Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியை ஏற்று அலரி மாளிகையை விட்டுச் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

Featured Replies

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

http://tamil.adaderana.lk/news.php?nid=65199

  • Replies 77
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் ஏதோ பிளானில்தான் ஆட்சியை மாத்திறாங்களோ..?!

இவங்கள் ஏதோ பிளானில்தான் ஆட்சியை மாத்திறாங்களோ..?!

https://www.youtube.com/watch?v=nU_X0loAJZo

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் ஏதோ பிளானில்தான் ஆட்சியை மாத்திறாங்களோ..?!

மகிந்தவை ஆட்சியில் இருந்து விரட்டிவிட்டோம். எனி அவர் சுத்தவாளி..! போர்க்குற்றமா.. அப்படின்னா..??! இனப்படுகொலையா.. அப்படி ஒரு தீர்மானம் எனி வடக்கு மாகாண சபைக்கு வேணும் தானா..???!

இப்படி நிறைய நடக்கும் இருந்து பாருங்கள்..!

மகிந்தவையும் சிங்கள இராணுவத்தையும்.. ஒட்டுக்குழுக்களையும்.. கொடிய இனப்படுகொலையில் இருந்து தப்ப வைக்க நடக்கும் நாடகமே இந்த ஆட்சி மாற்றம்.

தமிழ் மக்களுக்கு அதில் சின்ன சந்தோசத்தை கொடுக்கிறாராம்.. சம்பந்தர்.

கொலைகாரனை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவ்வளவே. அவர் நன்கு பலத்தோடு தான் போய் இருக்கிறார். போர்க்குற்றத்தில் இருந்து தப்பிவிட்டால்.. இன்னொரு 5 ஆண்டில் மீண்டும்.... ஆட்சிக்கட்டில் அவர் குடும்பம் அமரலாம்.

இதில் சம்பந்தரின் சாணக்கியமும்.. மகிந்தவுக்கு உதவி உள்ளது. மகிந்தவை காப்பாற்றி ஆட்சி மாற்றத்தை வரவழைக்க வேண்டும் என்பது ஹிந்தியாவின் நோக்கமும் கூட. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் ஏதோ பிளானில்தான் ஆட்சியை மாத்திறாங்களோ..?!

விடிஞ்சு சூரியன் எழ முன்னமே 
பாயை சுருட்டிக்கொண்டு கிளம்புவதை பார்த்தால் ......???
பின்னால் பாரிய திட்டம் இருந்திருக்கும்போல்தான் இருக்கிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், சபேசன்###, தெனாலி.... உங்கள் விருப்ப்படி, MS வெற்றிபெற்று விட்டார்... அடுத்த கட்டமாக...அவர் தமிழர்களுக்கு என்ன செய்வார் என்று உங்களது முதிர்ச்சியான அரசியல் அறிவை வைத்து எதிர்வு கூறுகிறீர்கள்...உங்கள் மட்டுக்கு எமக்கு அறிவில்லாத்து என்றாலும், எனது சிற்றறிவின்படி... மகிந்த கோஷ்டிக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை... கருணா வகையாறாக்களும் மாட்டப்போவதில்லை...ஏனெனில் அவர்கள் ரணில் காலத்தில் இயக்கத்தை உடைத்தவர்கள் அதனால் ரணில் ஒன்றும் செய்யப்போவதில்லை. மேலே உள்ள இசையின் கருத்துப்படி இது சிங்கள ஆளும் வர்க்கத்தின், தமிழருக்கான மேற்குலகின் ஆதரவுடன் தளத்தை உடைப்பதற்கான, ஒரு திட்டமாக கூடி இருக்கலாம். எதுவாக இருந்தாலும், இந்த ஆட்சி மாற்றம் தமிழருக்கு பயன்படாதபட்சத்தில் சம்பந்தர், அப்பர் தரவழிகளை தமிழர்கள் ஒன்றாகத்துடைத்தெறிவார்கள்... அப்போது இதைப்பற்றி நீங்கள் விவாதிக்க ஆயத்தமாக இருங்கள் ...எனது prediction பிழை என்றால் நான் மன்னிப்பு கேற்க தயங்க மாட்டேன்

