Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் விமானதில் பயணம் செய்யும்போது லெபனான் மற்றும் வட இந்திய அழகிகள் பணிப்பெண்களாக இருந்தால் அவர்களை பார்த்து ஜொள்ளுவிடுவன் வேறு பெண்கள் என்றால் முகில் கடல் தரை போன்றவற்றை ரசித்துக் கொண்டு இருப்பேன். சிலவேளைகளில் அருகில் நல்ல பார்ட்டி இருந்தால் ஒருமாதிரி மடக்கி விடுவன்! :)

Edited by யாழ்வாலி

  • Replies 122
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தி நகரிலை 16 மாடி மட்டுமே உள்ள இந்த விடுதியிலை உங்களிற்கு 18வது மாடியிலை அறை தந்திருக்கிறாங்கள்.அப்போ அந்தரத்திலையே  படுத்திருக்கிறீங்கள் கற்பனைதானே .தொடருங்கள்.

 

 

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தி நகரிலை 16 மாடி மட்டுமே உள்ள இந்த விடுதியிலை உங்களிற்கு 18வது மாடியிலை அறை தந்திருக்கிறாங்கள்.அப்போ அந்தரத்திலையே படுத்திருக்கிறீங்கள் கற்பனைதானே .தொடருங்கள்.

அதெல்லாம் தெரியாது. எனது அறை எண் 18** என்று இருந்தது.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் நண்பர்களோடு இரவு தண்ணியடிக்கப்போயிருக்கிறேன்  அதனால் இந்த விடுதி நல்ல பழக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் நண்பர்களோடு இரவு தண்ணியடிக்கப்போயிருக்கிறேன்  அதனால் இந்த விடுதி நல்ல பழக்கம்.

 

இப்ப எனக்கு ஒரு சந்தேகம்.. இரட்டைப் படை எண்களில் தளங்களை வைத்துள்ளார்களோ என்று. ஏனென்றால் மின்தூக்கியில் (Elevator) 20 வரையில் பார்த்த ஞாபகம். படங்களையும் பார்த்தால் அவ்வளவு உயரமான கட்டடமாகத் தெரியவில்லை. தவறு இருந்தால் வருந்துகிறேன்.  :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எனக்கு ஒரு சந்தேகம்.. இரட்டைப் படை எண்களில் தளங்களை வைத்துள்ளார்களோ என்று. ஏனென்றால் மின்தூக்கியில் (Elevator) 20 வரையில் பார்த்த ஞாபகம். படங்களையும் பார்த்தால் அவ்வளவு உயரமான கட்டடமாகத் தெரியவில்லை. தவறு இருந்தால் வருந்துகிறேன்.  :huh:

 

சரி வருந்துவதை விடுத்து தொடருங்கள்.அடுத்தடைவை அங்கு  போகும் போகும் போது  அந்த மாயா வை .....சும்மா பர்த்து விட்டு வருகிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்னர் உங்களிடமிருந்து இப்படியான ஒரு எழுத்து வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி இசை. மிகவும் நகைச்சுவை உணர்வுடன் எழுதியுள்ளீர்கள். காண நாட்களின் பின் யாழில் இப்படி ஒரு பதிவைப் பார்க்க ஆனந்தமாக உள்ளது. நான் இத்தனை நாட்கள் எப்படித் தவறவிட்டேன் என்றும் விளங்கவில்லை.ஆனாலும் பெண்ணும் படுக்கையும் இன்றி ஆண்களால் ஒரு நல்ல பதிவைத் தர முடியாதா??? :( :( அதுமட்டும் தான் வேதனையாக இருக்கு. தொடருங்கள்  நீண்ட நாட்களுக்குப் பின் வசித்தபோது சிரிப்புடன் வசித்த பதிவு. :D:lol:

சுந்தர் சி யில் இருந்து James  Hadley  Chase இன்  கதையாக மாறி  பறக்குது. தொடருங்கள் .

