Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதுளையில் பாரிய நிலச்சரிவு! 12 சடலங்கள்! 200 பேரின் நிலை தெரியவில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலை 7 மணிக்கு, நடந்தது என்பதால்... பலரும் வீட்டில் இருந்திருப்பார்கள்.
தமிழருக்கு மீண்டும் ஒரு அழிவு.
ஆழ்ந்த.... இரங்கல்கள்.

  • Replies 68
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஹல்துமுல்ல மண் சரிவில் சிக்குண்டவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் - அமைச்சர் 

 

பதுளை ஹல்துமுல்ல மீரியாபெத்த மண் சரிவில் சிக்குண்டவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மண் சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் நோக்கில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், கடும் மழை மற்றும் பிரதேசத்தில் போதியளவு வெளிச்சம் இன்மையினால் மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாளைய தினம் மீண்டும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சுமார் ஐந்து கிலோ மீற்றர் வரையிலான பகுதி முழுவதுமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 120 வீடுகள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொஸ்லாந்தை ஹல்துமுல்ல பிரதேசத்தை அண்டிய பத்து பாடசாலைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னமும் 300க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவும், அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113042/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஹல்துமுல்ல மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் மோசமான காலநிலை காரணமாக இடைநிறுத்தம்

 

காணமற்போனவர்கள் உயிருடன் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கைகள் குறைவடையத் தொடங்கியுள்ளன - குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

hathmulla_CI.jpg

ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் மோசமான காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து காணமற்போனவர்கள் உயிருடன் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கைகள் குறைவடையத் தொடங்கியுள்ளன.

இதேவேளை அப்பகுதியில் இருந்து வரும் தகவல்களின்படி இன்னமும் மண்சரிவு நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகிறது.

அப்பகுதியில் உள்ள செய்தியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளை தொடரும் கடும் மழை பாதித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் மேலும் மண்சரிவு அபாயம் உள்ளதன் காரணமாக விமானப்படை ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்தியே மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை 100 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

75 பாடசாலை மாணவர்கள் மாத்திரம் உயிர்தப்பியுள்ளதாகவும், குறி;ப்பிட்டுள்ள அவர் ஏனையவர்கள் பற்றி தெரியாது அவர்களை காப்பாற்றுவதற்கு முயல்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

3 கிலோமீற்றர் தூரத்திற்க்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது,2005 .2012இல் அந்த கிராம மக்களுக்கு இந்த அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113044/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
 

 

1240382_10201812570835124_61650153266583
10485845_10201812571235134_6209710866255
10456805_10201812571995153_8696122806600
1507132_10201812572555167_58889032623866

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தை ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள தோட்ட பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன தற்சமயம் மீட்பு பணிகளில் இலங்கை இராணுவம் மற்றும் படைத்தரப்பினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். (படங்கள்: நன்றி தமிழ் மிரர்)

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டப்பட்ட வறிய மக்களே, மீண்டும், மீண்டும் படுவது எனோ? ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மாறி,மாறி தமிழ்ர்களே அழிகிறார்கள்?...இயற்கையும் அவர்களை அழிக்குது,யுத்தமும் அவர்களை அழிக்குது.சீக்கிரம் அவர்கள் இந்த இழப்பில் இருந்து மீள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சடலங்கள் மீட்கப்படவில்லை, மீட்பு பணியில் சிரமம், உறவுகளை தேடி ஆயிரம் கணக்கானோர் படையெடுப்பு

 

 

(கொஸ்லந்தையிலிருந்து  ஆர். நிர்ஷன்)

பதுளை கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் நேற்று  ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் மீட்பு பணிகள் இன்றைய தினமும்  இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் எந்தவொரு சடலமும் கண்டெடுக்கப்படவில்லை.   மேலும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்பு பணிகள் மந்த கதியிலேயே இடம்பெற்றுவருகின்றன.   இந்நிலையில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து எதுவும்  தெரியாததினால்      பிரதேசம்  முழுவதும் சோகமயமாகியுள்ளதுடன்   காணாமல் போனவர்களின் உறவினர்களும்    தவிப்பிலேயே உள்ளனர். 

அந்தவகையில்  தற்போதைய புதிய கணக்கெடுப்புக்களின் பிரகாரம்  மண்சரிவில் சிக்கி 192 பேர்  காணாமல் போயுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும்   குறித்த தோட்டத்தில்  58 குடும்பங்களின்  75 பிள்ளைகள்    பாடசாலைக்கு சென்ற காரணத்தினால்  உயிர் தப்பியுள்ளதாக  பதுளை மாவட்ட செயலாளர் ரோஹன திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.  இநநிலையில்  192 பேரின் கதி என்ன என்பதே அனைவரையும் வாட்டியெடுக்கும் விடயமாகவுள்ளது. 

