Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானின் அய்யா பாரிவேந்தர் தேசியத் தலைவர் பற்றிச் சொல்லியது

Featured Replies

ஜெயாவிடம் காசு வாங்கி கூலிக்கு மாரடித ஆள் இந்தியாவில் காசு கொடுத்தா எல்லாம் நடக்கும் அதுக்கு ஆதரவு தேவையில்லை பணம் போதும் இசை .

  • Replies 50
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாவிடம் காசு வாங்கி கூலிக்கு மாரடித ஆள் இந்தியாவில் காசு கொடுத்தா எல்லாம் நடக்கும் அதுக்கு ஆதரவு தேவையில்லை பணம் போதும் இசை .

ஜெயா அள்ளிக் குடுக்கேக்க நீங்க தானே பக்கத்தில் நின்று பாத்திங்கள்‍.............அண்ணன் சீமான் ஆரம்பம் தொட்டு சொல்லிட்டு வந்தார்    ஜயா வைக்கோவை பாரதிய ஜனதா கட்சி கூட‌ சேர வேண்டாம் என்று , மோடி வந்தா எல்லாம் சரியா போயிடும் என்று ஒற்ற காலில் நின்ட ஆள் தான் வைகோ , இது கூடவா தெரியாமல் யாழில் இருந்து புலம்பிட்டு இருக்கிறீங்க‌......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  • தொடங்கியவர்

மீண்டும் மீண்டும் கூறிய பின்பும் உலக அறிவு அற்றவர்களாக...ஏன் இளையராஜாவை வைத்து நிகழ்வு செய்யும்போது எதிர்க்கவில்லை? மானாட மயிலாட செய்யும்போது எதிர்க்கவில்லை, சேரன் படம் செய்யும் போது எதிர்க்கவில்லை? இலங்கை மாநாட்டுக்கு சென்ற போது எதிர்க்கவில்லை? என அறிவு அற்றவர்களாக கேள்வி கேட்பவர்கள் கேள்வியை யோசித்து கேட்கட்டும் தெரியாவிட்டால் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்கட்டும்.

இலங்கை மாநாட்டுக்கு பொருளாதார உதவிகள் வழங்கி, இலங்கை சென்று வந்த பின்புதான் லைக்காவின் அனைத்து சிங்கள - லைக்கா உறவு வெளியே தெரிந்தது...இலங்கை மாநாடு நடக்கும் போது அந்த மாநாட்டை புறக்கணிக்கக் கோரி உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. வீதிப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், இணையவழிப் போராட்டங்கள். கோரிக்கைகள் அனுப்புவது என பலதரப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

ஏன் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் எல்லாம் இப்பொழுது ஈழத் தமிழர் எனக் கூறும் லைக்காவிற்கு தெரியாதா? புலம்பெயர் மக்கள் போராட்டம் அறியாமல் வளர்ந்தவர்களா லைக்கா? லைக்காவின் வேடம் கலைந்தது எல்லாம் இந்த ஆண்டு தொடக்கத்தில்த்தான் என அனைவரும் முழுமையாக அறிய முடிந்தது. இளையராஜா? மானாட மயிலாட, சேரன் படம் எல்லாம் சென்ற ஆண்டு நடந்து முடிந்தவைகள். லைக்காவுக்கு எதிரான ஆதாரங்களோ லைக்காவுக்கு எதிரான செய்திகளோ இல்லாத காலத்தில் ஏன் எதிர்க்கவில்லை என்றால் என்ன சொல்வது? எப்படி எதிர்த்திருக்க முடியும்?

மீண்டும் கூறுகின்றேன், இளையராஜா, மாநாட மயிலாட ஏனைய எல்லாம் லைக்காவுக்கு எதிரான ஆதாரங்கள் வெளியாவதற்கு முன்பு நடத்தப்பட்ட நிகழ்வுகள். இதைக் கூட அறிந்துகொள்ளாதவர்கள் எதை நடத்தி எதை சாதிக்கப்போகின்றார்களோ தெரியவில்லை.

ஒரு படம் தொடங்கிய பின்புதான் அப்படம் யார் தயாரிக்கின்றார்கள்? யார் நடிகர் என எல்லாம் தெரியும்? படம் தொடங்குவத்கு முன்பேவா எதிர்க்க முடியும்?.