 

சாத்திரி இப்படி நொட்டை எல்லாம் பார்த்து கதை எழுத முடியாது .கதையை வாசியுங்கோ அறை நம்பரை பிறகு பார்ப்பம் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும், இசை ஏதோ, அமெரிக்கத் தீர்மானத்தைப் பற்றி வெட்டி விழுத்தப் போகிறாராக்கும் என்று ஆரம்பத்தில் வந்து. பச்சையைப் போட்டுவிட்டுப் போய் விட்டேன்!

 

பிறகு பார்த்தால், அமெரிக்கத் தீர்மானத்துக்கு, 'ஆட்டுத் துவசம்' முடிந்த பின்னரும் திரி தொடர்வதால், சந்தேம் வர ஓடிவந்து பார்த்தேன்!

 

மனுசன், எயர் ஹொஸ்டஸ், ஹோட்டல் சேர்வர், எண்டு தென்னிந்தியாவைப் பிரிச்சு மேயிறது தெரிய வந்தது..!

 

தொடருங்கள், இசை...!

 

இனிமேல் தலையங்கத்தைப் போடேக்குள்ள, 'கோடம்பாக்கத்தில் இசைக்கலைஞன்' எண்ட மாதிரிப் போடுங்கள்! :D  

அலையும் தலையங்கத்தைப் பார்த்திட்டு எட்டிப் பார்க்கேலை :o ஏதோ பன்பலான திரி போலை கிடக்கு :D . எதுக்கும் ஆறுதலாய் எழுதப்பு இசை. கனக்க எண்டா வாசிக்க மனம் வராது. :rolleyes:  :D 
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எனக்கு ஒரு சந்தேகம்.. இரட்டைப் படை எண்களில் தளங்களை வைத்துள்ளார்களோ என்று. ஏனென்றால் மின்தூக்கியில் (Elevator) 20 வரையில் பார்த்த ஞாபகம். படங்களையும் பார்த்தால் அவ்வளவு உயரமான கட்டடமாகத் தெரியவில்லை.

 

 

bike&barrel%201.jpg

 

 

 

2003 ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட்ட இந்த சென்னை ரெசிடென்சி டவர் (4 நட்சத்திர ஓட்டல்) சுமார் 26 கிரவுண்டில் ரூ. 50 கோடிகளில் 16 அடுக்குகளை கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.  இதன் உரிமையாளர்கள் கட்டிடதுறையில் பிரகாசிக்கும் தில்லியிலுள்ள 'சூட்' மற்றும் சென்னையை சேர்ந்த 'அப்பாசாமி' இருவரின் கூட்டு நிறுவனமாகும்(Joint Venture)

 

இதில் மொத்த அறைகள் 176. சுமார் 200 வாகனங்களை நிறுத்த இரண்டு தரைகீழ் அடுக்குகளும் உள்ளன. 11 வகையான வடிவமைப்பு கலைத்திறனில்(Themes) அறைகள் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.

 

http://en.wikipedia.org/wiki/Residency_Towers_Chennai

 

 

 

Residency30.jpg?1384333673

 

Residency17.jpg?1384335315

 

Residency9.jpg?1384334172

 

Residency24.jpg?1384334942

 

Residency33.jpg?1384329083

 

 

 

 

'டங்கு' ஜொள்ளிய இடம் இதுதானோ?    :lol:

 

' The Crown ' (Roof Top)

 

Residency35.jpg?1384377773

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் தெரியாது. எனது அறை எண் 18** என்று இருந்தது.. :icon_idea:

சரி, பதின்மூன்றாம் தளம் பொதுவாக எண்ணப்படுவதில்லை!

 

மற்றது சாத்திர சம்பிரதாயப்படி, வேறொரு இலக்கமும் தவிர்க்கப் பட்டிருக்கலாம்!

 

அப்படியானால், இசை சொல்வது சரியாக இருக்கும் போலவே இருக்கிறது! :D

 

இல்லாவிட்டால், நம்மாள் 'Attic' இல தான் படுத்தெழும்பியிருக்கிறாரோ? :o  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் எப்பவும் இரண்டு வசனத்தில் எழுதுபவர் என நினைத்திருந்தேன் . அப்பா....... இப்படியெல்லாம் தொடர் எழுதிக் கலாய்ப்பாரா... :D

சூப்பரா இருக்கு இ க அண்ணே :D 
சிரிப்புக்கு எழுதவென்றால் உங்களை விட வேறை யாரும் உள்ளனரோ இக்களத்தில் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 11:

 

விடுதியை காலி செய்துகொண்டு வாடகை காரில் விமான நிலையத்தை வந்தடைந்தேன். நள்ளிரவு தாண்டிய பயணம்.

