Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவழியில் நின்று போன மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த வைத்தியர்! - மல்லாகத்தில் சம்பவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடைநடுவின் நின்று போன தனது மோட்டார் சைக்கிளை வைத்தியர் ஒருவர் வீதியில் வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவம் நேற்று மதியம் மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழைப் பகுதியில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மல்லாகம் சந்திக்கு அண்மையாக சென்று கொண்டிருந்தார். இடைவழியில் அந்த மோட்டார் சைக்கிள் இயங்காமல் நின்றுவிட்டது. அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு சென்றார். மல்லாகம் சந்திக்கு அண்மையிலுள்ள மில் ஒழுங்கையில் குப்பைக்கு வைத்த தீ எரிந்து கொண்டிருந்தை அவர் அவதானித்துள்ளார்.

அந்த இடத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளை உருட்டிச் சென்ற அவர், எரிந்து கொண்டிருந்த குப்பைக்கு நடுவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதைப் பற்றவைத்துள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயை அணைக்க முயன்ற போதிலும் அது முடியாமல் போய்விட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து நாசமானது. இதுகுறித்து பொதுமக்கள் அந்த வைத்தியரிடம் கேட்டபோது "இந்த மோட்டார் சைக்கிளை ஓட வேண்டாம் என வீட்டிலும் ஏசுகின்றார்கள். மோட்டார் சைக்கிளும் ஒழுங்காக ஓடவில்லை, அதனால்தான் தீயில் எரிய வைத்தேன்" என்று தெரிவித்தாராம்.

www.seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

அதை யாருக்காவது நன்கொடையாக கொடுத்திருக்கலாம். படிப்பறிவு மனதை விரிவாக்கம் செய்யவில்லை.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவருக்கு ஏன்  துன்பம் கொடுப்பான் என்று நினைத்திட்டார் போல. :)

  • கருத்துக்கள உறவுகள்

சரி இல்லாத வாகனம் என்றபடியால்தானே வீட்டிலும் ஓடவேண்டும் என்று சொன்னவை எடுக்கும் மனிசி கவனமாய் இருக்கிறது நல்லது.ரென்சன் பிடிச்ச மனிசன் ஏடாகூடமாய் பண்ணிடும்.நோயாளருக்கும் வருத்தம் மாறாட்டி நெருப்பு வைத்தியம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான புத்திசாலி ..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டாக்குத்தர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மட்டும் தீ வைக்கவில்லை நாடடு நட்ப்புக்கும் சேர்த்தே தீ வைத்துள்ளார். இலகு தயாரிப்புக்களுக்கான சந்தை இப்போது யார் குடாநாடே ஆனால் கிடைக்கும் பொருட்களுக்கான தரமோ நுகர்வோருக்கான பாதுகாப்போ உறுதிப்படுத்தப்படுவதில்லை.

 

மாறாக தற்போதைய யாழ் குடாநாட்டின் நுகர்வுக்கலாசாரம் தேவைகளுக்கானதல்ல பகட்டுக்கானதே. அங்கு நாம் போய் எதாவதைக்கண்டு யாழ்ப்பாணம் அந்தமாதிரி சொல்லி வேலையில்லை என்றால் நம்புவதற்கும் இங்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

 

கடந்தவாரம் இலங்கை சென்று திரும்பிய பெண்ணொருவர் அங்கிருக்கும் வேளையில் நோய்வாய்ப்பட்டுள்ளார். அவர் சென்ற இடம் திருநெல்வேலியில் பிரபல வைத்தியசாலை, இரத்தம் சோதனை செய்ய பெரிய ஒரு மாட்டு ஊசியை எடுத்து ஒரே உறிஞ்சு மனிசிக்கு இருந்த உயிரில பாதுபோயிட்டுது செத்தேன் பிளைத்தேன் என்று வந்துசேர்ந்திட்டா

 

யாழ்ப்பாணம் அந்தமாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம் தான்.ஆனால் ஆற்றையின் குப்பைக்குள் போட்டு எரித்திருக்க கூடாது.  :lol:


 

 

கடந்தவாரம் இலங்கை சென்று திரும்பிய பெண்ணொருவர் அங்கிருக்கும் வேளையில் நோய்வாய்ப்பட்டுள்ளார். அவர் சென்ற இடம் திருநெல்வேலியில் பிரபல வைத்தியசாலை, இரத்தம் சோதனை செய்ய பெரிய ஒரு மாட்டு ஊசியை எடுத்து ஒரே உறிஞ்சு மனிசிக்கு இருந்த உயிரில பாதுபோயிட்டுது செத்தேன் பிளைத்தேன் என்று வந்துசேர்ந்திட்டா

 

யாழ்ப்பாணம் அந்தமாதிரி.

 

அண்ணை கேக்கறன் என்டு குறை நினைக்காதையுங்கோ உங்களுக்கும் தின்னைவேலி வைத்திய சாலைக்கும் ஏதும் பங்குப்பிரச்சனை இருக்கா. :rolleyes::lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு படித்தாலும் கொதி வந்தால் எல்லோரும் முட்டாள்களே

  • கருத்துக்கள உறவுகள்

ஒமோம் நுகர்வு கலாச்சாரம் எல்லாம் புலம் பெயர்ந்த்வரின் தனி உரிமை.

