Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை

Featured Replies

140603134655_modi_jayalalitha_512x288_pm

நரேந்திர மோடியைச் சந்தித்தார் ஜெயலலிதா

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை,இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.

நதி நீர்ப் பிரச்சினைகள்இலங்கை பிரச்சினை குறித்து, அக்கடிதத்தில். ஜெயலலிதா, இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும், தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும், பாக் நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும், 1974, 76ஆம் வருட ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்துசெய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும், என்றெல்லாம் கோரியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் நதிநீரை 142 அடிக்கு உயர்த்துவதைக் கண்காணிக்க மத்திய நீர் ஆணையப் பிரநிதியை நியமிக்க வேண்டும், நெய்யாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் வேண்டும், தீபகற்ப நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த மனுவில் அடங்குகின்றன.

தமிழகத்தில் மீன்பிடி உரிமைகளை பல்வேறு விதங்களில் விரிவாக்க 1520 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும், மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், மின் தொடரமைப்புக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், பாசனம், பள்ளிக்கல்வி, பாலங்களை பராமரித்தல் என பல செலவினங்களுக்காக மத்திய அரசு 1576 கோடி ரூபாயை தர வேண்டியுள்ளது. அதனை விரைவில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பொதுவிநியோகத் திட்டம், உரம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவதை அவர் எதிர்த்திருக்கிறார்.

தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்த பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும், நகர்ப்புற மேம்பாடு, நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கு உதவி தேவை, கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு 50 சதவீத செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும என்றும் அவர் கோரினார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரினார்.

சென்னை பெங்களூர் இன்டஸ்ட்ரியல் காரிடார், தென்தமிழக மாவட்டங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு போன்றவை தேவை, அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப உரிமம் வழங்க வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த அனுமதி, அலுவல் மொழியாக தமிழை ஆக்க வேண்டும், பஹ்ரைனில் பணியாற்றும் 18 இந்திய மீனவர்கள் நாடு திரும்ப விரும்புகின்றனர், அவர்கள் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் உதவ வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் ஜெயலலிதா சமர்ப்பித்த 28 பக்க மனுவில் இடம்பெறுகின்றன.

http://www.bbc.co.uk/tamil/india/2014/06/140603_jayalalitha.shtml

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தாயே

கிடைத்த சில நிமிடங்களுக்குள்

தங்கள் மாநிலம் சார்ந்தும் இந்தியா சார்ந்தும்  பேச பலவிடயங்கள் இருந்தும்

எம்மையும் மறவாது மனதில் வைத்து

எமது இன்றைய அவலநிலை

ஆபத்தான காலகட்டமறிந்து

பேசியதற்கு தலை சாய்த்து நிற்கின்றோம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக சரியான திசையிலே அமைந்திருக்கின்றது.அpகப் பெரும் பலத்தை தமிழ்மக்கள் அவருக்குக் கொடுத்தது.அவரின் உறுதியான செயற்பாட்டுக்காகவே.நன்றி .கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பாரென்று நம்புகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரு வருடங்களில் சட்ட சபை தேர்தல் வருகின்றது. வீழ்ந்து போய் உள்ள திமுக, காங்கிரசை எழும்ப விடாமல் இருக்க மோடியும், ஜெயலலிதாவும் முயலுவார்கள். சென்ற சட்ட சபை தேர்தலில் ஈழ விவகாரத்தால் திமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. இம்முறையும் ஈழ பிரச்னை ஆதிக்கம் செலுத்தும், இப்பவே அது தெரிகிறது.

ஒரு முக்கிய கவனிக்க வேண்டிய விடயம், அம்மா 13+ கேட்கவில்லை, ஈழம்தான் இலங்கை தமிழருக்கு வேணும் என்கிறா. பிறிதொரு வடிவில் ஈழ போராட்டம் முன் எடுக்கப் படுகிறது, மிக்க மகிழ்ச்சி. நன்றி தமிழக முதல்வரே.

