Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலைக் கொத்திய பறவை- (அண்மையில் வாசித்ததில் மிகப் பிடித்த கவிதை)

Featured Replies

கடலைக் கொத்திய பறவை-

 

உடலிலிருந்து பிரிந்த மென்னிறகை
காற்று கடலிடம் சேர்த்தது
ராஜாவின் உத்தரவின் பேரில்
சேவகர்கள் இறகை இழுத்து வந்து
கரையில் எறிந்துவிட்டார்கள்

 

கடுஞ் சினம்கொண்ட பறவை
வேதனை மிகுதியால் கடலைக் கொத்தி விழுங்கியது

 

தானியம் என்றுதான் அது கடலை
நினைத்திருக்க வேண்டும்
எச்சமாகி வெளியேறிவிடும் என்றுதான்
மரக்கிளையில் ஓய்வாக
அமர்ந்திருக்க வேண்டும்

 

முதன் முதலில் பறவைக்குள்
ஆழ் கடல்தான் உற்பத்தியானது
அமைதியாக அமர்ந்திருந்த பறவைக்கு
கண்ணி குத்தியவர்கள் அப்படித்தான்
நினைத்தார்கள்

 

திடீரென பறவைக்குள் அலை அடிக்கத் தொடங்கியது
கரையை உருவாக்கிக் கொள்ளுமளவுக்கு
இதயத்தில் இடவசதி இருக்கவில்லை

 

கடல் ஸ்தம்பித்துவிட்டது

 

தனக்குள் மிதக்கும் இறகை
பறவை இன்றுதான் பொருத்திக்கொண்டது
ஒரு கடல்
தனக்குள் சமிபாடடையாமல் இருப்பதைப்பற்றி அது ஒருவரிடமும் சொல்லவேயில்லை
மறுபடியும்
கடலாய் மாறும்வரை

 

-ஜெம்சித் ஸமான்-

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான ஒரு சிந்தனையின் வெளிப்பாடு

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நிழலி , நிறைய யோசிக்க வைக்கின்றது...!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதை சொல்ல வருவது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் இருக்கும் ஜெம்சித் ஸமான் அவர்களின் கவிதை என்று நினைக்கிறன்..அவர் எழுதும் அனேகமான கவிதைகள் புரியாத அர்த்தங்களைக் கொண்டு இருக்கும் கவிதைகளாகவே இருப்பது ஏனோ வழமையாகி விட்டது..உவமையாக ஊனப்பட்டவர்களைக் கூட இழுத்து எழுதுவது..காரணம் கேட்டால் அவரிடமிருந்து பதில் வராது.
 

  • கருத்துக்கள உறவுகள்

சிலநேரம் அவரும் பாதிக்கப் பட்ட ஒருவராக இருந்து அதன் வெளிப்பாடாகக் கவிதை வரலாம் யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைப் பகிர்வுக்கு நன்றிகள், நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்

சங்க காலப் பாடல்களைப் பொருள்விளங்கிப் படிக்க யாராவது உதவி செய்ய வேண்டும்.  அதே மாதிரிதான் தற்போதைய வசன அடுக்குகளும்.  உதவியின்றிப் புரிந்து கொள்ள முடியாது.  ரசித்தவர்கள் யாராவது விளக்கம் சொல்லுங்கோ  உங்களுக்குப் புண்ணியமாகப்போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சங்க காலப் பாடல்களைப் பொருள்விளங்கிப் படிக்க யாராவது உதவி செய்ய வேண்டும்.  அதே மாதிரிதான் தற்போதைய வசன அடுக்குகளும்.  உதவியின்றிப் புரிந்து கொள்ள முடியாது.  ரசித்தவர்கள் யாராவது விளக்கம் சொல்லுங்கோ  உங்களுக்குப் புண்ணியமாகப்போகும்.

 

அதே

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பிரச்சினகளை பூதாகரமாக்கினால் விளைவு கட்டுப்படுத்தமுடியாததாக இருக்கும் என்று சொல்ல வருகின்றாரா?

