Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழுக்கு புகையிரதம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இப்பதிவும் அதற்கான பின்னூட்டங்களும், கருத்து மோதல்களும் எமது அவலநிலையையின் ஆழத்தை எடுத்துக் காட்டுகின்றது. முதலில் தமிழினத்திற்கான ஒரு தலைவனை உறுதிசெய்யும் முயற்சியில் நாங்கள் ஒன்றுபட வேண்டும். அதுவரை இவை அனைத்தும் சுவரில்லாச் சித்திரங்களே.  
 
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமான செய்தி

சர்வதேசத்தின் இயங்கியலின் படி இனிவரும் காலங்களில் பொருளாதார முன்னேற்றம் ஒன்றே தமிழர் பலத்தினை அதிகரிக்கும்.  வடக்கின் விளை பொருட்கள், உற்பத்திகள் என்பன தெற்கையும், அதனைத் தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகுமாயின் வடக்கின் பொருளாதாரம் மேலும் முன்னோக்கிச் செல்லும். போரின் மூலம் அடிப்படைக் கட்டுமானங்கள் அனைத்தினையும் இழந்து தவிக்கும் எம் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளும் இலகுவாக்கப்பட்டால் மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

சிங்களம் தன் குடியேற்றத் திட்டத்திக்கு ரயில் போக்குவரத்தினை பயன்படுத்துமா இல்லையா என்ற கேள்விக்கு கண்டிப்பாக பயன்படுத்தும் என்பதுதான் பதில். ஆனால் ரயில் போக்குவரத்து இல்லாவிடினும் கூட சிங்களம் அதனைத் தான் செய்யும். சிங்கள குடியேற்றம், சிங்கள மயமாகுதல் என்பன அரசியல் பிரச்சனைகள். இந்த அரசியல் பிரச்சனையை அரசியலினூடாக தீர்ப்பதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய சக்திகள் முன்னெடுக்கும் அதே வேளை பொருளாதார முன்னேற்றத்திற்கான அனைத்து விடயங்களையும் செய்ய வேண்டும்.

அரசியல் பிரச்சனை தீர்க்கபட்ட பின்பு தான், விடுதலை கிடைத்த பின்புதான் அபிவிருத்தி என்றால் சுடுகாடாக போயிருக்கும் எம் மண் மேலும் மேலும் மக்கி போக வைக்கத் தான் செய்ய முடியும்.

எல்லாவற்றினையும் இழந்து நிற்கும் வேளையில் கிடைக்கும் சிறு துரும்பும் கூட எமக்கு உதவிகரமானதாக மாற்றுவதில் தான் எம் எதிர்காலம் தங்கியுள்ளது. அது அரசியல் என்றாலும் சரி, பொருளாதாரம் என்றாலும் சரி.

என்ன  எழுதலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்

உங்களது பதிலிலிருந்து  தொடங்கலாம்  என்று இன்று தோன்றியது...

ரயில்  வந்துவிட்டது

சிங்களம் அதை வேறு நோக்கத்துக்காக விட்டது

சுயநலமிருக்கு

ஆபத்திருக்கு என்பதற்கப்பால்

ரயில் ஓடத்தான் போகிறது

அதை  சிங்களம் பாவிக்கத்தான்போகிறது

ஆனால் தமிழர்????

எனது  கருத்து என்னவெனில்...

யார்   குற்றியாவது அரிசியாகணும் என்று நினைப்பவன் நான்.

அந்தவகையில்

சிங்களவனை ரயிலடிக்கு கூட்டிவரும் 

பெரும் பணியை செய்ய  அவனிடம்  பெரும் பலம் கொண்ட அரசு இருக்கிறது..

அது தனது பணியை  ஒற்றுமையாக

நீண்ட  கால தூரநோக்கோடு  செய்தபடியே  இருக்கிறது..

இப்போ

பத்து பதினைந்து கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும்

தமிழரால் இன்றைய நிலையில் ரயிலை வைத்து வருமானத்தைப்பெருக்கமுடியாது..

அப்படியாயின் தமிழனை அவனது கிராமங்களிலிருந்து

ரயிலடிக்கு கொண்டு வந்து

அதன் பயனை அவனடைய 

செய்யப்போவது யார்??

இரண்டு வழிகள் தான் தமிழனுக்குண்டு

ஒன்று  அங்குள்ள  தலைவர்கள்

அடுத்தது புலம் பெயர்ந்த மக்கள்.......

எமது தேவையறியாது

தருபவற்றை துரும்பாகத்தன்னும் பயன்படுத்தாது

எமது பலமறியாது

நாம் தூங்குகின்றோம்.. :( 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவை. சிங்களம் ரயில் வண்டியூடாக வந்து குடியேற்றம் செய்யும் என்பது நகைப்பிற்கிடமானது. மக்கள் கால்நடையாகத்தான் பிரயாணம் செய்யவேண்டும் என்பதுதான் கனபேருக்கு விருப்பம் போலை!