அவரு மோடி 13 ல தொங்கறாரு.......... அம்மா ஈழத்துக்கான ஓட்டொடுப்பின்னுட்டாக.   ஆக நம்ம தமிழ் தலிவருனு தனக்குதானே சொல்லீட்டு திரியும் முன்னால் முதல்வரு என்ன சொல்றாக,...........அந்த பாசகார பசபுள்ளை தமிழ்ழை பாசத்தை விட்டு பல வரிஷமாச்சய்யா தெலைவரு குடும்பத்தை கட்டிக்காக்கவே நேரமில்லிங்க :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்போராட்டங்களும், அகிம்சைப்போராட்டங்களும், அடங்கிப்போன ஒரு நிலையில் நிற்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா போன்றவர்களின் அணுகுமுறையே, எமக்கு இப்போது விடப்பட்ட வழியாகும்!

அவரது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ, இதை அவர் முன்னெடுக்கிறாரா, என்று ஆராய்வதில் நேரத்தை வீணாக்காமல், எமக்கான தார்மீக ஆதரவை முதல்வருக்கு வழங்குவதே உசிதமானதாகும் எனக் கருதுகின்றேன்!

தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தமிழர்களின் அரசியல் விருப்புக்கு எதிராக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு?????கேட்கிறார்.ஆனால் ஜெயலலிதா தமீழீழத்துக்கு அடி ஆதாரமான சர்வசன வாக்கெடுப்பைக் கோருகிறார் .தமிழர்களின் தலைவராக இருக்க சம்பந்தருக்கு தகுதியில்லை.வயதுக்கு மதிப்புக் கொடுத்து கூட்டமைப்புக்கு தலைவராக்கியது தேசியத் தலைவர் செய்த மிகப்பெரும் அரசியல் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தருக்கு யதாத்தம் புரிந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நட்டாற்றில் கரை தெரியாமல் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஜெயா அம்மையாரின் கோரிக்கை ஒரு சிறு குச்சியாக இருந்தாலும் கரைசேரும் வழியைக் காட்டி நிற்கின்றது.நன்றிகள் தமிழக முதவருக்கு.

உண்மையிலேயே ஈழத்தமிழரில் விருப்பம் கொண்டவராக இருந்தால் விடுதலைப் புலிகள் போராடிய காலத்தில் அவர்களுக்கு உதவியாக நின்றிருக்க வேண்டும் ,இந்தியாவோ ,உலகத்தில் எந்த நாடும் தமிழ் ஈழத்தை இன்றைய சூழலில் ஆதரிக்கப் போவதில்லை .புலம்பெயர் தமிழர் உணர்ச்சி கருத்துக்களை முன்வைக்கின்றனர்.யதார்த்த பூர்வமாக சிந்தித்து செயற்பட தயாரில்லை .

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

தொடர்ந்து தமிழர் லொபி பண்ணவேண்டும்.

தமிழீழம் கிடைக்காது என்று நினைத்தால் முன்னேறும் மற்றோரை குழப்பாமல் தள்ளி இருக்கவேண்டும்.

சம்பந்தர் தமிழர்களின் அரசியல் விருப்புக்கு எதிராக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு?????கேட்கிறார்.ஆனால் ஜெயலலிதா தமீழீழத்துக்கு அடி ஆதாரமான சர்வசன வாக்கெடுப்பைக் கோருகிறார் .தமிழர்களின் தலைவராக இருக்க சம்பந்தருக்கு தகுதியில்லை.வயதுக்கு மதிப்புக் கொடுத்து கூட்டமைப்புக்கு தலைவராக்கியது தேசியத் தலைவர் செய்த மிகப்பெரும் அரசியல் தவறு.

ஐயா புலவரே வெளி நாடொன்றில அசைலம் அடிச்சிட்டு விசை பலகையில தட்ட சுதியாத்தான் இருக்கும். ஆனால் கொழும்பில போய் சிங்களவனுக்கு மத்தியில் இருந்து கொண்டு அரசியல் செய்தால்தான் சம்பந்தன் ஐயாவின் நிலைமை புரியும். சம்பந்தன் இருக்கிற நிலைமை வேறு அம்மா இருக்கிற நிலைமை வேறு. தேசிய தலைவர் அரசியல் தவறு செய்தாரா இல்லையா என்பதற்கு  காலம் தான் பதில் சொல்லும். தேசிய தலைவரின் அரசியல் முடிவுகளை விமர்சிக்கும் அருகதை தங்களுக்கு இருக்கிறதா?  :D  :D  :D  :icon_idea: 

சம்பந்தர் தமிழர்களின் அரசியல் விருப்புக்கு எதிராக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு?????கேட்கிறார்.ஆனால் ஜெயலலிதா தமீழீழத்துக்கு அடி ஆதாரமான சர்வசன வாக்கெடுப்பைக் கோருகிறார் .தமிழர்களின் தலைவராக இருக்க சம்பந்தருக்கு தகுதியில்லை.வயதுக்கு மதிப்புக் கொடுத்து கூட்டமைப்புக்கு தலைவராக்கியது தேசியத் தலைவர் செய்த மிகப்பெரும் அரசியல் தவறு.

