Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வந்தது யாழ்தேவி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையின் உத்தியோகபூர்வ வெள்ளோட்டம்-

22 செப்டம்பர் 2014

Bookmark and Share

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:-

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையின் உத்தியோகபூர்வ வெள்ளோட்டம்-

1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்தேவி புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் உத்தியோகப்பூர்வ வெள்ளோட்டம் இன்று 22-09-2014 காலை 11 மணிக்கு பளை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை சென்றடைந்தது.

பாரம்பரிய கைத்தொழில்கள் சிறுதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வட மாகாண ஆளுநாத் ஜி.ஏ. சந்திரசிறி,பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமக்றக் குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸமதிரி அலென்ரின் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, புகையிரத திணைக்கள உயரதிகாரிகள், இந்திய ஜகோன் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதத்தில் உத்தியோகபூர்வ வெள்ளோட்டத்தில் கலந்துகொண்டனர்.

வடக்குகான புகையிரத சேவை பணிகள் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரைக்கும் ஒரு கட்டமாகவும், கிளிநொச்சியிலிருந்து பளை வரை மற்றொரு கட்டமாகவும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் ஒரு கட்டமாகவும் நடைப்பெற்றது இதில் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான பணிகளே தற்போது முடிவுற்று எதிர்வரும் மாத்தில் இருந்து புகையிரத சேவைகள் இடம்றெவுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத போக்குவரத்து பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

ஒண்டு சொல்லுறன் கோவியாதேயுங்கோ.

முதல்ல உங்க ஊரில இருக்கும் மக்களுக்கு வீட்டுக்கு ஒரு மலசல கூடம் கட்டிக்கொடுங்கோ அப்புறம் எங்களுக்கு ரெயில்வே ஸ்டேசனுக்கு கூரை எப்படி போடுவது என்று வகுப்பெடுங்கோ :)

இந்த கூரையை வேய்ந்ததே உங்கள் பாரத மணித்திரு நாட்டினர் தானுங்கோ :)

உண்மையான  மாற்றுக்கருத்து...... :(  :(  :(

இந்தியாவை பகைத்துக்கொண்டு  எதுவும் எமக்குக்கிடைக்காது

அதே கை தான் இதையும் சொல்கிறது

:(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
புனர் நிர்மானப் பணிகள், திருத்தவேலைகள் செய்யும்போது, அச்சமயங்களில் உள்ள நவீன தொழில்நுட்பங்களுக்கும் அமைய வேலைகள் பின்பற்றப்படுவது வழமை. அது பின்பற்றப்படவில்லை என்பதை ராசவன்னியர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியன்மேல் உள்ள கடுப்பு, கோசன் சேயின் கண்களை மறைத்துவிட்டது போல் தெரிகிறது. ஆனாலும் அவரது கூற்று ஒன்று விளக்கமின்றி உள்ளது. 'அப்புறம் எங்களுக்கு ரெயில்வே ஸ்டேசனுக்கு கூரை எப்படி போடுவது என்று வகுப்பெடுங்கோ' என்றால் அதன் அர்த்தமென்ன? புனர் நிர்மானப் பணிகளைத் தமிழர்களிடம் ஒப்படைத்துள்ளனரா? உண்மையில் இந்தப்பணி அந்த மாகாண முதலமைச்சரின் ஆணைக்கும் அமையவே மேற்கொள்ள வேண்டும். போரின் காரணங்களைப் புதைத்துவிட்டு போரினால் ஏற்பட்ட அழிவுகளைச் சரிசெய்வதுபோன்றும், யாழ்மக்கள் தொடரூந்தையே வாழ்நாளில் காணதவர்கள் போன்றும் படம்காட்டுகிறார்கள்.  <_<
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நன்றி SLR,  இந்தியா மற்றும் IRCON. பல வருடங்களின் பின்னர் இந்தியா எமக்கு செய்த உருப்படியான ஒரு விடயம். இந்த போக்குவரத்து வசதிகளைப் பாவித்து சுற்றுலாத்துறை, வர்த்தக, உற்பத்தி, ஏற்றுமதி நடவடிக்கைளை கட்டியெழுப்ப வேண்டும்.  

