Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னணிகளின் போர்; ஒருவர் அடித்துக் கொலை

Featured Replies

___________

 

புலி பற்றி நான் எங்கு எழுதியிருந்தேன் என முடிந்தால் காட்டவும்.

பிக் மாட்ச் ஐ பற்றி நான் எழுத ஆனை கோட்டை யில் அடி பிடி நடந்ததாக ஒருவர் எழுதுகின்றார் .

இங்கு பலர்  ஒரு வகையில் உளவியல் பாதிப்பில் தான் இருக்கினார்கள் ,பலரின் பதிவுகள் அதற்கு சாட்சி .


அண்ணை எழுபதுகளில் எத்தனை குருப் இருந்தது என ஒருக்கா எழுதுங்கோ ?

 

 

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

  • Replies 51
  • Views 4.9k
  • Created
  • Last Reply

இவ்வாறான காட்டுமிராண்டிக்குணங்களையே போர் என்கின்றார்கள் சமர் என்கின்றார்கள் தேசீயம் என்கின்றார்கள்.

 

உண்மைதான்...  

 

இந்த விசயத்திலை எங்கட தலைவர் பிரபாகரனை பாராட்டாமல் இருக்க முடியாது...  

 

கருணா பிரிந்த போதும் கூட  தனது பிரதேசம் பற்று இல்லாதவனால் தாய் நாட்டின் மீது பற்று இருக்க முடியாது எண்டு பிரதேச வாதத்தில் இருக்கிற நன்மையை  மட்டும் தமிழனில் இருக்கு பழுதுகளில் இருந்து  நல்லதுகளை எடுத்து முன்நகர்த்திய  திறன் வியக்க  வைக்காமல் இல்லை... 

 

தமிழர்களின் அதிகூடிய கூட்டத்தை தனக்கு பின்னால் வைத்திருக்கும் ( வைத்திருந்த ) திறமையும் கூட அவரால் மட்டுமே முடிந்தது... 

 

 

அண்ணை எழுபதுகளில் எத்தனை குருப் இருந்தது என ஒருக்கா எழுதுங்கோ ?

 

அப்ப போருக்கு முன்னம் என்ன உளவியல் தாக்கத்திலை ஊரிக்கு ஊர் அடிப்பட்டு செத்தார்கள் எண்டு எழுதுங்கோ... 

 

பாட்டிகளிலை போய் தண்ணி அடிச்சு போட்டு எவனாவது எதையாவது சொன்னால் அது என்ன எண்டு கூட விளக்கம் இல்லாமல் இப்படியா பினாத்துறது...?? 

 

சரி விடுங்கோ...

 

நிதானமாக இருந்தால்  உளவியல் தாக்கம் எதனால் எப்படி எண்டு கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கோ பார்ப்பம்...  

 

PTSD என்பது முன்னாள் போராளிக்கு வந்திருந்தால் சாத்தியம் எப்படி முன்னாள் மாணவருக்கு...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எழுபதுகளில் எத்தனை குருப் இருந்தது என ஒருக்கா எழுதுங்கோ ?

 

 

அண்ணை

நித்திரையாகக்கிடப்பவனை  எழுப்ப முயன்றதுண்டு

நடிப்பவனை

வேற  வேலை கனக்க இருக்கு எனக்கு........ :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பது வருட யுத்தம் விட்டு சென்றத்தில் இதுவும் ஒன்று .

உயிர் இழப்பை விட  உளவியல்ரீதியான  தாக்கம் தான் யுத்தத்தின் கொடிய வடு  .

யாழில கூட பலர் உலகெங்கும் நடக்கும் அழிவுகளை பார்த்து சந்தோசப்படுகின்றார்கள் அதுவும் ஒரு வித உளவியல் தாக்கம் தான் Post-traumatic Stress (PTSD).

 

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் காலைத்தான் தூக்குமாம்.அது போல் இருக்கின்றது உங்கள் கருத்து.எதற்கெடுத்தாலும் அந்த 30வருடங்களுக்குள்ளேயே நிற்கின்றீர்கள்.அந்த காலகட்டத்தில் இப்படியான செயல்கள் நடக்கவில்லையென்பதை உணர மறுக்கின்றீர்கள்.
அத்துடன் 30 வருட காலத்துக்கு முன்னர் சனசமூக தலைவர் போட்டியில் கொலை,சங்கக்கடை தலைவர் போட்டியில் கொலை,கோவில் குழுக்களுக்குள் கொலை,சாதிக்கொலை,காதல் கொலை,ஊர்ச்சண்டையில் கொலை,பெண்தொடர்புகளில் கொலை,காணித்தகராறில் கொலை என நடக்கவில்லையா?
 