கத்தி படத்தின் முதல் விளம்பரம் லைக்காவின் இலட்சினை இல்லாமல்த்தான் வந்தது, இரண்டாவது மூன்றாவது விளம்பரத்தில்தான் லைக்கா தயாரிக்கின்றது என்ற உண்மையே உலகிற்கு தெரியும், அதன் பின்புதான் மெல்ல மெல்ல எதிர்ப்பு வந்தது.

எதிர்ப்பு வந்தவுடனேயே கருணாமூர்த்தி ஊடகத்தை கூட்டி லைக்காவிற்றும் சிங்கள அரசுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்து பரிய மலையையே சோற்றில் மறைத்தார். அப்போது தமிழகத்தில் சில மாணவர்களைத் தவிர எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை

அது நடந்து பல மாதங்கள் கடந்த பின்பு எதிர்ப்பு வளர்ந்த பின்புதான், தமிழக உணர்வாளர்களிடம் ஓடினார்கள் லைக்கா குழுவினர், இவர்கள் தமிழக உணர்வாளர்களிடம் ஓடி அடைக்கலம் தேடிய பின்புதான், அவர்களை காரணம் காட்டி எதிர்ப்பை மறைக்க தொடங்கிய பின்புதான், அனைவரது பார்வையும் உணர்வாளர்களை நோக்கி திரும்பியது. இதில் நொடுமாறன் அய்யா அவர்கள் தனக்கு கதை மட்டுமே சொல்லப்பட்டது, தயாரிப்பு தரப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை என்றார். வைகோ அவர்களை லைக்கா குழு சந்திக்கவே இல்லை. அதன் பின்புதான் சிலரை மட்டும் நோக்கி ஏன்? எப்படி எதிர்ப்பு வளர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பின்பு நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஆக எவரும் விஜய் படம் வரட்டும் எதிர்க்கலாம் எனக் காத்திருக்கவில்லை, அவருக்கும் புலம்பெயர் மக்களுக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? காத்திருந்து எதிர்க்க? லைக்காவின் பெயர் வந்தவுடன்தான் எதிர்ப்பும் வந்தது. இனம், மெட்ராஸ் கபே, குப்பி, மல்லி, போன்ற படங்கள் எல்லாம் வந்த பின்பு எதிர்க்கப்பட்டவையா அல்லது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கப்பட்ட படங்களா? எல்லா படங்களும் படப்பிடிப்பு முடிந்து விளம்பரங்கள் வந்த பின்புதான் எதிர்க்கப்பட்டது

அப்படியென்றால் ஏன் புலிப்பார்வை படத்தை மட்டும் படப்பிடிப்பு முடியும் வரை காத்திருந்துவிட்டு அதை வெட்டு இதை வெட்டு என கேட்க வேண்டும். படம் தயாரிக்கும் முன்பே இதைத் தடுத்திருந்தால் இன்று பாலச்சந்திரன் போன்ற உருவத்தைக் கொண்ட சிறுவன் துப்பாக்கியை கட்டிப்பிடித்த படங்கள் சிங்கள அரசுக்கு கிடைத்திருக்குமா?. இன்று அவன் அதை வைத்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிவிட்டான்.. இதோ தமிழக மக்களே பாலச்சந்திரன் சிறுவர் போராளி என அறிவித்திருக்கின்றார்கள், என படம் போட்டு காட்டுவான். இனி நீங்கள் மாற்றப் போகும் காட்சிகள் அவனுக்கு இனித் தேவைப்படாது, ஏனெனில் அவனுக்கு தேவையானது அவனுக்கு கிடைத்துவிட்டது. 

கூகுல் உட்பட அனைத்து தேடல் இணையங்கள் பிற இணையங்களில் இருந்தும் பாலச்சந்திரன் போராளியாக சித்தரிக்கப்பட்ட படங்களை அகற்ற உங்களால் முடியுமா? அதை அய்யா?!!! பாரிவேந்தரும், பிரவின் காந்தியும் செய்து முடிப்பார்களா? பதில் சொல்லுங்கள்?

