Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது – கெஹலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மோடியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது – கெஹலிய
 
இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடி பணியாது சுயமாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய ஓர் மத்திய அரசாங்கம் இந்தியாவில் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவில் வலுவான ஆட்சி நிறுவப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய அவசியம் மோடி அரசாங்கத்திற்கு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் தென் பிராந்திய பாதுகாப்பிற்கு நிரந்தரத் தீர்வு :
 
இந்தியாவின் 29 வது மானில‌ம்  - சிரிலங்கா
இந்தியாவின் 30 வது மானிலம்  - ஈழம்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தென் பிராந்திய பாதுகாப்பிற்கு நிரந்தரத் தீர்வு :
 
இந்தியாவின் 29 வது மானில‌ம்  - சிரிலங்கா
இந்தியாவின் 30 வது மானிலம்  - ஈழம்

அப்பொழுதும் கூட தமிழ் நாட்டுடன் இணைய மனமில்லை! :icon_idea:

விந்தை தமிழர்களப்பா...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுதும் கூட தமிழ் நாட்டுடன் இணைய மனமில்லை! :icon_idea:

விந்தை தமிழர்களப்பா...! :lol:

தமிழ்நாட்டில்.... இப்போதைக்கு, நம்பிக்கையில்லையப்பா.... :D

அப்பொழுதும் கூட தமிழ் நாட்டுடன் இணைய மனமில்லை! :icon_idea:

விந்தை தமிழர்களப்பா...! :lol:

தமிழ்நாட்டில் நான் வசித்திருக்கிறேன் ராஜவன்னியன்.
 
தேனாம்பேட்டை (ஆழ்வார்பேட்டை) பகுதியில். என் வாழ்விலே மிகவும் இனிமையான நாட்கள் அவை.
 
தமிழ்நாட்டோடு இணைவது என்பது ஈழத்தமிழரைப் பொறுதவரை வார்த்தைகளால் விபரிக்க முடியாத இனிமையான நிகழ்வு.
 
[ Its like a never ending holiday !!]
 
ஆனால் தமிழ்நாட்டில் சில திருத்த முடியாத நிலமைகளும் இருக்கின்றன. உதாரணமாக அரசியல் சாக்கடை. இந்த சாக்கடைகளை எப்படி திருத்தலாம் என்று தமிழ்நாட்டில் இருப்போரே குழம்பும் போது.. நாமும் போய் அதில் ஐக்கியமாகலாமா ??   :D
 
மற்றப்படி சில தனித்துவமான பேச்சுவழக்கு , கலாச்சாரம் இப்படியும் சில...
 
பிற்பாடு வன்னியர்கள், கவுண்டர்கள்.. என்று எங்களை ஒதுக்கி விடுவீர்கள்..  :D
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில்.... இப்போதைக்கு, நம்பிக்கையில்லையப்பா.... :D

எங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை..? :o

உங்களுக்கு சிங்களவன் தான் லாயக்கு! :lol: :lol: :rolleyes:

THBMD_8_1077156g.jpg

இந்த படம்  நீங்கள் வசித்த அந்த பகுதிதான். வேலு மிலிடரி ஓட்டலில் உணவருந்தியிருகிறேன்.

சில தனித்துவமான பேச்சுவழக்கு , கலாச்சாரம் இப்படியும் சில...

இப்படி பேசி பேசித்தான் யாழ்ப்பணத்தான், வன்னியான், மலையான், மட்டக்கிளப்பான், திருக்கோவிலான், அம்பாரையான், பொத்துவிலான், கதிர்காமரையான், கண்டியான், பதுளையான், கொழும்பான், சிலாபத்தான், மன்னாரான் என பிரிந்துபட்டு அழிகிறீர்கள்..

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் இல்லாத கலாச்சாரமும், பேச்சு வழக்குமா..?