எல்லாம் தெரிந்தவர்போல் காட்டிக்கொள்ளும் தாங்கள் அரைவட்டத்திற்குள் நின்று புலம்புவது வேடிக்கைத்தனம். 
  • கருத்துக்கள உறவுகள்

 

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் காலைத்தான் தூக்குமாம்.அது போல் இருக்கின்றது உங்கள் கருத்து.எதற்கெடுத்தாலும் அந்த 30வருடங்களுக்குள்ளேயே நிற்கின்றீர்கள்.அந்த காலகட்டத்தில் இப்படியான செயல்கள் நடக்கவில்லையென்பதை உணர மறுக்கின்றீர்கள்.
அத்துடன் 30 வருட காலத்துக்கு முன்னர் சனசமூக தலைவர் போட்டியில் கொலை,சங்கக்கடை தலைவர் போட்டியில் கொலை,கோவில் குழுக்களுக்குள் கொலை,சாதிக்கொலை,காதல் கொலை,ஊர்ச்சண்டையில் கொலை,பெண்தொடர்புகளில் கொலை,காணித்தகராறில் கொலை என நடக்கவில்லையா?
 
எல்லாம் தெரிந்தவர்போல் காட்டிக்கொள்ளும் தாங்கள் அரைவட்டத்திற்குள் நின்று புலம்புவது வேடிக்கைத்தனம். 

 

 

அதெல்லாம் அவருக்கு தெரியும்

ஆனால் அதை ஒத்துக்கொண்டால்

புலிகளை  வசைபாட முடியாதே

அது  தமிழரின் குணம் என்றல்லவா ஆகிவிடும்.....

புலி பற்றி நான் எங்கு எழுதியிருந்தேன் என முடிந்தால் காட்டவும்.

பிக் மாட்ச் ஐ பற்றி நான் எழுத ஆனை கோட்டை யில் அடி பிடி நடந்ததாக ஒருவர் எழுதுகின்றார் .

இங்கு பலர்  ஒரு வகையில் உளவியல் பாதிப்பில் தான் இருக்கினார்கள் ,பலரின் பதிவுகள் அதற்கு சாட்சி .

 

அதனால்தான் உங்களின் உளவியல் Ph.D ஆராய்ச்சிகளை இங்கு பதியும்படி கேட்டிருந்தேன்.  மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது நீங்கள்.   போருக்கும் விளையாட்டுப் போட்டிக்கும் என்ன சம்பந்தம் இருந்தது என்பதைக் கொஞ்சம் விளங்கப்படுத்த முடியுமா?  PTSD என்ற ஒரு சொல்லை வைத்து மற்றவர்களை முட்டாளாக்கப் பார்த்தது நீங்கள்.   இந்தச் சம்பவத்திற்கும் PTSD இற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அங்கங்கே சில வார்த்தைகளையும் சில தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு மற்றவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள்.  அது அரசியலுக்கும் பொருந்தும்.  

 

யாழ். பாடசாலைகளுக்கிடையிலான சண்டைகள் பல வருடங்களாகவே பிரபல்யம்.  

 

 

ஐந்து வருடங்களாக வராத PTSD, இப்ப மட்டும் வந்ததாக்கும்.  முள்ளிவாய்க்காலிலை அந்த அழிவைக் கண்முன்னால் பார்த்த மக்களுக்கும் போராளிகளுக்கும் வராத அந்தப் PTSD, யாழ்ப்பாணத்திலை வாழ்ந்து வந்த ஒருவருக்கு ஒரு விளையாட்டுப் போட்டியிலை மட்டும் வந்ததாக்கும்

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது

Edited by நியானி

உடன் தேவை .

அண்ணை விசுகு - எழுபதுக்கு முதல் இருந்த குறுப்புகளின் பட்டியல்

தங்கை தமிழச்சி  -  பாடசாலைக்கிடையிலான சண்டை விபரம் .

தயா தம்பி  -ஆண்டு 83 முதல் நடைபெற்ற கொலைகள் பற்றிய விபரங்கள் ,முள்ளிவாய்க்கால் வரையிலான கொலை விபரங்கள் ,அதன் பின்னரான கொலை விபரங்கள் .

முடிந்தால் புள்ளி விபரங்களுடன்யாரும் வாருங்கள் பின்னர் விபரமாக கதைக்கலாம் அதைவிட்டு இனி சும்மா அலட்ட நான் விரும்பவில்லை .

உடன் தேவை .

அண்ணை விசுகு - எழுபதுக்கு முதல் இருந்த குறுப்புகளின் பட்டியல்

தங்கை தமிழச்சி  -  பாடசாலைக்கிடையிலான சண்டை விபரம் .

தயா தம்பி  -ஆண்டு 83 முதல் நடைபெற்ற கொலைகள் பற்றிய விபரங்கள் ,முள்ளிவாய்க்கால் வரையிலான கொலை விபரங்கள் ,அதன் பின்னரான கொலை விபரங்கள் .

முடிந்தால் புள்ளி விபரங்களுடன்யாரும் வாருங்கள் பின்னர் விபரமாக கதைக்கலாம் அதைவிட்டு இனி சும்மா அலட்ட நான் விரும்பவில்லை .

