Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசியுங்கோ அரசியல் அறிவை கொஞ்சம் வளருங்கோ .

Featured Replies

தமிழ்மக்களின் முப்பது வருட போராட்டத்தில் நாம் விட்ட தவறுகள் எண்ணிலடங்காதவை. இயக்கங்களுக்குள் நடந்த படுகொலைகள், புலிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக இயக்கப் போராளிகள் மீதான படுகொலைகள், சாதியத்திற்கு எதிராக, பெண் அடக்கு முறைக்கு எதிராக, பிரதேசவாத்த்திற்கு எதிராக போராடுவதற்கான எந்த அடிப்படையையும் கொண்டிருக்காமை, முஸலிம் மக்கள் மீது நடாத்திய பாசிச தாக்குதல்கள், அப்பாவிச் சிங்கள மக்கள் மீது நடாத்திய தாக்குதல்கள், மாற்றுக் கருத்தாளரகள் மீதான வன்முறை, தனி மனித துதி பாடல், வேளாள ஆதிக்கம், மலையக மக்களை கருவேப்பிலை போன்று பாவித்து வீசி எறிந்தமை, முற்போக்கு அரசியலைப் புறந்தள்ளியமை என்று எமது தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். புலிகளின் தோல்வியோ அன்றி போராட்ட அமைப்புக்களின் மேற்சொன்ன தவறுகளோ எமது போராட்டத்தைபிழை என நிறுவுவதற்கு உபயோகிப்பதிலேயே எனக்கு முரண்பாடு ஏற்படுகிறது. வடிவங்களின் தவறுகள் அடிப்படையின் நியாயத்தை மறுக்கிற சமன்பாடு கிடையாது. கூட்டமைப்பின் கூத்து இங்கே தான் எரிச்சல் ஊட்டுகிறது.

தமிழ் பேசும் மக்கள் இணைந்த போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான நிலமை முன்னர் எப்போதைக் காட்டிலும் தற்போது பன்மடங்கு அதிகரித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆதவன் .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுகவும்...  மூக்குச் சளியை..... 
விறாண்டிக் கொண்டிருக்க, முடியாதப்பா.....

  • தொடங்கியவர்

பள்ளிகூடம் போகவும் மாட்டம் படிக்கவும் மாட்டம் ஆனால் விடுதலை மட்டும் வேண்டும் .

பாவம் தமிழர்கள் . :(

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடம் போனால், விடுதலை கிடைக்கும் என்று... யார் உங்களுக்கு சொன்னது?
உமா மகேஸ்வரனா?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... உண்மை தான் தமிழ் சிறி 
மூக்கிலே சளியாய் ...
 
காலிலே செருப்பாய் ...
 
சாம்பாரிலே பருப்பாய் ...
 
சந்தியிலே சிரிப்பாய் ..போகுது
 
நம் இனப் பிரச்சினை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மக்களின் முப்பது வருட போராட்டத்தில் நாம் விட்ட தவறுகள் எண்ணிலடங்காதவை. இயக்கங்களுக்குள் நடந்த படுகொலைகள், புலிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக இயக்கப் போராளிகள் மீதான படுகொலைகள், சாதியத்திற்கு எதிராக, பெண் அடக்கு முறைக்கு எதிராக, பிரதேசவாத்த்திற்கு எதிராக போராடுவதற்கான எந்த அடிப்படையையும் கொண்டிருக்காமை, முஸலிம் மக்கள் மீது நடாத்திய பாசிச தாக்குதல்கள், அப்பாவிச் சிங்கள மக்கள் மீது நடாத்திய தாக்குதல்கள், மாற்றுக் கருத்தாளரகள் மீதான வன்முறை, தனி மனித துதி பாடல், வேளாள ஆதிக்கம், மலையக மக்களை கருவேப்பிலை போன்று பாவித்து வீசி எறிந்தமை, முற்போக்கு அரசியலைப் புறந்தள்ளியமை என்று எமது தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். புலிகளின் தோல்வியோ அன்றி போராட்ட அமைப்புக்களின் மேற்சொன்ன தவறுகளோ எமது போராட்டத்தைபிழை என நிறுவுவதற்கு உபயோகிப்பதிலேயே எனக்கு முரண்பாடு ஏற்படுகிறது. வடிவங்களின் தவறுகள் அடிப்படையின் நியாயத்தை மறுக்கிற சமன்பாடு கிடையாது. கூட்டமைப்பின் கூத்து இங்கே தான் எரிச்சல் ஊட்டுகிறது.