MG9526.jpg

HCP0007.jpg

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து விடைபெற்றார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். - 

http://www.tamilmirror.lk/137348

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னக் கேள்வி,

மகிந்த அரசில ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் போரை நடத்தின 4 பேரில இருவர். மற்றைய இரண்டுபேரும் சரத்தும், மைத்திரியும். அவை இப்ப பதவியில அமரப் போயினம். அப்ப போர்க்குற்ற விசாரணை, மனித குலத்திற்கெதிரான குற்ற விசாரணையெல்லாம் என்னவாகும் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன், சபேசன்###, தெனாலி.... உங்கள் விருப்ப்படி, MS வெற்றிபெற்று விட்டார்... அடுத்த கட்டமாக...அவர் தமிழர்களுக்கு என்ன செய்வார் என்று உங்களது முதிர்ச்சியான அரசியல் அறிவை வைத்து எதிர்வு கூறுகிறீர்கள்...உங்கள் மட்டுக்கு எமக்கு அறிவில்லாத்து என்றாலும், எனது சிற்றறிவின்படி... மகிந்த கோஷ்டிக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை... கருணா வகையாறாக்களும் மாட்டப்போவதில்லை...ஏனெனில் அவர்கள் ரணில் காலத்தில் இயக்கத்தை உடைத்தவர்கள் அதனால் ரணில் ஒன்றும் செய்யப்போவதில்லை. மேலே உள்ள இசையின் கருத்துப்படி இது சிங்கள ஆளும் வர்க்கத்தின், தமிழருக்கான மேற்குலகின் ஆதரவுடன் தளத்தை உடைப்பதற்கான, ஒரு திட்டமாக கூடி இருக்கலாம். எதுவாக இருந்தாலும், இந்த ஆட்சி மாற்றம் தமிழருக்கு பயன்படாதபட்சத்தில் சம்பந்தர், அப்பர் தரவழிகளை தமிழர்கள் ஒன்றாகத்துடைத்தெறிவார்கள்... அப்போது இதைப்பற்றி நீங்கள் விவாதிக்க ஆயத்தமாக இருங்கள் ...எனது prediction பிழை என்றால் நான் மன்னிப்பு கேற்க தயங்க மாட்டேன்

மைத்ரி தமிழருக்கு ஏதோ செய்வார் என்று நான் எப்போது சொன்னேன்? நாட்டில் விலைவாசி தாறுமாறாக உள்ளது. அதற்கு காரணம், வரிவிதிப்பு. அதை சீர் செய்வார் என நம்புகிறேன்.

தொட்டதற்கெல்லாம் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அது குறையும் என நம்புகிறேன். பால் மா, பெற்ரோல் போன்ற பொருட்களுக்கு விலை குறைக்கப்பட வேண்டும். அதை செய்வார்கள் என நம்பியே பலர் மைத்ரிக்கு வாக்களித்தார்கள்.  நான் வாக்களித்த காரணமும் அதுவேதான். நம்பிக்கையை காப்பாற்றினால் சரி.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னக் கேள்வி,

மகிந்த அரசில ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் போரை நடத்தின 4 பேரில இருவர். மற்றைய இரண்டுபேரும் சரத்தும், மைத்திரியும். அவை இப்ப பதவியில அமரப் போயினம். அப்ப போர்க்குற்ற விசாரணை, மனித குலத்திற்கெதிரான குற்ற விசாரணையெல்லாம் என்னவாகும் ?