தலைவர் செய்த மிகப் பெரிய தவறு அரசியல் தெரியாத குதிரைகளை (கஜேந்திரன் ,கஜேந்தரகுமார் ,கிரிஸ் )களமிறக்கியது

சம்பந்தருக்கு தகுதியில்லை என்று சொல்லபுலம்பெயர் எவருக்கும் அருகதையில்லை ,அவரை தெரிவுசெய்த திருகோணமலை மக்கள் தீர்மானிக்கட்டும் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=140967&hl=

Edited by Gari

எல்லோர் பின்னூட்டமும் நாட்டாமை கணக்கு தான் இருக்கு ?

பிடிக்காட்டி விட்டுவிட்டு  ------ ,அவரின் அரசியலை ஆராயாமல் ஆதரவை கொடுங்கோ ? 

ஏன் இன்னமும் ஈழ தமிழன் நடுவீதியில் நிற்கின்றான் என்பதற்கு இவைகள் தான் காரணம் .

ஒருவரையோ ஒரு விடயத்திற்கோ கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு அல்லது எதிர்ப்பு .இது எல்லாம் வேலைக்கு ஆகாது

.நாளைக்கு ஜெயலலிதா தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டால் என்ன செய்யபோகின்றீர்கள்.வழக்கம் போல திட்டி தீர்ப்புத்தான் .தனக்கு ஒரு இலாபமும் இல்லாமல் எவரும் எதுவும் செய்ய இங்கு தயாரில்லை அதுவும் குறிப்பாக அரசியல்வாதிகள் .அதற்கு நாங்கள் பலியாடுகள் ஆக முடியாது .

ஜெயலலிதாவை இந்த செயற்பாடுகளை நாங்கள் ஆதரிக்கவேண்டும் ஆனால் எமது அரசியல் எமது நாட்டிலும் எமது தலைவர்கள் கையிலும் தான் இருக்கு .

ஜெயலலிதாவின் இந்த தேர்தல் வெற்றியும் எதிர்கட்சிகளின் பெரிய தோல்வியும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு அவருக்கு பல விடயங்களை விட்டு சென்றுள்ளது .

தமிழ் நாட்டில் தி.முக வின் பெரிய தோல்வி ,வைகோ,விஜயகாந்த்  தோல்வி ,இந்தியாவில் பா ஜா கா பெரிய வெற்றி ,அடுத்த தேர்தலில் சீமான் வேறு களம்  இறங்க போகின்றார் .இவையெல்லாம் அடுத்த  தேர்தலுக்கு வியூகம் வகுக்க முக்கிய விடயங்கள்

ஜெயலிதாவின் நேற்றைய வேண்டுகோள் மோடிக்கும் பா க ஜா விற்கும் வைத்த ஒரு பொறிதான் .மோடி ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும்  இரண்டும் ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆதாயம் தான் . .

Edited by நிழலி
அநாகரீக / ஒருமை சொற்கள் நீக்கப்பட்டன. நாகரீகமாக உரையாடவும்

ஜே தனது அரசியல் லாபத்திற்குச் செய்யும் சில வேலைகள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானதாக இருந்தால் அவரது வேலைத் திட்டத்தை ஆதரிப்பது தானே நாங்கள் செய்யக் கூடியது.

இந்தியாவின் துணை இல்லாமல் ஈழத் தமிழருக்கு ஏதும் இல்லை என்ற நிலைப்பாட்டில் அதுவும் தமிழ் நாட்டின் நிலைப்பாட்டில் தானே எல்லாம் தங்கியுள்ளது. இந்தியா செய்ய்வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தரும் ஆனந்த சங்கரியின் நிலைக்குத் தான் தள்ளப்படுவார்.