தமிழ் பேசும் மக்கள் இணைந்த போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான நிலமை முன்னர் எப்போதைக் காட்டிலும் தற்போது பன்மடங்கு அதிகரித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆதவன் .

இங்கு என்ன கருத்தை முன் வைக்க விரும்புகின்றீா்கள் என்பதை பொறுத்தே இதற்கு கருத்தெழுத முடியும்..

இருப்பினும்... போராட்ட காலத்தில் தவறுகள் இடம் பெறவில்லை. அனைத்தும் சாியாகவே நடந்தது என்று வாதாட முடியாது. ஆயினும் தவறுகள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் மட்டுமே மேற்க் கொள்ளப்பட்டதாக அா்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. 

சாதியத்துக்கெதிரான கொள்கையில் விடுதலைப்புலிகள் முழுமூச்சாக இருந்தனா். சாதியம் முற்று முழுதாக ஒழிப்படமுடியாதவை... (ஒரு அரசாங்கம் அமையும் வரை). மலையக மக்கள் மீதான் ஈழத்தமிழாின் ஆதிக்கம் என்பது விடுதலைப்புலிகளின் எழுச்சியின் பின் உடைந்து போனது என்பது கண்கூடு. 

ஏனையவற்றுக்கு பதில் கூறவேண்டின் எமது மக்களின் இழப்புக்கு யாா் பதில் கூறுவாா்கள் ???? சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் அனாவசியமாக கொல்லப்படவில்லை. விடுதலைப்புலிகள் இனச்சுத்திகாிப்பை மேற்கொள்ளவில்லை. அவா்களது தாக்குதல் நடவடிக்கைகள் கூடியளவு பொதுமக்களை இலக்கு வைத்தோ, பொது மக்கள் நடமாடும் பகுதிகளிலோ நடைபெறவில்லை. சில சம்பவங்கள் விதிவிலக்கு என்பதில் கருத்து வேறுபாடில்லை.

இந்த திாியில் அனாவசியமான தனிநபா் அல்லது குழு நிலை விவாதங்கள் இன்றி உருப்படியான விவாதத்தை செய்ய வேண்டின் தொடா்ந்து கருத்துக்களை பகிா்ந்து கொள்வோம்...!

யாரையும் துரோகியாக்காமல்... எவரையும் எதிாியாக்காமல்... கடந்து வந்த அரசியல் பாதையில் உள்ள தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்ற என்னத்தில்.... உங்கள் அமைப்பு சாா் நியாங்களை எழுதுங்கள்... முடிந்தால் அதற்கான பதிலையும்... உருப்படியான கருத்துக்களையும் முன் வைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்தை பார்த்வுடன் நல்ல தெளிவான அரசியல் பாடம் சொல்லப்போறிங்கள் என்று நினைத்தேன் உள்ளே வந்து பார்த்தால் எல்லோருக்கும் தெரிந்த அதே ரெக்கொர்ட் தான்......அது சரி தமிழ் மக்கள் ஏன் போராட வேண்டும்?அவனுக்கு என்ன பிரச்சனை இருக்கு?அப்பே ரட்ட ...அப்பே ஆண்டுவ என்று சனத்தை இருக்க விட்டாலே அது சிறந்த அரசியல் பாடமாக இருக்கும்.....

பள்ளிகூடம் போகவும் மாட்டம் படிக்கவும் மாட்டம் ஆனால் விடுதலை மட்டும் வேண்டும் .

பாவம் தமிழர்கள் . :(

இந்த மனப்பான்மை தான் எல்லோருக்கும்... முதலில் நீங்கள் இதிலிருந்து வெளியால வரவேணும் .நீங்கள் எப்படி கல்வியால் மற்றவர்களை மட்டம் தட்டுகிறீர்களோ ,அதே போல மற்றவர்கள் சாதி,பிரதேசம்,இயக்கம்,போன்றவற்றின் மூலம் மட்டம் தட்டுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுண் இதையே எத்தனை நாளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப்போறியள் ஏதாவது புதுசா உருப்படியா சொல்லுங்கோவன்.

புலிகளது ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துபோயிற்று.

அந்தப்பக்கம் யாராவது இருக்கிறார்களா என்பதே பெரிய கேள்வி.