Edited by கிருபன்

 
தமிழில், குறிப்பாக இணைத்தில், அண்மைக்காலங்களில் ஒரு பரவலான பிரச்சினை இருப்பதாக எனக்குப்படுகிறது. ஒருவேளை இது எனது பார்வைப் பிழையாக மட்டும் இருக்கலாம். அதனால் தான் கிருபனும் நிழலியும் தமிழ் இணையவெளியினை கைகளிற்குள் அடக்கி வைத்திருக்கும் அளவிற்குப் பரந்து வாசிப்பவர்கள் என்ற ரீதியில் உங்கள் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வதற்காக இந்தப் பின்னூட்டம்.
 
மஜிக்கல் றியலிசத்திற்கும் உருவகத்திற்குமான குளப்பமாக பல படைப்புக்கள் வெறுப்பேற்படுத்துகின்றன. மஜிக்கல் றியலிசம் பிடிக்காத ஒரு வாசகன் இருப்பது சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு மிகப் பிடிக்கும். அது போல் உருவகத்தை விரும்பாத ஒரு ரசிகன் சாத்தியமில்லை என்றே தோன்றுகின்றது. ஆனால் இரண்டையும் குளப்பிக்கொள்ளும் எழுத்தாளர்கள் எனக்கு ஏனோ வெறுப்பேற்படுத்துகிறார்கள். 
 
சட்டகத்திற்குள் அடக்கி வகைபிரித்துச் சமன்பாடுகளிற்குள்ளால் படைப்பு வரவேண்டியதில்லை. அப்படி வந்தால் அது படைப்பே இல்லை. ஆனால், மஜிக்கல் றியலிசம் (மன்னிக்கவும் தமிழ் தெரியவில்லை) மற்றும் உருவகம் போன்றவை சமன்பாடுகள் அல்ல. படைப்புக்களை உருவாக்கும் விதிகள் அல்ல.  மாறாக, தாமாகப் பிறந்த படைப்பை விளங்கிக் கொள்வதற்கும், விளங்கியதை வாசகர்கள் தமக்குள் இலகுவாகப் பரிமாறியோ அல்லது கலந்துரையாடியோ கொள்வதற்குமான ஒரு டிசைன் பற்றேண் போன்றவை தான் இவை. இந்த இரண்டு பற்றேணும் ஒரு படைப்பிற்குள் சேர்ந்திருக்கக்காணலாம், ஆனால் அவற்றைப் படைப்பிற்குள் காட்டவேண்டும் என்பதற்காக, அவற்றைப் பிளையாகப் புரிந்து புகுத்துப்போது வாசிப்பு ஒட்ட மறுக்கிறது.
 
உருவகத்திற்கு லொஜிக்கோடு முரண்படவேண்டிய அவசியமில்லை. அதுபோன்றே, மஜிக்கல் றியலிசம் கூட லொஜிக்கிற்குப் புறம்பானதாகத் தோன்றினும் கூர்ந்து நோக்குகையில் அதற்குள் லொஜிக் சீராக இருக்கும். சமச்சீரான முகம் அழகாகத் தோன்றுவதைப் போல், லொஜிக் என்பது வாசிப்பிற்குள் ஒட்டுவதற்கு உதவுவது. இந்த லொஜிக்கைக் கவனிக்காத, தனக்குள் எந்தக் கேள்வியும் கேட்காது எழுதுகின்றவர்கள் மீது கட்டுக்கடங்காத கடுப்பு ஏற்படுகிறது. 
 
இந்தத் தலைப்பின் கவிதைக்குள்ளும் எனக்கு மேற்படி பிரச்சினை எழுகிறது. ஆனால் நிழலிக்கு மிகப்பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். எனவே பிரச்சினை எனது பார்வை தான்.
 
