Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து!

Featured Replies

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை நீண்ட காலத்திற்கு பின் நிராகரித்ததால் இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு கடந்த 4–ந் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படது. இதில், முருகன், சாந்தன் பேரரரிவாளன் ஆகியோரின் துக்கு தண்டணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும்,  3 பேரை விடுதலை செய்வது குறித்து மத்திய மாநில அரசுகள் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

http://www.dailythanthi.com/2014-02-18-Supreme-Court-commutes-Rajiv-Gandhi-killers%2527-death-sentence-to-life-term

Edited by நிழலி
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

  • Replies 68
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன்மார்கள் வெளியில் வரவேண்டும் என்பதே அவா. தேர்தலுக்கு முந்திய சூழ்நிலையைப் பாவித்து செயற்பட வேண்டும்...

http://news.vikatan.com/article.php?module=news&aid=24678


இந்தச் செய்தி நிறுவனம் கொலையாளிகள் என்ற வார்த்தையை வேணும் என்றே பாவித்துள்ளது போலுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. குற்றம்  நிரூபிக்கப்படாமலே தண்டனையை அனுபவிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு  என தன்னை பீற்றிக்கொள்ளும் இந்தியா குற்ற்ம் நிரூபிக்கப்படாதவர்களை இனியும் அடைத்து வைக்க கூடாது. 

 

தேர்த்தல் நெருங்குவது நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.

 

வழவழவென 20 வருடங்களாக தீர்ப்பை இழுத்ததில், இவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைந்திருப்பார்கள்.

இனியாவது நிம்மதியாக இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் உண்மையில் விடுவார்களா? அண்ணன் ரொபோட், நளினி உற்பட்ட ஆயுள்தண்டனை பெற்றவர்களையே என்னமும் வெளியில் விடமறுக்கின்றார்கள்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

Makalen poradathuku kidaitha vetti......- pohne

நல்ல செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் குற்றவாளிகளே அல்ல. இக்கொலையுடன் தொடர்புடைய.. சுப்பிரமணியம் சுவாமி போன்ற குற்றவாளிகள் வெளியில் இப்போதும் உள்ளார்கள்.

 

இந்த அப்பாவிகளின் தண்டனைக் குறைப்புக்காகப் போராடிய இந்திய உறவுகளுக்கு நன்றி.

 

அண்ணன் வை.கோ.. சீமான் போன்றவர்கள்.. இதில் பலமாக உழைத்திருக்கிறார்கள். :icon_idea:


Rajiv Gandhi murder: Court commutes execution of plotters.

 

_73051687_73051685.jpg
 
Rajiv Gandhi's murder was seen as retaliation for his having sent Indian peacekeepers to Sri Lanka
 

India's Supreme Court has commuted the death sentences of three men convicted of plotting the 1991 assassination of former prime minister Rajiv Gandhi.

 

Chief Justice P Sathasivam spared the men, citing delays in deciding their mercy plea.

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-26237037

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

1011068_400719076739657_2041493160_n.jpg

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் இந்தியா சட்டபிரிவில் உள்ள 432, 433 A, உள்ளிட்ட பிரிவுகளை பயன்படுத்தி சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும். - தலைவர் வைகோ (முகநூல்)

 

 


1782150_10203406788197438_253859733_n.jp

 

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்.. இன்றைய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் குழாமில் முக்கிய இடம்பெற்ற இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம்.. இந்த வழக்கில் அதிகம் சட்டரீதியாக உழைத்த வை.கோ.


(இடமிருந்து வலமாக)


1782147_649804878412795_69634288_n.jpg

 

மூவர் தூக்கு ரத்து; உச்சநீதிமன்றத் தீர்ப்பு. வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களுக்கு வைகோ பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

 

நன்றி: வை.கோ ஐயாவின் முகநூல் பகிர்வில் இருந்து.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வைக்கோ நீ தமிழகத்தின் சுயநலம் இல்லா தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.....

ஏனோ தமிழகம் தான் உன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது....