ஈழத் தமிழரின் பிரச்சனைகள் இப்போது தமிழ் நாடு இந்தியா மேற்குலகு என வந்து விட்டது. ஈழத்தில் இருந்து அரசியல்வாதிகளால் உணரும் செய்ய இயலாது என்பது குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும். வாக்கெடுப்பு எனும் ஜே வைத்த கோரிக்கை அமுலாக்கப்பட்டால் மட்டுமே அங்கிருப்பவர்களின் நிலைப்பாடு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் பின்னூட்டமும் நாட்டாமை கணக்கு தான் இருக்கு ?

பிடிக்காட்டி விட்டுவிட்டு  -------,அவரின் அரசியலை ஆராயாமல் ஆதரவை கொடுங்கோ ? 

ஏன் இன்னமும் ஈழ தமிழன் நடுவீதியில் நிற்கின்றான் என்பதற்கு இவைகள் தான் காரணம் .

ஒருவரையோ ஒரு விடயத்திற்கோ கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு அல்லது எதிர்ப்பு .இது எல்லாம் வேலைக்கு ஆகாது

.நாளைக்கு ஜெயலலிதா தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டால் என்ன செய்யபோகின்றீர்கள்.வழக்கம் போல திட்டி தீர்ப்புத்தான் .தனக்கு ஒரு இலாபமும் இல்லாமல் எவரும் எதுவும் செய்ய இங்கு தயாரில்லை அதுவும் குறிப்பாக அரசியல்வாதிகள் .அதற்கு நாங்கள் பலியாடுகள் ஆக முடியாது .

ஜெயலலிதாவை இந்த செயற்பாடுகளை நாங்கள் ஆதரிக்கவேண்டும் ஆனால் எமது அரசியல் எமது நாட்டிலும் எமது தலைவர்கள் கையிலும் தான் இருக்கு .

ஜெயலலிதாவின் இந்த தேர்தல் வெற்றியும் எதிர்கட்சிகளின் பெரிய தோல்வியும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு அவருக்கு பல விடயங்களை விட்டு சென்றுள்ளது .

தமிழ் நாட்டில் தி.முக வின் பெரிய தோல்வி ,வைகோ,விஜயகாந்த்  தோல்வி ,இந்தியாவில் பா ஜா கா பெரிய வெற்றி ,அடுத்த தேர்தலில் சீமான் வேறு களம்  இறங்க போகின்றார் .இவையெல்லாம் அடுத்த  தேர்தலுக்கு வியூகம் வகுக்க முக்கிய விடயங்கள்

ஜெயலிதாவின் நேற்றைய வேண்டுகோள் மோடிக்கும் பா க ஜா விற்கும் வைத்த ஒரு பொறிதான் .மோடி ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும்  இரண்டும் ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆதாயம் தான் . .

எமக்காக  பேசியதற்காக  நன்றி  சொல்கின்றோம்

அதற்கு உங்களுக்கேன் இந்தளவு கடுப்பு............???

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் பின்னூட்டமும் நாட்டாமை கணக்கு தான் இருக்கு ?

பிடிக்காட்டி விட்டுவிட்டு  ----- ,அவரின் அரசியலை ஆராயாமல் ஆதரவை கொடுங்கோ ? 

ஏன் இன்னமும் ஈழ தமிழன் நடுவீதியில் நிற்கின்றான் என்பதற்கு இவைகள் தான் காரணம் .

ஒருவரையோ ஒரு விடயத்திற்கோ கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு அல்லது எதிர்ப்பு .இது எல்லாம் வேலைக்கு ஆகாது

.நாளைக்கு ஜெயலலிதா தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டால் என்ன செய்யபோகின்றீர்கள்.வழக்கம் போல திட்டி தீர்ப்புத்தான் .தனக்கு ஒரு இலாபமும் இல்லாமல் எவரும் எதுவும் செய்ய இங்கு தயாரில்லை அதுவும் குறிப்பாக அரசியல்வாதிகள் .அதற்கு நாங்கள் பலியாடுகள் ஆக முடியாது .

ஜெயலலிதாவை இந்த செயற்பாடுகளை நாங்கள் ஆதரிக்கவேண்டும் ஆனால் எமது அரசியல் எமது நாட்டிலும் எமது தலைவர்கள் கையிலும் தான் இருக்கு .

ஜெயலலிதாவின் இந்த தேர்தல் வெற்றியும் எதிர்கட்சிகளின் பெரிய தோல்வியும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு அவருக்கு பல விடயங்களை விட்டு சென்றுள்ளது .

