Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லூரில் காவல்துறை குவிப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சனி, ஆகஸ்ட் 23, 2014 - 22:07 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் 
 

நல்லூரில் காவல்துறை குவிப்பு!!

 

nallur%20temple%20police.png
நல்லார்க்கந்தன் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா தினங்களில் ஐந்நூறிற்கும் அதிகமான காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக  யாழ். மாவட்டப் பிரதி காவல்துறை அதிபர் றொகான் டயஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

நல்லூர்க் கந்தன் ஆலய வருடதந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்று வருகின்றது. இதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்து புலம்பெயர்ந்திருக்கின்ற பலரும் என பெருமளவான அடியவர்கள் நாளாந்தம் வருகை தருகின்றனர்.

இதனால் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியக்களைத் தவிர்க்கும் பொருட்டும் பொது மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பொருட்டும் ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு அமைய இலங்கை காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நாளையதினம் இடம்பெறவுள்ள தேர்த்திருவிழாவிற்கும் நாளை மறுதினம் இடம்பெறும் தீர்த்தத்திருவிழாவிற்கும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/33382/57//d,article_full.aspx
  • Replies 102
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் நிர்வாக காலத்தில்.. பாடசாலை மாணவ சாரணர்களும்.. லயன்ஸ்.. றோட்டறிக்கழகம்... சென் ஜோன் அம்புலன்ஸ்.. போன்றனவும் தானே பொதுமக்களுக்கு.. பாதுகாப்பு வழங்கின. புலிகளோ.. தமிழீழ காவல்துறையோ.. உள்ள வருவதில்லையே. இப்ப எதுக்கு..இவை.. கோவில் வாசல் வரை..????! :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ காவல்துறை முன்னுக்கு ஒரு அலுவலகம் வச்சிருப்பினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கர் சொன்னது போல சாரணர்படையின் சேவைகள் சொல்லில் அடங்காது. காவல் துறையென்றால் மக்களுக்கு சுதந்திரமின்றி பயமே ஏற்படும் .

  • கருத்துக்கள உறவுகள்

உள் வீதி வெளி வீதி எங்கும் தமிழீழ காவல் துறை நின்ஐடத நெடுக்கு மறந்திட்டார். கோழி பிடிக்கிறவையைப பிடிக்க நின்ட காவல்துறையே கோழி பிடித்த சம்பவமும் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மீராவின் எழுத்து நடையை பார்க்க இது பெண்பிள்ளை எழுதுவது போல்இல்லை. ஒரு தமிழ் பெண் இப்படி எழுதமாட்டார். Another example is in the topic http://www.yarl.com/forum3/index.php?showtopic=144784, where she used an example, which won't be used in a conversation by a girl, especially in the open forum.

  • கருத்துக்கள உறவுகள்

ராகா மீராவின்ற பாலின அடையாளம் பற்றி நமக்கென்னப்பு கவலை. தலைப்பை ஒட்டி கருத்தப் பதியும்.

காபூலில் தலிபான் கொடுங்கோன்மையின் போது களவு பயம் இல்லை. ஆனால் எதேச்சதிகாரம் தலைவிரித்தாடியது(1995-2001)

யாழில் புலிகளின் காட்டுத்தர்பார் நடந்தபோதும் அப்படியே.

காபூலுக்கு அமெரிக்கர்கள் போனபின் (2001-20014) களவு crime rate எல்லாம் வெகுவாக கூடின ஆனால் எதேசதிகாரம் இல்லாமல் இருந்தது.

யாழிலும் 2009 ற்க்குப் பின் அப்படியே.

ஹிட்லர் ஆகட்டும், போல்பொட் ஆகட்டும், இடி அமீன் ஆகட்டும், முல்லா ஓமர் ஆகட்டும், சதாம் ஆகட்டும், கடாபி ஆகட்டும்,பிரபாகரன் ஆகட்டும் - சர்வாதிகாரிகளின் ஆட்சியில் குற்றங்கள் எப்போதும் குறைவு காரணம் அவர்கள் குற்றவாளிகள் உட்பட்ட மொத்த சனத்தொகையையுமே இரும்பு பிடியில் வைத்து அடக்குமுறை செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனத்திற்கு dictatorship தான் சரி.... இது ....Iraq இற்கும் பொருந்தும்.

