Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துக்கும் பரவியது ஹோலி பண்டிகை! - முதல்முறையாக கொண்டாட்டப்பட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கும் பரவியது ஹோலி பண்டிகை! - முதல்முறையாக கொண்டாட்டப்பட்டது. photo.png 

[Wednesday, 2014-03-26 08:54:19]
holi-260314-150.jpg

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக 'வண்ணங்களின் பண்டிகை' எனப்படும் 'ஹோலி' சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்கள் அனைவரும் இணைந்து இப்பண்டிகையை கொண்டாடினார்கள். முதலில் ஒவ்வொருவரின் நெற்றியிலும் பாரம்பரிய முறையின்படி வண்ணங்களை பூசி பின்பு வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி கொண்டாடினர். யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் 'இந்தியா கோர்னர்' இல் கற்கும் இலங்கை மாணவர்களும் இப்பண்டிகையில் பங்கு பற்றியிருந்தனர் இந்தியாவில் ஹோலி பண்டிகை மார்ச் மாதம் - குளிர்கால முடிவில் - கொண்டாடப்படுகிறது. இது இந்துக்களின் பண்டிகையாக வட இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

holi-260314-600.jpg

holi1-260314-600.jpg

holi2-260314-600.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=106492&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தூதரகத்துக்குள் கொண்டாடியிருக்கினம்.. மானங்கெட்ட பயலுகள்..

  • கருத்துக்கள உறவுகள்

கலர், வட இந்தியனுக்கு ஓகே!

நம்ம கலருக்குத் திருநீறு போதுமப்பா! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவனின் பூரயத்தை தூக்கி பிடிக்கிறதில எங்கட ஆட்களை மிஞ்ச யாரும் இல்லை ..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நவம்பர் Thanksgiving உம் கொண்டாடுவினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே Halloween day?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் டில்லிக்குப் போனால் அவர்களுடன் சேர்ந்து ஹோலியை கொண்டாட வேணும். அவர்கள் யாழ்ப்பாணம் வந்தால் பொங்கலை கொண்டாட வேணும்.. அதுதான் அந்த நிலங்களில் வாழும் மக்களுக்கு மரியாதை தரும் செயல்.

இதில் என்ன தவறு? ஆரியனின் தீபாவளியைக் கொண்டாடும், எம் வழிபாட்டு மரபில் இல்லாத கடவுள் ஐயப்பனுக்கு கோவில் கட்டி விரதம் இருந்து வழிபட்டு, கல்கி பகவானையும், அம்மா பகவானையும் சாமிகளாக வணங்கும் இரவல் சமூகமான எமக்கு இது எல்லாம் ஒரு பெரிய விடயமா என்ன?

ஏன் நாங்கள் இப்பவெல்லாம் Thanks giving இற்கு Turkey சமைத்து, Halloween day இற்கு பேயுடுப்பு உடுத்தி புலம்பெயர் நாடுகளில் கூட கொண்டாடி மீண்டும் மீண்டும் இரவல் சமூகம் என்பதை நிறுவுகின்றோம் தானே..

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னப்பா

பிரான்சில

கனடாவில

லண்டனில

ஏன் சவுதியில  கூட நாங்க  பொங்கல்தீபாவளி  என்று கொண்டாடலாம்

அவர்கள் வேலைக்கு வந்த இடத்தில்

அதுவும் வீட்டுக்குள் இருந்து தமது விழாவைக்கொண்டாடக்கூடாதா??

என்ன  பயம் என்றால் 

தமிழருக்கு ஒரு பழக்கமிருக்கு

வேற யாருடையது என்றாலும்

கெட்டியாகப்பிடித்துக்கொள்வார்கள் :(

அது தானே  உங்கள் பயமும்........?

