Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வரும் அமைச்சர் பஸிலும் சர்வதேச விளையாட்டரங்குக்கு அடிக்கல்! இணைந்து நட்டுவைத்தனர்

Featured Replies

 
 
turaappa%20555544113.jpg
 
 
யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தை சர்வதேச அரங்காகப் புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னோஸ்வரன், இந்தியத் துணைத் தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு விளையாட்டு அரங்குக்கான அடிக்கல்லை நட்டுவைத்தனர்.
 
இலங்கை - இந்திய நட்புறவின் கீழ், இந்திய அரசாங்கமும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து 145 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை புனரமைப்பு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
turaappa%20555544112.jpg
 
http://malarum.com/article/tam/2014/08/27/4906/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.html#sthash.U4Tjh7WH.dpuf
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த சர்வதேச விளையாட்டு அரங்கை கிளிநொச்சியிலோ.. இல்ல மல்லாவியிலோ அமைக்கக் கூடாது. அங்கிருந்தும் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் பெருகும் தானே. இருக்கிறதை ஏலவே செலவழித்ததை.. இன்னும்.. செப்பனிடுவதிலும்.. இல்லாத இடத்தில் ஒன்றை புதிதாக.. அமைக்கலாமே. யாரின் கூட்டிறவோ.. மக்களின் பணம் தானே..!!! ஏன் அதை வீணாக.. அரசியல் மயப்படுத்தி.. அநியாயச் செலவு செய்யனும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

2(3659).jpg
-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன் 

இந்திய - இலங்கை நட்புறவின் கீழ், இந்திய, இலங்கை அரசாங்கங்களின் 275 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட அச்சுவேலிக் கைத்தொழிற்பேட்டை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால்  இன்று புதன்கிழமை (27) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 
1(6763).jpg

 

photo%201(11).JPG

 

photo%202(15).JPG

 

photo%205(10).JPG

 

2(3660).jpg

http://tamil.dailymirror.lk/--main/124194-2014-08-27-08-21-34.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த சர்வதேச விளையாட்டு அரங்கை கிளிநொச்சியிலோ.. இல்ல மல்லாவியிலோ அமைக்கக் கூடாது. இருக்கிறதை செப்பனிடுவதிலும்.. இல்லாத இடத்தில் ஒன்றை புதிதாக.. அமைக்கலாமே. யாரின் கூட்டிறவோ.. மக்களின் பணம் தானே..!!! ஏன் அதை வீணாக.. அரசியல் மயப்படுத்தி.. அநியாயச் செலவு செய்யனும்..! :icon_idea:

 

உண்மைதான் நெடுக்ஸ்....

துரையப்பா விளையாட்டரங்கு குறுகிய இடத்தை கொண்டது. இங்கு சர்வதேச நடைமுறைப்படி விளையாட்டரங்கை மாற்ற போதிய இட வசதி இல்லை.

செய்வதை... ஒழுங்காக செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்ஸ்....

துரையப்பா விளையாட்டரங்கு குறுகிய இடத்தை கொண்டது. இங்கு சர்வதேச நடைமுறைப்படி விளையாட்டரங்கை மாற்ற போதிய இட வசதி இல்லை.

செய்வதை... ஒழுங்காக செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

 

 

நான் நினைக்கின்றேன்

அப்படியே  யாழ்ப்பாண நகரை வேறு எங்கோ மாற்றப்போகின்றார்கள்

சிங்களவனா  கொக்கா..?

ஒரு அடியில் பல மாங்காய் :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுவேலியில் எதுக்கு..??! பலாலியை அண்மித்த சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கு வேலை வழங்கவா..??!

 

அச்சுவேலியில் ஒரு தொழில்பேட்டையை அமைத்து.. மூலப் பொருட்களையும்.. உற்பத்திகளையும்.. காவிச் செல்லும் செலவை கணக்கிட்டால்... அதே தொழிற்பேட்டையை பருத்தித்துறையில் அல்லது முல்லைத்தீவில்.. அமைத்தால்.. பல செலவீனங்களை மீதப்படுத்தலாம்.

