Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசிட் கொடுத்து குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்த தாய்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  _78509708_ins_solanki_family_ruislip_9.j

 

இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார்.

 

மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு (Stress) (பிள்ளைகளின் படிப்புத் தொடர்பான சர்ச்சையால்) ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

அண்மையில் ஈழத்து வம்சாவளி பெண் ஒருவரும் இவ்வாறு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

_78509710_ins_solanki_family_ruislip_7(2

 

http://www.bbc.co.uk/news/uk-england-london-29759591

 

Edited by nedukkalapoovan

  • Replies 66
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கணவனைத் துன்புறுத்தவே குழந்தைகளைக் கொல்கிறார்கள் என நினைக்கிறேன்.. :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவனை துன்புறுத்தனுன்னா.. பழிவாங்கனுன்னா.. அவங்களுக்கு அசிட்டை கொடுக்கிறது. எதுக்கு எதுவுமே அறியாத இந்தப் பாலன்களை வதைக்கனும்..????! ஒரு தாய் குழந்தை பெற்றெடுத்தாலும்.. அதனைக் கொல்ல அவளுக்கு உரிமை கிடையாது..!!  :icon_idea:

குழந்தைகளைப் பார்க்க மனம் பதைக்குது

 

 

அண்மையில் இங்கு ஒரு தமிழ் பெண்ணை மணந்திருந்த வேற்றின ஆண் ஒருவரும் தன் இரு பிள்ளைகளைகளையும், தன்னையும் காருக்குள் வைத்து தீமூட்டி கொன்றும் தற்கொலை செய்தும் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படியானதுகளுக்கு கடவுள் பிள்ளைகளைக் கொடுத்தார் என்றே தெரிய இல்ல..மிகவும் மனதுக்கு கஸ்ரமான செய்தி.இந்தப் பிள்ளைகளைப் பார்க்க கொல்ல மனம் வருமா.. சில வேளைகளில் படிச்ச படிப்பும் தான் உயிரை எடுக்கிறது பாருங்கள். :( :(

 

 

என்ன கொடுமை இது :o :o  எல்லாவற்றிக்கு மனஅழுத்தம் காரணம் என்று ஒன்றை கூறி முடித்துவிடுவார்கள். :huh:

மனஅழுத்தம் இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை நாடாமல் தமக்குள்ளேயே யோசித்து யோசித்து இந்த நிலைக்கு ஆளாகுகின்றார்கள்.

என்ன தான் மனஅழுத்தம் இருந்தாலும் இப்படி பிஞ்சு குழந்தைகளை கொல்வதற்று மனம் வருமா என்ன???? :( :(

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  

 

இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார்.

 

மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

அண்மையில் ஈழத்து வம்சாவளி பெண் ஒருவரும் இவ்வாறு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

 

 

http://www.bbc.co.uk/news/uk-england-london-29759591

 

 

குறிப்பிட்ட இரண்டு செய்திகளில்.....இரண்டாவது செய்திக்கு கணவனே காரணமென சொல்கின்றார்கள்:

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளைப் பார்க்க மனம் பதைக்குது

 

 

அண்மையில் இங்கு ஒரு தமிழ் பெண்ணை மணந்திருந்த வேற்றின ஆண் ஒருவரும் தன் இரு பிள்ளைகளைகளையும், தன்னையும் காருக்குள் வைத்து தீமூட்டி கொன்றும் தற்கொலை செய்தும் உள்ளார்.

அவரது மன நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது! :o

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

Mum killed herself and two daughters with poison after struggling to live with husband's parents
Heena Solanki, 34, was found dead in her bed alongside Jasmine, nine, and Prisha, four, by her widower at their home last year
 
INS%C2%A3%C2%A3%C2%A3Woman-laboratory-techn
Tragic: Heena Solanki killed herself and her two young daughters, Jasmine, aged nine, and Prisha, aged four,
 

A mother poisoned herself and her two young daughters after struggling to live with her husband's parents, an inquest heard today.

Heena Solanki, 34, was found dead in her bed alongside Jasmine, nine, and Prisha, four, by her widower at their home in Ruislip, west London.

An inquest heard today that that police and paramedics who went to the scene were forced back by poisonous fumes.

None of her family attended the hearing but a statement was read out from her widower, Kalpesh Solanki, in which he spoke of his surprise at his wife's actions.

"Prior to her death I believed that Heena was happy and content," he said. "We lived a nice life with our two children, Jasmine and Prisha.

"The only thing that I was aware of that made her unhappy was that we lived with my parents.

