Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பில் மணற்கொள்ளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபயவும் நெருக்கமானவர்களும் களத்தில்:- குளோபல் தமி்ழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-

jaff%20news%20round%20up_CI.jpg

யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் மணல் அள்ளும் வடிக்கையில் கோத்தபாயவும் களமிறங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கென விசேட அதிரடிப்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

இது வரை காலமும் டக்ளஸிற்கு சொந்தமான மகேஸ்வரி பவுண்டேசன் மட்டுமே மணல் அகழ்ந்து விற்பதில் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் நாள் தோறும் பல மில்லியன் பணம் கைமாறி வந்திருந்தது.

அதை தொடர்ந்து கோத்தபாயவின் பினாமியான விண்ணன் என்பவர் களமிறங்கியிருந்த நிலையில் தற்போது இலண்டனில் இருந்து சென்று கோத்தாபயவிற்கு நெருக்கமான புள்ளி ஒருவரும் நெய்தல் எனும் பேரில் டக்ளஸிற்கு போட்டியாக மணல் அகழ்ந்து விற்பனை செய்துவருகிறார் என பிரதேச மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

வடமாகாணசபையினை பெயரளவில் கூட்டமைப்பு ஆளும் நிலையில் அது எதனையும் பொருட்படுத்தாது மணல் வியாபாரம் கொடிகட்டி பறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மணல் அகழும் பகுதியில் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கிளில் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்தவும் உள் மோதல்கள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தவும் அண்மையில் விசேட அதிரடிப்படை பாதுகாப்பினை பொறுப்பேற்றுள்ளது.

இதனிடையே இப்பகுதியில் சில நபர்கள் அனுமதியின்றி பாரவூர்தியில் மணல் அள்ளும் நடவடிக்கையில் திங்கட்கிழமை மாலை ஈடுபட்டதாகவும்;, அங்கு விசேட அதிரடிப் படையினர் சென்றிருந்த வேளை, மணல் அள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பாரவூர்தியை கைவிட்டுவிட்டுத் தப்பியோடியதாகவும் இதனையடுத்து, பாரவூர்தியை கைப்பற்றிய விசேட அதிரடிப் படையினர், அதனை பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகேஸ்வரி நிதியம் மற்றும் நெய்தல், அதிரடிப்படையென அனைத்து தரப்புக்களது கண்களிலும் மண்ணை தூவி மண் கொள்ளையிலீடுபட்ட உள்ளுர் கும்பலொன்றே அகப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111021/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வன்னி: இணைப்பு 2:-

Manalaru1_CI.png

தமிழர் தாயகமான மணலாறை சுவீகரித்திருக்கும் இலங்கை ஆட்சியாளர்கள் இப்போது அங்குள்ள மண்ணையும் விடுவதாக இல்லை. அவ்வகையில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் பெருமளவு கனிய மணல் சுரண்டப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து அங்கு நேரில் சென்ற  வடமாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர் ரவிகரன், அங்கு பெருமளவில் மணல் அகழப்படுவதை நேரில் அவதானித்து உறுதிப்படுத்தியுள்ளார். அப்போது அங்கு சுமார் 70 இற்கும்  மேற்பட்ட உழவு இயந்திரங்களில் மணல் அள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.  அங்கு சென்ற ரவிகரன் மணல் அகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்குள்ளாக நடைபெறுவதை உறுதிப்படுத்தினார்.

அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த இரு  உத்தியோகத்தர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரவிகரன் மேற்குறித்த நடவடிக்கை குறித்து விசாரித்திருந்தார். இதன்போது மேற்படி மணல் அகழ்வானது இலங்கை கனிய வள இல்மனைட் கூட்டுத்தாபனத்தால் (புல்மோட்டை, திருகோணமலை) மேற் கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.

வடமாகாணத்திற்குட்பட்ட முல்லைதீவு மாவட்டத்தின் எல்லைக்கு உள்ளாக மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை, நாளாந்தம் சுமார் 500 க்கும் மேற்பட்ட  லோட் மணல் ஏற்றப்படுவதாக தெரியவருகிறது
  
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110980/language/ta-IN/article.aspx

யாழ். மணற்காடு குடத்தனைப்பகுதியில் மணல் அள்ளும் வடிக்கையில் கோத்தபாயவும் களமிறங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கென விசேட அதிரடிப்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இது வரை காலமும் டக்ளஸிற்கு சொந்தமான மகேஸ்வரி பவுண்டேசன் மட்டுமே மணல் அகழ்ந்து விற்பதில் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் நாள் தோறும் பல மில்லியன் பணம் கைமாறி வந்திருந்தது.

