Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கூட்டணிக் கட்சிகளுக்கென மொத்தமாக எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்க வழியில்லை.

 

55 தொகுதிகளை எந்த தனிக்கட்சியும் வெல்லவில்லையெனில், எதிர்க்கட்சியே இல்லாமல்தான் இந்தமுறை பாராளுமன்றம் அமையும்

 

நன்றி அண்ணா... தங்கள் விளக்கத்திற்கு. :)

  • Replies 474
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் இன்றில் இருந்து தான் நாம் தமிழரின் அரசியல் பயணம் தொடங்குகின்றது. எனிவரும் இரண்டு வருடங்களும் ஒரு உத்வேக பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தின் சரியான தலைமையாக அது மாற வேண்டிய தேவை உள்ளது. நான் நாம் தமிழரின் உறுப்பினர் அல்ல. அதன் எல்லாக் கொள்கையிலும் எனக்கு உடன்பாடில்லை. தமிழனாக தங்களை நினைத்து வாழ்கின்றவர்களுக்கு இன வேறுபாடு காண்பதில் முழுமையான உடன்பாடே இல்லை. ஆனால் இதை எல்லாவிற்றிலும் இருந்து மாறுபட்ட மாற்று சக்திகளுக்கு நிகராக நாம் தமிழர் மாற வேண்டிய அவசியம் உள்ளது.

கலைஞரோ, ஜெயலலிதாவோ இல்லை, வடநாட்டு அரசியல்வாதிகளோ வெல்ல வைப்பதை விடத் தமிழன் என்ற உணர்வோடு வாழ்கின்ற நம்மவர்கள் வெற்றி பெறுவதில் அதிக மகிழ்ச்சி உள்ளது. இன்று நாம் தமிழர்களைப் பற்றிக் கேலி செய்பவர்கள் அதை விடச் சரியான தெரிவு இருப்பின் காட்டுங்கள். இல்லாவிடில் பொத்திக் கொண்டு இருங்கள்...

ஆனால் இப்படியான அரசியல் செய்து நாம் தமிழரால் வெற்றி பெற முடியாது. மக்களின் தேவைகளை உணரவேண்டும். மக்களோடு கட்சியைக் கொண்டு செல்ல வேண்டும். தெளிவான சிந்தனை அரசியலை உருவாக்க வேண்டும். சமீபத்தில் நண்பர் சொன்னார், இலவசத்தை ஒழிப்போம் என்ற நாம் தமிழரின் கொள்கை பற்றி. அப்படி வைத்தால் நிச்சயம் கட்சி தோற்றே விடும். இலவசத்தை ஒழித்தால், அதற்கு நிகராக என்ன உயர்ந்த பலனை மக்கள் பெறுவார்கள் என்பதைச் சொல்ல வேண்டும். எல்லோருடைய மனமும் தேவைகளும் ஏதாவது ஒன்றைக் குறிமத்த கட்சி செய்யுமா என்றே எதிர்பார்;ககின்றது. அதை நிறைவு செய்ய வேண்டும்.

இந்தக் திண்ணை விமர்சனம், கேலி செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதல்ல. இன ஆதரவர்களுக்கானது இது. நரேந்திர மோடியைத் Nனீர் போடச் சொல்லி மணி சங்கர் ஐயர் கேலி செய்தார். இன்று அவரது முகவரியே தெரியவில்லை. ஆனால் அந்தக் கேலியை நரேந்திரமோடி சாதகமாக்கினார். தன் மீதான அனுதாபமாக மாற்றினார். பல இடங்களில் தேனீர்கடைகளுக்கு அவர் பெயரை வைத்தார். அது கிராமப் புறங்களுக்களில் நல்ல எதிர்பார்ப்பினை உருவாக்கியது....

கேலி பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

Vaiko

5 மணிகள் ·

கே :தொடர் தோல்விகள், உங்களை மனரீதியாகப் பலவீனம் அடையச் செய்துள்ளதா?'

ப: ''போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான். இடையறாது தோல்விகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து வெற்றிகளைப் பெற்ற மாவீரர்கள், மாமனிதர்களின் வரலாறுகள்தாம் என்னை இயக்கிக்கொண்டே இருக்கின்றன.

எந்தக் கட்டத்திலும், தோல்வியால் மனம் கலங்கியது இல்லை. மாறாக, தோல்விச் செய்தி கிடைத்தவுடன், அந்தக் கணத்திலேயே எழுந்து வேகமாகப் பணி ஆற்றத் தொடங்கிவிடுவேன். 96 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. முழுமையாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்த அரங்கத்தை ஏற்பாடு செய்ய நானே விரைந்தேன்.

உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் குசேலர் அவர்கள், அதற்கு முன்பு எனக்குப் பழக்கம் இல்லாதவர். அந்த வேளையில் என் வீட்டுக்கு வந்தார்.

'நீங்கள் சோர்ந்துவிடக் கூடாது; ஊக்கத்தோடு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று சொல்லலாம்என உங்கள் வீட்டுக்கு வந்தேன். இங்கே, நீங்கள் இயங்குகின்ற வேகத்தைப் பார்த்துத் திகைத்துப்போனேன்’ என்றவர், கோடானுகோடி மக்களின் ஆதரவைப் பெற்று இருந்த ஒரு தலைவர், தேர்தல் களத்தில் ஒரு முறை தோற்றவுடன், மிகவும் மனம் உடைந்து சோர்ந்ததையும், அவரது பலத்தை நினைவூட்டி தான் ஆறுதல் கூறியதையும் சொல்லிவிட்டு, எனது போர்க் குணம் தன்னை வியக்கவைத்துவிட்டது என்றார்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் என் தோல்விச் செய்தி வந்துகொண்டு இருந்தபோது, அதற்காக வருந்தித் தீக்குளித்த தலித் சகோதரன் அய்யனாரைக் காப்பாற்ற, வத்திராயிருப்புக்கு விரைந்து சென்று, அவரை மதுரை அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்து, உடன் சிகிச்சை தந்து காப்பாற்றியபோதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது!''

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலூர் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன் 203125 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

கடலூர் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன் 203125 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் உதயகுமார் 127845 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தஞ்சையில் அதிமுக வேட்பாளர் பரசுராமன் 1.44 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

கரூரில் தம்பிதுரை 1.95 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

லடாக் தொகுதியில் முதல் வெற்றி: பா.ஜனதா வரலாற்று சாதனை

கன்னியாக்குமரி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 128662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா இம்புட்டு சீட் வின் பண்ணியும் நோ use hahaha

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ

 

1- காங்கிரசுக்கும்

2- திமுகவுக்கும்

3- தேமுகவுக்கும் 

ஒரு இடம் கூட  வரக்கூடாது என்றும்

 

4- பாரதீயஐனதாவை ஆதரிக்காதீர்கள் என்றும்

5- அதிமுக  எல்லா இடங்களிலும் வெல்லணும் என்றும்

உலகத்தில் எவருமே கணிக்கவில்லை

ஆனால் சீமான் சொன்னார்

அது நடந்திருக்கிறது

 

யாழில் கூட எவரும் கணிக்கவில்லை

இப்ப  வந்து அறிக்கைவிடுவது போலித்தனமானது

காலத்துக்கு ஏற்ப ஆடக்கூடாது

அது இந்தப்பழம் புளிக்கும் என்பது போன்றது

 

உங்களால் முடியாததை ஒருவர் செய்திருக்கின்றார்

வெற்றி  பெற்றிருக்கின்றார்

ஏற்றுக்கொள்ளப்பழகுங்கள்.

விடுங்கோ அண்ணா
அவர்களுக்கு தெரிந்தது சிரிப்பும் ஒன்றுக்கும் உதவாத வெட்டிக் கதையும் தான்...சீமான் அன்று சொன்னான் இன்று அதை செய்தும் காட்டி விட்டான்...இனி அவரின் வளர்சியை பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டத்தோடை நம்மடையலும் செர்ந்து ஜொல்லு விட்டு சிரிக்கட்டும்...அவன் சொன்னான் அதை செய்தான் அவன் தான் உண்மையான அரசியல் வாதி , ஆனால் நம்மவர்கள் அந்த நாள் தொட்டு இந்த நாள் வர சிரிப்பும் கேலி செய்ததும் தான் சாதனை.....! இப்படி பட்டவர்களுக்கு நானாக்க இருந்தால் பதில் கருத்து எழுதி இருக்க மாட்டேன்.... :wub:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்


கூட்டணி    முடிவு
பா ஜ க                  340
காங்கிரஸ்             58
மாற்று அணி        53
மற்ற கட்சிகள்      88
ஆம் ஆத்மி             4

மொத்தம்             543





 


2/3 பெரும்பான்மைக்கு 22 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் பா ஜ க வின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவின் அரசியல் அல்ல பிரச்சனை புலி அரசியல் இனி எங்கும் செல்லாது.இதை விளங்கிகொள்ளாமல் கத்திக்கொண்டு இருந்தால் ஆகப்போவது எதுவுமில்லை .

இலங்கை ,தமிழ் நாடு ,இந்தியா,சர்வதேசம் எங்கும் நிரூபிக்கபட்டுவிட்டது . 

 

 

அப்போ ஆனந்தி???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 இந்திய பாராளுமன்ற தேர்தல் - 2014 திருவிழாவின் இறுதி முடிவு பட்டியல்.