உங்கள் கருத்தோடு  முழுதாய  உடன்படுகின்றேன்..

சிங்களம் அரசியலுக்காக செய்தாலும்

தமிழன் அதை எவ்வளவு பயன்படுத்தணும் என்பதே இன்றைய நிலை

உலகம் நவீன மயமாகிக்கிட்டு இருக்குது. இது இன்னமும் அரசியல் மயமாகிக்கிட்டே போகுது..????! :icon_idea::o

நானும் இதையே நினைக்கிறேன்...

பெரிய பெரிய அரசியல் மேதைகள் எண்டு தங்களை தாங்களே நினைத்து கொள்ளும் ஆக்கள் எல்லாரும் இதுக்காக அடையிற புளகாயிதம் கூட ஆச்சரியம் தான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வரை மட்டுமல்ல கேகேஎஸ் வரை யாழ் தேவி ஓடலாம். அதையிட்டு மக்கள் சந்தோசம் அடைகின்றார்கள் என்பது மிகவும் அபத்தமானது.
வடபகுதி முளுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த யாழ் தேவியினால் தமிழ் மக்களுக்கு எத்தனை பாதிப்புக்கள் வரும் என எதிர்காலம் தான் சொல்லவேண்டும்.
டக்லஸ் தனது இந்திய விஜயத்தின் போது வைத்த கோரிக்கை நிறைவேறியதாகப் புழகாங்கிதம் அடையலாம்.
ஆனால் சிங்கள ராணுவப்பிரசன்னத்திற்கிடையில் இந்த யாழ்தேவியின் பங்களிப்பு இனவழிப்பில் இன்னும் அதிக பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

சுற்றுலா என்ற பெயரில் சிங்கள இனவாதிகளினால்  தொடரப்போகும் கலாச்சாரச் சீரழிவிற்கும் இந்த யாழ் தேவிதான் காரணம் ஆக இருக்கப்போகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள வியாபாரிகளுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும். யாழ்ப்பாணத்திலை வேலை செய்யப் போகும் சிங்களவர்களுக்கும் வசதியாக இருக்கும். கொஞ்ச நஞ்சமிருந்த வேலை வாய்ப்பும் தமிழனுக்கு இல்லாமல் போகப் போகிறது. சிங்களவர்களும் தயிழ்ப் பெண்களோடு கூடிக் குலாவ வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வரை மட்டுமல்ல கேகேஎஸ் வரை யாழ் தேவி ஓடலாம். அதையிட்டு மக்கள் சந்தோசம் அடைகின்றார்கள் என்பது மிகவும் அபத்தமானது.

வடபகுதி முளுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த யாழ் தேவியினால் தமிழ் மக்களுக்கு எத்தனை பாதிப்புக்கள் வரும் என எதிர்காலம் தான் சொல்லவேண்டும்.

டக்லஸ் தனது இந்திய விஜயத்தின் போது வைத்த கோரிக்கை நிறைவேறியதாகப் புழகாங்கிதம் அடையலாம்.

ஆனால் சிங்கள ராணுவப்பிரசன்னத்திற்கிடையில் இந்த யாழ்தேவியின் பங்களிப்பு இனவழிப்பில் இன்னும் அதிக பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

சுற்றுலா என்ற பெயரில் சிங்கள இனவாதிகளினால்  தொடரப்போகும் கலாச்சாரச் சீரழிவிற்கும் இந்த யாழ் தேவிதான் காரணம் ஆக இருக்கப்போகின்றது.

வாத்தியார் அண்ணா, கடைசியாக நீங்கள் எப்போது யாழ்ப்பாணம் போனனீங்கள்?  கடைசியாக எப்போது யாழ்ப்பாணத்திலேயே தொடர்ச்சியாக வசித்த (1990 - 2014) உங்கள் உறவினர் அல்லாத ஒருவருடன் பேசினீர்கள்? எந்த அடிப்படையிலேயே, யாழ்தேவி ஓடுவதால் மக்கள் சந்தோசமடயவில்லை என்று கூறுகிறீர்கள்?

