Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நின்றறுத்த தெய்வம் - The Shoe Rapist of England

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நின்றறுத்த தெய்வம்

இது ஒரு உண்மைக் கதை - சில பெயர்கள் மாறி உள்ளன.

பப்பிலிருந்து வெளியே வந்தாள் சமந்தா. நல்ல தோர் பார்ட்டி, நல்ல தோர் டான்ஸ், நல்ல மப்பு.

பரவாயில்லை, கருமியாய் இருப்பாள் என்று நினைத்தேன், ஜோ தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு நன்றாக பணத்தினை வீசி செலவு செய்தாள் என்று நினைத்துக் கொண்டாள், சமந்தா.

1983 ம் ஆண்டின் டிசம்பர் மாதத்து குளிர் சில்ரென்று முகத்தினைத் தாக்கியது. காரின் அருகே சென்றாள் சமந்தா. 5 நிமிடத்தில் வீடு செல்லாம், அசட்டுத் துணிவுடன் கார்த்திறப்பினை எடுத்தாள்.

'ஏ..ஏய், சாம்... முட்டாள் தனமாயிராமல் காரை அங்கேயே விட்டு விட்டு நடந்து போய் விடு'. திருப்பிப் பார்த்தால், தள்ளாடியபடியே போய் கொண்டிருந்தாள், சூசன் தனது ஆண் நண்பனுடன்.

அவள் சொல்வது சரிதான், எதுக்கு பிரச்னை. கார் லைசன்ஸ் முக்கியம்.. நினைத்தபடியே நடக்கத் தொடங்கினாள். விளக்குகள் எரியும் பிரதான வீதிகளினூடே சென்றால் 20 நிமிடம். இருள் மண்டிய ஒத்தையடிப் பாதைவழியே சென்றால் 6 நிமிடம்.

ஒரு நிமிடம் யோசித்தாள்..... நிதானத்துடன் உள்ள யாருமே செல்லத் தயங்கும் பாதை. அட, 6 நிமிடத்தில் வீடு, 7வது நிமிடத்தில் கட்டிலில் விழுந்து தூங்கி விடலாம். என்ன பயம்....

அசட்டுத் துணிச்சலுடன் இருட்டுப் பாதையில் நடக்க தொடங்கினாள் சமந்தா.

ஆனால்,....பாவம் சமந்தா.

அன்று .... அவளுடன் அவளது துரதிஸ்டமும் சேர்ந்தே நடந்தது...

அவளுக்காக காத்திருந்தது, அவள் வாழ்க்கை முழுவதும் நினைத்து வருந்தப் போகும் பேராபத்து....

தூரத்தில் அவள் தள்ளாடி வருவதைப் பார்த்ததும் அந்த மனித மிருகம் தயாரானது....

Edited by Nathamuni

  • Replies 57
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன... முனி,
பொறுத்த இடத்தில், கதையை... நிப்பாட்டி போட்டியள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கன  முனி இருக்குறதலால பிரச்சினையா கிடக்கு நதமுனி ,முனிவர் ஜி,முனிவர் இப்படி பல பேர்கள் இருக்குறாங்கப்பா

 

யோவ் சிறி பொறுத்த இடமா  ஏதாவது அலவாங்கை எடுக்க போயிருப்பார் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இரை மேல் பாயப் பதுங்கும் வேங்கையை போன்று... 
 
தன்னை கடந்து செல்லும் வரை காத்திருந்து... பின்னால் வேகமாக வந்து, வலது கையினால் வாயினை சத்தம் போட முடியாதவாறு 
 
மூடிக் கொண்டே, இடது கையால் வயித்தினை இறுக்கமாக சுத்தி அப்படியே தூக்கி, புதர்கள் நிறைந்த பகுதியினுள் தூக்கி சென்றது அந்த மிருகம்.
 
