Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து வருடங்களுக்கு முன் பார்த்த யாழ்ப்பாணம் இன்று இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம். கேணி அது probation ல்லை. Prohibition. ( சனி மாற்றம் சரியில்லைபோல - இப்படி வந்து மாரடிக்க வேண்டிக்கிடக்கு).

regulation  - prohibition   

இரண்டுக்கும் எவ்வளவு வேறு பாடு என்று தொியவில்லை..

நீங்கள் சொல்வதை பாா்த்தால் Prohibition ஒரு  Regulation ஆக வர முடியும்  ஆனால் சமூகத்திடமிருந்து வர முடியாது என்கிறீா்களா?

  • Replies 90
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம கேணி, நான் ஒத்துக்கிறேன் நான் சொன்னது எதுவும் உங்களுக்கு புரியவில்லை.

இதற்குமேல் விளங்கப்படுத்தும் இயலுமையும் நோக்கமும் எனக்கில்லை.

என்ன நீங்கள் தர்கத்தில் வெண்டு விட்டீர்கள் என்று ஒத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதானே? ஒத்துகிறேன் நீங்க ரவுடிதான்.

ஒரு சிறிய விண்ணப்பம் உங்களின் அதி புத்திசாலி கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறதல்லவா?

இனி என்னிடம் கேள்வி கேட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

நான் என் சிற்றறிவுக்கு பட்ட மாதிரி ஏதாவது உளரினால் அதை பெரிய மனது பண்ணி புறக்கணித்து விடுங்கள்.

நீங்கள் பதில் இட்டாலும் உங்களோடு நான் தொடர்ந்து உரையாடுவதில்லை.

யாழில் நான் இப்படி ஒதுங்கி போகும் ரெண்டாவது பெரிய அதிபுத்திசாலி நீங்கள்.

நன்றி

வணக்கம்

புலம் பெயர்ந்த புண்ணியவான்கள் ...
கொடி பிடிக்கிற கூட்டம் ....
புலி ஆதரவாளர் ......
 
இந்த சொல் பதங்கள் உங்களிடம் இருந்து வரும்போது. அதற்கு பதில் தர வேண்டிய கட்டயாம் எனக்கு வருகிறது. காரணம் அந்த மூன்று பெயருக்குள்ளும் நான் அடங்குகிறேன்.
 
மேலே இருப்பதை தவிர்த்து நீங்கள் உங்கள் கருத்தை முன்வைத்தால் உங்கள் கருத்தாக அது தோற்றம் பெறுவதோடு (......... ) ஒரு கருத்து என்ற பண்பையும் பெறுகிறது. 
 
அதை நானோ மற்றவர்களோ ஏற்று கொள்ளலாம் அல்லது எதிர்த்து ஒரு கருத்தை முன்வைக்கலாம். என்னுடைய கருத்துடன் உடன்பட வேண்டிய கட்டாயம் உங்களுக்கோ வேறு யாருக்குமோ இல்லைதானே?
 
நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பாக மேலே உள்ள சொல்பதங்களை பாவித்து ..... ஒரு கற்பனை கருத்தை பதிவிடும்போது இப்படியான முரண்பாடுகள் வந்து நேர விரயம் ஆகிறது. 
 
அதி புத்திசாலி என்று யாரும் இல்லை ............ சில விடயங்களில் சிலருக்கு நாட்டம் அதிகம் அவளவுதான்.
இதை புரிந்து கொண்டு நானும் நீங்களும்  கருத்தை எழுதினாலே போதும்.
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் ஒரு முகம்தான் பெரும்பாலானோரின் கண்களுக்கு தெரிகிறது. யுத்த காலத்தில் ட்ரெயின்கூட ஓடாத யாழ்ப்பாணத்தில் விமான நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பயிற்சியும் ஒரு பக்கமாக நடக்கிறது. அதெல்லாம் பலரது கண்களில் படாது. பட்டாலும் அதற்கும் ஒரு நொட்டை சொல்ல சான்ஸூம் உள்ளது. இதோ இதுவும் யாழ்ப்பாணம்தான்-

AA-20141022-01.gif

AA-20141022-09.gif

AA-20141022-04.gif

ஏன் சபேசண்ண.. குட்டைப் பாவாடையை போட்டிட்டு.. அதை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு இருக்கிற நேரத்துக்கு.. மாத்தி யோசிக்கலாமில்ல. அந்தக் கையை வேற தேவைகளுக்கு உபயோகமா பயன்படுத்திற வழிக்கு உடையணியலாம் இல்ல.

யாழ்ப்பாணம் முன்னேறிறது.. அபிவிருத்தி அடைவது தான்.. எப்போதும் இலக்கு. அதனை யாரும் இல்லைன்னு சொல்லேல்லைண்ணே. அபிவிருத்தி என்ற போர்வையில் அநாவசியங்களை சமூகச் சீர்கேடுகளை புகுத்தனுன்னு அவசியம் கிடையாது. அதைத்தான் கண்டிக்கிறாங்க.

