Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூன் முற்பகுதியில் புளொட்டின் பொதுக் கூட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனாநயக மக்கள் விடுதலை முன்னனி ஆகியவற்றின் பொதுக் கூட்டம்ட ஜூன் முற்பகுதியில் நடைபெறும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது கழகத்தின் விசேட பொதுக்கூட்டத்தை ஜூன் முற்பகுதியில் நடாத்த கட்சியின் உயர் மட்டம் முடிவு செய்துள்ளது.

இன்று இருக்கின்ற அரசியல் சூழ் நிலையில் எங்களுடைய கட்சியின் நிர்வாக கட்டுமானங்களை கட்டமைக்க வேண்டிய கடப்பாடும், கட்சியை பலப்படுத்த வேண்டியதொரு தேவையும், கட்சியின் வளர்ச்சியினை உறுதி செய்ய வேண்டியதன் அவசியமும் எமக்கு இருக்கின்ற காரணத்தினால் கட்சியினுடைய பொதுக்கூட்டத்தை எதிர்வரும் ஜூன் முற்பகுதியில் நடாத்த உத்தேசித்துள்ளோம்.

எமது கட்சியின் இந்த பொதுக்கூட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது கட்சியின் தோழர்கள் பங்குபற்ற வேண்டும்மென்று நாம் விரும்புகின்றோம். வெளிநாடுகளில் உள்ள எமது கட்சியின் கிளைகளை பிரதிநிதித்துவபடுத்துபவர்கள் எமது பொது கூட்டத்தில் கலந்து கொள்வதை நாம் பெரிதும் விரும்புகின்றோம்.

எனவே எமது புலம்பெயர் தோழர்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டுகொள்வதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://tamizl.com/

  • கருத்துக்கள உறவுகள்

தேனீ.. கீனி.. போல.. யாழில் ஒட்டுக்குழு செய்திகளுக்கு என்று ஒரு தனிப் பகுதி திறக்கலாம் போல இருக்குது.

புளொட் முதலில் வவுனியாவில் நின்று தமிழ் மக்களுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோருவதோடு.. முள்ளிவாய்க்காலில் மற்றும் கடந்த காலங்களில் இனப்படுகொலைக்குள்ளான பொதுமக்களுக்கு அஞ்சலி செய்யவும் முன் வரட்டும்.

கூட்டம் போட்டு.. வயிறு வளர்க்க காசு கேட்கிற வாடிக்கையை கைவிட்டால் தான்.. உவை உருப்பிடுவினம். இதில.. புலம்பெயர் தோழர்களும்.. கலந்துக்க அழைப்பு வேற. எல்லாரும் காசில குறியா இருக்கினம். புலம்பெயர் தோழர்கள்.. பழைய மாணவர் சங்க நிதிகளை சித்தார்த்தன் ஐயாவின் கையில் வழங்கி கட்சியை வலுப்படுத்துங்கோ. அப்பதான் குடிச்சுக் கும்மாளம் அடிக்கலாம்.. சிங்களவனையும் கூட வைச்சு.  :icon_idea:

புளொட்டின் இன்றைய நிலை...

Current status

Currently it is functioning under the leadership of Dharmalingam Sidarthan and is a pro-government minor political party that is alleged to cooperate with the Sri Lankan military against LTTE sympathizers. The group reportedly has around 1,500 permanent cadres in the north and east.[4]

Paramilitary activities

Some former members of the group also function along with the Sri Lankan Army as a para-military group in military activities against the LTTE. They have also been accused of murders[by whom?] against political opponents.

http://en.wikipedia.org/wiki/People%27s_Liberation_Organisation_of_Tamil_Eelam

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

* இந்தச் செய்தியைத் தொடர்ந்து தெற்காசியாவின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

* மாலைத்தீவுகளில் பாதுகாப்புப் படைகள் உஷார்நிலையில் வைக்ப்பட்டுள்ளன. :huh:

* பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. :D

அரசியல் ஆலோசகரை :D  நேரில்  சந்திக்க ஒபாமா விரைகிறார்...........  :lol:  :D

yb67dhv2.jpg

சாசை - சுத்தி வச்சு அடிக்கிறாங்கள் ஓடி வாங்கோ ,வீதியில இறங்கி கத்துங்கோ 

பு.தே  - நான் வெள்ளை கொடியை பிடிக்க போறன் சிங்களவன் ரொம்ப நல்லவன் .