ஜனநாயகத்தில் இது எல்லாம் சகஜம்.....தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆயுதபடைகள் மூலம் கொலை செய்யலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை இலங்கை தேர்தல் அதிகாரி யாருக்கும் விலை போகாத மிக கடுமையான அதிகாரியாய் இருந்தபடியால் தான் எதிர்கட்சிகளுக்கு இந்த வெற்றி சாத்தியப்பட்டது........மகிந்தா சகோதரர்களுக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஈடுபட்டது போன்ற கில்மால் வேலைகளில் ஈடுபட முடியாமல் போனது ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri_Lankan_Presidential_Election_2015.pn

  • கருத்துக்கள உறவுகள்

Sri_Lankan_Presidential_Election_2015.pn

வாவ்!
கூட்டமைப்பு கூத்தாடுது என்று சொன்ன போது யாரும் கேட்கவில்லை.
எதிரணி வேட்பாளரை யார் தெரிவு செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.
 
இந்த பலத்தை சுயநலத்தால் குப்பையில் போட்டிருக்கிறார்கள் கூத்தாடிகள்.
இவர்களுக்கு சரியான அடி ஒன்றை மக்கள் கொடுக்க வேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இனி மகிந்தா மாமா தன்னோட கையில வைச்சிருந்த வசிய தாயத்த வைச்சு இனி யார வசியம் பண்ணுவாரு?

ஒருவேளை அதை மகனுக்கே தந்தை வீட்டு சீதனமா கொடுப்பாரோ.......

  • கருத்துக்கள உறவுகள்

Sri_Lankan_Presidential_Election_2015.pn

சிறுபான்மை மக்கள் மகிந்தவை எதிர்த்ததற்கு நல்ல அடையாளம்.. இந்தப்படம். அவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் மகிந்தவுக்கு எதிர்த்து வாக்கு போட்டிருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க அளவுக்கு சிங்கள மக்கள் மத்தியில்.. மகிந்த இன்னும் செல்வாக்கோடு தான் இருக்கிறார். ஐ தே கட்சியின் வாக்கு வங்கி.. சுதந்திரக் கட்சி (சந்திரிக்கா பிரிவு) வாக்கு வங்கி.. ஜே வி பி வாக்கு வங்கி.. இதர சிங்கள இனவாதக் கட்சிகளின் வாக்கு வங்கிக்கு மத்தியிலும் மகிந்த சிங்களவர்களிடம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். சிறுபான்மை மக்களின் எதிர்ப்பை தக்க வைச்சதே மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி உள்ளது. வடக்குக் கிழக்கு வெளியிலும் சிறுபான்மை மக்கள் மகிந்தவை எதிர்த்தே வாக்களித்துள்ளனர். இது கூட்டமைப்பினருக்கும் ஒரு செய்தியை தெளிவாகச் சொல்லி உள்ளது. சிறுபான்மை மக்கள் சம்பந்தனின்.. ஹக்கீமின்.. குரலுக்கு அல்ல.. தமக்குள் எழுந்திருந்த மகிந்த எதிர்ப்புணர்வுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இனி மகிந்தா மாமா தன்னோட கையில வைச்சிருந்த வசிய தாயத்த வைச்சு இனி யார வசியம் பண்ணுவாரு?

ஒருவேளை அதை மகனுக்கே தந்தை வீட்டு சீதனமா கொடுப்பாரோ.......

போர்க்குற்றவாளி என்றதில் இருந்து தப்ப வைச்சிட்டே.. அதுபோதும்.. அதுக்குத்தான் அந்த தாயத்து. மற்றும்படி 10 வருடம் அவர் ஆட்சியில் இருந்திட்டார். மேலதிகமாக இருக்க ஆசைப்பட்டார் முடியல்ல. அது அவருக்கு ஒரு இழப்பே அல்ல.இழப்பு எங்களுக்கு தான்.