தமிழ் நாட்டில் தி.முக வின் பெரிய தோல்வி ,வைகோ,விஜயகாந்த்  தோல்வி ,இந்தியாவில் பா ஜா கா பெரிய வெற்றி ,அடுத்த தேர்தலில் சீமான் வேறு களம்  இறங்க போகின்றார் .இவையெல்லாம் அடுத்த  தேர்தலுக்கு வியூகம் வகுக்க முக்கிய விடயங்கள்

ஜெயலிதாவின் நேற்றைய வேண்டுகோள் மோடிக்கும் பா க ஜா விற்கும் வைத்த ஒரு பொறிதான் .மோடி ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும்  இரண்டும் ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆதாயம் தான் . .

எல்லா ----  கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை.
ஏதாவது ஒரு முட்டையை என்றாலும் உடைத்து பொரித்து தின்றுவிட வேண்டும். அல்லது கொஞ்சம் தள்ளி படுக்கலாம் என்றுதான் சொல்கிறார்கள்.
 
ஆடுற மாட்டில் ஆடி ஆடி கறந்துவிட வேண்டும். பின்பு அதே மாடு ஆடுவதை நிறுத்தி விட்டு பட தொடங்கலாம் ................. அப்போது நாமும் பாட தொடங்க வேண்டும்.
 
யார் என்ன செய்தாலும் முடிவு சிங்களவன் கையில்தான். 
சிங்களவன் எதையும் தரபோவதில்லை என்று தாங்களே இங்கு ஒரு நூறு தடவை எழுதி இருக்கிறீரக்ள். அது நேற்றைய முட்டை உங்களை பொருத்தவரை. இப்போ புது திரிகளில் மயி புடுங்க உங்களுக்கு வேறு முட்டைகள் கிடைத்திருக்கும்.
சம்பந்தர் அல்லது தற்போது இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் ஒரே வழி.
ஐயா  தாங்கையா என்று பிச்சை கேட்பதுதான்.
அதை அவர்கள் விட்டால் அது அவர்கள் உயிருக்கே உலை வைக்கும்.
 
சர்வதேச விசாரணை 
அமெரிக்க அழுத்தம் போன்றவை. சிங்களவனுக்கு ஒரு முட்டுக்கட்டையாகும் வேளைகளில்  இவர்களை  அழைத்து  ஒரே மேடையில் அமர வைத்து பாசாங்கு செய்ய இவர்கள் சிங்கலவனுக்குதான் பெரிதாக உதவ கூடியவர்கள். தமிழர்களுக்கு அவர்கள் முழு மனதாக எண்ணினாலும் எதையும் செய்ய முடியாது என்பது கல்லில் எழுதிய உண்மை.
அதற்காக அவர்களை வெறுக்க தேவை இல்லை ..........
சர்வதேசமோ அமெரிக்காவோ  சிங்களவனுக்கு ஆப்பு இறுக்க வேண்டிய ஒரு தெற்காசிய அரசியல் சூழ்நிலை  தோன்றினால். அந்த நாடகத்திற்கு மேடை ஏற்றக்கூடிய  பொம்மைகளும் இவர்கள்தான் .
(நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது கொஞ்சம் புரிந்திருக்கும். அந்த சொல்லை அதுதான் பாவித்தேன். நிர்வாகத்தின்  கண்ணுக்கு தெரியாமலும் கருத்து எழுத வேண்டிய ஒரு நிலைமை எனக்கு) 
 
தேர்தல் பிரச்சாரத்தின் போது கிளறி கிளிண்டன் பேசினார் ..... எல்லோரும் தீவிரவாதிகள் இல்லை. புலிகள் போல்  போராளிகளும் இருக்கிறார்கள் என்று. அந்த ஒரு பேச்சு 2009 இல் நடந்த பல ஊர்வலங்கள் விழிப்புணர்வு  போராட்டங்களுக்கு  அனுமதி பெற மிகவும் இலகுவாக இருந்த்தது. கிளிண்டன் என்ன தமிழர்களின் அரசியலா  இப்போது செய்கிறார்?
எங்களுக்கு பிரியோசனமானதை நாம்தான் எடுத்து கொள்ளவேண்டும்.
 