நீயும் குடும்பமும் ஊழலும் சுயநலமும் என்று இருந்திருந்தால் முதலமைச்சர் ஆகி இருக்கலாமோ என்னவோ....

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க இந்தத் தலைப்பை இப்படியே விரும்பவில்லை. யாழ் களம்.. இந்தத் தலைப்பை மாற்றனும். ராஜீவ் காந்தி கொலைச் சதியாளர்கள் ஆக.. சோடிக்கப்பட்ட வழக்குகளால்.. காட்டப்பட்டவர்களே இவர்கள். கொலையாளிகள் அல்ல. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி கூட ராஜீவ் கொலை சதியாளர்கள் என்று தான் குறிப்பிடுகிறது. கொலையாளிகள் என்றோ கொலைக்குற்றவாளிகள் என்றோ சொல்லவில்லை. அதுமட்டுமன்றி ராஜீவ் கொலை இந்தியப் படைகள் ஈழத்துக்கு அனுப்பட்டதன் பிரதிபலன் என்றும் சொல்கிறது. மேலும் புலிகள் இச்சம்பவத்திற்காக வருந்தினார் என்றும் குறிப்பிடுகிறது. சில இந்திய ஊடகங்கள்.. புலிகள் உரிமை கோரினர் என்று எழுதி வருகின்றன. அதுவும் தவறு.

 

+ India's Supreme Court has commuted the death sentences of three men convicted of plotting the 1991 assassination of former prime minister Rajiv Gandhi.

 

+ Rajiv Gandhi's murder was seen as retaliation for his having sent Indian peacekeepers to Sri Lanka

 

+ In 2006, the Tigers expressed "regret" for the murder which had shocked India.

 

Rajiv Gandhi murder: Court commutes execution of plotters

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-26237037

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் சந்தர்ப்பவாத ஈனத்தனமான அரசியலுக்கு இன்னொரு சாட்சி: 

 

நான் கொடுத்த வேண்டுகோள்களின் அடிப்படையில் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டவர்கள் : கலைஞர் அறிக்கை

 

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர் அறிக்கை விடுத்துள்ளார்.

 

அவ்வறிக்கையில்,  ‘’டெசோ கூட்டங்களின் வாயிலாகவும் - பிரதமருக்கு எழுதிய பல்வேறு கடிதங்களின் வாயிலாகவும் - விடுத்த ஏராளமான அறிக்கைகளின் மூலமாகவும் - இறுதியாக திருச்சியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பத்தாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒரு வெற்றியாக - உச்ச நீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு வாழும் உரிமை கிடைத்திருப் பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
 

இன்று நேற்றல்ல! கடந்த பல ஆண்டுக் காலமாகவே நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூக்குத் தண்டனையே ரத்து செயப்பட\ வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். என் தலைமையிலே கழக ஆட்சி இருந்த போது நான் எடுத்த முயற்சியாலும், நான் கொடுத்த வேண்டுகோள்களின் அடிப்படை யிலும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்ட தியாகு, கலியபெருமாள், நளினி ஆகியோரைப் போல இன்றைக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சிறப்பான தீர்ப்பினைத் தொடர்ந்து, உச்ச நீதி மன்றத்தின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் ஏற்கனவே இதுவரை அனுபவித்த தண்டனைக் காலத்தினை மனதிலே கொண்டு, உடனடியாக அவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அவ்வாறு அவர்கள் விடுதலை அடைவார்களேயானால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=116690

