Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பத்தாயிரம் ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டேன்' : விபசாரத்திலிருந்து விலகிய அவுஸ்திரேலிய பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறும் பெண்ணொருவர் பின்னர் விபசாரத் தொழிலிலிருந்து விலகிய நிலையில் தனது வாழ்க்கை குறித்து நூலொன்றை வெளியிட்டுள்ளார்.

 

60012.jpg

கிவினெத் மொன்டென்க்ரோ எனும் இப்பெண் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். தான் சமயப்பற்றுள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்தவள் எனவும் இளமைக்காலத்தில் தான் மிகுந்த வெட்க சுபாவத்துடன் இருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பின்னர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் தனது வாழ்க்கைப் பாதை திசை மாறியதாக கிவினெத் தெரிவித்துள்ளார். 

'பாடசாலை பருவத்தில்  மிக வெட்க சுபாவத்துடன் இருந்தேன். அக்காலத்தில் மற்றவர்களால் அச்சுறுத்தப்பட்டேன். பலராலும் இலக்கு வைக்கப்படும் சிறுமியாக நான் இருந்தேன். அதனால் எனது தன்னம்பிக்கை மிகவும் குறைந்திருந்தது. 

நான் ஒரு சாதாரண சிறுமியாகவே இருந்தேன். நான் விபசாரியாகுவேன் என எனது இளமைக்காலத்தில் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. ஆனால், 18 வயதில் பலரால் கூட்டாக வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபின் எனது வாழ்க்கை மாறியது' என்கிறார் கிவினெத்.

 

60011.jpg

அதன்பின் பாலியல் தொழிற்துறைக்குள் அவர் நுழைந்தார். களியாட்ட விடுதிகளில் மேசை மீது ஆடும் பெண்ணாக 3 வருடங்கள் பணியாற்றிய கிவினெத், 21 வயதில் பாலியல் தொழிலாளியாக மாறினார்;.

அதன்பின் தனது 33 ஆவது வயதுவரை பல வருடங்கள் அவுஸ்திரேலியாவில் மிக அதிகம் சம்பாதிக்கும் பாலியல் தொழிலாளியாக அவர் காணப்பட்டார். 

மெல்பேர்ன் நகரில் அதிகம் பணியாற்றினாலும் அவுஸ்திரேலியாவில் பல்வேறு பிராந்தியங்களிலும் அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டார். வெளிநாடுகளுக்கும் அவர் பறந்தார்.

தான் உறவு கொண்ட நபர்களின் எண்ணிக்கையை கிவினெத் பட்டியல் படுத்திவந்ததாராம். அப்பட்டியலின்படி, தனது வாழ்க்கையில் 10091 பேருடன் தான் பாலியல் உறவு கொண்டதாக கிவினத் தெரிவித்துள்ளார். இவர்களில் 90 சதவீதமானோர் திருமணமான ஆண்கள் எனவும் அவர் கூறுகிறார். 

அத்தொழிலிருந்து விடுபடுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாக வெற்றியளிக்கவில்லை. 

 

60013.jpg

விமானம் செலுத்துவதற்கு கற்றுக்கொண்ட கிவினெத், 29 வயதில் முழுநேர வர்த்தக விமானியாக பணியாற்றுவதற்காக அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுக்கொண்டாhர். ஆனால் துரதிருஷ்டவசமாக  சிறுநீரக கோளாறு காரணமாக அவரின் விமானி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க முடியவில்லை. அதனால் தொடர்ந்தும் அவர் பாலியல் தொழிலில் ஈடுபபட்டார். 

பின்னர் 33 வயதில் அத்துறையிலிருந்து விடுபட்டதாக தற்போது 36 வயதான கிவினெத் கூறுகிறார். 

பாலியல் தொழிலில் அதிக பணம் சம்பாதித்தபோதிலும் இனிமேல் தான் ஒருபோதும் தனது பழைய தொழிலுக்கு திரும்பப்போவதில்லை என கிவினெத் கூறுகிறார்.