மனமிருந்தால் ஒற்றுமைக்கு மார்க்கமுண்டு! :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுடன் இணைகிறோம் புதிச்சேரிபோன்று யூனியன் பிரதேசமாக,அதைவிட அதிகாரங்கள் நிறைந்த சிறப்புப்பிரதேசமாக இருக்கவே ஈழத்துமக்களுக்கு ஆசை. மத்தப்படி அரசியல் சாக்கடைகள் ஈழத்திலும் இப்போது உருவாகிவிட்டது. அது தமிழர் விரோததேசம் இந்தியாவின் உபயம்.

என்ன ஒரு விடையம், நீங்கள் புறக்கணித்த வைக்கோவிற்கோ நெடுமாறன் ஐயாவுக்கோ முடிசூட்டி அழகுபார்ப்போம். சீமான் எங்கள் கொல்லைப்புறத்திலும் தமிழில் முழங்குவார்.

ரஸ்ய அதிபர் பூடினுக்கு கிரீமியாபோல் மோடிக்கு இலங்கைத்தீவின் வடக்குக்கிழக்காகவும் இருக்கலாம். வடக்குக்கிழக்கு ஒரு காத்திரமான பலம்வாய்த நாட்டின் ஆழுகைக்குள் வந்துவிட்டால் இலங்கைத்தீவின் தெற்குப்பகுதி சீண்டுவாரிலாது போய்விடும் அதாவது பொருளாதார புவியியல் மற்றும் கடல்சார் போக்குவரத்துக்கான முக்கியத்துவம் அனைத்தையும் இழந்துவிடும். சீனாவின் முத்துமாலையில் ஒரு குண்டுமணி இணைக்கப்படாத வெற்றிடமாக மூளியாகவே இருக்கும்.

9/11 க்குப்பின் உலக அரசியல் ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதுபோல் கிரீமியாவுக்குப் பின்பும் மாற்றங்கள் ஏற்படவாய்ப்பிருக்கின்றது.

இலங்கையும் இந்தியாவும்  USA+Canada, Australia+NewZealand மாதிரி ஆனாலும் நல்லது......

மோடி அதற்கு வழிவகுத்தால் நல்லது..... (துள்ளுகிற சிங்களவரையும் முஸ்லீம்களையும் தட்டி நிமிர்த்தினால் சரி...ஆனால் அதற்க்கு இப்போ ஆயுதம் தாங்கிய தமிழர் இல்லை....)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை..? :o

உங்களுக்கு சிங்களவன் தான் லாயக்கு! :lol: :lol: :rolleyes:

c0c7bf5c-4d6c-4e11-94d6-a9601d805c841.jpseeman-9.jpg

2016 சட்டசபைத் தேர்தலில், இவர்களில் ஒருவரை முதலமைச்சராக்குங்கள்.

பின்பு... கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

லால் பகதூர் சாஸ்திரிக்குப்பின் மோடிதான் மிக சிறந்த தலைவர்,இலங்கையை விடுங்கள் இந்தியாவுக்கு இனி விமோசனம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் இந்தியாவும்  USA+Canada, Australia+NewZealand மாதிரி ஆனாலும் நல்லது......

மோடி அதற்கு வழிவகுத்தால் நல்லது..... (துள்ளுகிற சிங்களவரையும் முஸ்லீம்களையும் தட்டி நிமிர்த்தினால் சரி...ஆனால் அதற்க்கு இப்போ ஆயுதம் தாங்கிய தமிழர் இல்லை....)

ஹலோ நாந்தான்,

இந்த ஆயுதம் தாங்கிய தமிழரென்றால் யாரவர்கள்? ஒரு திரியில் போய் அழிந்தது நல்லதென்கிறீர்கள்...மற்றொரு திரியில் இருந்தால் நல்லதென்கிறீர்கள்...ஏனிந்த இருநிலை? :o

ஒரு கொள்கையே கிடையாதா? :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுடன் இணைகிறோம் புதிச்சேரிபோன்று யூனியன் பிரதேசமாக,அதைவிட அதிகாரங்கள் நிறைந்த சிறப்புப் பிரதேசமாக இருக்கவே ஈழத்து மக்களுக்கு ஆசை. மத்தப்படி அரசியல் சாக்கடைகள் ஈழத்திலும் இப்போது உருவாகிவிட்டது. அது தமிழர் விரோத தேசம் இந்தியாவின் உபயம்.