விமானப்பணிப் பெண் என்றால்.. குட்டைப்பாவாடை.. தொடை தெரிய போட்டிக்கிட்டு.. அப்புறம்.. அது தெரியாமல்.. இருக்க பொத்திப்பிடிக்கனுன்னு அவசியம் கிடையாதில்ல. எங்களுக்குரிய எங்களுக்கு செளகரியமான உடையை அணிந்தும்.. விமானப் பணி பெண் பணி ஆற்றலாமுண்ணே. அதைத்தான் சொல்லுறாங்க..!!!  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Prohibition என்றால் முற்றாக தடை செய்வது. ஒரு காலத்தில் அமேரிக்காவில், பின்னர் ஆப்கானில், இப்போ கேரளாவில் மதுவை prohibit பண்ணியூள்ளனர்.

Regulate என்றால் - குறித்த வரையறைக்குள் அனுமதிப்பது.

Class A drugs ஐ எல்லா நாடுகளுமே prohibit பண்ணியுள்ளன.

சாராயம் மீதான Regulation நாட்டுக்கு நாடு வேறுபடும்.

இலங்கையில் எல்லா பகுதிகளுக்கும் ஒரே regulation ஏ இருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எல்லா பகுதிகளுமே ஒரே மாதிரியான பிரச்சினைகளையே சந்திக்கிறன.

ஆனால் யாழ் என்னவோ தனி தேவலோகம் போலவும் அங்கு மற்ற இடங்களை விட மேலும் கூடிய regulations வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் இங்கே உருவாக்கப்படுகிறது.

யாழில் அப்படி ஒன்றும் சீரழியவில்லை. எல்லாம் அளவோடுதான் நடக்குது.

அங்கே சாராயம், ஆபாசபடம் வேண்டுமென்றே திணிக்கப்படுகிறது என்பதும் ஆதாரமிலாத கதையே. அப்படி திணிக்க வாங்கி குடிக்க மக்கள் என்ன முட்டாள்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கினை சில பேருக்கு கசிப்பும்.. கள்ளச் சாராயமும்.. பெருகனுன்னும்.. அதை கிளாஸில வகுந்து.. மக்கள்.. பார்ல வைச்சு குடிக்கனுன்னு.. ஆசை. அதை அபிவிருத்தின்னு சொல்லனுன்னு அவா.

ஆனால்.. அவை ஆபத்தானவை. தவிர்க்கப்படனும்.. அதை பெருக அனுமதிக்காதீங்க.. அதை திட்டமிட்டு பெருக அனுமதிப்பது.. தற்போதைய சிங்கள அரச படைகளின் நிர்வாகப் பொறிமுறை என்பதில்.. என்ன தவறிருக்கிறது..???!!

மக்கள் இலவசமா கொடுத்தா.. பொலிடோலும் குடிப்பாங்க. அது அமெரிக்கா என்ன.. யாழ்ப்பாணம் என்ன எல்லா இடமும் மனிதர்கள் ஒரே விதம் தான்.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விதமான ரெஸ் கோர்ட்..

எது கூடிய பொருத்தமா இருக்கு.. தொழிலுக்கு.. உடம்புக்கு ஏற்ப...

Police-headquarters.jpg

சிறீலங்கா பொலிஸ் பெண்.

1024px-LTTE_Police_Women.jpg

தமிழீழம் பொலிஸ் பெண்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Prohibition என்றால் முற்றாக தடை செய்வது. ஒரு காலத்தில் அமேரிக்காவில், பின்னர் ஆப்கானில், இப்போ கேரளாவில் மதுவை prohibit பண்ணியூள்ளனர்.

Regulate என்றால் - குறித்த வரையறைக்குள் அனுமதிப்பது.

Class A drugs ஐ எல்லா நாடுகளுமே prohibit பண்ணியுள்ளன.

சாராயம் மீதான Regulation நாட்டுக்கு நாடு வேறுபடும்.

இலங்கையில் எல்லா பகுதிகளுக்கும் ஒரே regulation ஏ இருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எல்லா பகுதிகளுமே ஒரே மாதிரியான பிரச்சினைகளையே சந்திக்கிறன.

ஆனால் யாழ் என்னவோ தனி தேவலோகம் போலவும் அங்கு மற்ற இடங்களை விட மேலும் கூடிய regulations வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் இங்கே உருவாக்கப்படுகிறது.

யாழில் அப்படி ஒன்றும் சீரழியவில்லை. எல்லாம் அளவோடுதான் நடக்குது.

அங்கே சாராயம், ஆபாசபடம் வேண்டுமென்றே திணிக்கப்படுகிறது என்பதும் ஆதாரமிலாத கதையே. அப்படி திணிக்க வாங்கி குடிக்க மக்கள் என்ன முட்டாள்களா?