 

இந்த தொழில்பேட்டைகளுக்கான திட்டமிடல்கள்.. வடக்கு மாகாண சபையிடம் இருந்தா பெறப்படுகின்றன. அல்லது.. அவர்கள் ஒரு அடையாளத்துக்கு அங்கு நிற்கிறார்களா..?????????! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொழில்பேட்டைகளுக்கான திட்டமிடல்கள்.. வடக்கு மாகாண சபையிடம் இருந்தா பெறப்படுகின்றன. அல்லது.. அவர்கள் ஒரு அடையாளத்துக்கு அங்கு நிற்கிறார்களா..?????????! :icon_idea::rolleyes:

 

இந்தியாவிடம் இருந்து பெறப்படுகின்றது போல தெரிகின்றது.....யாழ்ப்பாணத்திற்கு இந்தியா கொச்சிப்பாதை போடுது,விளையாட்டு மைதானம் கொடுக்குது,வேலை தருது.,துணை தூதர் போட்டிருக்குது...... இந்தியா எல்லாம் செய்யுது......ஐ.நா சபையில் மட்டும் கொழும்புக்கு கை கொடுக்கும்.....கொழும்புக்கு தேவைப்படும் முக்கிய் கை அது....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் இருந்து பெறப்படுகின்றது போல தெரிகின்றது.....யாழ்ப்பாணத்திற்கு இந்தியா கொச்சிப்பாதை போடுது,விளையாட்டு மைதானம் கொடுக்குது,வேலை தருது.,துணை தூதர் போட்டிருக்குது...... இந்தியா எல்லாம் செய்யுது......ஐ.நா சபையில் மட்டும் கொழும்புக்கு கை கொடுக்கும்.....கொழும்புக்கு தேவைப்படும் முக்கிய் கை அது....

 

மொத்தத்தில்.. எமது மக்களும் போராளிகளும் சிந்திய இரத்தத்துக்கான இந்தியக் கூலி..! சிங்களத்தை காப்பாற்றும்.. கையூட்டு..! :rolleyes::icon_idea:

நல்லா ஞாபகம் இருக்கிறது.. இந்தியப் படைகள்.. யாழ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு பெயின்ட் அடிச்சுக் கொடுத்தது. என்னடா திடீர் பாசம் என்று.. பார்த்தால்.. இந்திய பயிற்சி பெற்ற ரி என் ஏ ஆக்களுக்கு அங்கு தான் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடத்தினார்கள். அப்படித்தான் இதுகளும்.. அரசியல் உள்நோக்கம் கொண்ட.. நீண்ட கால இலக்கற்ற.. திட்டமிடல்கள் அற்ற.. குறுநோக்கு கொண்ட..அநியாய மக்கள் வரிப் பணச் செலவீனங்கள்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதே பாணியில் பசிலுடன் உறவை பலப்படுத்தி - மக்களுக்கு தேவையான அடிபடை வசதிகளையாவது பெற்றுகொள்ள முதல்வர் முயற்சிக்கணும்.

பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே பாணியில் பசிலுடன் உறவை பலப்படுத்தி - மக்களுக்கு தேவையான அடிபடை வசதிகளையாவது பெற்றுகொள்ள முதல்வர் முயற்சிக்கணும்.

பாராட்டுகள்.

 

தமிழனின் நிலை அப்படியிருக்கு.......

சிறீலங்கா கொடி பிடித்துக்கொண்டு சர்வதேச விளையாட்டுகள் பார்க்கத்தான் இருக்கு ?

மீண்டும் பழைய நிலைக்கு எம்மவர் திரும்புவதை பார்க்க சந்தோஷமாக இருக்கு . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இலங்கை அணிக்கு கிடைக்கும் சப்போர்ட்டை பார்த்து நானே அசந்துபோனே அர்யூன் அண்ணா. மக்கள் மனதார இலங்கை அணியை தம் அணியாக நினப்பதை கண்கொண்டு பார்த்தேன். இந்திய அணிக்கு முன்பிருந்த சப்போர் கொஞ்சமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்ஸ்....

துரையப்பா விளையாட்டரங்கு குறுகிய இடத்தை கொண்டது. இங்கு சர்வதேச நடைமுறைப்படி விளையாட்டரங்கை மாற்ற போதிய இட வசதி இல்லை.