 

விமானநிலைய வாசலிலேயே கெடுபிடியை ஆரம்பித்துவிடுகிறார்கள்.  :huh: கடவுச்சீட்டு, விமானச்சீட்டு எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். இந்தக் காவல் வேலைக்கு இருப்பவர்களில் ஏறக்குறைய அனைவருமே வட இந்தியர்கள்தான். இவர்களுக்கு தமிழ் தெரியாது என்பது செய்தியல்ல. ஆனால் ஆங்கிலமும் அரைகுறை. இந்தியில் தமக்குள் சரளமாகப் பேசிக்கொள்கிறார்கள். அடுத்த முறை தமிழகத்துக்குப் போகமுன்னம் ஒரு இந்தி பண்டிட்டிடம் போகவேண்டும்போல் உள்ளது.  :wub:

 

ஒருவழியாக சிறைச்சாலைக்குள் செல்கிறோமோ என்கிற உணர்வை மட்டுப்படுத்திக்கொண்டு பயணப்பொதிகளையும், விமானச் சீட்டையும் அந்த விமான நிறுவன ஊழியரிடம் கொடுத்தேன். அங்கு இளம் தமிழர்கள் வேலையில் இருந்தார்கள். அவர்களது சேவை நட்புணர்வுடனும், மிகவும் உதவிகரமாகவும் இருந்தது. உள்ளூர் விமானங்களில் குறைந்த அளவு எடையையே அனுமதிக்கிறார்கள். தெரியாத்தனமாக சென்னையில் வாங்கிய ஆடைகள், பொருட்களும் சேர்ந்துகொள்ள எடை அதிகரித்துவிட்டது. ரூ. 2500 தண்டம் கட்டவேண்டியதாகிவிட்டது. ஒருவழியாக சில மணிநேர காத்திருப்பின்பின்னர் விமானம் ஏறினேன்.

 

air-india1.jpg

 

மொத்தமாகவே ஒரு 15 பேர்தான் பயணிகள் இருந்தோம். கிட்டத்தட்ட ஒரு நூறு பேர் பயணிக்கலாம்போல் இருந்தது. என்னை அவசர வெளியேற்று வழியில் உள்ள இருக்கையில் விட்டிருந்தார்கள். 

 

விமானம் புறப்பட ஆயத்தமாகும்போது ஒரு விமானக்கன்னி என்னிடம் வந்தாள். சிரிப்பைப் பார்த்தால் தமிழ்க்கன்னிபோல் இருந்தது.  :huh: அவசர வெளியேற்றக் கதவை எப்படித் திறக்க வேண்டும்.. இறக்கை மீது எப்படிக் குதிக்க வேண்டும் என்று சொல்லித்தந்தாள். 'நீங்கள் சொன்னால் இப்பவே குதிக்கிறேன்' .. :wub: மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்..  :lol:

 

கிட்டத்தட்ட ஒரு மணிநேரப் பயணத்தின்பின் திருச்சியை வந்தடைந்தேன். மணி பின்னிரவு 2:30க்கு மேல் ஆகிவிட்டிருந்தது. வழக்கம்போல் விமான நிலைய வாடகைக் காரை அமர்த்தலாம் என்று பார்த்தால் முடியவில்லை. வாசலில் நின்ற ஒரு வாடகை கார் ஓட்டுநரிடம் போகவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டேன்.

 

"போலாம் சார்.."

 

"இடம் தெரியுமா உங்களுக்கு?" ஒரு சந்தேகத்தில் கேட்டுவைத்தேன்.

 

"ஆ.. தெரியும் சார்.."