 

மேலும் வெளியிடங்களில் ஆயிரம் கணக்கான உறவினர்கள் தனது சொந்தங்களை தேடி மீரியபெத்த பகுதிக்கு வருவதால் மீட்பு பணியில் பாரிய இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் தியத்தலாவ பெரகல மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில் வெள்ளைகொடிகளை பறக்கவிட்டு மக்கள் தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளதோடு பதுளை உட்பட மலையகம் எங்கும் சோகம் நிறைந்து காணப்படுகின்றது.

 

http://www.virakesari.lk/articles/2014/10/30/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மலையகத்தில் இப்படியான மண்சரிவுகள் இன்று தொடக்கமல்ல அன்று தொடக்கமே நடந்து வருகின்றது.
இதை கண்டும் காணாமல் நிபந்தனைகள் இன்றி சிங்கள ஆட்சியாளர்களுடன் ஆட்சி செய்யும் பச்சோந்தி அரசியல்வாதிகளை என்ன செய்வது? 
 
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

புழுதிப் படுக்கையில்

புதைந்த என் மக்களைப்

போற்றும் இரங்கற்

புகல் மொழி இல்லை;

பழுதிலா அவர்க் கோர்

கல்லறை இல்லை;

பரிந்தவர் நினைவுநாள்

பகருவார் இல்லை.

ஊணையும் உடலையும்

ஊட்டி இம் மண்ணை

உயிர்த்த வர்க்(கு) இங்கே

உளங்கசிந் தன்பும்

பூணுவாரில்லை - அவர்

புதைமேட்டில்லொர் - கானகப்

பூவைப் பறித்துப்

போடுவாரில்லையே.

*

ஆழப் புதைந்த

தேயிலைச் செடியின்

அடியிற் புதைந்த

அப்பனின் சிதைமேல்

ஏழை மகனும்

ஏறி மிதித்து

இங்கெவர் வாழவோ

தன்னுயிர் தருவன்.

..."

"தேயிலைத் தோட்டத்திலே"

சி. வி. வேலுப்பிள்ளை

1545135_10152566137643801_37987736217271

 

பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க யாழ், கொழும்பு வர்த்தகர்கள் முன்வரவேண்டும் - கூட்டமைப்பு அழைப்பு

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வியாழக்கிழமை (30) கருத்து கூறியதாவது,

'புதன்கிழமை (29) இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக லயன் குடியிருப்பில் வாழ்ந்து வந்த மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் உயிரிழந்தவர்களுக்கு கூட்டமைப்பு இரங்கல் தெரிவிக்கின்றது. அத்துடன், பாதிப்படைந்து நிர்க்கதியில் நிற்கும் மக்களுக்கு உதவிகள் புரிய வேண்டும். உதவி புரிவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

யாழ், கொழும்பு தமிழ் வர்த்தகர்கள் இதற்கு முன்வரவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிவதினூடாக அம்மக்களை அந்த பாதிப்புக்களில் இருந்து மீட்கமுடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/34972/57//d,article_full.aspx

ஒரு வாரகால துக்கதின அனுஷ்டிப்புக்கு மனோ அழைப்பு

பதுளை - கொஸ்லாந்தை - மீரியபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டு, கறுப்பு நிற உடை அணிந்து, இன்று வியாழக்கிழமை 30ஆம் திகதி முதல் ஒரு வார காலத்தை, சோக வாரமாக அனுஷ்டிப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மரணித்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளை, துன்பத்தில் வீழ்ந்தவர்களுக்கு உதவிட தயாராவோம்.

நமது மக்களை காவு கொண்ட இயற்கை, மீட்புப் பணிகளையும் முன்னெடுக்க தடை போடுகிறது. மீட்புப் பணிகளிலே படைத்துறையினர் உட்பட இடர்நிவாரண பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மீட்புப் பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெறவும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறவும், அநாதரவானவர்கள் அடைக்கலம் பெறவும் எம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும், அனைத்து பேதங்களையும் புறந்தள்ளிவிட்டு வழங்க தயாராவோம்.