அமெரிக்கா பெரிய துரை இன்று மைத்திரியோடு சேர்ந்து பயணிக்க தயாராம். மனித உரிமைகள் முன்னேற்றம் என்று பசப்பியே.. கிடப்பில போகப் போகுது.. போர்க்குற்ற விசாரணை.. அல்லது அது உள்ளக விசாரணையாக்கப்பட்டு.. எல்லோரும் மன்னிப்போம்... மறப்போம் என்று கூக்குரல் எழுப்ப.. முள்ளிவாய்க்கால் அந்தப் புழுதியில் செம்மணி போல புதைந்து போகும்.

இந்தச் சவாலை சமாளிப்பது என்பது பற்றி தான் தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டி உள்ளது. மகிந்தவின் தாயத்து அவரை காப்பாற்றிக் கொண்டு தான் இருக்குது. :(:rolleyes::icon_idea:

இப்படியே  மாறி மாறி  விழுந்த  பாட்டுக்கு  குறியை  வைத்து நாங்கள்  இப்பவும் இணைய  போராளிகள்  என்று சொல்லிட்டு  இருக்க  வேண்டியது தான்  :D

ஈழ மக்கள் தெளிவா இருக்கிறாகள் தங்களுக்கு  என்ன இப்ப  வேணும்  என்பதில் அது போதும்  :)

இப்பவே அறிக்கை விட்டிட்டார் இலங்கை சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து தான் விலக போவதில்லை என்று....

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே  மாறி மாறி  விழுந்த  பாட்டுக்கு  குறியை  வைத்து நாங்கள்  இப்பவும் இணைய  போராளிகள்  என்று சொல்லிட்டு  இருக்க  வேண்டியது தான்  :D

ஈழ மக்கள் தெளிவா இருக்கிறாகள் தங்களுக்கு  என்ன இப்ப  வேணும்  என்பதில் அது போதும்  :)

அப்படி என்னத்தை அண்ணே.. மைத்திரி மகிந்தவை விட ஈழ மக்களுக்கு தாரனுன்னு சொல்லிட்டார்..??! நீங்க ஸ்ரெடியா தானே இருக்கீங்க..????! மப்பில இல்லையே..!!!!

சிறுபான்மை மக்கள் அங்க ஒன்றையும் எதிர்பார்க்கல்ல. மகிந்தவை வீட்ட அனுப்பனும்.. என்பது தான் அவர்களின் தீர்ப்பு. அதற்கு முடிவு வந்தாச்சு. அதனை தொடர்ந்து எழ உள்ள பிரச்சனைகளை சமாளிக்கிறதுக்கு மக்களால் முடியாது. அவர்கள் நம்பி இருப்பது அவர்களைச் சுற்றி உள்ளவர்களை தான்..! நீங்க என்னடான்னா.. தெளிவு.. நெழிவு என்று கொண்டு.. நிற்கிறீங்கண்ணே. அதென்ன அண்ணே தெளிவு.. அதை ஒருக்காச் சொன்னா நல்லா இருக்கும். :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

போங்கப்பு போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க. உங்கள் தனிநாட்டுக் கூப்பாட்டுக்கு வடகிழக்கு வாழ் மக்கள் அடித்திருக்கும் இரண்டாவது தேர்தல்சாவுமணி இது. மக்கள் கூட்டமைப்புச் சொல்கியிராவிடினும் இப்படித்தான் வாக்களித்திருப்பார்கள்.

நம் எல்லோரையும் விட தெளிவாய் இருக்கிறார்கள் அவர்கள்.

மைத்திரி வெண்டால் பாலும் தேனும் ஓடும் என்று யாரும் சொல்லவில்ல ராகா. தமிழர்க்கு தீர்வு வரும் என்றும் கூட்டமைப்புக் கூட சொல்லவில்லை. தமிழ் மக்களுக்கு மகிந்தவின் கீழ் இருந்ததை விட நிலமை கொஞ்சம் நல்லா இருக்கும் எண்டு தான் சொன்னேன்.