 

ஆள் இளவயதுக்காரராக இருந்தார். எனக்கு போக வேண்டிய இடத்தின் பாதை எல்லாம் மறந்துவிட்டிருந்தது. அவரை நம்பி காரில் ஏறிக் கொண்டேன்.

 

போய்ச் சேரவேண்டிய இடம் நெருங்கியது.

 

"இங்கே எந்த இடம் சார்?" ஓட்டுநரின் கேள்வி தூக்கி வாரிப் போட்டது. ஒன்றும் தெரியாததுபோல் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதால் எனக்குத் தெரிந்த அளவில் கண்டுபிடிக்க முயற்சித்தேன். முடியவில்லை. செல்லிடத் தொலைபேசியை முடுக்கிவிட்டேன். என்னதான் Roaming வசதி எடுத்துக்கொண்டு சென்றாலும், அவசரத்துக்கு இடக்குப் பண்ணியது. காரை நிறுத்தச் சொன்னேன். :unsure:

 

ஓரிரு நிமிட தடங்கலுக்குப் பின்னர் ஒருவழியாக செல்லிடத் தொலைபேசி நெட்வேர்க்கைப் பெற்றுக்கொண்டது. நான் ஏற்கனவே எனக்கு வகுத்துக் கொடுக்கப்பட்டிருந்த திட்டத்தின்படி ஒரு பெண்மணியை சந்திக்க வேண்டும். அவரின் தொலைபேசியை தொடர்பு கொண்டு ஓட்டுநரிடம் பேசுமாறு கேட்டுக்கொண்டேன்.

 

ஓட்டுநரும் ஒருவழியாக இடத்தைக் கண்டுபிடித்து ஒருவழியாக வேண்டிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டார்.. :huh:

 

(தொடரும்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருச்சியிலா சந்திப்பு கொஞ்சம் அங்காலை போனா திருவனந்தபுரம்
பெரிய பெரிய முதலைகள் அங்கை தானே இருக்குது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அட ! இத்தனை நாள் இது கண்ணில் படவில்லை. சே ! வாழ்க்கையில் ஐந்து நட்கள் வீணாகி விட்டது. தங்களின் தீர்மானம் வெற்றியடைய வாழ்த்துக்கள். நீங்கள்  எழுதும் பாணி சிறப்பாக இருக்கு...! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 11:

 

.... நான் ஏற்கனவே எனக்கு வகுத்துக் கொடுக்கப்பட்டிருந்த திட்டத்தின்படி ஒரு பெண்மணியை சந்திக்க வேண்டும். அவரின் தொலைபேசியை தொடர்பு கொண்டு ஓட்டுநரிடம் பேசுமாறு கேட்டுக்கொண்டேன்.

 

ஓட்டுநரும் ஒருவழியாக இடத்தைக் கண்டுபிடித்து ஒருவழியாக வேண்டிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டார்.. :huh:

 

ஓட்டுநரிடம் கைப்பேசியைக் கொடுத்து பேசவேண்டிய அவசியமென்னவோ?

தெரியாத இடமென்றால் கூகிள் வரைபடத்தில் சரிபார்த்துவிட்டு சென்றிருக்கலாமே?

ஒருவேளை உங்கள் தமிழ் உச்சரிப்பு முறை அப்பெண்ணிற்கு விளங்காதோ?

திருச்சி, நீங்கள் வசித்த இடமன்றோ?

எவ்வளவு வருடம் கழித்து அப்பகுதிக்கு சென்றீர்கள் டங்கு?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுநரிடம் கைப்பேசியைக் கொடுத்து பேசவேண்டிய அவசியமென்னவோ?

தெரியாத இடமென்றால் கூகிள் வரைபடத்தில் சரிபார்த்துவிட்டு சென்றிருக்கலாமே?

ஒருவேளை உங்கள் தமிழ் உச்சரிப்பு முறை அப்பெண்ணிற்கு விளங்காதோ?

திருச்சி, நீங்கள் வசித்த இடமன்றோ?

எவ்வளவு வருடம் கழித்து அப்பகுதிக்கு சென்றீர்கள் டங்கு?