 

13zmxeb.jpg

 

 

Source: Dinamalar.

  • கருத்துக்கள உறவுகள்

இடதுசாரிகளுக்கு பெருத்த அடியாகிவிட்டது.. அதுபோல சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்றவையும் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்க்கட்சித்தலைவராக பதவியை ஏற்றுக் கொண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசியல் பாடம் படிக்க ராகுல் காந்தி அவர்களை வேண்டிக் கொள்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

ம தி மு க என்ற கட்சியை கலைத்து விடுவது தான் வைக்கோ தன் தொண்டர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம தி மு க என்ற கட்சியை கலைத்து விடுவது தான் வைக்கோ தன் தொண்டர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.....

 

திமுக விற்கு கிடைத்த இந்த பெருத்த அடி அதன் தொண்டர்களை யோசிக்க வைக்கும், ஸ்ராலின் தலைமையில் ஒரு குழுவும்

அண்ணன் அழகிரியின் தலைமையில் இன்னொரு குழுவும் உருவாகும் பொழுது

வை கோ தமிழ் நாட்டின் இரண்டாவது பலமாக வருவார்.

சீம்மனும் வை கோவும் இணையும் பொழுது தமிழ் நாட்டில் தமிழர்களின் ஆட்சி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

திமுக விற்கு கிடைத்த இந்த பெருத்த அடி அதன் தொண்டர்களை யோசிக்க வைக்கும், ஸ்ராலின் தலைமையில் ஒரு குழுவும்

அண்ணன் அழகிரியின் தலைமையில் இன்னொரு குழுவும் உருவாகும் பொழுது

வை கோ தமிழ் நாட்டின் இரண்டாவது பலமாக வருவார்.

சீம்மனும் வை கோவும் இணையும் பொழுது தமிழ் நாட்டில் தமிழர்களின் ஆட்சி வரும்.

 

 

உண்மை

அத்துடன் திமுகவின் இரு குழுக்கள் மீதும் அதிருப்தி  கொண்டோர்    

வைகோவிடமே வருவார்கள்

பொறுத்தார் பூமியாழ்வார்

Edited by விசுகு

ஆமாம். சீமான், வைக்கோ, நெடுமாறன் போன்றோர் தமிழகத்தின் தனித்தன்மையை காத்துவைப்பதற்கு உதவுவார்கள்,

 

ஆனால் இங்குள்ள மக்கள் அந்த இன உணர்வோடு சில புறக் காரணிகளையும் மனதில் சேர்த்துக்கொண்டே வாக்குகளை முடிவு செய்கின்றனர்.

 

இந்த வெற்றி ஜெ.யின் அரசியல் காய் நகர்த்தல்மட்டுமே... தமிழக மக்களின் ஈழமக்களிற்கான இரக்க நிலை, தேர்தலுக்காக திமுக எடுக்க நினைக்கும் ஈழத் தமிழர்கள் சார்பான நிலைப்பாடு... இவற்றை எல்லாம் துல்லியமாக கணக்கெடுத்து, விவேகமான முடிவுகளை ஜனநாயக ரீதியில் சட்டசபையில் நிறைவேற்றியதும், அதிமுக வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேர்தல் கருத்துக்களை, கடந்த மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக...
தொடர்ந்து... வாசிக்க வைத்த, சில கருத்துக்களை... மீண்டும் அசை போட்டு வைக்க வைத்தமை....
அருமையாக இருந்தது. :)

வைகோ தோற்றது... கவலை. :(

 

c0c7bf5c-4d6c-4e11-94d6-a9601d805c841.jp

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால்... படுகொலைகளுக்கு, துணை போன... தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும்.
அங்கு... இறந்த லட்சக்கணக்கான, ஆத்மாக்களின் சாபம் வீண் போகவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால்... படுகொலைகளுக்கு, துணை போன... தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும்.

அங்கு... இறந்த லட்சக்கணக்கான, ஆத்மாக்களின் சாபம் வீண் போகவில்லை.

 

 

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே 19 வைகாசியில் உலகத் தமிழர்கள் எல்லோரும் வீதியில் இறங்கி ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கதறினார்கள். ஆட்சியில் இருந்த  கிந்திய வெறிபிடித்த காங்கிரசோ கருணாநிதியோ கண்டுகொள்ளவில்லை.

 

இன்று இந்த இரு கட்சிகளின் நிலையையும் நினைக்கும் போது

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்

என்ற தொடர்மொழி மனதில் வந்து போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே 19 வைகாசியில் உலகத் தமிழர்கள் எல்லோரும் வீதியில் இறங்கி ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கதறினார்கள். ஆட்சியில் இருந்த  கிந்திய வெறிபிடித்த காங்கிரசோ கருணாநிதியோ கண்டுகொள்ளவில்லை.