சீமான் மேல் வெறும் காழ்புணர்வை கொட்டி என்ன பயன்? (புலிக்கொடிக்கு அலர்ச்சி உடையவர்கள் தள்ளி நிற்க. அலர்ச்சி இல்லாதவர்களை வைத்து அரசியல் செய் வேண்டும்) ஒரு பத்து வருடம் கழித்து சீமான் தடம் மாறி போகலாம். தடம்மாறும் போது முந்தைநாள் விடயங்களை வெளிக்கொண்டு வந்து தடம் புரட்ட வேண்டும்.
 
முட்டைகள் கிடைத்தால் பொரித்தோ அவித்தோ உண்பது  பற்றி சிந்தியுங்கள். இப்படியே ---- --- கொண்டு இருந்தால். பசியால் இருப்பவர்களுக்கு என்ன பயன் ?? 

Edited by நிழலி
அநாகரீக / ஒருமை சொற்கள் நீக்கப்பட்டன. நாகரீகமாக உரையாடவும்

  • கருத்துக்கள உறவுகள்

எழுதும் போதே இந்த வாக்கியத்துக்காக பலர் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள் என்று தெரந்து கொண்டும் எழுதினேன்.தும்பை விட்டு வாலைப்பிடித்துக் கொண்டிருபவர்களைப் பற்றிக் கவலையில்லை.விடயத்துக்கு வருவோம்.அனந்தியும்,சிவாஜிலிங்கமும்,சிறதரனும் பாதுகாப்புப் படைகளின் மத்தியில் இருந்து கொண்டுதான் அரசியல் செய்கிறார்கள்.அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு விசைப்பலகையில் அரசியல் செய்யவல்லை.கூட்டமைப்பின் தலைவருக்கு அவர்களை விட பாதுகாப்பும் வெளிநாட்டு அரசியல் கரிசனையும் அதிகம்.அப்படி இருந்தும் யாருக்கு பயந்து கொண்டு சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடிக்கிறார்??????

அம்மாவின் இந்த செயல் நன்றாக இருக்கிறது...இது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து எப்போதுமே நித்தியகண்டம் பூரண ஆய்சு என்னும் நிலையிலேயே வைத்திருக்கும்.....கொஞ்சம் கொஞ்சமாக தமிழரும் இந்தியா தான் தங்களின் பாதுகாவலன் என்னும் நிலைக்கு கொண்டுவந்தால் இந்தியா எப்பவும் இலங்கையை கட்டுப்படுத்தலாம்....1987க்கு முற்பட்ட காலம் போல்....

ஆனால் அம்மா MGR செய்தது போல் ஈழத்தை  கொண்டு நடத்தினால்....சீமான் போன்றோர்களின் எதிர்காலம்? 2016இல் எதை வைத்து வாக்கு கேட்கலாம்? MGR எப்படி RAWன் அறிவுரைக்கு ஏற்ப நடந்தாரோ...அம்மாவும் நடக்கலாம்...யார் கண்டார்...

அகஸ்தியன் சொன்ன மாதிரி அம்மாவின் குறிக்கோள் திமுக வை மேலெழும்ப விடாமல் செய்வதே ஆகவே பிஜேபி யோடு அம்மா கூட்டு சேருவது நல்லது..அடுத்த இரண்டு வருடத்துக்கு மத்தியஅரசில் பிஜேபி நன்றாக ஆட்சி புரிந்தால் இந்த கூட்டணி வெல்லுவதர்க்கும் நல்ல வாய்ப்பு....அடுத்த தேர்தலும் நல்ல கிளுகிளுப்பாக இருக்கும்..

Edited by naanthaan

அனந்தி ,சிவாஜிலிங்கம் ,ஸ்ரீதரன் போன்றோர் பொறுப்பற்று நடப்பது போல் சம்பந்தன் ஐயா செயற்படமுடியாது .சிவாஜிலிங்கம் தன்னுடைய சொந்த ஊரின் நகரசபையை இயங்க விடாத குழப்பவாதி ,அனந்தி தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு பின்தான் மக்களைப்பற்றி சிந்தித்தவ 2009இக்கு முன்பு எத்தனையோ ஆயிரம் பேர் காணாமல் போனார்கள் அந்தநேரம் எங்கை போயிருந்தவ ?ஸ்ரீதரன் வந்த ஆரம்பத்தில் துள்ளினார் இப்ப எப்படி அடங்கி இருக்கின்றார் .

குழப்பவாதிகளுக்கு எப்பவும் குலப்பவாதிகளைதான் உதாரணம் காட்டத்தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி சம்பந்தரும் ,சுமந்திரனும் செய்யாத தியாகங்களா அனந்தி செய்துவிட்டார்.

