Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி! 
[Friday, 2014-05-09 17:27:24]
train-090514-150.jpg
யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது, கொழும்பில் இருந்து பளை வரையும் ரயில் சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணி சாவகச்சேரி பகுதி வரை முடிவடைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் பளையிலிருந்து சாவகச்சேரி வரை பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது. அதேவேளை, தற்போது நாவற்குழி, யாழ்ப்பாணம் பகுதி வரையான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் யூன் மாதத்தில் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • Replies 67
  • Views 2.8k
  • Created
  • Last Reply

நல்ல விடயம்.

 

யாழ் / வடக்கின் உற்பத்திகள் தெற்கிற்கும் அதற்கு வெளியிலும் கொண்டு செல்ல மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதுடன் ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துகளில் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும்.

 

சமூக அமைப்புகள், பாடசாலைகள் ரயில் கடவைகள்,  ஆளற்ற கடவைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் போன்றவற்றை மக்களுக்கும், பாடசாலைப் பிள்ளைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். 24 வருடங்களின் பின் என்பது ஒரு தலைமுறையே ரயிலை காணாத தலைமுறை..அதன் விபத்துகள் பற்றிய தெளிவினையும் ஏற்படுத்த வேண்டும்.

 

மன்னாருக்கான ரயில் சேவை தொடங்கி விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஜாலி!

மன்னாருக்கான சேவை இன்னமும் மடு ரோட் வரையும்தான் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஜாலி!

மன்னாருக்கான சேவை இன்னமும் மடு ரோட் வரையும்தான் என நினைக்கிறேன்.

 

வாழும் சொந்த பிரதேசத்தில், ஒரு முடிவு எடுக்க....

வக்கில்லாத ஒட்டுக் குழு, ஜாலி..... என்று பாடலாம்.

"காகத்துக்கு, கனவிலும்.... சொக்லேற்"  தின்னும் என்னும்.... நினைப்பு. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஜாலி. தம்பிள்ளைகள் மட்டும் நிலக்கீழ் ரெயிலில் போய் பல்கலை பயில, ஊர்பிள்ளையள் நிலமேல் ரெயிலையும் காணக்குடாது எனறு நினைக்கும் புலம்பெயர்ஸ் எண்ணம் எல்லாம் இனிக் காலி.

சிலீப்பர் கட்டையை புடுங்கி வேலிஅடைக்கிற ஆக்களும் இல்லாதபடியால், இனி எந்த கொம்பனாலும் யாழ்தேவியை நிப்பாட்ட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவி யாழ்ப்பாணத்துக்கு வருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு. உந்த யாழ்தேவியில் தொடங்கின ஒரு காதல் கதையில்தான் இந்த (யாழ்)வாலி தோற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவி யாழ்ப்பாணம் வருவது நல்ல விடயம்தானே?? இதிலென்ன குறை இருக்கிறது.

 

ஆனால், யாழ்தேவி வருவதால் மட்டும் தமிழரின் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டதென்று எவரும் நினைத்தால், அதுதான் தவறு. ஏன் என்றால், பிரச்சினை தொடங்குமுன்னமே யாழ் தேவி ஓடடியது, மின்சாரமும், வீதிகளும், பல்கலைக்கழகங்களும் இயங்கின. ஆனால் என்ன உரிமைகள்தான் இருக்கவில்லை.

 

இப்போது மீண்டும் இவை எல்லாம் வந்துவிட்டன, ஆனால் எமது பிரச்சினை மட்டும் முன்னைவிடவும் இன்னும் அதிகமாகவும், தீர்வுக்கான தேவை முன்னெப்போதைக் காட்டிலும் அதிகமாகவும் இருக்கிறது.

