Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளட் தலைவர் உமா மகேஸ்வரனின் மாறுபட்ட படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது சண்டைக்குள்ள நான் வரவில்லை ஆனால் விசுகரிடமிருந்து ஒரு விடையம் அறியவேண்டியிருக்கு,

மகேஸ்வரனது மைத்துணர் (பெயர் ரவி அல்லது முழுப்பெயர் ரவீந்திரன்) ஒருவர் சிறிதுகாலம் லண்டனில் இருந்துவிட்டு பின்பு இந்தியா போனவிடத்தில் அங்கு கலியானம் செய்து தொன்னூற்றுநாலாம் ஆண்டளவுமட்டு அவரைபற்ரிய செய்து எனக்குத் தெரிந்திருக்கு அதன் பின்பு என்னவானார் என்பதைப்பத்தி எனக்கு அறிய ஆவலாக உள்ளது. அவரது தாயாரும் சகோதரியும் கந்தர்மடத்தடியில மணல்தறை ஒழுங்கையில வாழ்ந்ததாக ஞாபகம். அவரது தந்தையார் எண்பதுகளில் நாலம்குறுக்குத் தெருவில் கடைவைத்திருந்தவர் பின்பு இறந்துவிட்டார் பெயர் கந்தையா.

விசுகருக்கு ரவி என்னும் பேர்வளியப்பற்ரிய தகவல் ஏதாவது தெரியுமா?

  • Replies 105
  • Views 14.3k
  • Created
  • Last Reply

நீங்கள் எந்த ரவியைக்கேட்கின்றீர்கள் எனத்தெரியவில்லை

நித்தி,  ரவி  என இரு சகோதரர்களா??

அப்படியென்றால்

அந்த ரவி கனடாவில் உள்ளார்

எனது ஒன்றுவிட்ட அக்காவின் மகளைத்திருமணம் செய்துள்ளார்

(அவருக்கு சொந்த மச்சாள் அவர்)

தொலைபேசி  இலக்கம் வேண்டும் என்றால் தரலாம்.....

  • தொடங்கியவர்
அண்ணை உங்களிடம் இருந்து இதே பதில் வரும் என்றுதான் எதிர்பார்த்தேன் .வெறும் வாயால் இவ்வளவு காலமும் வடை சுட்டு யாழில் விற்பது எவ்வளவு பெரியவிடயம் .
மகேஸ்வரன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பில்  84 இலேயே தமிழ்நாட்டில் சிறைக்குள் போய்விட்டார்.ஒருவாறு பின்னர் பிணையில் வந்த அவர்  நங்கநல்லூரில் நடந்த இரட்டை கொலையில் மீண்டும் கைதாகி உள்ளே போனார் .பின்னர் அவரை எவராலும் விடுவிக்கமுடியாமல் போய்விட்டது .சில வருடங்களின் முன் அவரை வெளியில் எடுத்து வெளிநாடு அனுப்பிவிட்டார்கள் (மறைவாக இருப்பதால் எங்கு என்று எழுதவில்லை )
மகேஸ்வரன் முடிந்து இப்ப ஐயரில் கை வைத்து அவரை விட அதிகம் புலிகளை பற்றி தெரிந்த உறவினர் ஐயரின் பதிவை பொய் என்றாராம் .
ஐயரின் பதிவில் என்ன பொய் இருக்கு ? அதை யார் சொன்னார்கள் என்று ஒருக்கா எழுதுங்கள் அண்ணை .
ஐயர் புலிகளின் ஆரம்ப கால வரலாற்றை எழுத முதலே பல விடயங்கள் நாங்கள் பிறர் மூலம்அறிந்ததுதான் .அவற்றில் இருந்து பார்த்தால் ஐயரின் பதிவில் எந்த பொய்யும் இருக்கவில்லை .ஐயரின் பதில் வந்த முக்கிய ஆரம்ப உறுப்பினர்கள் 
உமா ,கண்ணன் ,நாகராஜா ,சிவகுமார் (அன்டன் மாஸ்டர் புலிகள் சார்பில் திம்பு பேச்சுவார்த்தைக்கு சென்றவர் ).கணேஷ் (மதிவதனியுடன் பல்கலைக்கழகத்தில் கடத்தப்பட்ட  இன்னொரு  பெண்ணை மணந்தவர் ),ராஜா நித்தியன் ,ஜான் மாஸ்டர் ,சித்தார்த்தன் ,கணி 
இவர்கள் அனைவரையும் சந்தித்திருக்கின்றேன் நடந்த சம்பவங்கள் பலவற்றை அவர்கள் வாயாலேயே கேட்டிருக்கின்றேன்.ஐயர் எழுதியதற்கும் இவர்கள் சொன்னதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்கவில்லை .
சில சம்பவங்களில் சிறிய  தவறுகள் இருக்கலாம் அவற்றை தவிர்த்து பார்த்தால் விடுதலை புலிகளின் ஆரம்பகால வரலாறு அதுதான் .முடிந்தால் யாரவது அவற்றை மறுத்து உண்மையை எழுதட்டும் பார்க்கலாம் .
 
  • தொடங்கியவர்

84 இற்கு பின் நாட்டிற்கு வராத மகேஸ்வரனுக்கு விசுகர் இப்படி ஒரு வடை சுட்டிருக்கின்றார் 

இவர் இவ்வாறு ஒரு முடிவை எடுத்து

புலிகளின் வேண்டுதலுக்கு அமைய   இடைஞ்சல் செய்யாது விலகிச்சென்றது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் 

பெருமையாகவும் இருந்தது

அத்துடன்  விலகிச்சென்ற அவரோ அவரது அமைப்பினரோ

போராட்டத்துக்கு  எந்த இடைஞ்சலும் செய்யவில்லை

புலிகளும் அவர்களை தேடவில்லை.

அதற்கு இரண்டு பேர்கள் பச்சை சம்பல் அரைத்து இருக்கினம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உங்களிடம் இருந்து இதே பதில் வரும் என்றுதான் எதிர்பார்த்தேன் .வெறும் வாயால் இவ்வளவு காலமும் வடை சுட்டு யாழில் விற்பது எவ்வளவு பெரியவிடயம் .
 
