Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினியின் லிங்காவால் ரூ. 30 கோடிக்கு நஷ்டம்... விநியோகஸ்தர்கள் போர்க்கொடி!

Featured Replies

லிங்கா படத்தால் தங்களுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இந்த இழப்பை நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுதொடர்பாக யூடியூப்பில் ஒரு வீடியோ உலா வருகிறது. அந்த வீடியோவில் அந்த விநியோகஸ்தர்கள் கூறியுள்ளதாவது:

முதல் விநியோகஸ்தர்:

நான் திருச்சி தஞ்சாவூர் ஏரியா விநியோக உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்து வாங்கினேன். லிங்கா பட இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய இயக்குநர்கள், ரஜினி சார் உள்ளிட்டோர் இந்தப் படம் படையப்பா படத்தை விட நன்றாக போகும், 10 மடங்கு படையப்பாவை விட சிறப்பாக இருக்கும் என்றனர். பெரும் வசூலை கொடுக்கும் என்றனர். மேலும் அவர்களே வாலன்டியராக சிலரை விட்டு கேஸ் போடச் சொல்லி பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்கள். இதையெல்லாம் நம்பித்தான் நாங்கள் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கினோம். ஆனால் மக்களிடம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படத்தின் ரிலீஸ் தேதியைப் பார்த்தால் ரஜினி பிறந்த நாளன்று படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா.. இத்தன வருடம் சினிமாவில் இருக்கும் ரஜினிக்கு அது தெரியாதா... ரஜினி ரசிகர்களைப் பார்த்தால் அவர்களுக்கு 45 வயதுக்கு மேல் இருக்கும். அவர்களின் பிள்ளைகள் அரையாண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் எப்படி கூட்டம் வரும். இதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். படம் இப்படி தவறான தேதியில் வெளியானதால்தான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தோல்வி அடைந்து விட்டது. ரஜினி பெரிய ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவரையும், எங்களைப் போன்றவர்களையும் வாழவைக்கும் இடம் திரையரங்குகள்தான். பல கோடி பணத்தைப் போட்டு படத்தை எடுத்து விட்டு கல்யாண மண்டபத்தில் படத்தைப் போட்டுக் காட்ட முடியாது. திரையரங்குகளில்தான் அதைக் காட்ட முடியும். நாங்கள் பெரும் விலை கொடுத்துள்ளோம். அதையெல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் தலையில்தான் சுமத்தியுள்ளோம். அவர்களும் பல லட்சம் செலவிட்டு, சில இடங்களில் கோடிக்கணக்கில் கொடுத்துள்ளனர். கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்த இழப்பை சமாளிக்க, இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களை ரீகன்சிடர் செய்து தர வேண்டும். எங்களுக்கு 20 சதவீதம் கூட போட்ட பணம் வரவில்லை. இதை மரியாதைக்குரிய ரஜினி சார் தர வேண்டும். பல நூறு கோடிக்கு கிட்டத்தட்ட ரூ. 200 கோடிக்கு மேல் படத்தின் வியாபாரம் நடந்துள்ளது. அதில் ரூ. 20 முதல் 30 கோடி வரைதான் தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வசூலான தொகையிலிருந்து இந்த இழப்பை ரஜினி சார் தாய் மனப்பான்மையுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்றார் அவர்.

2வது விநியோகஸ்தர்:

ரஜினிகாந்த் நன்றாக நடித்திருக்கிறார், படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லித்தான் நம்பி வாங்கினோம். ஆனால் படத்திற்கு ஆடியன்ஸிடம் ரெஸ்பான்ஸ் இல்லை. எந்தத் தியேட்டரிலும் படம் ஹவுஸ்புல் ஆக வில்லை. நேற்றெல்லாம் ஒரு தியேட்டரில் 10 டிக்கெட்தான் விற்றுள்ளது. ஓப்பனிங் சில காட்சிகள்தான் ஹவுஸ்புல் ஆனது. மற்றபடி எங்குமே புல் ஆகவில்லை. நான் செங்கல்பட்டு உரிமையை வாங்கியுள்ளேன். பெரும் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது 64 தியேட்டர்களில் படம் போட்டுள்ளோம். எங்குமே போட்ட தொகை கவர் ஆகவில்லை. ரூ. 14 கோடி கொடுத்து வாங்கினோம். இப்போது தியேட்டர்கார்ரகள் எங்களை நெருக்குகிறார்கள். நாங்கள் தயாரிப்பாளர்களைக் கேட்டுள்ளோம். அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ரஜினி சார் இந்த இழப்பை சரிக்கட்ட வேண்டும் என்று கேட்கிறோம் என்றார்.