சாசை - சுத்தி வச்சு அடிக்கிறாங்கள் ஓடி வாங்கோ ,வீதியில இறங்கி கத்துங்கோ

பு.தே - நான் வெள்ளை கொடியை பிடிக்க போறன் சிங்களவன் ரொம்ப நல்லவன் .

அண்ணா, கடியை விட்டுவிட்டு எங்களுக்கு தகவல் தரலாமே?

இந்த கட்டுமான முடிவிற்கு பின் என்ன பிரச்சினை?

ஏதாவது சகோதரத்துவ உள்ளடி வேலையால் குழு கலைய தொடங்கிவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

tpt94zpc.jpg

சாசை - சுத்தி வச்சு அடிக்கிறாங்கள் ஓடி வாங்கோ ,வீதியில இறங்கி கத்துங்கோ 

பு.தே  - நான் வெள்ளை கொடியை பிடிக்க போறன் சிங்களவன் ரொம்ப நல்லவன் .

mxglegd2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

tpt94zpc.jpg

mxglegd2.jpg

என்னே பொருத்தமான வசனங்கள். சிரிப்புத் தாங்க முடியல்ல. :lol::D

எம். ஏ.. பிலசோபி.. பிலசோபி... முடியல்ல. :D:lol: :lol: :lol:

இங்கே புளட்டின் கூட்டத்தை நக்கல் அடிப்பவர்கள் எந்த அமைப்பு சார்ந்து அதைச் செய்கின்றார்கள்? எதை அடிப்படைத் தகுதியாக வைத்துச் செய்கின்றார்கள்?

இது இறுதியுத்தம்! இதில் வெற்றி நமக்கே! இது தமிழீழம் என்ற பிரசவத்துக்கான வலி ! என்றெல்லாம் மக்களை முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்று காவுகொடுத்ததுக்கு புளட் எதுக்கு மன்னிப்பு கேட்கவேணும்?

புளட் காசு வாங்கீ வயிறு வளர்த்ததென்றால் இவர்கள் காசசு வாங்கி ஈழமா அமைத்தர்கள்? இறுதி யுத்தத்திற்கென்று சேர்த்த காசை ஆட்டையை போட்டவர்கள் என்ன வளர்க்க போட்டார்கள்?

புளட் கூட்டம் போடுவது நகைப்புக்குரியதென்றால் மாவீரர் தின வியாபாரம் நாடுகடந்த அரசுகளின் கோயில் யாகங்கள் போற்றுதலுக்குரியதா?

அவர்கள் ஒட்டுக்குளு என்றால் ஒட்டவைத்தது யார்? போராட வெளிக்கிட்ட இயக்கங்களை ஓட ஓட விரட்டி கொலை செய்து சிங்களவர்களிடம் ஒட்டவைத்தது யார்? ஒட்டவைத்தவர்களுக்கு ஒட்டுக்குழு என்று சொல்ல என்ன தகுதி உண்டு?

அவர்கள் ஒட்டுக்குழு என்றால் புலிகளான கருணா பிள்ளையான் தரப்புகள் கேபி தரப்புகள் இறுதியுத்தத்தில் வெள்ளைக்கொடி தூக்கி சரணடைந்தவர்கள் ஒட்டாத குழுக்களா?

சக இயக்கங்களை அழித்து அரசியல் படுகொலைகளை மானாவாரியாகச் செய்து மதப்பிரிவினைகளைச் செய்து மக்களை அகதிகளாக்கி உலக முற்றத்தில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதில் புளட்டின் பங்கு என்ன புலியின் பங்கு என்ன?