பயத்தில் திமிறினாள் சமந்தா..... யார்... தனது ஆண் நண்பன் பின்னாலே வந்து விளையாடுகிறானோ என்று முதலில் நினைத்தாலும்,
 
அட அவன் லண்டன் போய் இருக்கின்றானே, இது அவன் கரங்கள் இல்லையே, என்று உள்ளுணர்வு சொல்ல, நடுச்சாமம் ஆச்சே, பேயாக இருக்குமோ என்று நினைத்த அடுத்த கணமே இரத்தம் சில்லிட்ட உணர்வு உடல் எங்கும் பரவியது.
 
அவளை நிலத்தில் தள்ளிய அவன், காதருகே முனு முனுத்தான். 'ஏய் பெண்ணே, கவனி, நீ உயிருடன் மீண்டு செல்ல வேண்டுமாயின் என்னுடன் ஒத்து உழைக்க வேண்டும்'. முரண்டு பிடித்த பல பெண்களைக் கொன்று  உடல்களைப் இங்கே புதைத்து இருக்கிறேன். சத்தமிடாமல் அமைதியாக இருந்தால் விரைவாக வீடு செல்லலாம் என்று கூறிக் கொண்டே அந்த பெண் அணிந்திருந்த 'stocking' இணைக் கழட்டி அவள் கைகள் இரண்டினையும் இறுகக் கட்டினான் அந்தக் காமுகன்.
 
சாவகாசமாக இயங்கினான் அவன். 
 
வலித்தது.. அடிவயித்துப் பகுதி மட்டும் அல்ல... மனதும் தான்..
 
இறைவனே எதற்காக...  எனக்கு... இந்த கொடுமை.....  கண்களில் கண்ணீர் வழிந்தோட......  இறைவா என்னை காக்க மாட்டாயா? என்று மனதினுள் வேண்டினாள் சமந்தா...  
 
மேலே வானத்தில்.... அன்று அதிசயமாக நிலவு... டிசம்பர் மாதத்தில் பிரகாசமாக நிலவு.  அந்த நிலவைப் பார்த்தாள் அந்தப் அபலைப்  பெண்... 
 
நிலவே நீ.. இந்தக் கொடுமைக்கு சாட்சி... 
 
ஆனால், அவள் மானசீகமாக வேண்டிய அந்த தெய்வம், நின்று, நிதானித்து, 20 வருடங்களின் பின்னர் அறுக்கும் என்று அவளுக்கோ, அல்லது அந்த காமுகனுக்கோ தெரிந்திருக்க நியாயமில்லை.
 
அவன் போகும் போது அந்த பெண்ணின்  இரண்டு காலணிகளையும் எடுத்துச் சென்றான். 
 
அவனது முதலாவது இரை தான் அவள். ருசி கண்ட பூனை.... போலீஸ், பத்திரிகை, கூச்சல் அடங்கிய பின்னர் மீண்டும் 1984 அக்டோபர் மாதம் மேலும் ஒரு பெண்ணை இரை ஆக்கியது. வழக்கம் போல் அந்த பெண்ணின் காலணிகள் கொண்டு செல்லப் பட்டன.
 
பெண்களின் இந்த காலணிகளை வெற்றிக் கேடயமாக கொண்டு சென்றதால் அவன் 'Shoe Rapist' என அழைக்கப் படலானான்.
 
1983 டிசம்பர் முதல் அடுத்த நான்காண்டுகள் அவன் கொண்டு சென்ற காலணிகள் சுமார் 100 இருக்கும், பல பெண்கள் முறைப்பாடு செய்ய வில்லை.
 
முறைப்பாட்டு செய்த சில பெண்களின் உடலில் இருந்த அவனது விந்தணுவின் DNA வை பொலிசார் சேகரித்து வைத்து இருந்தனர். 
 
வட இங்கிலாந்தின் யோர்க்சயர் பகுதியின் பெண்கள் பெரும் கலக்கத்துடன், இரவில் வெளியே செல்லவே பயந்தார்கள்.
 
ஆண்டுகள் உருண்டோடினாலும் அவனைப் பிடிக்க முடியவில்லை. 
 