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட முன்னேற்றமான சேவைகள் வரக்கூடாது என்பதும் இங்குள்ளவர்களின் அங்குள்ளவர்களின் விருப்பம் போல. எமது மக்கள் சிங்களவன் போடுவதை மட்டுமே அனுபவிக்கனும் என்று எழுதி வைப்பதை தான்.. இங்கு கண்டிக்கிறார்களே தவிர... எமது மக்கள் சர்வதே தரத்திற்கு ஏற்ப உரிமை.. வசதி.. வாய்ப்புக்களை.. வேலை.. பொருண்மிய வசதிகளைப் பெறக் கூடாதுன்னு யாரும் இங்கு கருத்து வைக்கல்ல..!!! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு அரசு எது செய்தாலும் குற்றம் பிடிக்கும் புலம்பெயர் தமிழர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேவையறியாது

தருபவற்றை துரும்பாகத்தன்னும் பயன்படுத்தாது

எமது பலமறியாது

நாம் தூங்குகின்றோம்.. :( 

அருமையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு அரசு எது செய்தாலும் குற்றம் பிடிக்கும் புலம்பெயர் தமிழர்கள் 

யாழுக்கு சிங்கள அரசு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்குது. அதை எல்லாம் புலம்பெயர் தமிழர்கள் செய்ய வேண்டும் என்று சிங்கள அரசே அப்பப்ப கூவவும் செய்கிறது. யுத்தம் செய்த போது தமிழர்களை அழிக்க உலகை ஒன்று திரட்டிய சிங்களம்.. இப்போ தமிழர்களை வாழவைக்க ஏன் உலகை.. ஒன்று திரட்டக் கூடாது..???!

இன்று யாழுக்கு ரெயில் விடுவது சிங்கள அரசு அல்ல. தண்டவாளம் இந்தியா. ரயில் சீனா. அதுவும் சீனாவில் கழிச்சுவிடப்பட்ட ரெயில்கள் இங்கு..!!

இரண்டாம் உலகப் போருக்குப் பின் தான் ஐரோப்பா துரித நவீன வளர்ச்சி கண்டது. போரின் பின்னான மீள் கட்டுமானங்கள் நவீன மயப்படுத்தப்பட்டன. இன்றைய நவீன ஐரோப்பாக இரண்டாம் உலகப் போரின் வெகுமதி என்றால் கூட தப்பில்லை.

ஆனால்.. நாங்கள் போராலும் அழிந்து.. மறுசீரமைப்பிலும்.. பிந்தங்கி போவது என்றால்.. அப்படியான திட்டங்களை அவசரசப்பட்டு வரவேற்கனும் என்று கிடையாது. தமிழர்களுக்கு எது தேவை என்பதை அவர்களே தீர்மானிக்கவும்.. கேட்டுப் பெறவும் உரிமை வேண்டும். அதை முதலில் உங்கட சிங்கள அரசைக் கொடுக்கச் சொல்லுங்க. இந்திய தண்டவாளத்தில்.. சீன ரயிலில்.. சிங்கள குடியேற்றங்களை அப்புறம் செய்துக்கலாம். இதுக்கு காட்டும் அவசரத்தை ஏன் உரிமை வழங்குவதில் காட்ட முடியுதில்லை என்பது தான் கேள்வியே..????! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
இதுக்கு காட்டும் அவசரத்தை ஏன் உரிமை வழங்குவதில் காட்ட முடியுதில்லை என்பது தான் கேள்வியே..????! :icon_idea::)
கொச்சியில் தான் உரிமை வரும் ....ஆகவே முதலில் கொச்சியை வரவிடுங்கள் :D........ 40வருடங்களுக்கு முன்பு இந்த வசதிகள் யாவும் வடபகுதியில் இருந்தது இவற்றை அழித்தவர்கள் யார் என்பதை தயவு செய்து மறந்துவிடாதீர்கள்.......யாழ் பழைய சந்தை,நவீன சந்தை.....தமிழ்ராச்சி மாநாடு.....
  • கருத்துக்கள உறவுகள்

சரி, கோச்சி வேண்டாம் எண்டுறியள், ரோட்டும் வேண்டாம் எண்டுறியள். உரிமையைத் தா பிறகு நாங்கள் புலட்டெ விடுவம் எண்டுறியள். அப்ப உரிமை வரும் வரைக்கும் சனத்தைக் காயவிடலாம் எண்டுறியளோ? கோச்சியும், மின்சாரமும், வீதிகளும் சகலவசதிகளும் இருந்த போதே ஒரு அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரண்டார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் உரிமைக்காக போராடுவார்கள் என நினைப்பது மிகவும் கீழ்த்தரமானது.