புலம்பெயர் நாட்டில் இருந்துகொண்டு இன்னும் யாழ்ப்பாணிய மையவாத சாதீய மரபுவளியில் புளிச்சல் ஏவறை நக்கல் நய்யாண்டி சொட்டை நொட்டைகளை செய்ய முன் அதற்கான அடிப்படைத்தகுதி என்ன இருக்கின்றது என்ற சுயவிசாரணை அவசியம்.

யாரும் யோக்கியன் இல்லை என்ற உண்மை வெளிப்படையாகத் தெரிந்தும் நான் மேலானவன் நீ கீழானவன் என்ற மரபுவளியில் அடுத்தவனை குறை தன்னை உயர்த்தி அல்லது யோக்கியப்படுத்தும் செயல்கள் பொதுவாக கேடானது. எந்த ஒரு செயற்பாட்டை கீழானது என்று சுட்டிக்காட்ட முற்படுகின்றார்களோ அவர்களை நோக்கி எதிர்க்கேள்விகள் அவர்கள் பாணியிலேயே வரும்.    

1988 - 1990 வரையில் சிங்களவனிடம் நக்கிய ஒட்டுக்குழுக்கள் யார் ? தற்போதைய ஒட்டுக்குழுக்களுக்கும் ஒரு முன்னோடி இருந்திருக்கிறார்கள்...

இப்போதைய ஒட்டுக்குழுக்கள்...வேஸ்ட்....எதையுமே சுயமாக செய்ய மாட்டார்கள்..அதுக்கும் அவர் தான் பாதை காட்டனும்..... :lol:

(ஒரு கிழமைக்கு தானும் வாயை மூடுவோம் என்றால்..முடியவில்லி...சிரங்கு பிடித்த கை சொரியாமல் இருக்காது என்பது போல..அடக்க முடியவில்லை...யாரும் மட்டுறுத்தினர் ப்ளீஸ் ban me for a week...)

Edited by naanthaan

tpt94zpc.jpg

mxglegd2.jpg

உந்த சினிமா கொமடி நடிகர்கள் படம் போட்டு அதற்குள் பகடி விடும் லெவலுக்கு எல்லாம் என்னால் இறங்கமுடியாது. தங்கள் தரத்தை தாமே காட்டும் விடயம் உது .

உந்த குப்பை கோஸ்டிகளை நான் கணக்கெடுப்பதே இல்லை .

முக புத்தகத்திலும் உந்த லெவலில பகிடி விடும் கோஸ்டிகளை தூக்கிவிடுவன் .எனக்கென்று எப்பவும் ஒரு அடையாளம் சுயமரியாதை இருக்கு ,மூன்றாம் லெவலுக்கு போக எல்லாம் முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே... சனம் அங்கை, சாப்பாட்டுக்கு கஸ்ரப்படுது.
இனி... புளட்டை, தூசி தட்டி நிமித்தினால், சனம் அவங்களுக்கு... சோத்துப் பார்சல் கொடுக்க... எங்கை போகப் போதுகளோ.
மனுசனுக்கு.... கஸ்ரம் வரலாம், ஆனா.... சோத்துப் பார்சல் ரூபத்திலை வரப் படாது. :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே புளட்டின் கூட்டத்தை நக்கல் அடிப்பவர்கள் எந்த அமைப்பு சார்ந்து அதைச் செய்கின்றார்கள்? எதை அடிப்படைத் தகுதியாக வைத்துச் செய்கின்றார்கள்?

இது இறுதியுத்தம்! இதில் வெற்றி நமக்கே! இது தமிழீழம் என்ற பிரசவத்துக்கான வலி ! என்றெல்லாம் மக்களை முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்று காவுகொடுத்ததுக்கு புளட் எதுக்கு மன்னிப்பு கேட்கவேணும்?