அதை தொடர்ந்து கோத்தபாயவின் பினாமியான கண்ணன் என்பவர் களமிறங்கியிருந்த நிலையில் தற்போது இலண்டனில் இருந்து வருகை தந்து எடுபிடியாகியிருக்கும் செல்வா என்பவர் நெய்தல் எனும் பேரில் டக்ளஸிற்கு போட்டியாக மணல் அகழ்ந்து விற்பனை செய்துவருகின்றார்.
வடமாகாணசபையினை பெயரளவினில் கூட்டமைப்பு ஆளும் நிலையினில் அது எதனையும் பொருட்படுத்தாது மணல் வியாபாரம் தூள்பறத்தி வருகின்றது.

இந்நிலையினில் மணல் அகழும் பகுதியினில் மக்கள் எதிர்ப்புப்போராட்டங்கிளினில் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்தவும் உள் மோதல்கள் ஏற்பட்டிருக்காதிருப்பதை உறுதிப்படுத்தவும் அண்மையினிலேயே விசேட அதிரடிப்படை பாதுகாப்பினை பொறுப்பேற்றுள்ளது.
இதனிடையே இப்பகுதியில் சில நபர்கள் அனுமதியின்றி பாரவூர்தியில் மணல் அள்ளும் நடவடிக்கையில் திங்கட்கிழமை மாலை ஈடுபட்டதாகவும் இந்நிலையில், அங்கு விசேட அதிரடிப் படையினர் சென்றிருந்த வேளை, மணல் அள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பாரவூர்தியை கைவிட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.இதனையடுத்து, பாரவூர்தியை கைப்பற்றிய விசேட அதிரடிப் படையினர், அதனை பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகேஸ்வரி நிதியம் மற்றும் நெய்தல், அதிரடிப்படையென அனைத்து தரப்புக்களது கண்களிலும் மண்ணை தூவி மண் கொள்ளையிலீடுபட்ட உள்ளுர் கும்பலொன்றே அகப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/33478/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு சரியான விழிப்பூட்டல் இல்லை இப்படியே போட்டி போட்டு மண்ணை அள்ளிச் செல்ல விட்டால் அடுத்த முறை ஒரு சிறிய கடற்பெருக்கோ அல்லது சிறிய   சுனாமியே காணும் ஊரெல்லாம் அமிழ்ந்துவிடும்.
எங்கள் அரசியல் வாதிகள்   13 ஓ குறையவோ அல்லது கூடவோ என்று முடிவெடுப்பதற்குள் எல்லாம் முடிந்துவிடும்

வாத்தியார்,

அதனைவிட..... நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு இறங்கி விடும்.

கிணற்று நீர், உப்பு நீராக மாறிவிடும்.

எமது கண்முன்னே.... தமிழ்நாட்டில் வளமாக விவசாயம் செய்த   நிலங்கள், 

ஆற்று மணலை.... அரசியல் வாதிகள் மாறி, மாறி அள்ளியதால். 

இன்று குடி நீருக்கு அல்லல் படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுகும்.... ஆறோ, நன்னீர் குளமோ இல்லாத வடபகுதியில்,

குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால்.... அதனை கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வளங்கள் எல்லாம் நீண்ட காலம் மீள முடியாத வளங்கள். ஒரு மணல் திட்டு உருவாக எத்தனையோ ஆண்டுகள் தேவை. ஆனால்.. எந்தவித சுற்றுச்சூழல் அறிவும் இன்றிய சிறீலங்கா பேரினவாதிகள்.. இவற்றைத் திருடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு எந்தத் தடையும் இன்றி இடமளிக்கும் நம்மவர்களை என்னென்பது.

உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்கிறார்கள்.. மாகாண சபைகளை நிர்வகிக்கிறார்கள்... பல்கலைக்கழகம் வைத்திருக்கிறார்கள்.. சிங்கள அமைச்சில் இருக்கிறார்கள்.. இவ்வளவு இருந்தும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் வெகுசன மற்றும் ஊடக கவனத்தை ஈட்டி.. இவற்றைத் தடுக்க முயற்சி செய்யவில்லை என்றால்.. இவர்களும் இந்த வளம் இழப்பிற்கு காரணம் என்றே பொருள் கொள்ள வேண்டி இருக்கும்.