என்ன ஒரு விடையம், நீங்கள் புறக்கணித்த வைக்கோவிற்கோ நெடுமாறன் ஐயாவுக்கோ முடிசூட்டி அழகுபார்ப்போம். சீமான் எங்கள் கொல்லைப்புறத்திலும் தமிழில் முழங்குவார்.

ரஸ்ய அதிபர் பூடினுக்கு கிரீமியாபோல் மோடிக்கு இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்காகவும் இருக்கலாம். வடக்குக்கிழக்கு ஒரு காத்திரமான பலம்வாய்த நாட்டின் ஆழுகைக்குள் வந்துவிட்டால் இலங்கைத்தீவின் தெற்குப்பகுதி சீண்டுவாரிலாது போய்விடும் அதாவது பொருளாதார புவியியல் மற்றும் கடல்சார் போக்குவரத்துக்கான முக்கியத்துவம் அனைத்தையும் இழந்துவிடும். சீனாவின் முத்துமாலையில் ஒரு குண்டுமணி இணைக்கப்படாத வெற்றிடமாக மூளியாகவே இருக்கும்.

9/11 க்குப்பின் உலக அரசியல் ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதுபோல் கிரீமியாவுக்குப் பின்பும் மாற்றங்கள் ஏற்படவாய்ப்பிருக்கின்றது.

கொஞ்சம் அதிக ஆசைப்படுவது போல் தெரிகிறது. இருந்தாலும் உங்கள் விருப்பம் விரைவில் ஈடேற வேண்டுதல்கள்.

சேய் முன்னேறினால், தாய்க்கு அதைவிட வேறென்ன வேண்டும்? :)

ஹலோ நாந்தான்,

இந்த ஆயுதம் தாங்கிய தமிழரென்றால் யாரவர்கள்? ஒரு திரியில் போய் அழிந்தது நல்லதென்கிறீர்கள்...மற்றொரு திரியில் இருந்தால் நல்லதென்கிறீர்கள்...ஏனிந்த இருநிலை? :o

ஒரு கொள்கையே கிடையாதா? :)

நான் சொல்ல வந்தது ஆயுத தமிழ்குழுக்கள் இல்லாத படியால் இந்தியாவுக்கு இலங்கையை இலகுவில் வழிக்கு கொண்டுவரும் வழியில்லை..இதை எண்ணித்தான் எங்களுக்கு முதலில் ஆயுதம் தந்தார்களோ தெரியாது....1987இல் இலங்கை இந்தியாவின் சொல்லை கேட்க்க வேண்டிய நிலைக்கு வந்தது....எங்களது பிரச்னை அப்போதே முடிந்து இந்திய பாதுகாப்பில் வந்திருக்க வேண்டியது :) :)

பின் எல்லாமே தலை கீழாகி விட்டது...இப்போ இலங்கை சீனாவின் கழுத்தில் இருக்குது...(இந்தியாவை சௌக்கியமா என்று கேட்டு கொண்டு)..இது யாரின் தீர்க்க தரிசனத்தால் வந்தது?

தலைவரும் இந்தியாவின் சொல்கேட்டு இருந்தால்..கடைசி மக்களின் அழிவாவது தடுக்கப்படிருக்காதா?

நான் சொல்லுவது விளங்குதா? எனக்கே விளங்கவில்லை...அவ்வ்வ்வ்

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது அதீத ஆசை இல்லை, எதிர்காலத்தில் நடக்கக்கூடியதே,

மேற்குலகநாடுகள் மற்ரும் தென்னாபிரிக்கா ஆகியவைகளுடன் எம்மவர் நடத்திய பேச்சுவார்தைகளில் முதலில் அவர்கள் கூறும்விடையம் இந்துசமுத்திரத்தில் பிராந்திய முக்கியத்துவம் அதிகமான நாடாக இந்தியா இருக்கின்றது ஆகவே அதனை மீறி எம்மால் எந்த முடிவுகளையும் எடுக்கமுடியாது, நீங்கள் அவர்களுடன் சமாந்தராமாகச் செயற்படுவதே நல்லதென. ஆக இந்தியா இப்படியான முடிவினை எடுக்கும்பட்சத்தில் எவராலும் தடுக்கவோ மேலதிகமான அழுத்தங்களை இந்தியாமீது பிரயோகிக்கவோ முடியாது.