 

முடிஞ்சால்  1974 ம் ஆண்டுக்கு முன்னம் உங்கட மொழியிலை 30 வருசத்துக்கும் முன்னம்  தமிழர் யாரும் தமிழரால் அடித்தோ வெட்டியோ கொல்லப்படவில்லை எண்டதை  ஆதாரத்தோடை தாங்கோவன்...  நாங்களும் பேசுறம்... 

 

சரி ...   இப்பிடித்தான் எப்பவுமே ஒண்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் புசத்துவீங்களா....?? இதுவும் ஒரு வகையான மனோ வியாதிதான்... பெயர் Communication disorder...

 

 

உடன் தேவை .

அண்ணை விசுகு - எழுபதுக்கு முதல் இருந்த குறுப்புகளின் பட்டியல்

தங்கை தமிழச்சி  -  பாடசாலைக்கிடையிலான சண்டை விபரம் .

தயா தம்பி  -ஆண்டு 83 முதல் நடைபெற்ற கொலைகள் பற்றிய விபரங்கள் ,முள்ளிவாய்க்கால் வரையிலான கொலை விபரங்கள் ,அதன் பின்னரான கொலை விபரங்கள் .

முடிந்தால் புள்ளி விபரங்களுடன்யாரும் வாருங்கள் பின்னர் விபரமாக கதைக்கலாம் அதைவிட்டு இனி சும்மா அலட்ட நான் விரும்பவில்லை

 

 

 

1) இந்தக் கொலைக்கும் உளவியல் தாக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

2) விளையாட்டுப் போட்டியில் நடந்த கொலைக்கும் 30 வருட யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

3) விளையாட்டுப் போட்டியில் நடந்த கொலைக்கும் PTSD இற்கும் என்ன சம்பந்தம்?

4) யுத்தம் முடிந்து 4 வருடங்களுக்குப் பின்னர் ஏன் யாழில் வசிக்கும் மக்களுக்கு உளவியல் தாக்கமும்  PTSDம் வரவேண்டும்?

 

முதலில் இவற்றிற்கு விளக்கம் தாருங்கள்.  ஏனெனில் விளையாட்டுப் போட்டியில் நடந்த கொலைக்கும் யுத்தத்திற்கும், PTSD இற்கும் முடிச்சுப் போட்டது நீங்கள்.   முதலில் நீங்கள் தொடங்கியதை முடித்துவிட்டு மற்றவற்றிற்குப் போவோம்.

 

 

வன்னியில் மக்கள் சாகும்போது வராத உளவியல் தாக்கமும் PTSDம், பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் மட்டும் வந்திருக்கிறது.  இதனைக் கண்டுபிடித்த உங்களின் அறிவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தயா: புலிகள் ஒரு தமிழரையும் கொல்லவில்லை என்று சொல்லுங்கோவன்..

telo இல் இருந்தவர்களை புலிகள் கொன்ற விதத்தை பார்த்தவர் எவனாவது புலியை எதிர்ப்பானா??? அதுவும் குடும்பன் குட்டியுடன் இருக்கும் சாதாரண குடும்பத்தவர்கள்?

 

Telo, மாத்தையாவின் ஆதரவாளர்களுக்கு நடந்தது தெரிந்த படியால் தான் கருணா இவர்களின் கையில் அகப்படாமல் இவர்களுக்கு தண்ணி காட்டியது.....கருணா ஒவ்வொரு கட்டத்திலும் தான் பிரபாவிலும் பார்க்க புத்திசாலி என்பதை நிரூபிதிருகினர்றான்...

கிளிநொச்சியை மீட்டு புலியை வளர்த்ததிலிருந்து....கிளிநொச்சியை விழுத்தி இலங்கையிடம் கொடுத்தது வரை :)

  • கருத்துக்கள உறவுகள்

பழையதில் இருந்து 'பாடம் படிப்போம்' எனக் கூறிக்கொண்டு, புரையோடிப் போன 'பழைய' புண்களைக் கிளறுவதில் உள்ள சுகம், எவ்வளவு அலாதியானது...! :icon_mrgreen:

 

புதிய 'காயங்கள்' வெளியே தெரியாமலிருக்கப் பழைய காயங்களைக் கிளறிக்கொண்டிருப்பது, சாணக்கியன் 'கௌடில்யா' காட்டி விட்ட வழிகளில் ஒன்று..! :blink:

புலிகள் காலத்தில் இவ்வாறு எதுவும் நிகழவில்லை. இது போராட்ட காலத்துக்கு முந்தைய சண்டியர் வரலாற்றின் மீளுகை. கொழும்பு சிங்கள காடை காலாசாரத்தின் பரப்புகை.றொயல் தோமியன் போட்டிகளில் இது சாதாரணம்.இங்கு சிலருக்கு புலி போபியா.

 

84 வரை றோயல் தோமியன் கிரிக்கெற் மாட்சுகளில் இப்படியான வன்செயல்களோ அல்லது கொலைகளோ இடம்பெற்றதில்லை என்பதை றோயலின் பழைய மாணவன் என்ற ரீதியில் சொல்லிக் கொள்ளுகிறேன்.