லைக்காவிற்கு எதிராக ஏன் புலம்பெயர் மக்கள் எதிர்க்கவில்லை…. எதிர்க்கவில்லை என்றால், புலம்பெயர் மக்களுக்கு எதை எப்படி எதிர்க்க வேண்டும் என தெரியும், வீதியில் இறங்கி போராடியிருந்தால்க்கூட இந்த அளவுக்கு ஆதரவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே? மிக நுட்பமாக எங்கு அடித்தால் என்ன விளைவு வரும் என தெரிந்து அடித்தார்கள்... அடித்த அடியில் நினைத்துக் கூட பார்க்க முடியாததெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது

லைக்காவின் சந்தையில் 100 வீதத்தில் 5 முதல் 15 சதவிகிதம் தமிழர்கள் மட்மே லைக்காவிற்கு நுகர்வோர்களாக இருக்கின்றார்கள். இதில் தமிழர்கள் என்று லைக்கா கணக்கு பார்க்காது, இலங்கையர்கள் என்றே பார்க்கும் ஏனெனில் அதில் சிங்கள நுகர்வோரும் அடங்குவார்கள். ஏனையவர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாட்டைச் சேர்ந்தவர்கள். 

அது மட்டுமல்லாமல் ஒரு தமிழர் நிறுவனத்திற்கு எதிராக தமிழர்களே வீதியில் போராடுவது தமிழ் இனத்திற்கு நேர்ந்த கொடுமைகளில் ஒன்று, உங்களையும் வீதியில் இறங்கி போராடுங்கள் என கேட்கவில்லை, தமிழகத்தில் வீதியில் இறங்கி போராடமலேயே இதை வீழ்த்தலாம். வீதியில் போராடுவது மட்டும்தான் போராட்டமா? அல்லது விஜய்க்கோ, முருகதாசுக்கோ எதிராக போராடுங்கள் எனக் கேட்கவில்லை, பொது எதிரியான சிங்கள அரசுடன் கூட்டு வைத்து தொழில் செய்து, சிங்கள அரசைப் பொருளாதாரா ரீதியில் வளர்த்துவிடும் லைக்கா நிறுவனத்துக்கு எதிராகத்தான் போராடக் கேட்கின்றோம்.

ஆனால் வளரும் போது மட்டும் தமிழர்களை நம்பி வளர்ந்த நிறுவனம் இன்று வளர்ந்தவுடன் தமிழினத்திற்கு எதிரானவனுடன் கூட்டு சேர்ந்து சிங்கள அரசை பலப்படுத்துகின்றது.

லைக்காவிற்கு எதிராக புலம்பெயர் மக்கள் போராடாமலா? போராட்டம் இவ்வளவு தூரம் பூதமாக வளர்ந்து கத்தி கழுத்திற்கு வந்து நிற்கின்றது?

லைக்கா இன்று புலம்பெயர் மண்ணில் மக்கள் நினைத்தாலும் முடக்க முடியாத நிறுவனமாக மாறிய பின்பே தன்னுடைய வேலையை காட்டியுள்ளது. இந்த நிலை நாளை தமிழகத்திலும் நடக்காமல் இருக்கவே முன்னெச்சரிக்கையாக பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றோம்.

நாளை ஏர்டெல் போல் ரிலையன்ஸ் போல் பலமாக காலுன்றிய பின்பு லைக்காவின் துரோகங்கள் முழுமையாக அறிந்த பின்பு விரட்ட நினைத்தாலும் விரட்ட முடியாது.

மேலும் லைக்கா முதலாளி தமிழகம் வந்து தனக்கும் ராஜபக்சவுக்கும் தொடர்பு இல்லை என்றவுடன் தமிழக உணர்வாளர்கள் அடங்கிவிடுவார்களா? அல்லது அடங்க வேண்டுமா? லைக்கா முதலாளி தமிழகம் வருவாராம் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றால் எப்படி? அவர் ஆம் என எனக்கும் ராஜபக்சவுக்கும் தொடர்பு உள்ளது என ஒத்துக்கொள்வாரா?. நாளை லைக்கா முதலாளி தமிழகம் வந்து ராஜபக்வுடன் பல பில்லியன் வர்த்தகம் செய்கின்றேன், கத்தி படத்திற்காக நான் பல பில்லியன் வியாபாரத்தை ராஜபக்சவுடன் நிறுத்திக்கொள்கின்றேன் என அறிவிப்பாரா?