1- மகேஸ்வரன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பில்  84 இலேயே தமிழ்நாட்டில் சிறைக்குள் போய்விட்டார்.ஒருவாறு பின்னர் பிணையில் வந்த அவர்  நங்கநல்லூரில் நடந்த இரட்டை கொலையில் மீண்டும் கைதாகி உள்ளே போனார் .பின்னர் அவரை எவராலும் விடுவிக்கமுடியாமல் போய்விட்டது .சில வருடங்களின் முன் அவரை வெளியில் எடுத்து வெளிநாடு அனுப்பிவிட்டார்கள் (மறைவாக இருப்பதால் எங்கு என்று எழுதவில்லை )
 
2-மகேஸ்வரன் முடிந்து இப்ப ஐயரில் கை வைத்து அவரை விட அதிகம் புலிகளை பற்றி தெரிந்த உறவினர் ஐயரின் பதிவை பொய் என்றாராம் .
ஐயரின் பதிவில் என்ன பொய் இருக்கு ? அதை யார் சொன்னார்கள் என்று ஒருக்கா எழுதுங்கள் அண்ணை .
ஐயர் புலிகளின் ஆரம்ப கால வரலாற்றை எழுத முதலே பல விடயங்கள் நாங்கள் பிறர் மூலம்அறிந்ததுதான் .அவற்றில் இருந்து பார்த்தால் ஐயரின் பதிவில் எந்த பொய்யும் இருக்கவில்லை .ஐயரின் பதில் வந்த முக்கிய ஆரம்ப உறுப்பினர்கள் 
உமா ,கண்ணன் ,நாகராஜா ,சிவகுமார் (அன்டன் மாஸ்டர் புலிகள் சார்பில் திம்பு பேச்சுவார்த்தைக்கு சென்றவர் ).கணேஷ் (மதிவதனியுடன் பல்கலைக்கழகத்தில் கடத்தப்பட்ட  இன்னொரு  பெண்ணை மணந்தவர் ),ராஜா நித்தியன் ,ஜான் மாஸ்டர் ,சித்தார்த்தன் ,கணி 
இவர்கள் அனைவரையும் சந்தித்திருக்கின்றேன் நடந்த சம்பவங்கள் பலவற்றை அவர்கள் வாயாலேயே கேட்டிருக்கின்றேன்.ஐயர் எழுதியதற்கும் இவர்கள் சொன்னதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்கவில்லை .
சில சம்பவங்களில் சிறிய  தவறுகள் இருக்கலாம் அவற்றை தவிர்த்து பார்த்தால் விடுதலை புலிகளின் ஆரம்பகால வரலாறு அதுதான் .முடிந்தால் யாரவது அவற்றை மறுத்து உண்மையை எழுதட்டும் பார்க்கலாம் .

அண்ணை

என்னை  மடக்கணும்

அப்புறப்படுத்தணும் என்ற கண்ணோட்டத்துடன் திரிகிறீர்கள்...

1983 கலவரத்துடன் கொழும்புத்தொடர்புகள் எனக்கில்லை

மகேஸ்வரன் பற்றி  பிந்தைய  செய்திகளுக்கு நன்றி..

அடுத்தது

ஐயர் பொய் எழுதியதாக நான் எங்கு குறிப்பிட்டுள்ளேன்.....??

காட்டவும்...

ஒரு விடயத்தை சொல்லணும்

ஐயருடன் இருந்த

அதற்கு பின்பும் இயக்கத்தில் இருந்த எனது மைத்துணர்

ஐயருடைய  புத்தகத்தை பார்த்துவிட்டு சொன்னது..

இந்த புத்தகத்தை  வாசிக்கும்வரை

இயக்கம் பற்றி  ஐயருக்கு கனக்க தெரிந்திருக்கும் என்று தான் நினைத்தேன்

ஆனால் இயக்கம்  ஒவ்வொருவரையும் எந்தெந்த அளவில் வைத்திருந்தது என்பதை அவருடைய  எழுத்தை பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன்

ஆச்சரியமாக இருக்கு இயக்கத்தின் உள் கட்டுமானங்கள் என்றார்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசு ,

நீங்கள் கேட்டது அஅதற்க்கு எனக்கு தெரிந்த வகையில் பின்னேரம் பதில் தருவேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

உங்களுக்கு ஐயர் சொல் வேதவாக்கு..

எனக்கு தலைவர் சொல் வேதவாக்கு...

எது சரி......??

ஒரு விடயத்தை சொல்லணும்

ஐயருடன் இருந்த

அதற்கு பின்பும் இயக்கத்தில் இருந்த எனது மைத்துணர்

ஐயருடைய  புத்தகத்தை பார்த்துவிட்டு சொன்னது..

இந்த புத்தகத்தை  வாசிக்கும்வரை

இயக்கம் பற்றி  ஐயருக்கு கனக்க தெரிந்திருக்கும் என்று தான் நினைத்தேன்

ஆனால் இயக்கம்  ஒவ்வொருவரையும் எந்தெந்த அளவில் வைத்திருந்தது என்பதை அவருடைய  எழுத்தை பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன்

ஆச்சரியமாக இருக்கு இயக்கத்தின் உள் கட்டுமானங்கள் என்றார்..

அத்துடன் இந்த புத்தகம் எழுதும்வரை

தன்னுடன் தொடர்பிலிருந்த ஐயர்

அதன் பின் தொடர்பே இல்லாது  போய்விட்டாராம்

முடிந்தால் தொடர்பைத்தரவும்...............

அதாவது ஐயர் இன்னும் கன விடயங்களை எழுதவில்லை. வந்தது பனிக்கட்டியின் நுனியளவு; வராதது பனையளவு என்று உங்கள் மைத்துனர் சொன்னாராக்கும். ஐயர் அடுத்த புத்தகத்தை எழுதினால் இன்னும் கனக்க வரலாம்!

