற்போது அனுசரிக்கிறார். ஆனால் அந்தக் கேள்விக்கான பதில் உண்மையில் கதையிலேயே உண்மையாக இருக்கிறது. என்னபை; பொறுத்தவரை அது பேனையும் இல்லை பூனையும் இல்லை. ஆனால், பொளிப்புரையின் ஆதிக்கத்தில் கதை இப்போது மருவத்தொடங்கி விட்டது. கதை கருத்தரித்த புள்ளிக்கு எழுத்தாளர் மீண்டு உண்மையில் தனக்குத் தானே ஏன் இந்தக் கதை எழுதப்பட்டது என்று சிந்திப்பதற்கு இனிப் பிரயத்தனம் அதிகம் தேவைப்படும். பொளிப்புரைகளிற்கு முந்திய கதை மிக அழகாக இருந்தது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அந்தவகையில் கிருபனின் ஆதங்கத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்.
 
சகாரா கதைகளில் அவர் இணைக்கும் படங்களை எங்கிருந்து எவ்வாறு தேடிப்பிடிக்கிறாரோ தெரியாது. ஆனால் அவை அற்புதம். படம்பார் பாடம் படி என்ற எங்களின் பால பாடம் சார்ந்து இன்று எத்தனையோ ஆய்வுகள் ஆமாம் என்று தலையாட்டி ஆமோதிக்கின்றன. படங்களின் பங்கு உங்கள் கதைகளில் அபாரம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் விளக்கத்துடன் ஒத்துப் போகமுடிகின்றது. கதாசிரியர் படைப்பை உருவாக்குவதற்கான அதிர்வை படைப்பிலேயே தருவது இலகுவானதல்ல. சிறந்த மொழியாள்கை உள்ளவர்களாலேயே அதுமுடியும். அந்த வகையில் சகாறாவின் கதை சிறந்த மொழியாளுமையோடு விளங்குகின்றது. கதையா, விடுகதையா என்ற மயக்கத்தைத்தான் பின்னூட்டங்கள் தருகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
    • திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி June 3, 2024   திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ எடை கொண்ட கண்டாமணி லண்டன் வாழ் சைவமக்களின் பங்களிப்புடன் வழங்கிவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு லண்டனில் வசிக்கும் திருவாளர் ம. ஜெயசீலன், பா. சுரேசன் மற்றும் ச.லிங்கேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பொறுப்பேற்று வெளிநாடுகளில் வசித்து வரும் ஈழநாட்டினை பூர்வீகமாக கொண்ட சைவ அடியார்களின் நிதி பங்களிப்புடன் செய்யப்பட்ட ஆயிரம் கிலோ நிறை கொண்ட காண்டாமணி வெள்ளிக்கிழமை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினரிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது   லண்டன் மாநகர் வாழ் இந்து மக்களின் முன்னெடுப்பில் உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை இந்து மக்களின் பங்களிப்புடனும் , திருக்கோணேஸ்வரப் பெருமானுக்காக லண்டனில் தயாரிக்கப்பட்ட 1000 கிலோ நிறையுடைய நவீன முறையில் மின்சாரத்தில் தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காண்டா மணியானது வெள்ளிக்கிழமை பெருமானின் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலனசபையினரிடம் கையளிக்கப்பட்டது.   https://www.ilakku.org/திருக்கோணேஸ்வரர்-பெருமா/
    • ந‌ட‌ந்து இருக்க‌லாம் நேபாள் அணி சின்ன‌ அணி 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு தெரிவாகாத‌ அணி   நெத‌ர்லாந் ப‌ல‌ வ‌ருட‌மாய் பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடி இருக்கு இங்லாந்தை இர‌ண்டு முறை 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் வென்ற‌ அணி   நெத‌ர்லாந் அணியில் கூட‌ தென் ஆபிரிக்கா ம‌ற்றும் நியுசிலாந் அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் விளையாடின‌வை ஒரு சில‌ நெத‌ர்லாந் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் அணியில் இருக்கின‌ம்   ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தில் நாச‌மாய் போன‌ இல‌ங்கை அணிய‌ நெத‌ர்லாந் அணி போன‌ கிழ‌மை தோக்க‌டிச்ச‌வை பெரிசா தோக்க‌டிச்ச‌வை😁.......................................... உங்க‌ளுக்கு ஏறு முக‌ம் அண்ணா இப்போதைக்கு நீங்க‌ள் கீழ‌ வ‌ர‌ வாய்ப்பு மிக‌ குறைவு🙏🥰...............................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.