 

3வது விநியோகஸ்தர்:

நான் செளத் ஆர்க்காடு, நார்த் ஆர்க்காடு உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்தோம். இதில் தியேட்டர்காரர்கள் ரூ. 4 கோடி கொடுத்தனர். மீதப் பணத்தை நாங்கள் போட்டோம். இப்போது தியேட்டர்களில் ரூ இரண்டே கால் கோடிதான் வசூலாகியுள்ளது. எனவே அவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு பிரச்சினை செய்கிறார்கள். எனவேதான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். ஆனால், இந்தப் புகார் குறித்து லிங்கா தயாரிப்பாளர் மற்றும் பிரதான விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடம் விசாரித்தபோது, இவர்கள் விநியோகஸ்தரே இல்லை என்றும், அவர்கள் கூறும் விலைக்கு படம் விற்கப்படவும் இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் புகார் கூறிய விநியோகஸ்தர்கள் மற்றும் அலுவலக முற்றுகை குறித்து தயாரிப்பாளர் சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 http://tamil.oneindia.com/news/tamilnadu/distributors-say-they-have-suffered-loss-from-lingaa-217362.html

  • கருத்துக்கள உறவுகள்
லாபம் வந்தால் உங்களுக்கு 
நஷ்டம் வந்தால் ரஜனி சாரா?
என்ன கணக்கிது?
  • கருத்துக்கள உறவுகள்

லாபம் வந்தால் உங்களுக்கு

நஷ்டம் வந்தால் ரஜனி சாரா?

என்ன கணக்கிது?

உங்கள் கேள்வி சரிதரன்.

ஆனால், 10 ரூபா விக்கிற பொருளை, நல்ல பொருள்ண்ணே, உங்க ஊரில 100 ரூபா போகும் பயப்பிடாம 70 கொடுத்து எடுத்திட்டுப் போங்க என்னு தலைல கட்டிவிட்டால், எதிர்பார்த்த லாபம் வராவிடில் refund கேட்பார்கள் தானே.

20 ரூபா திருப்பிக் கொடுத்தாலும் தயாரிப்பாளருக்கு நட்டம் இல்லையே.

ஆனாலும் ரஜனி படங்கள், பல கோடிகளை பிரட்டும் மெகா பிஸ்னஸ் தன்மை கொண்டவை.

  • கருத்துக்கள உறவுகள்

லாபம் வந்தால் உங்களுக்கு

நஷ்டம் வந்தால் ரஜனி சாரா?

என்ன கணக்கிது?

இதை நானும் யோசிப்பதுண்டு. பாபா படத்தில் ஏற்பட்ட நட்டத்தில் ஒரு பங்கை திருப்பிக் கொடுத்ததாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி எனும் ஏமாற்று  பேர்வழி தமிழகத்தை எதிர்பார்க்கவைத்தே வியாபாரம் செய்வதில் கில்லாடி .

இனி ரஜனிக்கு இறங்கு முகம் தான்.

அமிதாப் மாதிரி இலகுவாக சுதாகரிக்கும் திறமை குறைவு.

கடைசி 15 வருட மாஸ்க் ஊடக விளையாட்டினால் தான் பிழைப்பு அப்படியும் எதிர்த்து சவுண்ட்விட்டவைகளை மறைமுகமாய் தூது விட்டு வாயை மூட வைப்பது உ .ம் மனோரமா .

இல்லாத ஒன்றை பெரிதாக காட்டிக்கொள்வது.இல்லாதது தமிழர்களிடம் உழைத்து விட்டு ஒரு சதமும் ஈகாமல் M .G .R என்ற பில்டப் அடிப்பது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதை நானும் யோசிப்பதுண்டு. பாபா படத்தில் ஏற்பட்ட நட்டத்தில் ஒரு பங்கை திருப்பிக் கொடுத்ததாக ஞாபகம்.

 

ம்ம்ம்

கொடுத்து பழக்கிவிட்டார்.

இனி அல்லாவுக்கு பகிடியும் தெரியாது

வெற்றியும் தெரியாது என்றபடிதான் போகப்போகுது...