நாட்டுக்கு வெளியால இருக்கிற சனம், நாட்டில இருப்பவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் எனக் கூற உரிமையில்லை. அங்கிருப்பவர்களே இனிவரும் காலங்களில், அவர்களுக்குத் தேவையானதை பார்த்துக் கொள்வார்கள். காசு பணம் அனுப்புபவர்களும் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து அங்கிருப்பவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க விட வேண்டும். அடுத்த வெளிநாட்டுத் தலைமுறை (இன்னுமொரு 20/30 வருடத்தில்) ஊரிலிருப்பவர்களுக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.  

புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய விரும்பினால், அங்கிருப்பவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்ற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது ஆடு மாடு கோழி வளர்ப்பது தாண்டி கைத்தொழில், உற்பத்தித் துறைகளின் அபிவிருத்தியாக மாற வேண்டும். உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து பலதிட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. MAS holdings அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் அவர்களின் ஆடை உற்பத்தி சார்ந்து ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்க இருக்கிறார்கள். ABANS recycling காக்கை தீவு கழிவுப் பொருட்களில் இருந்து உலோகங்கள், கடதாசிப் பொருட்கள், கண்ணாடிகளை வேறு பிரித்து மீள் உற்பத்தி நடவடிக்கைகளில் உள்ளீடாக பயன்படுத்தும் திட்டத்தைப் பகுதியாக நடைமுறைப்படுத்துகிறார்கள், நெஸ்லே கிளிநொச்சியில் பால்பதனிடும் தொழிற்சாலையை ஏற்றகனவே ஆரம்பித்து விட்டார்கள், லங்கா கேனரீஸ் (MD) நிறுவனம் பழப்பாகு, பழரச உற்பத்தி தொழிற்சாலையை யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கும் திட்டமொன்று வைத்திருக்கிறார்கள்.

மக்களின் பொருண்மிய மேம்பாட்டை உறுதி செய்வது மிகவும் அவசியமாகும். 

. அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் உரிமைக்காக போராடுவார்கள் என நினைப்பது மிகவும் கீழ்த்தரமானது.....ஹி..ஹி.....

 MAS holdings அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் அவர்களின் ஆடை உற்பத்தி சார்ந்து ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்க இருக்கிறார்கள். ABANS recycling காக்கை தீவு கழிவுப் பொருட்களில் இருந்து உலோகங்கள், கடதாசிப் பொருட்கள், கண்ணாடிகளை வேறு பிரித்து மீள் உற்பத்தி நடவடிக்கைகளில் உள்ளீடாக பயன்படுத்தும் திட்டத்தைப் பகுதியாக நடைமுறைப்படுத்துகிறார்கள், நெஸ்லே கிளிநொச்சியில் பால்பதனிடும் தொழிற்சாலையை ஏற்றகனவே ஆரம்பித்து விட்டார்கள், லங்கா கேனரீஸ் (MD) நிறுவனம் பழப்பாகு, பழரச உற்பத்தி தொழிற்சாலையை யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கும் திட்டமொன்று வைத்திருக்கிறார்கள்.. .....இதெல்லாம் "எங்கட" ராஜ்யத்திலே தொடங்கினது..பொதுகட்டமைப்புகு சொந்தமா இருந்தது :) ...இப்போ போருக்கு பிறகு சிங்களவனை கொண்டு தனியார் களவெடுத்து தங்களின் பெயரில் திருப்பி செய்கிறார்கள் மக்களை சூறையாட போகிறார்கள்.(எங்களிட்டை அனுமதி பெறாமல் செய்யுறது எல்லாம் அப்படித்தான்)....சோவியத் யூனியன் உடைந்த பொழுது  அங்குள்ள  பெரும் தொழிழ்வளங்களை தனியார் வெளிநாடுகளின் உதவியுடன் கொள்ளை அடித்து தனியுடைமை ஆக்கியது போல....

இப்படி ஆயிரம் கருத்துகள் வரும்.....பாருங்கோவன்....சனத்துக்கு போக்குவரத்துக்கு வழி செஞ்சாலும் பிழை (அதுவும் முன்னிருந்ததை திருத்தியது மட்டுமே.....) எல்லாத்தையும் தலைவர் பைபிள்/குரான் மாதிரி எழுதி வைத்திருந்தா பிரச்சனை வந்திருக்காது.... :)

  • கருத்துக்கள உறவுகள்

சரி, கோச்சி வேண்டாம் எண்டுறியள், ரோட்டும் வேண்டாம் எண்டுறியள். உரிமையைத் தா பிறகு நாங்கள் புலட்டெ விடுவம் எண்டுறியள். அப்ப உரிமை வரும் வரைக்கும் சனத்தைக் காயவிடலாம் எண்டுறியளோ? கோச்சியும், மின்சாரமும், வீதிகளும் சகலவசதிகளும் இருந்த போதே ஒரு அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரண்டார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் உரிமைக்காக போராடுவார்கள் என நினைப்பது மிகவும் கீழ்த்தரமானது.