மீராவின் issues இல், அவர் தன்னை பெண் என்று அடையாளபடுத்தியுள்ளார், ஆனால் அது உண்மை எனப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயயமாக இல்லை. பெரும் அறிஞர்களையும், ஜனநாயகவாதிகளையும், தொழிற்சங்க வாதிகளையும் கொண்டு ஒரு பன்முகப்பட்ட சமூகமாயிந்தவர்கள் நாங்கள். சாதியம் தவிர வேறு பெரிய social ills எதுவும் இல்லாமல் இருந்தோம்.

எம்மீது திணிக்கப்பட்ட இன அடக்குமுறையும் அதற்கு பதிலாக எம் இளைஞர்கள் கட்டாகாலிகள் போல் ஆயுதப்போரை நடத்தியதும்மே இன்று எம்மை ஒரு வன்முறை மயப்பட்ட, பின்னோக்கிய (brutalised backward looking) சமூகமாக காட்டுகிறது.

இதிலிருந்து நாம் மீண்டு ஒரு ஜனநாயக மறு மலர்ச்சியை காணவேண்டும். சர்வாதிகாரம் எதிர்திசையிலே கொண்டுபோகும்.

பெரும் அறிஞர்களையும் தொழிற்சங்கவாதிகளையும், ஜனநாயகவாதிகளையும் கொண்ட தமிழினம் ஆங்கில ஆட்சியில் இருந்த தமக்கு  செல்வாக்கை கூட பயன்படுத்தத் தெரியாது  முட்டாள்தனமாக  எதிரியிடம் தனது சுதந்திரத்தை பறிகொடுத்துமல்லாது அதன் பின்னர் சிங்கள ஆட்சியில்  எம்மீது திணிக்கபட்ட இன அடுக்குமுறையை  ராஜதந்திர ஜனநாயக வழிமுறையூடாக கையாளவும் தெரியாமல்  தாம் சுயமாக   அர்பணிப்புகள் தியாகம் செய்யும் உண்மையான  அகிம்ஸ்சை போராட்ட  மனப்பாங்கும் இல்லாத சுயநலவாதிகளாக இளைஞர்களை உணர்ச்சியூட்டி ஆயுத போராட்ட விதையை விதைத்ததுடன்,  அவர்களின் தியாகத்தில் பதவிச்சுகம் காண விழைந்தத்துமல்லாது, இளைஞர்களை உணர்ச்சியூட்டும் போது அதனால்  எதிர்காலத்தில் ஏற்படப்போகும்  பாதகவிளைவுகளை கூட அறியாத அரசியல் பேதைகளாக இருந்தனர்.

 

உண்மையான தியாகத்துடன் போராடி தமது உயிர்களை அர்பணித்த அனைத்து இயக்க போராளிகளும் கட்டாக்காலிகள் என்றால் அந்த பெரும் அறிஞர்களான  சுயநல அரசியல் வாதிகளை எப்படி அழைப்பது?

 

 

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

உள் வீதி வெளி வீதி எங்கும் தமிழீழ காவல் துறை நின்ஐடத நெடுக்கு மறந்திட்டார். கோழி பிடிக்கிறவையைப பிடிக்க நின்ட காவல்துறையே கோழி பிடித்த சம்பவமும் நடந்தது.

 

கூட்ட நெரிசல்களை சாரணர்களும் இதர தொண்டர் அமைப்புக்களும் கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும்.. காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டால் அவர்கள் அவற்றை ஒழுங்கு படுத்த வருவார்கள். மற்றும்படி.. தொண்டர் அமைப்புக்கள் தான்.. பெரிதும் பணியில் இருந்தன.

 

அவசர உதவிகளுக்காக ஓர் அலுவலகத்தை மட்டும் காவல்துறையினர் பருத்தித்துறைவீதியில் அமைத்திருந்தனர்..!

 

நீங்கள்.. தவறான அனுபவங்களைக் கொண்டு.. தவறாக ஒட்டுமொத்த மக்களையும் நிகழ்வுகளையும்.. அடையாளம் காட்டுகிறீர்கள் என்று நினைக்கிறோம். :)

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ராகா மீராவின்ற பாலின அடையாளம் பற்றி நமக்கென்னப்பு கவலை. தலைப்பை ஒட்டி கருத்தப் பதியும்.

காபூலில் தலிபான் கொடுங்கோன்மையின் போது களவு பயம் இல்லை. ஆனால் எதேச்சதிகாரம் தலைவிரித்தாடியது(1995-2001)

யாழில் புலிகளின் காட்டுத்தர்பார் நடந்தபோதும் அப்படியே.