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி எனும் ஏமாற்று  பேர்வழி தமிழகத்தை எதிர்பார்க்கவைத்தே வியாபாரம் செய்வதில் கில்லாடி .

இனி ரஜனிக்கு இறங்கு முகம் தான்.

அமிதாப் மாதிரி இலகுவாக சுதாகரிக்கும் திறமை குறைவு.

கடைசி 15 வருட மாஸ்க் ஊடக விளையாட்டினால் தான் பிழைப்பு அப்படியும் எதிர்த்து சவுண்ட்விட்டவைகளை மறைமுகமாய் தூது விட்டு வாயை மூட வைப்பது உ .ம் மனோரமா .

இல்லாத ஒன்றை பெரிதாக காட்டிக்கொள்வது.இல்லாதது தமிழர்களிடம் உழைத்து விட்டு ஒரு சதமும் ஈகாமல் M .G .R என்ற பில்டப் அடிப்பது. 

 

நீங்கள் சொல்வது சரி ஆயினும் தயாரிப்பாளர் குஞ்சுமோன் ( ஜெண்டில்மான் படத்தினை எடுத்தவர்) ஒரு முறை இதிலுள்ள அருமையான பொருளாதார விளக்கத்தினை தந்தார். 
 
ரஜனி போன்ற mass ஹீரோ வயதாகி விட்டது என ஒதுங்காமல், ரசிகர் ஆதரவு இருக்கும் வரை நடிப்பதன் மூலம் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை பெற்று சம்பளம் பெற உதவ முடியும். அவர்கள் குடும்பங்கள் உணவு பெற உதவ முடியும். ஏனெனில் அவர்களது வேலை நிரந்தரம் இல்லாதது. மேலும் இவரது பட பிரமாண்ட வியாபாரம் மூலம் திரளும் பணம் மீண்டும் இங்கே முதலீடு செய்யப் படுமே, என்றார்.
 
இந்த எல்லோராலும் ஆதரவு தரப் பட்ட கருத்தின் மூலமே, பாபாவில் அடி வாங்கி ஒதுங்கி இருந்த ரஜனி படையப்பா, சந்திரமுகி, சிவாஜி போன்ற பிரமாண்டமான படங்களில் நடிக்க வந்தார். குஞ்சுமோன் சொன்னது சரிதான் என நிருபித்தார்.
 
இவர் படங்களின் வியாபாரத்தின் அளவினையும், அதில் புரளும் பணத்தின் அளவினையும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என விரியும் சந்தையையும் அதில் இந்த படத்துடன் தொடர்பானவர்களுக்கு, அட இங்கே நம்ம தமிழ் கடைகளில் DVD விற்பவர்கள், தமிழ் படம் ஓடும்  தியேட்டரில்  டிக்கெட், சோளப் பொரி விற்பவர் வரை பிழைப்பவர்கள் அதிகம் என்பதால், ரஜனி என்னும் குறுகிய கண்ணோடத்தில் பார்க்க முடியாது எனும் குஞ்சுமோன் வாதம் எனக்கு சரியாகப் படுகின்றது.  

Edited by Nathamuni

பல காலம் விநியோகஸ்தர்களாகவும், திரையரங்கு உரிமையாளர்களாகவும் இருப்பவர்களுக்கு ஒரு படத்தினை பார்த்து விட்டு இது ஓடுமா இல்லையா என்பதை அனுமானிக்க முடியவில்லையாயின் அது அவர்களது தவறாகும்.  படம் பார்க்காமல் விற்பவர் தன் சரக்கை நல்லது என்று சொல்வதை வைத்து முடிவெடுப்பவர் முட்டாளாகத் தான் இருப்பர்.

 

இவர்களை விட அடி முட்டால்கள் எந்தவொரு விமர்சனத்தினையும் வாசிக்காமல் முதல் இரண்டு நாளில் விழுந்தடித்து புதுப்படம் பார்க்கப் போகின்றவர்கள்.

 

அதை விட முட்டாள்கள், ரஜனி / விஜய் / அஜித் /சிம்பு போன்றோரின் படம் உன்னதமான சினிமாவாக இருக்கும் என கற்பனை பண்ணுகின்றவர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நீங்கள் சொல்வது சரி ஆயினும் தயாரிப்பாளர் குஞ்சுமோன் ( ஜெண்டில்மான் படத்தினை எடுத்தவர்) ஒரு முறை இதிலுள்ள அருமையான பொருளாதார விளக்கத்தினை தந்தார். 