அப்படி இருந்தாலும் அது புலித்தோல் போர்த்திய சிங்கள் ஆயுதக்குழுவாகத்தான் இருக்கும்.

எதுக்கு புலி புலி என உதறல் எடுத்து கிலிகொள்கிறீர்கள்.

சரி உங்கட கதைகள் எல்லாத்தையும் ஏற்ருக்கொள்கிறம், மேற்குறிப்புட்ட தவறுகள் இல்லாது கொள்கை முடிவுகள் எடுத்து தமிழ் மக்களது உரிமைப்போராட்டத்தை கட்டியெழுப்புங்கோ.

முதல் ஆளாக நான் வாறன். ஆனால் அங்கையும் புலி எலிக் கதைகளைச் சொல்லக்கூடாது.

சும்மா, இணையத்தளங்களில் வந்து கத்திக்கொண்டிருக்கவேண்டாம்.

முஸ்லீம்களுடன் நல்லிணக்கம்? கடந்த கிழக்கு மாகாணசபையில் ராவூப் ஹக்கீமிடம் சம்பந்தர் மன்றாடினார் வாங்கோ முதலமைச்சர் பதவிதாறம் எங்களுடன் கூட்டுச்சேர்ந்து கூட்டாட்சி அமைக்கலாம் என நாங்களா தடுத்தம் இவர்களுடன் எப்படி ஐயா இணக்க அரசியல்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பாவது தமிழர்களுக்கு சிங்களவனால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எந்த இஸ்லாமியத் தலைவனாலும் கண்டண அறிக்கை விடப்பட்டதா?

அர்ச்சுண், பலரது படுகொலைகளை ரசித்து, அதனது குரூரங்களில் சந்தோசப்படும் மனியல்பு கொண்டோரே ஒருசாரார் தவுறு செய்தார்கள் உங்களுக்கு இன்னமும் வேணும் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

சாதி அரசியலைப்பற்றிக் குறிப்பிட்டீர்கள் யாழ்ப்பாணத்து உயர் சாதிக்காரர்களே தங்களால் தாங்கள் தவறானவர்கள் என நம்பப்படுபவர்கள் இன்னுமொருவரால் அவதிக்குள்ளாவதை ரசிக்கும் மனப்பாண்மை உடையவர்கள். சமூகத்தில் கடைகோடி சாதிக்குழுமத்தில் உள்ளவன் தனது பிரச்சனையை தடியெடுத்தோ கத்தியெடுத்தோ தனக்குள்ளேயே முடித்துவிடுவான்

இதில் நீங்கள் எந்தவகை அர்ச்சுணா.

சும்மா புலிக்கதையை தொடர்ந்தும் கூறாதீர்கள். உங்கள் புலிக்கதை நீங்கள் அசைலம் அடிக்கும்போது கொடுத்த கேஸ்கட்டுடன் முடிந்துபோகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிகூடம் போகவும் மாட்டம் படிக்கவும் மாட்டம் ஆனால் விடுதலை மட்டும் வேண்டும் .

பாவம் தமிழர்கள் . :(

நானும் பள்ளிக்கூடம் போனேன் ,நன்றாக படித்தேன் விடுதலை வந்துவிட்டது 

அர்ஜுன் அண்ணை 

எங்களை வைத்து காமடி ,கீமடி  பண்ணலையே ....?

இதெல்லாம் படித்து அரசியல் அறிவை வளர்க்க வேண்டிய அவசியத்தில் தமிழர் 

உண்மைதான் பாவம் தமிழர்கள் ..... :(

  • கருத்துக்கள உறவுகள்
வாசித்த பின்பு எனக்கு அரசியல்  அறிவு 63வீதம்  கூடியிருக்கு.
வாசித்த மற்றவர்களின் விகிதாசாரம் பற்றி அறிய ஆவல். 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களது  நிலையையும்

அதை இயக்கங்கள் புரிந்து கொண்டு வழிநடாத்திய  விதத்தையும் இத்திரி பிரதிபலிக்கின்றது

40 வருடகால போராட்டவரலாற்றில் இத தான் நடந்தது

நடக்குது.............

நன்றாக பாருங்கள் உறவுகளே

இந்ததிரியின் தலையங்கம் உறுத்தியபோதும்

நாம் ஏன் ஓடிவந்தோம் வாசிக்க.....???

