Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது – மாவை சேனாதிராசா

Featured Replies

தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது – மாவை சேனாதிராசா DEC 21, 2014 | 19:36by VANNIin செய்திகள்

mavai-senathirajah-300x200.jpgசிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதில்லை என்றும், கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களைக் கோருவதென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

வவுனியாவில் இன்று காலை முதல் பிற்பகல் வரை நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் அறிவிக்கும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் வாக்களிக்க வேண்டாம் என்று தமிழ் மக்களைக் கோருவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.

தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும்.

மருத்துவ உதவிகளுக்காக இரா. சம்பந்தன் வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியான முடிவை அறிவிக்கும் என்றும்” அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2014/12/21/news/2032

ஏன் சந்திரிகா கடைசிவரை பொறுத்திருக்கும் படி கூறினாரா? என்ன பில்டப் பெரியவருக்கு காதுக்குத்து அதற்கு இந்தியாவிலே மருத்துவம்.இதே சாக்கில் இந்திய அரசின் ஆலோசனைகளையும் பெற்றுவந்து தேர்தலுக்கு முதல் நாள் மெதுவாகச் சொன்னால் போதும்

  • Replies 75
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாருக்கு... வாக்களிக்கிறது?
எண்டதையாவது சொல்லுங்கோவன் ஐயா..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாருக்கு... வாக்களிக்கிறது?

எண்டதையாவது சொல்லுங்கோவன் ஐயா..... :lol:

இன்றைய  தமிழரின் பரிதாபநிலை..... :(

நாங்கள் யாருக்கு... வாக்களிக்கிறது?

எண்டதையாவது சொல்லுங்கோவன் ஐயா..... :lol:

உங்களுக்கு வாக்குரிமை இருந்தால் உங்கள் அறிவை பயன்படுத்தி வாக்களிக்கவும். 

இதுக்குமா யாரும் சொல்லவேண்டும்.

கூட்டமைப்பு விரைவில் மைத்திரிக்கு வாக்களீக்கும் படி அறிக்கை விடுவதே நல்லது, இதனால் மகிந்த வெல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

இருக்கும் நிலவரத்தைப் பார்க்கும் போது மகிந்த வருவதே தமிழருக்கு சாதகமானதாக இருக்கும். மகிந்த இருப்பதே சர்வதேச நெருக்கடிகள் சிறீலங்கா மீது அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கும்.

மைத்திரி வந்தால் மேற்குலகம் சர்வதே விசாரணை பற்றீயோ தமிழருக்கான தீர்வு பற்றியோ கவனத்தில் எடுக்காது. மகிந்த தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதே தமிழருக்குச் சாதகமானது.

யாருக்கு வாக்களித்தாலும் தமிழன் நிலை மத்தளமே.
 மகிந்தா குடும்பத்தை தவிர எல்லாேருமே எதிரணிக்கு தாவியாச்சு. கடைசி பஸ்ஸையும் பாப்பாேம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கு வாக்களித்தாலும் தமிழன் நிலை மத்தளமே.
 மகிந்தா குடும்பத்தை தவிர எல்லாேருமே எதிரணிக்கு தாவியாச்சு. கடைசி பஸ்ஸையும் பாப்பாேம்.

77ம் ஆண்டு வண்ணை ஆனந்தனும் உதே மாதிரித்தான் கடைசிபஸ் பிரச்சாரம் செய்தவர்.
ஆனால் கடைசி பஸ் இண்டு வரைக்கும் நிக்கவேயில்லை.....உலகம் முழுக்க ஓடிக்கொண்டேயிருக்கு......ஓடுற பஸ்சிலையிருந்து விழுந்து செத்தது எக்கச்சக்கம்....அழிவுகள் எக்கச்சக்கம்.....
மஹிந்த வெல்லப் போவதில்லை. மஹிந்தவை வைச்சு ஈழம் காணலாம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
Online-survey-1-infographic_final-hi-res
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த வெல்லப் போவதில்லை. மஹிந்தவை வைச்சு ஈழம் காணலாம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இதன் மூலம் தமிழரை  நீங்கள் இகழவில்லை

மகிந்த இருந்தால்

ஈழம் பிறந்துவிடும் என்ற அச்சம் சிங்களவனுக்கும்

சர்வதேசத்துக்கும் வந்ததே 

ஆட்சி  மாற்றத்தை அவர்கள் விரும்புவதற்கான காரணம்

இதுக்கு கூட நாம்  அடிபட்டபடி....