 

 

ஏழு வருடங்களுக்குப் பின்னர் சென்றேன். ஆனால் நிறைய கட்டுமானங்கள் நடந்துவிட்டதால், இடம் சரியாக தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 12:

 

இறங்கினதும், இறங்காததுமாக தெருவில் நின்ற நாய்கள் சில குரைத்தன. அவற்றின் அந்த விமர்சனங்கள் தேவையா.. அவற்றுக்கு கல்லால் பதில் சொல்ல வேண்டுமா என்று ஒரு யோசித்தேன். :huh:  அந்த நேரத்தில் யார் வந்தாலும் அவை தமது விமர்சனங்களை வைக்கும் என்பதை உணர்ந்ததால் பயணப்பொதிகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றேன்.  :rolleyes:

 

பெண்மணியைச் சந்தித்து குசலம் விசாரித்துவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு தேனீரை அருந்திவிட்டு எனது அறைக்குச் சென்றபோது ஏறக்குறைய விடியும் வேளை நெருங்கிவிட்டிருந்தது.

 

*********************************

 

அடுத்த இரண்டு நாட்கள் பெரும்பாலும் ஓய்விலும், தெரிந்தவர்களின் நலம் விசாரிப்பதிலுமே கழிந்தது. அவ்வாறு அந்தப் பெண்மணியின் உறவினர் ஒருவரும் நலம் விசாரிக்க வந்திருந்தார். அவரது நிலம் தாயகத்தில் சிங்கள இராணுவத்திடம் அகப்பட்டிருந்தது. அதை மீட்கும் முயற்சியில் இருந்தார்.

 

".. நான் அவங்களுக்கு நாலு இடங்களுக்கு கடிதம் போட்டன். நேரே வரச் சொல்லிப்போட்டாங்கள்.."  அரசியலுக்கு தூபம் போட்டார்..

 

"ஓ.."

 

"அங்கை பிரச்சினை என்னவெண்டால் பாருங்கோ.. பெரியவங்களைப் பார்த்து கதைச்சு சரிக்கட்டிப் போடலாம்.. ஆனால் அக்கம்பக்கத்து ஏரியா இராணுவங்களும் திடீரெண்டு வருவாங்கள் பாருங்கோ. அவங்கள்தான் அலுப்புக் குடுக்கிறது.."

 

"ஓ.."

 

"இப்ப காணியை குடுக்கப்போறம் எண்டு சொல்லியிருக்கிறாங்கள். அவங்களோடை மிண்டாமல் போனால் ஏதோ இருந்து கொள்ளலாம்.. ஐயோ.. அந்தக் கடைசிச் சண்டையில சனம் பட்ட பாடு இருக்கே.. சொல்லி மாளாது.. அதுவும் இந்தப் புலி ஆள்பிடிக்கிறது, பாஸ் எண்டு அவங்கள் ஒருபக்கமாம்.."

 

ம் கொட்டியபடியே கேட்டுக்கொண்டிருந்தேன். இவர் தொண்ணூறுகளிலேயே நாட்டைவிட்டு வெளியேறியவர்.

 

கட்டாய ஆள்பிடிப்பு என்று கதை வந்தவுடன் மெதுவாக திரியை கொழுத்திப் போட்டேன்..

 

"நீங்கள் சொல்லுறதும் சரிதான்.. ஜேர்மனி, சிங்கப்பூரிலும் இந்த மாதிரித்தான் செய்யினமாமே.."

 

இதைக் கேட்டதும் கொஞ்சம் குழம்பிவிட்டார்.. 

 

"ஓம்.. நானும் அப்பிடி கேள்விப்பட்டனான்.. உண்மையே அது?"

 

"ஓம்.. அங்கையெல்லாம் சட்டத்தால் செய்கினம்.. அதுபோல வரி, பாஸ் எண்டு அவையளும் வச்சிருக்கினம்.. அங்கையும் சில தவறுகள் நடக்கிறது வழமைதான்"

 

"ஓ.. சரி.. சரி.. என்னத்தைச் சொன்னாலும் பெடியள் 50,000 க்கு மேலை உயிரைக் கொடுத்தவங்கள். அதை நாங்கள் நினைச்சுப் பார்க்க வேணும். அதுசரி இந்தப் பிரச்சினை எப்பிடி போகுமெண்டு நினைக்கிறியள்?"