சிம்பிள் உங்கள் வீட்டில் நடைபெறும் வேலை 30000 பெறுமதி யானது வேலை முடிஇன்த்ததும் மேத்திரி 3கோடி ரூபாயை தன்னுடைய சம்பளம் என தன் வீட்டுக்கு கொண்டு போவதுக்கு ஒப்பானது இந்த கதை.அப்பத்தான் குஞ்சு மோன்,ரஜனி வகையறாக்கள்   தமிழ்நாட்டில் பிழைக்கலாம்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஓரளவு விழித்துக்கொண்டுவிட்டதா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஓரளவு விழித்துக்கொண்டுவிட்டதா? :wub:

 

இனியும்.... விழிக்கா விட்டால், அந்தத் தமிழ் நாட்டை..

அலாரம் அடித்து தான்.... எழுப்பணும்...

ஹ.... ஹா.... ஹா.......

 

-ரசனியின் பஞ்ச் டயலாக்கு.-

(ப்ளீஸ்... இதனை, ரசனி சாரின் குரலில் வாசித்து, இன்பம் அடையுங்கள்.) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஓரளவு விழித்துக்கொண்டுவிட்டதா? :wub:

 

ஆங் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது.   அவரு அடுத்த தமிழக முதல்வர் ஆக கனவு காண்கிறார்.  :o
 
சிங்கம் உள்ளார போனதும் நரிகள் (ரஜனி, குஸ்பு, விஜய், வாசன், தமிழ் இசை, ஸ்டாலின் ) எல்லாம் முதல்வர் ஆக கனவு காணுகினம்.  :rolleyes:  :icon_idea:  :lol:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆங் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது.   அவரு அடுத்த தமிழக முதல்வர் ஆக கனவு காண்கிறார்.  :o
 
சிங்கம் உள்ளார போனதும் நரிகள் (ரஜனி, குஸ்பு, விஜய், வாசன், தமிழ் இசை, ஸ்டாலின் ) எல்லாம் முதல்வர் ஆக கனவு காணுகினம்.  :rolleyes:  :icon_idea:  :lol:

 

ஆங் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது.... :D 

 

உங்க மக்கள திருப்திப்படுத்த

ஆள

உங்களுக்கு முடியல என்பதை ஒத்துக்கொள்ளணும்  முதலில்... :( 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஓரளவு விழித்துக்கொண்டுவிட்டதா? :wub:

தமிழ்நாடாவது விழித்துக்கொள்வதாவது! :D

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிக்கு மார்க்கட் இருந்தால் மட்டும் போதாது. கதையும் இருக்கவேண்டும் என்பதை ரசிகர்கள் உணர்த்துகின்றார்கள். ஆனால் ஒரு படம் வெற்றி பெறுமா இல்லையா என்பது வெறும் சூதாட்டம். இதில் எதிர்வு கூற முனைவது வீண் வேலை.

தொடர்ந்து மொக்கையாகவே தமிழ்ப்படங்கள் வருவதால் இதுகளைப் பார்ப்பதையே விட்டுவிட்டேன். எனவே எனக்கு நட்டமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் பார்த்துவிட்டேன், ஒரு அலுப்பு படம். நட்டம் வரும்தானே

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கா படத்தால் நஷ்டம்.. புகார் கொடுத்தவர், போலீஸ் வந்ததால் ஓட்டம்!

லிங்கா படத்தால் தங்களுக்கு நஷ்டம் என்று கூறி, விநியோகஸ்தர் அலுவலகம் முன்பாக சிலர் நேற்று முற்றுகையிட்டனர். ஆனால் அப்படி முற்றுகையிட்டவர்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பொய்யான புகார் கூறி, நன்றாக ஓடும் படத்துக்கு எதிர்மறை பிரச்சாரம் செய்வதாகவும் லிங்கா தரப்பில் போலீசில் புகார் கூறப்பட்டதால், முற்றுகையிட்டவர்கள் திடீரென மாயமானார்கள்.