புளட் காசு வாங்கீ வயிறு வளர்த்ததென்றால் இவர்கள் காசசு வாங்கி ஈழமா அமைத்தர்கள்? இறுதி யுத்தத்திற்கென்று சேர்த்த காசை ஆட்டையை போட்டவர்கள் என்ன வளர்க்க போட்டார்கள்?

புளட் கூட்டம் போடுவது நகைப்புக்குரியதென்றால் மாவீரர் தின வியாபாரம் நாடுகடந்த அரசுகளின் கோயில் யாகங்கள் போற்றுதலுக்குரியதா?

அவர்கள் ஒட்டுக்குளு என்றால் ஒட்டவைத்தது யார்? போராட வெளிக்கிட்ட இயக்கங்களை ஓட ஓட விரட்டி கொலை செய்து சிங்களவர்களிடம் ஒட்டவைத்தது யார்? ஒட்டவைத்தவர்களுக்கு ஒட்டுக்குழு என்று சொல்ல என்ன தகுதி உண்டு?

அவர்கள் ஒட்டுக்குழு என்றால் புலிகளான கருணா பிள்ளையான் தரப்புகள் கேபி தரப்புகள் இறுதியுத்தத்தில் வெள்ளைக்கொடி தூக்கி சரணடைந்தவர்கள் ஒட்டாத குழுக்களா?

சக இயக்கங்களை அழித்து அரசியல் படுகொலைகளை மானாவாரியாகச் செய்து மதப்பிரிவினைகளைச் செய்து மக்களை அகதிகளாக்கி உலக முற்றத்தில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதில் புளட்டின் பங்கு என்ன புலியின் பங்கு என்ன?

புலம்பெயர் நாட்டில் இருந்துகொண்டு இன்னும் யாழ்ப்பாணிய மையவாத சாதீய மரபுவளியில் புளிச்சல் ஏவறை நக்கல் நய்யாண்டி சொட்டை நொட்டைகளை செய்ய முன் அதற்கான அடிப்படைத்தகுதி என்ன இருக்கின்றது என்ற சுயவிசாரணை அவசியம்.

யாரும் யோக்கியன் இல்லை என்ற உண்மை வெளிப்படையாகத் தெரிந்தும் நான் மேலானவன் நீ கீழானவன் என்ற மரபுவளியில் அடுத்தவனை குறை தன்னை உயர்த்தி அல்லது யோக்கியப்படுத்தும் செயல்கள் பொதுவாக கேடானது. எந்த ஒரு செயற்பாட்டை கீழானது என்று சுட்டிக்காட்ட முற்படுகின்றார்களோ அவர்களை நோக்கி எதிர்க்கேள்விகள் அவர்கள் பாணியிலேயே வரும்.    

நல்ல கதை !
முடிவை இப்படி திடீர் என்று முடிப்பீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை.
இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம் என்பது என்னுடைய  தனிபட்ட அபிபிராயம்.

அவர்கள் ஒட்டுக்குளு என்றால் ஒட்டவைத்தது யார்? போராட வெளிக்கிட்ட இயக்கங்களை ஓட ஓட விரட்டி கொலை செய்து சிங்களவர்களிடம் ஒட்டவைத்தது யார்? ஒட்டவைத்தவர்களுக்கு ஒட்டுக்குழு என்று சொல்ல என்ன தகுதி உண்டு?

அவர்களை யாரும் விரட்டி அடிக்க இல்லை அண்ணை...  

முதலிலை வரலாற்றை திருப்பி பாருங்கோ... !!   புலிகள் அவர்களை விடட்டிய போது  புலிகளை விட அவர்கள் பலமடங்கு பெரிய அளவில் இருந்தார்கள்...   

புலிகள்  600 பேர் இருந்த காலங்களில்  ரெலோ  2000 பேருக்கு மேலையும் புளட் 6000 பேருக்கும் மேலையும் இருந்தார்கள்...   ஈ பி  காறை கிட்டத்தட்ட புலிகளின் இரண்டு மடங்கு....