ஐயரின் புத்தகத்தைப் படித்தவர்கள் எல்லாருக்கும் ஐயருடன் தொடர்பு இருக்கு என்ற மாதிரி இருக்கு உங்கள் கடைசி வசனம். ஐயரைக் கண்டால் கடவுளைக் கண்ட மாதிரி இருக்கும். ஆனால் நான் கடவுள்களை நம்புவதில்லை என்பதால் ஐயரையும் கடவுள்களையும் காண விரும்புவதில்லை.

உங்கள் கடைசி வரிகளும் அதைத்தான் சொல்கின்றன

எழுதிப்போட்டு ஒழிந்து கொள்ளணும்

விசுகு அந்த நிலையில் இல்லையே...

பிரச்சினை இங்கு தான் ஆரம்பம்.. :(

  • தொடங்கியவர்

உங்களை மடக்க அப்புறப்படுத்த எனக்கு ஒரு தேவையும் இல்லை ஆனால் ஒரு ஒரு பொதுவெளியில் வந்து எப்படி பச்சை பொய்யை உங்கள் வசதிக்கு எழுத முடிகின்றது .

மகேஸ்வரன் தமிழ்நாட்டு சிறையில் இருக்கின்றார். ஆனால் இப்படி நீங்கள் எழுதுகின்றீர்கள் .

"இவர் இவ்வாறு ஒரு முடிவை எடுத்து

புலிகளின் வேண்டுதலுக்கு அமைய   இடைஞ்சல் செய்யாது விலகிச்சென்றது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் 

பெருமையாகவும் இருந்தது

அத்துடன்  விலகிச்சென்ற அவரோ அவரது அமைப்பினரோ

போராட்டத்துக்கு  எந்த இடைஞ்சலும் செய்யவில்லை

புலிகளும் அவர்களை தேடவில்லை"

ஆனால்  மாற்று இயக்கங்களை புலிகள்  கொலைகள் செய்ததை நியாப்படுத்த மிக பவ்வியமாக் இப்படி ஒரு பொய்யை எழுதமுடிகின்றது .

மீண்டும் மீண்டும் நான் யாழில் வருவதே உண்மைகள் சாகக்கூடாது என்பதற்காகத்தான் 

அப்படியானால் நீங்கள் எழுதவேண்டியது நாதமுனிக்கு..

அவர்தான் இந்த கருத்தை இங்கு முதலில் எழுதினார்...

அதேநேரம்

இயக்க வரலாற்றில் தம்மையும்

தமது போராளிகளையும் விலத்தி சென்றவர்  மகேசுவரன்...

இது உண்மை.

பனாகொடை மகேஸ்வரன் என்று ஒருத்தர் இருந்தார். காத்தான்குடி வக்கி கொள்ளை அடித்து, நல்ல ஆயுதங்களும், தேர்ந்து எடுக்கப் பட்ட சிறந்த, குறித்த எண்ணிக்கையான உறுபினர்களுடன் இயங்கிக் கொண்டிருந்தார்.
 
புலிகள், குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை, கையளித்து,களத்தினை விட்டகல வேண்டும் என எச்சரிக்க, அவரோ நேரே கிட்டரிடம் போய், ஆயுதங்ககளை இப்பவே தர தயார். ஆனால், நாம் அமைதியாக நாட்டினை விட்டு வெளியேறும் வரை, பிரச்னை தரா உத்தரவாதம் தர வேண்டும் என கோரி, பெற்று, சகல உறுப்பினர்களையும் வெளி அனுப்பி, தானும் பத்திரமாக வெளியேறினார்.
 
எந்த இயக்கத்துக்கும் அனுதாபம் இல்லையாயினும், தன்னை நம்பி வந்தவர்களை கரிசனையாக கவனித்து, பத்திரமாக அனுப்பி வைத்த அவர் எனது பார்வையில் ஒரு சிறப்பான தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன் அண்ணா,

தயவு செய்து யாழில் எழுதுவதை விட்டு விடாதீர்கள். நீங்கள் மட்டும் உண்மையை சொல்லி இருக்காவிடின், மகேஸ்வரன் எப்படி போராட்டத்தில் இருந்து ஒதுங்கினார் எனும் வடையை, பச்சைச் சம்பலுடன் சேர்த்து சாப்பிட்டு, பிளேன் டீயும் குடிக்க வைத்திருப்பார்கள் என்போன்ற விடயம் தெரியாதவர்களை.

நீங்கள் இப்படி உண்மையை எழுதுவதே, உங்கள் மீது அபாண்டம் சொல்லியாவது, உங்களை வராமல் தடுக்க வேண்டும் என்று பலர் இங்கே செயல்ப்படக் காரணம். இந்தப் பொய் மனிதர்களை வெல்ல விடாதீர்கள்.

நெடுக்கர்- ஒற்றுமை பற்றிய உங்கள் பதிவு அபாரம் - ஆனால் சகோதரப்படுகொலைப் பேயாட்டத்தை 30 வருடம் ஆசை தீர ஆடிவிட்டு - இப்போ ஒற்றுமை வேதம் ஓதுவது - டூ லிட்டில், டூ லேட்.

உண்மையில் 86 இல் - தடை செய்யும் அளவுக்கு டெலோ, ஈபி போன்ற இயக்கங்கள் அப்படி ஒன்றும் பெரிய தவறுகளை விட்டிருக்கவில்லை (87 க்கு பின் அவர்கள் ஆடிய ஆட்டம் வேறு).

  • கருத்துக்கள உறவுகள்

தம்பா பற்றி இங்கு கதைத்தால் இங்கு இதை இணைகிறேன் .எனது நாவலில் தம்பவை புலிகள் தடை செய்தது பற்றியும் கொஞ்சம் விரிவாக எழுதியுள்ளேன் .84 ம் ஆண்டுக்கு பின்னர் தம்பா இலங்கை வந்ததே இல்லை .நந்தன் தான் இயக்கத்தை வழிநடத்தியவர்.அவர்தான் இயக்கத்தை கலைக்கும் முடிவையும் எடுத்தவர் ..நந்தன் கலைக்க முடியாது என்று சொல்லியிருந்தால் அடுத்த நிமிடமே அடி விழுந்திருக்கும் .தம்பா இயக்கத்தில் பலர் இறந்திருப்பார்கள் ..உயிரிழப்பை தடுக்கவே நந்தன் அந்த முடிவை எடுத்தாரே தவிர புலிகள் கேட்டு தம்பா விலகி சென்றார் என்பதெல்லாம்  கொஞ்சம் ஓவர் ..