இவ்வாறு தான் மக்கள் அவாவுடன் இருக்கிறார்கள்

எத்தனை  கூட்டங்களுக்கு ஓடியிருப்போம்

அத்தனையிலும் ஏமாற்றம்

மீண்டும்....  மீண்டும்..

இழுத்து மக்களை  வைத்து

புலி வாந்தி....

உண்மையைச்சொன்னால் இவர்களது  கூட்டங்களுக்குப்போய்

இவர்களது இந்த நடவடிக்கைகளால் தான் மக்கள் புலிகளை மேலும் விரும்பினார்கள்

ஆதரித்தார்கள்

இது தான் உண்மை

இது தான் வரலாறு....

இந்த வரலாறு என் கண்முன்னால் நடந்தது

அதை எனக்கோ

என் பிள்ளைக்கோ

ஏன் எனது பேரனுக்கோ எவரும்படம் காட்டமுடியாது...

ஏனெனில் அந்த நேரத்தில்

போராடிய

களத்தில் நின்றவர்களுடன் தோளோடு தோளாக நின்றவர் நாம்...

வகுப்பறைகளிலும் சினிமாக்கொட்டகைகளிலும் நின்றவர்களுடனல்ல... :(  :(

Edited by விசுகு

அப்படி போடுங்கோ அரிவாளை...ஓ ஓ....இது தனிநபர் துதிபாடலோ :D

  • தொடங்கியவர்

நான் மேலே பதிவிட்டது என்னவென்றே பலருக்கு விளங்கவில்லை .முப்பதுவருட போராட்டம் தோற்றத்தின் சாராம்சம் இதுதான் .இதற்குள் வெற்றிகள்  தோல்விகள் வீரம் தியாகம் அர்பணிப்புகள் துரோகம் காட்டிக்கொடுப்புகள் எல்லாம் இருந்தது உண்மை .

அது விளங்கும் அறிவு இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் வந்து வெள்ளைக்கொடி பிடிக்கவேண்டி வந்திருக்கமாட்டாது .

பலருக்கு (அண்ணை போன்றவர்களுக்கு )போராட்டம்  வெற்றிதான் முப்பது வருடங்கள் அதை வைத்தே பிழைப்பை ஒட்டியவர்கள் ஆச்சே .

அண்ணை வகுப்புக்கு கூப்பிடுகிறார்

இதுவரை எந்த ஆசிரியனும் இவ்வாறு கூப்பிட்டு வகுப்பெடுத்ததுண்டா..??

கூப்பிடுதலிலேயே

நான் படித்தனான்

நான் ஒரு படி மேல்

என்று இருக்கு.. :(

வகுப்பில படிப்பிப்பது 

சமதர்மம்

சகோரதத்துவம்

விடுதலை.... :(  :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மேலே பதிவிட்டது என்னவென்றே பலருக்கு விளங்கவில்லை .முப்பதுவருட போராட்டம் தோற்றத்தின் சாராம்சம் இதுதான் .இதற்குள் வெற்றிகள்  தோல்விகள் வீரம் தியாகம் அர்பணிப்புகள் துரோகம் காட்டிக்கொடுப்புகள் எல்லாம் இருந்தது உண்மை .

அது விளங்கும் அறிவு இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் வந்து வெள்ளைக்கொடி பிடிக்கவேண்டி வந்திருக்கமாட்டாது .

பலருக்கு (அண்ணை போன்றவர்களுக்கு )போராட்டம்  வெற்றிதான் முப்பது வருடங்கள் அதை வைத்தே பிழைப்பை ஒட்டியவர்கள் ஆச்சே .

அண்ணை நீங்கள் இப்ப படிப்பீக்க வெளிக்கிட்டியள் எல்லே?????
இனிப்பாருங்கோ தமிழ்ச்சனத்துக்கு கண்ணிலை ஒரு தூசுகூட படாது!!!!!
 
