Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகன், சாந்தன் பேரறிவாளன் நிரபராதி தமிழர்கள் மூவரும் விடுதலை. நளினியும் விடுதலை. தமிழக அரசு முடிவு. முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு.

Featured Replies

1904081_10201498325759719_1150127956_n.j

 

 

முருகன், சாந்தன் பேரறிவாளன் நிரபராதி தமிழர்கள் மூவரும் விடுதலை. நளினியும் விடுதலை. தமிழக அரசு முடிவு. முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு. அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு.

 

fb

 

  • Replies 82
  • Views 5.3k
  • Created
  • Last Reply

Convicts in the Rajiv Gandhi assassination case would be freed, Tamil Nadu Chief Minister J. Jayalalithaa said on Wednesday.

Announcing the government's decision in the Assembly, Jayalalithaa said the government would release V. Sriharan alias Murugan, A.G. Perarivalan alias Arivu, T. Suthendraraja alias Santhan, Nalini, Robert Payas, Jayakumar and Ravichandran.

All the seven are convicts in the former prime minister Rajiv Gandhi assassination case.

The matter will be refered to the Tamil Nadu Governor now.

 

 

 

http://indiatoday.intoday.in/story/jayalalithaa-release-of-rajiv-gandhi-killers-dmk-aiadmk/1/344319.html

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான முடிவு! :D

 

இனியாவது உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டியது இந்திய நடுவண் அரசின் தார்மீகப் பொறுப்பாகும்!

மகிழ்ச்சியான செய்தி! அவர்களது விடுதலையில் வைகோவின் பங்கு அளப்பரியது!

  • கருத்துக்கள உறவுகள்

WoW..........great..work thaks a god..

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. தலையங்கம் பிழையான தகவலை தருகிறது.

 

சென்னை: சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=24735

நாதியற்று போன எம்மினத்திற்கு இவ்வாண்டு தொடக்கமே இத்தகையதொரு இனிய செய்தி. மேலும் மார்ச்சில் ஐநாவில் அமெரிக்க தீர்மானம் போர்குற்ற விசாரணைக்கு முக்கியமான அடித்தளத்தையிட வேண்டும். இந்திய தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும். வைகோ ஐயா மோடியுடன் நெருக்கமாக இருப்பது எமது விடுதலைக்கான பல தடைக்கற்களை அகற்றி எமது விடுதலை பயணத்தை விரைவு படுத்தும். 

அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. தலையங்கம் பிழையான தகவலை தருகிறது.

 

சென்னை: சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=24735

இந்திய சட்டபடி தமிழ்நாடு அரசு தமது முடிவை ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு அறிவிக்கும். மத்திய அரசு தமிழ்நாட்டு அரசின் முடிவை மறுதலிப்பதற்கு எந்தவிதமான காரணங்களும் கிடையாது. அவ்வாறு மறுதலித்தால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுதலிப்பதாக அமையும். எனவே இனிமேல் மத்திய அரசு அவர்களின் விடுதலையில் எவ்வித குறுக்கீடும் செய்வதற்கு எந்த காரணமும் கிடையாது. எனவே அவர்களின் விடுதலையை உறுதிப்படுத்தும் அந்த செய்தியில் எந்த தவறும் கிடையாது.  

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் விரைவில் விடுதலை அடைய வேண்டும். உழைத்த அனைவருக்கும் நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்திருந்தாலும், மிக்க மகிழ்ச்சியான செய்தி.

இதற்காக உழைத்த அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

By dn, சென்னை

First Published : 19 February 2014 11:23 AM IST

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும், ஆயுள் தண்டனை பெற்றுள்ள 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக  அமைச்சரவையில் இன்று முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு; தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும்; எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433என்-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

உச்ச நீ மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், இது குறித்து உடனடியாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விரிவான விவாதத்திற்குப் பின், இன்று, 19.2.2014, காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில்  சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்  நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இருப்பினும், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.  எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி,  ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
அடுத்தடுத்து நல்ல செய்தி. எந்த உள்நோக்கமும் இன்றி அவர்களை விடுவித்து அவர்கள் வாழ விரும்பும் இடத்தில் நிம்மதியாக வாழ விட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.  தமிழக அரசுக்கு சட்டமன்றத்திற்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். Rajiv Gandhi murder: Tamil Nadu to free plotters
_73076117_73076113.jpg
 
Rajiv Gandhi's murder was seen as retaliation for his having sent Indian peacekeepers to Sri Lanka in 1987
 

The government in India's Tamil Nadu state has decided to free seven people convicted of plotting the assassination of former PM Rajiv Gandhi.