நாட்டுக்கு வெளியால இருக்கிற சனம், நாட்டில இருப்பவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் எனக் கூற உரிமையில்லை. அங்கிருப்பவர்களே இனிவரும் காலங்களில், அவர்களுக்குத் தேவையானதை பார்த்துக் கொள்வார்கள். காசு பணம் அனுப்புபவர்களும் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து அங்கிருப்பவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க விட வேண்டும். அடுத்த வெளிநாட்டுத் தலைமுறை (இன்னுமொரு 20/30 வருடத்தில்) ஊரிலிருப்பவர்களுக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.  

புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய விரும்பினால், அங்கிருப்பவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்ற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது ஆடு மாடு கோழி வளர்ப்பது தாண்டி கைத்தொழில், உற்பத்தித் துறைகளின் அபிவிருத்தியாக மாற வேண்டும். உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து பலதிட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. MAS holdings அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் அவர்களின் ஆடை உற்பத்தி சார்ந்து ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்க இருக்கிறார்கள். ABANS recycling காக்கை தீவு கழிவுப் பொருட்களில் இருந்து உலோகங்கள், கடதாசிப் பொருட்கள், கண்ணாடிகளை வேறு பிரித்து மீள் உற்பத்தி நடவடிக்கைகளில் உள்ளீடாக பயன்படுத்தும் திட்டத்தைப் பகுதியாக நடைமுறைப்படுத்துகிறார்கள், நெஸ்லே கிளிநொச்சியில் பால்பதனிடும் தொழிற்சாலையை ஏற்றகனவே ஆரம்பித்து விட்டார்கள், லங்கா கேனரீஸ் (MD) நிறுவனம் பழப்பாகு, பழரச உற்பத்தி தொழிற்சாலையை யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கும் திட்டமொன்று வைத்திருக்கிறார்கள்.

மக்களின் பொருண்மிய மேம்பாட்டை உறுதி செய்வது மிகவும் அவசியமாகும். 

அருமையான வரவேற்புக்குரிய கருத்து. ஆனாலும் 1956ம் ஆண்டிலிருந்து சிங்களவன் உடைக்க, உடைக்கத் தமிழனும் கட்டியெழுப்பியே வந்துள்ளான். இப்போது சிங்களவனே கட்டித்தருவதால் உடைக்கமாட்டான் என்ற நம்பிக்கையும் இதில் இருக்கலாம். நம்பிக்கைதானே வாழ்க்கை.... வேலியற்ற பயிருக்கு பாதுகாப்பு இல்லை!. வேலியொன்றை (தடையற்ற தமிழன் ஆட்சியை) உறுதிப்படுத்தல் மிகவும் அவசியமானது!!

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கை நோக்கி அவை வருகினம்.. இவை வருகினம்.. என்று சொல்லிக்கிறது நல்லாத்தான் இருக்குது. ஏன் வருகினம்.. என்ற கேள்வியும் அங்கு முக்கியமானது.

எமது வளங்களில் பயனடைந்து கொண்டு எமது மனித வலுவை பயன்படுத்தாமல்... தென்பகுதியில் இருந்து கொண்டு வருவது தான்.. பிரச்சனையின் மையமே.

யாழ் நெடும் வீதிகளை செப்பனிடுபவர்கள் சிங்களவர்கள். யாழ் தொடரூந்து வழித்தட வேலைகளில் ஈடுபடுவோர் அதிகம் சிங்களவர்கள்.. அதேபோல்.. சிங்கள முதலாளிகள்.. எமது வளங்கள் மீது காட்டும் ஆர்வம்..என்பதுக்கும் அப்பால் சிங்கள அரசின் எடுபிடிகளாக இருந்து தான் தமது முதலீடுகளை கருமங்களை ஆற்ற வேண்டிய தேவை. அங்கும் சிங்களவர்கள் தான் முதன்மைப்படுத்தப்படுகின்றனர்.

எமது பிராந்திய வளத்தில்.. எமது மனித வலு மூலதனப்படுத்தப்படுவதற்கும்.. உழைப்பை.. ஊதியத்தை பெறுவதற்கும் பதிலாக.. அநேக உழைப்பும்.. ஊதியமும் வெளியாரிடம் போவது தான் எமது மக்கள் பொருண்மிய ரீதியில் பின்னடைந்தும்.. தொழில்நுட்ப.. அறிவியல் ரீதியில் அக்கறை இன்றியும்.. பயிற்சிகள் இன்றியும் இருக்கக் காரணமாகி உள்ளது.