அது சரி சம்பந்தரும் ,சுமந்திரனும் செய்யாத தியாகங்களா அனந்தி செய்துவிட்டார்.

நாங்கள் கனடாவில் இருந்து மைக் பிடித்து பெரிய்ய்ய தியாகங்கள் செய்ததால்/செய்வதால் அனந்தி அக்காவை எலி என்று அழைத்து குழப்பம் ஏற்படுத்த மாட்டோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இந்த செயல் நன்றாக இருக்கிறது...இது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து எப்போதுமே நித்தியகண்டம் பூரண ஆய்சு என்னும் நிலையிலேயே வைத்திருக்கும்.....கொஞ்சம் கொஞ்சமாக தமிழரும் இந்தியா தான் தங்களின் பாதுகாவலன் என்னும் நிலைக்கு கொண்டுவந்தால் இந்தியா எப்பவும் இலங்கையை கட்டுப்படுத்தலாம்....1987க்கு முற்பட்ட காலம் போல்....

ஆனால் அம்மா MGR செய்தது போல் ஈழத்தை  கொண்டு நடத்தினால்....சீமான் போன்றோர்களின் எதிர்காலம்? 2016இல் எதை வைத்து வாக்கு கேட்கலாம்? MGR எப்படி RAWன் அறிவுரைக்கு ஏற்ப நடந்தாரோ...அம்மாவும் நடக்கலாம்...யார் கண்டார்...

அகஸ்தியன் சொன்ன மாதிரி அம்மாவின் குறிக்கோள் திமுக வை மேலெழும்ப விடாமல் செய்வதே ஆகவே பிஜேபி யோடு அம்மா கூட்டு சேருவது நல்லது..அடுத்த இரண்டு வருடத்துக்கு மத்தியஅரசில் பிஜேபி நன்றாக ஆட்சி புரிந்தால் இந்த கூட்டணி வெல்லுவதர்க்கும் நல்ல வாய்ப்பு....அடுத்த தேர்தலும் நல்ல கிளுகிளுப்பாக இருக்கும்..

ஜெயலலிதாவிற்கும் அமெரிக்க க ஐ எ இற்கும் நெருங்கிய தொடர்பு எப்போதிருந்தே இருக்கிறது. ஜெயலிதா அடங்காமல் ஆடியதட்கும் அது ஒரு காரணம். அனைத்து வழிமுறைகள் திட்டங்கள் எல்லாம் பெரிய இடங்களில் இருந்து எடுக்க பட்டிருக்கிறது.
 
ஜெயலிதாவின் ஈழ ஆதரவு அரசியல் சீமானை பின் தள்ளும் என்பது மிகவும் சரியானது. 
தி மு க உடையும்போது . ஜெயலலிதா பெரும் விருட்சமாக உருவெடுக்க போகிறார்.  தெற்காசிய அரசியலில் அமெரிக்கா எதை விரும்புகிறது அமெரிக்காவிற்கு எது லாபமாக இருக்கிறதோ?. அதை வைத்தே அவருடைய ஈழ அதரவு எதிர்ப்பு எல்லாம் 2016 பின் இருக்கும்.
 
சீன இலங்கை உறவு தான் அதை நிர்ணயிக்க கூடியது. 
சீனாவின் ராஜதந்திரம் மிகவும் கூர்மையானது. இலங்கை அமெரிக்காவோடு முரண்படுவதை சீனாவே விரும்பாது. சீனாவின்  முழு குறிகோளும் முதன்மையான பொருளாதாரம்தான். தனது முதலீடுகளை பக்குவமாக கரை சேர்ப்பதில் சீன மிகவும் புத்திசாலி தனமாக இருக்கிறது.
 
2016 பின் ஜெயலிதாவின் வயது உடல்நிலை கேள்விகுறியாகும்போது. ஒரு மூன்றாம் தரப்பு கட்சி தமிழகத்தில்  முதன்மை பெற அதிய சாத்தியம் இருக்கிறது. 
பொறுமை ............. நெடுங்கால வியுகம் ............. அமைத்து யார் செயட்படுகிறார்களோ தெரியவில்லை.

america's CIA 

நாங்கள் கனடாவில் இருந்து மைக் பிடித்து பெரிய்ய்ய தியாகங்கள் செய்ததால்/செய்வதால் அனந்தி அக்காவை எலி என்று அழைத்து குழப்பம் ஏற்படுத்த மாட்டோம். :)

ஆனந்தி அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வதை எவரும் தடுக்கவில்லை .ஆனந்தி தன்னுடைய பலம்,பலவீனங்களை அறிந்து மற்றவர்களை வீமர்சிக்க வேண்டும் .