காபூலுக்கு அமெரிக்கர்கள் போனபின் (2001-20014) களவு crime rate எல்லாம் வெகுவாக கூடின ஆனால் எதேசதிகாரம் இல்லாமல் இருந்தது.

யாழிலும் 2009 ற்க்குப் பின் அப்படியே.

ஹிட்லர் ஆகட்டும், போல்பொட் ஆகட்டும், இடி அமீன் ஆகட்டும், முல்லா ஓமர் ஆகட்டும், சதாம் ஆகட்டும், கடாபி ஆகட்டும்,பிரபாகரன் ஆகட்டும் - சர்வாதிகாரிகளின் ஆட்சியில் குற்றங்கள் எப்போதும் குறைவு காரணம் அவர்கள் குற்றவாளிகள் உட்பட்ட மொத்த சனத்தொகையையுமே இரும்பு பிடியில் வைத்து அடக்குமுறை செய்வார்கள்.

 

இவர் யாழில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அங்கு வாழவில்லைப் போலும்.

 

யாழ் விடுதலைப்புலிகளிடம் இருந்த காலத்தில்.. காவலரண்கள் கிடையாது. வீதிச் சோதனைகள் கிடையாது. முழத்துக்கு முழம்.. பொலிஸ் கிடையாது. அடையாள அட்டை கிடையாது. யாரும் எங்கும் எப்போதும் போய் வரலாம். முறைப்பாடுகள் தொடர்பில் துரித நடவடிக்கை..!

 

அன்றைய காலத்தில்.. வெளியான குற்றவியல் தரவுகளின் படி.. மிகக் குறைந்த குற்றங்கள்.

 

மேலும்.. பொது நிகழ்வுகளில் அதிகம் தொண்டர் அமைப்புக்கள் கலந்து கொண்டன.

 

மக்கள்.. சுதந்திரமாக நடமாடும் உரிமையைக் கொண்டிருந்தார்கள். தென்பகுதிக்கு போய் வருபவர்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு மற்றும் குடிபெயர்வு வரவுக் கட்டுப்பாடுகள் இருந்தன.

 

பிரிட்டனிலும்.. இதே தான். பிரிட்டனில் கூடிய அளவுக்கு தொண்டர் சேவைகள் தான் பொது நிகழ்வுகளில்.. மக்களை கட்டுப்படுத்துகின்றன. காவல்துறை பிரதான பாதுகாப்பில் மட்டும் தான் ஈடுபடும்.

 

இதனை எல்லாம் காட்டுத்தர்ப்பார் என்றால்.. அவர்களுக்கு எது காட்டுத்தர்ப்பார்.. எது மக்கள் தர்ப்பார் என்ற விளக்கக் குறைவின் பிரச்சனையே அன்றி.. புலிகளது சுதந்திர நிர்வாகப் பிரச்சனை அதுவல்ல..! :icon_idea::)

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அர்பணிப்பு தியாக சிந்தை இருந்தும் இடம் பொருள் ஏவல் தெரியாமல், எதிரியுடன் மட்டுமில்லை சக போராளிகளுடனுமே ஆயுதபாசை மட்டுமே பேசுவோம் என்று சகலதுக்கும் ஆயுதம் மூலம் விடை காணவிழைந்தவர்கள் கட்டாக்காலிகளே. குறிப்பாக ஆனந்தராஜா, ரஜனி திரணகம,ஞானச்சந்திரன் போன்ற அரசியல் சார்பற்ற சிவில் சமூகத்தினர் மீதும், அப்பாவி மாற்று குழு அடிநிலைப் போராளிகள் மீதும் வன்முறையை பிரயோகித்த்கவர்கள் கட்டாகாலிகளே.

சுதந்திரத்க்துக்கு பின்னான தலைவர்கள் முட்டாள்களாயும் சந்தர்ப்பவாதிகளாயும் இருந்தார்கள் என்பதற்க்காக நமக்கு ஜனநாயகமே சரிவராது, ஒருவரை துதிபாடும் சர்வாதிகாரமே ஏற்ப்பு என்பது, தலையிடிக்கு மருந்தாக பொலிடோல் குடிப்பது போன்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஜனநாயகத்தின் அடிப்படையே தெரியல்ல. பாவம். இவருக்கு வரதராஜப் பெருமாளை வைச்சு.. மண்டையன் குழு ஆட்சி நடத்துவதுதான் ஜனநாயகமாகத் தெரியும். அல்லது.. சிங்களப் படைகளை இருத்தி வைச்சு.. பெண்கள்.. குழந்தைகள்.. இளைஞர்களை அச்சத்தில்.. மன உளைச்சலில் வைத்திருந்து.. ஆட்சி செய்வதுதான் ஜனநாயகமாகத் தெரியும்.

