Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நனையாத மார்பு கச்சைகள்...

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தக் கவிதைக்கு.. அதிக ஆக்கள் ஆஆஆஆ என்று கொண்டு வர..வர காரணம்.. இது தான். அதாவது தலைப்பும்.. இந்தப் பகுதியும்.

நமக்கு இது புரியவே இல்ல...???!

பொழிப்புரை தாருங்கள் கவிஞரே..!!!

அப்பதான் யோசிக்கலாம்.. பச்சை போடுறதா இல்லையான்னு..??! :lol::icon_idea:

அது எங்கட மார்க்கெட்டிங் டெக்னாலஜியல்லோ. :D அதற்கும் சிறந்த தலைப்பு யோசிக்க முடியவில்லை. இருங்க விளக்கம் தாரன். விளக்கத்துக்கும் சேர்த்து பச்சை குத்தனுமாக்கும் :)
  • Replies 54
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை, விஷ்வா!

சிறகுகள் முளைக்காத ஒரு சிட்டுக்குருவி நீ..!

சிதறுகின்ற கற்பனையில்.....,

சிதம்பர  சக்கரத்தின் சுற்றளவையே,

சின்ன வயதில் புரிந்து கொள்ள எண்ணுகிறாய்!

வாழ்த்துக்கள் விஷ்வா!

  • தொடங்கியவர்

குழந்தைள் இல்லா வீடும் சுழலும் இல்லாத வீடுகள் எப்படியிருக்கும் என்பதே கவிதையின் கரு

ஆள் ஆராவரமற்று கிடக்கிறது

வேப்பங்கிளையில் தூளி..,

-தனிமையாய் கிடக்கும் தூளி

ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில்

கிளைநிரப்பிய கொய்யா..,

-பூத்துக் குழுங்கும் மரத்தில் பறிக்கப்படாத கொய்யா

யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன

யாழும் குழலும்..,

-யாழினிது குழழினிது தன் மக்கள்

இன்சொல் கேளா தார் (திருக்குறள்)

விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர்

இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி..,

-விண்ணிலுள்ள நசத்திரங்களும் கூட உறங்கிடிட்டனர் இன்னும் உறங்கவில்லை கதைசொல்லிகள்(தாத்தா,பாட்டிகள்),, கதை சொல்லி மகிழ பேர பிள்ளைகள் இல்லையென்ற வருத்தம்.

புள்ளதாச்சி குழிகளின் சாபம்

முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி..,

-பல்லங்குழி விளையாட்டில் யாரும் முத்துக்கள் இல்லாத பிள்ளைதாச்சி குழியை விரும்புவதில்லை, அவற்றின் சாபம் இப்போது நீள்கிறது. முத்துகளை கொட்டி சிரித்தபடி பல்லங்குழி.

மழைநீரால் ஒளிந்து கொள்ளும்

பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி..,

-ஒளிந்து விளையாடும் முக்கிய இடம், மழைநீரில் தன்னைத்தானே ஒளித்துக் கொள்கிறது.

சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ

வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ..,

-அமுத பருவத்தில் எழுதப்படுபவை அழகின் உச்சம், அதற்காக தவமிருக்கும் உயிரெழுத்துக்கள். .

விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர்

முகவரி தொலைத்த விடுமுறைகாலம்..,

-விடுமுறை காலமென்றால் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம் தான், இங்கு பிள்ளையில்லா வீட்டில் வர விடுமுறைகாலமும் விரும்பவில்லை

மழைநீரை வெறித்தபடி கவலைகளில்

மிதக்கின்றன சில காகிதங்கள்..,

-கிழித்து கப்பலாக விடப்பட மாட்டோமா என்ற கவலையில் மழைநிைரை பார்த்து கிடக்கும் காகிதங்கள்

புதுவர்ண பூச்சு அலங்கோலம்

தூரிகை மாயம் சுவற்றில்..,

-சுவற்றில் கிறுக்கள்களாக வறையப்பட்டிறுக்கும் சித்திரங்கள் இல்லாதசுவர் அலங்கோலம்

மதிப்பிழந்த சில்லறை காசுகள்

அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்..,

-பிள்ளைகளுக்கு தான் தெரியும் வீட்டில் சில்லறை காசுகளிருக்குமிடம். இங்குகாசுகள் தன் மதிப்பிழந்து போயுள்ளன

பால்கடி தட சுகயேக்கம்

நனையாத மார்பு கச்சைகளுக்கு....