 

இன்று இந்த இரு கட்சிகளின் நிலையையும் நினைக்கும் போது

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்

என்ற தொடர்மொழி மனதில் வந்து போகின்றது.

 

அந்தப் படுகொலை நேரம்... கருணாநிதிக்கு முதுகு வலி வந்து, ஆஸ்பத்திரிக்கு போய்... மருந்து எடுத்தவர்.

இப்ப... தமிழக மக்கள், நல்ல மருந்து கொடுத்திருக்கிறார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே 19 வைகாசியில் உலகத் தமிழர்கள் எல்லோரும் வீதியில் இறங்கி ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கதறினார்கள். ஆட்சியில் இருந்த  கிந்திய வெறிபிடித்த காங்கிரசோ கருணாநிதியோ கண்டுகொள்ளவில்லை.

 

இன்று இந்த இரு கட்சிகளின் நிலையையும் நினைக்கும் போது

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்

என்ற தொடர்மொழி மனதில் வந்து போகின்றது.

 

 

நிச்சயமாக  இன்று முள்ளிவாய்க்காலை  இவர்களும் நினைவு கூருவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மீரட் தொகுதியில் நக்மா படுதோல்வி; நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

மீரட் தொகுதியில் நக்மா படுதோல்வி; நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்

 

நக்மாவுக்கு என்ன... இழவு தெரியும் எண்டு, அரசியிலில் குதிச்சவ?

ந‌க்மா நாட்டு ம‌க்க‌ளுக்கு, இது வ‌ரை... ஜெயிலுக்கு போயிருக்கிறாவா?, உப்பு ச‌த்தியாக் கிர‌க‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌வவா,

 

அல்ல‌து....

 

வாயிலை, தூச‌ண‌ம் வ‌ருது. வேணாம்....

 

என்னை, விட்டுப்புடுங்க‌ய்யா.... :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாநிலம்                             மொ  பாஜ,காங்,மற்றயவை 

 

 

 

 

 

அஸ்ஸாம்                          14    7    3    4

திரிபுரா                                  2    0    0    2

அருணாசலப்பிரதேசம்      2    1    1    0

மணிப்பூர்                              2    0    2    0

மேகாலயா                            2    1    0    1

மிúஸாரம்                             1    0    1    0

நாகாலாந்து                           1    0    0    1

பிகார்                                      40    31    7    2

சத்தீஸ்கர்                              11    10    1    0

ஹரியாணா                          10    7    1    2

ஹிமாசலப் பிரதேசம்          4    4    0    0

ஜம்மு காஷ்மீர்                     6    3    0    3

ஜார்க்கண்ட்                           14    12    2    0

கேரளம்                                  20    0    12    8

மத்தியப் பிரதேசம்              29    27    2    0

மகாராஷ்டிரம்                      48    42    6    0

ஒடிஸா                                  21    1    0    20

உத்தரப் பிரதேசம்               80    73    2    5

உத்தரகண்ட்                          5    5    0    0

அந்தமான், நிகோபர்            1    1    0    0

சண்டீகர்                                 1    1    0    0

லட்சத்தீவுகள்                       1    0    1    0

தில்லி                                      7    7    0    0

கோவா                                     2    2    0    0

கர்நாடகம்                               28    17    9    2

ராஜஸ்தான்                           25    25    0    0

மேற்கு வங்கம்                      42    2    4    36

பஞ்சாப்                                    13    6    3    4

தமிழ்நாடு                             39    2    0    37

புதுச்சேரி                                1    1    0    0

தாத்ரா, நாகர் ஹாவேலி    1    1    0    0

டாமன்-டையூ                       1    1    0    0

சிக்கிம்                                     1    0    0    1

ஆந்திரப்பிரதேசம்                42    19    2    21

குஜராத்                                  26    26    0    0




 





 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


புதிதாக அமைய இருக்கும் 16-வது பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையை அ.தி.மு.க. பெற்று உள்ளது.

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 2-வது இடத்தை பெற்று இருக்கிறது.

காங்கிரசுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சி என்ற கவுரவத்தை பெற்று இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தை நடத்தி முடித்து கிட்டதட்ட 4,5 வருடஙகளுக்குப் பிறகு காங்கிரசும்,திமுகாவும் ஆட்சியில் இல்லாமல் போகிறார்கள்.இதை ஏதோ தாங்கள் சாதிச்ச மாதிரி தமிழன் கொண்டாடுகிறான்.அந்தளவிற்கு இருக்கு தமிழனின் நிலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.