 

ஆனாலும், எமது பிரச்சினை இன்னும் இருப்பதைக் காரணம் காட்டி, தாயகத்தில் மக்களை எந்த வசதிகளையும் அனுபவிக்கக் கூடாது என்று நாம் நினைப்பது சரியாகப் படவில்லை. புலத்தில் நாம் அனுபவிக்கும் அதே வசதிகளை அனுபவிக்கமுடியாவிட்டாலும், ஏதோ தங்களுக்கு கிடைத்ததை அனுபவிப்பது தவறில்லை. இசை நிகழ்ச்சிகள் முதல் களியாட்டங்கள் வரை இவை பொருந்தும். இழப்பிற்கான சோகத்தை தாயக மக்கள் மட்டுமே அனுபவிக்கவேண்டும் என்னுன் எதிர்பார்ப்பு தவறானது.

 

ஆனால், இந்த வசதிகள் எல்லாம் வந்துவிட்டன, இனித் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இவ்வளவுகாலமும் தமிழர்கள் போராடியதுகூட இந்த வசதிகளுக்காத்தான் என்று அரசாங்கமும், ஒட்டுண்ணிகளும் கூறாமல் விட்டால் சரி.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து சேவையில் மட்டும் அரசு அதிகம் கவனம் செலுத்துகிறது. இங்கிருந்து போகும் எம்மவர்களும் பாதைகள் எல்லாம் அந்தமாதிரி போட்டிருக்கினம் எண்டு சொல்வதே  அவர்களின் புகழாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு புகையிரதம் வரலாம் ,30 வருடங்களுக்கு முந்திய இளமை எனக்கு திரும்பி வராது :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஜாலி!

மன்னாருக்கான சேவை இன்னமும் மடு ரோட் வரையும்தான் என நினைக்கிறேன்.

மன்னார் வரையில் நீட்டினால் அடுத்தது இராமேஸ்வரத்துக்கான பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட வேண்டும். :rolleyes: யாழ் தடம் வல்வெட்டித்துறை ஊடாக வேதாரண்யம் தடமானால் இன்னும் பரவாயில்லை. ^_^

தமிழகத்தில் இருந்து கடல்கீழ் மின் இணைப்பு இலங்கையுடன் தொடுக்கப் படுவது ஒரே இழுத்தடிப்பாக உள்ளது. ஒன்றில் தொடருந்து.. இல்லாவிட்டால் மின்சாரம். இதில் ஒன்றாவது நிறைவேறுவது இந்தியாவின் நலன்களுக்கு அனுகூலமாக இருக்கும். ஒரு வழியாக யாழ் வரையில் கொண்டுவந்துவிட்டார்கள் இந்திய கொள்கை வகுப்பாளர்கள். :wub: ஆனாலும் இனிமேல்தான் மகிந்தர் ஆப்பை இறுக்குவார். :icon_idea:

யாழ்தேவி வருகுதேன்றால் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று எவராவது சொன்னார்களா ? 

 

ராஜபக்சா கூட அப்படி எங்கும் பேசியதாக கேள்விப்படவில்லை .அவருக்கு கொஞ்சமாவது அரசியல் தெரியும் .

 

நானே கேள்வி -நானே பதில் போல ஒரு கற்பனை கேள்வியையும் கேட்டு பதிலையும் எழுதவேண்டியதுதான் .

 

அழிவை மட்டும் ரசித்தவர்கள் ஆக்கத்தையும் வரவேற்பது பெரிய மனமாற்றம் .இதில் ராஜபக்சாவிற்கு வெற்றிதான் .

500 வருசத்திற்கு முதல் போன சுதந்திரம் எப்ப வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இன்னொன்றை நாம் கவனிக்க தவறுகிறோம்.

50-80 வரையான காலம் போலல்லாமல் அபிவிருத்தியில் வட கிழக்கு ஓரளவுக்கு கவனிகப்படுகிறது என்பது உண்மையே.

சங்குப்பிட்டிப் பாலம், மன்னார்ப் பாலம், பெருந்தெருக்கள், கல்லடிப்பாலம், மண்முனைப்பாலம், இன்னும் பல நல்ல விசயங்கள் நடந்துள்ளன.