செய்வதை... ஒழுங்காக செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

 

சிங்களத்தின் அரசில் நோக்கோடு அமையும் வேலைத்திட்டங்கள் சர்வதேச நியமங்களைத் தொடுவதில்லை. தெற்காசிய விளையாட்டுக்களை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்திய போது அதன் தரம்.. சர்வதேச நியமங்களுக்கு இல்லை என்று பலமான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

 

இன்று எமது தேசத்தை சூழ்ந்திருப்பது.. சிங்களப் பேரினத்தின் அரசியலும்.. இந்தியாவின் வல்லாதிக்க கையூட்டும்.. ஒட்டுக்குழுக்களின் ஊழலும்..! இந்த நிலையில்.. சர்வதேச தரம்.. திட்டங்களின் உண்மையான பலாபலன் எல்லாம்.. வெறும் வார்த்தைகளாகவே இருக்கப் போகின்றன.

 

வடக்கு மாகாண சபையும் அதற்கு உடந்தையாக இருப்பது தான் கவலை அளிக்கின்ற விடயம்.

 

வடக்கு மாகாண சபை.. மத்திய சிங்களப் பேரினவாத அரசின் அரசியல் நோக்காகக் கொண்ட திட்டங்களுக்கு தலையாட்டிக் கொண்டிராமல்.. திட்டங்களை இந்தியா தனது நிதியில் கொண்டு நடத்துகின்றது என்றால்.. இந்தியாவோடு சேர்ந்து.. இதனைச் செய்யலாமே. இடையில் எதற்கு.. சிங்களமும்.. ஒட்டுக்குழு அமைச்சரும். இந்த ஒட்டுக்குழு அமைச்சர் மீது ஏலவே பல மோசடிப் புகார்கள் உள்ள நிலையில்.. இவர் மூலம்.. அமுலாகும் திட்டங்களின்.. பயன் தகவு எந்தளவாக இருக்கும் என்பது கேள்விக்குறியே..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே வடமாகாணசபை தொடர்ந்தும் முரண்டு பிடித்து அழிவு அரசியல் செய்யலாம்தனே?

தமிழ்நட்டு வகையறாக்கள் மக்களை உய்யவே விடாதுகள்.

பிள்ளையாரே போயிட்டார், இந்த திருட்டு பூசாரிகள்தான் தொண தொணக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டையில் சர்வதேச துறைமுகம் ,விமான நிலையம் என   சிங்களக் காடுகளை அபியிருத்தி செய்யும் மகிந்த அண்ட் கோ நெடுக்ஸ் சொல்வது மாதிரி செலவழிக்கும் பணத்திற்கு இந்த மைதானத்தை கிளிநொச்சியிலோ முல்லைத் தீவிலோ அமைத்து அந்த நகரங்களின் அபிவிருத்திக்கும் உதவலாம்.

இது இந்தியாவிற்கும் மேற்குலகிற்கும் காட்டும் படமே தவிர,
சர்வதேச ரீதியிலான விளையாட்டரங்கு என்ற தரத்தை அடைவதற்குத் துரையப்பா விளையாட்டரங்கு உகந்த இடமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இலங்கை அணிக்கு கிடைக்கும் சப்போர்ட்டை பார்த்து நானே அசந்துபோனே அர்யூன் அண்ணா. மக்கள் மனதார இலங்கை அணியை தம் அணியாக நினப்பதை கண்கொண்டு பார்த்தேன். இந்திய அணிக்கு முன்பிருந்த சப்போர் கொஞ்சமுமில்லை.

 

 

அரசு விடும் பிழைகளையும் இயக்கம் விடும் பிழைகளையும் விமர்சிப்பேன் என்று மற்றொரு திரியில் புழுகினீர்கள். இங்கே ஆகா ஓகோ என அரசை புகழ்கிறீர்கள். உங்கள் நடிப்பு அல்பசீனோவை வெல்லும் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டையில்.. மகிந்த கட்டிய விமான நிலையம்.. சர்வதேச விமானங்களை ஈர்க்கத்தவறிவிட்டதுமின்றி இன்று நட்டத்தில் ஓடுது.

 

இதே நிலையை வடக்கிலும் மகிந்த கும்பல் தனது ஆதாய அரசியலுக்காக.. ஏற்படுத்த முனைகிறார்கள்.

 

வடக்கு மாகாண சபை.. இந்தியா என்ற மூன்று சிங்கமுக சின்னத்திற்கு அடையாளம் வழங்க இப்படியான தவறான திட்டங்களுக்கு துணை போவது..  உண்மையில்.. மக்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

 

ஏலவே 50,000 வீடுகள் திட்டம் இன்னும் உருப்படியாக நடைமுறையில் வராத நிலையில்.. இந்தத் திட்டங்கள் நடுகல்லில் காட்டும் ஆர்வம் அளவிற்கு நிறைவு பெறுமா என்று தெரியவில்லை.