நீங்கள் லிபாராவிற்கு ஆதரவு அதனால்த்தான் இவ்வளவு எதிர்க்கீன்றீர்கள் என்கிறார்கள், நேர்மையானவர் என்றால் லிபாராவையும் சேர்த்து எதிர்க்க வேண்டும் என்கின்றார்கள்?!!! ஆனால் ஏன் லிபாராவை எதிர்க்க வேண்டும் என்ன ஆதாரம் உண்டு எனக் கேட்டால... அவர்களும் தொண்டு நிறுவனம் வைத்து உதவுகின்றார்கள்தானே அது மட்டும் சிங்கள அரசின் ஆதரவு இல்லாமல் முடியுமா என கேட்கின்றார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் பலர், தனிப்பட்ட ரீதியாகவும், அமைப்புகள் ரீதியாகவும் பல தொண்டு நிறுவனங்களை நிறுவி அங்குள்ள மக்களுக்கு உதவுகின்றார்கள். அவர்கள் அனைவரையும் ராஜபக்சவுடன் தொடர்பு உள்ளது என கூற முடியுமா? லைக்காவே....லிபாராவோ அங்கு வைத்துள்ள தொண்டு நிறுவனங்களைப் பற்றியது அல்ல பிரச்சனை. யார் சிங்கள அரசை, அனைத்து நாடுகளிலும், அனைத்து நிகழ்வுகளிலும், தமிழர்கள் எதிர்த்த புறக்கணித்த விடயங்களுக்கு எதிராக ஆதரவு வழங்கி சிங்கள அரசுடன் கைகோர்த்து யார் வியாபாரம் செய்கின்றார்கள் என்பதுதான் பிரச்சனை.

லைக்காவை ஈடாக லிபாராவும் சிங்கள அரசுடன் வியாபாரம் செய்கின்றது, சிங்கள அரசின் சுதந்திரதினம் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்குகின்றது, என ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டது போல், போதும் போதும் என சொல்லும் அளவுக்கு ஆதாரங்களை வெளியிடுங்கள் லிபாராவையும் எதிர்ப்போம்.

நாம் இதே லிபாராவை பிரித்தானியாவில் ( சென்ற மார்ச் மாதம் 2014) எதிர்த்து போராடி வெற்றியும் பெற்றவர்கள் என்பதை இலகுவில் மறந்து அல்லது மறைத்து விடுகின்றார்கள்.

இலங்கை சார்பாக லைக்கா ஊடாக பணம் பெற்ற பின்புதான் பிரித்தானியா பிரதமர் இலங்கை மாநாட்டுக்குச் சொன்றார் என்று பிரித்தானியா பாராளுமன்றத்திலேயே பெரும் பிரச்சனை வெடித்தது இதையெல்லாம் லைக்காவை ஆதரிக்கும் எவரும் அறிந்திருக்கவில்லையா?

அதைவிடுத்து இவ்வளவு ஆதாரங்கள் லைக்காவுக்கு எதிராக வந்தபின்பும் அதை வெளியிட எவரும் தயாராக இல்லை மாறாக போராடும் எங்கள் மீது அநீதியாக குற்றம் சுமத்துவது அசிங்கத்தின் உச்சமே. உலக விபரங்கள் அறிந்த வயதில் இருந்தே எமது போராட்டம் பற்றியும் எதை எதிர்க்க வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என நன்கு அறிந்தவர்கள் நாம். இதற்கு மட்டும்தான் நாம் போராடுகின்றோமா? நாம் எதற்கெல்லாம் போராடினோம், போராடிக்கொண்டிருக்கின்றோம் என உலகம் அறியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாவிடம் காசு வாங்கி கூலிக்கு மாரடித ஆள் இந்தியாவில் காசு கொடுத்தா எல்லாம் நடக்கும் அதுக்கு ஆதரவு தேவையில்லை பணம் போதும் இசை .