இவற்றை ஒன்றில்.. சட்டத்தால் தடுக்கனும். இல்லை என்றால் துப்பாக்கியால் தான் சுட்டு துரத்தனும். இந்த பேரினவாத அடாவடிகளை சட்டத்தால் தடுக்க முடியாத பட்சத்தில் தான் புலிகள் துப்பாக்கியை நீட்டினார்கள். அந்த நிலையை விரும்பாதவர்கள்.. இன்று இதனை சட்டத்தாலும் தடுக்க முடியாமல் வள இழப்பை கண்டும் காணாமலும் வாழ்ந்து கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-----

உண்மைதான்.... நெடுக்ஸ்.

புலி இருந்திருந்தால்.... மணல் கொள்ளை செய்யும், ஒட்டுக்குழு இரண்டு பேரை பிடிச்சு......

காதுக்குள்ளை சுட்டுப் போட்டு, லைற் போஸ்ரிலை கட்டி  விட்டிருந்தால்.....

மிச்ச ஒட்டுக்குழு எல்லாம்,  தலை தெறிக்க ஓடியிருக்கும்.

அதை பார்த்த ஆமி, அதிரடிப்படை எல்லாம்.... இராணுவ முகாமுக்குள்ளை முடங்கியிருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

உதக்குதான் சொல்லுறன் வாழ்வோ சாவோ இங்கை இருந்து எழுதாமல் அங்கு போய் மக்களோடு மக்களாய் இருந்து இன்பமோ துன்பமோ போராட்டமோ பங்கெடுப்போம்.நானும் வாறன் யார் என்நோட வாறீங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதக்குதான் சொல்லுறன் வாழ்வோ சாவோ இங்கை இருந்து எழுதாமல் அங்கு போய் மக்களோடு மக்களாய் இருந்து இன்பமோ துன்பமோ போராட்டமோ பங்கெடுப்போம்.நானும் வாறன் யார் என்நோட வாறீங்கள். :rolleyes:

ஏன் தனிய போக பயமே? :lol:

செல்லுங்கள் அங்கிருந்து நேரடியாக செய்திகளை தாருங்கள்.ஏழை மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னின்று செய்யுங்கள்.பணவிருத்தி நாடுகளிலிருந்து பெரும்தொகையாக பணத்தை அனுப்புகின்றோம். :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரநேசன் மணற்காட்டு மணல் கொள்ளையையும் தடுக்க வேண்டும். மணற்காட்டு மணல் கொள்ளைக்கு எதிராக தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும்.. பல நடவடிக்கைகளை எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

27,000 சிங்களவர்களை பலிகொடுத்து காத்த மண் என்று சிங்களவன் இவற்றிற்கு சொந்தம் கொண்டாட விளைகின்ற போது.. நாம்.. 2,00000 மக்களையும் போராளிகளையும் பலிகொடுத்தும் காக்கத்தவறிய பூர்வீக மண் என்ற யதார்த்தத்தோடு ஓர்மத்தோடு இதனை கபளீகரம் செய்யும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காக்க வேண்டியவர்களாக உள்ளோம். :icon_idea:

மேலும் இதனையும் படியுங்கள்....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=145079

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் தங்கட காலத்தில தங்களுக்கு விருப்பமானவர்கள் மண் அகழ்வு செய்ய அனுமதி கொடுத்திருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

போச்சு, போச்சு எவ்வளவு அழகா எமக்குள் நாமே பழங்கதை பேசி மகிழ்ந்திருந்தோம்.

காதுக்க சுடுறத சிறீ அண்ணை இனிக்க, இனிக்க விபரிக்க,

நெடுக்கு அதுக்கு விசிலடிக்க,

சுவை வந்து ஊருக்குப் போவோம் வாங்கோ எண்டு குண்டை தூக்கிப்போட,

சுதாகரிச்ச கு.சா - நீங்க போங்கோ நான் காசணுப்பிறன் (அதுதான் இளிச்சவாயங்கள் ஊரில இருக்காங்களே போராட) எண்டு பம்ம,

என்ன மாதிரி போய்க்கொண்டிருந்தது ஒரு வெள்ளிகிழமை நாள்,

இடையில ரதி வந்து ....... சே..... உந்த உண்மை எண்ட கோதாரிய ஏந்தான் பேசுறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்பது உங்கள் சிலருக்கு புலிகள் பற்றி எவராவது விசமத்துக்கு அளக்கும் அரைகுறைகள் மட்டும் தான். :lol:

புலிகள் மணற்காட்டில் அளவு பிரமாணம் இன்றி.. மண் எடுப்பதில் ஈடுபட்ட பல தனியாரை கட்டுப்படுத்தினார்கள். ஒரு குறிப்பிட்ட தொகை மண் அள்ள மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். அது புலிகளின் ஆட்களுக்கு என்று தனிய ஒரு சட்டம் அங்கு இருக்கவில்லை. அதேபோல்.. கண்டல்காடுகளை அழித்து விறகு சேகரிப்பதற்கு எதிராகவும்.. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின் sustainable ரீதியில் மட்டும் மண் அகழவும்.. விறகு வெட்டவும் அனுமதித்தார்கள்.

பொது நிகழ்வுகளுக்கு வாழை மரங்களை வெட்டக் கூட ஒரு கட்டத்தில் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்.. பொதுமக்களை கட்டுப்பாட்டோடு செயற்படக் கேட்டிருந்தது.

புலிகளின் எந்த ஒரு நடவடிக்கை பற்றியும் முழுமையாக அறியாமல்.. ஒட்டுக்குழு இணையங்கள் தடவித்திரிபவர்கள் சொல்வது தான் உங்கள் சிலருக்கு உண்மை என்றாவது.. குருடனுக்கு குருடன் முதுகு சொறிதல் போன்றது..! :lol::D
 
Edited by nedukkalapoovan

இங்கே மண் அள்ளி எங்கே கொண்டு செல்லுகிறார்கள்? கொழும்புக்கா?

யாழில் (சுற்று வட்டாரத்தில்) வீடு கட்ட தானே....மக்களுக்கு தேவை என்றால் அங்கே இருந்து எடுக்காமல் எங்கே இருந்து எடுப்பது?

சந்திரமண்டலத்தில் இருந்தா??????? (புலிகள் காலத்தில் அப்படிதான் செய்தார்கள் போலுள்ளது...அவங்கள் சூரர்...)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே மண் அள்ளி எங்கே கொண்டு செல்லுகிறார்கள்? கொழும்புக்கா?

யாழில் (சுற்று வட்டாரத்தில்) வீடு கட்ட தானே....மக்களுக்கு தேவை என்றால் அங்கே இருந்து எடுக்காமல் எங்கே இருந்து எடுப்பது?

சந்திரமண்டலத்தில் இருந்தா???????

யாழ்மாவட்டத்தில் வெள்ளம் தங்கி நிற்காத மேட்டு வயல்கள் ஏராளமாக இருக்கின்றன.......
அங்கே எடுங்கள்.அதுவும் வீடுகட்ட உகந்தமண். ஓ புல் பூண்டுகளை சுத்திகரிக்க பஞ்சியோ? :lol:  :D
 
ஒரு சில மண்மேடுகள் இயற்கையுடன் கூடியது. அதை அழிப்பது மனிதனுக்கு பாதுகாப்பற்றது. :icon_idea:
 
சுனாமி மற்றும் இயற்கை அழிவுகளிலிருந்து பாதுகாக்கக்கூடிய மண்மேடுகளை அழித்தல் அரசியலாக மாறக்கூடாது.  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் தங்கட காலத்தில தங்களுக்கு விருப்பமானவர்கள் மண் அகழ்வு செய்ய அனுமதி கொடுத்திருந்தார்கள்

முற்றிலும் உண்மை 
அப்போ அதிக அளவில் மண்ணை அள்ளி செய்ய தேவைகள் இல்லாததால். புலிகளுக்கு விருப்பமானவர்கள் மண்ணை அகழ்ந்து சென்று கடலில் கொட்டினார்கள் (டீசல் செலவழித்து) அதனால்தான் மண்டை தீவு உருவானது. 
 
மண்டை தீவு மணலை எடுத்து சென்று ..... மன்ட்கட்டு மணலுடன் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை புலிகளின் வாலுகளுக்கு புரியும். 

மணல்காட்டு மண்ணுடன் 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மண் அள்ளி எங்கே கொண்டு செல்லுகிறார்கள்? கொழும்புக்கா?

யாழில் (சுற்று வட்டாரத்தில்) வீடு கட்ட தானே....மக்களுக்கு தேவை என்றால் அங்கே இருந்து எடுக்காமல் எங்கே இருந்து எடுப்பது?

சந்திரமண்டலத்தில் இருந்தா??????? (புலிகள் காலத்தில் அப்படிதான் செய்தார்கள் போலுள்ளது...அவங்கள் சூரர்...)