இரு முரண்பட்ட கருத்துக்கள். 
 
(ஒரு சிறிய சுட்டி காட்டல் மட்டுமே: மக்கள் முட்டாள்கள் இல்லை என்றால்.... ஏன்  class A drugs கை தடை செய்ய வேண்டும்? )

சரி கோசான் நான் விட்ட இடத்தில் தொடர்கிறேன்.

கோசான் நீங்கள் யாழில் நேரில் சென்று பார்த்து சொல்லுகின்ற கருத்துகளை நான் மதிக்கிறேன்.( எனக்கு கண் முன் தெரியும் யாழ்ப்பாணம் நான் கடைசியாக இருந்த கால பகுதிக்கு உரியது.) அதே நேரம் இந்த செய்தியில் கருத்தை சொல்லுபவர்களும் யாழ்பாணத்தை நேரில் பார்கின்றவர்கள் என்பதை நீங்கள் ஏற்றுகொள்ளுகிறீர்களா.?

இந்த செய்தியில் மேற்கூறிய கருத்தை வைத்தவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத சர்வமத குழுவினர். எனவே அவர்களின் கருத்தில் ஒரு 10 வீதமாவது உண்மை இருக்கும் என்று நாங்கள் நம்பலாம் அல்லாவா ..?

அடுத்து அவர்கள் கூறிய 10 ஆண்டுகள் எந்த ஒரு அரசியல் நோக்கத்தை கொண்டதாகவோ அல்லது யாருடைய கட்டுபாட்டில் யாழ்ப்பாணம் இருந்ததையோ ககுறிப்பிடுவதை நோக்கமாக கொண்டிருக்க முடியாது. அவர்கள் எழுந்தமானமாகவே 10 ஆண்டுகள் என்று குறிப்பிட்டு முடியும்.

ஏனெனில் 10 ஆண்டுகளுக்கு முன் வந்த பத்திரிகை செய்திகளும் யாழ்ப்பாண காலச்சார சீரழிவை ஒப்பிட்டு பேசி இருந்தன. அவை அப்போது அதற்கு 10 ஆண்டுகள் முன்னரான நிலைமையோடு ஒப்பிட்டு பேசி இருந்தன.

இப்போ இங்கே 10 ஆண்டுகள் என்பதை விட்டு தொழிநுட்பவளர்ச்சி, வசதி வாய்ப்புகள், பணப்புழக்கம், அறியாமை, கட்டுப்பாடு என்ற பெயரில் வீட்டில் அடக்குமுறை, நவீனத்துவத்தை விளங்காமை அல்லது அறியாமை, பாலியல் வரட்சி இப்படி பல காரணங்களை கலாச்சார சீரழிவோடு ஒப்பிட முடியும். அதை விடுத்து ராணுவத்தையும், ஒட்டு குழுக்களும் மட்டும் தான் இவற்றுக்கு எல்லாம் காரணம் என்று சொல்வதை ஏற்கமுடியாது. அவர்கள் காரணமாக இருந்தாலும் வேறு பல காரணங்களும் உள்ளன என்று ஏற்று கொண்டு விவாதிப்போம். அடுத்து என்ன செய்யலாம் என்று பேசுவோம்.

கோசான்,

நான் குட்டை பாவாடை போடுபவர்களுக்கு பச்சை அட்டையால் அடித்தவர்களுள் ஒருவன்.

குட்டை பாவாடைகளையும் காலச்சாரத்தை சீரழிக்கும் என்று நம்பிய உடுப்புகளை கடைகளில் இருந்து தெருவில் போட்டு கொளுத்தியவர்களில் ஒருவன்.

ஆபாச பட தட்டுகளை வைத்திருந்தவர்களை பதுங்கு குழிகளில் அடைத்து வைத்திருந்து தண்டனை வழங்கியவர்களில் ஒருவன்.

ஆனால் அவற்றால் இன்று (நீண்ட கால) பயன் இல்லை என்று நம்பும் ஒருவன்.

இங்கே விவாதம் என்பது எங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை புத்திசாலித்தனதுக்கான போட்டியாக கருதாமல் அந்த செய்தியின் கடைசி வரி போல

"எனவே இவ்வாறு பேசிக் கொண்டிருக்காது நாம் என்ன செய்ய முடியும் என்ற முடிவினை விரைவில் எட்ட வேண்டிய தேவை உள்ளது என குழுவினர் மேலும் தெரிவித்தனர்."