இலங்கைத்தீவில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் எனும் ஆங்கிலத்தினசரி நான் கூறிய செய்தியை சிங்களத் தலைமைகளுக்குக் கூறியிருக்கின்றது. தமிழர்விடையத்தில் சிங்களத் தலைமைகள் அனைவரும் ஒன்றுபடவேண்டுமென அறிவுறுத்தியிருக்கின்றது.

பூடினது கிரீமியா விடையம்போல் எதாவது நடக்கலாம் என அச்சப்பட்டுள்ளது.

விபரங்களுக்குப் புதினப்பலகையை இணையத்தை வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்தது ஆயுத தமிழ்குழுக்கள் இல்லாத படியால் இந்தியாவுக்கு இலங்கையை இலகுவில் வழிக்கு கொண்டுவரும் வழியில்லை..இதை எண்ணித்தான் எங்களுக்கு முதலில் ஆயுதம் தந்தார்களோ தெரியாது....1987இல் இலங்கை இந்தியாவின் சொல்லை கேட்க்க வேண்டிய நிலைக்கு வந்தது....எங்களது பிரச்னை அப்போதே முடிந்து இந்திய பாதுகாப்பில் வந்திருக்க வேண்டியது :) :)

பின் எல்லாமே தலை கீழாகி விட்டது...இப்போ இலங்கை சீனாவின் கழுத்தில் இருக்குது...(இந்தியாவை சௌக்கியமா என்று கேட்டு கொண்டு)..இது யாரின் தீர்க்க தரிசனத்தால் வந்தது?

தலைவரும் இந்தியாவின் சொல்கேட்டு இருந்தால்..கடைசி மக்களின் அழிவாவது தடுக்கப்படிருக்காதா?

நான் சொல்லுவது விளங்குதா? எனக்கே விளங்கவில்லை...அவ்வ்வ்வ்

அப்பொழுது உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை?

அந்த 13 க்குத்தான் அந்நாளில் குழுக்களுக்குள் மோதல், அத்தனை அடிதடியும், ஆயுதப்போராட்டமும், உயிரிழப்புமா? எனக்கே விளங்கவில்லை! :o

அப்பொழுது பெரும்பான்மை மக்களின் அபிலாஷை என்னவாக இருந்தது?

மொத்தத்தில் உங்களைப் போன்றவர்களுக்கு அடுத்தவரிடம் சார்ந்து இருப்பதைத் தவிர.எப்பொழுதுமே சுயஉரிமை தேவை இருக்கப்போவதில்லை போலும். :D

Edited by ராசவன்னியன்

என்று  தணியும் இந்த

இந்தி  அடிமை மோகம்........

இப்பவாவது புரிந்து கொண்டீர்களே  இவர்களை ராசா....

அப்பொழுது உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை?

அந்த 13 க்குத்தான் அந்நாளில் குழுக்களுக்குள் மோதல், அத்தனை அடிதடியும், ஆயுதப்போராட்டமும், உயிரிழப்புமா? எனக்கே விளங்கவில்லை! :o

அப்பொழுது பெரும்பான்மை மக்களின் அபிலாஷை என்னவாக இருந்தது?

மொத்தத்தில் உங்களைப் போன்றவர்களுக்கு அடுத்தவரிடம் சார்ந்து இருப்பதைத் தவிர.எப்பொழுதுமே சுயஉரிமை தேவை இருக்கப்போவதில்லை போலும். :D

நீங்கள் சொல்லுவது விளங்கவில்லை...தமிழ்நாட்டு தமிழர்கள் எமது தொப்புள் கொடி என்றால்..அவர்களுடன் சேருவது பிழையா???