நாரதர் ,விசுகு இவர்களின் கருத்தை வாசிக்க இப்படியெல்லாமா மனுஷன் சிந்திப்பான் ? பச்சைகள் வேறு .

மகிந்தா வென்றால் இலங்கை அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மகிந்தா அண்ட் கோ வின் கையில் போய்விடும் நாடும் நாறிவிடும் அதுவரை வாயை திறக்கமுடியாது என்று சிங்களவரும் ,

முழு அளவிலான காணி பறிப்பு ,இராணுவபிரசன்னம்,போர்குற்றத்திற்கு பூச்சாண்டி,சிறையில் இருப்பவர்கள் பாடு அதோ கதி என தமிழர்  நினைக்க 

இல்லை மகிந்தா தொடர்ந்து தமிழ்ஈழம் கிடைக்கும் என்று நம்பும் சனமும் இருக்கு என்று நம்பமுடியாமல் இருக்கு .

ஈசன் மைத்திரிக்கு வாக்களீத்தால் என்ன கிடைக்கும் என்பதைச் சொல்லலாமே?

மைத்ரி வந்தால் இராணுவத்தை அகற்றுவாரா? அவர் அப்படிச் சொல்லவில்லையே? மகிந்தவை விட அவர் என்ன தருவதாகச் சொல்லி இருக்கிறார்?

  நான் தெளீவாக எழுதி இருக்கிறேன், மகிந்தவுடன் மேற்குலகிற்கு இருக்கும் முரண்பாடு தமிழர்கள் சம்பந்தமானது அல்ல அது சீனச் சார்பு சம்பந்தமானது. மேற்குலகிற்கு வேண்டியது ஆட்சி மாற்றம் மட்டுமே. மைத்ரி வந்தால் முன்னைய அரசுகளைப் போலவே அவர்கள் அமெரிக்கா இந்தியச் சார்பெடுத்து, தமிழர்களைக் கைவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் ,விசுகு இவர்களின் கருத்தை வாசிக்க இப்படியெல்லாமா மனுஷன் சிந்திப்பான் ? பச்சைகள் வேறு .

மகிந்தா வென்றால் இலங்கை அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மகிந்தா அண்ட் கோ வின் கையில் போய்விடும் நாடும் நாறிவிடும் அதுவரை வாயை திறக்கமுடியாது என்று சிங்களவரும் ,

முழு அளவிலான காணி பறிப்பு ,இராணுவபிரசன்னம்,போர்குற்றத்திற்கு பூச்சாண்டி,சிறையில் இருப்பவர்கள் பாடு அதோ கதி என தமிழர்  நினைக்க 

இல்லை மகிந்தா தொடர்ந்து தமிழ்ஈழம் கிடைக்கும் என்று நம்பும் சனமும் இருக்கு என்று நம்பமுடியாமல் இருக்கு .

அண்ணை  வணக்கம்

சிறீலங்காவில் ஆட்சி  மாறினால் தமிழருக்கு  மீட்சி  கிடைக்கும் என்று நீங்கள் சொல்லுவதை கேட்பதைவிடவா...?? :(

இதுவரை மகிந்தவின் தோஸ்தாக இருந்த  நீங்களே இப்ப மைத்திரி வெல்லுவார் என்றவுடன் கட்சி மாறீட்டீங்க. இனி என்ன உங்க பாடு கொண்டாட்டம் தான்.

இதன் மூலம் தமிழரை  நீங்கள் இகழவில்லை

மகிந்த இருந்தால்

ஈழம் பிறந்துவிடும் என்ற அச்சம் சிங்களவனுக்கும்

சர்வதேசத்துக்கும் வந்ததே 

ஆட்சி  மாற்றத்தை அவர்கள் விரும்புவதற்கான காரணம்

இதுக்கு கூட நாம்  அடிபட்டபடி....

விசுகு,

சிங்கள மக்கள் மகிந்த இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்று அச்சப்படுகின்றார்கள் என்ற முடிவை எந்த அடிப்படையில் எடுத்தீர்கள்? அவ்வாறு அவர்கள் அச்சப்படக் கூடிய விடயங்களாக அவர்கள் எதை நினைத்தார்கள்? பதில் சொல்லவும். அல்லது சர்வதேசம் மகிந்த இருந்தால் ஈழம் கிடைத்டு விடும் என்று நம்புகின்றது என்பதை எதை வைத்து சொல்கின்றீர்கள்?