CdLWB1.jpg

  • தொடங்கியவர்

பச்சை பொய்யை எழுதிவிட்டு இது உண்மை இது உண்மை என்றால் சரியாகிவிடுமா ?

தகவலை பிழையாக எழுதுவது பலருக்கு நடந்திருக்கு அது பெரிய விடயமல்ல ,ஆனால் அதை இப்படி தாளித்து "எமக்கு பெருமையாகவும் மகிழ்சியாகவும் " என்று எழுதினீர்கள் பாருங்கள் ,இதில் உங்களை அடிக்க ஆளில்லை .

இதைத்தான் காலம் காலமாக யாழில் செய்து வருகின்றீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,

இந்த ஐயர் எனும் நபர் பற்றி உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் மானிப்பாய் என்று எழுதி இருந்தீர்கள். கட்டாயம் மயூரன் பொறுப்பாளராய் இருந்த காலத்தில் இயக்க தொடர்பில் இருந்திருப்பீர்கள்.,அப்போது மயூரனுடன் ஐயர் என்று இன்னொருவர் திரிவார். பின்னாநாளில் இந்த்ஹிய ஆமியிடம் சேர்ந்து தாலையாட்டி வேலை செய்தார்.

அந்த ஐயரும் இங்கு பேசப்படுவரும் ஒரே ஆளில்லை என நினைக்கிறேன்.

இது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் மகாவம்சம் எழுதி வைத்து எல்லோரையும் நம்பச் சொல்லிப் பாடப் புத்தகங்களில் போட்டிருக்கின்றார்கள். தமிழர்கள் மட்டும் என்ன குறைவே! ஏலுமானவரை வரலாற்றைத் தங்களுக்குத் தகுந்தமாதிரி எழுதத்தானே வேண்டும். வென்றவர்கள் எழுதுவதுதான் சரித்திரம், தோற்றவர்கள் எழுதுவது ஒருபோதும் சரித்திரமாகாது. எனவே ஐயர், சாத்திரி (அந்த மாதிரிப் பெயர்களும் ஒத்துப் போகின்றன) எழுதுவதெல்லாம் சரித்திரமாகவேண்டும் என்றால் அது சிங்களவர்கள் சார்பானதாகத்தான் இருக்கவேண்டும்.

Spoiler
தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் வந்து சொல்ல முதலே தூய்மையான தேசியவாதி நானே சொல்லிவிடுகின்றேன்!

கிருபன் எழுதியதற்குப் பச்சை போட்டுள்ளேன். காரணம் முள்ளிவாய்க்கால் வரை இருந்து மீண்ட புலி உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் இருந்தும் 5 வருடங்கள் தாண்டிய பின்னரும் உண்மையில் என்ன நடந்தது என்ற சரித்திரத்தை யாரும் எழுத முன்வர மாட்டார்களா என்ற ஆதங்கத்தினால் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்- ஒற்றுமை பற்றிய உங்கள் பதிவு அபாரம் - ஆனால் சகோதரப்படுகொலைப் பேயாட்டத்தை 30 வருடம் ஆசை தீர ஆடிவிட்டு - இப்போ ஒற்றுமை வேதம் ஓதுவது - டூ லிட்டில், டூ லேட்.

உண்மையில் 86 இல் - தடை செய்யும் அளவுக்கு டெலோ, ஈபி போன்ற இயக்கங்கள் அப்படி ஒன்றும் பெரிய தவறுகளை விட்டிருக்கவில்லை (87 க்கு பின் அவர்கள் ஆடிய ஆட்டம் வேறு).

விடுங்கண்ணே.. உங்களுக்கு எல்லாமே லேட்.. தான். செய்ய ஒன்னுமில்லைன்னா.. லேட்டுன்னு சொல்லி எதையாவது கதைச்சு பொழுதுபோக்கிக்கிட்டு.. போர்த்து தூங்கிடுவது தமிழர்களுக்கு பழகிப் போன ஒன்று தான். நீங்கள் அதற்கு விதிவிலக்கா என்ன.

ஈபியின் மக்களை நோக்கி.. துவக்குக் காட்டின கட்டப்பஞ்சாயத்து தான் 86 களில் அது மக்களால் வெறுக்கப்பட காரணமானது. புளொட்டின் கட்டாய சோத்துப்பார்சல்.. மக்கள் அவர்களை வீட்டுக்க அண்டாமல் அடிச்சு விரட்ட வகை செய்தது..! மக்களை இவர்கள் 1987 க்கு முன்னும் பின்னும் பார்த்த.. அணுகிய முறை ஒன்று தான். அதனால் தான் 80% மான மக்கள் இவர்களை.. தமிழர்களாக இருந்தும்.. இன்றும் தமக்காக போராட வந்த போராளிகள் என்பதை.. அங்கீகரிக்க மறுக்கிறார்கள். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,

இந்த ஐயர் எனும் நபர் பற்றி உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் மானிப்பாய் என்று எழுதி இருந்தீர்கள். கட்டாயம் மயூரன் பொறுப்பாளராய் இருந்த காலத்தில் இயக்க தொடர்பில் இருந்திருப்பீர்கள்.,அப்போது மயூரனுடன் ஐயர் என்று இன்னொருவர் திரிவார். பின்னாநாளில் இந்த்ஹிய ஆமியிடம் சேர்ந்து தாலையாட்டி வேலை செய்தார்.

அந்த ஐயரும் இங்கு பேசப்படுவரும் ஒரே ஆளில்லை என நினைக்கிறேன்.

இது சரியா?

நீங்கள் சொல்கின்ற ஐயர் வட்டுக்கோட்டை பொறுப்பாக இருந்தவர்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Visu;

எனக்கு நான் விரும்பினமாதிரி, விரும்புகிறது போல எழுத வருமோ தெரியவில்லை.