என்ன செய்ய வேண்டும் எங்கே இருந்து தொடங்க வேண்டும் என்று விவாதிப்பது நல்லது.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒதுங்கி போகிறேன் என்று சொன்ன பிறகும் கோடிட்டு கருத்துப் பகிர்வது அநாகரீகம். Class A drugs ற்கும் சாராயத்துக்கும் வித்யாசம் தெரியாவிட்டால் என்ன செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புலம்பெயர்ந்த பின்னர் போன வருடம் யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாகப் போயிருந்தேன். இளைஞர்கள் பலர் பின்னேர வேளைகளில் "பார்"க்குப் போய் குடித்தாலும் ஊர் விடயங்களில் ஈடுபடுவதையும், வெளிநாட்டுப் பணத்தில் ஊதாரித்தனமாகச் செலவழிப்பதையும் பார்த்தேன். ஆனால் அதே இடத்தில் கட்டுப்பாடு மிக்கவர்களையும், கல்வியில் நாட்டம் உள்ளவர்களையும் கண்டேன். எல்லா இடங்களிலும் இருப்பது மாதிரி யாழிலும் எல்லா வகையினரும் உள்ளனர்.

ஆனால் சமூக சிந்தனையுள்ளவர்கள் அமைதியாகத்தான் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இராணுவ ஆக்கிரமிப்புத்தான். இராணுவ புலனாய்வாளர்களின் தொல்லைகள் இல்லாவிட்டால் சமூகத்தை வளம்படுத்தும் பல விடயங்களை அவர்களே முன்னெடுப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்,

இங்கே விசயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் - மதம் - சம்பந்த பட்ட ஆக்கள். அவை நாமெல்லாம் தீட்சை பெற்று அல்லது பாதிரியா போகோணும் எண்டு எதிர்பார்க்கிற ஆக்கள். ஒரு பியர் போத்தில கண்டாலே பீபி ஏறும் கூட்டம். அவைக்கு புலி காலத்து பச்சை மட்டையை திருப்பி கொண்டுவந்தால் திருப்தி படுவினம். ஆனால் பாழாய்போன தனிமனித சுதந்திரம் எண்டும் ஒண்டிருக்கே.

என்ன செய்யலாம்?

பெற்றோருக்கு, ஆசிரியர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். Moderation எனும் கருத்தியலை மக்களுக்கு சொல்ல வேண்டும். Social drinking ற்கும் மூக்கு மொட்ட குடித்து விட்டு புருசனை அல்லது மனுசியை போட்டடிப்பதற்கும் உள்ள வித்யாசத்தை சொல்லிக் கொடுக்கோணும்.

முன்பு family planning awareness செய்தது போல் அணுகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒதுங்கி போகிறேன் என்று சொன்ன பிறகும் கோடிட்டு கருத்துப் பகிர்வது அநாகரீகம். Class A drugs ற்கும் சாராயத்துக்கும் வித்யாசம் தெரியாவிட்டால் என்ன செய்ய முடியும்.

ஒரு கருத்து களத்தில் யார் கருத்தை பகிர்கிறார்கள் என்று பார்ப்பதுதான் கொஞ்சம் அநாகரீகமானது. 
கருத்துக்களுடன் உடன்பட்டோ அல்லது அதை எதிர்த்தோ (எது தங்களுக்கு சரியென படுகிறதோ) தமது கருத்தை முன்வைக்கவேண்டும்.
 
மக்கள் முட்டாள்கள் இல்லை என்றால் எ வகை ரக்சயும் தடைசெயாது விடலாம்தானே??
 
என்ன 
எங்கே 
எப்போது 
 
இவைகள்தான் ஒன்றை தீர்மானிக்கின்றன........... அதை கருத்தில் கொண்டே  கலாசாரம் சட்டங்கள் பிறக்கின்றன. 
வேறு வேறு விடயங்களுக்கு வேறு வேறு சட்டம் இருக்கிறது என்பதைத்தான்  சுட்டிகாட்டினேன். இங்கே மக்கள் புத்திசாலிகளா இல்லையா  என்று யாரும் பார்கவில்லை. அப்படி பார்க்கவும் முடியாது.
சட்டியை எல்லோரும் தொட்டுபார்க்க தேவை இல்லை .... ஏற்கனவே தொட்டு  பார்த்தவர்கள். தொடாதீர் சுடும்! என்று அறிவுறுத்தல் பலகைகளை  வைக்கிறார்கள். சட்டி ஒரு இன குழுமத்திற்கு ஓரிடத்தில் பெரும் இடஞ்சலகும்போது அவர்கள். சட்டியையே எடுத்துவிடுகிறார்கள். 
இதுதான் உலக நடைமுறை. 
 
யார் .... எங்கே .... எப்போது? இவற்றை நாம் கருத்தில் வைத்து எமது கருத்தாடலை தொடரலாம்.

கோசான்,

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம்.

ஆனாலும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் விடயத்தில் உங்களின் வழிமுறைகள் எவ்வளவு தூரம் சாத்தியமாகும். வித்தியாசங்களை விளங்கபடுத்தினாலும் அதை புரிந்துகொள்ளும் மனபக்குவம் உள்ளவர்களாக நாங்கள் கருத முடியாது.