நீங்கள் இதை எப்படிப் புரிந்துகொண்டீர்கள், இதில் உங்களைக் கவர்ந்தது என்ன என்று நேரங்கிடைப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
நன்றி

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படி

நினைக்கிறேன்.

அடக்க முடியாத வேதனைகளையும்.கடும் கோபத்தையும் அதற்குக் காரணமானவர்கள் மீது வெளிக்காட்ட முடியாமல் ஒரு கையறு நிலையில் சகித்துக் கொண்டு இருப்பதை(தமிழர்களின் இன்றைய நிலையைப் போல)சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.

கவிதை என்பது இலகுவாக வாசகர்களுக்கு ஒரு செய்தயைச் சொல்லும் வழி முறையாகும்.ஆனால் இந்தக் கவிதையை !!!என்னால் முழுமயாக விளங்கிக் கொள்ள முடியவில்லை.அந்தக் கவிஞரே ஒரு பொழப்புரிமையையும் எழுதிவிட்டால் நல்லது.

  • தொடங்கியவர்

கவிதையை படைத்த ஸமான் இற்கு இப் பின்னூட்டங்களை  காட்டிய போது இவ்வாறு சொல்கின்றார்:

 

"நன்றி தோழமையே . அக் கவிதையில் வரும் கடல் என்ற படிமத்தை துயர் என்றும் நிறைவேறாமல் பிரிந்துபோன காதல் என்றோ அடையாளப்படுத்திக் கொண்டு வாசித்துப் பாருங்கள் கவிதை புரியும் தோழமையே "

 

----------------------------------------------------------------------------------------------------------------

 

 

கவிதையை வாசிக்கும் போது எனக்குள் விரிந்து செல்லும் கற்பனை வெளியைப் போன்று இன்னொருவருக்கும் அமைந்து விடாது. இன்னொருவருக்கு அமைவது போன்று எனக்கு அமைந்து விடாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் உணர்வு நிலையில் இருந்து வாசிக்கும் போது நவீன ஓவியம் போன்று ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்.

 

இன்னொருவனின் கேள்விக்கு திங்கள் செவ்வாயில் நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலநேரம் அவரும் பாதிக்கப் பட்ட ஒருவராக இருந்து அதன் வெளிப்பாடாகக் கவிதை வரலாம் யாயினி

 

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் அக்கா..

 

 

 

இந்தக் கவிதையை பொறுத்த மட்டில் திரும்ப,திரும்ப படிச்சு அர்த்தங்களை கண்டு கொள்ளும் போது, ஐந்து அறிவு ஜீவனாகிய ஒரு பறவையாலயே தன் அவலத்தை  பொறுத்துக் கொள்ள இயலவில்லை .......அந்தப் பறவைக்கே கோவம் பொங்கி,பிரவாகித்து அலையாய் அடித்து அடங்குகிறது என்றால்..மனிதர்கள் எம்மாத்திரம் இப்போ தான் யோசித்து பார்க்கிறேன்... எல்லாராலும் எல்லாம் முடிவதில்லை... அதைக் கூட உணர்த்தாமல் உணர்த்தி விட்டு களன்று விடும் மனோவியளாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

 

கடலைக் கொத்திய பறவை-

 

உடலிலிருந்து பிரிந்த மென்னிறகை

காற்று கடலிடம் சேர்த்தது

ராஜாவின் உத்தரவின் பேரில்

சேவகர்கள் இறகை இழுத்து வந்து

கரையில் எறிந்துவிட்டார்கள்

 

கடுஞ் சினம்கொண்ட பறவை

வேதனை மிகுதியால் கடலைக் கொத்தி விழுங்கியது

 

தானியம் என்றுதான் அது கடலை

நினைத்திருக்க வேண்டும்

எச்சமாகி வெளியேறிவிடும் என்றுதான்

மரக்கிளையில் ஓய்வாக

அமர்ந்திருக்க வேண்டும்

 