அரசியல் பிரச்சினைக்கு இது ஒரு தீர்வில்லை என்பது புல வியாபாரிகள் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அது உள்ளங்கை நெல்லிக் கனி.

ஆனால் வளங்களை சரியாகப் பங்கிட்டு மேற்குலக நாடுகள்,போல ஒரு சீரான ஜனநாயக் வாழ்க்கை முறைக்கு இலங்கை நகரக்கூடும் (எதிர் காலத்தில்) என்பதற்கான அறிகுறிகளே இவை.

தமிழர்கள் போதுமான அளவு அடி வாங்கி பட்டறிவு பெற்றுள்ளார்கள். ரோடு, ரெயின் எல்லாம் முந்தி இருந்த போது வராத பட்டறிவு இப்போ வந்திருக்கு. பட்டு வேட்டிக்காக அடிபடப் போய் இப்போ கோவணம் மிஞ்சினால் போதும் என்ர நிலையில் தமிழர்கள் நிக்கிற்றார்கள்.

ஆனால் ஓடிவந்து புலத்தில் ஒளிந்து கொண்டு கொடி பிடிக்கும் கூட்டம் இன்னமும் அடி வாங்கவில்லை. ஆகவே அவை மாரித்தவக்கை மாதிரி கத்த தான் செய்யும். இப்ப ஒருத்தர் தமிழ் நாட்டுக்கு ஓடியிருக்கார். 2009 இவர் செத்துப்போனார் என்று ஒப்பாரி வைத்து யாழ்களத்தில அவருக்கு மரியாதை செய்தவை. இது போலத்தான் நாளைக்கு இங்க வந்து கருத்தெழுதும் புலவியாபாரிகளின் முகமூடியும் கிழியும்.

500 வருசத்திற்கு முதல் போன சுதந்திரம் எப்ப வரும்?

வராது.

தமிழ் மக்கள் தமிழீழம் பெற்றிருந்தாலும் சிறிலங்கா அரசாங்கம் செய்ததது போல வெளிநாட்டு உதவியுடனேயே இந்த தொடரூந்து சேவை நிர்மாணிக்கபட்டிருக்கும் என்பதே ஜதார்த்தம். அதில் எந்த மாற்றமும் இருந்திருக்காது. எமது அபிவிருத்திகளை நாமாக  செய்வதற்கான பொருளாதார பலம் எமக்கோ சிங்களவருக்கோ இல்லை. யாழ்தேவி சிங்களம் தரும் பிச்சை இல்லை. ஆகவே யாழ்தேவிக்காக சிங்களத்தை புகழவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. விடுதலை புலிகளாகட்டும் அவர்களை கடுமையாக எதிர்க்கும் எமது தரப்பில் யாராக இருந்தாலும் சுதந்திரம் அல்லது சுயாட்சி பெற்றால் வெளிநாட்டு உதவியுடனேயே எமது அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்.

 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கியால் ஒதுக்கபட்ட நிதியிலேயே அனைத்து வீதிகளும் புனரமைப்பு செய்யபடுகின்றன. சர்வதேச நேரடிக்கண்காணிப்பு இருப்பதால் அவர்களின் பணத்தில் சற்று உயர் தரத்துடன் வீதிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அல்லது 50 / 80 களைப்ப்போல் அமைச்சர்களின் வங்கி கணக்குகள் மட்டும் உயர்ந்திருக்கும்.

Edited by tulpen

இங்க ஸ்லிப்பர் கட்டைக்கு விசிலடிக்கும் பேதைகள் , வருங்காலத்தை பற்றி யோசிப்பதில்லை. சிங்களவரின் காலை நக்கினால் சுபீட்சம் கிடைத்துவிடும் என்பார்கள்.

சிறி லங்காவில் நடக்கும் நிசத்தை பார்ப்பதில்லை. அவ்வளவிற்கு கப்பாசிட்டியும் இல்லை . புரியாணிக்கும் போத்திலுக்கும் அன்றாடம் சொந்த இனத்தை விற்பவர்கள்.