உண்மையை சொல்ல போனால், வெளிநாட்டுக்கு இவ்வளவு காசு செலவழித்து வருவது வீண் விரயம் என்று சொல்லி உங்களால் அங்கெ யாருக்கும் விளங்கபடுத்த முடியுமா.?

வெளிநாடுகளில் மார்பு தெரிய உடை அணிந்தாலும் உள்ளே கலாச்சாரமாக வாழ்கிறார்கள் என்று விளங்கபடுத்த முடியுமா.??

மத தலைவர்களும், கிராம பெரியவர்களும் சொல்லி மக்கள் திருந்துகின்ற காலம் மலையேறி போய்விட்டது.

இப்போ ஒரே வழி தான் பட்டு திருந்துதல். அதற்கும் நிறைய காலம் எடுக்கும்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்,

இங்கே விசயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் - மதம் - சம்பந்த பட்ட ஆக்கள். அவை நாமெல்லாம் தீட்சை பெற்று அல்லது பாதிரியா போகோணும் எண்டு எதிர்பார்க்கிற ஆக்கள். ஒரு பியர் போத்தில கண்டாலே பீபி ஏறும் கூட்டம். அவைக்கு புலி காலத்து பச்சை மட்டையை திருப்பி கொண்டுவந்தால் திருப்தி படுவினம். ஆனால் பாழாய்போன தனிமனித சுதந்திரம் எண்டும் ஒண்டிருக்கே.

என்ன செய்யலாம்?

பெற்றோருக்கு, ஆசிரியர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். Moderation எனும் கருத்தியலை மக்களுக்கு சொல்ல வேண்டும். Social drinking ற்கும் மூக்கு மொட்ட குடித்து விட்டு புருசனை அல்லது மனுசியை போட்டடிப்பதற்கும் உள்ள வித்யாசத்தை சொல்லிக் கொடுக்கோணும்.

முன்பு family planning awareness செய்தது போல் அணுகலாம்.

திரும்பவும் தப்பாக பேசுகிறீர்கள்......
 
சோசல் டிரிங்கிங் எனபது எல்லா இடமும் இருக்க வேண்டிய தேவை இல்லை.
எல்லா கலச்சாரமும் இனங்களும் அதனுடன் ஒத்துபோக வேண்டியதில்லை.
 
லோகிஜிக்காக சோசல் ட்ரின்கிங்கை சரி என்று உங்களால் நிறுவ முடியாது.
அங்கே எனது கருத்து வென்றுவிடும்.
 
குடிக்கும் ஒரு சமூதாயம் .... தமது தப்பை மறைக்க உண்டாக்கிய ஒரு வார்த்தை பிரயோகமே அது என்று. நான் ஒரு கருத்தை முன்வைத்தால் எப்படி இல்லை என்று உங்களால் நிருபிக்க முடியும்?? 
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பகலவன் கிட்டத்தட்ட இதே நிலையில்தான் இல்லை இதை விட மோனமான நிலையிலே 90 80 இல் சென்னை இருந்தது. ஜீன்ஸ் போட்ட பெண் தாசி என்று நினைக்கும் போக்கு. ஆனால் இன்று எவ்வளவு மாற்றங்கள்? இதில் சமூக அமைப்புகளின் பெண்கள் அமைப்புக்களின் பங்கு அளப்பரியது.

நீங்கள் சொல்வது போல் பட்டறிவுக்கு நிகரில்லைத்தான் - ஆனால் மக்களுக்கு போதைக்கு அடிமையாவதின் தேவையை விளக்கி சொல்வதும் அவசியமே.

It's a balancing act between ensuring individual freedom and maintaining order.

ரெண்டு extreme க்கும் போகாமல் பிரச்டினையை கையாள வேண்டும்.

ஒரு உணவகத்தில் பியர் குடிக்கும் ஒரு குழுவினர் தமக்கு அடுத்த மேசையில் தமது பிள்ளைகளுடன் மதிய/ இரவு உணவை எடுத்து கொண்டிருக்கும் ஒரு குடும்பதினருக்கு எதுவித தொந்தரவும் கொடுக்காத நிலையே கலாச்சார மேம்பாடு அல்லது உயர்நிலை கலாச்சாரம் என்று நினைக்கிறேன். அந்த நிலை யாழ்பாணத்தில் உருவாகுமானால் அங்கு கலாசார சீர்கேடு இல்லை என்று கூறலாம். தேவையில்லாமல் அடுத்தவர் விடயங்களில் தமது மூக்கை நீட்டுவதும் கலாச்சார சீர்கேடுதான். அது யாழ்பாணத்தில தாராளமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கனும் கோசன் அண்ணா,நான் சொல்ல வந்தது என்னவெனில்  Prohibits என்பது ஒரு regulation உட்பட்டதல்லவா?  போதைப் பொருளை தடை செய்வது அதாவது உங்கள் வாா்த்தை prohibition of  drugs  come under a regulation. அப்படியிருக்கையில்  regulation என்பது மட்டுப்படுத்தப்பட்டது அல்லது வரையறைக்குட்பட்டது என்பது எந்த வகையில் சாியாகும்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இந்த வாதம் ஆரோக்கியமான வகையில் செல்ல வேண்டும்... கருத்துக்களை வெல்லவேண்டும் என்ற நோக்கில் யாா் சிறந்த கருத்தாளா் என்பதை விடுத்து, சமூகத்திற்கு ஏற்ற வகையில் விவாதிக்கலாம். 