கலாச்சாரச் சீரழிவு என்றால் என்ன? ஆண், பெண் நண்பர்கள் வைத்திருப்பது கலாச்சாரச் சீரழிவா? வாகனம் மோட்டார் சைக்கிள் ஓடுவது கலாச்சாரச் சீரழிவா? புகைப்பிடிப்பது, மது அருந்துவது கலாச்சாரச் சீரழிவா? இவற்றை கோச்சியில வந்து சிங்களவன் பழக்குவதற்கு எம்மவர்கள் என்ன விரல் சூப்பும் பாப்பாக்களா? இவற்றில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்டவற்றயோ புலம் பெயர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் செய்வதில்லையா? இங்கு கருத்தெழுதும் எத்தனை பெற்றோரின் பிள்ளைகளுக்கு ஆண்/பெண் நண்பர்கள் பெற்றோருக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருக்கிறார்கள்? எத்தனை பேர் இரவு கிளப்பிங் என்று ஊர் மேய்கிறார்கள்? எத்தனை பேர் புகை/மதுபானம் பாவிக்கிறார்கள்?  இங்க இருக்கிறவர்கள் செய்தால் கலாச்சாரம் சீரழியாது அங்க இருக்கிறவர்கள் செய்தால் சீரழியும். நல்ல நியாயமப்பா. தமது இணையங்களின் traffic ஐ அதிகரிக்க சில மூன்றாம் தர இணையங்கள் கலாச்சாரம் சீரழிவு என்று புலம்புவதை சீரியஸாக யாரும் எடுப்பதில்லை.

A 9 ல சிங்களவன் சுற்றுலா வாறதில்லையா? உங்கள் கருத்துப்படி பார்த்தால் யாழ்தேவி வந்தே இருக்கக் கூடாது. உங்களுக்கு என்ன, நீங்கள் சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், கனடா, நோர்வே, அவுஸ், டென்மார்க், அமேரிக்கா என்று எதோ ஒரு நாட்டில் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவிப்பீர்கள். யாழ்ப்பணத்தில இருக்கிறவன் ஒரு செந்தளிப்பும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் காஞ்சு கருவாடாக இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி.கொஞ்சம்,கொஞ்சமாக வட,கிழக்கு அபிவிருத்தி அடைந்து கொண்டு வர வேண்டும். அங்கு உள்ள மக்களும் புலத்தில் இருப்பவர்களை தங்கி இருக்காமல் சுயமாக,சொந்தக் காலில் நிற்க வேண்டும்

A 9 ல சிங்களவன் சுற்றுலா வாறதில்லையா? உங்கள் கருத்துப்படி பார்த்தால் யாழ்தேவி வந்தே இருக்கக் கூடாது. உங்களுக்கு என்ன, நீங்கள் சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், கனடா, நோர்வே, அவுஸ், டென்மார்க், அமேரிக்கா என்று எதோ ஒரு நாட்டில் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவிப்பீர்கள். யாழ்ப்பணத்தில இருக்கிறவன் ஒரு செந்தளிப்பும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் காஞ்சு கருவாடாக இருக்க வேணும்.

"மக்கள் கஷ்டப்பட்டால் தான் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்" என்ற சிந்தனையுன் தொடர்ச்சி தான் இது......

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குவுக்கு வந்தால் புல்லட் ட்ரைன் வரணும்..இல்லை என்றால் ஒன்றுமே வரக்கூடாது.. :)

தலைவருக்கு ஏற்ற தொண்டன்....