முதன் முதலில் பறவைக்குள்

ஆழ் கடல்தான் உற்பத்தியானது

அமைதியாக அமர்ந்திருந்த பறவைக்கு

கண்ணி குத்தியவர்கள் அப்படித்தான்

நினைத்தார்கள்

 

திடீரென பறவைக்குள் அலை அடிக்கத் தொடங்கியது

கரையை உருவாக்கிக் கொள்ளுமளவுக்கு

இதயத்தில் இடவசதி இருக்கவில்லை

 

கடல் ஸ்தம்பித்துவிட்டது

 

தனக்குள் மிதக்கும் இறகை

பறவை இன்றுதான் பொருத்திக்கொண்டது

ஒரு கடல்

தனக்குள் சமிபாடடையாமல் இருப்பதைப்பற்றி அது ஒருவரிடமும் சொல்லவேயில்லை

மறுபடியும்

கடலாய் மாறும்வரை

 

-ஜெம்சித் ஸமான்-

 

 

 

கொல்லப்பட்ட ஒரு பறவையின் இறகுகள் கடலில் சேர்ந்து தத்தளிக்கின்றது. இறக்கைகளுக்கு கடலே பறவையின் உடலாகின்றது. அதன் பிறகு அது தன்னை தானே கொத்துகின்றது.

 

பறவை கடலை தானியம் என்று நினைத்திருந்தது. 

 

இவ்வறு தொடரும் இந்தக் கவிதை எந்தப் பின்னணியைக் கொண்டு எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்த எழுதப்பட்டது என்பது ஏழுதியவருக்கெ வெளிச்சம். எவ்வாறு எழுதப்பட்டிருப்பினும் அதை ஏதோ ஒன்றுடன் சம்மந்தப்படுத்தி வாசகன் புரிந்துகொள்ளவேண்டிதுதான். அந்தவகையில்... ஈழத்தமிழரின் நிலையை இந்தப் பறவையோடு பொருத்தும் போது சில கடினமான உணர்வுகளை உணர முடிகின்றது.

 

 

அநேகமாக பறவைக்கு அஜீரணமாக இருக்கலாம். அஜீரணமாக இருக்கும் போது வயிற்றினுள் கடல் இருப்பது போலவும், அதில் அலை அடிப்பது போலவும் இருக்கும்.
 
கவிதை எழுதும் போது இந்த ஜேமஸ் சாமன் என்பவருக்கும் கடும் அஜீரணம் இருந்திருக்கலாம்.
காதல் பிரிவும், கட்டாயத் திருமணமும் அதைத்தொடர்ந்த காதல் அற்ற பிரளயமான கலியாண வாழ்வும் தான் கவிதையின் பேசு பொருள் என்பதாகவே எனக்கும் புரிந்தது.
செய்தி மிகப்பரிட்சயமான விடயம் என்பதால் தான் மனம் ஏதாவது புதிதாய் இருக்கிறதா என்று ஆராய விளைந்தது. 
 
கடல் என்பது இரண்டு விதங்களில் ஒன்றாய் எனக்குப் பட்டது: 
 
ஒன்று காதல் வயப்பட்ட பெண்ணின் பார்வையில் அவளது காதலன் அனைத்துமாய் விரிந்து தெரிந்தமை. என்னதான் தமிழ்படக் கதையாகக் கவிதை இருந்தாலும், காதலனைக் கடல் என்பது சரோஜாதேவி காலத்து டயலாக் என்பதால் அடுத்த விளக்கத்தைப் பொருத்திக்கொண்டேன்.
 
அதாவது, பிரமாண்டமான உலகில் தான் ஒரு சிறு புள்ளி என்றுணர்ந்து, உலகே காதல் என்ற அடிப்படையில் பார்த்து, தனது காதலினை உலகோடு ஒன்றித்ததாய் ஒருமையாய் கடலில் ஒரு துளியாக உணர்ந்து வெளிப்படுத்தியமை என்று எடுத்துக்கொண்டேன். மேலும், தான் காதல் வயப்பட்டுப் பறந்துகொண்டிருந்ததால் தன்னை ஒரு பறவையாய் உருவகிக்கிறார் என்றும் புரிந்துகொண்டேன். பறவையின் ஒரு துளி இறகு என்பதும் ஏற்புடையது. அந்தவகையில் தனது காதல் துளி (இறகு) காதலேயான உலகில்(கடல்) கலந்ததாய் இது அர்த்தம் பெற்றது.
 