இதிலிருந்து ஜெயா சுய சிந்தனை அற்றவர் என்று தெரிகிறது. :huh: மக்கள் ஆதரவு இல்லாத சீமானுக்கு ஏன் பணம் கொடுத்தார்? ஒருவேளை வருமான வரித்துறைக்கு கணக்குக் காட்டுறதுக்கா இருக்குமோ.. :unsure: இருக்கும்.. இருக்கும்.. :D

நன்றி ஐயா உங்கள் அரசியல் பார்வைக்கு .....................
 
உண்மையில் எதிர்ப்போம் அனைவரையும் எதிர்ப்போம் ,இன்னும் கொஞ்சநாட்களில் படம் பார்க்கும் ,அனைத்து மக்களையும் எதிர்ப்போம் ...இந்தப்படத்தில் நடிக்கும் அனைவரையும் எதிர்ப்போம் ..........இந்தப்படத்தை தயாரித்த தமிழக மக்களை எதிர்ப்போம் ........அதற்கு மேல் சீமானை எதிர்த்து ஓட ஓட விரட்டுவோம் ..............எமக்கு யாரும்  தேவை இல்லை ......ஒரு கணணி இருந்தால் போதும் .............எம் இலக்கை அடைய ,,,,,,,,,, :(
 
இந்த இடத்தில் மீண்டும் என் தேசியத்தலைவரின் சிந்தனைகளையும் ,அவருடன் இருந்த தெளிவான ,தூரப்பார்வை நோக்கிய அறிஞ்சர்களை தேடுகிறேன் ...............ஏனனில் அந்த இடைவெளியை நிரப்ப இங்கே இன்னும் யாரையும் நான் காணாதபடியினால்.

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

இங்கே சீமான் சொல்லும் விடயங்கள் தவறாக இருக்கும் போது அவற்றைச் சுட்டிக் காட்டுவது, அவரை எதிர்ப்பதாகாது. புலமும், தமிழ் நாடும் சேர்ந்து ஒரே நோக்கில் இயங்க வேண்டும் என்னும் நோக்கத்தில் இருந்தே இந்த விமரிசனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

சீமான் ஆட்ச்சியைப் பிடித்த பின் என்ன செய்யப் போகிறார் என்பதை தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் செயலலிதா அம்மையாரால் செய்ய முடியாத எதை இவர்  எப்படிச் செய்ய்யப் போகிறார் என்று தெளிவு படுத்த வேண்டும். மேலும் ராகபசவுடன் கூட்டணி வைக்கும் எவரையும் தமிழத் தேசிய விடுதலையை முன் நிறுத்தும் எவரும் எதிர்க்க வேண்டும். இவற்றில் இருந்து தான் ஒருவரின் உண்மையான நோக்கத்தை நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

மேலும் மேலே எழுதியது, முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது பிரித்தானியாவில் பல நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த்த பரமேஸ்வரன் நான் அல்ல. ஆகவே முன் வைக்கும் கருத்துக்களுக்கு பதில் சொல்லாமால் இணையப் போராளி போன்ற பட்டங்களை முன் வைக்காமால் , கருத்தை கருத்தாகப் பாருங்கள்.

சீமான் விடும் பிழைகளை திருத்தி, தனது போராட்டப் பாதையை, தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக விளக்குவார் ஆகின் அவருக்கு ஆதரவு தர தமிழத் தேசியத்தை நேசிக்கும் எவரும் பின் நிற்கப் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ ஐயா பாஜகவுடன் கூட்டணி..

சு. சாமி (பாஜக) மகிந்தருடன் கூட்டணி.. ஆகவே,

வைகோ ஐயா மகிந்தருடன் கூட்டணி.. :o

- சீமான் எதிர்ப்பாளர்களின் தேற்றம்.