ச்ச்சா... அண்ணை இல்லாததாலை அறுபது வருசத்தை மண்ணாக்கிட்டம்...
  • தொடங்கியவர்

'புலிகளின் தோல்வியோ அன்றி போராட்ட அமைப்புக்களின் மேற்சொன்ன தவறுகளோ எமது போராட்டத்தைபிழை என நிறுவுவதற்கு உபயோகிப்பதிலேயே எனக்கு முரண்பாடு ஏற்படுகிறது. '

இவற்றை யாழில் பதிவதை விட லிங்காவிற்கு போய் விசில் அடிக்கலாம் என்றிருக்கு . :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலிகளது தோல்வியில் மிகவும் பாதிக்கப்பட்டது அவர்களை கடந்தகாலங்களில் விமர்சித்தவர்கள் அவர்களுக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டுநின்றவர்களுக்கே, புலிகளை மூலதனமாக்கிய தமது பிழைப்புவாத வீணாகிவிட்டதே என்பதே அவர்கள் அனைவரது கவலை.

இங்கு புலிகள அண்டிப்பிழைத்தவர்களைப்பற்றி நான் ஒன்றும் இத்தருணத்தில் குறிப்பிடவரவில்லை. அதற்கான தேவை இருக்கின்றது எனினும் இதனை புலிஎதிர்ப்பாளர்கள் அல்லது புலிஎதிர்ப்பு விமர்சகர்கள் செவ்வனே செய்வார்கள், என்ன பிரச்சனை, உப்புப்புளியை கொஞ்சம் கூடக்குறைய அளந்துவிடுவார்கள் ,முதலாமவர்களது விமர்சனங்களுக்கே இப்போது பதில்கூறவேண்டியுள்ளது.

புலிகளை ஆதரித்தவர்கள் எதிர்த்தவர்கள் அனைவரும் தங்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் தூரத்திலிருந்தே இவற்றைச் செய்தார்கள். ஆதரித்து நின்றாலும் எதிர்த்து நின்றாலும் தங்களது இலாப நட்டங்களை சரிவரக்கணித்தே இவைகளைச் செய்தார்கள் இதில் எதிர்த்து நின்றவர்கள் விமர்சித்து நின்றவர்கள் அனைவரும் தங்களது தலைக்குப் பின்பே அறிவுஜீவிகள் அன்றேல் மெத்தப்படித்தவர்கள் எனும் ஒளிவட்டம் சுற்றுவதாகக் கருதியவர்கள், அன்றேல் ஏனையோர் அப்படி நினைப்பதாகக் கருதியவர்கள். 

புலிகளது போராட்டம் மிகவும் நுணுக்கமான முறையிலேயே திட்டமிடப்பட்டு  முள்ளிவாய்க்கால்வரைக்கும் கொண்டுவரப்பட்டது, இது தனியொரு பிரபாகரனால் மட்டுமே நிகழ்த்தப்பட்டதல்ல அப்போரில் பங்குகொண்ட போராளிகள் உட்பட்ட அப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களாலுமே முள்ளிவாய்க்கால் மட்டும் கொண்டுவரப்பட்டது.

கஅரணம் போரை இன்னமும் நீட்டிக்கொண்டு முன்னெடுத்துச் செல்வதனால் எந்தவொரு முடிவுக்கும் செல்லமுடியாது அப்படிச்சென்றால் வன்னியில் மாட்டுப்பட்ட பொதுமக்களே இதவிடப் பாரிய அழிவுக்கு உட்படுவர் எனையோர் போரைக் ஆரணங்காட்டி பிழைப்புநடாத்துவதைத் தொடர்வர், இதில் யாழ் குடாநாட்டு மக்கள் முன்னிலலையில்.

போர் சர்வதேசமயப்பட்டுவிட்டது இனிமேல் ஆயுதங்களின் தேவை தமிழருக்கு இல்லை.

தென்கிழக்காசியப்பிராந்தியத்தில் எந்தவொரு அரசியல் புவியியல் பொருருளாதார நலன்கள் சார்ந்த முடிவெடுத்தாலும் அது ஈழத்தமிழர்களில் நலனைப் புறந்தள்ளி முடிவெடுக்கமுடியாது என்பத உலகுக்கு உணர்த்தியாகிவிட்டது. இதனது தாக்கம் அண்மைக்காலங்களில் மேற்குலக நாடுகளில் இப்போதும் இராஜீக முறைகளில் தொடர்பாடலில் ஈடுபடும் எமது பிரதிநிதிகள்மூலம் உணரப்பட்டுள்ளது.

ஈழத்தினுள்ளே பலம்வாந்த அரசியல் சக்தியாக தமழர்கூட்டமப்பையும் அதன் அதனது தொழிற்பாடுகளை விமர்சிக்கும் தகமையை கஜேந்திரன் தலைமையிலானா கட்சியும் செயற்படுகின்றன.