தமிழ்நாட்டு தமிழர்கள் பின் எதற்கு தங்களை வருத்த வேண்டும் (முக்கியமா தீக்குளிக்க வேண்டும்?? தங்கள் அரசையே எதிர்க்க வேண்டும்??)...நாங்கள் பக்கத்து பக்கத்து நாட்டுகாரர் போல் இருக்கவேண்டும் என்றால்....

ஈழத்தை தமிழ்நாட்டோடு இணைக்க உங்களுக்கு பிடிக்கவில்லையா????

வன்னியான் அப்போ ஈழத்தமிழர்கள் என்ன செய்திருந்தால் நல்லது????

அடிமைவாழ்வை பற்றி புலிகளின் ஆதரவாளர்கள் கதைப்பது தான் விந்தை.....

  • கருத்துக்கள உறவுகள்

ஹெகலிய இதனைப் பார்க்கவில்லைப் போலும்...

1505292_693023137424302_9163041497057238

10382149_693023167424299_133957071817184

10314031_693023117424304_742985711668534

10322549_693023087424307_167301221912949

முடிஞ்சா மகிந்தவை.. இந்தளவுக்கு நெருங்கச் சொல்லட்டும்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவது விளங்கவில்லை...தமிழ்நாட்டு தமிழர்கள் எமது தொப்புள் கொடி என்றால்..அவர்களுடன் சேருவது பிழையா???

தமிழ்நாட்டு தமிழர்கள் பின் எதற்கு தங்களை வருத்த வேண்டும் (முக்கியமா தீக்குளிக்க வேண்டும்?? தங்கள் அரசையே எதிர்க்க வேண்டும்??)...நாங்கள் பக்கத்து பக்கத்து நாட்டுகாரர் போல் இருக்கவேண்டும் என்றால்....

ஈழத்தை தமிழ்நாட்டோடு இணைக்க உங்களுக்கு பிடிக்கவில்லையா????

வன்னியான் அப்போ ஈழத்தமிழர்கள் என்ன செய்திருந்தால் நல்லது????

நாந்தான்,

இங்கே யாரும் உங்களை வெறுக்கவில்லையே? எண்பதுகளிலிருந்து இன்றுவரை (இடையேயேற்பட்ட தொய்வுகள் தவிர்த்து) தமிழர்களுக்குள் வெகு சுமுகமான உறவே உள்ளது.

வரலாற்று ரீதியாகவும், கடந்து வந்த பாதைகளிலும் ஈழத்தவர்களின் விருப்பம் தங்கள் மண் யாருடைய பக்க சார்புமின்றி சுதந்திரமாக இருக்க வேண்டுமென விரும்புகையில், நீங்கள் ஒருசிலர் எங்களை போல சார்ந்து வாழ விரும்புகிறீர்கள்.. :lol:

இதை பெரும்பான்மை ஈழத்தமிழர்கள்தான் தங்கள் பாதையை, இலக்கை முடிவு செய்ய வேண்டும்...தமிழர்நாடு அதற்கு உதவ வேண்டியது வரலாற்றுக் கடமை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஹெகலிய இதனைப் பார்க்கவில்லைப் போலும்...

முடிஞ்சா மகிந்தவை.. இந்தளவுக்கு நெருங்கச் சொல்லட்டும்..! :lol::icon_idea:

நெடுக்க்ஸ், அவர்கள் குஷ்மாவை ஏற்கனவே நெருங்கிவிட்டார்கள், அவருக்கு வெளியுறவு அமைச்சு பெற்றுத்தருவதில் புதுதில்லியில் அவர்கள் லாபி செய்வதாக செய்தி! :o

பெண்ணென்றால் பேயும் இரங்கும்தானே? இந்த 'மோடி' எம்மாத்திரம்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சுஷ்மா ஏற்கெனவே.... மகிந்தவுடன் தொடர்பில் இருப்பவர் என எண்ணுகின்றேன்.

இவரால் எமக்கு, எதுவித நன்மையையும் கிடைக்கப் போவதில்லை. :o

ஈழம் தனியான ஒரு நாடாக்க இருபது தான் எங்கள் இரு தேசத்துக்கும் பாதுகாப்பு.