:D

அடப்பாவி :lol:

நானும் வைக்கோவின் தம்பி

அப்போ

நான்......??? :D

இதிலிருந்து ஜெயா சுய சிந்தனை அற்றவர் என்று தெரிகிறது. :huh: மக்கள் ஆதரவு இல்லாத சீமானுக்கு ஏன் பணம் கொடுத்தார்? ஒருவேளை வருமான வரித்துறைக்கு கணக்குக் காட்டுறதுக்கா இருக்குமோ.. :unsure: இருக்கும்.. இருக்கும்.. :D

அண்ணே ஓட்டுக்கு பணம் கொடுக்க நாலு அல்லக்கை வேணும் இதுகூட தெரியாமல் என்ன அரசியல் பேசி நீங்க எப்ப அரசியல்வாதி ஆகி ஆ .. :icon_idea:

அண்ணே இங்கு கருத்தை சொல்பவர் அதே கருத்தில் நின்றும் நிக்கிறார் ஆனால் அவர்கள் அப்படி இல்லை சந்தர்ப்பம் பார்த்து மாறி மாறி அரசியலுக்கு பேசுவது நல்லது அல்லா எதிரியை விட துரோகி ஆபத்தானவன் .

இது எல்லாம் விளங்கும் அளவிற்கு சட்டியில் இல்லை   :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே ஓட்டுக்கு பணம் கொடுக்க நாலு அல்லக்கை வேணும் இதுகூட தெரியாமல் என்ன அரசியல் பேசி நீங்க எப்ப அரசியல்வாதி ஆகி ஆ .. :icon_idea:

R6GiF.jpg

  • தொடங்கியவர்

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகனின் அரசியலில் நேர்மை இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே ஓட்டுக்கு பணம் கொடுக்க நாலு அல்லக்கை வேணும் இதுகூட தெரியாமல் என்ன அரசியல் பேசி நீங்க எப்ப அரசியல்வாதி ஆகி ஆ .. :icon_idea:

உண்மை.. ஜெயா கட்சியில் ஆட்கள் இல்லைதானே.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.. ஜெயா கட்சியில் ஆட்கள் இல்லைதானே.. :wub:

நமது கண்ணுக்கு குத்தும் அளவுக்கு வளர்ச்சி  இல்லையே.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம் சீமானின் மைக் பிடிப்பால் தான் தமிழகத்தில் எல்லோரும் எழுச்சி கண்டிருக்கினம் இதை நான் வழி மொழிகிறேன்

66498a3ff116afd585f97bc96c3ff684

இந்த  கொழுப்பெடுத்த குணத்தாலைதான் தமிழனை உலகம் எல்லாம் சேர்ந்து அடிச்சது... !!    சிங்களவனிட்டை இருந்து இதுகள் எதையும் கற்றுக்கொள்ள போவதும் இல்லை... 

நட்பு எண்டு யாரையும் வைச்சிருக்க தெரியாது....!!   அப்பிடி  தானாக வாறவனிலையும் வந்து உதவுகிறவனிலையும்  நொட்டை ...   

இலங்கை பொருளாதாரத்தை கையிலை எடுக்க வேணும் எண்டு எல்லாருக்கும்  ஆசை ...    ஆனால் அதை செய்ய கூடியவனை அடிச்சு துரத்தி எதிரி கூடாரத்துக்கை  நிரந்தரமாக  சேர்க்கிற அடி முட்டாள் தனம்... 

இப்படி ஒரு இனம் அழிஞ்சு போனால் என்ன வாழ்ந்தால் தான் என்ன....??   இப்படியே போனால் யாரும் சீண்டக்கூடாத இனமாக இந்த கேடு கெட்ட தமிழ் இனம் மட்டும் தான் இருக்கும்... 

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தயாண்ணா எங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எது செய்தாலும் அவர்களை அரவணைத்துப் போக வேண்டும். இதே வேண்டப்படாதவர்கள் என்டால் துரோகிப் பட்டம் கொடுத்து மண்டையில் போடுவோம் இல்லையா?

என்ன ரதி தயா அண்ணை என்று விழித்து நீங்கள் எழுதிய கருத்து இந்த உலகத்தில் வாழும் அனைத்து மனிதருக்கும் பொருந்தும்.

ஓம் தயாண்ணா எங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எது செய்தாலும் அவர்களை அரவணைத்துப் போக வேண்டும். இதே வேண்டப்படாதவர்கள் என்டால் துரோகிப் பட்டம் கொடுத்து மண்டையில் போடுவோம் இல்லையா?

துரோகிகள் எண்டு லைக்காவை நீங்கள் எல்லாம் சொல்லும் அளவுக்கு  என்ன தவறு செய்தது சீமான்  அதை கண்டிக்க என்பதை மட்டும் சொல்லுங்கள்  உங்கள் வியாக்கியானங்களுக்கு நான் பதில் தருகிறேன்... 