புலம்பெயர் நாடுகளில், நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத்தமிழர் பேரவை எனும் இருபேரியக்கங்கள். கடந்தகாலத்தில் புலத்தின் புலிகளுக்குச் சமமான பலத்துடன் செயற்படுகின்றனர்.

இவைகள் அனைத்தும் செர்ர்ந்து குறுகிய காலத்தில் தமிழர்க்கான நிலத்தை மீட்டுக்கொள்வார்கள் என என்னால் கூறமுடியாது. ஆனால் தமிழர்கள் பிரிந்து போவதற்கான நியாயத்தன்மையை உலகெங்கும் சரியான விதத்தில் நிரூபிப்பார்கள்.

உலகின் மாறிவரும் ஒழுங்குகளால் எமக்கான காலம் கனியும் அது என்காலத்திலேயோ அன்றேல் எனது பேரன்பூட்டன் காலத்திலேயோ அமையலாம்.

காரணம் தவறுகளிலிருந்தே மனிதன் சரியான திசையை நிர்ணயிக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்த பின்பு எனக்கு அரசியல் அறிவு 63வீதம் கூடியிருக்கு.

வாசித்த மற்றவர்களின் விகிதாசாரம் பற்றி அறிய ஆவல்.

எனக்கு பிரசர் கூடியிருக்கு

'புலிகளின் தோல்வியோ அன்றி போராட்ட அமைப்புக்களின் மேற்சொன்ன தவறுகளோ எமது போராட்டத்தைபிழை என நிறுவுவதற்கு உபயோகிப்பதிலேயே எனக்கு முரண்பாடு ஏற்படுகிறது. '

இவற்றை யாழில் பதிவதை விட லிங்காவிற்கு போய் விசில் அடிக்கலாம் என்றிருக்கு . :icon_mrgreen:

எப்ப பார்த்தாலும் யாழ் இணையத்தை கள் உறவுகளை நக்கல் அடுத்தபடியாக இதுக்கையே நாள் முழுதும் நின்று குரோத கருத்துக்களை மட்டும் பதியும் அ .........பிறவிகளுக்கு என்ன கூற. மண்டையில் இருக்கும் சரக்கு குரோதம் மட்டும்தான்.
  • கருத்துக்கள உறவுகள்

அ .........பிறவிகளுக்கு என்ன கூற. மண்டையில் இருக்கும் சரக்கு குரோதம் மட்டும்தான்.

ஐயோ தப்பு தப்பு மண்டையில் இருக்கும் சரக்கு "முற்போக்கு அரசியல் அறிவு" :D

  • கருத்துக்கள உறவுகள்

யார் ஆதவன்? இவர் ஆதவன் தீட்சண்யாவாக இருந்தால் அவர் ஒரு கோட்பாட்டை இறுக்கிப் பிடிக்கும் புலி எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்பதைக் கவனிக்கவேண்டும்!

அரசியல் அறிவை வளர்க்க அரவணைத்து பொறுமையாகவும் எளிமையாகவும் சொல்லவேண்டும். மக்குகளே கேளுங்கள் என்றால் மூக்கில் மூர்க்கமான குத்து வாங்கத் தயாராகவேண்டும் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

'புலிகளின் தோல்வியோ அன்றி போராட்ட அமைப்புக்களின் மேற்சொன்ன தவறுகளோ எமது போராட்டத்தைபிழை என நிறுவுவதற்கு உபயோகிப்பதிலேயே எனக்கு முரண்பாடு ஏற்படுகிறது. '

இவற்றை யாழில் பதிவதை விட லிங்காவிற்கு போய் விசில் அடிக்கலாம் என்றிருக்கு . :icon_mrgreen: 

தாராளமாக விசிலடிக்கலாம். யாரும் உங்களை வெத்திலை வைத்து யாழில் கருத்து எழுதும் படி வற்புறுத்தவில்லை தானே. 
 
எழுதிய கருத்தும் ஒரு இரவல் கருத்து. சொந்தமாக எழுத வராதா?
  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்ததை எழுதி என்ன பிரயோசனம்?... இனி மேல் என்ன செய்ய வேண்டும் அல்லது நடந்து முடிந்ததில் இருந்து என்ன பாடம் படிக்க வேண்டும் என்று எழுதினால் பிரயோசனமாய் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.