 

84 இல் புலம் பெயர்ந்ததால்.. அதற்குப் பிறகு என்ன நிலை எனத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருட யுத்தம் விட்டு சென்றத்தில் இதுவும் ஒன்று .

உயிர் இழப்பை விட  உளவியல்ரீதியான  தாக்கம் தான் யுத்தத்தின் கொடிய வடு  .

யாழில கூட பலர் உலகெங்கும் நடக்கும் அழிவுகளை பார்த்து சந்தோசப்படுகின்றார்கள் அதுவும் ஒரு வித உளவியல் தாக்கம் தான் Post-traumatic Stress (PTSD).

 

சென். பற்றிரிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்குமான விளையாட்டு போட்டிகளில் வன்முறை இடம்பெறாவிட்டால் அது அசாதாரணமனதாக காணப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அது எழுபதுகளில் போருக்கு முற்பட்ட காலம். போர்க்காலத்தில் சாதிக்கலவரங்கள், விளையாட்டுக் கலவரங்கள், கூலிக்கு கொலை  செய்யும் குழுக்கள் செயற்படவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பெரிய ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் இருந்தன. கலவரங்களை செய்யும் வன்முறை குழுக்கள்,  தாம் ஆயுதம் தாங்கிய இயக்கங்களை எதிர்கொள்ள தாமும் ஆயுதம் ஏந்த வேண்டும் என கருதி அதற்காக இந்தியா போய் இந்திய றோவிடம் பயிற்சியும் ஆயுதங்களும் பெற்று திரும்பின. சென். பற்றிரிக்ஸ் கல்லூரி பகுதியில் இப்படி திரும்பி ஆயுதத்துடன் வந்த குழு ஒன்றின் பெயர் செவென் டேலா ஆகும். இதில் ஆரம்பத்தில் எழு பேர் இருந்ததால் இதன் பெயர் செவென் டேலா. தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் அமைப்பு இந்த செவென் டேலா அமைப்பை சில வாரங்களிலேயே வடகிழக்கை விட்டு ஆயுதங்களை பறித்துவிட்டு வெளியேற்றி விட்டது.

 

இன்றைய நிலையில் பொலிசாரே இந்த குழுக்களை கட்டுபடுத்த முடியும். ஆனால் அவர்களுக்கு இதை செய்வதால் எந்த நன்மையையும் கிடைக்காது. பொதுவாக பதவி உயர்வு, சம்பள உயர்வு, போனஸ் போன்ற நன்மைகளும், இதை செய்யாவிட்டால் பதவி இறக்கம், இடமாற்றம் போன்ற பாதிப்புக்களுமே பெரும்பாலானவர்களை திறமாக வேலை செய்ய ஊக்குவிக்கும். பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் வேலை செய்வதாலும் பாதுகாப்பு அமைச்சுடன் வட-கிழக்கின் அரசியல் தலைவர்களுக்கும் சமுக தலைவர்களுக்கும் நல்லுறவு இல்லாத காரணத்தாலும் பொலிசாருக்கு இவ்வாறான ஊக்குவிப்புகளை வழங்க மக்கள் ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான ஊக்குவிப்புகளை மாகாண சபை தானாக மக்களின் நன்கொடைகளுடன் செய்ய முடியுமா என யாழ் களத்தில் ஆராய்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

This is all colombo rowdy culture now in Jaffna. :(

போர் பற்றியோ அல்லது போரின் பின்னாலான அதன் உளவியல் தாக்கங்கள் பற்றியோ ஐந்தறிவு உள்ளவர்களிடம் பேசி ஆக போவது ஒன்றும் இல்லை .

போரையும் அதனால் உண்டாகும் உயிர் இழப்பையும் பார்த்து விசில் அடிக்கும் பேர்வழிகளிடம் கதைத்து ஆக போவது ஒன்றும் இல்லை .

சிறுமிகளை பிடித்து மொட்டை அடித்து முன்னரங்கில் விட புல்லரித்த கூட்டம் எதுவும் செய்யும் எதையும் எழுதும் .

உலக போர் ,கொரியன் போர் வியட்னாம் போர் ,மத்திய கிழக்கு யுத்தம் இவற்றின் தாக்கத்தில் இருந்தே இன்னமும் மனித இனம் உளரீதியில் வெளிவரவில்லை ,இன்னமும் இரத்த வாடை மாறாத எமது யுத்தத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையாம் .

 

எனது முடிவை திரும்ப திரும்ப பலர் சரி என்று நிறுவிக்கொண்டே இருக்கின்றார்கள் ."நாட்டில் பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவன் தன்னை நியாயப்படுத்த எதுவும் எழுதுவான் எதுவும் சொல்லுவான் "

  • கருத்துக்கள உறவுகள்
பொன் அணிகளின் போர் விவகாரம்: நால்வர் கைது
ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2014 10:27
சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா
 
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே  ஏற்பட்ட கைகலப்பில் இளம் தந்தையான ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (23) என்பவர் அடித்து கொலைசெய்யப்பட்டார். 
 