'பாலியல் தொழிற்துறையில் உள்ளவர்கள் பற்றிய மக்களின் எண்ணங்கள் பல்வேறு விதமானவையாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்காக நான் குரல் கொடுக்கவிரும்புகிறேன். பாலியல் தொழிற்துறையில் நுழைய விரும்பும் எவருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் அது குறித்து  தீவிரமாக மீளாய்வு செய்யுங்கள். ஏனெனில் ஒரு தடவை நீங்கள் அத்துறையில் நுழைந்துவிட்டால் அது உங்கள் வாழ்க்கையுடன் ஒட்டிக்கொள்ளும். 

இப்போது அந்த துறைக்குள் நுழையும் தீர்மானத்திலிருந்து ஒரு நபரையாவது மாற்ற  என்னால் முடிந்தால் நான் நல்லதொரு விடயத்தை செய்ததாக கருதுவேன். நான் அத்துறைக்குள் நுழைந்து எனது வாழ்க்கை கட்டுப்பாடின்றி நகர்ந்த போது என்னை அத்துறையிலிருந்து வெளியே எடுப்பதற்கு உதவ எவரும் இருக்கவில்லை' என கிவினெத் மொன்டனெக்ரோ தெரிவித்துள்ளார்.

யாரேனும் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகும் எண்ணம் உள்ளதா என்று கேட்டால், 'சிலவேளை 40 வயதானபின் ஒருவரை நான் தேடக்கூடும். இப்போது நான் அவசரப்படவில்லை' என்கிறார் கிவினெத். 

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=6001#sthash.p6HmhDat.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

ச...?

40 க்கு பிறகு கலியாணத்துகு ஒகே வாம். என்ன ஒரு கரை கண்ட அனுபவம். விட்டால் பிறகு தேடினாலும் கிடையாது.

சாதக குறிப்பை எங்க எடுக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

10,000 - 400 = 25

 

கிட்டத்தட்ட 25 வருடங்கள் தினமும் குறைஞ்சது ஒரு ஆணுடன் இவா தொடர்பில் இருந்திருக்கனும்.

 

ஆனால்.. வாழ்க்கை வரலாறு அப்படி இல்லையே. எங்கையோ கணக்கு இடிக்குதே..??????????!

 

நூல் விற்பனைக்காக நல்லா கதை விடுறா போல..!

 

அதுபோக..ல நாதமுனியார்.. பாழாங்கிணற்றுக்கு கேள்விப்பத்திரம் வேற சமர்ப்பிக்கிறார்..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்க்கு அனுபவம் பத்தாது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்க்கு அனுபவம் பத்தாது.. :D

 

உண்மை தான் இசை. :lol:

 

அவாவே ஒப்புதல் வாக்குமூலம் அளிச்சிருக்கிறா.

 

10091 பேரில்..... :D

இவர்களில் 90 சதவீதமானோர் திருமணமான ஆண்கள் எனவும் அவர் கூறுகிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்க்கு அனுபவம் பத்தாது.. :D

நெடுக்கருக்கு தான் குறிப்பை கேட்டனான் எண்டு, என்னெண்டு பிடிச்சியள் இசையர்?

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும் தானே!

ஹி, ஹீ!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு தான் குறிப்பை கேட்டனான் எண்டு, என்னெண்டு பிடிச்சியள் இசையர்?

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும் தானே!

ஹி, ஹீ!

 

முனி.. ஆத்துக்காரிக்கு.. இவ்வளவு பயமா.

 

எதுக்கு நெடுக்ஸை சாட்டி..! பிரியப்பட்டுட்டீங்க.. ஆத்துக்காரியாவது.. ஆட்டுக்கறியாவது. குறிப்பை வாங்கி அவுஸில ஒன்று.. ஐரோப்பாவில ஒன்று என்று ஜமாய்ங்க. :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1009 1...,   எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ,  அந்த  "ஒண்டு"  யாராயிருக்கும்...! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

1009 1...,   எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ,  அந்த  "ஒண்டு"  யாராயிருக்கும்...! :lol::)

 

ம்.. ம்ம்ம் ...

 

10.092 ...க்கு கேள்விப்பத்திரம்  போட்டுது! :wub:  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

1009 1..., எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் , அந்த "ஒண்டு" யாராயிருக்கும்...! :lol::)

கச்சான் கடல விக்கிற ஆளாயிருக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சான் கடல விக்கிற ஆளாயிருக்கும்

 

கச்சான், கடலை வித்து, காசு கட்டுவதென்றால். காசு சேர்க்க 60, 70 வருஷம் ஆகி இருக்கும்.
 