குடும்ப ஆட்சி, மிக மோசமான ஊழல், கொள்ளை, ஊடகவியலாளர்கள் மீதான மிக மோசமான அடக்குமுறைகள், பொருளாதார சரிவு போன்றவை தான் சிங்கள் மக்கள் மத்தியில் மகிந்தவுக்கு எதிரான அலையை தோற்றுவித்தது.

  நான் தெளீவாக எழுதி இருக்கிறேன், மகிந்தவுடன் மேற்குலகிற்கு இருக்கும் முரண்பாடு தமிழர்கள் சம்பந்தமானது அல்ல அது சீனச் சார்பு சம்பந்தமானது. மேற்குலகிற்கு வேண்டியது ஆட்சி மாற்றம் மட்டுமே. மைத்ரி வந்தால் முன்னைய அரசுகளைப் போலவே அவர்கள் அமெரிக்கா இந்தியச் சார்பெடுத்து, தமிழர்களைக் கைவிடுவார்கள்.

மகிந்தவுடனான மேற்குலகுக்கு இருக்கும் முரண்பாடு தமிழர் சம்பந்தமானது அல்ல சீன சார்பு எனில் மகிந்த தொடர்ந்து ஆட்சியில் இருப்பின் அல்லது மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வரின்  சீன சார்பான முரண்பாடாக இருக்கும் முரண்பாடு மேற்குலகுக்கு மகிந்தவுடன் இருக்கும் முரணாடு எவ்வாறு தமிழர் சம்பந்தமான முரண்பாடாக மாறும்? உங்கள் கருத்தில் முரண்பாடு உள்ளதே?

இதன் மூலம் தமிழரை  நீங்கள் இகழவில்லை

மகிந்த இருந்தால்

ஈழம் பிறந்துவிடும் என்ற அச்சம் சிங்களவனுக்கும்

சர்வதேசத்துக்கும் வந்ததே 

ஆட்சி  மாற்றத்தை அவர்கள் விரும்புவதற்கான காரணம்

இதுக்கு கூட நாம்  அடிபட்டபடி....

நாங்க சிரிக்கிறதா அழுகிறதா? அர்ஜுன் சொன்னார் என்பதற்காக எதிர்க்காமல் கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடுங்கோ.

இந்த தேர்தலில் யார் வென்றாலும் தோல்வி எங்களுக்குத்தான், இருந்தாலும் மைத்திரியின் வெற்றி சராசரி இலங்கையின் சனநாயக வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதாவது தமிழர் என்ற இரு இனத்தை தவிர்த்துப்பார்த்தால் இலங்கைக்கு நல்லது.

யார் வென்றாலும் எங்களுக்கு உதவாது. எனக்கென்னமோ மைத்திரி வென்று இராணுவ ஆட்சி வந்தால் நல்லம் போலகிடக்கு.

அண்ணை  வணக்கம்

சிறீலங்காவில் ஆட்சி  மாறினால் தமிழருக்கு  மீட்சி  கிடைக்கும் என்று நீங்கள் சொல்லுவதை கேட்பதைவிடவா...?? :(

எங்கே இப்படி எழுதினேன் என்று காட்டினால் கோடி பவுண் தாறன். :(

//மகிந்தவுடனான மேற்குலகுக்கு இருக்கும் முரண்பாடு தமிழர் சம்பந்தமானது அல்ல சீன சார்பு எனில் மகிந்த தொடர்ந்து ஆட்சியில் இருப்பின் அல்லது மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வரின்  சீன சார்பான முரண்பாடாக இருக்கும் முரண்பாடு மேற்குலகுக்கு மகிந்தவுடன் இருக்கும் முரணாடு எவ்வாறு தமிழர் சம்பந்தமான முரண்பாடாக மாறும்? உங்கள் கருத்தில் முரண்பாடு உள்ளதே?//

என்ன நிழலி, இது விளங்க வில்லையா/? மேற்குஉலகமே இன்று போர்க்குற்றம் என்னும் ஒன்றைக் கொண்டு வந்து தமிழர் மீதான வன்முறை தவறானது என நிறுவ முயல்கிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இது கைவிடப்பட்டு உள் னாட்டுப் பொறீமுறை உடன் இது முடிந்து விடும். கீழே யு என் பி என்ன சொல்கிறது என்பதை வாசியுங்கள் விளாங்கும்.

Only Maithripala can defeat foreign intervention - UNP   Tamil Guardian 23 December 2014 icn_print_grey.gificn_email_grey.gificn_feedback_grey.gif    

Sri Lanka's main opposition UNP stated that only Maithripala Sirisena can settle the 'crisis' faced by Sri Lanka in Geneva, where the Office of the High Commissioner for Human Rights is currently conducting an investigation into allegations of mass atrocities, reported The Island.