 

லிங்கா படத்தை திருச்சி - தஞ்சையில் திரையிட்ட வகையில் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறி, விஜயபார்கவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை சிலர் முற்றுகையிட்டனர். இதுகுறித்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் தகவல் அனுப்பினர். அந்த நிறுவனத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த நான்குபேர் தங்களை லிங்கா விநியோகஸ்தர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் தன்னை திருச்சி - தஞ்சை பகுதி விநியோகஸ்தர் என்று கூறி, லிங்காவை வெளியிட்டதிலஸ் தனக்கு ரூ 8 கோடி நஷ்டம் என்றார். மேலும் ரஜினி பிறந்த நாளில் இந்தப் படத்தை வெளியிட்டது தவறு, அது என்ன தேசிய விடுமுறை நாளா, ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்றெல்லாம் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அவரது புகார் குறித்து லிங்கா தயாரிப்பாளர் மற்றும் பிரதான விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடம் விசாரித்தபோது, இப்படி ஒரு விநியோகஸ்தரே இல்லை என்றும், அவர் கூறும் விலைக்கு படம் விற்கப்படவும் இல்லை என்றும் தெரிவித்தனர். "படம் வெளியாகி ஒரு வாரம் கூட முடியவில்லை. திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நஷ்டம் என்று எப்படி சொல்ல முடியும்? இதை விநியோகஸ்தர்கள் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்லாமல், பிரஸ்ஸை அழைத்தது ஏன்? இது திட்டமிட்ட சதி என்பதைப் புரிந்து கொள்ள இதுவே போதும். லிங்கா வசூல் இதற்கெல்லாம் பதிலடியாக அமையும்," என்றனர்.

மேலும் திருச்சி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஏரியாக்களில் முதல் வாரம் வெளியான அனைத்து அரங்குகளிலும் படம் இரண்டாவது வாரமும் நல்ல வசூலுடன் தொடர்கிறது என்றும் தெரிவித்தனர். புகார் கூறிய 'விநியோகஸ்தர்' மற்றும் அலுவலக முற்றுகை குறித்து தயாரிப்பாளர் சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் மாயமாகிவிட்டனர். அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணும் வேலை செய்யவில்லை!

thatstamil
 

  • கருத்துக்கள உறவுகள்

மோனா கசோலினா பாடல் பிடிச்சிருக்கு. மனோவுக்கும் பாடகிகளுக்கும் பாராட்டுக்கள்.

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பல காலம் விநியோகஸ்தர்களாகவும், திரையரங்கு உரிமையாளர்களாகவும் இருப்பவர்களுக்கு ஒரு படத்தினை பார்த்து விட்டு இது ஓடுமா இல்லையா என்பதை அனுமானிக்க முடியவில்லையாயின் அது அவர்களது தவறாகும். படம் பார்க்காமல் விற்பவர் தன் சரக்கை நல்லது என்று சொல்வதை வைத்து முடிவெடுப்பவர் முட்டாளாகத் தான் இருப்பர்.

இவர்களை விட அடி முட்டால்கள் எந்தவொரு விமர்சனத்தினையும் வாசிக்காமல் முதல் இரண்டு நாளில் விழுந்தடித்து புதுப்படம் பார்க்கப் போகின்றவர்கள்.

அதை விட முட்டாள்கள், ரஜனி / விஜய் / அஜித் /சிம்பு போன்றோரின் படம் உன்னதமான சினிமாவாக இருக்கும் என கற்பனை பண்ணுகின்றவர்கள். :)

ஒரு நடிகரை பிடிக்கும்,பிடிக்காது என்பது உங்கள் ரசனை சம்மந்தப்பட்ட விசயம்.அதற்காக அந்த நடிகரின் படங்களை பார்ப்பவர்களை முட்டாள் என்பது படு கேவலமான விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலத்துக்கு வருகிறது நடிகர் ரஜினி மனைவி சொத்து...

 

 

rajiniii.jpg

 

 

நடிகர் ரஜினி நடித்த, 'கோச்சடையான்' படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை, 'மீடியா ஒன்' நிறுவனம் திருப்பிச் செலுத்தாததால், அதற்கு பிணையாகக் கொடுக்கப்பட்ட, நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தின், 22 கோடி ரூபாய் சொத்தை கையகப்படுத்த, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியான, 'எக்சிம்' நடவடிக்கை எடுத்துள்ளது.
 
 
ரஜினி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்த, 'கோச்சடையான்' திரைப்படம், மே, 23ம் தேதி வெளியானது. நாட்டிலேயே முதல் முறையாக முப்பரிமாண முறையில் (3டி), 'மோஷன் காப்சரிங்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டது. ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய இப்படத்தை, 'ஈராஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 'மீடியா ஒன் குளோபல் என்டர் டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்தது.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.