 

வடக்கு மாகாண சபை.. ஒரு அதிகாரமற்ற சபையாக இருந்து கொண்டு.. எப்படி வடக்கை சரியான திட்டமிடலின் கீழ் மீளக் கட்டி எழுப்ப முடியும் என்ற கேள்வியும் உள்ளது. சிங்கள பேரினவாத அரசியல் ஆதாயங்களுக்காக வடக்கு மாகாண சபை தவறான இடங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது.. அதற்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதாக இருக்கும்..!

 

அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்களம்.. மக்களுக்கு நீண்ட நோக்கில் உதவாத திட்டங்களை அமுல்படுத்துவது கூட எமக்கு ஆபத்தான ஒன்றாகவே இருக்கப் போகிறது. சிங்களத்தின் குடியேற்றவாத.. இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இவை அமைவது கூட எமக்கு ஆபத்துக்களையே கொண்டு வரும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அரசை எங்கே புகழ்ந்தேன்?

இலங்கை கிரிகெட் அணிக்கு யாழில் ஆதரவு அமோகம் என்று நான் கண்டதை கூறுவது எப்படி அரசை புகழ்வதாகும்?

என்ன லாஜிக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு நீங்கள் சொல்வது போல் ஆகா ஓகோ என்று எதுவுமில்லை. கதை விட வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல நான் இந்த திரியில் அரசை புகழ்ந்தேன் என்று நீங்கள் விட்ட கதைக்கு விளக்கம் தாங்கோ, பின் நான் விடும் கரடியை பற்றி கதைக்கலாம்.

அங்கு ஆகா ஓகோ எண்டில்லாட்டிலும் சனம் ஓரளுவுக்கு நிம்மதியா இருக்கு எண்டதுக்கு நல்லூர் திருவுழா படங்களே சாட்சி.

அம்பாந்தோட்டையில்.. மகிந்த கட்டிய விமான நிலையம்.. சர்வதேச விமானங்களை ஈர்க்கத்தவறிவிட்டதுமின்றி இன்று நட்டத்தில் ஓடுது.

 

இதே நிலையை வடக்கிலும் மகிந்த கும்பல் தனது ஆதாய அரசியலுக்காக.. ஏற்படுத்த முனைகிறார்கள்.

 

வடக்கு மாகாண சபை.. இந்தியா என்ற மூன்று சிங்கமுக சின்னத்திற்கு அடையாளம் வழங்க இப்படியான தவறான திட்டங்களுக்கு துணை போவது..  உண்மையில்.. மக்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

 

ஏலவே 50,000 வீடுகள் திட்டம் இன்னும் உருப்படியாக நடைமுறையில் வராத நிலையில்.. இந்தத் திட்டங்கள் நடுகல்லில் காட்டும் ஆர்வம் அளவிற்கு நிறைவு பெறுமா என்று தெரியவில்லை.

 

வடக்கு மாகாண சபை.. ஒரு அதிகாரமற்ற சபையாக இருந்து கொண்டு.. எப்படி வடக்கை சரியான திட்டமிடலின் கீழ் மீளக் கட்டி எழுப்ப முடியும் என்ற கேள்வியும் உள்ளது. சிங்கள பேரினவாத அரசியல் ஆதாயங்களுக்காக வடக்கு மாகாண சபை தவறான இடங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது.. அதற்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதாக இருக்கும்..!

 

அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்களம்.. மக்களுக்கு நீண்ட நோக்கில் உதவாத திட்டங்களை அமுல்படுத்துவது கூட எமக்கு ஆபத்தான ஒன்றாகவே இருக்கப் போகிறது. சிங்களத்தின் குடியேற்றவாத.. இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இவை அமைவது கூட எமக்கு ஆபத்துக்களையே கொண்டு வரும்..! :icon_idea:

 