உங்களுக்கு வந்தால் கடகட கொட்டி வரனும்... இல்லைன்னா ஒன்னும் வரக்கூடாது. :D

சிறீலங்கா அரசு... போக்குவரத்தை தனியார் மயப்படுத்தினால் அன்றி.. உதுகளுக்கு உய்வில்லை. இதே நூற்றாண்டு காலப் பழைய திட்டங்களோடு தான் இன்னும் இருந்து தொலையப் போகின்றன..! மக்களின் பணம் ஒரு நீண்ட.. 21ம் நூற்றாண்டில்.. எதிர்கால உலகின் சவால்களை எதிர்கொள்ளும்.. திட்டமிடல் இன்றி.. வெறும் சுயநோக்க.. கட்சி.. அரசியல் இலாபங்களுக்காக.. இப்படி வீணாகிறது. அதில் சிலருக்கு மட்டற்ற மகிழ்ச்சி..!! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் முன்பே அங்கு சிங்கள வியாபாரிகள் இருந்தார்கள்,யாழில் சிங்கள மாகாவித்தியாலயம் இருந்தது புகையிரத நிலையத்தில் பணிபுரிய சிற்றூழியர்கள்,அதிகாரிகள் என பல சிங்களவர்கள் அரச விடுதிகளில் தங்கியிருந்தார்கள் இப்படியான ஒரு சூழலிலும் நான் எனது கலாச்சாரம்(? )பண்பாடு(?) எல்லாத்தையும் கலப்படமில்லாமல் அவுஸ்ரேலியாவுக்கு கொண்டுவந்திட்டேன் :D...... ..... புலம் பெயர்ந்த நான் அங்கு சென்று மீண்டும் எனது கலாச்சாரம் ,பண்பாடுகளை கலப்படமில்லாம் கடைபிடிப்பேனா என்பது மில்லியன் டொலர் கேள்வி?

அன்று யாழில் வாழ்ந்த சிங்கள மக்கள் தமிழ்மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள். இன்று வந்திறங்கும் சிங்களவர்கள், அரசினால் திணிக்கப்படும் சிங்களக் காடையர்கள். இரண்டிற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு.
 
தமிழரது கலாச்சாரம் என்ன? பண்பாடு என்ன? தமிழரது கடவுள்யார்? வடிவமென்ன? எதுவுமே இன்று வாழும் தமிழனுக்குத் தெரியாது என்பதே யதார்த்தம் சொல்லும் உண்மை!.... உங்கள் பின்னூட்டத்திலேயே இதற்கான வினாவும் உள்ளதே!.    
  • கருத்துக்கள உறவுகள்

அன்று யாழில் வாழ்ந்த சிங்கள மக்கள் தமிழ்மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள். இன்று வந்திறங்கும் சிங்களவர்கள், அரசினால் திணிக்கப்படும் சிங்களக் காடையர்கள். இரண்டிற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு.
 
சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்த காலம்தொடக்கம் இதுதான் நடை பெறுகிறது 30 வருட போராட்டம் அதை குறைத்தது.....இனி மீண்டும் நடைபெறும்....காலப்போக்கில் இந்த காடையர்களும் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தும்பளையானின் கருத்துக்கள் இரசிக்கக்கூடியதாக இல்லை. யாழ்ப்பாணத்துக்கு தொடரூந்துச் சேவையால் அபிவிருத்தி அடைந்து விடும் என்பது அதிகபட்சமான கற்பனை. அது சிங்கள அரசுக்கான நிதித் தேடலுக்கான வழியே அன்றி வேறொன்றுமில்லை. இந்தத் தொடரூந்து வருகையின் பின்னர் நடக்கின்ற சில வேலைகளைச் சொல்ல வேண்டும். இப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி ஓடிய பேருந்துக்கள் நோக்கி கல் எறியப்படுகின்றன. கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன. விபத்து நடப்பதாகக் காரணம் சொல்லிச் சிங்கள காவற்துறையும் மௌனமாக இருக்கின்றது. உண்மையில் தனியார் பேருந்துக்களினைத் தடுத்து, தொடரூந்துக்கான வருமானத்தைப் பெறும்பொருட்டே இப்படியான செயலைச் சிங்கள அரசு செய்கின்றது. இதை விடப் தொடரூந்துப் பெட்டிகளைத் தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பான விதிகள் மாற்றப்பட்டு, தொடரூந்துப் பெட்டிகளை வாங்கப் போவது மகிந்தவின் மகனாவார். வடக்குக் கிழக்கு நோக்கிச் செய்யப்படும் அனைத்து திட்டங்களும் பணத்தை சிங்கள அரசு பெறும் நோக்கிலேயே இருக்கின்றதே அன்றி வேறு நோக்கமல்ல.