1. வடக்கில் குடிப்பவா்களின் தொகை அதிகாித்துள்ளது.

2. அன்றாடம் வேலை கிடைகாகவிட்டாலும் கடன் வேண்டிக் குடிப்போா் அதிகம்
3. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம்
4. இளைஞா்களுக்கு பொறுப்புணா்வு குறைந்துள்ளது
5. வறுமையின் காரணமாக விபச்சாரம் தலைதூக்கியுள்ளது
6. காரணமே அற்ற காரணங்களால் குடும்ப உறவு பாதிப்படைந்துள்ளது
7. பாடசாலை செல்ல மாணவா்கள் பின்னடிக்கிறாா்கள்

8. கடன் சுமை மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளது
9. வட்டிக்கு கொடுப்போா் கொடுமை அரங்கேறுகிறது
10. வாகன, வீட்டு, வியாபார அடமானக்கடனால் அனைவரும் ஆடிப்போயுள்ளனா்

இதை விட யாரும் வேறு விடயங்கள் இருந்தாலும் கூறுங்கள் தாராளமாக விவாதிப்போம். கொஞ்சம் பிரயோசனமாக..!
நான் மேலிட்டுள்ள விடயங்கள் நடக்கவே இல்லை என்று வாதாட விரும்பினால் தயவு செய்து பதில் கருத்தை எதிா் பாா்காதீா்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ரெகுலேசனுக்கு 2 அர்த்தம். நீங்கள் சொல்வது 1, நான் சொல்லுவது 2.

http://www.oxforddictionaries.com/definition/english/regulation

Regulating the water flow எனும் போது நான் சொன்ன கருத்திலும்

Regulations governing the use of water எனும் போது நீங்கள் சொன்ன கருத்திலும் அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் மேலாக 60 வீதமான பெண் பிள்ளைகள் சாதாரண தரத்துடன்  வீட்டில் நின்று விடுகின்றனர் மீதமாக உள்ள 40 வீதம் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர வீட்டில் நின்ற பெண்பிள்ளைகள் என்ன ஆனார்கள் அவர்களுக்கான வேலை வாய்ப்பு என்ன என்று கூட தெரியாத நிலையில் உள்ளோம்.
 
60 வீதமான யாழ்மாவட்டப் பெண்கள் சாதாரண தரத்துடன் கல்வியை நிறுத்தி விடுகிறார்கள் என்பது மிகவும் பிழையான தரவு.

தண்ணி அடிப்பதும் தம் அடிப்பதும் அபிவிருத்தி எண்டு எவன் சொன்னான்? பெண்கள் டெனிம் ஜீன்ஸ் போடுவதே யாழில் ஒருகாலத்தில் கலாச்சாரச் சீரழிவாகக் கருதப்பட்டது உண்மைதானே.

நாம் என்ன செய்ய வேண்டும்? - புலம் பெயர்ந்தவர்கள் ஒன்றுமே செய்ய முடியாது. வேணுமென்றால் ஊதாரித் தனமாக செலவு செய்பவர்களுக்கு காசை அனுப்பாமல் விடலாம்.

அவர்கள் - அங்கிருப்பவர்கள், குடும்ப மட்டத்திலே இவற்றை கட்டுப்படுத்தலாம், பாடசாலைகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். சனசமூக நிலையங்கள் மூலம் இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பங்களுடன், தனிப்படவர்களுடன் பேசலாம்.

நான் பல தடவை போய் வந்து விட்டேன், இவை எதையுமே காணவில்லை.

நீங்கள் கூறியிருப்பது மிகச் சரி. அங்குள்ள பாடசாலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் சில தொடங்கப்பட்டு நல்ல பலனும் கிட்டியுள்ளது. 60 வீத பெண்கள் சாதாரண தரத்துடன் கல்வியை நிறுத்துவது என்ற தரவு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை நிஜமல்ல. சமீக காலத்தில் இளைஞர்கள் மனப்போக்கில் பல மாற்றங்கள் தெரிகின்றன. 