உடனேயே பொசுக்கெண்டு போயிருக்கும் கிழம்...  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம் ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டேன்' : 

 

கிளிஞ்சுது போ......... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
கன்னித்தன்மையை விக்கப் போறன் எண்டு வந்தாலும் நியூஸ். இப்படி 10,091 எண்டு வந்தாலும் நியூஸ்.
 
இந்த ஆம்பிளையள் சந்தியில தண்ணிய போட்டுட்டு நிண்டு உண்மையை உரத்து சொன்னாலும் கேட்டு நியூஸ் போட ஒரு நாதி இல்லை.
 
என்ன உலகமப்பா இது.  <_<  :o
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிம்பிள் விசயத்துக்கு இஞ்சை கொஞ்சப்பேர் காட்டுக்கத்து கத்திக்கொண்டிருக்கினம்.....நெடுக்குசாமிக்குத்தான் அனுபவம்  இல்லையெண்டு பாத்தால்...கடைசியாய் எழுதின நாலு மெம்பஸ்மாரை என்னெண்டு சொல்லுறது??????? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிம்பிள் விசயத்துக்கு இஞ்சை கொஞ்சப்பேர் காட்டுக்கத்து கத்திக்கொண்டிருக்கினம்.....நெடுக்குசாமிக்குத்தான் அனுபவம் இல்லையெண்டு பாத்தால்...கடைசியாய் எழுதின நாலு மெம்பஸ்மாரை என்னெண்டு சொல்லுறது??????? :icon_mrgreen:

என்னது? சிம்பிள் விசயமா?

உங்கடை அளவுக்கு அனுபவம் இல்லை அண்ணோய்! :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 

 

60011.jpg

 

 

இவாண்ட நெஞ்சில இருக்கிற பூச்சி பெரிசா இருக்கிது :D

 

ஒரு பாலியல் தொழிலாளி பற்றி பேசுகின்ற அதே வேளை பத்தாயிரத்துக்குமேற்பட்ட முதலாளிகள் பற்றி பேசுவதில்லை.

ஒரு பாலியல் தொழிலாளி விமான ஓட்டியாக முடிகின்றது. அத்தொழிலில் இருந்து வேறு தொழிலுக்கு மாற முடிகின்றது. ஆனால் இதே யாழ்பாணப் பார்க்கில் ரெண்டு காதலர்கள் முத்தமிட்டால் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பதும் படம் பிடித்து போடுவதும். உலகத்துக்கே ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்த கலாச்சாரம் திருக்குறள் கண்ணகி எல்லாம் நிறைந்திருக்கின்றது. ஆனால் இவ்வாறான ஒரு பாலியல் தொழிலாளி வாழக்கூடிய அவுஸரேலியாவுக்குள் நுழைவதற்கு இந்தச் சமூகம் படாத பாடுபடுகின்றது. ரியல் காட்டான்ஸ்கள் ரைகட்டிக்கொண்டு தாவுவதுபோல்தான் எமது அறிவும் கலாச்சாரமும் பண்பாடும். அதை வைத்து சல்லிக் காசுக்கு பிரயோசனம் இல்லை.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாண்ட் மாம்ஸ்... அந்தப் பொம்பளையே சொல்லுறா.. விபச்சாரத்துக்குள் நுழையாமல்.. ஒருவரை தன்னும் தான் தடுக்க முடிந்தால்.. அதுவே தனக்கு பெரும் திருப்தி என்று.

 

எங்கட கலாசாரத்தில் சில மூடத்தனங்கள் இருக்கலாம். ஆனால் விபச்சாரம் தொடர்பில் எங்கட சமூக நடத்தை என்பது பலரை அதற்குள் செல்ல விடாமல் தடுக்கிறது என்ற உண்மையை நீங்க ஒத்துக்கொள்ளவது.. கடினம் என்றாலும்.. ஒத்துக் கொண்டு தான் ஆகனும்.

 

அவுஸிக்கு.. மேற்கு நாடுகளுக்கு எம்மவர்கள் ஓடுவது.. சொந்த மண்ணில் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க இந்த மேற்குலக காலனித்துவப் பிசாசுகள்.. முன்வராதது தான்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாலியல்  ஆனால் இதே யாழ்பாணப் பார்க்கில் ரெண்டு காதலர்கள் முத்தமிட்டால் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பதும் படம் பிடித்து போடுவதும். .