எமது உணர்வுகளை வெளிக்காட்ட எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் வெள்ளை கொடிகளை பறக்க விட்டு, கருப்பு நிற உடை அணிந்து இன்று வியாழக்கிழமை முதல் ஒரு வார காலத்தை, சோக வாரமாக அனுஸ்டிப்போம். அதேவேளை நிவாரண உதவிகள் பற்றிய தெளிவான கோரிக்கைகள் கிடைத்தவுடன், அந்த தேவைகளை வழங்க எங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவோம்.

http://www.virakesari.lk/articles/2014/10/30/ஒரு-வாரகால-துக்கதின-அனுஷ்டிப்புக்கு-மனோ-அழைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

உழைத்து, உழைத்து உருவழிந்து, கொழுந்து கூடைகளை சுமந்து, சுமந்து, கேள்வி குறியாய் முதுகு வளைந்து போய்விட்ட எங்கள் மலையக தமிழ் தாயை இரக்கமற்ற இயற்கையும் உருக்குலைத்து விட்டதே!

1376599_10201816494453212_56773662661397

Mano Ganesan

https://m.facebook.com/photo.php?fbid=10201816494453212&id=1807807648&set=a.2860754377130.93741.1807807648&source=57

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் அவல வாழ்க்கைக்கு ஈழத் தமிழரும் ஒரு காரணம். 70 களில் தமிழரசுக் கட்சியென்று நினைக்கிறேன், தொண்டைமான் அவர்கள் எம்முடன் சேர விரும்பியபோது அவர்களை ஒதுக்கித் தள்ளியது எமது அன்றைய அரசியல் தலமைகள்தான். அதுவே தொழிலாளர் காங்கிரஸை சிங்களப் பேரினவாதிகளை நோக்கித் தள்ளியது. இன்று எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தொண்டைமான் குடும்பம் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள நாமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறோம்.

 

இவர்களையும் எம்முள் ஒருவராக பார்க்கத் தவறியது எமது தவறு.

 

உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

உணர்விருந்தால் நீங்களும் உதவுங்கள்

30.10.2014

நேற்றைய தினம் (29/10/2014) அன்று காலை பொழுதில் மாபெரும் மண் சரிவோன்றை பதுளை மாவட்டம் எதிர்கொண்டுள்ளது 2 நிமிடத்தில் 200 ஏக்கர் நிலம் மண் சரிவால் புதையுண்டுவிட்டது. நிலம் மட்டுமல்ல எம் உறவுகளும் புதையுண்டுவிட்டனர் சுமார் 400 பேர் வரை காணாமல் போய்விட்டனர். இந்த கொடூர சம்பவத்தால் பல மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். காலையில் பாடசாலை சென்றுவிட்டு மதியம் வீடு வந்த பிள்ளைகளுக்கு காத்திருந்தது பெரிய இடி ஒன்று தங்களின் நிலம் மண்சரிவால் புதையுண்டுவிட்டது தம் உறவுகள் எங்கே என்ற ஏக்கமும் அவர்களில் குடிகொண்டுவிட்டது. அத்தனை உறவுகளையும் சில நிமிடங்களில் தொலைத்துவிட்டு தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவ முன்வாருங்கள். தமது அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாமல் தவிக்கின்ற மக்களுக்கு அப்பொருட்களைக் கொடுத்து உதவ முன்வாருங்கள் நண்பர்களே!

யாழ்பல்கலைக் கழக சமுதாய வழிகாட்டல் மையத்தினரின் இந்த செயற்பாட்டுக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்குங்கள். அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவுங்கள். உடனடியாக இந்த உதவியினை செய்யவேண்டி உள்ளதால் யாழ்பல்கலைக் கழக சமுதாய வழிகாட்டல் மையத்தில் பொருட்களையோ பணத்தினையோ கொடுத்து உதவுங்கள் நண்பர்களே!

தொடர்புகளுக்கு- 0776372458

0776336611, 0779201344

சமுதாய வழிகாட்டல் மையம்

யாழ் பல்கலைக் கழகம்

(Facebook)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மண்சரிவு நடந்த, உடனே.... இந்தியா உதவி செய்ய விரும்பிய போதும்.... அதனை ஸ்ரீலங்கா அரசு, அசட்டை செய்து.... யாழ்ப்பாணத்திலிருந்த சில ராணுவத்தினரை... மூன்று உலங்கு வானூர்தியில் கொண்டு போய் இறக்கி, தேடுதல் செய்கின்றோம் என்று... பாவ்லா காட்டியது. அதில் குறிப்பிட்டளவு உயிர்களை காப்பற்ற முடியாமல் போனது வேதனை.