 

"அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேறினாலும், குழப்பம் வராமல் தீர்வு வராது எண்டு நினைக்கிறன்.." கொஞ்சம் சூட்டை ஏற்றிவிட்டேன்.. 

 

"ஓ.. நாங்களும் அவசரப்பட்டு போறதா இல்லை.. யோசிச்சுதான் முடிவு எடுக்க வேணும்.. அப்ப போய்ட்டு வாறன்.." குழப்பத்துடன் விடைபெற்றுச் சென்றார். :huh::D

 

*********************************

 

அடுத்துவந்த நாட்களில் கடைதெருவில் அலைந்ததிலும், பெண்மணி சில ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதுக்கு அலைந்ததிலும் கழிந்தது. பெண்மணி கடவுள் பக்தி மிக்கவர். எனக்கு மன அமைதிதரும் கோயில்களுக்கு செல்வதில் விருப்பம் இருந்தது. மற்றும்படி, எனக்கு அதைக்கொடு, இதைக்கொடு என்று கடவுளிடம் வேண்டுவதில் நம்பிக்கையில்லை.

 

ஆனாலும், பெண்மணியின் மனம் கோணாமல் அவர் அழைத்துச் சென்ற கோயில்களுக்குச் சென்று எனது திருத்தல யாத்திரைகளை தொடக்கிவைத்தேன். :o திருவாசியில் முதல் கோயில்..

 

T_500_118.jpg

 

நீங்கள் படத்தில் காண்பதுபோலவே சனநடமாட்டம் குறைந்து இருக்கும். மன அமைதிக்கு இங்கே தாராளமாகச் சென்று வரலாம்.  :huh:

 

(தொடரும்.)

நல்லதீர்மானம் . தொடருங்கோ :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13:

 

அடுத்ததாக திருப்பைஞ்ஞீலி என்று ஒரு கோயில். இந்தமுறைதான் முதன்முதலாக சென்றேன். சிவனால் எமதர்மனின் உயிர் எடுக்கப்பட்டதாகவும், திரும்பவும் அவர் உயிர்பெற்ற தலம் இதுவென்றும் கேள்விப்பட்டேன். சிவசிவ.. :D

 

spt_p_painyili.jpg

 

இதையடுத்த சில நாட்கள், வெக்காளி அம்மன் என்றும், சீரடி பாபா கோயில் என்றும், உள்ளூர் அம்மன் கோயில் என்றும் ஒரே பக்திமயமாகக் கழிந்தன.. :D பெண்மணியும் தான் பெற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய ஆவணங்களை ஒரு வழியாகப் பெற்றுக்கொண்டார்.

 

சில நாட்கள் ஆற்றாக்கொடுமை காரணமாக மெகா சீரியல்களைவேறு பார்த்து தொலைக்கவேண்டியதாகிவிட்டது.. :o  தெய்வம் தந்த மகள், முந்தானை முடிச்சு, இன்னும் ஓரிரு நாடகங்கள் கண்டு என் அறிவை ஓரளவு விருத்தி செய்துகொண்டேன்.  :huh:

 

எனக்கு வழங்கப்பட்டிருந்த வேலைத்திட்டம் ஓரளவு செம்மையாகவே நடந்துகொண்டு வந்தது. பெண்மணி தன்னிடம் இருந்த ஆவணங்களை என்னிடம் காண்பித்தார். சரி பார்த்துக் கொடுத்தேன். அதிக கேள்விகள் கேட்க விரும்பவில்லை. அந்த மனநிலையிலும் இல்லை.