-தாய்மையின் பூரணம் பாலுட்டல், அப்போது மார்கச்சை நனைதல் இயல்பு. பால் கடி தடத்திற்காக ஏங்கும் (நனையாத மார்பு கச்சைகள் - பிள்ளையில்லா பெண்கள் )

~ ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதைக்கு.. அதிக ஆக்கள் ஆஆஆஆ என்று கொண்டு வர..வர காரணம்.. இது தான். அதாவது தலைப்பும்.. இந்தப் பகுதியும்.

------

நான்.... பொதுவாக கவிதைப் பகுதிகளை வாசிப்பது மிகவும் குறைவு.

ஆனால்... ராஜன் விஷ்வா போட்ட தலைப்பு, இங்கு வர வைத்து விட்டது தான் உண்மை நெடுக்ஸ். :D  :lol:

வம்புகள் விடும் அம்புகளிலிருந்து பிழைப்பது கடினம் போலும்!! யானும் வம்புகளில் லயித்து விட்டேன் !!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. நண்பா.

இப்போதுதான் கவிதையை முழுமையாக விளங்கிக் கொள்ள முடிந்தது.  :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை, விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணனின் பொழிப்புரையே கவிதை போல் இருக்கிறது.2முறைவாசித்தபின்தான் கவிதை முழுமையாக விளங்குகிறது.இது அவசர உலகம் 2வது வரிக்குள் கவிதை ஆர்வத்தைப் தூண்டாவிட்டால் அட போங்கையா என்று விட்டு போய்விடும் காலம் கவர்ச்சியான தலைப்பை கடைசி வரியாக்கி எல்லாரையும் வாசிக்க வைத்தது நல்ல உத்தி

விஷ்வா இது என் தனிப்பட்ட கருத்து

ஒரு படைப்பை, கவிதையை  எழுதி உலகிற்கு முன் வைத்து விட்ட பின் அந்தக் கவிதை தான் தனக்காக பேச வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதை உணரும் போது ஏற்படும் நுட்பமான உணர்வுகள்தான் கவிதையின் பொழிப்பை உணரச் செய்ய வேண்டும். பத்து பேர் வாசித்தால் பத்துப் பேருக்கும் ஒரே மாதிரியான உணர்வுகளை படைப்பு கொடுப்பதில்லை. ஒவ்வொருவரினது அனுபவங்கள் , சூழல், மனவியல்பு போன்றவற்றை சார்ந்தே  உணர்வுகளை, விளக்கங்களை அது கொடுக்கும். இது தான் கருத்து என்று படைப்பாளியே பொழிப்புரை வழங்கும் போது இவை அனைத்தும் சுருக்கப்பட்டு விடும். படைப்பின் வீச்செல்லையும் குறுகி விடும்.

பொருட் குற்றம், பொருள் மயக்கம் பற்றி எவரேனும் குறிப்பிட்டால் மட்டும் அதற்கு படைப்பாளி விளக்கம் / திருத்தம் கொடுக்க வேண்டும்.

உங்கள் படைப்பு தன்னைப் பற்றி பேசட்டும். அது பேசும் அழகியல் பற்றி பேசுவதற்கு அதன் சிருஷ்டிக்கு கூட உரிமை இல்லை. .

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

Edited by நிழலி
ஒரு வரி விடுபட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளின் குளப்படிகள்,அவர்கள் செய்யும் குறும்புகள் என்று கவிக்குள் அடக்க வேண்டியவைகளை,முடிந்தவற்றை அடக்கி ஆபாசம் அற்று விளக்கங்களை எழுதியதற்கும் மிக்க நன்றிகள்..தங்கள் எழுத்துக்களை படிக்கும் போது இந்தக் குட்டி வயதிற்குள் இவ்வளவு திறமைகளா என வியக்க வைக்கிறது..வாழ்த்துக்கள் விஸ்வா.