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கருணை மனு மீது முடிவெடுக்க மத்திய அரசு 11 ஆண்டுகள் தாமதம் ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டியது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக கூறிய நீதிபதிகள், இம்மூவரும் சிறையில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறிய மத்திய அரசின் வாதத்தை நிராகரித்தனர். 23 ஆண்டுகளாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சிறையில் இருப்பதால், அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தூக்குத் தண்டனை வழக்குகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் கருணை மனு மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வருங்காலத்தில் கருணை மனு மீது விரைவாக முடிவெடுக்கப்படும் என நம்புவதாகவும் தீர்ப்பின்போது நீதிபதிகள் தெரிவித்தனர். 199‌1ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு 1998ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதில் நளினிக்கான தண்டனை, ஏற்கனவே ஆயுளாக குறைக்கப்பட்டது. வழக்கு கடந்த வந்த பாதை ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். இதற்கான சதியில் ஈடுபட்டதாகக்கூறி 1998ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 26 பேருக்கு தூக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் இவர்களில் 19 பேரை விடுவித்த நீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களின் கருணை மனுக்கள் 1999ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதி தமிழக ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. எனினும், அதற்கடுத்த ஆண்டு, நளினியின் தூக்கு தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் தமிழக ஆளுநர் குறைத்தார். இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும், தூக்கு தண்டனையை குறைக்க கோரி கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி, குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படாததை அடுத்து, 2006, 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. கடந்த, 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி, இவர்கள் மூவரின் கருணை மனுக்களை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இதனையடுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தேதியாக 2011, செப்டம்பர் 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. நெருக்கடி முற்றிய நிலையில், 2011, ஆகஸ்ட் 30ம் தேதி, தூக்கு தண்டனையைக் குறைக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி 21ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் அளித்தது. கருணை மனுக்கள் ஆண்டுக் கணக்கில் குடியரசுத் தலைவரால் கிடப்பில் போடப்பட்டதை காரணம் காட்டி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 15 கைதிகளின் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. கருணை மனுக்களை தேவையின்றி நீண்ட காலம் கிடப்பில் போட்டால், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார். http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-119093.html

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆதரவாக போராடிய வைகோ விற்கும் , தொடர்ச்சியாக போராட்டத்தில் பங்கெடுத்த சீமானுக்கும். ஆதரவளித்த தமிழர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அற்புதம் தாய்

2j0y.jpg

  • கருத்துக்கள உறவுகள்

3பேரின் தூக்குத் தண்டனை ரத்தானது மகிழ்ச்சியை அளிக்கிறது.இவர்களின் விடுதலை தமிழக அரசின் கைகளிலேயே இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.தமிழக அரசு இவர்களை உடனே விடதலை செய்து அவர்கள் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பெரிய பதவி கிடைத்த ஒருவன் அந்த பதவியின் ஊடாக தான் சார்ந்த தன்னுடைய இனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டும்.... வெறும் ஆட்சியாளர்களின் அழுத்தங்களுக்கும் ஆசை வார்த்தைகளுக்கும் பணிந்து விடாமல் இருக்க வேண்டும்.... அந்த வகையில் மதிப்புக்குரிய தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் கொடுத்திருக்கும் இந்த தூக்குத்தண்டனை இரத்து தீர்ப்பின் மூலம் அவருக்கு ஏற்ப்பட்டிருக்கும் மனத்திருப்த்தியை கோடிகளாலும் ஈடு செய்ய முடியாது....

‪#‎நன்றி‬ ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் வழக்கில் உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு நீண்ட போராட்டத்துக்கும், நம்பிக்கைக்கும், விடாமுயர்ற்சிக்கும் கிடைத்த வெற்றி.

 

தொடர்ந்து இவர்களை வாட்டாமல் தமிழக அரசு விரைந்து விடுதலை செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீதியை தூக்கில் இருந்து காப்பாற்றிய எங்கள் நீதியரசர் திரு.சதாசிவம் அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் ! அற்புதம்மாவின் ஆனந்தத்தில் பங்குகொள்வோம் !

zm8m.jpg

  • தொடங்கியவர்

1012538_665210220191417_978965304_n.jpg

 

The picture sums up the joy we feel 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் விடுதலைக்காய் உழைத்த அன்புள்ளங்களுக்கு சிரந்தாழ்த்தி வணங்குகின்றேன் ...! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் சந்தோசமான செய்தி ..

இத்தோடு "LTTE ராஜீவ் கொலை " என்கிற செய்திக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமான செய்தி

 

இவர்களின் விடுதலைக்காய் உழைத்த அன்புள்ளங்களுக்கு சிரந்தாழ்த்தி வணங்குகின்றேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.