"This issue got her down at times but it's the only issue I can think of."

He added that they had decided to move out but had not yet told his parents.

Mr Solanki said his Indian-born wife had not shown signs of depression and had never talked of taking her own life.

He added: "There were obviously things she didn't talk to me about which I didn't know. I'm aware of that now."

But he added that there was "no indication to me or anyone else that I'm aware of that Henna was so unhappy that this would be her solution".

 

FacebookHeena-Solanki-with-Daughter-Jasmin.jpg
Heena Solanki is pictured with daughter Jasmin  

 

The inquest heard from Mrs Solanki's friend, Branali Chambhare, who said she had confided in her that "her father-in-law was a bit cranky and a bit problematic".

She added that she had cried about her problems with him on one occasion but did not think she was depressed.

Mrs Chambhare said her friend had also clashed with her husband and his parents about their daughters' studies as "she pressurised her children".

"I think her in-laws and husband didn't like it at all," she added.

She said Mrs Solanki never spoke of being depressed or harming herself but used to say she wanted to go and live in India with her children.

Detective Sergeant Simon Rogers, of the Metropolitan Police's homicide assessment team said officers were called on the evening of April 12 last year with initial reports that a third party might have been involved.

 

FacebookKalpesh-Jasmin-and-Heena-Solanki.jpg
Heena and husband Kalpesh can be seen with daughter Jasmin  

 

Only firefighters wearing specialist breathing equipment were allowed on the scene where a suicide note was also found, the contents of which were not detailed in court.

Post-mortem examinations found all three died of substance intoxication.

He concluded that Mrs Solanki took her own life while Jasmine and Prisha were both unlawfully killed.

A statement from the girls' schools described Jasmine as a "normal, healthy, happy child" while Prisha was said to be "very happy", with no indications of any troubles at home for either.

Asked to comment as she left the inquest, Mrs Chambhare said: "They were a happy family and it's a sad thing."

http://www.mirror.co.uk/news/uk-news/mum-killed-herself-two-daughters-4500492?ICID=FB_mirror_main

 

  • கருத்துக்கள உறவுகள்

மாமனார் மாமியார் பிரச்சினை என்றால் தனியாகப் போய் வாழ்ந்திருக்கலாம். ஜேர்மனியில் இருந்து வாறவைக்கு காசு குடுக்கினம். இவவுக்கு குடுக்க மாட்டினமா??

எனக்கு கணவனிலும் டவுட் இருக்கு. இந்த ஆளும் தாய் தகப்பன் பக்கம்தான் நின்றிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை

இந்த அழகிய  முகங்களை விரும்பாதவர் உண்மையில் மனித இனமாக இருக்கமுடியாது..

 

 

மாமனார் மாமியார் பிரச்சினை என்றால் தனியாகப் போய் வாழ்ந்திருக்கலாம். ஜேர்மனியில் இருந்து வாறவைக்கு காசு குடுக்கினம். இவவுக்கு குடுக்க மாட்டினமா??

எனக்கு கணவனிலும் டவுட் இருக்கு. இந்த ஆளும் தாய் தகப்பன் பக்கம்தான் நின்றிருக்கிறார்.

 

சரி

பிழை

தவறுகளுக்குப்பால்......

அந்த தாய்  தகப்பன் மகனில் வைத்திருக்கும் அன்பு கூட

இவர் தனது செல்வங்களில் வைத்திருக்கவில்லை

வைத்திருந்தால்  எங்காவது உயிர்வாழ வழி செய்திருப்பார்........ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்தெரியாத பெண்களுக்கு இந்தப்பெண்  ஒரு உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
இத்தலைப்பில் குறித்த பெண்மீது கோபித்து கருத்தெழுதியவர்களுக்கு,
 
மன அழுத்தம் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா ? அதன் தாக்கம் எத்தகையது என்பது பற்றி தெரியுமா ? 
 
தமிழர்களில் பலர் இத்தகைய மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலைகள் செய்திருக்கிறார்கள். இத்தகைய இழப்புகளுக்கான மாற்றீடு அல்லது மருத்துவம் பற்றி எங்கள் சமூகத்தின் புலம்பெயர் நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் ஏதாவது செய்துள்ளார்களா ? அல்லது உதவியிருக்கிறார்களா ?
 
மன அழுத்தம் கான்சரை விடவும் கொடியது.  கான்சருக்கு ஓரளவு மருத்துவ வசதி இருக்கிறது. மன அழுத்தத்திற்கான மருத்துவ வசதிகள் மிக குறைவு. உடனடி நிவாரணிகள் மட்டுமே இருக்கிறது.குறிப்பாக தலையிடிக்கும் போது மாற்றீடாக பனடோல் போலவே.
 