பிறகு வழமையான தமிழ்ப் பட காட்சி போல வில்லன் வந்து, காதலைப் பிரித்து, வேறு ஒரு சோடியோடு கட்டாயமாகச் சேர்த்து வைத்தல். அதன் பின்னும் உலகு கடலாகத் தான் தொடர்கிறது, ஆனால் உலகு என்பது இப்போது காதல் என்ற ஒற்றைப் புள்ளியாக இல்லாது, வழமை என்ற ஒற்றைப் புள்ளியாகச் சுருக்கப்பட்டு, எல்லாப் பெண்களைப் போல இவளும் கலியாணம் குழந்தை என்று வந்தவுடன் உலகோடு ஒத்து புது மணவாழ்வில் ஒன்றிப் போவாள் என்றே கட்டாயத் திருமணத்தை நிகழ்த்தியோர் நினைத்தனர் என்பதையே 'முதன் முதலில் பறவைக்குள் ஆழ் கடல் தான் உற்பத்தியானது...பறவைக்குக் கண்ணி குத்தியவர்கள் அப்படித் தான் நினைத்தார்கள்' என்ற பந்தி கூறுவதாகப் புரிந்து கொண்டேன்.
 
அடுத்த பந்திகள் கட்டாயத் திருமணத்தின் பின்னான பிரளயத்தைப் பாட முனைகின்றன.  முதலில் வந்த 'தானியம் என்றுதான் அது கடலை நினைத்திருக்கவேண்டும்...' பந்தி கூட அலையடிக்கத் தொடங்கிய பந்திக்கு அடுத்ததாக இருக்கத் தான் அதிகம் பொருத்தமானது என்பது எனது அபிப்பிராயம். பிரளயப் பந்திகளிற்குள் துருத்திக்கொண்டு நிற்கின்ற இதர விடயங்கள் தான் வாசித்து முடித்தபோது கவிதையினை எனக்குள் ஒட்டாது செய்தன. பிரளயம் என்று வரும்போது, சன்னதம் பிறப்பதும், வார்த்தைகள் கொட்டுவதும், உணராத அல்லது சொல்லநினைக்காத விடயங்கள் வந்து விழுவதும் சாத்தியம் தான். அந்தவகையில் வேண்டுமானால் இவற்றைப் புரிந்து ஒதுக்கிவிடலாம். ஆனாலும் அவை கவிதைக்குப் பங்கமாகத் தான் இருக்கின்றன. ஏனெனில் கதாநாயகியின் அழகை அவை குறைக்கின்றன.
 
வெறியில் குளப்படி செய்பவன், தன்னைக் குற்றம் சொல்லாதீர்கள் அடித்த சாராயம் தான் ஆட்டம் போட்டுவிட்டது என்று கூறுவதைப் போல, இந்தப் பாடகியும் தான் நிகழ்த்திய பிரளயத்திற்காய்த் தன்னைக் குற்றம் சொல்லாதீர்கள், தானியம் என்று சிறிதாய் நினைத்துத் தான் அனுமதித்த காதல் என்ற நுண்ணுர்வு தான் உள்ளிற்குள் கடலாய் மாறிச் சன்னதமாடுகிறது என்று தான் தப்பித்துக்கொள்வதற்காகத் தான் 'தானியம் என்று தான் அது கடலை நினைத்திருக்கவேண்டும்...' என்ற பந்தியினை வைத்திருக்கிறார். அதாவது, தான் நிகழ்த்திய பிரளயத்திற்குள்ளும், மற்றவர் சார்ந்த தனது கோழைத்தனத்திற்கு மனதில் இடம் அளித்து, அது தந்த பயத்தைக் கிரகித்து, அப்பயத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மேற்படி பந்தியினையும் தனது பாட்டில் சேர்த்திருக்கிறார். அந்தவகையில், அவரது அகம் காதல் மட்டுமாய், ஒருமையாய் வியாபித்திருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. பிரளயத்தை நிகழ்த்தியபடி பிரளயத்தின் பார்வையாளராகவும் பாடகி வெளிப்படுகிறார். அந்தவகையில், இந்தப் பிரளளயம் கணித்தலுடன் கூடடிய திட்டமிடலுடன் நடந்ததேயன்றித் தானாக நடந்ததில்லை என்றே வெளிப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து மேலும் சில ஒவ்வாமைகள்.
 