நெடுக்கு இலங்கை இந்தியா போன்ற மட்டரக அரசியல் வாதிகளை கொண்ட நாடுகளில் அபிவிருத்திகளும் அவர்களின் மட்டரக அரசியலுக்கும் நசுங்கி சீரழிவது தொடர்ந்து நடந்து வருகிறது. மத்தள விமானநிலையம்  இதற்கு சிறந்த உதாரணம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுவேலியில் எற்கனவே தொழில் பேட்டடை இருந்தது.அது தான் இப்ப இயங்கும் திறனுக்கு வந்துள்ளது.பாராட்டுக்கள் சமபந்தப் பட்டவர்களுக்கு. மற்றது கிளியிலும் சர்வதேச விளையாட்டு மைதானம் வர இருக்கிறது.மற்றது அங்கு மைதானம் வருகுதோ இல்லையோ அந்த மண்ணை வழப்படுத்தும் மக்களுக்கு உபத்திரவம் இல்லாமல் இருந்தாலே காணும்.சர்வதேச விமான நிலையமும் வருகுதாம்.அப்படி வந்தால் பிளேட் மாறும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுவேலியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு முன்னர்.. வலி வடக்கில் இருந்தான படை வெளியேற்றத்தோடு.. அங்கு மீண்டும் திராட்சை.. வெற்றிலை உற்பத்திக்குரிய காணிகளை மக்களிடம் கையளித்தல். இதே சிங்கள அரசு..வீமானங்களால் குண்டு போட்டு அழித்த..  தொழிற்சாலைகளை மீள அமைக்கலாமே.

 

நாவற்குழியில் கண்ணாடி ஆலை.

 

நாவற்குழியில் வடிசாலை ஆலை.

 

அல்லைப்பிட்டியில் அலுமினிய ஆலை.

 

பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலை.

 

காங்கேசந்துறையில் துறைமுகம்.

 

பலாலியில் உள்ளூர் சிவில் விமானப் போக்குவரத்து.

 

பருத்தித்துறையில் துறைமுகம்.

 

தெல்லிப்பழையில் பழரச ஆலை.

 

ஆனையிறவில்.. கடலுப்பு உற்பத்தி.

 

நாவற்குழியில் கடலட்டை.. இறால் பதனிடுதல்.

 

குருநகரில் மீன்பதனிடுதல் ஆலை.

 

ஒட்டிசுட்டானில்.. செங்கல் ஆலை.

 

முல்லைத்தீவில் மீன்பிடி அபிவிருத்தி.

 

கிளிநொச்சியில் விவசாய அபிவிருத்தி.

 

இவை எதனையும் பற்றிக் கவலைப்படாத சிங்கள பேரினவாத அரசாங்கம்..  அச்சுவேலியில் விழுந்தடிச்சு தொழிற்பேட்டை அமைப்பதன் நோக்கம்..???!

 

துரையப்பா விளையாட்டரங்கை 1995 இல் இருந்து எத்தனை தரம் புனருத்தாரனம் செய்கிறார்கள். அதற்கு எவ்வளவு நிதி செலவிடப்படுகிறது..??!

 

அண்மையில் உள்ள யாழ் மத்திய கல்லூரி மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் தரத்துக்கு உயர்த்தப் போவதாக 1996 இல் அங்கு கிரிக்கெட் விளையாடி விட்டு சிறீலங்கா அணி அறிக்கைவிட்டது. இன்று வரை அது நடந்ததா..????!

 

மாங்குளத்திலும்.. கிளிநொச்சியிலும்.. சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையப் போவதாக.. முரளிதரன் அறிக்கைவிட்டார்..??! அவை ஆரம்பிக்கப்பட்டதற்கான.. ஏதாவது அறிகுறிகள்..???!

 

வடக்குகில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 வீடுகள் அமைக்கப் போவதாக ஹிந்தியா அறிவித்து 5 வருடமாகிவிட்டது. குறைந்தது 5000 வீடுகளாவது அமைக்கப்பட்டுள்ளனவா..????!

 

 

இவை எதுவுமே நடக்கல்ல. நடந்திருப்பது.. சிங்கள இராணுவத்தின் உட்கட்டுமான வசதிகளுக்கான போக்குவரத்துக்கள் உய்விக்கப்பட்டுள்ளன. சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கான தொழில்கள் காணிகள் புடுங்கப்பட்டுள்ளன. சிங்கள இராணுவத்தின் உல்லாச விடுதிகள்.. விவசாயம் மக்கள் காணிகளில் நடைபெறுகின்றன. இவை தான் அபிவிருத்தியா..??! இதனை தான் சிலர் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் அபிவிருத்தி என்று காட்டுகிறார்களா..??!