 

The announcement came a day after the Supreme Court commuted the death sentences of three convicts, citing delays in deciding their mercy pleas.

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-26252797

ராஜிவ் கொலையாளிகள் 3 பேருக்கும் விடுதலை: மேலும் 4 பேரை விடுவிக்கவும் தமிழக அரசு முடிவு.

 

சென்னை : ராஜிவ் கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இருக்கும் நளினி, ஜெயகுமார், ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்.

வழக்கு விபரம் :

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.பின், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, 2000ம் ஆண்டில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், தூக்கு தண்டனையை குறைக்க கோரி, ஜனாதிபதியிடம், கருணை மனு தாக்கல் செய்தனர்.ஆனால், இவர்களின் மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மூன்று பேரும், இது தொடர்பாக, ஜனாதிபதிக்கு, நினைவூட்டல் கடிதங்களை, தொடர்ந்து அனுப்பி வந்தனர்.
இந்நிலையில், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், இவர்களின் கருணை மனுக்களை, அப்போது ஜனாதிபதியாக இருந்த, காங்., கட்சியைச் சேர்ந்த, பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து, 2011, செப்டம்பர், 11ல், இவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.இதற்கிடையே, கருணை மனுக்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதால், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, குறைக்க கோரி, மூன்று பேரும், சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட், தூக்கு தண்டனையை நிறைவேற்ற, இடைக்கால தடை விதித்தது.இந்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, 'பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ரத்து செய்வதோடு, ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்படுகிறது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து, மாநில அரசு முடிவு செய்யலாம்.இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 432 மற்றும் 433ன் படி, மாநில அரசு, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

தமிழக அமைச்சரவை முடிவு :

குற்றவாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்ததை அடுத்து இவர்களை விடுதலை செய்யலாமா என்பது குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று அவசாரமாக கூடியது. இதில் 110 விதியின் கீழ் பேசிய ஜெயலலிதா, ராஜிவ் கொலை குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் சிறையில் இருந்த விடுதலை செய்யப்படுவர்; வேலூர் சிறையில் இருக்கும் முருகனின் மனைவி நளினி, ஜெயகுமார், ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவர்; இவர்கள் 7 பேரும் 23 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படும்; தமிழக அரசின் பரிந்துரை மீது 3 நாட்களுக்குள் மத்திய அரசு முடிவு செய்யவிட்டால், அரசியலைப்பு சட்டப் பிரிவின் கீழ் மாநில அரசிற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி தமிழக அரசே இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஆனந்த கண்ணீர்:

விடுதலை குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறுகையில், '23 ஆண்டுகளாக இருந்த ஏக்கம், எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இவ்வளவு விரைவாக இப்படி ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக, முதல்வர் ஜெயலலிதாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,' என்றார்.

கட்சிகள் வரவேற்பு:

தமிழக அரசின் இந்த முடிவை பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ளன. தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில், 'தமிழக அரசின் இந்த முடிவு பாராட்டத்தக்கது. மத்திய அரசும் இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.' என்றார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 'ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்க தக்கது. அவர்கள் தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்து விட்டனர். அரசின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மருத்துவ சோதனை:

தமிழக அரசின் முடிவை தொடர்ந்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேருக்கு

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=919302

 

 

தலைமை நீதிபதி சாதாசிவமே அனைத்து பாராட்டுதல்களுக்கும் உரியவர். வீரப்பன் கூட்டாளிகள் என ஆறு பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். தமிழக முதல்வரின் நிலைப்பாடானது தேர்தல் காலத்தை கருத்திற்க்கொண்டும் எதிர்கால பிரதிபலன்களையும் கருத்திற்க்கொண்டும் எடுக்கப்பட்டிருக்கலாம். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உள்ளது என்று சொல்லக்கூடியவர் ஜெ. வைகோ மற்றும் வழக்கரைஞர் ரம்ஜெத்மலானியின் உழைப்பு வீண் போகவில்லை... எப்படியோ சிறைவாசம் முடிந்தது தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி :)

மூவர் உயிர்காக்க உயிர் நீத்த செங்கோடி இந்த தருணத்தில் நினைவுகூற வேண்டியவர். தமிழ் உள்ள வரை இவர் புகழ் நிலைத்திருக்கும்.