அரசாங்கம் செய்வது இருக்கட்டும். மக்கள் அபிவிருத்தி அடைந்துன்ளார்களா என்றால் அது இல்லை. இன்று யாழ்பாண இளைஞர்கள் ஒரு மோட்டார் வண்டியோ, விலையுயர்ந்த கைப்பேசியோடு திரிகின்றார்கள் என்பதால் அதன் பெயர் அபிவிருத்தியே கிடையாது. அவர்கள் வெளிநாட்டில் இருந்து யாரோ அனுப்பிய பணத்தில் வாங்கியது. அவர்கள் அப்படித் திரியக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இப்படியான வீதிகளையும், இளைஞர்களின் செயற்பாடுகளையும் பார்த்து எம்மக்கள் அபிவிருத்தி அடைகின்றார்கள் என்ற புளகிதம் வேண்டாம்.

நீங்கள் யாழ்ப்பாணம் சென்று வந்த காலப்பகுதியில் நானும் சென்று வந்தேன். ஆரம்பத்தில் வீதிகளைப் பார்த்து நானும் ஆச்சரியப்பட்டுத் தான் போனேன். ஆனால் மக்களோடு உரைஙயாடும்போது, அது அவர்களின் தேவைகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு வெங்காயம், 20ரூபா, கொழும்பில் 100 ரூபா. மாம்பழம் 20 ரூபா அளவில். கொழும்பில் 60 வரை போகின்றது. நான் பயணம் செய்த காலங்களில் அவதானித்த லொறி, அல்லது சமான் காவும் வாகனம் 2-3 அளவில் தான். இங்கே மக்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் எப்படிக் கிடைக்கின்றன என்றால் அதைப் பற்றிச் சிங்கள அரசு அலட்டிக் கொள்வதில்லை.

இலங்கையிலை சுறண்ட வந்த பிரிட்டிஸ் காறர் கூட இரயில் பாதை போட்டவை.. ஆகவே மக்களின் நலனுக்காக இரயில் விட்ட பிரிட்டிஸ் காறர் எண்டு பாராட்டினதா எங்கட அறிவுசார் தமிழினம்...??

யாழ்தேவி மக்களுக்கு நல்லதை வளங்கும் எண்டு புளகாகிதம் அடையிறவையிட்ட கேக்க எனக்கு நிறைய கேள்வி இருக்கு... இந்த இரயில் தமிழர்களின் யாரை ..? எதை ..? எங்கே...?? கொண்டு போக போகிறது...?? எதை கொண்டு வரப்போகிறது...???

வடக்கில் எந்த பொருட்கள் தெற்கே ஏற்றும் அளவுக்கு தன்னிறைவு கண்டு இருக்கிறது...?? விவசாயமா...?? இல்லை மீன் பிடியா..?? இல்லை அதையும் தாண்டி ஏதாவது...??

அண்றாடம் செலவுக்கு தவிக்கும் வறுமை கோட்டுக்கு கீழை இருக்கும் பல தமிழர்களில் எவ்வளவு பேர் இந்த இரயிலில் ஏறி தெற்கையோ இல்லை கிழைக்கேயோ போக போகிறார்கள்...? அரசாங்க வேலைகளிலையோ இல்லை தனியார் வேலைகளிலையோ இருக்கும் எத்தினை பேர் அடிக்கடி தெற்கை போக போகிறார்கள்...??