  • தொடங்கியவர்

கொஞ்சம் விளங்கினது...பச்சை குத்தியுள்ளேன் :D

விளங்கின கொஞ்சத்தில் பச்சை குத்தியதற்கு நன்றி, இனி முழுதாய் விளங்கி பச்சையை வீணடித்துவிட்டோம் என நொந்து கொள்ளாமல் இருந்தால் சரியண்ணே :D

அட நம்ம நிலைதான் பலபேருக்கு

உதுக்கு தான் பகலிலே தண்ணி அடிக்ககூடாதென்டு சொல்லுரது :D

அட நம்ம நிலைதான் பலபேருக்கு

உதுக்கு தான் பகலிலே தண்ணி அடிக்ககூடாதென்டு சொல்லுரது :D

பொழிப்புரைகள் கருத்துகளைப் பார்த்து ஏதோ விளங்குவதுபோல் இருக்கிறதே தவிர... சரியாக விளங்கிக் கொண்டேனா என்பதே இன்னும் சந்தேகம்தான்!  :o

உண்மையைச் சொன்னால்... என்ன கருத்து எழுதுவது என்று யோசிச்சே நாட்கள் ஓடிவிட்டது!

எனக்கு விளங்கினால்தானே சார் நான் கருத்து எழுத! அதனால... கொண்ட கருத்து இலகுவாக வாசகரை சென்றடையும் வண்ணம் எழுத வாழ்த்துகள்!

முன்பு ஓலைச் சுவடீல எழுதுறது சிரமம்.

அதனால கடினமான வரிகளில் கருத்துகளை குறுக்கி சுறுக்கி எழுதினாங்க.

இப்போ விதம் விதமாக விரிவாக இலகுவாக எளிமையாக எழுதலாம்!

நன்றி!!  :D

  • தொடங்கியவர்

இன்னாபா பெரிய ரோதனையாய்க் கீது...!

நல்லாக் கேட்டுக்கோ...!!

அந்தா அந்த வேப்ப மரத்தில ஒரு ஏணை சும்மா கிடக்கு.

அங்கின யாருமில்லை நைனா !

கொய்யா மரத்தில எம்மாம் பழங்கள் கீது.

ஒரு குருவிங் காட்டியும் துன்ன வரேல்ல..!

நம்ம சரசுவதி கையில கிடக்குமே அந்த உலக்கையும் ,

கிட்டினன் ஊதுற குழலும் தேமென்னு கிடக்கு...!

பெரிய பெரிய சாமிங்கல்லாம் குறட்டை வுடுது,

அய்யரு தம்பாட்டுக்கு கத்திக்கினூ இருக்கார்.

இங்கின புளியங்கொட்டைங்க பாண்டி பலகைக்கு பக்கமா

பப்பரக்கான்னு கிடக்கு..!

புள்ளத்தாச்சிங்க பாண்டி ஆடக்கூடாது ,ஆங் சொல்லிப்புட்டன்.

கொல்லைக்குள்ளாற வாட்டர் டாங்கு உந்தச் சின்னபுள்ளைங்க

தொந்தரவில்லாமல் ஹாயாய் கிடக்கு . யாரும் பாக்கேல்ல..!

நம்ம சிறிப்பய சிலேட்டுக் குச்சிய பாதியை கடிச்சுத்துன்னுட்டு

அதால அ னா , இ னா ன்டு ஏதொ கிறுக்கிறாப்பல...!

இந்தாபாரு ஒரு லீவு லட்டர் அட்ரச தொலைச்சுட்டு அம்போன்னு கிடக்கு..!

வேணுன்னா நீ எடுத்துக்கோ...!

மானம் பொத்துக்கிட்டு கொட்டுது , இந்த பேப்பருங்க எல்லாம்

வெள்ளத்தில இஸ்த்துக்கினு நவுருது..!

சுவத்தில புச்சு புச்சா பெயின்ட்டு பூசி

பீலா உடுறாங்க டோய்...!

அங்கின செல்லாக் காசுங்க செதறிக் கிடக்கு,

ஒரு குவாட்டருக்கு பிரயோசனமில்லை...!