இங்கு சிலர் சிங்கள பல்தேசிய நிறுவனங்கள் வடக்கை நோக்கி வருவதை இட்டு ஆசுவாசப்படுகிறார்கள். அதே நிறுவனங்கள் எமது வளத்தை மலிவாகப் பயன்படுத்தும் அதேவேளை தமது மனித வலுவை நோக்கி உழைப்பையும் ஊதியத்தையும்.. இலாபத்தையும் கொண்டு செல்வது பற்றி அக்கறை கொண்டிருப்பவர்களாகத் தெரியவில்லை.

எமது வளத்தை எமது மனித வலுமூலம்.. உற்பத்திகளாக்கும் போது தான் எமது மக்களின் உழைப்புக்கு ஊதியமும்.. அதன் மூலமான சமூகப் பொருண்மிய மீட்சிகளும் ஏற்படும். பெரும் தென்னிலங்கை நிறுவனங்கள் வடக்கை நோக்கி படையெடுப்பதால் மட்டும் இது நடந்து விடாது. அப்படி நடக்கும் என்று சொல்வது ஒரு ஆய்வுதிறனற்ற கருத்தியலாகும்..!!

இது விடயத்தில் எமது மாகாணங்கள் அது வடக்காய் இருந்தால் என்ன கிழக்காய் இருந்தால் என்ன அவதானமாக இருப்பது அவசியம். எமது மக்களை புலம்பெயர் மக்களின் வருவாயில் தங்கி இருக்க விட்டு.. அந்தப் பணத்தை தமது முதலீடுகள் மூலம் அள்ளிச் செல்லும் நோக்கமும் இந்தப் படையெடுப்புகளின் பின்னால் உள்ளது..! எமது சமூகத்திற்கு.. இந்த முதலீடுகளால் எத்தனை சதவீதம் நன்மை என்பதை இங்கு அந்த நிறுவனம் வருகுது.. இந்த நிறுவனம் வருகுது என்று சொல்பவர்கள் தெளிவாகச் சொல்வார்களா..??! அது எப்படி சாத்தியம் என்றும் சொல்வார்களா..???!

யாழில் இயங்கும் தென்னிலங்கையை சேர்ந்த பல்பொருள் அங்காடிகளில் கூட சிங்களவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையை காண்கிறோம். யாழில் சிங்களவரின் சனத்தொகை என்ன..??! அங்கு தமிழர்களுக்கு ஈடாக சிங்களவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய தேவை என்ன..???! :rolleyes::):icon_idea:

Thumpalayan, on 11 Oct 2013 - 01:39 AM, said:

    நான் பலகாலமாக சொல்லி வருவது இதைத்தான். அதாவது யாழில் இருக்கும் potential எமக்கு இன்னும் நன்கு புரியவில்லை. அதைப் புரிந்தவர்கள் சரியான விதங்களில் முதலீடு செய்து லாபமீட்டுகிறார்கள். சிறிலிங்கத்துக்கும், நிதர்சனுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நீங்கள் என்ன துறையில் முதலிட்டிருந்தாலும் ஊரில் இருக்கும் சில குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்திருப்பது மிக நல்ல விடயம். நாங்கள் முதலீடு செய்யாவிட்டால் கண்டிப்பாக யாரோ ஒருத்தன் முதலீடு செய்யவும் உழைக்கவும் போறான்.

    தயா அண்ணா குறிப்பிட்டது போல எமது கடல்பகுதி மிகவும் செழிப்பானது. குறிப்பாக கடலட்டை, சிங்கறால், நண்டு போன்றவற்றைப் பிடித்து ஏற்றுமதி செய்கிறார்கள். வடமராட்சி கிழக்கிலே பலர் கடலட்டை தொழில் மூலம் நன்றாக உழைக்கிறார்கள். நீர்கொழும்பில இருந்து வந்து நிண்டு மீன் பிடிச்சுக்கொண்டு போறாங்கள், அப்படி இருக்கிறது எமது நிலை.

    நெடுக்ஸ் அண்ணா, உங்களிடம் சில கேள்விகள்.

    1) புலத்தில் இருக்கும் எம்மவர்களில் எத்தனை பேர் உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்? இங்கிருக்கும் சொந்த வியாபாரம் செய்யும் எம்மவர்களில் அநேகர் தமிழ்க்கடை/எதோ ஒரு கடை வைத்திருக்கிறார்கள், நிபுணர்கள் தங்கள் துறைசார்ந்த (வைத்தியர், கணக்கியலாளர், பொறியியலாளர்) சேவை வழங்கும் கடைகளை வைத்திருக்கிறார்கள்    

    2) என்ன மாதிரியான முதலீடுகள் ஊரிலே செய்யலாம் எனக் கருதுகிறீர்கள்?