 

சென்னைக்கு இரண்டு விமானச் சீட்டுகள் பதிவுசெய்துகொண்டேன். மறுபடியும் ரெசிடென்சி டவர்சில் இரண்டு நாட்களுக்கு பதிவு செய்துகொண்டு பயணப்பொதிகளை எடை பார்த்து அடுக்கி வைத்துக் கொண்டேன். பெண்மணியும் சென்னை கிளம்பத் தயாரானார்.. :huh:

 

*************************************

 

அந்த நாளும் வந்தது. திருச்சி விமான நிலையத்தைச் சென்றடைகிறோம், கொண்டுபோகவேண்டிய முக்கியமான ஆவணம் ஒன்றைப் பற்றிய நினைவு கொஞ்சம்கூட இல்லாமல்.  :o

 

உள்ளூர் விமானம் என்பதால் பெரிய உருட்டல் எதுவும் இல்லை. சென்னை வந்தடைந்தோம். நேராக விடுதிக்குச் சென்று சிறு ஓய்வு. எனக்கென்றால் இந்தக் குறுகிய நாட்களுக்கான நீண்ட தூரப் பயணத்தினால் களைப்பு மட்டுமே மிஞ்சியிருந்தது. ஆனாலும் பெண்மணிக்கு இன்னும் கோயில்களுக்குப் போக விருப்பமாக இருந்தது. சரி என்றுவிட்டு அடுத்தநாள் காலையில் திருப்பதிக்குச் செல்ல வாடகை காரை அமர்த்திவிட்டு வந்தேன்.

 

*************************************

 

அன்று இரவு, தங்கும் அறைக்கு ஒரு தொலைபேசி வந்தது.

 

"சார் நான் தான் டிரைவர் பேசுறேன். நாளைக்கு திருப்பதி ட்ரிப் சார்.."

 

"சரி."

 

"காலை ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிடலாம் சார்.."

 

"ஆறரைக்குத்தானே கேட்டிருந்தேன்??" 

 

"இல்ல சார்.. லேட் பண்ணினால் ட்ராஃபிக் ஜாம் ஆயிடும் சார்.. சீக்கிரமா கிளம்பிறது நல்லது.."

 

"சரி.." தொலைபேசியை வைத்துவிட்டு தூக்கத்துக்குள் செல்கிறேன்..

 

*************************************

 

மறுநாள் விடியற்காலை. நேரத்திற்கு எழும்பி தயாராக இருந்தாலும், அறைக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. பத்து நிமிடம் காத்திருந்துவிட்டு வரவேற்பாளரிடம் தொடர்பு கொண்டேன்.

 

அவர் விசாரித்துவிட்டுத் தந்த பதில் குழப்பத்தை வரவழைத்தது..

 

"சாரி நீங்க பிரைவேட்டா வெளியில எங்கையாவது புக் பண்ணினீங்களா?"

 

"இல்லையே.."

 

"சரி.. நான் விசாரிச்சிட்டு மறுபடியும் கால் பண்றேன்.." வைத்துவிட்டார்.

 

இது சரிவராது என உணர்ந்துகொண்டு, நேராக வரவேற்பறைக்குச் செல்கிறேன்.

 

(தொடரும்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்து ஊக்கம் கொடுத்த அன்பர்களுக்கு நன்றிகள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து வாசிக்கின்றோம் :icon_idea:

 

ம்ம்ம்

கொட்டினால் கோபப்படுவீர்கள் :lol:

அதனால்  எழுதவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 14:

 

வரவேற்பு மண்டபத்துக்குச் சென்று பார்த்தால் ஒரு வாகன ஓட்டுனர் தயாராக நின்றார்..

 

"நான் நான் தான் சார் டிராஇவர்.. திருப்பதி ட்ரிப்.."

 

ஆளின் கண்களைப் பார்த்தால் முதல்நாள் இரவு ஓய்வில் இருந்தவர்போல் தெரியவில்லை.  :unsure: அந்த விடுதியில் உள்ள ஓட்டுநர்கள்போல் சுத்தமாக உடுத்தியிருக்கவும் இல்லை. அந்த சீருடையிலும் இல்லை.