*******

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை ஓய்ந்தாலும், தூவானம் விடவில்லை.

கையில் தேநீர்க் கோப்பையுடன் யன்னல் ஊடாக வெளியே வெறுமையாகப் பார்த்துக் சொண்டிருந்தாள் சாரா. தேநீர் அருந்த மனம் வரவில்லை. மனது வலித்தது.

அட, சீ..., எனது வாழ்க்கையினை நானே நாசமாக்கி விட்டேனே என்று மனதில் எண்ணம் ஓடியது, கண்ணில் நீர் திரண்டு பெருகியது.

எண்ணங்கள் பின் நோக்கி உருண்டன..

இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறப்பான வேலையுடன் இருந்தாள், கை நிறையக் காசு. வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டு இருந்தது.

வேலையில் கடின உழைப்பு பயன் தந்திருந்தது. விரும்பிய promotion கிடைத்திருந்தது. அத்துடன் அவளது சம்பளமும் கூடி இருந்தது.

வேலையிட நண்பர்கள் பார்ட்டி கேட்டு நமைச்சுக் கொண்டிருந்தார்கள்.

பெரிய பார்ட்டி கொடுக்க தீர்மானித்தாள்.

அதுவே அவளது வாழ்வினைப் பிரட்டிப் போடப் போகிறது என அவள் அறிந்து இருக்கவில்லை.

பார்டிக்கு வந்த அநேகமானோர் கிளம்பியபின் கணக்கினை செட்டில் செய்து பப்பிலிருந்து வெளியே வந்தாள் சாரா. நல்ல தோர் பார்ட்டி, நல்ல தோர் டான்ஸ், நல்ல மப்பு.....

டிசம்பர் மாதத்து குளிர் சில்ரென்று முகத்தினைத் தாக்கியது. காரின் அருகே சென்றாள் சாரா. 5 நிமிடத்தில் வீடு செல்லாம், அசட்டுத் துணிவுடன் கார்த்திறப்பினை எடுத்தாள்.

'ஏ..ஏய், சாரா... முட்டாள் தனமாயிராமல் காரை அங்கேயே விட்டு விட்டு நடந்து போய் விடு'. திருப்பிப் பார்த்தால், தள்ளாடியபடியே போய் கொண்டிருந்தாள், அமாண்டா தனது அலுவலக ஆண் நண்பனுடன்.

ம்ம்... நடந்து போவது பாதுகாப்பானது அல்ல. 'Shoe Rapiest' நினைவு வந்தது...

காரில் சென்றால் 6 நிமிடத்தில் வீடு, 7வது நிமிடத்தில் கட்டிலில் விழுந்து தூங்கி விடலாம். என்ன பயம்.... போலீஸ்காரர்கள், பொதுவாக நகரத்தின் மறு பகுதியில் தான் கவனம் எடுக்கிறார்கள், இப்போது இங்கே இந்த வேளையில் வருவது குறைவு...

அசட்டுத் துணிச்சலுடன் காரை start பண்ணி மெதுவாக வெளியே வந்து வீதியில் வலது புறம் திருப்பினாள் சாரா.

ஆனால்,....பாவம் சாரா....

அன்று .... அவளுடன் அவளது துரதிஸ்டமும் சேர்ந்தே காரில் பயணித்தது.

அவளுக்காக காத்திருந்தது, அவள் வாழ்க்கை முழுவதும் நினைத்து வருந்தப் போகும் பேராபத்து....

தூரத்தில் அவள் கார் தள்ளாடி வருவதைப் பார்த்ததும் தயாரானது....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த  சம்பவம் என்று நினைக்கின்றேன்

 

நல்ல  எழுத்துநடை

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைச்சம்பவங்கள் என்றுதான் நானும் நினைக்கிறேன். இவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நானும் பார்ப்பதுண்டு. தொடருங்கள் நாதம்ஸ். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அவள் அதைக் கண்டதும் பதட்டமாகி இன்னும் தவறாக காரை ஒட...
 
அது போலிஸ் கார்.....
 