ஒட்டுக்குழுக்களின் பிரசாரத்தை பின்பற்றிய இசுலாமியரின் நிலை.

Who Set Muslim Shop On Fire?

The owner of this is Mr Aslam khan. He has been living in this town since his childhood and he has been running this family business for many years.

He and his brother managed to develop their business with years of hard works and dedications: yet, some Sinhalese people in the town become jealous of this growing business and they did not want see one and only Muslim shop in that town.

It is due to mere jealousy and hared that this shop was set on fire and destroyed. Some of these jealous people deliberately and intentionally created a plot and conspiracy to destroy this hardworking Muslim man's shop and his livelihood without any human remorse for his family and children.

In order to revenge for this fabricated story some 300 hundreds Sinhalese radicals demonstrated in the township under the leadership of some monks. They shouted that this Muslim shop would be set on fire and burned down!

This was a racially motivated incident. it was reported that Police did not take any action against the culprits of this attack and police has been supporting these thugs.

This begs many questions about the prejudice and discriminative attitudes of Police in Sri Lanka. Police force is a law enforcement agent in any country. Sadly such law enforcing agent itself is collaborating with thugs to break the laws and order of this country?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139899

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இன்னொன்றை நாம் கவனிக்க தவறுகிறோம்.

50-80 வரையான காலம் போலல்லாமல் அபிவிருத்தியில் வட கிழக்கு ஓரளவுக்கு கவனிகப்படுகிறது என்பது உண்மையே.

சங்குப்பிட்டிப் பாலம், மன்னார்ப் பாலம், பெருந்தெருக்கள், கல்லடிப்பாலம், மண்முனைப்பாலம், இன்னும் பல நல்ல விசயங்கள் நடந்துள்ளன.

அரசியல் பிரச்சினைக்கு இது ஒரு தீர்வில்லை என்பது புல வியாபாரிகள் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அது உள்ளங்கை நெல்லிக் கனி.

ஆனால் வளங்களை சரியாகப் பங்கிட்டு மேற்குலக நாடுகள்,போல ஒரு சீரான ஜனநாயக் வாழ்க்கை முறைக்கு இலங்கை நகரக்கூடும் (எதிர் காலத்தில்) என்பதற்கான அறிகுறிகளே இவை.

தமிழர்கள் போதுமான அளவு அடி வாங்கி பட்டறிவு பெற்றுள்ளார்கள். ரோடு, ரெயின் எல்லாம் முந்தி இருந்த போது வராத பட்டறிவு இப்போ வந்திருக்கு. பட்டு வேட்டிக்காக அடிபடப் போய் இப்போ கோவணம் மிஞ்சினால் போதும் என்ர நிலையில் தமிழர்கள் நிக்கிற்றார்கள்.

ஆனால் ஓடிவந்து புலத்தில் ஒளிந்து கொண்டு கொடி பிடிக்கும் கூட்டம் இன்னமும் அடி வாங்கவில்லை. ஆகவே அவை மாரித்தவக்கை மாதிரி கத்த தான் செய்யும். இப்ப ஒருத்தர் தமிழ் நாட்டுக்கு ஓடியிருக்கார். 2009 இவர் செத்துப்போனார் என்று ஒப்பாரி வைத்து யாழ்களத்தில அவருக்கு மரியாதை செய்தவை. இது போலத்தான் நாளைக்கு இங்க வந்து கருத்தெழுதும் புலவியாபாரிகளின் முகமூடியும் கிழியும்.

வராது.