 

அண்மையில்.. சிங்கள முதன்மை.. உளவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.. யுத்த காலத்தை விட வடக்குக் கிழக்கு மக்கள் இன்று இராணுவ பிரச்சன்னத்தால்.. மிகவும் மன உளைச்சலோடு.. பயத்தோடு வாழ்கிறார்கள்.. தற்கொலைகள் 20% அதிகரிப்பைக் கொண்டுள்ளன என்று. இதனை ஜி ரி வி.. அவரின் பேச்சின் காணொளியோடு அண்மையில் ஒளிபரப்பி இருந்தது.

 

சிலபேருக்கு தங்கட அறிதல் பற்றிய கவலை இன்றி.. மொட்டைக்.. கருத்துச் சொல்லி.... தங்களை யார் என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவ்வளவே...!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

அர்பணிப்பு தியாக சிந்தை இருந்தும் இடம் பொருள் ஏவல் தெரியாமல், எதிரியுடன் மட்டுமில்லை சக போராளிகளுடனுமே ஆயுதபாசை மட்டுமே பேசுவோம் என்று சகலதுக்கும் ஆயுதம் மூலம் விடை காணவிழைந்தவர்கள் கட்டாக்காலிகளே. குறிப்பாக ஆனந்தராஜா, ரஜனி திரணகம,ஞானச்சந்திரன் போன்ற அரசியல் சார்பற்ற சிவில் சமூகத்தினர் மீதும், அப்பாவி மாற்று குழு அடிநிலைப் போராளிகள் மீதும் வன்முறையை பிரயோகித்த்கவர்கள் கட்டாகாலிகளே.

சுதந்திரத்க்துக்கு பின்னான தலைவர்கள் முட்டாள்களாயும் சந்தர்ப்பவாதிகளாயும் இருந்தார்கள் என்பதற்க்காக நமக்கு ஜனநாயகமே சரிவராது, ஒருவரை துதிபாடும் சர்வாதிகாரமே ஏற்ப்பு என்பது, தலையிடிக்கு மருந்தாக பொலிடோல் குடிப்பது போன்றது.

 

 இனி ஜனநாயகம் எமக்கு சரிவராது என்று நான் மட்டுமல்ல இங்கு எவருமே கூறவில்லை. நீங்களாக கற்பனை செய்து அதற்கு நீங்களே பதிலளித்துள்ளீர்கள்  அர்பணிப்பு தியாக சிந்தினை உள்ளவர்கள்  என்று நீங்கள்  கூறிய போராளிகள் அனுபவமற்ற   இளைஞர்கள். அவர்கள் கட்டாக்காலிகள் என்றால் பல பல்கலைகழகங்களில் பயின்று முதுநிலை அறிவு பெற்றும் சுயநலத்துடன அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்காது செயற்பட்ட அந்த அறிஞர்கள் என்று உங்களால் அழைக்கபட்ட அறிவிலிகளை  எப்படி அழைப்பது என்று தான் கேட்டேன்.

 

நீங்கள் கூறிய ஒருவரை துதிபாடும் வழிமுறை ஜனநாயக அமைப்புகளிலும் உள்ளது. அதாவது ஜனநாயகம் என்ற முகமூடியுடன் சர்வாதிகாரம்.  யுத்தம் முடிந்து  ஐந்து வருடங்களாகியும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு ஜனநாயக கட்சியாக பதிந்து ஜனநாயக முறைப்படி பொதுக்குழு கூட்டி தீர்மானங்களை மேற்கொள்ள இதுவரை முடியாததது ஏன்?

 

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கட்டுப்பாடு ராணுவதர்பாரே, காட்டுத்தர்பாரே. பலவருடம் அவர்களின் காட்டாட்சியில் வாழ்ந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன்.

கந்தன் கருணை படுகொலையும், அதற்கு காரணமாவர் எந்த பொறுப்பான தண்டனையும் பெறாமல் சுதந்திரமாக திரிந்ததுமே போதும், அவர்களின் rule of law எப்படி என்பதை அறிய. இதுக்குள் யூகேயுடன் ஒப்பீடு வேற. மகாராணியார் கேட்டா நாக்க புடுங்கிகொண்டு சாவா :)

துல்பென் ராகா சர்வாதிகாரியே சரி என்று சொன்னதுக்குத்தான் நான் பதில் சொன்னேன்.