 

அட இதற்கும் யாழ்ப்பாணத்தான் தேவைப்படுகிறது.....இஸ்லாமிய சகோதரங்கள் பெண்கள் முகத்தை காட்டினாலே கலாச்சாரம் போய்விட்டது என சொல்லுயினம்...

சாண்ட் மாம்ஸ்... அந்தப் பொம்பளையே சொல்லுறா.. விபச்சாரத்துக்குள் நுழையாமல்.. ஒருவரை தன்னும் தான் தடுக்க முடிந்தால்.. அதுவே தனக்கு பெரும் திருப்தி என்று.

 

எங்கட கலாசாரத்தில் சில மூடத்தனங்கள் இருக்கலாம். ஆனால் விபச்சாரம் தொடர்பில் எங்கட சமூக நடத்தை என்பது பலரை அதற்குள் செல்ல விடாமல் தடுக்கிறது என்ற உண்மையை நீங்க ஒத்துக்கொள்ளவது.. கடினம் என்றாலும்.. ஒத்துக் கொண்டு தான் ஆகனும்.

 

அவுஸிக்கு.. மேற்கு நாடுகளுக்கு எம்மவர்கள் ஓடுவது.. சொந்த மண்ணில் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க இந்த மேற்குலக காலனித்துவப் பிசாசுகள்.. முன்வராதது தான்..! :icon_idea:

 

இங்கு பலர் எழுந்தமானமாக தமது கனவையும் மாயயையும் உண்மையாக எழுதுகின்றனர். "எங்கட" என்று சொல்வதற்கு நாம் ஒரு ஐக்கியப்பட்ட சமூகம் கிடையாது. நாம் ஒரு இனம் சமூகம் என்பது கனவும் ஆசையும் தவிர அது என்னும் நிறைவேறவில்லை. அது நிறைவேறியிருந்தால் இனம் சமூகம் என்பது எங்கட நாடு என்ற ஒன்றை இப்போது கொண்டிருக்கும். இந்நிலையில் எங்கட என்று சொல்வதே பிழை அதற்குமேல் அதற்கொரு கலாச்சாரம் இருக்கின்றது என்பது அதைவிடப்பிழை. இருப்பது இரவல் கலாச்சாரம். இருப்பதெல்லாம் தென்னிந்தியா வடஇந்தியா மேற்குநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரவல் கலாச்சார எச்சங்கள். சுயம் என்று எதுவும் கிடையாது.

 

இதற்குமேல் சமூகமே இல்லை என்கின்றபோது சமூக நடமுறை பாலியலை எப்படித்தடுக்கும்? சமூகமாகவே ஐக்கியப்படமுடியாதபோது பாலியல் குற்றங்கள் துஷ்பிரயோகங்களை எப்படி தடுக்கமுடியும்? திரைமறைவில் அதிகாரம் பணம் என்பவற்றை கையில் வைத்திருப்பவன் பல ஆயிரம் பாலியல் குற்றங்களை செய்துகொண்டுதான் இருக்கின்றான். சுருக்கமாகச் சொன்னால் மேற்கண்டவாறு ஒரு பாலியல் தொழிலாளியை தடுப்பதாகக் கூறிக்கொண்டு பல சிறுவர்களையும் இசைப்பிரியாபோன்ற பல ஆயிரம் பெண்களையும் காவுகொடுக்கும் நிலையே மிச்சமாக உள்ளது.

 

எங்கட எங்கட மேலும் எங்கட கலாச்சாரம் என்பதுக்குள் இருப்பதெல்லாம் சாதிவெறி பிரதேசவாதவெறி மதவெறி வர்க்கவெறிபோன்றன தவிர நாகரீகமான அறிவுசார்ந்த எந்தக் கூறுகளும் அதற்குள் கிடையவே கிடையாது. இந்த வெறிகள் எல்லாம் தங்களுக்குள் தாங்கள் இரைதேடி மாண்டதுபோக மீதம் என்னுமொரு இனத்துக்கு அடிமையாகியும் பரதேசங்கள் நோக்கி ஓடியும் நடுக்கடிலிலும் தத்தளித்துக்கொண்டுள்ளது. எந்த மாற்றமும் இனி சாத்தியம் இல்லை. கொஞ்சக்காலம் கலாச்சாரம் பண்பாடு எங்கட உங்கட என்று புறுபுறுத்துக்கொண்டு சாகவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சாண்டு மாம்ஸ்...