நம்ப கடோசிக்கு மூனுவயசாகுது, அதுக்குப் பிறகு

நம்ம சிவப்பி வயத்தில ஒரு பூச்சி புழு இல்ல,

மாருல பாலும் வத்திட்டுது, அதுதான் உட்சட்டையை

கொடில போட்டிருக்கு, உந்தப் பொடி எங்கன நின்னு

பாத்துதோ தெரியாது, பார்திபன் மாதிரி

கவிதை எழுதிப் போட்டுது...! :D :D

எதோ நம்ம அறிவுக்கு விளங்கினது...!! :lol::D

ஹிஹி. சுவியண்ணா கலக்கிட்டிங்க. மிகவும் ரசித்தேன். உந்த சிறிப்பய

உலக்கை, குவாட்டரு, பாண்டியாட்டம் :D

எல்லாம் சரி

கடைசியில் இந்த பொடியன் எங்க ஒளிஞ்சு நின்னு.பார்த்தானு தெரியலனு என்ன மாட்டி விட்டீங்களே :(

  • தொடங்கியவர்

தொண்ணூறாம் ஆண்டீல் ஒருமாதகாலம் எங்களுடைய ஊருக்குள் புகுந்த இராணுவம் ஒருமாதத்தின் பின் மண்டைதீவுக்கு சென்று முகாமிட்டனர். அந்த வேளையில் நான் என் உறவுகளுடன் ஊருக்குள் போய் வீட்டை பார்க்கவும் ஏதாவது பொருட்கள் இருந்தால் பொறுக்கி வரவும் சென்றேன். ஓரு ஜந்து நிமிடந்தான் அங்கு நிற்கக்கூடியதாக இருந்தது. விஸ்வாவின் இக்கவிதையை வாசிக்கும் பொழுது என் மனதில் நான் அன்று பார்த்த அக் காட்சி நிழற்படமாக ஓடியது. நல்லதொரு கவிதை. சில எழுத்துப் பிழைகள்தான் வாசிப்பவர்களுக்கு விளக்கமின்மையைக் கொடுத்திருக்கிறது.உதாரணமாக முதல் வரியில் ஆளரவமற்ற என்று வரும் என நினைக்கிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்

வாழ்த்திற்கு நன்றிகளக்கா, இங்குள்ள வழக்குச் சொற்களை வைத்து எழுதியதில் சில இடங்கள் பிடிபடாமல் போனதென்று நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் சரி செய்து கொள்கிறேன். பெடி இப்பத்தான் எழுத ஆரம்பிச்சிருக்கு பாருங்கோ அதுதான் எழுத்துப்பிழை விட்டிருக்கும். :)

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்

நன்றி நைனா :D

கவிதையும் சுவி அண்ணாவின் :D பொழிப்புரையும் மிக்க நன்று

நன்றி வாத்தியாரே...!

நன்றி நைனா :D

கவிதையும் சுவி அண்ணாவின் :D பொழிப்புரையும் மிக்க நன்று

நன்றி வாத்தியாரே...!

ஒவ்வொரு வரிகளும் மிளிர்கின்றன கவிஞ்ஞா ...

ஆஹா உசுப்பேத்திவிடுறாரே சுபேசு :) நன்றி அண்ணை. முகப்புத்தகத்தில் பதிவிட்டமைக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு வரிகளும் மிளிர்கின்றன கவிஞ்ஞா ...

ஆஹா உசுப்பேத்திவிடுறாரே சுபேசு :) நன்றி அண்ணை. முகப்புத்தகத்தில் பதிவிட்டமைக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அருமையான கவிதை, விஷ்வா!

சிறகுகள் முளைக்காத ஒரு சிட்டுக்குருவி நீ..!

சிதறுகின்ற கற்பனையில்.....,

சிதம்பர சக்கரத்தின் சுற்றளவையே,

சின்ன வயதில் புரிந்து கொள்ள எண்ணுகிறாய்!

வாழ்த்துக்கள் விஷ்வா!

நன்றி அண்ணா உங்களின் வாழ்த்துக்கள் தனித்துவம் வாய்ந்தவை என்றும் எனக்கு :) எழுத துவங்கிய முதல் என்னை வழி படுத்தி உற்சாகமூட்டியதில் உங்கள் பங்கு அலாதியானது :) உங்களன்பிற்கு கடமைப்பட்டவனாக என்றும் :)
  • தொடங்கியவர்

வம்புகள் விடும் அம்புகளிலிருந்து பிழைப்பது கடினம் போலும்!! யானும் வம்புகளில் லயித்து விட்டேன் !!