அதிகால மனிதன் தனது உணவிற்கான மிருகங்களை வேட்டையாடினான் என்று சொல்லும் போது நல்லூர் கோவில் ஐரினது முதாதையும் அதில் வரும் என்பதும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட உண்மை.  அதே போலவே ஆரம்ப கால அனைத்து இயக்கங்களினதும் வரலாறு. இதில் ஒருவருக்கு வெள்ளையடிக்க யாரும் முன்றால் ஒன்றில் அவருக்கு உண்மை தெரியாது அல்லது உண்மைகளை தேடி செல்லவில்லை என்றே கருத்து.

அதே போலவே, பிரபாகரனும் அவரோடு சேர்ந்தவர்களும்தான் 6 அறிவோடு இருதார்கள் மற்றவர்கள் எல்லோரும் 5 , 5.5 அறிவோடு இருந்தார்கள் என்று சொல்லுவதும் அபத்தம். சிலர் இதை போர்/ சகோத-யுத்தம் நடந்த காலத்தில் உணர்ந்தார்கள் சிலர், பிந்தி உணர்ந்தார்கள். ஆனால் எப்பவும் எங்கேயும் உள்ளது போல சிலர் அதை இன்னமும் நம்ப மறுக்கிறார்கள்.

நீங்கள் சொல்லிய கதை, ஒரு பிழையான செவி-வழி கதை என்று பல வரலாற்று பதிவாளர்கள் சொல்லும்போது அதை பற்றி திரும்ப என்ன சொல்ல;

ஆனால் எனக்கு என்ன தோன்றியது என்றால்;  நீங்கள் சொல்லிய படி, மகேஸ்வரன் உங்கள் இரத்த உறவாக இருக்கட்டும், அயலாவானாக இருக்கட்டும், அதற்காக..அவரை கிட்டு விட்டிட்டு ஓடு என்று சொன்ன போது ஏன் சந்தோஷமடைந்தீர்கல்?  ஒருவன் உயிர்பயத்தில் தான் செய்த காரியத்தை விட்டுவிட்டு ஓடுவது உங்களுக்கு சந்தோசமான விடையமா? ஏன் கிட்டு அவரை தன்பாட்டில் செயற்பட விடவில்லை என்று யோசித்தீர்களா ? இல்லாவிட்டால் ஏன் கிட்டு ஏன் மகேஸ்வரனுக்கு வழிவிட்டு தன்னுடைய "தொழிலை" தொடர்ந்து செய்திருக்கலாம்தானே என்று யோசிக்கவில்லை?  இல்லாவிட்டால் மகேவரனும் ரோ உடன் தொடர்பு என்று சொல்ல போகிறீர்களா?

புலிகள் மற்றவர்களை அழித்ததுக்கு ஒரே ஒரு காரணம் தங்களை பாதுகாக்கவே. அது சரி/பிழை என்பதுதான் உண்மை.  மிச்சம் எல்லாம் இட்டு கட்டின கதைகளே. அந்த கதைகளை வாசித்து இன்னுபுருவதும் அதில் உள்ள விடையங்களை 8ம் 9ம் அறிவால் விளங்கி கொள்ளுவது அவர் அவரது கெட்டித்தனம். அதற்க்கு இப்படி கனக்க புனைகதைகள் வாசிக்க வேண்டும். ஒரு மாதிரி குப்பைகளை வாசித்தால் 4ம் அறிவிலேயே முளை கிரகிக்க தொடக்கிவிடும். பிறகு எழுதுகிறவர்களும் இலகுவாக போய்விடும்.

புலிகள் பெரிய பெரிய பிழைகள் செய்ததானாலேயே அழிந்து போனார்கள். அந்த பிழைகளை சரி என்று வாதிடுவதிலும் பார்க்க அவற்றை ஏற்றுக்கொண்டு முன்போவது அவர்கள் முன்னெடுத்த காரியத்தை முன்னகர்த்த உதவும்.

விசு,
நீங்கள் உண்மைகளை அறிவில்லை. அறிய முயல்வதும் இல்லை என்பதுதான் உண்மை. உண்மைகள் இலகுவாக கிடைக்காது. பொய்களில் சில சந்தர்பங்களில் மனம் இலேசாகலாம் அது நிலைக்காது.

இதே உமா

காலிமுகத்திடலில் தேடுவாரற்று இறந்து கிடந்ததை பார்த்ததும் நான் அழுதேன்...

நீலிகண்ணீர் வடித்தீர்களோ? சிறீசபாரட்ணம், பத்மநாபா இறந்த போதும் அழுதேன் என ஒரு கதையை எடுத்து விட வேண்டியதுதானே

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,

இந்த ஐயர் எனும் நபர் பற்றி உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் மானிப்பாய் என்று எழுதி இருந்தீர்கள். கட்டாயம் மயூரன் பொறுப்பாளராய் இருந்த காலத்தில் இயக்க தொடர்பில் இருந்திருப்பீர்கள்.,அப்போது மயூரனுடன் ஐயர் என்று இன்னொருவர் திரிவார். பின்னாநாளில் இந்த்ஹிய ஆமியிடம் சேர்ந்து தாலையாட்டி வேலை செய்தார்.

அந்த ஐயரும் இங்கு பேசப்படுவரும் ஒரே ஆளில்லை என நினைக்கிறேன்.

இது சரியா?

புத்தகம் எழுதிய ஐயர்  புன்னாலைகட்டுவனை சேர்ந்தவர்.விடுதலை போராட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினர் .நீங்கள் சொல்லும் தலையாட்டி ஐயர்  சுதுமலையை சேர்ந்தவர் ..நந்தன் எழுதிய வட்டுக்கோட்டை ஐயர்  பண்டத்தேரிப் பை சேர்ந்தவர் சமாதான காலத்தில் வடமராச்சி பொறுப்பாக இருந்தவர்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

Visu;

எனக்கு நான் விரும்பினமாதிரி, விரும்புகிறது போல எழுத வருமோ தெரியவில்லை.