ஜெனிவா கூட்டத் தொடரின் போது அமெரிக்கா ஒழுங்கு செய்த இராஜதந்திரிகளின் கூட்டத்தில் சுமந்திரந்தான் ஆனந்தியை முக்கிய சாட்சியாக வரவழைத்தவர் ,ஆனந்தி சொன்னவைகளை சுமந்திரந்தான் மொழிபெயர்த்தவர் .சுமந்திரன் தன்னை பேசவிடாது தடுத்ததாக உடனே சொல்லாமல் ஏன் பலநாட்கள் கழித்து குற்றம் சுமத்தினவர் ,இதன் பின்னணியில் சில புலம்பெயந்த அமைப்புகளில் உள்ளவர்கள் செயற்பட்டனர் .ஆனந்தி தன்னுடைய செயல் மூலம் பரிசோதனைக்குரிய எலி என்பதை நிருபிக்கின்றார் .

பிரிவினைகெதிராக சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டு மக்கள் அவை ஜெனிவாவில் ஒழுங்கு செய்த கூட்டத்தில் கலந்து கொள்ளவதால் கட்சிக்கு பிரச்சனை ஏற்படும்

சரி 87,870 விருப்பு

வாக்குகளால் வெற்றிபெற்ற அனந்தி கடந்த மே 18 அன்று அநாதை போல் வீதியில்

தன்னந்தனியாக குந்தி இருந்தாரே? அந்த 87,870 பேர் எங்கே போனார்கள்?

இப்படித்தான் செல்வராசா கஜேந்திரனுக்கு வேட்புமனு மறுக்கப்பட்ட போது 112,000

விருப்பு வாக்குகள் பெற்ற ஒருவருக்கு ஏன் வேட்புமனு மறுக்கப்பட்டது ஏன் எனக்

காட்டமாகக் கேட்கப்பட்டது. அதற்குரிய பதிலை மக்கள் தேர்தலில் வழங்கினார்கள்.

செல்வராசா கஜேந்திரனால் கட்டுக்காசைக் கூடக் காப்பாற்ற முடியவில்லை.

Press Conference at the Geneva Press Club

Friday 21 March

Is the Sri Lanka resolution at the UNHCR part of the problem or part of the solution? Representatives of the Eelam Tamils and their supporters speak out:

Gajendrakumar Ponnampalam (Tamil National People’s Front);

Ananthy Sasitharan (NPC, Tamil National Alliance);

Kumaravadivel Guruparan (Tamil Civil Society);

Dr. Sri Ranjan (International Council of Eelam Tamils)

Krisna Saravanamuttu (International Council of Eelam Tamils)

Dr. Jude Lal Fernando (Irish Forum for peace in Sri Lanka);

Dr. Andrew Higginbottom (Prosecutor at the ‘People’s Tribunal on Sri Lanka)

கடந்த காலங்களில் சிலரது நடவடிக்கைகளுக்கு காலமும் ,மக்களும் பதில் சொல்லியுள்ளார்கள் .பொறுத்திருப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனியாக போட்டியிட்டால் வென்றுவிடுவார்களா?  (ஏற்கனவே போட்டியிட்டவரல்ல).

இல்லை என்றே நினைக்கிறேன். காரணம், மக்கள் கூட்டமைப்புக்குத்தான் வாக்குப் போடுகிறார்களே தவிர அதில் உள்ள முகங்களுக்கு அல்ல. ஆனால், சம்பந்தன் அவர்கள் தனியாக நின்றாலும் வெல்லக்கூடியவர் என நினைக்கிறேன்.

நாளையே, கஜேந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் த.தே.கூ சார்பாகப் போட்டியிட்டால் அமோக வெற்றி பெறுவார்கள் என்பது என் எண்ணம். ஆகவே, கட்சியை விட்டு விலத்தி வைத்துவிட்டு பிற்பாடு அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று வாதாடுவது சரியல்ல என்றே நினைக்கிறேன். இது Gari அவர்களுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.