 

 

இப்படியெல்லாம் எழுதுங்கள் என்று சொல்லித் தந்துவிட்டார்களா உங்களுக்கு ??? சீனா மாதிரி வரும், ஜப்பான் மாதிரி வரும், ஆகவே உரிமைகளை விட்டுக் கொடுங்கள் என்று ?? வேட்டிக்காகப் போராடினோம், இனிக் கோவணமும் கிடைக்காது, ஆகவே அடிமைகளாக இருக்கலாம் என்கிறீர்கள். உங்களைப்போன்ற பிச்சை எடுக்கும் ந... களுக்கு அது ஒரு பிரச்சினையாக ஒருபோதுமே இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். அதேபோல உங்களைப்போன்ற காம்புகள் சரித்திரத்தில் இப்போதுமட்டும்தான் முளைக்கின்றன என்றும் நான் நினைக்கவில்லை. உங்களைத்தாண்டியும் சரித்திரம் செல்லும்.

 

நடந்ததும், நடப்பது, நடக்கப்போவதும் அப்பட்டமான ஒரு அநீதியென்று தெரிந்துகொண்டும் ஒரு ஆக்கிரமிப்பு இனத்திற்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு இங்கே கருத்துக் குப்பை வீசும் உம்மைப் போன்றவர்களை ஏற்கனவே பார்த்தாயிற்று. 

 

உமக்குக் கொடுக்கப்பட்ட பணியை நீர் செய்யும், எம்மாலானதை நாங்கள் செய்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீதியாவது நியாயமாவது - நிம்மதியா வாழவிடுங்கப்பா என்பதுதான் நான் சொல்வது.

இறந்தவர்களுக்கு நியாயம் தேடப்போய் இருப்பவர்களையும் இழக்க முடியாது.

நியாயம், மானம், இனம், வீரம் இப்படி எல்லாம் வீரவசனம் பேசுவது ஒன்றில் சோக்காய் வாழும் புலப்பினாமிகளுக்கு அல்லது பிள்ளைகளை புலத்துக்கு அனுப்பி விட்டு தேசியம் பேணும் அரசியல்வாதிகளுக்கு லாபகரமாய் இருக்கலாம். மக்களுக்கு ஒரு பயனுமில்லை.

கடந்த 50 வருடமாக முஸ்லீம் சமூகம் எப்படி பட்டும் படாமல் வாழ்ந்ததோ அப்படி வாழ்வதே மக்கள் முன்பு இப்போ உள்ள தெரிவு.

அப்பாடா...யாழ்தேவி வருவது மாதிரி..தமிழர்களின் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீரும் என்னும் நம்பிக்கை இன்னும் வலுவாகிறது.....

நன்றி இந்தியா.....

  • கருத்துக்கள உறவுகள்

நீதியாவது நியாயமாவது - நிம்மதியா வாழவிடுங்கப்பா என்பதுதான் நான் சொல்வது.

இறந்தவர்களுக்கு நியாயம் தேடப்போய் இருப்பவர்களையும் இழக்க முடியாது.

நியாயம், மானம், இனம், வீரம் இப்படி எல்லாம் வீரவசனம் பேசுவது ஒன்றில் சோக்காய் வாழும் புலப்பினாமிகளுக்கு அல்லது பிள்ளைகளை புலத்துக்கு அனுப்பி விட்டு தேசியம் பேணும் அரசியல்வாதிகளுக்கு லாபகரமாய் இருக்கலாம். மக்களுக்கு ஒரு பயனுமில்லை.

கடந்த 50 வருடமாக முஸ்லீம் சமூகம் எப்படி பட்டும் படாமல் வாழ்ந்ததோ அப்படி வாழ்வதே மக்கள் முன்பு இப்போ உள்ள தெரிவு.

 

 

முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு அடிமையின் வாக்குமூலம் இது. ஆனால் என்ன, இது உமது கருத்தில்லாமல், உமது எசமானர்களால் உமக்கு எழுதுமாறு வழங்கப்பட்ட கருத்தென்பதில்தான் சிறிது வருத்தம்.

 

உண்மையென்னவென்றால், நாம் போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். இதும் உமக்கு நன்கு தெரிந்திருந்தும்கூட நீர் ஆக்கிரமிப்பாளருடன் இணங்கி அனுசரித்து, அடிபணிந்து போங்கள் என்று எழுதுகிறீர்.