UNP MP Wijeyadasa Rajapakshe said on Saturday that people should vote for Maithripala as re-election of President Mahinda Rajapaksa would be inimical to Sri Lanka's interests, adding that the country may face international sanctions if the president was re-elected.

Reiterating previous pledges by the opposition to protect Rajapaksa from an international war crimes tribunal, the MP said that only a new government could defeat the foreign elements working against the country, as the current regime was to blame for "earning the wrath" of the west and India.

Both Candidates Have Placed Sinhalese At The Center Of Polls: Tamil Civil Society Forum

TCSL Official Spokesman, Elil Rajan in a statement has noted that the proposed policies and manifestos of the two main candidates have made the upcoming polls as being material only to the future well-being of the Sinhalese.

To explicitly call for a vote for either of the main candidates therefore will be tantamount to accepting a unitary constitution and reject an international investigation,” the TCSF has noted adding that Tamils should collectively devise a political program that would fulfill their aspirations and mobilize themselves around a program, which, irrelevant of who comes to power in the South would enable them to press ahead the political program to win their rights.

https://www.colombotelegraph.com/index.php/both-candidates-have-placed-sinhalese-at-the-center-of-polls-tamil-civil-society-forum/

தமிழ் சிவில் சமூக அமையம்: "இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தமக்கென, தமது அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்குவதும் அதற்காக மக்கள் அணிதிரள்வதும், அணிதிரட்டப்படுவதுமே முக்கியமானவை. அத்தகைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தெற்கில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாங்களும் எமது அரசியல் தலைவர்களும் பிரிக்க முடியாத தமிழர் தாயகம், மறுக்க முடியாத தமிழ்த் தேசிய அடையாளம், அதன்வழி வந்த எமக்கான சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி, இன்றைய உலக ஒழுங்கை மேற்சொன்ன வரையறைக்குள் எமக்கு சாதகமாக்கி எமது அரசியலை முன்னகர்த்த முயற்சிப்பதே முக்கியமானது.

மேற்சொன்னவற்றைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமது மனச்சாட்சிக்கும், நீண்ட கால நோக்கில் தமிழ்ச் சமூகத்திற்கும், பொருத்தமான முடிவு எது என்பதைத் தனிப்பட்ட ரீதியாக ஆழமாகச் சிந்தித்து முடிவெடுக்குமாறு வேண்டுகிறோம் ..."

என்ன நிழலி, இது விளங்க வில்லையா/? மேற்குஉலகமே இன்று போர்க்குற்றம் என்னும் ஒன்றைக் கொண்டு வந்து தமிழர் மீதான வன்முறை தவறானது என நிறுவ முயல்கிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இது கைவிடப்பட்டு உள் னாட்டுப் பொறீமுறை உடன் இது முடிந்து விடும். கீழே யு என் பி என்ன சொல்கிறது என்பதை வாசியுங்கள் விளாங்கும்.

என் கணிப்பும் இது தொடர்பான எண்ணமும் வேறானது.

போர்க் குற்றத்தின் முக்கிய பங்காளிகள் மட்டுமன்றி அவற்றின் அனுசரனையாளர்களும் இந்த மேற்குலகம் தான். அது போர்க்குற்றத்தினை கையிலெடுத்திருப்பது சீன சார்பான மகிந்த அரசினை தன் பக்கம் இழுக்கவும், முடியாமல் போனால் (அல்லது போனதால்) அகற்றவுமே தான். போர்க்குற்றத்திற்கான உச்ச பட்ச தண்டனையாக இதைத் தான் அவை கருதுகின்றன.

தமிழர் மீதான வன்முறை தவறானது என்று நிறுவுவதற்கே போர்க்குற்றம் விசாரணை என்று எவ்வாறு தீர்மானிக்கின்றீர்கள் என்று புரியவில்லை. அவ்வாறாயின் மேற்குலகம் தமிழர் தீர்வு, இணைந்த வடக்கு கிழக்கு, சுயநிர்ணய உரிமை போன்றவற்றை  வலியுறுத்தி இந்த 5 வருடங்களில் ஏதாவது பிரயோசனமான ஒன்றைத் தானும் செய்து இருக்க வேண்டும். ஆகக் குறைந்தது வடக்கு மாகாண சபை சுயமாக இயங்கவாயினும் அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும்.  இவை எதையும் செய்யாமல் போர்க்குற்றம் பற்றி எந்தளவுக்கு குறைந்த அழுத்தம் கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு மாத்திரமே கொடுப்பது வெறுமனே மகிந்தவை அகற்ற மட்டுமே. வேண்டும் எனில் தமிழர் தொடர்பான தீர்வாக 13 + இனை மட்டுமே அவை வலியுறுத்தும். இது தான் நிதர்சனம்.