உண்மை தான்

நான் வரட்டே. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தவறு? ஆரியனின் தீபாவளியைக் கொண்டாடும், எம் வழிபாட்டு மரபில் இல்லாத கடவுள் ஐயப்பனுக்கு கோவில் கட்டி விரதம் இருந்து வழிபட்டு, கல்கி பகவானையும், அம்மா பகவானையும் சாமிகளாக வணங்கும் இரவல் சமூகமான எமக்கு இது எல்லாம் ஒரு பெரிய விடயமா என்ன?

ஏன் நாங்கள் இப்பவெல்லாம் Thanks giving இற்கு Turkey சமைத்து, Halloween day இற்கு பேயுடுப்பு உடுத்தி புலம்பெயர் நாடுகளில் கூட கொண்டாடி மீண்டும் மீண்டும் இரவல் சமூகம் என்பதை நிறுவுகின்றோம் தானே..

இணுவிலில் குரங்குக்கு கூட கோயில் கட்டியிருக்கிறாங்களாம்

இணுவிலில் குரங்குக்கு கூட கோயில் கட்டியிருக்கிறாங்களாம்

ஏம்பா!

குஷ்புக்கு கோயில் கட்டினால் குஷியாகிறீங்க, குரங்கிற்குக் கட்டினால் என்ன பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா!

குஷ்புக்கு கோயில் கட்டினால் குஷியாகிறீங்க, குரங்கிற்குக் கட்டினால் என்ன பிழை.

குஷ்பாத்தம்மன் கோயில்ல தொட்டுக்கும்பிடலாம், இங்க என்னத்தப்பண்ணுறது
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருந்தபோது முதன்முதலில் சென்னையில்தான் விநாயகரை கடலில் கரைத்தார்கள். அதன்போது பலத்த கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.. சாமியை கரைப்பது நமது பண்பாட்டில் இல்லைதானே.. பிறகு எல்லோருக்கும் பழகிவிட்டது.. :D

எங்கட ஊர் வழக்கப்படி, அந்தியேட்டி அன்று, இறந்தவரின் சாம்பலைத் தான் கடலில் கரைப்பார்கள். 

கொஞ்சம் வசதியானவர்கள், ஒரு சிறு தேர் கட்டி, அதன் பீடத்தில் சாம்பலையும், சிறு எலும்புகளையும் வைத்துக் கடலில் விடுவார்கள்!

அதுவும் மலேசியன் விமானம் மாதிரி, இந்து சமுத்திரத்தில் கரைந்து விடும்!

இப்போதெல்லாம், Helensburgh என்னுமிடத்தில் உள்ள சந்திர மௌலீஸ்வரர்   கோவிலிலிருந்து 'மண்ணால் செய்த பிள்ளையாரைத்' தூக்கிக்கொண்டு போய்க் கடலில் கரைப்பதை, எம்மவர்கள் தான் முன்னின்று செய்கின்றார்கள்! :o

Sydney_Shree_Ganesh_Ganpati_Visarjan.jpg

Edited by புங்கையூரன்

இணுவிலில் குரங்குக்கு கூட கோயில் கட்டியிருக்கிறாங்களாம்

இதில் என்ன தவறு? எம் வழிபாட்டு மரபில் இல்லாத கடவுள் ஐயப்பனுக்கு கோவில் கட்டி விரதம் இருந்து வழிபட்டு, கல்கி பகவானையும், அம்மா பகவானையும் சாமிகளாக வணங்கும் இரவல் சமூகமான எமக்கு இது எல்லாம் ஒரு பெரிய விடயமா என்ன?

ஏன் நாங்கள் இப்பவெல்லாம் Thanks giving இற்கு Turkey சமைத்து, Halloween day இற்கு பேயுடுப்பு உடுத்தி புலம்பெயர் நாடுகளில் கூட கொண்டாடி மீண்டும் மீண்டும் இரவல் சமூகம் என்பதை நிறுவுகின்றோம் தானே..