ம்ம்... நிகழ் காலத்துக்கு திரும்பினாள் சாரா.
 
தான் 'breath' டெஸ்ட் செய்ய மறுத்ததும், பொலிசார் கைது செய்து கொண்டு போய், ரத்த பரிசோதனை செய்து, தான் லைசென்ஸ் இழந்ததும் அதன் காரணமாக வேலை இழந்ததும் மனதில் வந்து போனது.
 
யாரவது அலுவலக, பொறமை பிடித்த, நண்பர்கள் பொலிசாருக்கு சொல்லி இருக்க கூடும்.
 
ம்ம்... சமூக கொடுப்பனவு  அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.. வேலை இல்லாதவர்க் காண கொடுப்பனவு விண்ணப்பம் செய்ய போக வேண்டும். 
 
நினைவு வந்தது.
 
திரும்பி நடக்க முயல்கையில், வீட்டின் முன் கார் ஒன்று வந்து நின்றது.
 
அது போலிஸ் கார்.....
 
எதற்கு... மீண்டும்.... அது தான் எல்லா நாசமறுப்பும் செய்து முடித்து விட்டார்களே... இனியும் என்ன... மனதில் ஓடியது...
 
அழைப்பு மணி அடித்தது. ஒரு ஆண், ஒரு பெண். புதியவர்கள்.
 
கதவைத் திறந்தாள் சாரா...
 
குட் ஆப்டர் நூன் மேடம்.... பெண் ஆபிசர் சொன்னார்.
 
ஒரு முக்கியமான விடயமாக உங்களை சந்திக்க வேண்டுமே... உள்ளே வரலாமா...
 
'இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாமா? சமூக கொடுப்பனவு அலுவலகத்தில் ஒரு 'Appointment'. தவிர்க்க முடியாது. வேலை இல்லாததால், அது எனக்கு முக்கியமானது..
 
நாம் அதிக நேரம் எடுக்கப் போவதில்லை அம்மணி. ஒரே கேள்விதான். உங்களுக்கு யாராவது ஆண் சகோதரர்கள் உள்ளார்களா?
 
'ஆமாம் யேம்ஸ் எனது அண்ணா, நகரத்தில் உள்ள முன்னணி அச்சக நிறுவனத்தில் முகாமையாளராக உள்ளார்.... எதற்கு கேட்கிறீர்கள்?
 
போலீஸ்காரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பரவியதை உணர்ந்தாள் சாரா.
 
'ஒரு சிறு விடயம்.... நாம் 20 வருடங்களுக்கு முன்னரான ஒரு பழைய வழக்கு தொடர்பாக இந்த நகரத்தில் உள்ள சிலரது DNA களை ஒப்பிடும் வேலை ஒன்றை செய்கிறோம். அவரது DNA மாதிரி கிடைத்தால் ஒப்பிட்டு பார்க்கலாம் என்று தோன்றுகிறது'.
 
'சசாச்..சா, அவர் சமூகத்தில் மிகவும் மதிக்கப் படும் கௌரவம் மிக்க ஒருவர். அவரைப் போய்....'  
 
ஓ, இல்லை, இல்லை... நீங்கள் சொல்லும் நபரை எனக்கும் தெரியும். அவருடன் 'தர்ம நிகழ்வுகளில் பங்கு கொண்டிருக்கிறேன், அவருடன் badminton விளையாடி இருகின்றேன். மிகவும் மென்மையான மனிதர். இது ஒரு சாதரணமான நிகழ்வு, நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.....சொன்னார், ஆண் ஆபிசர் .
 
'நன்றி நாம் கிளம்புகிறோம்'..
 
****

Edited by Nathamuni

படம் பார்ப்பது போலொரு உணர்வு -தொடருங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
****
தொலை பேசி அலறியது..
 
'ஹேய் யேம்ஸ்...' 
 
'சாரா...'
 
'என்ன விடயம் என்று ஊகிக்க முடியுமா, பார்? ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் போலிஸ் காரர்கள் இங்கே வந்து இருந்தார்கள்.'
 