தொடர்ந்து அலை அடித்தபடி கடல் தொடர்வதற்கு அவசியமான கரையினை உருவாக்கிக் கொள்வதற்குக் கூட இடமின்றித் தான் அலையாய், அதாவது மனம் பிரளயமாய் மட்டும் வியாபித்திருந்தது என்று, குளப்படியினைக் குடித்த சாராத்தில் சுமத்தும் குடிகாரனைப் போல, மீண்டும் தான் தப்பித்துக் கொள்வதற்காகக் கவனமாகக் கூறியபடி, "முடிவில் கடல் ஸ்ததம்பித்தது" என்கிறார் பாடகி.
 
ஆனால், கரையின்றி அலையடித்த கடல் 'முடிவில்' ஸ்த்தம்பிக்க வேண்டுமாயின் கடல் வெடித்துச் சிதறவேண்டும். கடல் வெடித்துச் சிதறவேண்டுமாயின் அதன் அர்த்தம் நீரனைத்தும் கணப்பொழுதில் ஆவியாகிவிடவேண்டும். ஆவி என்பதை ஒரு 'Segue'யாக எடுத்துக்கொண்டு, கடல் மறைந்து போதலை பாடகியின் இறப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். அதாவது, பிரளயத்தின் உக்கிரத்தில் பிரளயதாரி மரித்துப் போனதாய் எடுத்துக்கொள்ளலாம். அதுவும்  'முடிவில்' கடல் ஸ்தம்பித்தது என்று கூறப்படுவதால், ஸ்தம்பிப்பை முடிவாகத் தான் எடுத்துக்கொள்ள முடியும்.
 
ஆனால், கதை முடிந்தபாடில்லை! கதை நீட்டி முழக்கித் தொடர்கிறது என்பதால், பிரளயதாரி சாகவில்லை. ஒருவேளை சாமியாடியவர் சாமி மலையேறியபோது விழுவதுபோல் விழுந்தார் என்றும் ஒரு மயக்கம் என்றும் 'கடல் ஸ்தம்பித்தது' என்பதை எடுத்துக்கொள்ளலாம்.
 
மயக்கமோ மரிப்போ, அந்த ஸ்தம்பிப்பில் கடல் தொலைந்திருக்கவேண்டும். பிரளயம் தொலைந்திருக்கவேண்டும். புதுச் சமநிலை பிறந்திருக்கவேண்டும். ஆனால் இங்கு, பழையபடி உள்ளுக்கு இறகு மிதக்கிது, கடல் கிடக்கிது, மீண்டும் ஒரு நாள் அனைத்தும் கடலாய், கடலாய் மட்டும் மாறும் என்று கதை விரிகையில், அந்த வழுவழுப்புத் தன்மையில் கதாநாயகியின் அழகு முற்றாய் அரிதாரம் கலைந்துபொனதாய் ஆகிவிடுகிறது. காதல் ஒரு தரம் தான் சாத்தியம் என்றோ இரண்டாம்தரம் அது சாத்தியமில்லை என்றோ இங்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால், 'ஒப்பினிங் சீனில் இருந்து ஒரு லவ் ஸ்ரோறி சார்' என்று இன்ரவியூ குடுத்திட்டு, இடைவேளை வரை கூட பார்ப்பவர்கள் இருக்கமுடியாத படத்தை எடுக்கும் சில இயக்குனர்கள் போல, காதல் கதை வழுவழுப்பாய் வருகிறது என்பதே முறைப்பாடு. 
 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