தமிழகத்துக்கு ஒன்றேன்றால் அதை அடித்துக்கேட்க ஒரு நாடு இருக்கவேண்டும் அதுவும் அருகாமையில். மற்றும்படி ஒன்றாக வாழ சந்தோசம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கவில்லை. சுஸ்மா மீது மோடிக்கு அவ்வளவு மரியாதை உள்ளதா என்று. அத்வானி காலில் விழுவது கூட, அவரது அதிகாரமான சிந்தனைக்கு ஆப்படிக்கவே என்று தான் நினைக்கின்றேன். இவரைப் பிரதமராக அறிவித்த நாளில் கூட, சுஸ்மாவை மோடி கண்டுகொண்டதாகத் தோன்றவில்லை. பெரிதாகச் சாட்டை செய்யாதவர் போலவே நின்றார். சுஸ்மா வாழ்த்துச் சொன்னபோதும், இவர் பெயரை அறிவித்தபோதும் இவர் தெரியாத மாதிரியே நின்றார். இவர் தன்னைப் பார்க்கின்றரா என சுஸ்மா கடைக்கண்ணால் பார்த்துக் கொள்வது அப்படியே தெரிந்தது....

எனி எத்தனை பேரின் காலை வாரவேண்டிவருமோ தெரியவில்லை.

இலங்கை அரசு மோடியைக் கண்டு பயப்படுவதாகவே நினைக்கின்றேன். அதனால் தான் அவசரப்படுகின்றார்கள். தங்களின் மீது கோபம் காட்டக் கூடாது என்பதற்காக நட்புப் பாராட்ட முயல்கின்றார்கள்.முன்பு ஒரு தடவையும் இல்லாத அவசரம் இதில் தெரிகின்றது... நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்தை எப்படிப் பாவிக்கப் போகின்றோம் என்று தான் தெரியவில்லை. பேசாமல் நான் ஆர்எஸ்எஸ்சில் இணைந்து, இந்துமத அழிப்புப் பற்றிப் பட்டியல் இட்டோ, போட்டுக் கொடுத்தால் என்ன என யோசிக்கின்றேன்....

தமிழ் உணர்வாளர்கள் பாஜகவோடு இணையத் தடுப்பதற்கு சிங்கள அரசு கட்டிய முதலாவது அணை தான் சுப்பிரமணியஞ் சுவாமியை அனுப்பியது என நினைக்கின்றேன். அதையும் மீறித் தமிழகத்தில் கூட்டணி வைத்துக் கொண்ட மதிமுக, பாமக பற்றி சிங்கள அரசு கவலை கொண்டிருந்தது போலும். அதனால் தான் வைகோ தோற்றவுடன் சந்தோசத்தை வெளிப்படுத்தியது. சுப்பிரமணியஞ்சுவாமி டெல்லியில் இருந்து எவ்வளவு தூரம் கிழிப்பார் எனத் தெரியவில்லை. ஆனால் சில சந்திப்புக்களை, சில நட்புகளைச் சிங்கள அரசோடு ஏற்படுத்திக் கொடுக்க முயலக்கூடும்.கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுக்கு தான் முக்கியஸ்தர் போலக் காட்டிக் கொள்ளக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பா ஜ கா வில் இருக்கும் குழுக்களிடையே சுஸ்மா வின் குழு மோடிக்கு எதிரானது. மோடியைப் பிரதமர் வேட்பளராக நிறுத்துவதற்கு ராஜ்நாத் சிங் அவர்களே முன்னின்றவர். சுஸ்மா அதை எதிர்த்தவர் என நினைக்கிறேன். எதிர்க்குழு என்பதால் முக்கியமான அமைச்சர் பதவியைக்  கொடுக்காமல் எதோ ஒரு பதவி அவருக்கு வழங்கப்படலாம். அத்வானி சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் சுஸ்மாவிற்கு அந்தப்பதவி கிடைக்க வாய்ப்புண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.