அதிகால மனிதன் தனது உணவிற்கான மிருகங்களை வேட்டையாடினான் என்று சொல்லும் போது நல்லூர் கோவில் ஐரினது முதாதையும் அதில் வரும் என்பதும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட உண்மை.  அதே போலவே ஆரம்ப கால அனைத்து இயக்கங்களினதும் வரலாறு. இதில் ஒருவருக்கு வெள்ளையடிக்க யாரும் முன்றால் ஒன்றில் அவருக்கு உண்மை தெரியாது அல்லது உண்மைகளை தேடி செல்லவில்லை என்றே கருத்து.

அதே போலவே, பிரபாகரனும் அவரோடு சேர்ந்தவர்களும்தான் 6 அறிவோடு இருதார்கள் மற்றவர்கள் எல்லோரும் 5 , 5.5 அறிவோடு இருந்தார்கள் என்று சொல்லுவதும் அபத்தம். சிலர் இதை போர்/ சகோத-யுத்தம் நடந்த காலத்தில் உணர்ந்தார்கள் சிலர், பிந்தி உணர்ந்தார்கள். ஆனால் எப்பவும் எங்கேயும் உள்ளது போல சிலர் அதை இன்னமும் நம்ப மறுக்கிறார்கள்.

நீங்கள் சொல்லிய கதை, ஒரு பிழையான செவி-வழி கதை என்று பல வரலாற்று பதிவாளர்கள் சொல்லும்போது அதை பற்றி திரும்ப என்ன சொல்ல;

ஆனால் எனக்கு என்ன தோன்றியது என்றால்;  நீங்கள் சொல்லிய படி, மகேஸ்வரன் உங்கள் இரத்த உறவாக இருக்கட்டும், அயலாவானாக இருக்கட்டும், அதற்காக..அவரை கிட்டு விட்டிட்டு ஓடு என்று சொன்ன போது ஏன் சந்தோஷமடைந்தீர்கல்?  ஒருவன் உயிர்பயத்தில் தான் செய்த காரியத்தை விட்டுவிட்டு ஓடுவது உங்களுக்கு சந்தோசமான விடையமா? ஏன் கிட்டு அவரை தன்பாட்டில் செயற்பட விடவில்லை என்று யோசித்தீர்களா ? இல்லாவிட்டால் ஏன் கிட்டு ஏன் மகேஸ்வரனுக்கு வழிவிட்டு தன்னுடைய "தொழிலை" தொடர்ந்து செய்திருக்கலாம்தானே என்று யோசிக்கவில்லை?  இல்லாவிட்டால் மகேவரனும் ரோ உடன் தொடர்பு என்று சொல்ல போகிறீர்களா?

1983இற்கு முந்திய காலம் ஹிட் அண்ட் ரன்.
தமிழ் இளைஞர்கள் எல்லோரும் சிங்கள இனவாத போக்கால் எதோ ஒரு உணர்ச்சி பொங்கிய வாழ்வில்தான் இருந்தார்கள்.
அதலால் தமக்கு முடிந்த விதத்தில் வெறுப்பை காட்டி சிங்கள அரசு இயந்திரத்தை தாக்கி வந்தார்கள். ஏற்கனவே ஒரு குழுவாகி சில தாக்குதல்களை செய்து வருபவர்களை கூட இன்னொருவர் விரும்பினால் கூட அவர்களை சந்தித்து அவர்களோடு சேர்ந்து இயங்க முடியாது. காரணம் எல்லோருமே தலைமறைவாகவே இருந்தார்கள். அதைவிட சிங்கள் அரசு சார்பில் அவர்களை வேட்டையாட கிளம்பியதும் தமிழ் போலிஸ் அதிகாரிகள் என்பதால். ஒரு நம்பிக்கை இன்மை இன்னொரு காரணமாகும். அதலால் பலரும் தமக்கு தெரிந்த வழியில் அரசு இயந்திரத்திற்கு எதிராக போராடி வந்தார்கள்.
அதனால்தான் 30இற்கு மேற்பட்ட இயக்கங்கள் ஒரே இலட்சியத்திற்கு தோற்றுவிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. 
(உதாரனத்திட்கு 1980களில் இங்கிலாந்தில் இரசாயண துறையில் பொறியில் முடித்து போராடும் வெறியோடு வந்த மகேஸ்வரனுக்கு மற்றவர்கள் தொடர்பு கிடைக்கவில்லை. மகேஸ்வரனின் திறமையை அவரை தம்மோடு சேர்த்து பாவிக்க கூடிய சந்தர்ப்பம் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. தன்னோடு சேர்ந்த சிலருடன் இவர்கள் செய்த காத்தான்குடி மக்கள் வங்கி கொள்ளையில் 36 மில்லியன் ரூபா பெறுமதியான பவுன் 240000 ரொக்க பணம் எடுத்தும். அது தமிழர் விடுதலை போருக்கு உதவவில்லை. அவர்கள் தமது சொந்த தேவைக்கு அதை செய்யவும் இல்லை) 
 
1984 பிந்திய காலம் என்பது ஹிட் அண்ட் ரன் என்ற நிலைமை முற்றாக மாறி இருந்தது.
இப்போது டெலோ ஈப்பி புளொட் புலிகள் என நான்கு பிரமாண்டமான இராணுவ இயக்கங்களும். அரசியல் தொழிட்நுட்ப போர்விதிகளை நம்பிய ஈரோசும்  இந்தியா இலங்கை என்று சொந்த முகவரிகள் முகாம்கள் என்று போட்டு இயங்க தொடக்கி இருந்தார்கள்.
பிராபகரனை பற்றி எழுதிய எல்லோரும்  (அவரது எதிரிகள் அவருக்கு துரோகம் செய்தவர்கள் உள்ளிட) அவர் இராணுவ கட்டமைமைப்பை கட்டுவதில்தான்  குறியாக இருந்தார்  என்று பின்னாளில் யாரும் எழுத தேவை இருக்கவில்லை. அது காட்சியாக தமிழ் தேசத்தில் இருந்தது. சிறு காவல் நிலையங்களை  மூடிவிட்டு  பிரதேச வாரியாக பாரிய இராணுவ காவலுடன் போலிஸ் ஸ்டேசனை நிறுவினார்கள். அதேன்மேல் தாக்குதல்களை தமிழ் போராளிகள் தொடங்கினார்கள்   சில தாக்குதல்களால் அழிக்கபட்டது (யாழ்பாணம் சாவேச்சேரி முல்லைத்தீவு) எஞ்சியவை இராணுவ முகாம் ஆக்கபட்டது.
கனரக இயந்திர துப்பாக்கிகள் சகிதம் 1985 தொடக்கத்தில் ரோந்து செல்லும் இராணுவம் மீது மட்டும் தாக்குவது என்ற நிலை உயர்ந்து புலிகள் குறிஞ்சாதீவு  இராணுவ முகாமையே  நிர்மூலம் ஆக்கினார்கள். அதனோடு வடக்கை பொருத்தவரை எல்லா இராணுவமும் முகாம்களுக்குள் புலிகளால் முற்றுகை இடபட்டனர்    .
இப்போது இராணுவம் பாரிய இராணுவ நகர்வுகளுக்கு தாயாரானது இதுதான் அவர்களுக்கு இருந்த ஒரே தெரிவு. இஸ்ரேலிடம் பயிற்சி ஆயுத கொள்வனவு   என்று  அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர தொடங்கினார்கள்.
 