 

இப்படி எழுதுவதற்குப் பதில், "அட மடையர்களா, வீணாக போராடி எதற்கு அழிந்துபோகிறீர்கள், நீங்கள் பேசாமல் இருந்தாலே போதும், சிங்களவர்கள் இன்னும் 20 வருடங்களில் உங்களின் அடையாளமே இல்லாமல் அழித்துவிடுவான்" என்று உண்மையைக் கூறியிருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பேன்.

அப்பாடா...யாழ்தேவி வருவது மாதிரி..தமிழர்களின் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீரும் என்னும் நம்பிக்கை இன்னும் வலுவாகிறது.....

நன்றி இந்தியா.....

 

 

அதுசரி, தமிழரின் பிரச்சினையே இதுவரை யாழ்தேவி ஓடமுடியாமல் இருந்ததுதானே?? அப்பாடா இனி எல்லாம் நலம்.

 

 

அதுசரி, தமிழரின் பிரச்சினையே இதுவரை யாழ்தேவி ஓடமுடியாமல் இருந்ததுதானே?? அப்பாடா இனி எல்லாம் நலம்.

 

பார்த்தீங்களா மாட்டை பற்றி எழுது என்றால்... மாடு மரத்தில் கட்டி உள்ளது எண்டு போட்டு மரத்தை பற்றி எழுதுகிறீர்கள்..

எப்படி படிப்படியாக யாழ்தேவி யாழுக்கு வந்ததோ..அதே மாதிரி பிரச்சனையும் படிப்படியாக தீரும்..

(சிலவேளை மகிந்த & co போர் குற்றத்தில் உள்ளுக்கும் போகலாம் தானே.... :lol: ..இல்லை அவர்கள் தப்பி...தமிழர்களை சிங்களத்துக்கு முழு அடிமையாக்கலாம்.

அலல்து இப்போது இலங்கையில் மிஞ்சி இருக்கும் தமிழர்கள் வெளிநாடுகளில் எப்படி புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்ற இனத்தவர்களோடு சேர்ந்து இருக்கிறார்களோ அப்படி வாழ முற்படலாம்..

அல்லது சிங்களம் எங்களின் உரிமைகளை பறிக்காமல் இருக்கலாம்...)

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் போராடினாலும் சாவோம். போராடவிட்டாலும் சாவோம்.

மிக உண்மை. சாகும் வரைக்குமாவது நிம்மதியா வாழ விடுங்களேன்?

ரகுநாதன் போராடினாலும் சாவோம். போராடவிட்டாலும் சாவோம்.

மிக உண்மை. சாகும் வரைக்குமாவது நிம்மதியா வாழ விடுங்களேன்?

 

வருங்கால சந்ததி உங்களை தூற்றும் கோசேன்-சே :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சிறீலங்கா கூட்டாக.. அரசியல் யாழ் தேவி விடுவது இது முதற்தடவை அல்ல. ஏலவே 1989 - 90 களில் விட்ட யாழ் தேவி தான். ஏன் இன்ர சிற்றியும் வந்தது.

 

அப்போது வடக்குக் கிழக்கு இணைந்திருந்தது.

 

இந்தியப் படைகள் வடக்குக் கிழக்கில் இருந்தன.

 

அவற்றிற்கு துணையாக நிறைய ஒட்டுக்குழுக்கள் காலுக்க கையுக்க திரிஞ்சன.

 

ஏன்.. பிள்ளை பிடி ஆயுதக் குழுக்களின் உருவாக்கமும் அறிமுகம் செய்யப்பட்டது.

 

தமிழ் மக்களை பொறுத்த வரை.. உந்த பழைய வழித்தடத்தில்.. இந்தியாவின்.. சீனாவின் வியாபாரம் நடத்திற போக்குவரத்துத்தான் நடக்கனும் என்றில்லை.