குறைந்த பட்சம் கூட்டமைப்போடு ஒத்துழைக்கவாவது விரும்புவார் மைத்திரி. அவ்வளவே. ஒரு தேர்தலில் 2000 வருட பிரச்சினை தீரும் என்று சொல்லும் அளவுக்கு இங்கே நீங்கள் கேள்வி கேட்ட ஆக்கள் பாமரர்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாட்டுக்கு எதிராக மக்கள் வாக்களிக்கவில்லை. மகிந்தவுக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்கை தனிநாட்டுக்கு எதிராக என்று கோச்சான் போன்றவர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரம் தான் ஏன்..????! இந்த நாசகார பிரச்சார நடவடிக்கைகளால் தான் இவர்களின் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கப்படுகிறது.

மக்கள் தனிநாடு வேண்டுமா வேண்டாமா என்ற தேர்தலில் வாக்களிக்கல்ல. மகிந்த வேண்டுமா.. மைத்திரி வேண்டுமா என்ற தேர்தலில் தான் வாக்களித்துள்ளனர். இதில் யாருமே தனிநாட்டை தருவம்.. இராணுவத்தை அகற்றுவம் என்று சொல்லேல்ல.  மக்களுக்கு இருந்த தெரிவு.. 2009 க்கு பின்.. மகிந்தவை வெளியேற்றுவது. அதற்கு வாக்களித்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை தங்கள் எதிர்ப்பை உலகிற்கு பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் மனங்களில் மகிந்த ஏதோ மாறாத கொடூரத்தை இழைத்துள்ளார்.. அது இதர சிறுபான்மை இன மக்களாலும் தமக்கும் என்று உணரப்பட்டுள்ளது.. என்ற செய்தியை இந்த தேர்தல் உலகிற்கு மீண்டும் ஒருமுறை சொல்லி உள்ளது.

இதனை தனிநாட்டுக்கு எதிரான வாக்களிப்பு என்று காட்டுவது.. கூட்டமைப்பில் சம்பந்தருக்கு ஆதரவான வாக்களிப்பு என்று காட்டுவது சந்தர்ப்பவாதமாகும். தனிநாட்டுக்கான வாக்களிப்பை தானே மக்கள் ஐநா மன்றத்தின் மத்தியஸ்தத்தோடு கோரிகிறார்கள். அதை வைச்சிட்டு.. மக்களின் தீர்ப்பை பெற்றிட்டு.. அதைப் பற்றி பேசலாமே. இப்ப ஏன் ஆட்டுக்குள் மாட்டை செருகி சந்தோசிக்க முற்படுகிறார்கள்..????!!! :):icon_idea:

அப்படி என்னத்தை அண்ணே.. மைத்திரி மகிந்தவை விட ஈழ மக்களுக்கு தாரனுன்னு சொல்லிட்டார்..??! நீங்க ஸ்ரெடியா தானே இருக்கீங்க..????! மப்பில இல்லையே..!!!!

சிறுபான்மை மக்கள் அங்க ஒன்றையும் எதிர்பார்க்கல்ல. மகிந்தவை வீட்ட அனுப்பனும்.. என்பது தான் அவர்களின் தீர்ப்பு. அதற்கு முடிவு வந்தாச்சு. அதனை தொடர்ந்து எழ உள்ள பிரச்சனைகளை சமாளிக்கிறதுக்கு மக்களால் முடியாது. அவர்கள் நம்பி இருப்பது அவர்களைச் சுற்றி உள்ளவர்களை தான்..! நீங்க என்னடான்னா.. தெளிவு.. நெழிவு என்று கொண்டு.. நிற்கிறீங்கண்ணே. அதென்ன அண்ணே தெளிவு.. அதை ஒருக்காச் சொன்னா நல்லா இருக்கும். :icon_idea::lol:

அதை  தான் நாங்களும்  சொன்னோம் கொஞ்சம் கேத்தபாயா பயம் அடங்கும் முன்னாள் போராளிகள் மனநிலை ஓரளவு ஆவது  தேறும் சுகந்திரமா ஒரு வேலை  செய்ய இறங்க பயப்பிடாமல் போவாங்க ,என்பதால்  தான்  ஆட்சி  மாற்றம் வேணும்  என்றோம் நீங்கதான்  எதோ  சம்மந்தன் துரோகி ..அனந்தி  அக்கா அடுத்த ஈழ தலைவி என்பது போல எல்லாம் பில்டாப்  விட்டியல் ,தங்களுக்கு  இப்ப  மப்பு  தெளிச்சிருக்கும் இல்லையா  :D

எனத்த  நாங்க இங்க இருத்து  புடுங்கிறது  எல்லாம்  தேவையில்லா  ஆணி அண்ணே ,சனம் தேவையான ஆணியை அங்க  பலமா  அடிக்குது  அது போதும் நாம கீபோட்டில் தட்டுவம் இருந்து  :D

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி வெண்டால் பாலும் தேனும் ஓடும் என்று யாரும் சொல்லவில்ல ராகா. தமிழர்க்கு தீர்வு வரும் என்றும் கூட்டமைப்புக் கூட சொல்லவில்லை. தமிழ் மக்களுக்கு மகிந்தவின் கீழ் இருந்ததை விட நிலமை கொஞ்சம் நல்லா இருக்கும் எண்டு தான் சொன்னேன்.

குறைந்த பட்சம் கூட்டமைப்போடு ஒத்துழைக்கவாவது விரும்புவார் மைத்திரி. அவ்வளவே. ஒரு தேர்தலில் 2000 வருட பிரச்சினை தீரும் என்று சொல்லும் அளவுக்கு இங்கே நீங்கள் கேள்வி கேட்ட ஆக்கள் பாமரர்கள் இல்லை.

Edited by சுவைப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

போங்கப்பு போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க. உங்கள் தனிநாட்டுக் கூப்பாட்டுக்கு வடகிழக்கு வாழ் மக்கள் அடித்திருக்கும் இரண்டாவது தேர்தல்சாவுமணி இது. மக்கள் கூட்டமைப்புச் சொல்கியிராவிடினும் இப்படித்தான் வாக்களித்திருப்பார்கள்.

நம் எல்லோரையும் விட தெளிவாய் இருக்கிறார்கள் அவர்கள்.

மைத்திரி வெண்டால் பாலும் தேனும் ஓடும் என்று யாரும் சொல்லவில்ல ராகா. தமிழர்க்கு தீர்வு வரும் என்றும் கூட்டமைப்புக் கூட சொல்லவில்லை. தமிழ் மக்களுக்கு மகிந்தவின் கீழ் இருந்ததை விட நிலமை கொஞ்சம் நல்லா இருக்கும் எண்டு தான் சொன்னேன்.

குறைந்த பட்சம் கூட்டமைப்போடு ஒத்துழைக்கவாவது விரும்புவார் மைத்திரி. அவ்வளவே. ஒரு தேர்தலில் 2000 வருட பிரச்சினை தீரும் என்று சொல்லும் அளவுக்கு இங்கே நீங்கள் கேள்வி கேட்ட ஆக்கள் பாமரர்கள் இல்லை.

கோஷான்,

எனக்குப் புரியவில்லை. அதனால் கேட்கிறேன், இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் தனிநாட்டிற்காகன சாவு மணியை அடித்துவிட்டார்கள் என்று சொன்னீர்கள், இந்தத் தேர்தல் தனியீழம் உங்களுக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அறிவதற்காக நடத்தப்பட்டதா? மகிந்தவைத் தோற்கடித்ததன் மூலம் ஈழத்திற்கான சாவுமணி அடிக்கப்பட்டதென்றால், மகிந்த தமிழர்களுக்கு ஈழம் தரப்போகிறேன் என்று சொல்லியிருந்தாரா? அல்லது மைத்திரி தனியீழம் என்பது ஒருபோதுமே சாத்தியப்படாது, நான் தரவும் மாட்டேன், ஆகவே தமிழர்கள் எனக்கு வாக்குப் போடுங்கள் என்று கேட்டிருந்தாரா? 