[quote name="goshan_che" post="1036317" timestamp="

துல்பென் ராகா சர்வாதிகாரியே சரி என்று சொன்னதுக்குத்தான் நான் பதில் சொன்னேன்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கந்தன்கருணைச் சம்பவத்துக்குப் பிறகு நாட்டுப் பக்கமே போனதில்லைப் போல. புலிகளின் முழுமையான நிர்வாகம்.. யாழ் கோட்டை வீழ்ச்சியின் பின்னர் தான் இருந்தது. அது 1990 களின் நடுவில் இருந்து 1995 வரை.

 

ஒட்டுக்குழுக்களற்ற அந்தக் காலத்தில் படுகொலைகள் என்று எதுவும் இடம்பெற்றதில்லை. ஒட்டுக்குழுக்கள் இருந்த காலத்தில் மட்டும் தான் படுகொலைகள். அதற்கு பெரிதும் காரணமாக ஒட்டுக்குழுக்களே இருந்தன. அவற்றிற்கு உபயம் அளித்த இராணுவங்களும் அதன் பின் இருந்து செயற்பட்டன என்பது உலகறிந்த விடயம்.

 

பிரிட்டன் மகாராணி ஒன்றும் கவலைப்பட மாட்டா. ஏனெனில்.. வட அயர்லாந்தில்.. பிரிட்டன் நடத்திய படுகொலை தர்ப்பார் பற்றி அவவுக்குத் தெரியும். அப்படியான ஒன்றைக் கூட புலிகள் நடத்தவில்லை. 1990 இல் இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு தோன்றிய சுதந்திரச் சூழல்.... 1995 சூரியக் கதிர் ஆக்கிரமிப்பு வரை தொடர்ந்தது. அது யாழ்ப்பாணத்தின் பொற் காலம் எனலாம்.

 

அதனை ஏற்றுக் கொள்ள முடியாத ஜீவன்களைப் பொறுத்த வரை இன்றைய சிங்கள இராணுவத் தர்ப்பார் ஜனநாயகமாகவும்.. நேற்றையது காட்டுத்தனமாகவும் இருப்பது வியப்பல்ல. அவங்க மூளை அப்படியா சிந்திக்க செய்யப்பட்டுள்ளது. ஒட்டுக்குழுக்களின் படுகொலை சித்தாந்த மூளையும் இதையே தான் சிந்திக்கிறது..! இதுவும் எம் மக்களுக்குப் புதிதல்ல..! எல்லாவற்றையும் எமது மக்கள் கடந்து வந்தே உள்ளனர்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாமல் சுதந்திரத்திற்காக போராடினார்கள் . :icon_mrgreen:

அரசு அடக்கினால் என்ன புலிகள் அடிக்கினால் என்ன அடக்குமுறை அடக்குமுறைதான் .

அரசை விட ஒரு படி மேலே போனதால் அழிய வேண்டி வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் நிர்வாக அமைப்பில் வாழாமல்.. வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு.. அங்கிருந்த சுதந்திரத்தைப் பற்றி சிங்கள இராணுவ அடக்குமுறை ஒட்டுக்குழு அடக்குமுறை நிர்வாக அமைப்புக்களோடு.. ஒப்பிட்டு.. கதைக்கினம் என்றால்.. அது முற்றிலும்.. ஒட்டுக்குழு இணையத்தளங்களில்  வெளியான புலி வாந்தி அடிப்படையில் தான் என்பது வெள்ளிடை மலை..!

 

புலிகளின் நிர்வாக சுதந்திரம் பற்றி.. அப்போதைய காலத்தில் இந்திய ஊடகங்களே வியந்து பாராட்டி இருந்தன. காந்தி கண்ட பெண் சுதந்திரம் கூட அங்கு நிகழ்வில் இருப்பதாக பிரபல இந்திய பெண் ஊடகவியலாளர் குறிப்பிட்டிருந்தார். பிபிசி தமிழோசையை சேர்ந்த பெண் ஊடகவியலாளர்களும் அப்போது விஜயம் செய்து யாழ்ப்பாண நிர்வாகம் பற்றி புகழ்ந்திருந்தார்கள்.