இவர்கள் விடுதலை செய்யப்பட்டதால் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு மற்றும் அஜ்மல் கசாப் ஆதரவாக மூஸ்லீம்கள் போர்க்கொடி தூக்குவர்...

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்திருந்தாலும், மிக்க மகிழ்ச்சியான செய்தி.

இதற்காக உழைத்த அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள்.

 
  • கருத்துக்கள உறவுகள்

அற்புத அம்மா பல தடவை பேட்டி குடுக்கையில் கண் கலங்கி அழுத படியே பேட்டி குடுப்பா...வாழுன்ற மீதி காலத்தை மகனுடன் சேந்து சந்தோசமாக்க வாழட்டும்

தேர்தல் காலமாதலால் அம்மா அதிகம் யோசிக்கவில்லை, கொளைஞ்சருக்கும் வை.கோ விற்கும், சீமான் போன்றோர் வாக்கினை அறுவடை செய்யாமல் விடுதலை செய்ததன் மூலம் தன்னையே அதிகம் சிந்திக்கவைக்கலாம் என நினைத்தாரோ என்னவோ?

 

எது எவ்வாறாயினும் தமிழுக்கு வெற்றி.

 

விடுதலை ஒருவேற்றி இந்த விடுதலை தமிழ் நாட்டிலும் தமிழர் வாழும் ஏனைய நாட்டிலும் மக்களின் உணர்வலைகளை கிளப்பியிருக்கின்ரது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்துவில் வந்த இந்தச் செய்தியும் அதற்கு வாசகர் இட்டுள்ள கருத்துக்களும்.

 

படித்துப்பாருங்கள்.

 

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-govt-to-release-all-7-in-rajiv-assassination-case/article5705217.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பி சூப்பிர சுப்பிரமனிய சுவாமியின் மன நிலை இப்ப எப்படி இருக்கும்..... ஹிஹிஹி............

  • கருத்துக்கள உறவுகள்

jayalalitha%20aruthammal.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாவை வாழ்த்தும் கருணாநிதி !!

 

http://www.thehindu.com/news/national/tamil-nadu/karunanidhi-others-laud-jayalalithaa-for-nod-to-release-convicts/article5705811.ece?ref=sliderNews#comments


சூப்பி சூப்பிர சுப்பிரமனிய சுவாமியின் மன நிலை இப்ப எப்படி இருக்கும்..... ஹிஹிஹி............

 

 

“ஏழு தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்ய உத்திரவிட்டது சட்ட விரோத, தேசத்துரோக நடவடிக்கை. மாநில அரசை மத்திய அரசு உடனே கலைக்க உத்திரவிட வேண்டும்”

- சுப்ரமணிய சாமி. 

“இவன் ஒருத்தன். எப்ப பாரு கலைச்சிடு கலைச்சிடுன்னு. கலைக்கிறதே தொழிலா கொண்ட குடும்பத்தில ‘மிஸ்’ ஆகி பிறந்திருப்பானோ’’ என்று வெற்றிகொண்டான் பேசியதுதான் நினைவுக்கு வருகிறது.

மண்ணை வாரி தலையில போட்டுக்கிடலாம்.
வாயிலயும் போட்டுக்கிடலாம்.
1654189_769284686416892_1803761611_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருவறுக்கவும் இந்திய அரசியலில் தம் செல்வாக்கை நிலை நிறுத்தவும் செய்யப்பட்ட ஒரு சதி என்பதனையே நிரபராதிகளை 23 வருடங்கள் சிறையில் வைத்து.. விடுதலைப் புலிகளை இக்கொலையை காட்டி உலகெங்கும் தடை செய்து சர்வதேச பிராந்திய சதியாளர்கள் காட்டியுள்ளனர். இக்கொலையில் புலிகள் தெரிவித்த வருத்தத்தை உரிமைகோரலாகக் காட்டியவர்களும் இந்த சதிகாரக் குழுவில் அடங்குவர். யார் யார் உண்மையில் இந்தச் சதியாளர்கள்.. எனியாவது விடை கிடைக்குமா..??! சுப்பிரமணியம் சுவாமி போன்ற ஏஜெண்டுகள் சிக்குவார்களா..???!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.