 

நீங்கள் இலட்சிய வாயு தான் பூமிப்பந்து பூரா நிரம்பி நிற்கனுன்னு விரும்புறீங்க.

 

ஆனால் மாம்ஸ்.. இயற்கையில.. இருக்கிற வாயுக்களில் அநேகம் இலட்சிய வாயுக்களே அல்ல. ஆனால் இலட்சிய நடத்தைகள் சிலதைக் காண்பிக்கக் கூடியவை.

 

இந்த யதார்த்தப் புறநிலையில் இருந்து சிந்திக்காம... நீங்கள் ரெம்ப சிரமப்படுறீங்கள்.

 

நாங்கள் வாயுக்களை இயன்ற அளவு வாயுக்களாகவே வைச்சிருக்க விரும்பிறம். திரவமாகவோ... திண்மமாகவோ அவை ஆகிட்டா.. அப்புறம் பூமில எதுவும் ஜீவிக்க முடியாது. நீங்களோ எல்லாம் இலட்சிய வாயுக்களாக இருக்கனுன்னு நினைக்கிறீங்க. அங்க தான் பிரச்சனை. அது சாத்தியமில்ல மாம்ஸ்..!

 

உண்மை எளிமை. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளுற மனநிலை தான் எளிமையற்று இருக்குது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் எழுந்தமானமாக தமது கனவையும் மாயயையும் உண்மையாக எழுதுகின்றனர்.....

சண்டமாருதர்,

உணர்ச்சி வசப்படாதீங்க!

வேலையில் டென்சன் எண்டால், அதை மறக்க அப்படி, இப்படி, ஜாலியா எதையாவது பதிவோம்.

உதைப் போய் சீரியசாக எடுத்து நீங்க ரென்சன் ஆயிடாதீங்க!

ஐயோ.., அய்யோ, எங்க போய் தலையை முட்டுறது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்.. இந்தத் திரியை விட்டு இன்னும் போகேல்லையா?  :lol:  நானும் இங்கைதான்..  <_<

 

இவ 10,000 ஆண்கள் என்று சொல்லியிருக்கிறா.. அப்ப ரிப்பீட் கஸ்டமர்களையும் கணக்குப் போட்டால்??! :huh:

 

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்.. இந்தத் திரியை விட்டு இன்னும் போகேல்லையா? :lol: நானும் இங்கைதான்.. <_<

இவ 10,000 ஆண்கள் என்று சொல்லியிருக்கிறா.. அப்ப ரிப்பீட் கஸ்டமர்களையும் கணக்குப் போட்டால்??! :huh:

அட, எங் கொக்காமக்கா,

இது வேற கணக்கா? பட்டைய கிளப்பி இருக்குது புள்ள!

சண்டமாருதர்,

உணர்ச்சி வசப்படாதீங்க!

வேலையில் டென்சன் எண்டால், அதை மறக்க அப்படி, இப்படி, ஜாலியா எதையாவது பதிவோம்.

உதைப் போய் சீரியசாக எடுத்து நீங்க ரென்சன் ஆயிடாதீங்க!

ஐயோ.., அய்யோ, எங்க போய் தலையை முட்டுறது?

 

டென்சன் பயம் இன்னும் பல உணர்வுகள் எல்லாம் மேலோங்கும் போது மனிதர்கள் எந்த வழியால் வந்தார்களோ அந்த வழி ஊடாக திரும்ப கருவறைக்குள் புகுந்து எங்கோ ஒழிந்துகொள்ள அல்லது தப்பியோட முனைகின்றார்கள். ஆனால் அது ONE WAY என்பது தெரிந்தும் திரும்ப திரும்ப முயற்சிக்கின்றார்கள். இவ்வாறன இயற்கையின் வினோதத்திற்கும் முரண்பாட்டிற்கும் அதன்பால் முயற்சிசெய்த இந்தப் பத்தாயிரம் பேரின் முயற்சியின் நூதன வடிகாலாக இந்தப்பெண் இருந்துள்ளார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.