    3) ஊரின் தற்போதைய demand/supply, market share, costing பற்றிய ஏதாவது கள அனுபவம் இருக்கிறதா? கோடி கோடியாக முதலீடு செய்து ஒரு தொழிற்சாலையைப் போடச்சொல்லி யாரும் கேட்கவில்லை, சிறிய முதலீடுகளை பலர் செய்வது பற்றித்தான் கதைக்கிறோம். (கடல் தொழில் செய்பவர்களுக்கு ஒரு உருப்படியான வலை, வள்ளம் போன்ற SME முதலீடுகள்) 

    4) பெரிய முதலீடுகளை சிங்களம் அனுமதிக்காது என்று எந்த அடிப்படையிலே சொல்லுகிறீர்கள்? BOI ஊடாக உங்களுக்கு முதலிடும் விருப்பம் இருந்தால் அதற்கு எதுவிதமான தடையும் இல்லை.

    சலாப்பாது, பந்தி பந்தியாக இல்லாது, வெறும் கூகிள்/விக்கிப்பீடியா சாராத நேரடிப் பதில்களா இருந்தா நல்லம். பதில் தெரியாதவற்றிட்கு தெரிந்தமாதிரி பதில் எழுத வேண்டிய அவசியமும் இல்லை. 

    குறிப்பு - மாகாண சபையிலே எனக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாததாதல் அதைப் பற்றி எழுதுவதை வேணுமென்றே தவிர்த்திருக்கிறேன். ஊரிலே போய் முதலீடு செய்வதற்கும், மாகாண சபைக்கும் தொடர்பே இல்லை.

நெடுக்ஸ் அண்ணா அல்ல. நெடுக்ஸ் தம்பி. முதலில் அதனை திருத்திக் கொள்ளுங்கள்.

1.புகலிடத்தின் வர்த்தக நிலைமை வேறு. தாயகத்தில் உள்ள நிலைமை வேறு. தாயகம் எமது வளத்தை கொண்டது. புகலிடம்.. அந்நிய வளத்தைக் கொண்டது.  எமது வளத்தை நாமே எமது மனித வலுவை பயன்படுத்தி.. உற்பத்தி ஆக்குதல் வேண்டும். இது கடந்த போராட்ட காலத்திலும் வலியுறுத்தப்பட்டு வந்த விடயம் மட்டுமன்றி.. படகுக் கட்டுமான ஆலைகள் உட்பட..பல ஆலைகளும் கூட கட்டப்பட்டிருந்தன. அதன் மூலம் உள்ளூர் மக்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.

வர்த்தக உலகில் சூழல் என்பது எல்லாம் இடமும் ஒரே மாதிரியானதல்ல. இந்தப் புரிதல் முதலில் வர வேண்டும்.

2. முதலீடுகள் என்பது எமது வளப் பயன்பாட்டையும் மக்கள் வலுப் பயன்பாட்டையும் தேவைகளையும் முன்னிலைப்படுத்துவதாக இருக்கலாம். இதனை மாகாண நிர்வாகத்துடன் இணைந்து கலந்துரையாடி சரியான நீண்ட.. மற்றும் குறுகிய கால திட்டமிடல்களோடு செய்ய வேண்டும். வெறுமனவே சிங்கள முதலாளிகளை ஊருக்கு கொண்டு வருவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. எமது வளமும்.. பொருண்மியமும் இன்னும் சிங்களத்தை பலப்படுத்தவே அது உதவும்..!

3. ஒரு வர்த்தகத்திற்கு அடிப்படை என்ன என்ற புரிதல் இன்றிய வினா.

வர்த்தகம் ஒன்றை கொண்டு செல்ல வேண்டின்.. அந்தப் பகுதியின் அரசியல் ஸ்திரத்தன்மை என்பது மிகவும் முக்கியமான காரணி. அது தாயகத்தில் இல்லை. அத்துடன்.. பிரிட்டன் போன்ற நாடுகளே தமது முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை பரிசீலிக்க பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளன. காரணம்.. அரசியல் தலையீடுகள். ஊழல்கள். மற்றும் முறைகேடுகள்..! இது தமிழர்களின் முதலீடுகள் மீதும் சிங்களத்தால் செய்யப்படுகின்ற ஒன்று. இது பன்னெடுங்காலம் நடக்கின்ற விடயம். தென்னிலங்கையில் கொடிக்கட்டிப் பறந்த தமிழ் முதலீட்டாளர்களுக்கு பாடை கட்டிய சிங்களத்தின் கடந்த காலத்தையும் இந்த இடத்தில் மீட்டுக் கொள்வது நல்லது.

4. சிம்பிள்.. பிரித்தானியாவின் முதலீட்டாளர்கள் மீதான எச்சரிக்கை. இதனை விட வேறு என்ன ஆதாரம்.. தேவை..?????!!! :lol::icon_idea:

தும்ப்ஸ் மிக யதார்த்தமாக எழுதியுள்ளீர்கள்.அடிக்கடி போய்வருவதால் என்னவோ .