உண்மையில் இந்த வாதம் ஆரோக்கியமான வகையில் செல்ல வேண்டும்... கருத்துக்களை வெல்லவேண்டும் என்ற நோக்கில் யாா் சிறந்த கருத்தாளா் என்பதை விடுத்து, சமூகத்திற்கு ஏற்ற வகையில் விவாதிக்கலாம். 

1. வடக்கில் குடிப்பவா்களின் தொகை அதிகாித்துள்ளது.

2. அன்றாடம் வேலை கிடைகாகவிட்டாலும் கடன் வேண்டிக் குடிப்போா் அதிகம்

3. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம்

4. இளைஞா்களுக்கு பொறுப்புணா்வு குறைந்துள்ளது

5. வறுமையின் காரணமாக விபச்சாரம் தலைதூக்கியுள்ளது

6. காரணமே அற்ற காரணங்களால் குடும்ப உறவு பாதிப்படைந்துள்ளது

7. பாடசாலை செல்ல மாணவா்கள் பின்னடிக்கிறாா்கள்

8. கடன் சுமை மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளது

9. வட்டிக்கு கொடுப்போா் கொடுமை அரங்கேறுகிறது

10. வாகன, வீட்டு, வியாபார அடமானக்கடனால் அனைவரும் ஆடிப்போயுள்ளனா்

இதை விட யாரும் வேறு விடயங்கள் இருந்தாலும் கூறுங்கள் தாராளமாக விவாதிப்போம். கொஞ்சம் பிரயோசனமாக..!

நான் மேலிட்டுள்ள விடயங்கள் நடக்கவே இல்லை என்று வாதாட விரும்பினால் தயவு செய்து பதில் கருத்தை எதிா் பாா்காதீா்கள்...!

இவை பொருளாதார நெருக்கடிகள் சார்ந்த பிரச்சனை. இவற்றுக்கு கலாச்சார அணுகுமுறையால் தீர்வு கிடையாது.

அரச உத்தியோகத்தால் வருமானம் ஈட்டும் தரப்பும் உழைப்பின்றி வெளிநாடுகளில் இருந்து வருமானம் பெறும் தரப்பும் இருப்பில் சொத்தும் நிலபுலனும் அதனால் வருமானம் ஈட்டக்கூடிய தரப்பும் ஸ்திரமான நிலையில் இருக்கின்றது. இவ்வாறான தரப்புகள் ஒரு வரக்கமாக உருவெடுத்துள்ளது. இந்த வரக்கத்திற்கு வழிநடத்துவது உழைப்பின்றி பெருந்தொகை பணத்தை ஈட்டக்கூடிய வெளிநாடுகளில் இருந்து பண வழங்கலை பெறும் தரப்பேயாகும்.

இந்த வழி நடத்தும் தரப்பே பல ஆடம்பரங்களை அறிமுகம் செய்யும் தரப்பாகும். அது கோயில் திருவிழாவாகட்டும் வீடுகளில் நடக்கும் திருமண சாமத்திய சடங்குகளாகட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள் ஆகட்டும் புதிய வகை மது பானங்களை அறிமுப்படுத்துவதாகட்டும் இவ்வாறான வரக்கத்துக்கே பணப் புழக்கம் நிமிர்த்தம் அது சாத்தியமானது. வறுமையின் பிடியில் பாலியல் தொழில் என்பதுக்கும் பணமுள்ளவனின் தேவையே அதை விரிவு படுத்துகின்றது. அந்த வகையில் சமூகத்தின் அன்றாட இயங்கு சமநிலையை குலைத்து ஏற்றதாழ்வுகளையும் புதிய வர்க்க ஏற்ற இறக்கங்களையும் புலம்பெயர் தமிழன் அனுப்பும் பணம் உருவாக்குகின்றது. பொருளாதார சமநிலை குலையும் போது ஏற்படும் நெருக்கடிகளுக்கு புலம்பெயர் தமிழனின் உதவியும் காரணம்.

புலம்பெயர் தமிழன் இங்குள்ள தமது சந்தைகள் கடைகளுக்கு தமிழீழப் பகுதிகளில் இருந்து அம்மக்களின் உற்பத்திப் பொருட்களை அம் மக்களிடமே கொள்வனவு செய்யும் போது கணிசமானளவு பலன் அவர்களுக்கு கிடைக்கும்.

புலம்பெயர் தமிழன் தான் செய்யும் பொருளாதரா உதவிகள் அங்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தாமலும் சமூக ஏற்றதாழ்வை ஏற்படுத்தாமலும் இருக்கும் வகையில் செய்தால் அவையும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறான விசயங்களுக்கான தீர்வுகள் அறிவாலும் பொது உணர்வாலும் மட்டுமே சற்றேனும் குறைய முடியுமன்றி கலாச்சாரம் பண்பாடு என்ற அணுகுமுறைகள் இவற்றை என்னும் மோசமாக்கும். அதுவே நடந்து வருகின்றது.