அடேங்கப்பா .............
 
அப்பிடியே எதோ global warming என்று திரிபவர்களுக்கும் ஒரு அறை  கொடுத்த மாதிரி இருக்கு. இதுக்குதான் அறிவு பூர்வனமவர்கள் வேண்டும் என்று சொல்வது.
 
பூமி வெப்பம் ஏறினால் சந்திர மண்டலத்திலா பனி கரைகிறது ? இங்குதானே கரைகிறது. 

யாழ்மாவட்டத்தில் வெள்ளம் தங்கி நிற்காத மேட்டு வயல்கள் ஏராளமாக இருக்கின்றன.......
அங்கே எடுங்கள்.அதுவும் வீடுகட்ட உகந்தமண். ஓ புல் பூண்டுகளை சுத்திகரிக்க பஞ்சியோ? :lol:  :D
 
ஒரு சில மண்மேடுகள் இயற்கையுடன் கூடியது. அதை அழிப்பது மனிதனுக்கு பாதுகாப்பற்றது. :icon_idea:
 
சுனாமி மற்றும் இயற்கை அழிவுகளிலிருந்து பாதுகாக்கக்கூடிய மண்மேடுகளை அழித்தல் அரசியலாக மாறக்கூடாது.  :icon_idea:

"வயல்" மண் என்றால் அப்படி வீடு கட்ட பயன் படுத்த முடியும்? முதல் பயன் படுத்தினார்களா?

அப்படி வேறு வழியிருந்தால் அதை நடமுறைப்படுத்டுவதே சரி....

மணல் காட்டில் உள்ள மண்மேடுகள் காற்றால் திருப்பி திருப்பி ஏற்படுத்தப்படுவன .....

  • கருத்துக்கள உறவுகள்
காற்று சிங்கப்பூரில்  மணலை கொள்வனவு செய்கிறதா ?
 
இனி சீனாவில் கொள்வனவு செய்ய காற்றுக்கு தூதுவிட வேண்டும் விலை குறைவாக இருக்கும் 
  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா .............
 
அப்பிடியே எதோ global warming என்று திரிபவர்களுக்கும் ஒரு அறை  கொடுத்த மாதிரி இருக்கு. இதுக்குதான் அறிவு பூர்வனமவர்கள் வேண்டும் என்று சொல்வது.
 
பூமி வெப்பம் ஏறினால் சந்திர மண்டலத்திலா பனி கரைகிறது ? இங்குதானே கரைகிறது. 

சிரிப்பு, தாங்க முடியல.... :D  :lol:  :D

காற்று சிங்கப்பூரில்  மணலை கொள்வனவு செய்கிறதா ?
 
இனி சீனாவில் கொள்வனவு செய்ய காற்றுக்கு தூதுவிட வேண்டும் விலை குறைவாக இருக்கும் 

மணல் காட்டில் உள்ள மண் குன்றுகள் எப்படி உருவாகுகின்றன என்று யாரையாவது கேளுங்கள்..அவர்கள் சொல்லுவார்கள் சிங்கபூரிலிருந்து கிளிநொச்சியூடாக வருகிறது என்று.......

  • கருத்துக்கள உறவுகள்

மணல் காட்டில் உள்ள மண் குன்றுகள் எப்படி உருவாகுகின்றன என்று யாரையாவது கேளுங்கள்..அவர்கள் சொல்லுவார்கள் சிங்கபூரிலிருந்து கிளிநொச்சியூடாக வருகிறது என்று.......

மீள உருவாவதற்கு ஆயிரமாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மணல் காட்டில் உள்ள மண் குன்றுகள் எப்படி உருவாகுகின்றன என்று யாரையாவது கேளுங்கள்..அவர்கள் சொல்லுவார்கள் சிங்கபூரிலிருந்து கிளிநொச்சியூடாக வருகிறது என்று.......

எனது ஊரில் இருந்து மணல் காடு  வெறும் 8km தான் .... இந்த மணல் மேட்டு உருவாக்கம் எமது ஊரிலும் இருக்கிறது  
ஆற்றம் கரை தென்னை மரங்களால் நிறைந்திருக்கிறது 
கடற்கரை பனை மரத்தால் சூழ்ந்திருப்பதால் .......... மணல்களின் நகர்வு மனட்காடுபோல் இருப்பதில்லை.
வாடை கற்று  சோழ கற்று இரண்டும் .... நிலத்தடியில் வேகம் குறைந்து விடுகிறது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.