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் நால்வரை நேற்று மாலை கைதுசெய்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார்  இன்று (16) தெரிவித்தனர். 
 
சுந்தரலிங்கம் சிவகர் (22), சிவசங்கநாதன் மதுஷன் (20), இன்பசீலன் பிருந்தாமன் (21), ரமேஷ; கொன்ரன்கரன் (21) என்பவர்களையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
 
சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குக்கும் இடையில் வருடாந்தம் பொன் அணிகளின் போர் துடுப்பாட்டப் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது. 
 
26 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர்கள் கொண்ட இந்தப் போட்டியின் ஆட்டம் நேற்று யாழ்ப்பாணக் கல்லூரியில் நடைபெற்றது. 
 
இதன்போது திடீரென இரு பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்றப்பட்டது. இக் கைகலப்பில் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரியின் பழைய மாணவனான செட்டியார்தெரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளார். 
 
மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்ட போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களை தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
 
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களை தேடி வருவதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் எனும் துடுப்பாட்ட விளையாட்டு, தற்போதைய இளையோருக்கும் தேச அபிமானிகளுக்கும் ஒரு முக்கியமான உயிர்போகும் விளையாட்டாக பொதுசன ஊடகங்களாலும், அரசியல் வியாதிகளாலும், அரசை ஆளுவோராலும் கருதப்படுகின்றது. முள்ளிவாய்கால் அவலம் நடாத்தி முடிக்கப்பட்ட காலகட்டம் இந்தியாவில் ஐ பி எல் துடுப்பாட்டப்போட்டி நடாத்தப்பட்ட காலத்திலாகும். ஆகவே கிரிக்கெட் எனும் இல்லாமற்போன அல்லது காலவதியான விளையாட்டை பிரபல்யப்படுத்தி அதனூடே தேசத்தின் நலனைக்காணும் அரசியலை திட்டமிட்டே ஆள்பவர்கள் இப்போது மக்கள் மத்தியில் புகுத்திவிட்டனர்.

 

பகிஸ்தான் விளையாட்டில் வென்றதுக்குகாகக் கைதட்டிய காஸ்மீரத்து மாணவர்கள் இருவர்கள்மீது இந்திய அடக்குமுறை அரசு தேசவிரோத வழக்கினைப் பிரயோகிக்க முற்பட்ட வரலாறு கடந்த இருவாரங்களில் நடந்தேறியுள்ளது.

 

முப்பது வருடத்துக்கு முன்பு நான் பார்த்த இப்படியான விளையாட்டுப்போட்டிகளில் எவருமே வன்முறையைப் பிரயோகிக்கவில்லை. அப்போது இப்படியான தயார்படுத்தல்கள் ஊடக முக்கியத்துவங்கள் இருக்கவில்லை. "கொடியேறுதல்" என சிலேடையாகப் பரிமாறப்படும் ஆனைக்கோட்டை கள்ளு சீசன் தொடக்கத்தின் கள்ளுப்பிரியர்கள் மற்றும் இளசுகள் ஆகியோரது உச்சபட்சக் கொண்டாட்டகாலம் இதுவே.    இந்தகிரிக்கெட்டை வெறு விளையாட்டாகவே பார்த்துள்ளார்கள். இப்போது இது ஒரு கௌரவப்பிரச்சனை.

 

அது எப்படி எனில் லண்டன் மாநகரத்தில் வாழும் சிறுவர்கள் கிறமர் பாடசாலைக்கு எடுபடுவதுபோன்றோ, அன்றேல் இலங்கையின் புலமைப்பரிசில் சோதனைக்காக சிறுவர்களை வதைப்பதுபோன்றதெ.

 

நானும் சிறுவயதில் புலமைப்பரிசிலுக்கான பரீட்சையில் பங்குபற்றியவனே ஆனால் அதற்கு முதல்நாள் வரைக்கும் அதுபற்றிய எந்தவித புரிதலும் எனக்கு இருந்ததில்லை, காரணம் அதன் முக்கியத்துவம் அப்போது ஊடகங்களும் சமூகத்தாலும் பெரிதுபடுத்திக்காட்டப்படவில்லை.

 

தவிர, அன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணம் இரு வேறுபட்ட அடக்குமுறைகளுக்குள் இருந்தது, ஒன்று சாதீயம் இன்னுமொன்று அரசது படித்த மேல்தட்டுவர்க்கத்துக்குச் சாதகமான சட்டம் ஒழுங்குமுறை. தவிர மேல்மட்டத்தினருக்குமட்டுமே உரிய தாராளப்பணப்புளக்கம்.