 

ஈரான், துருக்கி போன்ற பலம் பொருந்திய சர்வதேச நாடுகளே.... தங்கள் நாட்டில் நிலச்சரிவு நடக்கும் போது..... சர்வதேச உதவியை பெற்று... பல உயிர்களை காப்பாற்றுவது வழமையாக இருக்க...
ஸ்ரீலங்காவுக்கு... அதில் அகப்பட்டது தமிழன் தானே.... என்ற அலட்சியப் போக்கே... மேலோங்கி இருந்தது என்பது தெளிவு.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

 

29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம்.
தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள்.

மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது.

கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் – 82 (பெண்குழந்தைகள்)
100 –ஆண்குழந்தைகள் 12வயதிற்கு உட்பட்டோர்.
150 குடும்பங்கள்.
மொத்தம் 572 பேர் தங்கியுள்ளனர்.

உனகல தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

41 பெண் குழந்தைகள்
33 ஆண் குழந்தைகள்.

மொத்தம் 297 பேர் தங்கியுள்ளனர்.

எங்கள் சகோதர உறவுகளான இம்மக்களின் துயர் துடைக்க நேசக்கரம் தருமாறு வேண்டுகிறோம். ஓவ்வொருவரும் தங்களால் இயன்றள உதவியை நல்குங்கள். சிறுதுளி பெருவெள்ளமாகும்.

குழந்தைகளுக்கு தேவையான போர்வைகள். ஒருபோர்வையின் விலை – 600ரூபா.
256 குழந்தைகளுக்கு – 153600.00ரூபா. (அண்ணளவாக யூரோ 930€)
பால்மா – ஒன்றின் விலை – 375.00ரூபா
256 குழந்தைகளுக்கு – 96000.00ரூபா. (அண்ணளவாக யூரோ 581€)
பிஸ்கெட் – ஒரு பெட்டி விலை – 500.00ரூபா.
256 குழந்தைகளுக்கு – 128000.00ரூபா(அண்ணளவாக யூரோ 775€)
நூடுல்ஸ் – 256பெட்டி – 64000.00ரூபா (அண்ணளவாக யூரோ 387€)
கடலை 256 கிலோ – 46080.00ரூபா ((அண்ணளவாக யூரோ 280€)

மொத்தம் தேவையான உதவி :- 2944€.

உதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்வரும் வங்கியிலக்கம் அல்லது பேபால் ஊடாக உதவ முடியும்.

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

நேசக்கரம்

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

http://nesakkaram.or...karam.3695.html

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148152-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/

 

வலியை சுமந்து வாழும் நாம் , மலையக உறவுகளின் துயரத்திலும் பங்குகொள்கின்றோம் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

வலியை சுமந்து வாழும் நாம் , மலையக உறவுகளின் துயரத்திலும் பங்குகொள்கின்றோம் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

பதுளை மாவட்டம் கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் நடைபெற்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு, உயிர் மற்றும் உடமைகளை இழந்து தவிக்கும் மலையக மக்களின் துயரத்தில் நாமும் உணர்வுடன் கலந்துகொள்கின்றோம் .

65 ஆண்டுகளுக்கும் மேலான சிங்கள பௌத்த இனவாத அரசின் இன அழிப்பில் இருந்து எம்மை நாமே காப்பாற்றவேண்டும் என்று போராடி அதியுச்ச வேதனைகளோடு இன்றும் வலி சுமந்து போராடும் நாம் எம் சகோதர உறவுகளின் இழப்புகளையும் , வலியையும் தாங்கி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://m.facebook.com/iceelamtamils/photos/a.1436753346565389.1073741828.1436751199898937/1545497079024348/?type=1&source=46

நிலச்சரிவில் உயிரிழந்தோர் செய்திகேட்டு வேதனையடைகிறோம் : பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன்