மக்களின் அழிவில் அரசியல் செய்ய நினைப்பவர்களையும் கனவில் ராக்கெட்டுகள் விடுபவர்ளையும் கண்டும் காணாமல் விடுவதுதான் நல்லது .

இஞ்ச சிலபேர் புளுகி அடிக்கிறத பார்த்தால்.. சிறீலங்காவில்.. மெற்றோவும்.. புள்ளட்டும் ஓடிக்கொண்டிருப்பது போல படம் காட்டினம். இன்னும்.. இந்திய.. சீன தயாரிப்பு அந்த பழைய கடகட கொட்டி தான் ஓடிட்டு இருக்குது. :lol:

வவுனியாவில் இருந்து நடந்து.. வந்த சேவைகள்.. இப்ப.. யாழ்ப்பாணம் வரை நீட்டப்பட்டுள்ளது. அவையே நிற்பாட்டினம். அவையே நீட்டினம். இதில எங்கட ஆக்கள் ஐயோ.. கோச் வருகுது. ஐயோ.. பாதை வருகுது என்று அதுவும் வெளிநாடுகளில் வசிக்கிறவை போய் வந்து போடுற கூச்சல் தான் அதிகமாகக் கிடக்குது.

அடங்குங்க அண்ணங்களா.. உலக தொடரூந்து சேவைகள் நவீனமயமாகி.. உள்ள நிலையில் சிறீலங்கா இன்னும்.. அதில் பிந்தங்கிய நிலையில் தான் உள்ளது. இந்தியாவில் வளர்ச்சி வந்தால் தான்.. அது சிறீலங்காவையும் வளர விடும். இன்றேல்.. அதே கடகட கொட்டி தான் தஞ்சம். :lol::icon_idea:

கொழும்பில ஏறினால் சொகுசா போய் யாழ்பாணம் இறங்கலாம் என்று எங்கட ஆக்கள் படுற பாடு இருக்கே, அது சரி ரோசம் இல்லாமல் சிரீலங்கன் ஏயர்லைன்சில் போற ஆக்கள் ஆச்சே!!!!!!, பேசாமல் கட்டுநாயக்கா ஊடாக யாழ் போற ரெயிலை விட்டால் ரயில் டிக்கட்டை பிலேன் டிக்கட்டுடன் சேர்த்து பதிவு பண்ண வசதியாகவெல்லே இருக்கும் , என்று எங்கட ஆக்கள் மகிந்தவிட பெட்டிசன் போட்டாலும் போடுவீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா அல்ல. நெடுக்ஸ் தம்பி. முதலில் அதனை திருத்திக் கொள்ளுங்கள்.

1.புகலிடத்தின் வர்த்தக நிலைமை வேறு. தாயகத்தில் உள்ள நிலைமை வேறு. தாயகம் எமது வளத்தை கொண்டது. புகலிடம்.. அந்நிய வளத்தைக் கொண்டது.  எமது வளத்தை நாமே எமது மனித வலுவை பயன்படுத்தி.. உற்பத்தி ஆக்குதல் வேண்டும். இது கடந்த போராட்ட காலத்திலும் வலியுறுத்தப்பட்டு வந்த விடயம் மட்டுமன்றி.. படகுக் கட்டுமான ஆலைகள் உட்பட..பல ஆலைகளும் கூட கட்டப்பட்டிருந்தன. அதன் மூலம் உள்ளூர் மக்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.

வர்த்தக உலகில் சூழல் என்பது எல்லாம் இடமும் ஒரே மாதிரியானதல்ல. இந்தப் புரிதல் முதலில் வர வேண்டும்.

2. முதலீடுகள் என்பது எமது வளப் பயன்பாட்டையும் மக்கள் வலுப் பயன்பாட்டையும் தேவைகளையும் முன்னிலைப்படுத்துவதாக இருக்கலாம். இதனை மாகாண நிர்வாகத்துடன் இணைந்து கலந்துரையாடி சரியான நீண்ட.. மற்றும் குறுகிய கால திட்டமிடல்களோடு செய்ய வேண்டும். வெறுமனவே சிங்கள முதலாளிகளை ஊருக்கு கொண்டு வருவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. எமது வளமும்.. பொருண்மியமும் இன்னும் சிங்களத்தை பலப்படுத்தவே அது உதவும்..!

3. ஒரு வர்த்தகத்திற்கு அடிப்படை என்ன என்ற புரிதல் இன்றிய வினா.