படிமக் கவிதை பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கும் என்பதற்கு இக்கவிதை உதாரணம். கவிதையை எழுதுபவர் நினைப்பதைவிட அதனை வாசிப்பவர்கள் தமது வாழ்வனுபவத்தினூடாக வெவ்வேறு வகையில் அர்த்தங்களைப் பொருத்திப் பார்க்கலாம் என்பதைத்தான் இலகுவில் புரியாத கவிதைகள் உணர்த்துகின்றன.

கடலை நிறைவேறாமால் பிரிந்துபோன காதல் என்று எடுத்துக்கொண்டாலும் எல்லா வரிகளும் தர்க்க ரீதியான அர்த்தங்களைத் தருவதாக எனக்குப் படவில்லை.

மந்திர/மாய/மாந்தீரிக யதார்த்தம் (magical realism) இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் அதிகமாக உள்ளது. இது நம்பமுடியாத ஆனால் தர்க்கரீதியில் சரியான கதை நகர்த்தலாக இருக்கும். வாசிக்கும்போது மேலும் அந்த நம்பமுடியாத உலத்தில் நுழைந்து அதன் இரகசியங்களை அறியவேண்டும் என்ற ஆவல் தோன்றும். ஆனால் இவை மனோரதியமான (fantasy) கதைகளில் இருந்து வேறுபட்டது. Life of Pi உம் ஒரு மந்திர யதார்த்தக் கதையே. தமிழிலும் பலர் முயன்று இருக்கின்றார்கள். ஆனால் இப்படியான நாவல்களை இன்னமும் நான் தமிழில் படிக்கவில்லை. சுப்ரபாரதிமணியனின் ஒரு சில மாய யதார்த்தச் சிறுகதைகளைப் படித்துள்ளேன். அதில் ஒன்று திருப்பூர் பனியன் தயாரிப்பவர்கள் ஆயுதப் போரில் இறங்குவது போன்று புனையப்பட்டதாக ஞாபகம்.

இன்னுமொருவன் கூறியது போன்று உருவகக் கதை புரியாத விடயத்தை இலகுவில் புரியவைக்கப் பாவிக்கப்படும் உத்தி. புராண இதிகாகச் கதைகளை உருவகத்தினுள் அடக்கலாமா தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவில் புரியாத கவிதைகள் உணர்த்துகின்றன. கடலை நிறைவேறாமால் பிரிந்துபோன காதல் என்று எடுத்துக்கொண்டாலும் எல்லா வரிகளும் தர்க்க ரீதியான அர்த்தங்களைத் தருவதாக எனக்குப் படவில்லை. இலகுவில் புரியாத கவிதைகள் யாருக்காக எழுதப்படுகின்றன??????

இலகுவில் புரியாத கவிதைகள் உணர்த்துகின்றன. கடலை நிறைவேறாமால் பிரிந்துபோன காதல் என்று எடுத்துக்கொண்டாலும் எல்லா வரிகளும் தர்க்க ரீதியான அர்த்தங்களைத் தருவதாக எனக்குப் படவில்லை. இலகுவில் புரியாத கவிதைகள் யாருக்காக எழுதப்படுகின்றன??????

 

 

 

புலவர்,
 
இப்படி ஒரு பின்னூட்டம்..
 
 
 
இது...........
 
அஜீரணத்தின் ஓர் உன்னத வெளிப்பாடு தோழமையே...   :wub:  
  • கருத்துக்கள உறவுகள்

இலகுவில் புரியாத கவிதைகள் யாருக்காக எழுதப்படுகின்றன??????