'எதற்காக... எல்லாம் தான் முடிந்து விட்டதே..'
 
இல்லை இந்த முறை எனக்கு, ஆண் சகோதரர்கள் உள்ளார்களா என்று கேட்டார்கள். நான் உன்னைக் குறித்தேன். அவர்கள்,  DNA Test செய்வதற்காக,  உன்னிடம் எச்சில் மாதிரி பெற செல்ல போவதாக சொல்லிப் போனார்கள்.
 
.... யேம்ஸ்..., யேம்ஸ்......'
 
என்னாச்சு இவனுக்கு.. போனை துண்டித்து விட்டானே... சாரா குழம்பினாள்.
 
*****

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
*****
 
தொலை பேசி சிணுங்கியது. யேம்சின் தந்தை போனை எடுத்தார். 
 
'யேம்ஸ்...'
 
'டாடி..'
 
என்னாச்சு யேம்ஸ்... ஏன் அழுகிறாய்....
 
டாடி, 20 வருடங்களுக்கு முன்னர் நான் செய்த பாவம் இப்போது என்னை துரத்துகிறது. நான் தற்கொலை செய்யப் போகிறேன். எனது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.. வைக்கிறேன். குட்  பை...'
 
'யேம்ஸ்.... ஏய் யேம்ஸ்...' .....
 
என்னாச்சு இவனுக்கு.. போனை துண்டித்து விட்டானே... டாடி குழம்பினார்.
 
 

*****
விட்டத்தில் தூக்கினை மாட்டி கழுத்தினை சுருக்கில் நுழைத்த போது அவனது 17 வயது மகனால் காப்பாத்தப் படவும்....,
 
தந்தையால் அழைக்கப் பட்ட பொலிசார் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
 
****

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

news-graphics-2006-_622948a.jpg

 

காமுகனும் அவனது வெற்றிக் கேடயங்களும், காட்சியில்..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மிக விறுவிறுப்பாகக் கதை நகர்கிறது. நீங்கள் தான் எழுதியதா ??? நன்றாக உள்ளது நாதமுனி.

  • கருத்துக்கள உறவுகள்

கதை முடிஞ்சுதா? நல்ல சுவராசியமாய் போச்சுது.முடிவு தான் அவசரத்தில் முடித்த மாதிரி இருக்குது? முடிந்து விட்டதா/இல்லையா

'ரத்த பரிசோதனை' என்பதைத் தடிப்பாக எழுதி பின்னர் போலிஸ் வீட்டுக்குள் நுளைகிறது என்று எழுதியபோதே கதை நல்லவிதமாக முடிவடைகிறது. விறுவிறுப்பாக எழுதியிருந்தாலும் சௌதி அரேபியா திருடன் கதை போல் நீளமாக நகர்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பாராட்டுக்கள் நாதமுனி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை முடிஞ்சுதா? நல்ல சுவராசியமாய் போச்சுது.முடிவு தான் அவசரத்தில் முடித்த மாதிரி இருக்குது? முடிந்து விட்டதா/இல்லையா

இல்லை.

 

முரட்டுத் தனமான ரசிகை என்றால் அது நம்ம ரதி அக்கா தான். நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை அந்தமாதிரி திகிலாய் போகுது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
குடிகாரப் பெருமக்களுக்கு ஒரு எண்ணம்.
 
பொலிசார் அமத்தியதும், முடிந்தளவு கால தாமதமாக்கி, ஊதினால், மப்பு குறைவாகக் காட்டும் , தப்பிவிடலாம் என சிந்திப்பார்கள் - மப்பில் தான்...
 
இந்த எண்ணத்தில், பெரும் பாசாங்கு எல்லாம் செய்து, ஊதாமல், நிலைமையை மேலும் மோசமாக்குவார்கள். மப்பு இறங்கீடும் என்ற நினைப்பில் வலிந்து வாந்தி எடுக்க முனைவார்கள். 
 