இலங்கைத்தீவின் பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்தை பகுதியில் அமைந்துள்ள மீரியபத்த தோட்டக் கிராமத்தில் இடம் பெற்ற பாரிய நிலச் சரிவில் சிக்கி, 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தி எம்மைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இப்பெரும் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது மரியாதை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் நிகழ்ந்த பாரிய இயற்கை அனர்த்தம் தொடர்பாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கற் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த புதன்கிழமை 29.10.2014 அன்று நிகழ்ந்த இந்தப் பாரிய அனர்த்தத்தில் மீரியபத்த தோட்டக் கிராமத்தைச் சேரந்த 66 குடும்பங்களின் குடியிருப்புக்கள் முற்றாக மண்ணுள் புதையுண்டு போனதாகவும், தங்கள் குடிமனைகளில் தங்கியிருந்த அனைவரும் இதில் சிக்கிக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளையும் துரித கதியில் மேற்கொள்ள முடியவில்லை என்ற தகவலும் மிகவும் கவலையைத் தருகிறது. பாடசாலைகளுக்குச் சென்றிருந்த பிள்ளைகள் இந்த இயற்கை அனர்த்தத்தில் இருந்து உயிர் தப்பிக் கொண்டுள்ளமை பெரும் ஆறுதலைத் தருகிற போதும், அவர்களிற் பலர் தமது பெற்றோர்களையும் உறவினர்களையும் இழந்து விட்டார்கள்; எனும் தகவலும் நமது வேதனையை அதிகப்படுத்துகிறது.

மிகுந்த கடினமான வாழ்க்கைச்சூழலில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களை இயற்கையும் இவ்வாறு தண்டித்திருப்பது வருத்தத்துக்கு உரியதாகவுள்ளது. மலையகத் தமிழ் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்க்கைச் சூழலில் பாரிய மேம்பாட்டினைச் செய்ய வேண்டிய அவசியத்தையும் இத் துக்க நிகழ்வு சுட்டி நிற்கிறது.

இந்தப் பாரிய இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையக உடன்பிறப்புகளுக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் முகமாக வியாழக்கிழமை 30ம் திகதி முதல் ஒரு வார காலத்தைத் துக்க வாரமாக நினைவுகூருமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவரது வேண்டுகோளை மதிப்புடன் ஏற்றுக் கொள்கிறது. இத் துக்க வார காலத்தில் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களில் உள்ள வழிபாட்டு தளங்களில், உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்பாடு செய்யுமாறு எமது மக்களை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்கும் புனர்வாழ்வுப் பணிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட அரசியல்பீடமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ள காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு முயற்சிகளில் எம்மால் நேரடியாகப் பங்கேற்க முடியாதிருப்பதையிட்டு நாம் விசனமடைகின்றோம்.

இந்தப் பாரிய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுப் பணிகட்கு ப+ரண ஆதரவினை வழங்குமாறு புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் உதவி அமைப்புக்கள், தமிழ்ச் சங்கங்கள், கோவில்கள், ஆலயங்கள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் போன்ற அமைப்புக்களையும் நாம் வேண்டிக் கொள்கிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கற் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Facebook)

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர் ஒன்றியங்கள் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவால் பாதிக்கப்பட்ட எமது மலையக வாழ் உறவுகளுக்கு உதவும் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளன.

நாளைய தினம் யாழ்.மாவட்டத்தினது அனைத்து பிரதேசங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் பொது அமைப்புக்கள்.மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உலர் உணவுகள், புதிய உடைகள் என்பன மாணவர்களினால் சேகரிக்கப்படவுள்ளது.

இதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு உறவுகளிடம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உரிமையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

10689845_601791976615911_170989907859664

(Facebook)

துயர் பகிர்வும், இடர்களைவுக்கோரிக்கையும்...

கொஸ்லந்தைப்பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு எமது இரங்கல்களைத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வனர்த்ததினால் பாதிக்கப் பட்ட அனைவருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவர்களின் துயரத்திலும் உணர்வு பூர்வமாகப் பங்கேற்கிறோம்.

இலங்கையின் பொருளாதாரத்தைத் தாங்கியிருக்கும் மலையகத் தமிழ்ச் சமூகம் இரட்டை அடக்கு முறைக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகமாகும். உழைக்கும் வர்க்கமாகக் கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்பட்டுள்ள இச் சமூகம், அதற்கு மேலதிகமாக கொடூரமான இன ஒடுக்கு முறைக்கும் உள்ளாகி வருகிறது. சுதந்திர இலங்கையின் முதலாவது இன ஒடுக்கு முறை, பிரசாவுரிமைச் சட்டம் எனும் வடிவத்தில் இவர்கள் மீதே பிரயோகிக்கப் பட்டது. காலத்திற்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரங்களிலும் இவர்களின் உயிர்கள் கொத்துக் கொத்தாகப் பறிக்கப் பட்டன.

ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகம் என்ற வகையில், மலையக மக்களின் துன்ப துயரங்களை நாங்கள் ஆத்மார்த்தமாகப் புரிந்து கொள்கிறோம். அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த மலையக மக்களின் வாழ்க்கையில், இவ்வியற்கை அனர்த்தம் ஒரு பேரவலத்தை விளைவித்துள்ளது. இப் பேரவலத்திலிருந்து அவர்களது ஆன்மாவில் உறைந்துள்ள உறுதியினால் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

அதேவேளை மலையகத் தமிழ் சமூகம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தினது பாராமுகத்தன்மையை இங்கு சுட்டிக்காட்டி இம்மக்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழி செய்ய வேண்டிய அரசாங்கத்தினது கடமையை வலியுறுத்த விரும்புகிறோம். இன்னும் மலையக தமிழ் அரசியல் சக்திகள் சுயநலம் தவிர்த்து தம்மக்களது உண்மையான மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எம்மைப் போலவே அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து மலையகத் தமிழ் சமூகம் இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப் பட்டுள்ள இந்த வேளையில், அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு உள்ளது. இவர்களுக்கான அவசர, மனிதாபிமான உதவிகளை ஒழுங்கு படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் வேண்டிக் கொள்கிறோம். முன்பும் இவ்வாறான வேளைகளில் மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைத்து நடாத்திச் சென்ற பல்கலைக் கழக சமூகம், இம்முறையும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்திருப்பதை நாம் வரவேற்று, அவர்களுடன் எமது கரங்களையும் இணைத்துக் கொள்கிறோம். இப்பணியில் யாழ். பல்கலைக் கழக சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் நாம் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

தமிழ் சிவில் சமுக அமையம் சார்பாக,

அதிவணக்கத்திற்குரிய இராயப்பு யோசப்

(பேராயர் மன்னார் மறைமாவட்டம்)

(Facebook)

மண்சரிவு பேரனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கு இதய அஞ்சலிகள் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

பதுளை மாவட்ட கொஸ்லாந்த மீரிய பெத்த தோட்டத்தில் இடம் பெற்ற மண்சரிவின் போது உயிர் நீத்த மலையக மக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் தமிழ்த் தேச மக்களுடன் இணைந்து எமது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கின்றோம்.

புதன்கிழமை காலை மேற்படி தோட்டத்தில் இடம் பெற்ற அனர்தத்தை அறிந்து நாம் அதிர்ச்சி அடைந்தோம். 300க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இது இந்த வருடத்தில் இடம் பெற்ற மாபெரும் அவலம். ஸ்ரீலங்கா அரசின் இன அழிப்புக் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்களை நாம் இழந்தோம். அந்தத் துயரத்திலிருந்து நாம் மீள்வதற்கு முன்னரே எமது உறவுகளுக்கே ஏற்பட்ட அனர்த்தத்தினால் மிகுந்த கவலையடைகின்றோம்.

இது தவிர்த்திருக்கக் கூடிய அனர்த்தம் என்பதை அறியும் போது எமது கவலை இரட்டிப்பாகின்றது . தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் இப் பிரதேசம் பாதுகாப்பற்றது என 2005ம் ஆண்டு அறிவித்திருந்தும் கூட மக்களை பாதுகாப்பான இடத்தில் குடியேற்ற எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. அரசின் பொறுப்பற்ற செயற்பாட்டினாலேயே எமது பக்கள் இந்தப் பேரழிவைச் சந்திக்க நேரிட்டுள்ளது. அரசின் இந்த அக்கறையீனமான பொறுப்பற்ற செயற்பாட்டிற்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றோம்.

மலையகத்தில் வேறு பல பிரதேசங்களில் இது போன்ற ஆபத்தான நிலை இருக்கின்றது. அங்கும் அனர்த்தங்கள் வராமல் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக தலைமைகளை வேண்டுகின்றோம்.

மலையக மக்கள் தமது குருதியை வியர்வையாக்கி தமது இந்த நாட்டை வளப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களில் வாழ்வு நிலையோ வார்த்தைகளில் எழுதக்கூடியது அல்ல. பல நூறுவருடங்கள் கழிந்தும் தமது நிலத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாதவர்களாக உள்ளனர். தங்களுடைய விடுதலை தொடர்பாக அவர்கள் நடாத்தும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவினையும், ஒத்துழைப்பினையயும் வழங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராக உள்ளது.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக உறவுகளுக்கு எங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் சர்வதேச மட்டத்தில் மலையக விவகாரத்தை பேசு பொருளாக்குவதற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்றைக்கும் தயாராக இருக்கின்றது என்பதையும் எமது உறவுகளுக்கத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தலைவர் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

செல்வராசா கஜேந்திரன்

பொதுச்செயலாளர் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

http://www.pathivu.com/news/35011/57//d,article_full.aspx

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.