தமிழ் சிவில் சமூக அமையம்: "இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தமக்கென, தமது அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்குவதும் அதற்காக மக்கள் அணிதிரள்வதும், அணிதிரட்டப்படுவதுமே முக்கியமானவை. அத்தகைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தெற்கில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாங்களும் எமது அரசியல் தலைவர்களும் பிரிக்க முடியாத தமிழர் தாயகம், மறுக்க முடியாத தமிழ்த் தேசிய அடையாளம், அதன்வழி வந்த எமக்கான சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி, இன்றைய உலக ஒழுங்கை மேற்சொன்ன வரையறைக்குள் எமக்கு சாதகமாக்கி எமது அரசியலை முன்னகர்த்த முயற்சிப்பதே முக்கியமானது.

மேற்சொன்னவற்றைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமது மனச்சாட்சிக்கும், நீண்ட கால நோக்கில் தமிழ்ச் சமூகத்திற்கும், பொருத்தமான முடிவு எது என்பதைத் தனிப்பட்ட ரீதியாக ஆழமாகச் சிந்தித்து முடிவெடுக்குமாறு வேண்டுகிறோம் ..."

என்னைப் பொறுத்தவரைக்கும் இவ்வாறான வேலைத்திட்டம் ஒன்றை தாயகத்தில் உருவாக்கவும், அதற்காக மக்களை அணிதிரட்டவும் இலங்கையில் குறைந்தபட்ச சனநாயக சூழலாவது தோற்றுவிக்கப்படல் வேண்டும். இச் சூழல் மகிந்த + கோத்தா அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும் சிறிதும் சாத்தியமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

சிங்கள மக்கள் மகிந்த இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்று அச்சப்படுகின்றார்கள் என்ற முடிவை எந்த அடிப்படையில் எடுத்தீர்கள்?

அவ்வாறு அவர்கள் அச்சப்படக் கூடிய விடயங்களாக அவர்கள் எதை நினைத்தார்கள்? பதில் சொல்லவும்.

அல்லது சர்வதேசம் மகிந்த இருந்தால் ஈழம் கிடைத்டு விடும் என்று நம்புகின்றது என்பதை எதை வைத்து சொல்கின்றீர்கள்?

குடும்ப ஆட்சி, மிக மோசமான ஊழல், கொள்ளை, ஊடகவியலாளர்கள் மீதான மிக மோசமான அடக்குமுறைகள், பொருளாதார சரிவு போன்றவை தான் சிங்கள் மக்கள் மத்தியில் மகிந்தவுக்கு எதிரான அலையை தோற்றுவித்தது.

முதலில்  

சிறீலங்காவை இயக்குவது மகிந்த கிடையாது

அது சிறீலங்காவின் பேரினவாதமாகும்.

அடுத்தது தமிழர்கள் என்ன தான் தலைகீழாக கரணமடித்து மறுத்தாலும்

இந்தியாவுக்கும் உலகுக்கும் தெரியும்

தமிழரின் தாகம் தமிழீழதாயகம் என்பது....

இதன்படிதான் எனது கருத்து

இனி  பதில்..

 தேர்தல் ஒவ்வொரு மேடைகளிலும் தமிழர் பற்றியும்  தமிழீழம் பற்றியும் போர்க்குற்றம் பற்றியும் ஐநா விசாரணை பற்றியும்........ ஏன் பேசுகிறார்கள்??

இது பற்றி  விளக்கமாக எழுதுவது என்றால் பல நாட்கள் வேண்டும்.

சிங்களத்தைப்பொறுத்தவரை மகிந்த ஒரு வேட்டை நாய்

தேவை முடிந்தது

தொடர்ந்து வைத்திருப்பது

பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையை  வலுப்படுத்தும்

வெளியில் நடமாடமுடியாது வரும்

ஏற்கனவே இவை நடைபெறத்தொடங்கிவிட்டன

ஐநாவும் தனது தரப்புக்கு அடுத்த கட்டங்களுக்கு போக வேண்டி வந்துவிட்டது(விருப்பமில்லாதுவிட்டாலும்)

ஒரு சிறு உதாரணத்துடன் இதை முடிக்கின்றேன்

முள்ளிவாய்க்கால்வரை

மகிந்தவுக்கு முழுத்துணையாக இருந்த சிறீலங்காவின் வெளிநாட்டு ராயதந்திரிகள் எவரும் இன்று மகிந்தவுடன் இல்லை. ஏன்???