இது பற்றி ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். தமிழர்களில் குறிப்பாக பெண்கள் மன அழுத்தத்தால் பாதிப்புற்றிருக்கிறார்கள் நிறையவே. மரணமும் இல்லை வாழ்வும் இல்லாத போராட்டமே மன அழுத்தத்தால் பாதிப்புற்றோரின் நிலமை.
 
இதுபற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்ற பலநாள் எண்ணம் இச்செய்தியை பார்த்த பிறகு இங்கு எழுதப்பட்ட கருத்துகளையும் வாசித்த பிறகு அவசரமாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. 
 
கருத்துக்களை விதண்டாவாதமாக அல்லாமல் உண்மையான சமூக அக்கறையோடு தெரிவியுங்கள். அதுவே மாற்றீடாகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் இரண்டு பிள்ளைகளுடன் தனியாகிறாள்.....
இரண்டு பிள்ளைகளின் தந்தை?

ஒரு பெண்ணால் எந்தளவு சுமையை சுமக்க முடியுமோ அதற்கும் மேலான சுமையை இந்த சமூகம்  அவள்மீது சுமத்துகிறது.

வீட்டு கைதிகளாக ஆயிரத்திற்கும் மேலான ஈழ பெண்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கிறார்கள்.
பார்பவர்கள் அவர்களுக்கு அறிவில்லை என்று எதேட்சையாக சொல்லிவிட்டு போக முடியும் ஆனால் இப்படியான தட் கொலைகளைதான் அவர்கள் தவிர்த்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த பிள்ளைகளை நேசித்ததன் காரணம்தான் அந்த பிள்ளைகளையும் கொல்ல வேண்டும் என்று ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது.
ஆணாதிக்க சமூகம் அவர்களையும் ஒருநாள் நிர்கதி ஆக்கிவிடும் என்ற அச்சத்திற்கு. இந்த உலகில் என்னா நிவராணம் அல்லது நிர்ச்சைய தனம் இருக்கிறது?

இப்போது இந்திய வெறியர்கள் பெண்கள் பிரியும்போது ..... அல்லது பிரிந்த நிலையில் இன்னொரு ஆணுடன் உறவு ஏற்படும்போது. தங்களோடு இருந்த நாளில் எடுத்த அந்தரங்கமான படங்கள் வீடியோ க்களை இணையத்தில் விடுகிறார்கள்.
எவளவு மன உளைச்சலை உண்டாக்கும்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன இறுக்கம்.. மன அழுத்தம்.. மன விரக்தி.. மனநோய்..இவை எல்லாமே ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது. பெண்களால் மன அழுத்தம்.. இறுக்கத்துக்கு ஆளாகி மன விரக்தி அடைந்து.. தற்கொலை செய்த ஆண்களும் உளர். அதேபோல் ஆண்களால் மன இறுக்கம்.. அழுத்தம் ஆளாகி மன விரக்தி அடைந்து பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 

இவை எல்லாமே அறியாமையின் விளைவு ஆகும். குறிப்பாக மேற்கு நாடுகள்.. மனப் பிரச்சனைகளில் இருந்து விடுபட பல மார்க்கங்களை இனங்காட்டுகிறார்கள். மனம் விட்டுப் பேச.. பழக.. வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். கவுன்சிலிங் கொடுக்கிறார்கள். கணவரைப் பிரிந்து வாழும் பெண்களுக்கு சலுகைகளுடன் பிள்ளைகளை பராமரிக்க நிதி மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இப்படி எண்ணற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டும் அறியாமையால் எடுக்கும்.. முடிவுகளுக்கு தீர்வு என்பது அவர்களின் அறியாமையை போக்குவது என்பதே ஆகும். இதனை அவர்களைச் சூழ உள்ள உறவுகள் நண்பர்கள் நண்பிகள் தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

 

பிரச்சனைகளை மனம் விட்டு பேசுவது கூட மன இறுக்கம்.. பாரம்.. மன அழுத்தம்.. மனச் சிதைவில் இருந்து விடுபட நல்ல மார்க்கமாகும். அத்தோடு கோவில்கள் வழிபாட்டிடங்கள் என்று சமூக ஒன்று கூடல்களில்  பங்கேற்று கூடிப் பழகுதல் கூட மனதை இலகு படுத்த உதவும். குடும்பப் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே பேசித் தீர்வு காண வேண்டும். இன்றேல்.. குடும்ப வைத்தியரூடாக.. பிரச்சனைகளை அடுத்தமட்டத்திற்கு தெரியப்படுத்தி கவுன்சிலிங் மூலம் தீர்வுகளை எட்ட முயற்சிக்க வேண்டும்.