யாழ்ப்பாணத்தில இன்னும் சைக்கிள் ஓடியபடி, நல்லலெண்ணை வைத்தபடி, பிஞ்ச செருப்பு போட்டபடிதான் மக்கள் இருக்கோணும்.

யாராவது யாழ்ப்பாணம் அந்தமாரி எண்டு சொன்னியள் - எனக்கு மோட்டர் சைக்கிள் எரிக்கிறளவுக்கு கொதி வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறப்படிச்ச முட்டாள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் காப்புறுதிக்கு எரிக்கிறவையள் அது போல இப்ப அங்கேயும் நடக்குதோ?:D

Edited by putthan

ஒமோம் நுகர்வு கலாச்சாரம் எல்லாம் புலம் பெயர்ந்த்வரின் தனி உரிமை.

யாழ்ப்பாணத்தில இன்னும் சைக்கிள் ஓடியபடி, நல்லலெண்ணை வைத்தபடி, பிஞ்ச செருப்பு போட்டபடிதான் மக்கள் இருக்கோணும்.

யாராவது யாழ்ப்பாணம் அந்தமாரி எண்டு சொன்னியள் - எனக்கு மோட்டர் சைக்கிள் எரிக்கிறளவுக்கு கொதி வரும்.

 

இதற்கும் புலம் பெயர்ந் மக்களுக்கு என்ன கோசன் தொடர்பு?  புலம்பெயர்த்தவர்களை திட்டுவதற்கென்று களம் தேடி திரிகின்றீர்களா?  யாழ்பாணத்தில் நுகர்வு கலாச்சாரம் அதிகரிப்பதற்குகு புலம் பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணம் தான் காரணம் என்ற கருத்தையாவது வைத்திருக்கலாம். புலம் பெயர்ந்தவர்கள் என்று புதிய இனம் ஒன்றும் இல்லை. புலம் பெயர்ந்த எல்லோரும் தாயகத்தில் வாழும் மக்களின் உறவுகள் தான்.அங்குள்ள ஒவ்வொரு தமது உறவுக்கும் அன்பு பாசத்தின் காரணமாக தனது உழைப்பின் ஒரு பகுதியை வழங்குபவர்களே இன்றைய உங்களால் திட்டப்படும் புலம் பெயர்ந்த மக்கள்.

 

இன்னமும் ஒரு தலைமுறை பொறுத்திருங்கள். அங்கு வீட்டில் அடுப்பெரிகிறதோ என்றுகூட அடுத்ததலைமுறை கவலைப்படாது. அதன்பின்னர் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான உங்கள் விமர்சனங்களை வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் ஒரு தலைமுறை பொறுத்திருங்கள். அங்கு வீட்டில் அடுப்பெரிகிறதோ என்றுகூட அடுத்ததலைமுறை கவலைப்படாது. அதன்பின்னர் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான உங்கள் விமர்சனங்களை வையுங்கள்.

 

அதுதான் உண்மை....மலேசிய யாழ் தமிழர்கள் போன்று

பழைய சினிமா டயலாக் தான் ஞாபகம் வருகிறது..
 
பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சால்....
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் காப்புறுதிக்கு எரிக்கிறவையள் அது போல இப்ப அங்கேயும் நடக்குதோ? :D

 

உதுகும் நடக்குதாம்.பொிய பஸ்கள் சில பயனிகளுக்கு சேதம் இல்லாமல் எரிந்தது இப்படித்தானாம். :rolleyes:

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில மாதம்தோறும் யாழில் கட்டுப்பணத்தில் பொருட்கள் வாங்கி மாதக்காசு கட்டத்தவறியவளிடம் புடுங்கின பொருட்களை ஏலம்விடும் நிகழ்வு கடந்தகாலங்களில் நடந்ததை சிலர் அறிந்திருக்கலாம். யாழில் எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு குடும்பப்பெண் வாரம் வியாழக்கிழமையானால் நிதிநிறுவனத்துக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய் கட்டவேணும் என படாதபாடு படுவதைக் கண்ணால கண்டனான், இவ்வளவுக்கும் நிரந்தர வருமானம் எதுவுமில்லை அக்குடும்பத்துக்கு.

 

யாழில் கடைவிரித்துள்ள தென்னிலங்கை நிதி நிறுவனங்கள் அனைத்தும் கடன் கொடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன கடன் வாங்குபவருக்கு நிரந்தர வருமானம் இருக்கா இல்லையா என்பது அவர்களுக்கு இரண்டாவது பட்சமே.

 

அண்மைக்காலங்களில் நிதிமேலாளர்கள் கடனாளிகளிடம் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதை செய்திகளில் வாசித்திருப்பீர்கள்.

 

நுகர்வுக்கலாச்சாரம் என்பது உள்ளதை வைத்துத் திட்டமிடுவது அங்கு இல்லாதவர்களும் திட்டமிடாது தெருவுக்கு வருவதில் நியாயமில்லை.

 

புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரில் சிலர் செய்யும் தவறுகளே அவர்களை இவ்வழிக்குக் கொண்டுவருகின்றது என்பதில் ஓரளவு உண்மையுமுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.