 

அதுமட்டுமன்றி வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் கூட யாழிற்கு அடிக்கடி விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பிட்டு குறைகள் இன்றிய நிர்வாக முறைமை குறித்து திருப்தி வெளியிட்டு வந்தார்கள். இன்று.. வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை இராணுவமே வரவேற்கிறது.. இராணுவமே அழைத்தும் செல்கிறது. அன்று.. சிவில் அதிகாரிகளே அதனை மேற்கொண்டதோடு மதத் தலைவர்கள் குறிப்பாக ஆயர்கள் அதிகம் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இன்று..????! ஆயர்கள் கைது செய்யப்பட சொல்லப்படுகிறார்கள். மன்னார் ஆயர் அன்று மாவட்ட நிலைமைகளை வெகு சுதந்திரமாக விளக்க முடிந்தது. யாழ் ஆயர் சுதந்திரமாக செயற்பட முடிந்திருந்தது..! இன்று.. அவர்களின் அறிக்கை கூட இராணுவத்தின் பார்வைக்கு போக வேண்டிய சூழல்..???!  இந்த சிங்கள அடக்குமுறை தான் சிலருக்கு நல்ல தர்ப்பார். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாமல் சுதந்திரத்திற்காக போராடினார்கள் . :icon_mrgreen:

அரசு அடக்கினால் என்ன புலிகள் அடிக்கினால் என்ன அடக்குமுறை அடக்குமுறைதான் .

அரசை விட ஒரு படி மேலே போனதால் அழிய வேண்டி வந்தது .

நீங்களும் (plot) அழிந்து தானே போனீர்கள், ஏன் அளவுக்கதிகமான அடக்குமுறையை பாவித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு செய்தியை ஒழுங்காக வாசியுங்கள். தேர் தீர்த்தம்ஆகியவற்றை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தின் வேண்டுகோளினாலேயே வந்தார்கள். தமிழீழ காவல்துறையும் சன நெருக்கடிகளின் போதே நின்றார்கள். சும்மா நின்று இலையான் கலைத்ததாக நான் எழுதவில்லை.

விட்டா பில் கிளிண்டனும் யாழ்ப்பாணத்தை வந்து பார்த்திட்டு அமெரிக்காவை ஈழம் போல் மாற்ற வேண்டும் என்று சொன்னார் எண்டு சொன்னாலும் சொல்லுவாங்க‌ :lol: 
 
பொற்கால ஊரை விட்டிட்டு இவ்வளவ சனம் ஏன் வெளிநாட்டுக்கு ஓடினதுகளோ தெரியாது..புலிகளும் அந்த பாஸ் இந்த பாஸ் எண்டு மக்கள் ஊரை விட்டு போக விடாம ஏன் அவ்வளவு கெடுபிடிகளை போட்டார்களென்றும் தெரியேல‌  :wub:  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

கூட்ட நெரிசல்களை சாரணர்களும் இதர தொண்டர் அமைப்புக்களும் கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும்.. காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டால் அவர்கள் அவற்றை ஒழுங்கு படுத்த வருவார்கள். மற்றும்படி.. தொண்டர் அமைப்புக்கள் தான்.. பெரிதும் பணியில் இருந்தன.

 

அவசர உதவிகளுக்காக ஓர் அலுவலகத்தை மட்டும் காவல்துறையினர் பருத்தித்துறைவீதியில் அமைத்திருந்தனர்..!

 

நீங்கள்.. தவறான அனுபவங்களைக் கொண்டு.. தவறாக ஒட்டுமொத்த மக்களையும் நிகழ்வுகளையும்.. அடையாளம் காட்டுகிறீர்கள் என்று நினைக்கிறோம். :)

 

மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றுதான் மாவீரர்கள் தமது இன்னுயிரை ஈர்ந்தார்கள்.
 
இப்படி இல்லததுகளை எழுதி ஒரு கூட்டம் சந்தோசம் அடைகிறது என்றால். அவர்களை அப்படி மகிழ்ச்சியாக இருக்க விடுவதே நல்லது.
 
ஏன் குறுக்கே நின்று நீங்கள் உங்கள் நேரத்தை வீண் ஆக்குகிறீர்கள்???
 
இன்னொருவர் மரம் தெரியாதவர்களுக்கு முக்கி முக்கி இலை புடுங்கி காட்டுகிறார். பார்த்து ரசிச்சிட்டு போகவேண்டியதுதானே.
சிங்களவனின் கக்கூசுக்குள் தாங்கள்தான் வாழ்ந்தார்கள் என்றால். யாழ்ப்பாணம் அடுத்தவனுக்கும் தெரியாது என்ற பூனை நினனைப்பை ஏன் கெடுக்கிறீர்கள்? 
  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

 

Please come out from tiger syndrome! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.