ஆமாம் பாருங்கோ நாம கவிதையெழுதினால் அதில பல கதை கட்டி விடுறாங்கோ... கொஞ்சம் கடிவாளத்தை தளர்த்தினோம் பிறகு கவுத்தி போட்டிடுவாங்கோ :D யாரும் வேண்டாம் என்ற குருநாதரே போதும்

அருமையான கவிதை, விஷ்வா

நன்றி உடையார் :)

அருமையான கவிதை, விஷ்வா

நன்றி உடையார் :)
  • கருத்துக்கள உறவுகள்

-----

உதுக்கு தான் பகலிலே தண்ணி அடிக்ககூடாதென்டு சொல்லுரது :D

உதுக்கு தான் பகலிலே தண்ணி அடிக்ககூடாதென்டு சொல்லுரது :D

-----

நன்றி உடையார் :)

நன்றி உடையார் :)

இன்னாபா...இது,

எல்லாம்... டபிள்,டபிளா தெர்யுது... :rolleyes:  :D  :lol:  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

சுவியண்ணனின் பொழிப்புரையே கவிதை போல் இருக்கிறது.2முறைவாசித்தபின்தான் கவிதை முழுமையாக விளங்குகிறது.இது அவசர உலகம் 2வது வரிக்குள் கவிதை ஆர்வத்தைப் தூண்டாவிட்டால் அட போங்கையா என்று விட்டு போய்விடும் காலம் கவர்ச்சியான தலைப்பை கடைசி வரியாக்கி எல்லாரையும் வாசிக்க வைத்தது நல்ல உத்தி

நன்றி புலவர் சில கவிதைகளில் கடைசி வரிகளில் தான் முழுமையாக முடிவடையும். இது அதைப்போன்று இல்லையெனினும் சற்றே மறைமுகமாகவே ஒவ்வொரு வரிகளும் அர்த்தம் தரும்விதத்தில் எழுதியுள்ளேன். கடைசி வரிகளே ஆழப் பொருள் பொதிந்தது. கவிதையின் தலைப்பு இயல்பாய் அமைந்தது, இந்த கவிதை எழுத முன்னே இதுதான் தலைப்பு என்று தீர்மானித்துவிட்டே எழுதினேன். எளிமையான எழுத்து நடையில் தான் எழுதியுள்ளேன். எனது வார்த்தை பிரயோகங்கள் சரியாக இல்லை அதுதான் பலருக்கு கடினமாக உள்ளது விளங்க. :(
  • கருத்துக்கள உறவுகள்

ஆராவரம் பிள்ளைகள் கூடும் போது எழும் கூச்சல், உற்சாகம். பலப்ப்ம் சிலேட்டு குச்சி :) வழக்கு சொற்கள் இங்கு...

நன்றியண்ணா :)

இதே தான். சிறுவயதில் கனக்கா இதை தின்ன அனுபவமுண்டு. இணைப்பிற்கு நன்றிகள் சிறியண்ணா :)

சிறு பிள்ளைகள் இடும் கூச்சல் ஆரவாரம். ஆராவரம் இல்லை .

வார்த்தையாலத்துடனான கவிதைக்கும் புனைவுக்கும் வாழ்த்துக்கள் தம்பி இரா.விஷ்வா. :)

தொடரட்டும்...!