இதே இரயில் திருகோணமலைக்கும் , மட்டக்களப்புக்கும் , அம்பாறைக்கும் போய் வருகிறது... அங்கே இந்த இரையில் எதை கொண்டு வந்து தமிழர்களுக்கு கொடுத்தது எண்டது எனக்கு நன்கு தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தும்பளையானின் கருத்துக்கள் இரசிக்கக்கூடியதாக இல்லை. யாழ்ப்பாணத்துக்கு தொடரூந்துச் சேவையால் அபிவிருத்தி அடைந்து விடும் என்பது அதிகபட்சமான கற்பனை. அது சிங்கள அரசுக்கான நிதித் தேடலுக்கான வழியே அன்றி வேறொன்றுமில்லை. இந்தத் தொடரூந்து வருகையின் பின்னர் நடக்கின்ற சில வேலைகளைச் சொல்ல வேண்டும். இப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி ஓடிய பேருந்துக்கள் நோக்கி கல் எறியப்படுகின்றன. கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன. விபத்து நடப்பதாகக் காரணம் சொல்லிச் சிங்கள காவற்துறையும் மௌனமாக இருக்கின்றது. உண்மையில் தனியார் பேருந்துக்களினைத் தடுத்து, தொடரூந்துக்கான வருமானத்தைப் பெறும்பொருட்டே இப்படியான செயலைச் சிங்கள அரசு செய்கின்றது. இதை விடப் தொடரூந்துப் பெட்டிகளைத் தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பான விதிகள் மாற்றப்பட்டு, தொடரூந்துப் பெட்டிகளை வாங்கப் போவது மகிந்தவின் மகனாவார். வடக்குக் கிழக்கு நோக்கிச் செய்யப்படும் அனைத்து திட்டங்களும் பணத்தை சிங்கள அரசு பெறும் நோக்கிலேயே இருக்கின்றதே அன்றி வேறு நோக்கமல்ல.

அரசாங்கம் செய்வது இருக்கட்டும். மக்கள் அபிவிருத்தி அடைந்துன்ளார்களா என்றால் அது இல்லை. இன்று யாழ்பாண இளைஞர்கள் ஒரு மோட்டார் வண்டியோ, விலையுயர்ந்த கைப்பேசியோடு திரிகின்றார்கள் என்பதால் அதன் பெயர் அபிவிருத்தியே கிடையாது. அவர்கள் வெளிநாட்டில் இருந்து யாரோ அனுப்பிய பணத்தில் வாங்கியது. அவர்கள் அப்படித் திரியக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இப்படியான வீதிகளையும், இளைஞர்களின் செயற்பாடுகளையும் பார்த்து எம்மக்கள் அபிவிருத்தி அடைகின்றார்கள் என்ற புளகிதம் வேண்டாம்.

நீங்கள் யாழ்ப்பாணம் சென்று வந்த காலப்பகுதியில் நானும் சென்று வந்தேன். ஆரம்பத்தில் வீதிகளைப் பார்த்து நானும் ஆச்சரியப்பட்டுத் தான் போனேன். ஆனால் மக்களோடு உரைஙயாடும்போது, அது அவர்களின் தேவைகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு வெங்காயம், 20ரூபா, கொழும்பில் 100 ரூபா. மாம்பழம் 20 ரூபா அளவில். கொழும்பில் 60 வரை போகின்றது. நான் பயணம் செய்த காலங்களில் அவதானித்த லொறி, அல்லது சமான் காவும் வாகனம் 2-3 அளவில் தான். இங்கே மக்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் எப்படிக் கிடைக்கின்றன என்றால் அதைப் பற்றிச் சிங்கள அரசு அலட்டிக் கொள்வதில்லை.

வணக்கம், நான் யாரும் ரசிப்பதற்காகவோ, விசிலடிப்பதற்காகவோ எழுதுவதில்லை. சில யதார்த்தங்கள், குறிப்பாக எமது நிகழ்ச்சி நிரலின் படி போகாதவை இரசிக்கக் கூடியதாக இருப்பதில்லை.