 

தமிழ் மக்கள் இன்னும் புலம்பெயர்ந்தவர்களின் நிதியையும் முதலீட்டையும் எதிர்பார்த்திருக்கும் நிலை. வடக்கின் வியாபாரிகள் கூட புலம்பெயர்ந்தவர்கள் வந்து பொருள் வாங்குங்கள் என்று கதறும் நிலை. சரியான சந்தை வாய்ப்பின்மை. வியாபாரத்துக்குள் இராணுவ.. மற்றும் அரசியல் தலையீடுகள்.

 

மக்களின் சிறு முதலீடுகளுக்கு இலாபமீட்ட முடியாத நிலை.

 

இவற்றை யார் போக்குவது..??! மாகாண சபைதான் அதனைச் செய்யனும். அதுக்கோ.. அதிகாரம் இல்லை..!

 

இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மண் தன்னை குறுகிய கால.. நீண்ட கால.. இலக்குகளை நோக்கி எப்படி முன்னேற்றிக் கொள்வது..??! வெறுமனவே சில திட்டங்களை  பெரும் விளம்பரங்களோடு ஆரம்பிப்பது மட்டும் போதாது. உள்ளூர் மனித வளமும்.. வேலை வாய்ப்பும் அதன் மூலம் அதிகரிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு அபிவிருத்தியில்.. சிங்களவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் எமது மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

 

வடக்கு.. வீதி அபிவிருத்தியில் சிங்களவர்கள் தான் அதிகம் வேலையில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி.. சரியான வழிகாட்டல்.. பயிற்சி இன்றி.. குடிக்கும்.. போதைக்கும்.. விபச்சாரத்துக்கும் வெளிநாட்டு பணத்திற்கும் அடிமையாக்கப்பட்டு வருகின்றனர். இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம்.. இடம்பெயர்ச் செய்யப்படுகின்றனர். இவை தான் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது செய்யப்படும் அபிவிருத்தியா..??!

 

இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல்.. சிங்கள அரச அரசியல் வியாபார விளம்பரங்களையும்.. அதனை நோக்காகக் கொண்டு நடத்தப்படும் சில களியாட்ட நிகழ்வுகளையும் காட்டி.. வடக்கிலும் கிழக்கிலும் வசந்தம் பூத்துக்குலுக்குவதாக எம்மவர்கள் சிலரே புளகாங்கிதம் அடைகிறார்கள் என்றால்.. அவர்களின் சிந்தனையை என்னென்பது..!!!! தாம் வெளிநாட்டில் வசதியாக இருக்கிறோம் என்ற திமிர் தான் அதன் பின்னணியில் உள்ளது. :icon_idea:

எனக்கு என்னமோ யாழ் கொஞ்சம் கொஞ்சமாக இந்த போரின் அழிவிலிருந்து மீண்டு வருவது சிலறுக்கு வயத்தெரிச்சலை கொடுக்குது போல இருக்கு....துரையப்பா விளையாட்டரங்கை கட்டி அங்கே ICC லெவல் கிரிக்கெட் மேட்ச் நடந்தால் நல்லது தானே.....கார் பார்கிங்கோடு இருந்தா தான் உவைஎல்லாரும் போவினமா??

அவங்கள் இருக்கிறகட்டிடத்துக்கு பெயிண்ட் அடிச்சுபோட்டு மிச்ச காசை சுத்துறதுக்கு பார்கிறானுகள் ..

எனக்கு என்னமோ யாழ் கொஞ்சம் கொஞ்சமாக இந்த போரின் அழிவிலிருந்து மீண்டு வருவது சிலறுக்கு வயத்தெரிச்சலை கொடுக்குது போல இருக்கு....துரையப்பா விளையாட்டரங்கை கட்டி அங்கே ICC லெவல் கிரிக்கெட் மேட்ச் நடந்தால் நல்லது தானே.....கார் பார்கிங்கோடு இருந்தா தான் உவைஎல்லாரும் போவினமா??

அவங்கள் இருக்கிறகட்டிடத்துக்கு பெயிண்ட் அடிச்சுபோட்டு மிச்ச காசை சுத்துறதுக்கு பார்கிறானுகள் ..

கிறிக்கெட் போட்டி நடக்கிறதை விட FIFA Weltmeister கால்ப்பந்தாட்ட போட்டிகள் நடப்பது தான் எனக்கு விருப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.