சுவியண்ணை விளக்கம் அபாரம்....! :lol: :lol: :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றுத்தூளி, பசியாற்றாமல் வீணே கிடக்கும் கனி, மழலையின் ஒலியிழந்த மன்றம், கதை முடியாத மாயைக்குள் உறங்கிய கடவுள், உயிர்கரையும் தாய்மையின் கண்ணீர் / செந்நீர், அடைமழையில் தன் சலசலப்பை தொலைத்த நீர்த் தொட்டி, வாங்கி வைத்த எழுத்தாணியும் சிலேட்டும் சின்ன விரல்களின் ஸ்பரிசத்திற்கான காத்திருப்பு, விடுப்புக் கடிதமெழுதத் தேவையில்லாத மார்கழி, கப்பல்கள் ஆகி மழையின் நீர்த்தேக்கத்தில் மிதப்பதற்கான காத்திருப்பில் காகிதங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், பிஞ்சு விரல்களின் முத்திரை பதித்த வர்ணச்சுவர், மதிப்பிழந்த சில்லறைகளைப் பொறுக்கி மதிப்புக் கொடுக்கும் சின்னக்குழந்தையற்ற அறை…… கண்ணாமூஞ்சி ஆடிவிட்டு காணாமல் போன ஏக்கம் எல்லாவற்றையும் தாண்டி தாய்மையின் காய்ந்து போன சுரக்காத மார்புகளில் சின்ன பாற்பற்கள் கடித்த தடத்தை பார்த்து புதிதாய் அணிந்த மார்புக்கச்சைகளுக்கு ஏக்கம் ஏற்படுகிறது.

ஆள் ஆராவரமற்று கிடக்கிறது
வேப்பங்கிளையில் தூளி..,

ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில்
கிளைநிரப்பிய கொய்யா..,

யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன
யாழும் குழலும்..,

விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர்
இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி..,

புள்ளதாச்சி குழிகளின் சாபம்
முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி..,

மழைநீரால் ஒளிந்து கொள்ளும்
பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி..,

சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ
வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ..,

விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர்
முகவரி தொலைத்த விடுமுறைகாலம்..,

மழைநீரை வெறித்தபடி கவலைகளில்
மிதக்கின்றன சில காகிதங்கள்..,

புதுவர்ண பூச்சு அலங்கோலம்
தூரிகை மாயம் சுவற்றில்..,

மதிப்பிழந்த சில்லறை காசுகள்
அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்..,

பால்கடி தட சுகயேக்கம்
நனையாத மார்பு கச்சைகளுக்கு....

~ ராஜன் விஷ்வா

பொருள் பிழையென்றால் என்னை நோகக்கூடாது என்னுடைய சிற்றறிவை எத்தனை சித்ரவதை செய்து இந்தக்கருத்தை கொண்டு வந்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

ஏண்டா தம்பி நாங்கள் அப்படி என்னடா கெடுதல் செய்தோம்......இப்படி மரத்த மண்டைகளை கசக்க வைத்துவிட்டாயப்பா....

ராஜன் விஷ்வா ஏற்கனவே எழுத்துப்பிழைகளையும் மயக்கங்களையும் போதாததற்கு வம்புத்தனமாகவும் எல்லாரும் கலாய்த்து விட்டார்கள் நானும் கலாய்ப்போம் என்று பார்க்கிறேன்...கவிதையின் கருப்பொருள் கலாய்க்க இடந்தர மறுக்கிறது. இன்னொரு வாட்டி எதனாச்சும் எழுதி வா மவனே நோண்டி நொங்கு எடுத்திடுவோம். இன்று தப்பியதற்காக கடலிலும் தன்னைதானே எண்ணி கண்ணீரிலும் கரையும் பிள்ளையாருக்கு 100 தோப்புக்கரணம் போடவும்.
 
Edited by வல்வை சகாறா

அழகான . அருமையான கவிதை..... வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

விஷ்வா இது என் தனிப்பட்ட கருத்து

ஒரு படைப்பை, கவிதையை  எழுதி உலகிற்கு முன் வைத்து விட்ட பின் அந்தக் கவிதை தான் தனக்காக பேச வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதை உணரும் போது ஏற்படும் நுட்பமான உணர்வுகள்தான் கவிதையின் பொழிப்பை உணரச் செய்ய வேண்டும். பத்து பேர் வாசித்தால் பத்துப் பேருக்கும் ஒரே மாதிரியான உணர்வுகளை படைப்பு கொடுப்பதில்லை. ஒவ்வொருவரினது அனுபவங்கள் , சூழல், மனவியல்பு போன்றவற்றை சார்ந்தே  உணர்வுகளை, விளக்கங்களை அது கொடுக்கும். இது தான் கருத்து என்று படைப்பாளியே பொழிப்புரை வழங்கும் போது இவை அனைத்தும் சுருக்கப்பட்டு விடும். படைப்பின் வீச்செல்லையும் குறுகி விடும்.