மகிந்தவின் விடாப்பிடியான முரட்டுஅரசியலால் தமிழரது கோரிக்கைகள் வலுவடைந்து தமது செயற்பாடுகள் தளர்வடைந்து வருவதே காரணம். இதன் போக்கு நீடித்தால்......???

இவர்கள் அனைவரும் சிங்களபேரினவாதத்தின் இயங்குமையங்கள்

இவர்கள் அனைவரும் மைத்திரி வந்தால் அவருடன் கைகோர்த்துக்கொள்வார்கள். அதன்பின் தமிழரது கோரிக்கைளுக்கு என்ன நடக்கும்??

Edited by விசுகு

 தேர்தல் ஒவ்வொரு மேடைகளிலும் தமிழர் பற்றியும்  தமிழீழம் பற்றியும் போர்க்குற்றம் பற்றியும் ஐநா விசாரணை பற்றியும்........ ஏன் பேசுகிறார்கள்??

இது பற்றி  விளக்கமாக எழுதுவது என்றால் பல நாட்கள் வேண்டும்.

உங்கள் பதிலில் எனக்கு புரிந்தவைகளுக்கு பதில் எழுதுகின்றேன்....

மகிந்த காலம் பூரா போர் வெற்றியையும் புலிப் பூச்சாண்டியையும் காட்டி காட்டி சனாதிபதியாக இருக்கலாம் என்று கனவு கண்டார். ஆனால் அவரின் குடும்ப ஆட்சியும் மோசமான ஊழலும் தன் கட்சிக்குள்ளேயேயும் மக்களிடத்திலும் எதிர்ப்பை சம்பாதித்ததால் சிங்கள மக்களைக் கவர அவரிடம் வேறு எதுவும் இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே தெரிவு புலிகள் மீண்டும் தலை தூக்குவார்கள் என்றும், போர்க்குற்றம் என்றும் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான். முக்கியமாக கிராமப்புற மக்களிடம் போய் போர்க்குற்றம் என்றால் உங்கள் பிள்ளைகளுக்கும் (இராணுவத்தினருக்கும்) தண்டனை கொடுப்பார்கள் என்றும் படையினரயும் குற்றவாளிகளாக கைது செய்வார்கள் என்றும் பிரச்சாரம் செய்வது தனக்கு ஓரளவுக்கு சாதகமான சூழலை தோற்றுவிக்கும் என்பது அவருக்கு தெரியும். எனவே தான் போகும் இடம் எங்கும் அதையே உளறுகின்றார்.

மகிந்தவுக்கு முழுத்துணையாக இருந்த சிறீலங்காவின் வெளிநாட்டு ராயதந்திரிகள் எவரும் இன்று மகிந்தவுடன் இல்லை. ஏன்???

மகிந்தவுடன் அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பதுக்கு அப்பால் அவர்கள் இலங்கை அரசுடன் தான் இருக்கின்றார்கள். இந்திய அரசை எடுத்துக்கொண்டால் போரின் போது உறுதுணையாக இருந்த ராஜதந்திகளை காட்டிலும் அதிகமாக இன்றும் மோடியின் அரசின் ராஜதந்திகள் இலங்கை அரசுடன் நெருக்கமாக இருக்கின்றனர். அதே போன்று தான் அன்றும் இன்றும் அமெரிக்க அரசின் இராணுவ ஒத்துழைப்பும், பயிற்சியும், ஒன்று இணைந்த கடற்படை ஒத்திகையும் நடக்கின்றன.  இவர்களுக்கு தேவை இலங்கை அரசு தம்முடன் மாத்திரம் இருக்க வேண்டும் என்பதே. அது சீனாவுடன் நெருங்குவதை தவிர்க்கவே இலங்கை அரசின் தலைமைத்துவத்தினை மாற்ற முற்படுகின்றனர்.