புகையிரதம் வருவதால் யாழ்மாவட்டம் அபிவிருத்தி அடைந்து விடும் என நான் எங்குமே கூறவில்லை. அபிவிருத்தி அடைய வைக்கலாம் என்றே கூறிவருகிறேன். புகையிரத சேவையை எமது நன்மைக்காகப் பயன்படுத்துவது எமது கெட்டித்தனம். அதைவிடுத்துவிட்டு கடவைகளில் சனம் சாகப்போகுது, சிங்களவன் குடியேறப் போகிறான், கலாச்சாரம் பாதிப்படையப்போகுது என்று சொல்வதால் எதுவித நன்மைகளும் இல்லை. நீங்கள் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ தொடரூந்து ஓடத்தான் போகுது.

பளை - கொழும்பு தொடரூந்துகள் அனைத்துமே ஹவுஸ் புல்லாகத்தான் ஓடிக் கொண்டிருக்கு மூண்டு நாளுக்கு முன்னரே புக் பண்ணாவிட்டால் சீட் கண்டிப்பாகக் கிடைக்காது. பஸ்சுக்கு கல்லெறிந்து தான் சனத்தை கோச்சியில வரவைக்க வேணும் எண்டு இல்லை. பஸ்சுக்கு கல்லெறிந்ததுக்கு பெர்மிட் இல்லாமல் ஓடுற பஸ்காரருக்கும் பெர்மிட்காரருக்கும் வந்த கொளுவல் தான் காரணம். இதனுள்ளே அன்னை நாக பூசணி பஸ் காரர், D.S குணசேகராவின் பஸ்சுக்கு அனுராதபுரத்திலே ஆள் வைத்து கல்லெறிந்ததும் அடக்கம்.  இதவிட, பஸ் கட்டணத்தை விட கோச்சியின் கட்டணம் குறைவு, வேகமும் கூட, சொகுசும் அதிகம்.  

மோட்டார் சைக்கிள்களையும் வீதிகளையும் பார்த்து மக்களின் அபிவிருத்தியை அளவிடும் அளவுக்கு நான் இல்லை. ஆனால் நான் 2006 இல் ஊரை விட்டு வெளிக்கிட்ட போது இருந்ததை விடவும் எனக்கு தெரிந்த காலத்தில் இருந்த யாழ்ப்பாணத்தை விடவும் நன்றாகத்தான் இருக்கிறது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இரண்டு மணித்தியாலம் பயணம் செய்த எனக்கு அரை மணித்தியாலத்தில் போகக்கூடியதாக இருப்பதே ஒருவகை அபிவிருத்திதான்.

புலம் பெயர்ந்தவர்கள் ஊருக்கு அனுப்பும் காசைக் குறைத்து அவர்கள் சொந்தக் காலில் நிற்க வகை செய்யவேண்டும். ஆனால் நடப்பது எதிர்மறையானது, அங்கிருப்பவர்கள் இருநூறு கேட்டால் இவர்கள் இரண்டாயிரம் அனுப்புகிறார்கள். தாங்கள் இங்கு அந்தமாதிரி இருப்பதாக அவர்கள் வேஷம் போட இது பயன்படுகிறது.அங்கிருக்கும் தங்களின்/தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு மதிலைக் கட்டுகிறார்கள்,  மகாராஜா கேட் போடுகிறார்கள், மாபிள் பதிக்கிறார்கள், ஏன் A/C கூட பூட்டுகிறார்கள். இவ்வாறு செய்யாவிட்டால் அதைப் பெரும் கௌரவக் குறைச்சலாக கருதுகிறார்கள். தாங்கள் காசனுப்புவதால் அங்கிருப்பவர்களைக் கட்டுப்படுத்தாலாம் எனவும் நினைக்கிறார்கள். விளைவு அங்கிருப்பவர்கள் புலம் பெயர்ந்தவர்களின் கைப் பொம்மைகளாக மாறிவிடுகிறார்கள், புலம் பெயர்ந்தவர்கள் எதைக் கேட்க வேண்டும் என விரும்புகிறார்களோ அதையே அவர்களும் சொல்லுகிறார்கள்.  