சிலர் பிடி பட்ட இடத்தில் ஊத மாட்டார்கள். போலிஸ் நிலையம் போய் சாகவாசமாக   ஊதி தப்பலாம் என்று நினைத்து அடம் பிடிப்பார்கள். 
 
ஆனால் பிடிபட்ட இடத்தில் ஊதாவிடில், கைது செய்யப் பட்டே போலிஸ் நிலையம் கொண்டு செல்லப் படுவார்கள் என்பதும், போலீஸ் நிலையத்தில் ஊதுதலுக்கு மேலாக, சட்டப் படி, இரண்டு ரத்தப் பரிசோதனை குறிப் பிட்ட இடைவேளையில் எடுத்து, அந்த அளவினை வைத்து, பிடிபட்ட நேரத்தில், என்ன மப்பு லெவல் என்று துல்லியமாக கணக்கு எடுத்துக் கொள்வார்கள்.
 
மேலும் மப்பில் கார் ஓட்டுவது ஒரு 'Criminal Offence'  என்பதால் அவர்களது DNA மாதிரி பத்திரப் படுத்தப் படும் என்பது பலருக்கு புரியாத சட்டம். அங்கேயும் ரத்தம் தர மறுத்தால், பிணை இல்லா சிறை வாசம் தான். அதனால் தமது முட்டாள் தனத்தினை நினைத்து ரத்த தானம் செய்ய வேண்டியது தான் நிலை.
 
இங்கே தங்கை சாரா பிடி பட்ட இடத்தில் ஊதி இருந்தால், அவளது அண்ணன் மாட்டி இருக்க மாட்டார்.
 
அங்கே தான் தெய்வம் நின்று அறுத்ததோ?? 
 
தொடரும் (போடாவிடில் நம்மாளுங்க குழம்பிடுராங்கோ.... :o )

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கதை இன்னும் முடியேல்லையா ????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை இன்னும் முடியேல்லையா ????

 

இல்லை. 

 

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. ஆம் எனது எழுத்து முயற்சி தான்.

கதை அந்தமாதிரி திகிலாய் போகுது....

 

நன்றி.

'ரத்த பரிசோதனை' என்பதைத் தடிப்பாக எழுதி பின்னர் போலிஸ் வீட்டுக்குள் நுளைகிறது என்று எழுதியபோதே கதை நல்லவிதமாக முடிவடைகிறது. விறுவிறுப்பாக எழுதியிருந்தாலும் சௌதி அரேபியா திருடன் கதை போல் நீளமாக நகர்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பாராட்டுக்கள் நாதமுனி.

 

நன்றி.

படம் பார்ப்பது போலொரு உணர்வு -தொடருங்கள் .

 

நன்றி.  உங்கள் சென்னை தொடர் என்னாச்சு?. தொடருங்கள்.

நடந்த  சம்பவம் என்று நினைக்கின்றேன்

 

நல்ல  எழுத்துநடை

தொடருங்கள்

 

நன்றி

உண்மைச்சம்பவங்கள் என்றுதான் நானும் நினைக்கிறேன். இவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நானும் பார்ப்பதுண்டு. தொடருங்கள் நாதம்ஸ். :D

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது கதை மேலும் எதிர்பார்க்கிறேன்.குடித்துவிட்டு ஓடினால் தடைதானே ஒன்றறை வருஷத்திற்க்கு புள்ளி 90மட்டும் ஒருவேளை அதற்க்குமேல் என்றால் லைசன்ஸ் இழப்பா? மொன்றியலில் பாட்டி முடிந்தபின் நன்பர் ஊதி ஓகே ஆனபின்தான் கார் ஸ்டார்ட் பன்னியது பொலிஸ் பூட்டினவன் காரிலை மச்சான்  என்ன செய்வது என்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது கதை மேலும் எதிர்பார்க்கிறேன்.குடித்துவிட்டு ஓடினால் தடைதானே ஒன்றறை வருஷத்திற்க்கு புள்ளி 90மட்டும் ஒருவேளை அதற்க்குமேல் என்றால் லைசன்ஸ் இழப்பா? மொன்றியலில் பாட்டி முடிந்தபின் நன்பர் ஊதி ஓகே ஆனபின்தான் கார் ஸ்டார்ட் பன்னியது பொலிஸ் பூட்டினவன் காரிலை மச்சான்  என்ன செய்வது என்கிறான்.