சரி அதை விடுங்கள்,

இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது அவர்கள் மகிந்த எனும் பெயரில் இருந்துகொண்டு தமது சொந்தங்களை அரக்கத்தனமாக அழித்து மமதையில் வெறிகொண்டு ஆடிய ஒரு அரக்கனை வீழ்த்தியிருக்கிறார்கள். இது சம்பந்தர் சொன்னால் என்ன சொல்லாவிட்டாலென்ன நடந்திருக்கும். ஆக சம்பந்தர் தெருத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு அடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பல சிங்கள உடகங்களே வோட்டிங் மப் எனப்படும் பிரதேச வாரியாக மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் விழுந்துள்ள வாக்குகளை வைத்துப் பார்த்து அதில் வடக்குக் கிழக்கு இணைந்த பகுதிகள் முழுமையாக மகிந்தவைப் புறக்கணித்து மைத்திரியை தேர்வு செய்ததையும், அதேபோல தெற்கின் கரையோரப் பகுதிகள் முதல் பெரும்பாலான தெற்கு மக்கள் மகிந்தவைத் தேர்வு செய்ததையும் ஒப்பிட்டுக் காட்டி, நாடு இரு துருவங்களாகப் பிரிந்து இருப்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். தேவையென்றால், பல இணையத் தளங்களில் வோட்டிங் மப் எனப்படும் வரைப்படத்தைப் போட்டிருக்கிறார்கள், அதைப் பாருங்கள்.

தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைது கொள்வதற்கோ அல்லது தாமும் இலங்கையர்தான் என்று நம்புமளவிற்கோ இந்தத் தேர்தலில் அப்படியொன்றும் நடந்துவிட்டதாக நினைக்கவில்லை. மாறாக 2009 இல் நடந்த இனக்கொலைக்கான வக்கிரத்தை மகிந்தமீது தமிழர்கள் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் ஆத்திரம்தான் இந்தத் தேர்தல் முடிவுகள். சம்பந்தர் அதன்மேல் சவாரி செய்து இருக்கிறார்.

இனி மைத்திரி என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்கலாம். நீங்கள் சொன்னமாதிரி சம்பந்தருடன் செய்துகொள்ள்ப்பட்ட எழுதப்படாத  ஒப்பந்தங்களை வெளியே கொண்டுவந்து ஏதாவது செய்வாரா அல்லது மற்றைய சிங்கள தலைவர்கள் போல சிங்களவர்கள் மரம் மற்றையவர்கள் கொடி என்று சொல்லப்போகிறாறா அல்லது வட்டமேசைக்கு வாருங்கள் சதுர மேசைக்கு வாருங்கள் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வாருங்கள் என்று சம்பந்தரை தள்ளாத வயதிலும் அலைக்கழிக்கிறாரா என்று பார்க்கலாம்.

எது எப்படியாயினும், எமது சொந்தங்களை 2009 இல் அழித்த மகிந்த என்னும் அரக்கன் அகற்றப்பட்டதில் மகிழ்ச்சியே. என்னைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் நடந்த ஒரே நல்ல விடயம் அது மட்டும்தான். மற்றும்படி எதுவுமே மாறிவிடும் என்று நான் சிறிதளவேனும் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய கதையைப் பார்த்தால் ஏதோ மகிந்தா மட்டும் தமிழரை அழித்தது போலவும்,மைத்திரியோ,மற்றவர்களோ ஒன்றும் தெரியாத அப்பாவிகள் என்பது போல அல்லவா இருக்குது:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.