போராட்டம் ஆரம்பித்த காலங்களில் புலிகளை பலர் விரும்பவில்லை என்பதுக்கு இது நல்ல உதாரணம்...   ஆனாலும்  புலிகளின் பிரபல்யம் குறையவில்லை...   காரணம் என்னவாக இருக்கும்... ???

இப்படி புலிகளை விட அதிகமான தொகையில் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தவர்களை புலிகள் விரட்டினார்கள் என்பது  கொஞ்சம் நெருடலாக இல்லையா இருக்கு...?? 

விரட்டிய கொலை செய்த புலிகளை மக்கள் கொஞ்சமும் விரும்பவில்லை...  அந்த காலங்களில் தான் இந்திய இராணுவம் இலங்கை வந்தது...  வந்த இராணுவத்தின்  கொடுப்பனவுகளோடு கூடிய தொண்டர் படையாக புலிகளால் விரட்டப்பட்டவர்களும் வந்தனர்...  புலிகளால்  கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்டவர்களை எல்லாம் மீளவும்  இந்திய இராணுவம் சேர்ந்தது....  சேர்ந்து  புலி வேட்டை ஆரம்பிக்கபட்டது... 

இந்த புலிகள் துரத்தினார்கள் எண்டு சொன்னீர்களே அவர்களை எல்லாம் என்ன காரணம் சொல்லி புலிகள் விரட்டினார்களோ அந்த வேலைகளை வெளிப்படையாகவே செய்ய ஆரம்பித்தனர்... 

புலிகளின் அசுர  வளர்ச்சி இதற்கு பின்னர்தான் ஏற்பட்டது ...   எப்படி வளர்ந்தார்கள் வளர காரணம் என்ன என்பதை உங்களின் சிந்தனைகே விட்டு விடுகிறேன்... !!!   

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

......"எமது கட்சியின் இந்த பொதுக்கூட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது கட்சியின் தோழர்கள் பங்குபற்ற வேண்டும்மென்று நாம் விரும்புகின்றோம். வெளிநாடுகளில் உள்ள எமது கட்சியின் கிளைகளை பிரதிநிதித்துவபடுத்துபவர்கள் எமது பொது கூட்டத்தில் கலந்து கொள்வதை நாம் பெரிதும் விரும்புகின்றோம்.

எனவே எமது புலம்பெயர் தோழர்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டுகொள்வதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது."....

புலம்பெயந்த தங்கடை ஆதரவாளர்களையும் தோழர் அழைக்கிறார்
ஓடியந்தாக்கள் திரும்பவும் போவினமோ ???

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயந்த தங்கடை ஆதரவாளர்களையும் தோழர் அழைக்கிறார்

ஓடியந்தாக்கள் திரும்பவும் போவினமோ ???

கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு காத்துகொண்டு இருக்கிறார்கள் .........
எத்தனை மணிக்கு போத்தில் உடைப்பது ..... எத்தினமனிக்கு சோத்து பாசல் அவிழ்கிறது.
போன்ற விபரங்கள் வந்தவுடன். தோழர்கள் பழக்க தோசத்திலேயே வருவார்கள்  என்பது சக தோழர்களுக்கு தெரிந்திருக்கும்தானே......
 
இனி காட்டி கொடுக்க புலி இல்லை .........
கூட்டம் கூடி என்ன கதைக்க  போகினம்??

என்னதான் நீங்கள் கத்தினாலும் அந்த ஆள் இரண்டாவது விருப்பு வாக்கு பெற்று அரசியலில் இன்னும் இருக்கு .

இவ்வளவும் செய்து கடைசியில் கோவணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .

......"எமது கட்சியின் இந்த பொதுக்கூட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது கட்சியின் தோழர்கள் பங்குபற்ற வேண்டும்மென்று நாம் விரும்புகின்றோம். வெளிநாடுகளில் உள்ள எமது கட்சியின் கிளைகளை பிரதிநிதித்துவபடுத்துபவர்கள் எமது பொது கூட்டத்தில் கலந்து கொள்வதை நாம் பெரிதும் விரும்புகின்றோம்.