 

இதில் தாராளப்பணப்புளக்கமும் சாதீயமும் ஓரளவு உடைக்கப்பட்டுவிட்டது. எதுவும்செய்துகொள்ளலாம் எனும் மனப்பான்மையும் கோடு கச்சேரி இவைகளுக்கு இருக்கும் பயம் இவை அனைத்தும் உடைத்தெறியப்பட்டுவிட்டது.

 

இருந்தாலும் ஊர்சண்டியர்கள் அப்போதும் இருந்தார்கள் பனங்கிளங்கு சாப்பிட்டுக்கொண்டு தெருவில் வந்தவரை களுத்து அறுந்து விழவெட்டி சாப்பிட்ட பனங்கிளங்கு தொண்டைக்குள்ளிருந்து வெளித்தெரிந்ததைப் பார்த்திருக்கிறேன். கரையூர் மணியத்தை மல்லாகத்து வாய்பேசமுடுயாத பெடியன் ஒருவன் விறகுகாலைக்குள் வைத்து வெட்டிவீழ்த்திய   பிணத்தைப் பார்த்திருக்கிறேன்

 

கெட்டவன் நடேசனின் மூத்தவன் பிறேமனை யாழ் ராஜாதியேட்டருக்கு அருகில் இருக்கும் அழகிரிசாமி சாராயம் விக்கும் முட்டுச்சந்துக்குள் வைத்து "போயா" என்பவன் வெட்டிவீழ்த்திய பிணத்தை நான் பார்த்திருக்கிறேன்.

 

அந்தக்காலத்தில் சேல்ஸ் ரெப்பால் சினாபின்னமாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட யாழ்ப்பாண அழகி மாலினி கொலை வழக்கு பிரசித்தமும் சுவாரசியமும் நிறைந்தது.

 

தவிர, யாழ்நகரச் சாலைகளில் இனங்காணப்பட்ட விபச்சாரிகள் திரிந்ததையும் அதில் "சோடாமூடி" என்று இடுபெயரால் அழைக்கபடும் பெண்ணொருத்தியும் இருந்தார் என்பது ஊர்ப்பிரசித்தம்.

 

இவைகளைப்போல் நிறையவே இருக்கு கம்பர்மலை கொலைகள் இவைபோல். கீரிமலை விசாளியின் மக்கள் தொடர்புடைய கொலைகள். சுண்ணாகம் வாழைக்கிட்டி வியாபாரி சின்னவன் கொலை.

 

மேலும் ஊர்ச்சண்டியர்கள் வரிசையில் கொட்டடித் தெய்வேந்திரம், நாயர்மார்கட்டு ஞானப்பிரகாசம், ஆனைப்பந்தி சொக்கைவீங்கி அரசரத்தினம், பெருமாள் கோவிலடி நகுலன் மற்றும் ஜப்பான்,  ஆரியகுளத்தடியில இன்னோரன்ன பலர். தாராக்குளம் கொய்யாத்தோட்டம், பாசையூர், மணியந்தோட்டம் இவகளுக்கும் தெருச்சண்டியன் ஊர்ச்சண்டியன் கோஸ்டிச்சண்டியன், அதவிட பருத்தித்துறையில் வீரவாகு கூட்டம். அவர்களது வழிவந்தவர்களான திருகோணமலை துறைமுகத்தை அண்டிய சண்டியர்கூட்டம்.

 

கொக்குவில் பகுதியில் சுருட்டுக்கலவரத்தை அடக்குவதற்காக சுருட்டுக்கொட்டில் முதலாழிமார்களால் உருவாக்கப்பட்ட கூட்டம். கள்ளுக்கோப்பிரேசன் முறை வருவதற்குமுன்பு கள்ளுக்கடை சாராயக்கடைகளால் ஒழுங்குசெய்யப்பட்ட தெருச்சண்டியர்கள் இவர்களும் முப்பதுவருடத்துக்கு முன்பு இருந்தார்கள் கொலைகளைச்செய்தார்கள் அனால் இவை அனைத்தையும் கொண்டுவருவதற்கு ஊடகங்கள் இல்லை. மித்திரன் பத்திரிகையில்வரும் "சதக் சதக் கத்திக்குத்து" போன்ற தலைப்புச் செய்திகளுக்கு இவர்கள்தான் தீனிபோட்டவர்கள்.

 

இவைகள் எல்லாம் முப்பதுவருடங்களுக்கு முந்தினவயே.

 

 ஆனைக்கோட்டை கள்ளைகுடித்துவிட்டு படித்த மணோ, மொக்குமணோ, வெறுவாய்சப்பி விசா, வைமன் பஞ்சு, தபே, பொச்சு ஆனந்தன் இவர்களுடன் குத்தாட்டம்போட்ட யாழ் இந்துவின் மக்களுக்கு எதுபற்றியும் தெரியவேண்டுமெனும் அவசியம் இல்லை.

 

 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒருவரின் உயிர் போகும் சம்பவம் சோகமானது

கிரிக்கெட் ஒரு வன் முறை இல்லாத நுட்பமான (skillful) விளையாட்டு, அதை எல்லோரும் விளையாட முடியாது, ஆனால் குழப்ப ஒரு கூட்டமே திரியுது.