 

இந்தக்கதை 1983 இல் என்று வருகிறது..

கதையை  வாசிக்கும் போதே  யோசித்தேன்

1983 இல் இவ்வாறான தண்டனை முறை வலுவாக இருந்ததா???

கட்டுரையாளருக்கு அலுப்புக்கொடுக்கவிரும்பவில்லை

அதனால் உங்களுக்கு....?? :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஜேம்ஸ் லோய்ட்ஸ், தனது காம வெறியாட்டத்தினை தொடங்கிய போது வயது 29.
 
அதனை நிறுத்திய போது வயது 33. இந்த காலப் பகுதியில் பல பெண்கள், குறிப்பாக 18 க்கும் 24 க்கும் இடையேயான பெண்களே அவனது இலக்கு.
 
BBC தொலைக்காட்சியில் மாதம் தோறும் ஒளிபரப்பாக்கும் 'Crime Watch' எனும் குற்ற நிகழ்வுகளின்  'reconstruction' நிகழ்வின் போது கூட, பொது மக்களினால் கொடுக்கப் பட்ட 350 சந்தேக நபர்களின் பெயர்களில் கூட அவன் பெயர் இருக்க வில்லை. 
 
அந்தளவு கவனமாக இருந்திருகின்றான்.
 
4 வருடங்களுக்கு பின்னர் அவன் அனைத்தையுமே நிறுத்தியதற்கு முக்கிய காரணம், அவன் தனது வேட்கைக்கு ஈடு கொடுக்கக் கூடிய துணை ஒன்றை அடைந்து அந்தப் பெண்ணையே திருமணம் செய்ததினால் தான் என கருதப் படுகின்றது.
 
அவன் முற்று முழுதாக இந்த வெறியாட்டத்தில் இருந்து ஒதுங்கி சமூகத்தில் மிக நல்ல மனிதனாக, எல்லோருக்கும் உதவும் ஒருவரனாக தன்னை மாத்தி அமைத்துக் கொண்டிருந்தான்.
 
அன்பான மனைவி, மதிப்பான வேலை. ஒரு ஆண். ஒரு பெண் என பிரைவேட் பாடசாலை கல்வி பயிலும்  இரு குழந்தைகள். 4 அறைகள் கொண்ட detachaed வீடு. விலை கூடிய கார். அவன் வாழ்ந்த சமூகத்தில், மிக முக்கியமான தூண் என்று சொல்லும் அளவுக்கு அபரிமிதமான சமூக சேவை. 
 
அனைத்துக்கும் மேலாக, தனது பழைய காம வெறியாட்டத்தினை ஒரு கனவாக நினைத்து மறந்தே போய் விட்டான்.
 
ஆனால் தெய்வம் அணைத்தையுமே பார்த்துக் கொண்டிருந்தது.
 
தொடரும்  :o
 
 

இந்தக்கதை 1983 இல் என்று வருகிறது..

கதையை  வாசிக்கும் போதே  யோசித்தேன்

1983 இல் இவ்வாறான தண்டனை முறை வலுவாக இருந்ததா???

கட்டுரையாளருக்கு அலுப்புக்கொடுக்கவிரும்பவில்லை

அதனால் உங்களுக்கு....?? :lol:  :D

 

விசுகர்,
 
கொப்பு இழக்கப் படாது.  :o
 
அவன் நிறுத்தியது 1987 (1983 + 4)
 
 தங்கை பிடிபட்டது 20 வருடங்களின் பின்னர்.  :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மனிசரை டென்சன் ஆக்காமல் சட்டெண்டு எழுதி முடியுங்கோ முனி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.