நாசமா போக எல்லா அந்நியனின் குப்பைகளையும் தமிழர்கள் சுமக்கட்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் என்ன தவறு? ஆரியனின் தீபாவளியைக் கொண்டாடும், எம் வழிபாட்டு மரபில் இல்லாத கடவுள் ஐயப்பனுக்கு கோவில் கட்டி விரதம் இருந்து வழிபட்டு, கல்கி பகவானையும், அம்மா பகவானையும் சாமிகளாக வணங்கும் இரவல் சமூகமான எமக்கு இது எல்லாம் ஒரு பெரிய விடயமா என்ன?

ஏன் நாங்கள் இப்பவெல்லாம் Thanks giving இற்கு Turkey சமைத்து, Halloween day இற்கு பேயுடுப்பு உடுத்தி புலம்பெயர் நாடுகளில் கூட கொண்டாடி மீண்டும் மீண்டும் இரவல் சமூகம் என்பதை நிறுவுகின்றோம் தானே..

அப்ப என்னதான் செய்யலாம் என்று சொல்லுறீங்கள் பாஸ்?

தீபாவளிக்கு இருக்கும் பிரபல்யம் காத்திகை திபத்துக்கு இல்லை. சத்திய சாயிபாபாவுக்கு போகும் கூட்டம் முன்னோர் சமாதிக்கு போவதில்லை. சமஸ்கிரதத்தை ஓதும் கூட்டம் தேவாரம் தமிழில் வழிபடுவதில்லை. இதை விட்டுவைச்சு என்ன புண்ணியம் பேசாமல் எல்லாரும் கொண்டாடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்துக்களின் பண்டிகையாக வட இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஏன் இந்த இந்துக்களின் பண்டிகையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடக்கூடாது? யாழ்ப்பாணத்தார் இந்துக்களில்லையா?

முகத்தில் கரி பூசி விளையாட்டு ஏதும் விளையாடலாமே...

  • கருத்துக்கள உறவுகள்

என்னை அச்சுறுத்திய வட இந்தியக் கொண்டாட்டம் – ஹோலி

என்னை அச்சுறுத்திய வட இந்தியக் கொண்டாட்டம் – ஹோலி

புராண காலத்தில் ஹிரண்யகசுபு என்னும் அசுர மன்னன் விஷ்ணுவை பரம எதிரியாகக் கருதினான். பகல், இரவு, வீட்டுக்கு உள்ளே வெளியே- என எந்த நேரத்திலும் சூழலிலும், மனிதன் மிருகம் என- யாராலும் அழிக்க முடியாத ஒரு வரத்தைத் தவ வலிமையால் அவன் பெற்றிருந்தான். ஹிரண்யாய நமஹ என்று தான் அவன் குடி மக்கள் கூற வேண்டும். அவன் மகனான பிரகலாதனோ நாராயணாய நமஹ என்று கூறுவான். இதனால் மிகவும் கோபமுற்ற ஹிரண்யகசுபு ஒரு நாள் ” எங்கே இருக்கிறான் உன் நாராயணன்? நான் அவனை அழிக்கிறேன் பார்” என்று சவால் விடுத்தான். “விஷ்ணு தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார்” என்று பதிலுரைத்தான் பிரகலாதன். “இந்தத் தூணில் இருப்பாரா?” என்று ஹிரண்யகசுபு எதோ ஒரு தூணைக் காட்டிக் கேட்டான். சிறிதும் தயங்காத பிரகலாதன் “கண்டிப்பாக இருப்பார்” என்ற உடன் தன் கையில் உள்ள கதையால் தூணை ஹிரண்யன் தாக்க அதில் இருந்து தலை சிங்கத்துடையாதகவும் உடல் மனித வடிவிலும் உள்ள நரசிம்மர் தோன்றினார். அவரது கை நகங்கள் சிங்கத்துடையது போலவே மிகக் கூர்மையாக இருந்தன. பகலும் இல்லாத இரவும் அல்லாத வேளை அது. வீடும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் வாயிற்படி மீது அவனைத் தன் மடியில் வைத்துக் கிழித்து சம்ஹாரம் செய்தார்.