எல்லாம் அர்ஜூன் சொன்ன மாதிரி மூர்க்கத்தனத்தின் வெளிப்பாடு...எப்போதும் தங்களை பெரிய ஆட்கள் என்ற நினைப்பால் வருவது....இது அவர்களுக்கு மட்டும் இல்லை..உலகம் முழுக்க இதே பிரச்சனை...

 

சின்ன சின்ன பிரச்சனைகளுக்குமாக நடக்கும் குத்து வெட்டு....

நான் நினைகின்றேன்...உலகின் பொற்காலம் 60-70 களாக இருந்திருக்கலாம்....இனியும் உலகு அந்த காலத்திற்கு போகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

முடிஞ்சால்  1974 ம் ஆண்டுக்கு முன்னம் உங்கட மொழியிலை 30 வருசத்துக்கும் முன்னம்  தமிழர் யாரும் தமிழரால் அடித்தோ வெட்டியோ கொல்லப்படவில்லை எண்டதை  ஆதாரத்தோடை தாங்கோவன்...  நாங்களும் பேசுறம்... 

 

சரி ...   இப்பிடித்தான் எப்பவுமே ஒண்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் புசத்துவீங்களா....?? இதுவும் ஒரு வகையான மனோ வியாதிதான்... பெயர் Communication disorder...

முடிஞ்சால்  1974 ம் ஆண்டுக்கு முன்னம் உங்கட மொழியிலை 30 வருசத்துக்கும் முன்னம்  தமிழர் யாரும் தமிழரால் அடித்தோ வெட்டியோ கொல்லப்படவில்லை எண்டதை  ஆதாரத்தோடை தாங்கோவன்..           ?????????  நடக்காததிற்கு ஆதாரமா??

Edited by vaasi

  • கருத்துக்கள உறவுகள்

1926795_709397579111880_1442058208_n.jpg

 

போதை ஏறிய கரங்கள்,

உன் மீது மத்தளம் வாசித்திருக்கின்றன!

 

திமிர் ஏறிய பாதங்கள்,

உன் மீது தாண்டவமாடி இருக்கின்றன!

 

உனது களங்கமில்லாத முகத்தை,

முக நூலில் கண்டிருக்கிறேன்!

 

இன்னொரு நண்பனின் பதிவில்,

எதேச்சையாக,

நீ எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாய்!

 

உன்னை உனது தங்கைகள்,

தங்கள் கனவு வாழ்க்கைகளின்,,

திறவு கோலாக எண்ணியிருக்கலாம்!

 

உனது தாய் கூட ,

இன்னொரு மீட்பராக நினைத்திருக்கலாம்!

 

பூமாலைகளும், வாசனைகளும்,

ஏன்... அந்தச் சிலுவையும் கூட,

உனது அலங்கோலங்களை,

மறைக்கத் தானே முயல்கின்றன!

 

மனித நாகரீகம் மீண்டும்,

மரங்களில் ஏறுகின்றது, தோழனே!

பாவப் பட்ட இந்த மனிதர்களிடம்,

மீண்டும் வர எண்ணாதே ! 

 

ஆழ்ந்த அஞ்சலிகள், நண்பனே! :o

 

 

 

 

 

Edited by புங்கையூரன்

முடிஞ்சால்  1974 ம் ஆண்டுக்கு முன்னம் உங்கட மொழியிலை 30 வருசத்துக்கும் முன்னம்  தமிழர் யாரும் தமிழரால் அடித்தோ வெட்டியோ கொல்லப்படவில்லை எண்டதை  ஆதாரத்தோடை தாங்கோவன்..           ?????????  நடக்காததிற்கு ஆதாரமா??

 

கும்பிடுகிற சாமி கூட  வேலோடையும் சூலத்தோடையும்  கத்தியோடையும் தான் இருக்குது...  இது கலாச்சாரத்தின்ர வெளிப்பாடு...  தான் எப்படி இருக்கிறானோ அதன்  உன்னத திறனின் வெளிப்பாடுதான் கடவுள்...  கடவுளை அப்படி தான் தமிழன் படைத்து வைத்து இருக்கிறான்...  ஆயுதங்களை சுமக்க தான் கடவுளுக்கு பல கைகள்... 

 

காக்கிறதுக்கு கடவுள் , அழிக்கிற கடவுளை எல்லாம் குப்பிட்டவன் படைக்கிற கடவுளை கும்பிடுகிறதில்லை...  காரணம் எண்ண ஓட்டம் அப்பிடி...  

 

போர்களும் வெற்றிகளும் தான்  மிகமுகியமான தாயாதி சண்டைகள் தான்  தமிழர்களில் யார் பெரியவர் எண்டதை தீர்மானித்த வரலாறு  ஈழத்திலையும்  தமிழகத்திலையும் நிறைஞ்சு போய் இருக்கு  அதுக்கு ஆதாரம் வரலாறுகளாகவே இருக்கு... 