மற்றது வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பது அவர்களின் நடத்தை சம்பந்த பட்டது... !!    இதில்  வேண்டாதவர்கள் என்ன தவறு செய்தார்கள் எனும் அடிப்படையிலையே  துரோகியா இல்லை  தியாகியா என்பது தீர்மானிக்க படும்... 

நான் யாரையும் தியாகி எண்று சொல்லவில்லை...   சீமான் உட்பட ...   !!  

வழமையான  உங்களின் கனவு கண்ட விடயத்துக்காக எல்லாம் நான் பதில் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்... 

நான் எங்கே லைக்காவுக்கு துரோகிப் பட்டம் கட்டினேன்?...சீமானையும் துரோகி எனச் சொல்லவில்லை சந்தர்ப்பவாதி என்று தான் சொன்னேன்.உங்களிடம் எனக்குரிய பதில் இல்லை எனச் சொல்கிறீர்கள்.மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  கொழுப்பெடுத்த குணத்தாலைதான் தமிழனை உலகம் எல்லாம் சேர்ந்து அடிச்சது... !!    சிங்களவனிட்டை இருந்து இதுகள் எதையும் கற்றுக்கொள்ள போவதும் இல்லை... 

நட்பு எண்டு யாரையும் வைச்சிருக்க தெரியாது....!!   அப்பிடி  தானாக வாறவனிலையும் வந்து உதவுகிறவனிலையும்  நொட்டை ...   

இலங்கை பொருளாதாரத்தை கையிலை எடுக்க வேணும் எண்டு எல்லாருக்கும்  ஆசை ...    ஆனால் அதை செய்ய கூடியவனை அடிச்சு துரத்தி எதிரி கூடாரத்துக்கை  நிரந்தரமாக  சேர்க்கிற அடி முட்டாள் தனம்... 

இப்படி ஒரு இனம் அழிஞ்சு போனால் என்ன வாழ்ந்தால் தான் என்ன....??   இப்படியே போனால் யாரும் சீண்டக்கூடாத இனமாக இந்த கேடு கெட்ட தமிழ் இனம் மட்டும் தான் இருக்கும்... 

தயா பச்சை முடிந்து விட்டது.

  • தொடங்கியவர்

மேலே நாம் தமிழர் சார்பாக பேசியவர் சொன்ன பொய்கள்<

லாயிக்கா கமரூனை யாழ்ப்பானாம் கூட்டிச் சென்றாது என்பது. இது முழுப் பொய், இங்கிலாந்தில் பல தமிழ் அமைப்புக்களூம் ஊடகங்களூம் ஏற்படுத்திய அழுத்தமே காரணாம். 

ராஜபக்சவுக்கும் லைக்காவுக்குமான வியாபரத் தொடர்பு ஆதரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றூ.

லைக்கா நிரூவனம் சிரீளங்கன் விமானச் சேவைக்கான இலண்டன் முகவராக இருக்கிறார்.

இலங்கை இராணூவப் பாதுகாப்பில் சிறீலங்கா இராணூவ விமானத்தில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது, சாதாரணாமாக அங்கு சென்ற எலோருக்குமே தெரியும்.

யாழ்க் களாத்தில் சீமானை  ஆதரிப்போர் இவ்வாறான பொய்களாஇ ஆதரிக்கிறீர்களா? இதில் ஒரு சதி இருப்பதை நீங்கள் உணரவில்லையா?

 இலங்கைப் பொருளாதரத்தைக் கையிலெடுப்பதை எந்தச் சிங்களா அரசும் ஆதரிக்கப் போவதில்லை.அது நடைபெறாப்போவதும் இல்லை. ராகபக்ச குடும்பமே அதனைக் கையில் வைத்திருக்கும்.

இதனைத் தானே டக்கிலாசும் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். நாம் அரசுடன் கூட இருந்து அபிவிருத்தி செய்வோம் என்றூ. அவரால் முடிந்ததா? அவரை எதிர்க்கும் நீங்கள் லைக்கா சுபாஸ்கரன் சொல்வதை ஆதரிப்பது எதனால்?   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.