பொருட் குற்றம், பொருள் மயக்கம் பற்றி எவரேனும் குறிப்பிட்டால் மட்டும் அதற்கு படைப்பாளி விளக்கம் / திருத்தம் கொடுக்க வேண்டும்.

உங்கள் படைப்பு தன்னைப் பற்றி பேசட்டும். அது பேசும் அழகியல் பற்றி பேசுவதற்கு அதன் சிருஷ்டிக்கு கூட உரிமை இல்லை. .

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

நிழலி அண்ணா உங்கள் கருத்துக்களுடன் முழுவதுமாக ஒத்து போகிறேன். பலருக்கு புரியவில்லை என்றதாலே எழுத நேர்ந்தது. அதனால் தான் இசை அண்ணாவிற்கு கருப்பொருள் மட்டும் இதென்று சொன்னேன். நீங்கள் சொல்வது முழுக்க சரியே. இனி சரி செய்து கொள்கிறேன். நன்றி தெரிய படுத்தியதற்காக :)

குழந்தைகளின் குளப்படிகள்,அவர்கள் செய்யும் குறும்புகள் என்று கவிக்குள் அடக்க வேண்டியவைகளை,முடிந்தவற்றை அடக்கி ஆபாசம் அற்று விளக்கங்களை எழுதியதற்கும் மிக்க நன்றிகள்..தங்கள் எழுத்துக்களை படிக்கும் போது இந்தக் குட்டி வயதிற்குள் இவ்வளவு திறமைகளா என வியக்க வைக்கிறது..வாழ்த்துக்கள் விஸ்வா.

ஹிஹி அவ்வளவு ஒன்றும் குட்டியில்ல... 23 வயசாக்கும் :( நன்றி அக்கா உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் :) 

  • தொடங்கியவர்

பொழிப்புரைகள் கருத்துகளைப் பார்த்து ஏதோ விளங்குவதுபோல் இருக்கிறதே தவிர... சரியாக விளங்கிக் கொண்டேனா என்பதே இன்னும் சந்தேகம்தான்!  :o

உண்மையைச் சொன்னால்... என்ன கருத்து எழுதுவது என்று யோசிச்சே நாட்கள் ஓடிவிட்டது!

எனக்கு விளங்கினால்தானே சார் நான் கருத்து எழுத! அதனால... கொண்ட கருத்து இலகுவாக வாசகரை சென்றடையும் வண்ணம் எழுத வாழ்த்துகள்!

முன்பு ஓலைச் சுவடீல எழுதுறது சிரமம்.

அதனால கடினமான வரிகளில் கருத்துகளை குறுக்கி சுறுக்கி எழுதினாங்க.

இப்போ விதம் விதமாக விரிவாக இலகுவாக எளிமையாக எழுதலாம்!

நன்றி!!  :D

நான் வைத்த தலைப்பு தான் வேலைய காட்டிட்டது போல :D இனி கொஞ்சம் அதிக காலம் எடுத்து எழுதவேணும் எழுத்து பிழை சொல் பிழை வாக்கிய பிழை இல்லாமல் எழுத... கருத்திற்கு நன்றிகள் அண்ணா :)

  • தொடங்கியவர்

இன்னாபா...இது,

எல்லாம்... டபிள்,டபிளா தெர்யுது... :rolleyes:  :D  :lol:  :icon_mrgreen:

அஞ்சால் அலுப்பு மருந்து வேலைய காட்டிட்டது :D :D :D

சிறு பிள்ளைகள் இடும் கூச்சல் ஆரவாரம். ஆராவரம் இல்லை .

சரி செய்து விட்டேன் அக்கா நன்றி சுட்டிகாட்டியமைக்கு   :)

வார்த்தையாலத்துடனான கவிதைக்கும் புனைவுக்கும் வாழ்த்துக்கள் தம்பி இரா.விஷ்வா. :)

தொடரட்டும்...!

சுவியண்ணை விளக்கம் அபாரம்....!

நன்றி கவிதயண்ணே :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.