பிரகலாதனைக் கொல்லப் பல முயற்சிகள் ஹிரண்யனாலும் அவன் சகோதரி ஹோலிகாவாலும் நடந்தன. ஒரு முறை நெருப்பில் எரியாத ஒரு சால்வையால் தன்னைப் போர்த்துக் கொண்டு பிரகலாதனுடன் தீயில் இறங்கினாள் அத்தை ஹோலிகா. ஆனால் தீ பரவும் முன்பே அவள் மீதிருந்த சால்வை பிரகலாதன் மீது தானே வந்து அமர அவள் தீயில் கருகி இறந்தாள். பிரகலாதன் தப்பித்தான்.

பங்குனி மாதம் பௌர்ணமி அன்று இது நடந்ததாக நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு வருடமும் இன்னாளில் இந்தப் பட்ண்டிகை கொண்டாடப் படுகிறது. ஹோலிக்கு முதல் நாள் ஹோலிகா பொம்மையைக் கொளுத்தும் பழக்கம் உண்டு. நான் டெல்லியில் இருந்த மூன்று வருடங்களின் மூன்று ஹோலி நாட்களிலும் நான் அங்குதான் இருந்தேன். வட இந்தியர் அல்லாதோருக்கு ஹோலி மிகவும் அச்சுறுத்தும் ஒரு பண்டிகை.

நெருக்கிய கட்டிங்கள் உள்ள முனிர்கா, மற்றும் கரோல்பாகின் ஏழை எளியோர் வாழும் பகுதி (ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு இடம்) இவற்றில் தான் நான் இருந்தேன். ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலும் வாளி வாளியாகவும் வண்ணம் கலந்த தண்ணீர் கன்னாப் பின்னாவென்று வீசப்படும். மலிவான வண்ணங்கள் தோல் எரிச்சலைப் பல நாட்கள் தர வல்லவை. அப்போது நான் வெளியில் சாப்பிடும் ஆள். எனவே முதல் நாளே பன் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டு மதியம் இரண்டு மணி வரை வெளியே தலை காட்ட மாட்டேன். மக்கள் சற்றே ஓய்வார்கள். பிறகு மாலையில் பிரச்சனை இல்லை. ஒருவர் மற்றொருவரைத் தொட்டு வண்ணம் பூசும் பழக்கம் உண்டு என்பதால் பாலியல் அத்துமீறல்கள் சர்வ சகஜமாக நடக்கும். அன்று ஒரு இளைஞன் ஒரு பெண்ணைத் துரத்திக் கொண்டு தெருவில் ஓடினால் அது தவறாக எடுத்துக் கொள்ளப் படாது.

பிப்ரவரி இரண்டாம் வாரத்திலேயே கம்பளி ஆடைகள் அணிவதை நான் நிறுத்தி விடுவேன். ஆனால் வட இந்தியர்கள் ஹோலி வரும் வரை கம்பளி ஆடைகளைக் கட்டாயம் அணிவார்கள்.

தமிழ்ப் படங்களில் சம்பந்த சம்பந்தமில்லாமல் ஹோலி காட்டப் படும் போது எனக்கு நான் கடந்து வந்த அச்சம் மிகுந்த நாட்கள் நினைவுக்கு வரும்.

http://sathyanandhan.com/2014/03/17/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8/#comment-312

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

"ராக்கி " கட்டும் கொண்டாட்டத்தை மட்டும் எங்கன்ட பெடியள் கொண்டாடமாட்டங்கள்.....காரணம் எல்லா பெண்களையும் சகோதரமாக பார்க்கவேணும் என்று:D

"ராக்கி " கட்டும் கொண்டாட்டத்தை மட்டும் எங்கன்ட பெடியள் கொண்டாடமாட்டங்கள்.....காரணம் எல்லா பெண்களையும் சகோதரமாக பார்க்கவேணும் என்று:D

இப்பவுள்ளதுகள் அதை கட்டினாலும் கவலைபடாதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.