தேடலும் படைப்பாற்றலும் (creativity) உள்ளவர்களுக்காக எழுதப்படுகின்றன.

கிழக்கிலங்கையைச் சேர்ந்த சோலைக்கிளி எழுதிய கவிதை ஒன்று...

பல்லியின் எச்சமாய் நான்

என்னை விழுங்கியது பல்லி.

நான் அதன் வயிற்றுக்குள் இருந்தேன்

இன்னும் சில நாளில் அது இட இருந்த முட்டை

என் பக்கத்தில்

இருந்தது.

என்னை விழுங்கிச் சுமந்தபடியே ஏறியது

சுவரின் உச்சிக்கு

அப் பல்லி.

இடையில் இன்னொரு கொசுவையும் விழுங்கியது.

நான் இன்று

மிகவும் சிறுத்திருந்தேன்.

ஏன்?

இன்று நான் அவனுடன் கதைத்திருந்தபோது

சாடையாய் ஊர்வாதம் என்வாயால்

வழியத் தொடங்கியதே

அதை நினைத்து.

என் பல்லி என்னைச்

சமிபாடடையச் செய்வதற்காய்,

ஏறிப்போய் ஒரு வசதியான விளிம்பில்

படுத்துக்கொண்டது.

அதன் வயிற்றுக்குள் சரியான இரைச்சல்,

இட இருக்கும் முட்டைக்குள்

உயிரேறிக் கொண்டிருக்கும் கருவின் சத்தமும்

என் காதுக்குக் கேட்டு,

பின் நான்

சமிக்க சமிக்க

மறைந்துகொண்டே போனது.

அதிகாலையில் நான் கிடந்தேன்,

நேற்று நான் எழுதி மடித்துவைத்த தாளில்

பல்லியின் எச்சமாய்

மேசையில்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸமானின் கவிதை மீள மீள வாசிக்க வேண்டும் புரிந்து கொள்ள. சோலைக்கிளியின் கவிதை ஒரு மனநிலையை சில பத்து வார்த்தைகளில் இன்னொரு வாசகனுக்கு உணர்த்துகிறது, அதிசயம் என்னவெண்டால் "இப்படி என்னை shit ஆக உணர்ந்தேன்" என்று சொன்னால் எப்படி ஒருவருக்குப் புரியுமோ, அது போலவே கவிதையை ஆழ்ந்து வாசிக்கிற ஒருவருக்கும் புரிந்து விடுகிறது. சைகை மொழியால் ஆயிரம் வாக்கியங்களை ஒரு நிமிடத்தில் சொல்லி விடுவது போலத் தான் படிமம் வேலை செய்கிறது, வார்த்தைகள் நினைவில் நிற்காமலே அர்த்தம் பச்சை மரத்தில் ஏற்றிய ஆணி போலப் பதிந்து விடுகிறது.

 

புலவர் கேட்ட கேள்வி எனது சொந்த அனுபவம் ஒன்றை நினைவு படுத்துகிறது. கவிதைகள் எழுதிய காலங்களில் பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் ஒரு நாள் அறைத் தோழனுக்கு ஒரு கவிதையைப் படிக்கக் கொடுத்தேன். "இருப்பு" என்ற வார்த்தை ஓரிடத்தில் வந்திருந்தது. பிறகு சாப்பிட வெளியே போன போது "இன்று இவனின் கவிதை படித்தேன்" என்று இன்னொரு நண்பனுக்குச் சொன்னான் அறைத் தோழன். "எதைப் பற்றி எழுதியிருக்கிறான்?" என்ற கேள்விக்கு "ஏதோ கதிரையைப் பற்றியாக்கும், சரியாக விளங்கேல்ல" எண்டு சொல்லிக் கொண்டே கொத்து ரொட்டியை அடைசினான் அறைத்தோழன்! நான் புரையேறாமல் இருக்க கொக்கோ கோலாவைத் தேடினேன்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.