எனவே எமது புலம்பெயர் தோழர்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டுகொள்வதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது."....

புலம்பெயந்த தங்கடை ஆதரவாளர்களையும் தோழர் அழைக்கிறார்

ஓடியந்தாக்கள் திரும்பவும் போவினமோ ???

முதலாளித்துவத்தை எதிர்த்து கொண்டு மார்க்கத்திலும், ஓட்டாவாவிலும் மாளிகை வீடுகள் வாங்கியாச்சு.

முதலாளித்துவ சொகுசு காரில் பவனி சென்று பழகியாச்சு.

சும்மா புலி வாந்தி எடுப்பதற்காக ஊர் மக்களில் பாசம் போல் நடித்தால் நீங்கள் பார்சல் கட்டி திருப்பி அனுப்புவது போல் மிரட்டுரீர்கள்? :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நீங்கள் கத்தினாலும் அந்த ஆள் இரண்டாவது விருப்பு வாக்கு பெற்று அரசியலில் இன்னும் இருக்கு .

இவ்வளவும் செய்து கடைசியில் கோவணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .

உங்க தலீவர் கொழும்பில் அனாதை பிணமா உங்களாலேயே போடப்பட்ட போது.. வராத பாசமா.. இப்ப உள்ள தலீவர் மேல வருகுது.

(PLOTE lost its strength and momentum gradually due to continual conflicts with the LTTE. On July 16, 1989, Uma Maheswaran was assassinated in Colombo. A PLOTE splinter group claimed responsibility, though many[who?] still suspect Indian intelligence agency (RAW) involvement.[3] )

உவருக்கு மக்கள் விருப்பு வாக்குப் போட்டது.. அவர் எத்தனை சோத்துப் பார்சலை வாங்கிட்டு வவுனியாவில சோறு போட்ட சனத்தையே வேட்டையாடினதுக்கு பரிசாக அல்ல.

புலிகள் உச்சரித்தார்களே என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விழும் வாக்கு நிழலில் பதுங்கிக் கொண்டதால்.

முடிஞ்சா உங்க தலீவர கூட்டமைப்பை விட்டு வெளிய போய் தேர்தலில் நிற்கச் சொல்லுங்க. சங்கரி போல.. புலம்பிக்.. கடிதம் தான் எழுதும் நிலை வரும். கூட்டம் போடும் நிலை வரவே வராது.

:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
என்னதான் நீங்கள் கத்தினாலும் அந்த ஆள் இரண்டாவது விருப்பு வாக்கு பெற்று அரசியலில் இன்னும் இருக்கு .

அடேயப்பா தோற்பதுக்கு இனி இயலாது என்ற நிலையில் கூட்டமைப்புடன் சேர்த்ததால் வென்றார். சுயேச்சையாக வன்னி என்ன இலங்கையின் எப்பகுதிலாவது தேர்த்தலில் நின்று சித்தார்தனை வெல்ல சொல்லுங்கள் பார்போம்.புளட்டுக்கு அதிக செல்வாக்கான வவுனியாவில் எதனை தடவை தோற்றவர் என தெரியுமோ அண்ணைக்கு?

இவ்வளவும் செய்து கடைசியில் கோவணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .

அடேயப்பா தோற்பதுக்கு இனி இயலாது என்ற நிலையில் கூட்டமைப்புடன் சேர்த்ததால் வென்றார். சுயேச்சையாக வன்னி என்ன இலங்கையின் எப்பகுதிலாவது தேர்த்தலில் நின்று சித்தார்தனை வெல்ல சொல்லுங்கள் பார்போம்.புளட்டுக்கு அதிக செல்வாக்கான வவுனியாவில் எதனை தடவை தோற்றவர் என தெரியுமோ அண்ணைக்கு?
 