சிங்களத்தைப்பொறுத்தவரை மகிந்த ஒரு வேட்டை நாய்

தேவை முடிந்தது

தொடர்ந்து வைத்திருப்பது

பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையை  வலுப்படுத்தும்

வெளியில் நடமாடமுடியாது வரும்

ஏற்கனவே இவை நடைபெறத்தொடங்கிவிட்டன

ஐநாவும் தனது தரப்புக்கு அடுத்த கட்டங்களுக்கு போக வேண்டி வந்துவிட்டது(விருப்பமில்லாதுவிட்டாலும்)

முதலில் ஒரு விடயத்தினை புரிந்து கொள்ளுங்கள். சர்வதேசம் இன்னும் போர்க்குற்றம் என்ற சொல்லைத் தானும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ் வருடம் நிகழ்ந்த மனிதவுரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான கூட்டத்தில் கூட போர்க்குற்றம் என்ற சொல்லை நீர்த்துப் போகச் செய்யும் மனித உரிமை மீறல் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தினர். போருக்கு முழு உடந்தையாக இருந்த மேற்கும் ஐநாவும் ஒரு போதும் போர்க்குற்றம் என்பதை ஏற்கப் போவதில்லை.

ஆரம்பத்தில் சர்வதேசம் மகிந்தவை ஓரளவுக்கு நம்பியது. ஆகக் குறைந்தது 13 பிளஸ் ஆவது தமிழர்களுக்கு கொடுப்பார்கள் என்று நம்பினர்.  ஆனால் மகிந்த எல்லாருக்கும் பெப்பே காட்டி ஏமாற்றிவிடலாம் என்று கனவு கண்டார். சர்வதேசத்துக்கு வழங்கிய எந்த ஒரு உறுதிமொழியையும் கடைப்பிடிக்க வில்லை. அதே நேரத்தில் சிங்கள பிரதேசங்களில் பெளத்தம் அல்லாத ஏனைய மதத்தினர் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், NGO க்கள் மீதான கடும் கட்டுப்பாடு என்பன சனநாயக முகமூடி போட்டுக்கொண்டு இருக்கும் நாடுகளுக்கு  கடும் எரிச்சலை தந்தன. இதுக்கும் மேலாக சீனாவுடனான நெருக்கம் அவர்களை சினம் கொள்ள வைத்து இன்றைய தேர்தல் வரைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை அங்குள்ள மக்கள் அழுமூஞ்சியாக இருக்க வேனும் என்று கட்டளை இட இங்கு சகல உரிமை மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழும் புலத்தமிழர் ஆலோசனை சொல்ல முன் கொஞ்சமாவது சோசிக்க வேணும்..

//

என் கணிப்பும் இது தொடர்பான எண்ணமும் வேறானது.

போர்க் குற்றத்தின் முக்கிய பங்காளிகள் மட்டுமன்றி அவற்றின் அனுசரனையாளர்களும் இந்த மேற்குலகம் தான். அது போர்க்குற்றத்தினை கையிலெடுத்திருப்பது சீன சார்பான மகிந்த அரசினை தன் பக்கம் இழுக்கவும், முடியாமல் போனால் (அல்லது போனதால்) அகற்றவுமே தான். போர்க்குற்றத்திற்கான உச்ச பட்ச தண்டனையாக இதைத் தான் அவை கருதுகின்றன.//

போர்க் குற்றம் மட்டும் அல்ல இனப்படுகொலை என்பதுவும் இப்போது வெளீயே வரத் தொடங்கி உள்ளது. மேற்குலகம் தனது நோக்கங்களை நிறை வேற்றக் கொண்டு வரும் போது அவர்களையும் மீறீச் செல்வதற்கான வாய்ப்புக்களூம் உள்ளன. மகிந்த சீனச் சார்பு நிலை எடுக்க எடுக்க இது மேலும் இறுகும். மேற்குலகம் தமிழரை அழிக்க போர் தொடுக்கவில்லை. அவர்கள் தங்கள் பிராந்திய நலங்களைப் பாதுகாக்க போரை நடாத்தினர், ஈற்றில் அவர்களின் கணீப்புத் தவறீ மகிந்த அரசு முற்று முழுதாகச் சீனச் சார்பு நிலை எடுத்து விட்டது.

//தமிழர் மீதான வன்முறை தவறானது என்று நிறுவுவதற்கே போர்க்குற்றம் விசாரணை என்று எவ்வாறு தீர்மானிக்கின்றீர்கள் என்று புரியவில்லை. //

போர்க் குற்றம் என்னும் நிலையில் இருந்து இனப் படுகொலை என்னும் நிலை நோக்கி நகர்வதைத் தடுப்பதே , மகிந்தவை மாற்றும் தந்திரம்.