 

இதில் ஆண்.. பெண் என்ற சண்டைக்கு பாகுபாட்டுக்கு இடமில்லை. சிறுவர்கள் கூட பெரியவர்களுக்குரிய விளையாட்டுக்களை விளையாடப் போய் மன அழுத்தம்.. இறுக்கத்துக்கு ஆளாகி.. விளையாட்டுக்களுக்கு.. சமூக வலைகளுக்கு அடிமையாகி.. அவற்றை கட்டுப்படுத்த போக.. தம்மை தாமே துன்புறுத்தும்.. மனச் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இவற்றிற்கு விடை.. சரியான ஆலோசனைகளோடு அமைந்த.. அணுகுமுறைகளே அன்றி.. பால்.. இன.. பிரிவு வாதங்கள் அல்ல..!!  :icon_idea:  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணிலைவாதம்.. இந்த அளவுக்கு வந்து நிற்குது.... :lol:

 

வீட்டு கைதிகளாக ஆயிரத்திற்கும் மேலான ஈழ பெண்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கிறார்கள்.

உண்மை. ஒரு தடவை ஒரு அக்காவுடன் கதைத்த போது class க்கு சென்றால் வேறு ஆண்களுடன் கதைத்து விடுவேன் என்று கூறி தன்னை பிரெஞ்சு படிக்க தனது கணவன் விடுவதில்லையாம் என்று கூறினார்.

அதே போல் போன வருடம் பிரெஞ்சு படிக்க சென்ற போது அங்கு படிக்க வரும் ஒரு அக்கா(அன்ரி) தலையில் பல காயங்களுடன் வருவார். எமது ஆசிரியை கவனித்து விட்டு என்ன நடந்தது என்று கேட்டபோது கணவன் அடித்தது என்று கூறியிருந்தார். அவருக்கு அவ்வளவாக பிரெஞ்சு கதைக்க தெரியாது. எனவே எமது ஆசிரியை இன்னொரு தமிழ் பெண் மூலம் என்ன பிரச்சினை என்று கேட்டறிந்து கொண்டார். வீட்டில் கணவன் கொடுமைப்படுத்துவது, அடிப்பது என்பவை தெரிய வந்தது.

இது பற்றி அவரது கணவனை தான் எச்சரிக்கை செய்யவா, police இல் புகார் கொடுக்க சம்மதமா? விவாகரத்து பெற விரும்புகிறீர்களா என்ற கேள்விகளையும் முன்வைத்த போது ஆரம்பத்தில் ஆம் என்று சொன்ன அப்பெண் பின்னர் பயத்தில் வேண்டாம் என்று கூறி விட்டார். class முடிந்த பின்னர் அவருடன் எனக்கு தொடர்பு இல்லை. இப்பொழுது அவர் நிலை என்ன என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
துளசி, நீங்கள் எழுதியது போல ஆயிரக்கணக்கான விடயங்கள் இருக்கிறது. இதனை இங்கு பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆ ஊ என்றால் ஆண்களும் பெண்களால் இறந்தார்கள் என சொல்லி சப்பைக்கட்டு கட்டிக்கொள்வார்கள். 
 
மன அழுத்தம் என்பதனை வகைப்படுத்தலில் கூட தங்கள் வெறும் புத்தக அனுபவத்தின் படியே சிலர் விளக்கியும் விளங்கியும் கொள்கிறார்கள். 
 
ஒரு மொழியைக்கூட ஒரு பெண் படித்தால் தன்னைவிட அதிகம் படித்துவிட்டாள் என்பதற்காகவே அவளது ஆழுமையை அடக்கி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி சாகடிக்கும் ஆதிக்கம் மிக்கவர்களின் நடுவே வாழும் பெண்கள். அவர்கள் பற்றி வெறும் புத்தகப்படிப்பை மட்டுமே முடிபாகவும் விதியாகவும் விதிக்கும் புத்தகப் பிரியர்களுக்கு புரியப்போவதில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக  மனம் ஒரு நிலையில் இல்லாது பாதிக்கபடும் போது இவ்வாறன முடிவுகளைத் தான் எடுப்பார்கள் என்பது  அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய விடையம்..ஆனாலும் தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு எதற்காக ஒன்றும் அறியதாத அப்பாவிப் பிள்ளைகளை கண்டதையும் குடுத்து கொல்கிறார்கள்..அந்த பிள்ளைகள் வாழ வேண்டியவர்கள் என்று ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை..உண்மையாக பிள்ளைகள் யாரும் அற்றவர்களாக இருந்து கஸ்ரப்பட்டு கொண்டு இவ்வாறன முடிவுகளை எடுப்பவர்களாக இருந்தால் கூட சில விடையங்களை நம்பலாம்.