அதில் ஒட்டுக்குழுவின் பங்கு( அது தான் நீங்களும் உங்கள் குழாமும்) நிறைய இருந்தது என பெருமையாக சொல்லலாமே. ஏன் பம்முகிறீர்கள். நீங்கள் ஒரு போராளி என பெருமை பட்டேன். ஆனால் இன்னுமொரு போராளி 30 வருடமாக தனது மண்ணுக்காக போராடி அதே மண்ணில் வீழ்ந்தது உங்களுக்கு ஒரு நக்கலாக உள்ளது. உங்களையும் ஒரு போராளி என ஒரு போதும் சொல்லி பெருமை பட்டுக்கொள்ளாதீர்கள். சிங்களவருக்கு உள்ள இனவாதத்தை விட உங்களுக்கு உள்ள புலிவாதம் தான் அதிகம்.
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நீங்கள் கத்தினாலும் அந்த ஆள் இரண்டாவது விருப்பு வாக்கு பெற்று அரசியலில் இன்னும் இருக்கு .

இவ்வளவும் செய்து கடைசியில் கோவணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .

பணக்கார வீடுகளில் பொம்மைக்களும்தான் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கிறது.
 
இல்லாத கடவுள் இந்த உலகில் செய்யும் ஆதிக்கத்தின் ஒரு .00000001 வீதமாகிலும். 
செய்ய முடிந்தால் 
செய்துவிட்டு இங்கே செய்ததை எழுதுங்கள்.
 
புலிகள் பொம்மைகள் அல்ல ............ அவர்கள் போராளிகள். மரணத்தை முடிவு செய்த பின்பு கொள்கையை கையில் எடுத்தவர்கள்.
அவர்கள் கண்ணாடி பெட்டியில் இருப்பதற்கு போராடவில்லை.
கண்ணாடி பெட்டி ஆறறிவு மனிதனுக்கு சிறை. அது பொம்மைகளுக்கே தகும்.
நீங்களும் போய் அவருக்கு ஒத்தாசையாய் இருக்கலாமே .........???

புலிகளின் தலைமை மற்றவர்களின் மரணதைத்தான் கையில் எடுத்தவர்கள் .

அதுதான் தாங்கள் முள்ளிவாய்க்காலில் முன்னுக்கு போகாமல் குழந்தை குஞ்சுகளை பிடித்துக்கொண்டு வந்து முன்னுவிட்டவர்கள் .

முள்ளிவாய்கால் முழுவதையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விட்டது .

அப்ப வெள்ளை கொடி ஏன் அப்பு பிடித்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு மன நோய் இல்லை ..... பிதற்றி கொண்டு இருப்பதற்கு.
நடந்த விடயங்கள் பற்றி எழுதினால் ....... அது பற்றி விவாதிக்கலாம்.
சோபாசுத்தியின் புத்தகம் படித்துவிட்டு விடுதலை போர் பற்றி பேசுவோர்களோடு பேசுவதென்றால் எனக்கு நல்ல வெறி இருக்க வேண்டும். வேலையில்  இருப்பதால் அது முடியாது.
 
வெள்ளை கொடி பிடித்தது 19ஆம் திகதி.
(18ஆம் திகதி இரவு ) புலிகள் அதற்கு முன்பே இல்லாது போய்விட்டார்கள்.
 
நடந்த வற்றில் தவறு என்று எண்ணினால் ............. எழுதுங்கள் விவாதிக்கலாம்.
 
கற்பனைகள் வாந்திகள் ...
எனக்கு அருவெறுப்பை தருபவை. என்னால் கிட்டவும் வரமுடியாது மன்னிக்கவும்.
  • கருத்துக்கள உறவுகள்

நடந்த வற்றில் தவறு என்று எண்ணினால் ............. எழுதுங்கள் விவாதிக்கலாம்.
 
கற்பனைகள் வாந்திகள் ...
எனக்கு அருவெறுப்பை தருபவை. என்னால் கிட்டவும் வரமுடியாது மன்னிக்கவும்.

வச்சுக்கொண்டா  வஞ்சகம் செய்கிறார்

இருந்தால் தானே

அகப்பையில் வர........... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.