//அவ்வாறாயின் மேற்குலகம் தமிழர் தீர்வு, இணைந்த வடக்கு கிழக்கு, சுயநிர்ணய உரிமை போன்றவற்றை  வலியுறுத்தி இந்த 5 வருடங்களில் ஏதாவது பிரயோசனமான ஒன்றைத் தானும் செய்து இருக்க வேண்டும். ஆகக் குறைந்தது வடக்கு மாகாண சபை சுயமாக இயங்கவாயினும் அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும்.  இவை எதையும் செய்யாமல் போர்க்குற்றம் பற்றி எந்தளவுக்கு குறைந்த அழுத்தம் கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு மாத்திரமே கொடுப்பது வெறுமனே மகிந்தவை அகற்ற மட்டுமே. //

போர்க் குற்ற விசாரணை எவ்வாறு மகிந்தவை அகற்றும்? அது சிங்களா மக்கள் மத்தியில் மகிந்தவைப் பலப்படுத்தும். மையித்திரி சனாதிபதி அவதே மகிந்தவை அகற்றும். அதன் மூலம் மட்டுமே , போர்க் குற்ற விசாரணையை மகிந்தவுடன் உள் ஊரிலேயே முடித்து விடலாம். சர்வதேச விசாரணை அவசியம் அற்றதாகி விடும். ஏனெனில் கடைசி ஐநா பிரகடனத்த்லும் உள்ளூர் விசாரணாஐப் பொறீமுறை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதன் படு மேற்குலகம் ஆட்சியை மாற்றி உள் நாட்டிலேயே விசாரணையை முடித்து விடும்.

//வேண்டும் எனில் தமிழர் தொடர்பான தீர்வாக 13 + இனை மட்டுமே அவை வலியுறுத்தும். இது தான் நிதர்சனம்.//

மைத்றீ வந்தால் 13 + அல்ல 13 - உடன் தீர்வு காணப்பட்டு மிகப் பயங்கரமான ஒடுக்குமுறை இந்தியாவின் ஒத்துழைப்புடன் நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. 

//என்னைப் பொறுத்தவரைக்கும் இவ்வாறான வேலைத்திட்டம் ஒன்றை தாயகத்தில் உருவாக்கவும், அதற்காக மக்களை அணிதிரட்டவும் இலங்கையில் குறைந்தபட்ச சனநாயக சூழலாவது தோற்றுவிக்கப்படல் வேண்டும். இச் சூழல் மகிந்த + கோத்தா அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும் சிறிதும் சாத்தியமில்லை. //

மைத்ரி வந்தாலும் சூழல் மாறப் போவதில்லை, மாறாக புலத்திலும், தமிழகத்திலும் இருக்கும் வெளிகளும் மூடப்படும் சாத்தியக் கூறே உள்ளது.

மஹிந்தவின் சீன சார்புக்கொள்கையைத் தண்டிக்க இலங்கையைப் பிரிக்கும் அளவுக்கு மேற்கோ இல்லை இந்தியாவோ போகப் போவதில்லை. பிரிந்த இலங்கை பல நாடுகளின் நலன்களுக்குப் பாதகாமானது. (உதாரணமாக கொரியா.)
 
ஒன்றுபட்ட இலங்கையை தமக்கு சாதகமாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கம். இந்த நோக்கத்தை இலகுவான வழியில் அடைய முயற்சிக்கிறார்கள். முதற்கட்டமாக புலிகளை அகற்றினார்கள். அடுத்தது மஹிந்த.
 
தமிழ் மக்களின் நிலை, மஹிந்தவோ இல்லை மைத்திரியோ அல்ல, மேற்கினதும் இந்தியாவினதும் வேலைத்திட்டத்தில் தம்மை பங்காளிகளாக‌ ஆக்குவதே. இதன் மூலம் எம்முடைய பிரச்சனைகளை முடிந்த மட்டும் தீர்க்க முயல்வது அல்லது பிரச்சனைகளை தீர்க்ககூடிய ஒரு தளத்துக்கு அதை எடுத்துச் செல்வது. இந்த வேலைத்திட்டதில் நாம் பங்காளிகள் ஆகாவிட்டால் இறுதிச் சந்தர்ப்பத்தையும் இழந்து விடுவோம். இன்னும் தனிமைப் படுத்தப் படுவோம். 
 
மேற்கும் இந்தியாவும் தமக்குச் சார்பான ஆட்சி ஏற்படும் போது தமிழர் பிரச்சனையை கைவிடுவார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. கடந்த மூன்று தசாப்தத்தில் அவை தமிழர் பிரச்சனையை தமிழர் சார்பாக தீர்க்க முயற்சிகள் எடுத்திருந்தன. அப்போது அங்கே சீனா இல்லை. 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.