இவ்வாறான பிரச்சனைகளை புலம்பெயர் தமிழனும் இணைந்து தீர்வு காணவேணுமால் முதலில் அங்குள்ள அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இடையில் அரசியல் பொருளாதாரம் சார்ந்த இறுக்கமான உறவு வேண்டும். ஆனால் புலம்பெயர் தேசத்தின் தமிழ்த்தேசீய அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகள் குழுக்களின் கோட்பாட்டுக்கு இது விரோதமானது. அவைகள் தாயக மக்களின் விருப்பு வெறுப்பு அபிலாசைகளை அன்றாட பொருளாதராப் பிரச்சனைகளுன் சம்மந்தப்பட விரும்பாதவை.

  • கருத்துக்கள உறவுகள்

Australiaவில் யாழிந்து பழையமாணவர்கள் நடாத்தும் கீதவாணி நிகழ்வில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் பேராதனை பல்கலைக்கழக lecturer (engineering ) ஒரு ஆக்கம் எழுதியிருந்தார். அந்த ஆக்கத்தில் பல தரவுகளை மேற்கோள் காட்டியிருந்தார். என்னிடம் electronic version இல்லை. இத்தரவுகளை பார்த்தால் யாழ் கல்வித்தரத்தின் இறங்கு நிலையை காணலாம். 1995 தான் peak time அதன்பின் இறங்கு நிலை தான். யாழ்ப்பாணத்தை மற்றைய மாவட்டங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டியது கல்வி ஒன்றுதான். Beer /wine குடிப்பது பிழையில்லை ஆனால் மற்றையவர்களுக்கு இடையுறு செய்யாமல், அநாகரிகமாக நடக்காமல், 18 வயதிற்கு மேல் மட்டுமே இவற்றை விற்பனை செய்தால் நல்லது.

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... யாழ்ப்பாணம் இப்ப கொஞ்சம் வித்தியாசம் தான்!

தம்பி  தும்பன் சொல்லுறமாதிரி எனக்கும் 'வித்தியாசமா' ஒண்டும் தெரியவில்லை!

அல்லது நாங்கள் பார்க்க வேண்டிய இடத்தில பார்க்கிறதில்லையோ தெரியாது!

எனக்குத் தெரிஞ்ச ஒரு வித்தியாசத்தைச் சொல்லுறன்!

முந்தி முறிகண்டியில.... கச்சான்... கச்சான்.. எண்டு கத்தின மாதிரி நினைவு..!

இப்ப கச்சாங்... கச்சாங்... எண்டு கத்திற மாதிரிக் கிடக்குது! :o 

ஆனால் கச்சான் அளக்கிற ,டின் பால்ப் பேணி மட்டும்,   இன்னும் அரைவாசிக்கு மேல... அடிப்பக்கத்தில அடைச்ச படி தான் இருக்குது! :icon_mrgreen:  

பேணி தெரியாத ஆக்கள்... ஆச்சியின் மடியை .. உத்துக் கவனிக்கவும்! :D

peanut+sellers.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சபேசண்ண.. குட்டைப் பாவாடையை போட்டிட்டு.. அதை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு இருக்கிற நேரத்துக்கு.. மாத்தி யோசிக்கலாமில்ல. அந்தக் கையை வேற தேவைகளுக்கு உபயோகமா பயன்படுத்திற வழிக்கு உடையணியலாம் இல்ல.

யாழ்ப்பாணம் முன்னேறிறது.. அபிவிருத்தி அடைவது தான்.. எப்போதும் இலக்கு. அதனை யாரும் இல்லைன்னு சொல்லேல்லைண்ணே. அபிவிருத்தி என்ற போர்வையில் அநாவசியங்களை சமூகச் சீர்கேடுகளை புகுத்தனுன்னு அவசியம் கிடையாது. அதைத்தான் கண்டிக்கிறாங்க.

விமானப்பணிப் பெண் என்றால்.. குட்டைப்பாவாடை.. தொடை தெரிய போட்டிக்கிட்டு.. அப்புறம்.. அது தெரியாமல்.. இருக்க பொத்திப்பிடிக்கனுன்னு அவசியம் கிடையாதில்ல. எங்களுக்குரிய எங்களுக்கு செளகரியமான உடையை அணிந்தும்.. விமானப் பணி பெண் பணி ஆற்றலாமுண்ணே. அதைத்தான் சொல்லுறாங்க..!!!  :lol:  :icon_idea:

இதுக்கு நான் என்ன சொல்ல முடியும்? ஒவ்வொருவரது பார்வை ஒவ்வொரு விதம். பொதுமகனுக்கு மரம் தெரியும், அருச்சுணனுக்கு (அர்ஜூன் அல்ல) மரக்கிளையில் குருவி தெரியும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.