தற்போது அபிவிருத்தி செய்யக் கூடிய பல பாதைகள் திறந்திருக்கின்றன. இவற்றைப் புத்திசாலித்தனமாக பாவிப்பதும் செய்வதும் அவரவர் விருப்பம். நீங்கள் இரண்டு மூன்று சாமான் ஏத்தும் வாகனங்களைக் கண்டதாக குறிப்பிடிருகிறீர்கள், ஆனால் பண்டல் பண்டலாக புகையிலை, வெங்காயம், பழவகைகள், கடலுணவுகள், பனை சார்ந்த பொருட்கள் தெற்குப் பகுதிக்கு தினமும் கொண்டு செல்லப்படுகின்றன. தெற்கிலிருக்கும் சில கொட்டல்கள் யாழ் மாவட்ட இறால், நண்டு, திருக்கை, சுறா மீன் வகைகளை நேரடியாகவே கொள்வனவு செய்கின்றன. இவற்றை நீங்கள் அறியாதது இருக்கிறது. சந்தை வாய்ப்புக்கள் எம்மைத் தேடி வரமாட்டாது. நாம் தான் வர்த்தகர் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் எமது சந்தை வாய்ப்புக்களை ஏற்ற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அபிவிருத்தி என்பது ஒரு இரவிலோ, ஒரு சில வருடங்களிலோ நடப்பது அல்ல.  

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை மீது இந்தியத் தூதர் குற்றச்சாட்டு!

Y.K.Sinha-basil-300x210.jpgஇலங்கையின் நடவடிக்கை தொடர்பில் இந்திய  உயர்ஸ்தானிகர்  கவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உதவிகள் உரிய முறையில் முக்கியத்துவம் பெறுவதில்லை என இந்திய உயர்ஸ்தானிகர்  வை கே சிங்ஹா தெரிவித்துள்ளார்.

வடக்கின் புகையிரத பாதையை பொறுத்தவரையில் இந்தியா பாரிய பொறுப்புடன் அதனை மேற்கொண்டு வருகிறது. எனினும் இந்தியாவின் அந்த செயற்பாடுகளை உள்ளுர் ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை. கிழக்கில் பாரிய திட்டங்களை இந்தியா செய்கின்ற போதும் சீனாவின் பாத்திரத்துக்கே கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தநிலையில் இந்தியாவின் இலங்கைக்கான உதவிகளில் பெரும்பாலானவை அன்பளிப்புகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா, இலங்கையுடன் 1998ம் மற்றும் 2000ம் ஆண்டுகளில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்துகொண்டது. 2012ல் தென்னாசியாவில் இலங்கை, இந்தியாவுக்கான பாரிய பங்காளியாக தொடர்ந்தது. 2009ம் ஆண்டு 2.03 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையுடன் இடம்பெற்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://tamilleader.com/?p=41818

தடம்புரண்டது யாழ்தேவி

பளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி ரயில் மஹவ பிரதேசத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதாக  மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.    இந்த விபத்து இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.     இதனால் வட பகுதிக்கான ரயில் சேவை மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிஸ்டவசமாக ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எதுவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை எனவும் மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.    (படங்கள் உதவி அத இணையதளம்)   -

See more at: http://onlineuthayan.com/News_More.php?id=145873475325727354#sthash.dwrYx428.IfEPjYm2.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

" மஹவ " எங்கே உள்ளது இந்த பிரதேசம் ?

  • கருத்துக்கள உறவுகள்

" மஹவ " எங்கே உள்ளது இந்த பிரதேசம் ?

ரந்தெனிகமவுக்கும் மாகோவுக்கும் இடைப்பட்ட பிரதேசம். தமிழ் ஊடகங்கள் ஈயடிச்சான் கொப்பி அடிப்பதால் ஒருத்தர் விட்ட பிழையை எல்லோருமே விட்டிருக்கினம்.

Yarl_Devi.jpg

Maho.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.