 

இதனை தனியார் மயமாக்கினால்.. வேர்ஜின் ரெயில்களையும் யாழ்ப்பாணம் கொண்டு வரலாம். ஏன் ஜப்பானிய புள்ளட் ரெயில்களையும் கொண்டு வரலாம்.

 

அது இங்க வாற ஒட்டுக்குழுக்களுக்கு விருப்பமில்லை. உலகம் 21ம் நூற்றாண்டுக்குள் நுழைந்தாலும்.. இவர்கள்.. இந்தியாவின் ராரா வின் கழன்று கொண்டின்ற தண்டவாளத்திலே மகிந்த விசிலடிக்க பயணிக்கன்னுன்னு விரும்பிகிறார்கள்.

 

இது தான்.. கீழ்த்தரமான அடிமைப்புத்தி. இதனை இந்த யாழ் தேவி கொண்டு வருவதுதான் பிரச்சனையே.

 

மேலும்.. இந்த வழித்தடம்.. வடக்கில் சிங்களப் படை விரிவாக்கலை.. சிங்களக் குடியேற்றவாசிகளின் பெருக்கத்தை கூட்டும். அது எமது தாயக நிலம்.. இன்னும் இன்னும் பறிபோவதை ஊக்குவிக்கும். அப்போதும்.. இந்த ஒட்டுக்குழுக்கள் விசிலடிக்கும்.

 

50 - 80 வரை காணாத வரலாறு படைக்கப்படுகுது என்று சொல்லுங்கள். இலங்கைக்கு ரயில் விட்டவனே.. பிரிட்டிஷ்காரன் தான். அப்ப ஏனானாம் அவனை விரட்டி அடிச்சியள்..????! வைச்சிருந்தா.. இப்ப அகதியாக.. லண்டனுக்கு வர வேண்டிய அவசியமில்லையே.கொங்கொங்.. அவுஸ்திரேலியா.. நியூசிலாந்து.. போல.. அங்கையே எல்லாத்தையும் அனுபவிச்சிருக்கலாமே.

 

ஆக.. சிங்கள - இந்திய எஜமானர்களுக்கு நக்கித்தான் பிழைப்போம் என்ற நிலைப்பாட்டை விட்டால்.. ஒட்டுக்குழுக்களுக்கு வாழ்க்கை இல்ல. வயிறு நிறைய வழி இல்ல. அரசியல் பேச ஒன்றும் இல்ல. அதற்காக இங்கு யாழிலும் மாய்கிறார்கள் அவ்வளவே..! இதுக்குள்ள தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பு வேற. :lol::icon_idea:


மகிந்தரும்.. ஹிந்தியாவும் வடக்குக் கிழக்கிற்கு.. நில.. அரசியல் சுதந்திரத்தை முதலில் வழங்கட்டும். அப்புறம் பாருங்கள்.. நாங்களே எங்களுக்கு தேவையான ரெயிலை விட்டுக்கிறம். வேர்ஜினில போற சுகம்.. உதில வராது. புள்ளட்டில போற வேகம்.. உதில வராது. எங்களுக்கும் நாட்டை முன்னேற்றத் தெரியும். அதற்கு இந்த.. பேரினவாத.. மேலாதிக்க.. பிராந்திய ஆதிக்க வெறியர்கள் இடமளிக்கத் தயாரா.. இல்ல.. எமது தேசத்தை விட்டு வெளியேறத்தான் தயாரா.. இல்லை.. இல்ல.

 

அப்ப உந்த ரெயில்களுக்கு ஆயுளும் கம்மி தான். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
அலல்து இப்போது இலங்கையில் மிஞ்சி இருக்கும் தமிழர்கள் வெளிநாடுகளில் எப்படி புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்ற இனத்தவர்களோடு சேர்ந்து இருக்கிறார்களோ அப்படி வாழ முற்படலாம்..

 

 

கிட்டத்தட்ட அமெரிக்கா போல . :icon_mrgreen: ம்ம் நடக்கும். :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.