வர்த்தகம் ஒன்றை கொண்டு செல்ல வேண்டின்.. அந்தப் பகுதியின் அரசியல் ஸ்திரத்தன்மை என்பது மிகவும் முக்கியமான காரணி. அது தாயகத்தில் இல்லை. அத்துடன்.. பிரிட்டன் போன்ற நாடுகளே தமது முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை பரிசீலிக்க பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளன. காரணம்.. அரசியல் தலையீடுகள். ஊழல்கள். மற்றும் முறைகேடுகள்..! இது தமிழர்களின் முதலீடுகள் மீதும் சிங்களத்தால் செய்யப்படுகின்ற ஒன்று. இது பன்னெடுங்காலம் நடக்கின்ற விடயம். தென்னிலங்கையில் கொடிக்கட்டிப் பறந்த தமிழ் முதலீட்டாளர்களுக்கு பாடை கட்டிய சிங்களத்தின் கடந்த காலத்தையும் இந்த இடத்தில் மீட்டுக் கொள்வது நல்லது.

4. சிம்பிள்.. பிரித்தானியாவின் முதலீட்டாளர்கள் மீதான எச்சரிக்கை. இதனை விட வேறு என்ன ஆதாரம்.. தேவை..?????!!! :lol::icon_idea:

முதலிலே, இது சுவை அண்ணாவின் கருத்து அல்ல. வேறொரு திரியிலே, புலமும் அது சம்பந்தமான முதலீடுகளும் பற்றிய கருத்தாடலில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு நீங்கள் விடை கொடுத்திருக்கவில்லை. அதே கேள்விகள் இத்திரிக்கும் பொருந்தும் என்பதால் அவர் அதை இங்கு மேற்கோள் காட்டியிருக்கிறார் என நினைக்கிறேன்.

1) எமது வளத்தைப் பாவித்து நாமே உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்ல விடயம், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இது எந்தளவிற்கு சாத்தியமானது? நீங்கள் சொல்லுவது குடிசைக் கைத்தொழில்களுக்கு ஓரளவு பொருந்தினாலும் நடுத்தர பெரிய உற்பத்தி நடவடிக்கைகளை உள்ளூர் வளங்களை, தொழில்நுட்ப அறிவை மட்டும் கொண்டு ஆரம்பித்து நடத்துவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு இந்திய கார், மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி, கீரோ, டாட்டா நிறுவனங்கள் முறையே ஜப்பானிய சுசுக்கி, கொண்டா, இங்கிலாந்து லேலண்ட் நிறுவனங்களுடன் இணைந்து கார்களை, மோட்டார் சைக்கிள்களை தயாரித்தன. தொழிலை ஓரளவு பழகிய பின்னர் இப்போது தனியாக உற்பத்தியில் ஈடுபடுகின்றன.

2) நல்ல விடயம், இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றகனவே நடைபெறுகின்றன. காற்றாலை மூலம் மிசார உற்பத்தித் திட்டம் வடமாகான சபையின் நிர்வாகத்தின் பங்களிப்புடன் நடை பெறுகிறது. அதிகாரங்கள் எதுவுமற்ற மாகான சபை எதுவும் உதவி செய்யும் நிலையில் இல்லை என்றே நான் கருதுகிறேன். அவர்கள் அரசியல் செய்யவும், மக்களைப் பேய்க்காட்டவுமே இவை பயன்படும். சுரேஷ் பிரேமச்சந்திரன் அழையா விருந்தாளியாக வந்து சான்றிதழ் குடுத்ததும் ஐங்கரநேசன் வேறுயாரோ குடுத்த ஆடுகளை தான் குடுத்தமாதிரி புகுந்து குடுத்ததும் நல்ல உதாரணங்கள்.

3) நீங்கள் இப்பிடிச் சொல்லுகிறீர்கள் BOI ஆதரவுடன் இலங்கையில், தெற்குப் பகுதியில் எத்தனையோ நிறுவனங்கள் வந்து இறங்கியிருக்கின்றன என்று பாருங்கள். பிரிட்டனே பிச்சை எடுக்க வேண்டிய நிலையில இருக்குது, இதுக்குள்ள இலங்கையில என்னத்தைப் பிடிச்சு முதலிடப் போகினம்? சீனா இருக்கும் வரைக்கும் இலங்கைக்கு வேறு யாருமே தேவையில்லை.

"சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக போயிங் 747 என்ற விசேட விமானத்தில் 170 பேர் கொண்ட குழுவுடன் இன்று சிறீலங்காவை வந்தடைந்தார்.  சிறீலங்காவில் தங்கியிருக்கும் அவர் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார்"

4) பிரித்தானியாவின் முதலீட்டாளர்கள்? :lol:  பிரித்தானியாவின் கம்பனிகளையே இந்தியக் கம்பனிகள் வாங்கிக்கொண்டு போகுது, நாடுகளை அடிமைப் படுத்தி சுரண்டிய செல்வமெல்லாம் அழிந்சுபோச்சுது. மகாராணியே கெதியில பிச்சை எடுக்க வேண்டி வரும் :icon_idea: . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.