 

இதுதான் தமிழன்...  வழமையாக புலிகளிலை பழி போட்டு பழகின ஆக்களுக்கு சிலவேளை ஒத்துக்கொள்ள கஸ்ரமாக இருக்கலாம்... 

 

 

 

எல்லாம் அர்ஜூன் சொன்ன மாதிரி மூர்க்கத்தனத்தின் வெளிப்பாடு...எப்போதும் தங்களை பெரிய ஆட்கள் என்ற நினைப்பால் வருவது....இது அவர்களுக்கு மட்டும் இல்லை..உலகம் முழுக்க இதே பிரச்சனை...

 

சின்ன சின்ன பிரச்சனைகளுக்குமாக நடக்கும் குத்து வெட்டு....

நான் நினைகின்றேன்...உலகின் பொற்காலம் 60-70 களாக இருந்திருக்கலாம்....இனியும் உலகு அந்த காலத்திற்கு போகுமா?

 

 

உண்மைதான் ஈழத்திலை போர் ஏற்பட்ட காரணத்தாலை உலகமே போர் வெறி கொண்டு இருக்குது...  

 

உங்களுக்கு பிரச்சினை இல்லை கவலை இல்லாமல் கடைக்கு போய் பாண் வாங்கி கொண்டு வந்து நிம்மதியாய் சாப்பிடுவியள்... 

Edited by தயா

தயா: நீங்கள் முன்னாள் ** தானே..வேறு என்ன சொல்லுவீர்கள்....பாவம்....இப்போ முந்தி மாதிரி வேருட்டமுடியாது....தூற்ற தான் முடியும் :)

 

நான் சொன்னது இது யாழில் மட்டும் நடக்கும் செயல் அல்ல உலகம் முழுவதுமே...மனிதர்கள் கொலை வெறியோடு திரிகிறார்கள்....கடந்த மாதம்...நான் வசிக்கும் இடத்தில் ஒரு வீட்டின் பார்ட்டிக்கு அழைப்பு இல்லாமல் ஒரு கூட்டம் வர..அதை பார்டி நடத்தியவர்கள் வெளியேற்றிய கோபத்தில்...பொறுத்திருந்து..அந்த பார்டியால் வந்த ஒரு 16 வயது பெடியனை ...அதேயளவு வயதுள்ளவர்கள் குத்தி கொன்றார்கள்....என்று தான் சொல்லவந்தேன்

Edited by naanthaan

தயா: நீங்கள் முன்னாள் ** தானே..வேறு என்ன சொல்லுவீர்கள்....பாவம்....இப்போ முந்தி மாதிரி வேருட்டமுடியாது....தூற்ற தான் முடியும் :)

 

நான் சொன்னது இது யாழில் மட்டும் நடக்கும் செயல் அல்ல உலகம் முழுவதுமே...மனிதர்கள் கொலை வெறியோடு திரிகிறார்கள்....கடந்த மாதம்...நான் வசிக்கும் இடத்தில் ஒரு வீட்டின் பார்ட்டிக்கு அழைப்பு இல்லாமல் ஒரு கூட்டம் வர..அதை பார்டி நடத்தியவர்கள் வெளியேற்றிய கோபத்தில்...பொறுத்திருந்து..அந்த பார்டியால் வந்த ஒரு 16 வயது பெடியனை ...அதேயளவு வயதுள்ளவர்கள் குத்தி கொன்றார்கள்....என்று தான் சொல்லவந்தேன்

 

மனிதனுக்கு ஏமாற்றமும் வஞ்சனைகளும் கூட கோபத்தை கட்டுக்குள் கொண்டுவராமல்  ஏதாவது ஒரு இடத்தில் வெளியில் வர முற்படுகிறது...   அடக்கு முறைகளூடாக  செய்யப்படும் நிலையே ஒரு மணிதனை வேறு விதமாக மாற்றுகிறது...   இதில் சாதுவான மிருகங்களை கூட  உதாரணத்துக்கு எடுத்து கொள்ளலாம்... 

 

இண்டைக்கு அதுக்கு எல்லாம் காரணமாக இருப்பவர்கள் ஆட்சியில் இருப்பவர்களாக தான் இருக்கிறார்கள்... 

 

இதை எல்லாம் விளங்கி கொள்ளும்  அறிவோட நீங்கள் எல்லாம் இருக்க முடியாது என்பதுகு கூட முக்கிய காரணம்  உங்களுக்கு எல்லாம் இருக்கிற வழமையான புலிக்காய்ச்சலே... 

 

இதுக்கு நல்ல மனநல மருத்துவரை நாடுவது உங்கள் விருப்பம் இல்லை எண்டால்  சந்தோசமாக பாண் வாங்கி சாப்பிட்டு போட்டு கவுண்டு அடிச்சு படுத்து கொண்டே  புலிகளை வளமை போல தூற்றி கொண்டு திரியுங்கோ...  என்னக்கென்ன வந்துது...?? 

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.