 

ஒரு பொறுப்பு உணர்வுள்ள தாய் என்றால் இவ்வாறு நடந்து கொண்டு இருக்க மாட்டார்கள்.எங்கள் நாட்டில் இல்லாத பிரச்சனைகளா,அந்தப் பெண்கள் சந்திக்காத பிரச்சனைகளையா இவர்கள் சந்திக்கிறார்கள்...கணவர் சரியில்லயா..அவர்களோடு இருக்கப் பிடிக்க இல்லயா...பெற்றோருடன் தானே இருக்க விரும்பிறீர், நீர் இரும் என இருக்க விட்டுட்டு இப்படியானவர்கள் தங்கள் பாட்டுக்கு போய் இருந்து வாழ்ந்திருக்கலாம்..அல்லது அவர்களது நாட்டுக்குத் தன்னும் போய் இருக்கலாம் தானே...இதில் சம்பந்தப்பட்டு இருக்கும் பெண் ஒன்றும் வீட்டுக்குள் அடை பட்டுக் கிடந்தவர் போல் தெரியவில்லையே.வேலைக்கு போய் வந்திருக்கிறாவே...தான் பணி புரிந்த பாடசாலையில் தன் இயலாமையச் சொல்லி இருந்தால் கூட அவர்களாவது பிள்ளைகளின் எதிர் காலம் கருதி ஏதாவது உதவி கண்டிப்பாக செய்து கொடுத்து இருப்பார்கள் தானே..

 

இங்கும் இவ்வாறன குடும்பங்கள் இருக்கிறார்கள் கேட்டால் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு விதமான சரியும் இருக்கும்,பிழையும் இருக்கும்...சிலர் வெளியில் சொன்னால் வெக்கம் பின்னர் வெளியில் கணவருடன் போகும் போது உறவுகள் ஒரு மாதிரி பார்ப்பார்கள்,பேசுவார்கள் என்றதற்காகவே மௌனமாக வாழுற பெண்களும் இருக்கிறார்கள்..மற்றப்படி ஆண்கள் செய்வது எல்லாம் சரி என்றும் சொல்ல வர இல்ல.நாங்களும் பல தரப்பட்ட மன உணர்வை,பேச்சுக்களை உடையவர்வர்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் நிறையவே வந்து போய் கொண்டு தான் இருக்கிறது.இனிமேல் வேண்டாம் என்ற அளவுக்கு கூட மனம் காயப்பட்டு இருக்கலாம்.அதற்காக யாரையும் கஸ்ரப்படுத்த விரும்ப இல்ல.தாங்கள் செய்யும் எந்த தவறையும்,பேச்சுக்களையும்  தப்பு என்று உணர்ந்து கொள்ளதவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்,செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாமனார் மாமியார் பிரச்சினை என்றால் தனியாகப் போய் வாழ்ந்திருக்கலாம். ஜேர்மனியில் இருந்து வாறவைக்கு காசு குடுக்கினம். இவவுக்கு குடுக்க மாட்டினமா??

எனக்கு கணவனிலும் டவுட் இருக்கு. இந்த ஆளும் தாய் தகப்பன் பக்கம்தான் நின்றிருக்கிறார்.

 

ஏன் கனடாவில இருந்து வந்தாலும் காசு குடுக்கினம் இசை. :D

 

என்ன தவறு என்றாலும் மற்றவருக்குத் தண்டனை கொடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

 

துளசி, நீங்கள் எழுதியது போல ஆயிரக்கணக்கான விடயங்கள் இருக்கிறது. இதனை இங்கு பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆ ஊ என்றால் ஆண்களும் பெண்களால் இறந்தார்கள் என சொல்லி சப்பைக்கட்டு கட்டிக்கொள்வார்கள். 
 
மன அழுத்தம் என்பதனை வகைப்படுத்தலில் கூட தங்கள் வெறும் புத்தக அனுபவத்தின் படியே சிலர் விளக்கியும் விளங்கியும் கொள்கிறார்கள். 
 