 

இதற்குள் விடுதியின் காரியதரிசி விடுதியின் ஓட்டுநர் தயாராக வெளியில் காத்திருப்பதாகச் சொன்னார். நான் மறுபேச்சு பேசாமல் அந்த வாகனத்தை நோக்கி நடையைக் கட்டினேன். பெண்மணியும் தொடர்ந்தார். மற்ற ஓட்டுநர் வேறு யாருக்கோ தொலைபேசி அழைப்பு எடுத்து பேசி சரிக்கட்ட முயற்சி செய்துகொண்டிருந்தார்.  :blink:

 

இவ்வாறாக ஒருவழியாக திருப்பதி பயணம் ஆரம்பித்தது.. "ஏழுகுண்டலவாடா.. வெங்கடரமணா.. கோவிந்தா.. கோ.......விந்தா.. :D

 

ரெசிடென்சி டவர்ஸ் விடுதியில் கிட்டத்தட்ட 14 வாடகை ஊர்திகள் உள்ளதாக ஓட்டுனர் சொன்னார். ஓட்டுனர்களும் தயாராகவே எந்நேரமும் கீழ்த்தளத்தில் இருப்பார்கள். பதிவு செய்துவிட்டுப் போகவேண்டியதுதான். கட்டணத்தை அறைக்கணக்குடன் சேர்த்துவிடுவார்கள். கட்டணம் சற்று அதிகம்தான்.. ஆனாலும் நல்ல ஓட்டுநர்கள், பாதுகாப்பு என நிறைய நல்ல விடயங்கள் உள்ளன. காரில் குளிர்ந்த நீர் போத்தல்கள் குளிரூட்டும் பெட்டியில் வைத்திருப்பார்கள்.

 

விலை சற்று அதிகம் என்றவுடன் பெண்மணி சற்று கவலையடைந்துவிட்டார். அவருக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம் வரும் என்பது தெரிந்தது. யாரையும் எளிதில் நம்பிவிடமாட்டார். அந்த வகையில் நானும் விடுதிக்கு அதிக காசு செலவழித்ததுபோல முதலில் எண்ணிக்கொண்டிருந்தார். பிறகு அங்குள்ள வசதிகளைக் கண்டவுடன் எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டார். அதுபோல காருக்கு அதிக செலவு செய்துவிட்டதாகவும் இப்போது எண்ண ஆரம்பித்துவிட்டார். இடைக்கிடை மெலிதான இரண்டு டோஸ் விடவும் பேசாமல் இருந்துவிடுவார். :huh:

 

போகிற வழியில் ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்தேன். இரண்டாவது ஓட்டுநர் எங்கிருந்து வந்தார் என்பதில் எனக்குப் பலத்த குழப்பம். எனது அறை எண்ணைக்கூட தெரிந்து வைத்திருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்திருந்தவர். இந்த ஓட்டுநரின் கணிப்பின்படி, யாரோ தகவலை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். திருப்பதி சவாரி ஒன்றை பெற்றூக்கொள்ளும் முகமாக இவ்வாறாக செய்திருக்கக்கூடும் என்றார்.

 

வழியில் காலை உணவை முடித்துக்கொண்டு திருப்பதியை சென்றடைந்தோம்..

 

tirupati-images.jpg

 

வரிசையில் கிட்டத்தட்ட நான்கு மணிநேரங்கள் உருட்டி  எடுத்தார்கள். பத்து வினாடிகள் சாமி தரிசனம் கிடைத்தது. லட்டையும் வாங்கிக்கொண்டு வெளியில் வந்து கடைத்தெருவில் ஓரிரு சாமி சிலைகளையும் வாங்கிக்கொண்டோம். சென்னைக்கு திரும்பி வந்துசேர முன் பெண்மணி ஆரம்பித்துவிட்டார்.

 

"நாளை காலையில் மருவத்தூருக்கு போய்ட்டு வந்துவிடுவமா?"

 

"நாளை இரவு விமானத்தில் புறப்பட வேண்டுமே??!!"

 

"பரவாயில்லை.. இங்கையிருந்து பக்கம்தானே.. உடனே வந்துவிடலாம்.."

 

வேறு என்னத்தை சொல்வது.. சரி என்று தலையை ஆட்டிவைத்தேன்..

 

விடுதிக்கு வந்ததும் அடுத்த நாள் காலையில் மேல் மருவத்தூர் போவதுமாதிரி காரை முன்பதிவு செய்துகொண்டு அறைக்குச் செல்கிறேன்.

 

(தொடரும்.)

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.