இந்த பாரிய இராணுவ நர்வுகளை தடுத்தாக வேண்டும்.
அக்கறையோடு விடுதலைக்காக போராட வெளிக்கிட்ட தலைவர்கள் போராளிகள் முன் எழுந்த கேள்வி எப்படி என்பதே ஆகும்?
விடை மிக மிக எளிது ............
எமது படையையும் பலமாக்க வேண்டும்.
புளொட் தவிர்த்து மற்றைய நாலு இயக்கமும் ஒன்று சேர்வதென முடிவெடுத்தார்கள். தலைவர்கள் சேர்ந்தார்கள் பேசினார்கள் .............
இப்போ தான் புதிய பூதம் கிளம்பிச்சு ...
 
"இந்தியா"
அப்படி ஒரு பலமான சக்தி ஈழத்தில் தலை  எடுத்தால் ...? அதன் தொடர்ச்சி தமிழகத்தில் முடியலாம் என்று இந்தியா நம்பியதாகதான் இப்போதும் சொல்கிறார்கள்.
(எனது தனிபட்ட எண்ணம் தனது கட்டுபாட்டுக்குள் இவர்கள் இருக்க வேண்டும் என்பது அவர்களின் இலட்சியமான தமிழ் விடுதலையைவிட  இந்தியாவிற்கு முதன்மையானது )  
இப்போது  ஒன்றாவது என்பது சாத்தியம் அற்று போய்விடுகிறது.
 
தமிழ் இளைஞர்கள் 30 பெயர்களில் 30தக பிரிந்து போகிறார்கள். சிங்கள இராணுவம் பாரிய வடிவில் கட்டமைக்க படுகின்றது.
பாரிய சிங்கள இராணுவ இயந்திரத்தை எதிர்த்து போராட வேண்டும்.(ஒபெரசன் லிபரேசன் போன்ற ஒன்று)
 
தமிழ் விடுதலை போரை வென்று நிலை நாட்ட என்னும் ஒருவன்.
என்ன செய்திருக்க முடியும் ???
என்ன செய்திருக்க வேண்டும் ???
 
அப்போதைய நிலைமைகளை சம்பவங்களை கணக்கில் எடுப்பீர்கள் என எண்ணுகிறேன். 

புலிகள் மற்றவர்களை அழித்ததுக்கு ஒரே ஒரு காரணம் தங்களை பாதுகாக்கவே. அது சரி/பிழை என்பதுதான் உண்மை

எதில் இருந்து தங்களை பாதுகாக்க எண்ணினார்கள்?

மிச்சம் எல்லாம் இட்டு கட்டின கதைகளே. அந்த கதைகளை வாசித்து இன்னுபுருவதும் அதில் உள்ள விடையங்களை 8ம் 9ம் அறிவால் விளங்கி கொள்ளுவது அவர் அவரது கெட்டித்தனம். அதற்க்கு இப்படி கனக்க புனைகதைகள் வாசிக்க வேண்டும். ஒரு மாதிரி குப்பைகளை வாசித்தால் 4ம் அறிவிலேயே முளை கிரகிக்க தொடக்கிவிடும். பிறகு எழுதுகிறவர்களும் இலகுவாக போய்விடும்.

புலிகள் பெரிய பெரிய பிழைகள் செய்ததானாலேயே அழிந்து போனார்கள்.

உலகில் அழியாத இராச்சியம் ஒன்றை உதாரனத்திட்கு அறிந்து கொள்ள ஆசை என்றாலும்.

ஏன் 2009 இற்கு முன் புலிகள் அழியவில்லை. 2002வரை வீறுகொண்டு வளர்ந்தல்லவா வந்தார்கள். அப்போ 2002இற்கு பின்தான் பிழைகள் செய்ய தொடங்கினார்களா? 

அந்த பிழைகளை சரி என்று வாதிடுவதிலும் பார்க்க அவற்றை ஏற்றுக்கொண்டு முன்போவது அவர்கள் முன்னெடுத்த காரியத்தை முன்னகர்த்த உதவும்.

விசு,

நீங்கள் உண்மைகளை அறிவில்லை. அறிய முயல்வதும் இல்லை என்பதுதான் உண்மை. உண்மைகள் இலகுவாக கிடைக்காது. பொய்களில் சில சந்தர்பங்களில் மனம் இலேசாகலாம் அது நிலைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி,

தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் மீதும் மறைமுக சேறடிப்பு, உங்கள் சிக்நேச்சரை வைத்து, நடந்ததை கண்டேன்.

இவர்களுக்கு தெரிந்தது இது மட்டுமே. இவர்களை புறக்கணித்து விட்டு எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Visu;

எனக்கு நான் விரும்பினமாதிரி, விரும்புகிறது போல எழுத வருமோ தெரியவில்லை.