ஒரு மொழியைக்கூட ஒரு பெண் படித்தால் தன்னைவிட அதிகம் படித்துவிட்டாள் என்பதற்காகவே அவளது ஆழுமையை அடக்கி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி சாகடிக்கும் ஆதிக்கம் மிக்கவர்களின் நடுவே வாழும் பெண்கள். அவர்கள் பற்றி வெறும் புத்தகப்படிப்பை மட்டுமே முடிபாகவும் விதியாகவும் விதிக்கும் புத்தகப் பிரியர்களுக்கு புரியப்போவதில்லை.

 

 

இதைத்தான் நாங்களும் சொல்கின்றோம். ஆண்களின் துணை இல்லாமல் வாழ முடியும் என்ற நிலைக்கு எப்போது பெண்கள் வெளியே வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

ஆண்கள் புத்தகப் பூச்சிகளாகவே இருக்கட்டும்.

பெண்கள் நீங்கள் விட்டில் பூச்சிகளாக இருக்காமல் உங்களாலும் எதையும் எதிர்கொள்ளும் வல்லமை உள்ளது என்பதை நிரூபித்து  வெளியே வாருங்கள்.

எடுத்ததற்கெல்லாம் ஆண்களைக் குறை கூறும் பல்லவியைப் பாடாமல் அடுத்த கட்டம் என்ன என்பதை யோசியுங்கள்.

ஒரு ஆணின்  துணை இல்லாமல் இந்த உலகில் அதுவும் பெண்களுக்கே அதிக சுதந்திரம் அளிக்கும் மேற்குலகில் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? வாழ்ந்து காட்டுங்கள் என்பதையே நாங்களும் கோடிட்டுக் காட்டுகின்றோம் :icon_idea: 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நாங்களும் சொல்கின்றோம். ஆண்களின் துணை இல்லாமல் வாழ முடியும் என்ற நிலைக்கு எப்போது பெண்கள் வெளியே வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

ஆண்கள் புத்தகப் பூச்சிகளாகவே இருக்கட்டும்.

பெண்கள் நீங்கள் விட்டில் பூச்சிகளாக இருக்காமல் உங்களாலும் எதையும் எதிர்கொள்ளும் வல்லமை உள்ளது என்பதை நிரூபித்து  வெளியே வாருங்கள்.

எடுத்ததற்கெல்லாம் ஆண்களைக் குறை கூறும் பல்லவியைப் பாடாமல் அடுத்த கட்டம் என்ன என்பதை யோசியுங்கள்.

ஒரு ஆணின்  துணை இல்லாமல் இந்த உலகில் அதுவும் பெண்களுக்கே அதிக சுதந்திரம் அளிக்கும் மேற்குலகில் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? வாழ்ந்து காட்டுங்கள் என்பதையே நாங்களும் கோடிட்டுக் காட்டுகின்றோம் :icon_idea: 

 

 

பெண்கள் தனியாக வாழமுடியும்.
ஆண்களும் வாழமுடியும். அதில் யாருக்கு என்ன லாபம் இருக்கிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை.
 
இங்கே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் ... பேரு வலிக்கு தன்னை உட்படுத்தி பெண் இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுக்கிறாள். இரண்டு பேர் என்பது இப்போது நான்கு  பேர் என்று ஆகிறது.
 
இப்போ கணவன் விட்டு விலகி போகிறார் .......
இரண்டு பிள்ளைகள்?
இவை யாருடையவை?
ஏன்  இந்த சுமைகள் அந்த பெண் மீது சுமத்த படுகிறது?
 
ஒரு பெண்ணின் இளமை காலத்தை காதல் கலியாணம் கத்தரிக்காய் என்று அழித்துவிட்டு இரண்டு உயிர்களையும் அவள் தலையில் கட்டிவிட்டு. 
தனியாக வாழ்ந்து காட்டுங்கள் ??? என்பது ஆணாதிக்கத்தின் அருவெறுப்பான அதி உச்சம். 
 
எதை வைத்து பெண்கள் தனியாக வாழ முடியாது என்று எண்ணுகிறீர்கள்??
  • கருத்துக்கள உறவுகள்

மருது.. பிரிந்து செல்லும் பெண்களுக்கு தம் பிள்ளைகளை வளர்க்க விருப்பம் இல்லாவிட்டால் கணவர்களிடம் விட்டுவிடலாம். கணவர் சரியில்லாவிட்டால் அரசாங்கமே வளர்க்கும்தானே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.