அதிகால மனிதன் தனது உணவிற்கான மிருகங்களை வேட்டையாடினான் என்று சொல்லும் போது நல்லூர் கோவில் ஐரினது முதாதையும் அதில் வரும் என்பதும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட உண்மை.  அதே போலவே ஆரம்ப கால அனைத்து இயக்கங்களினதும் வரலாறு. இதில் ஒருவருக்கு வெள்ளையடிக்க யாரும் முன்றால் ஒன்றில் அவருக்கு உண்மை தெரியாது அல்லது உண்மைகளை தேடி செல்லவில்லை என்றே கருத்து.

அதே போலவே, பிரபாகரனும் அவரோடு சேர்ந்தவர்களும்தான் 6 அறிவோடு இருதார்கள் மற்றவர்கள் எல்லோரும் 5 , 5.5 அறிவோடு இருந்தார்கள் என்று சொல்லுவதும் அபத்தம். சிலர் இதை போர்/ சகோத-யுத்தம் நடந்த காலத்தில் உணர்ந்தார்கள் சிலர், பிந்தி உணர்ந்தார்கள். ஆனால் எப்பவும் எங்கேயும் உள்ளது போல சிலர் அதை இன்னமும் நம்ப மறுக்கிறார்கள்.

நீங்கள் சொல்லிய கதை, ஒரு பிழையான செவி-வழி கதை என்று பல வரலாற்று பதிவாளர்கள் சொல்லும்போது அதை பற்றி திரும்ப என்ன சொல்ல;

ஆனால் எனக்கு என்ன தோன்றியது என்றால்;  நீங்கள் சொல்லிய படி, மகேஸ்வரன் உங்கள் இரத்த உறவாக இருக்கட்டும், அயலாவானாக இருக்கட்டும், அதற்காக..அவரை கிட்டு விட்டிட்டு ஓடு என்று சொன்ன போது ஏன் சந்தோஷமடைந்தீர்கல்?  ஒருவன் உயிர்பயத்தில் தான் செய்த காரியத்தை விட்டுவிட்டு ஓடுவது உங்களுக்கு சந்தோசமான விடையமா? ஏன் கிட்டு அவரை தன்பாட்டில் செயற்பட விடவில்லை என்று யோசித்தீர்களா ? இல்லாவிட்டால் ஏன் கிட்டு ஏன் மகேஸ்வரனுக்கு வழிவிட்டு தன்னுடைய "தொழிலை" தொடர்ந்து செய்திருக்கலாம்தானே என்று யோசிக்கவில்லை?  இல்லாவிட்டால் மகேவரனும் ரோ உடன் தொடர்பு என்று சொல்ல போகிறீர்களா?

புலிகள் மற்றவர்களை அழித்ததுக்கு ஒரே ஒரு காரணம் தங்களை பாதுகாக்கவே. அது சரி/பிழை என்பதுதான் உண்மை.  மிச்சம் எல்லாம் இட்டு கட்டின கதைகளே. அந்த கதைகளை வாசித்து இன்னுபுருவதும் அதில் உள்ள விடையங்களை 8ம் 9ம் அறிவால் விளங்கி கொள்ளுவது அவர் அவரது கெட்டித்தனம். அதற்க்கு இப்படி கனக்க புனைகதைகள் வாசிக்க வேண்டும். ஒரு மாதிரி குப்பைகளை வாசித்தால் 4ம் அறிவிலேயே முளை கிரகிக்க தொடக்கிவிடும். பிறகு எழுதுகிறவர்களும் இலகுவாக போய்விடும்.

புலிகள் பெரிய பெரிய பிழைகள் செய்ததானாலேயே அழிந்து போனார்கள். அந்த பிழைகளை சரி என்று வாதிடுவதிலும் பார்க்க அவற்றை ஏற்றுக்கொண்டு முன்போவது அவர்கள் முன்னெடுத்த காரியத்தை முன்னகர்த்த உதவும்.

விசு,

நீங்கள் உண்மைகளை அறிவில்லை. அறிய முயல்வதும் இல்லை என்பதுதான் உண்மை. உண்மைகள் இலகுவாக கிடைக்காது. பொய்களில் சில சந்தர்பங்களில் மனம் இலேசாகலாம் அது நிலைக்காது.

வணக்கம்

இந்த திரியில் காணாமல்   போயிருந்த பலர் மீண்டும் வந்துள்ளது தெரிகிறது..

உங்களது கேள்விகள் 

தோல்வியை  வைத்து 

அன்றைய முடிவுகளை தீர்மானிப்பதாக உள்ளது

இதேநேரம் இன்று புலிகள் வென்றிருந்தால்.....?

தங்கள் பார்வை மாறியிருக்கும்...

அந்த நேரத்தில் இயக்கங்களுக்கிடையே ஆன மோதல்களை  தமிழர்கள் விரும்பவில்லை..

வலுவாக இருந்த புலிகள் மற்றவர்களை  தடை செய்தபோதும்

அழித்த போதும் மக்களது எதிர்ப்புக்கள் பெரிதாக வராது

ஒரு   அரவணைப்பு இருந்தது

இதை நீங்கள் ஒத்துக்கொண்டால்...

அந்த நேரம் மகேசுவரனது இயக்கமும்

ஈரோசும் எடுத்த முடிவு சரியானது என்பதே எனது கருத்தும் வரலாறுமாகும்.

நன்றி  வணக்கம்....

  • கருத்துக்கள உறவுகள்
30 வருடம் நடந்த சண்டையில் ..... 1987லுடன் மூஞ்சூறு எல்லாம் சொந்த முகங்களை காட்டிவிட்டது.
 
பின்பு 3 வருடம் இந்தியாவுடன் சண்டை 
 
1990இல் தொடங்கி  2002வரை புலிகளும் சிங்கள இனவாத அரசும் நேர் நேர்.
 
இது உள்ள பத்திரகை கட்டுரை என்று எல்லாம் இருக்கிறது.
 
இப்ப புதுசா பூமியில் நடந்த சண்டைக்கு கதை சந்திர மண்டலத்தில் இருந்து இறக்குகிறார்கள்.
(இதை பொறாமையால் சிலர் நிறுத்த முயற்சிக்கிறார்கள்) நிப்பாட்ட கூடாது ..........
 
அப்படியே புதன் வியாழன் ...... சனி கிரங்களில் இருந்தும் தொடர்ந்து இறக்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.