Jump to content

மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்

ஆதவன்

7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c51.jp

பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன?

பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம்.

500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதே இங்கு முதன்மையானது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது.

மூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும்.

7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c53.jp

எத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும்.

இந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன.

மூனாவின் ஓவியங்கள் பொங்குதமிழின் முகங்களில் ஒன்று.

7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c54.jp

2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை.

நண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது.

'மூனா என்பவரை தெரியுமா? அவருடன் அறிமுகம் உண்டா' என்று பேச்சுவாக்கில் கேட்டேன்.

'அவர் எனது நண்பர்தான், கேட்டுப் பார்க்கிறேன்' என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை.

ஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன.

அவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார்.

நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு.

தவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை.

அவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம்.

பொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறித்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன்.

உண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது.

மூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும்.

வாழ்த்துக்களும் வணக்கமும்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c5

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 8 years later...
  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம் என்னும் “மூனா”வைப் பற்றி…  ஆதவன் எழுதிய கட்டுரையை 2015’ம் ஆண்டு கிருபன், “வேரும் விழுதும்” பகுதியில் இணைத்த போதும்…. எவரும் கருத்து எழுதப் படாமலே அந்தத் தலைப்பு பின்னோக்கி போய் விட்டது பெரும் சோகம்.

“மூனா” என்பவர் தான்… கவி அருணாச்சலம் என்று பலருக்கும் தெரிந்திராத காரணத்தால் அந்தத் தலைப்பில் எவரும் கருத்து எழுதவில்லை என நினைக்கின்றேன்.

கவி அருணாசலத்தை நேரில் சந்தித்தவன் என்ற வகையில்… ஆதவன் கூறிய அத்தனையும் உண்மை.

நிறைகுடம் தழும்பாது என்ற மாதிரி… பல விடயங்களில் அவருக்கு ஆற்றல் இருந்தும் தனது கருத்தை மட்டும் கூறிவிட்டு அமைதியாகி விடுவார். 

ஒரு கலைஞனை… அதுகும் யாழ். களத்தில் தொடர்ந்து கருத்தோவியங்கள் வரையும் நமது உறவை… பாராட்டி ஊக்கப் படுத்துவது நமது கடமை. 

இந்தப் பதிவை மீட்டு எடுத்துத் தந்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, தமிழ் சிறி said:

கவி அருணாசலம் என்னும் “மூனா”வைப் பற்றி…  ஆதவன் எழுதிய கட்டுரையை 2015’ம் ஆண்டு கிருபன், “வேரும் விழுதும்” பகுதியில் இணைத்த போதும்…. எவரும் கருத்து எழுதப் படாமலே அந்தத் தலைப்பு பின்னோக்கி போய் விட்டது பெரும் சோகம்.

“மூனா” என்பவர் தான்… கவி அருணாச்சலம் என்று பலருக்கும் தெரிந்திராத காரணத்தால் அந்தத் தலைப்பில் எவரும் கருத்து எழுதவில்லை என நினைக்கின்றேன்.

கவி அருணாசலத்தை நேரில் சந்தித்தவன் என்ற வகையில்… ஆதவன் கூறிய அத்தனையும் உண்மை.

நிறைகுடம் தழும்பாது என்ற மாதிரி… பல விடயங்களில் அவருக்கு ஆற்றல் இருந்தும் தனது கருத்தை மட்டும் கூறிவிட்டு அமைதியாகி விடுவார். 

ஒரு கலைஞனை… அதுகும் யாழ். களத்தில் தொடர்ந்து கருத்தோவியங்கள் வரையும் நமது உறவை… பாராட்டி ஊக்கப் படுத்துவது நமது கடமை. 

இந்தப் பதிவை மீட்டு எடுத்துத் தந்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.

மூனாவை அடையாளங்க் காட்டியமைக்கு மிக்க நன்றி.

அன்னாரின் சேவை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்... 

எம்மவர்களில் கருத்தோவியங்கள் வரைபவர்கள் அருகிவிட்டனர்... இவர் போன்ற ஒருசிலரே இன்னமும் அப்பணியைச் செவ்வன செய்துகொண்டு உள்ளனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2023 at 21:18, தமிழ் சிறி said:

கவி அருணாசலம் என்னும் “மூனா”வைப் பற்றி…  ஆதவன் எழுதிய கட்டுரையை 2015’ம் ஆண்டு கிருபன், “வேரும் விழுதும்” பகுதியில் இணைத்த போதும்…. எவரும் கருத்து எழுதப் படாமலே அந்தத் தலைப்பு பின்னோக்கி போய் விட்டது பெரும் சோகம்.

“மூனா” என்பவர் தான்… கவி அருணாச்சலம் என்று பலருக்கும் தெரிந்திராத காரணத்தால் அந்தத் தலைப்பில் எவரும் கருத்து எழுதவில்லை என நினைக்கின்றேன்.

கவி அருணாசலத்தை நேரில் சந்தித்தவன் என்ற வகையில்… ஆதவன் கூறிய அத்தனையும் உண்மை.

நிறைகுடம் தழும்பாது என்ற மாதிரி… பல விடயங்களில் அவருக்கு ஆற்றல் இருந்தும் தனது கருத்தை மட்டும் கூறிவிட்டு அமைதியாகி விடுவார். 

ஒரு கலைஞனை… அதுகும் யாழ். களத்தில் தொடர்ந்து கருத்தோவியங்கள் வரையும் நமது உறவை… பாராட்டி ஊக்கப் படுத்துவது நமது கடமை. 

இந்தப் பதிவை மீட்டு எடுத்துத் தந்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.

யாழ்களத்தில் வெறும் உப்பு சப்பற்ற அமளி துமளியால் நல்ல தகவல்களும் விடயங்களும் காணாமலே ஆக்கப்படுகின்றன. திரிகளின் பக்கங்களை உயர்த்தி சுய இனபம் காண்பதை விட இப்படியான திறமையாளர்களுக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு போகலாம்.

என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்....🤣
அண்மையில் கவி அருணாச்சலம் அவர்கள் ஒரு புத்தகம் அனுப்பியிருந்தார். வாசித்தேன்....ஆனால் அவருக்கு இன்னும் நன்றி சொல்லவில்லை. (பழக்க தோசம்) 😄
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது ஓவியங்களை பாத்திட்டு அப்பவும் நான் நினைச்சன் இவர் யாழில் மட்டும் சும்மா கீறிவிட்டு போற ஆள் இல்லை இவர் இதில் பலவருட அனுபவமுள்ள தொழில் நேர்த்தியான கலைஞராக இருக்கவேண்டும் என்று.. நான் நினைச்சது சரிதான்.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜயா.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூனா என்ற கவி அருணாசலம் ஐயாவிற்கு நன்றியும் வாழ்த்துகளும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியர்  கவி அருணாசலம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரிதாகுக.   உங்கள் திறமையை  எங்களின் இளம்  சமூகத்துக்கு கற்றுக் கொடுங்கள்   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2023 at 20:18, தமிழ் சிறி said:

கவி அருணாசலம் என்னும் “மூனா”வைப் பற்றி…  ஆதவன் எழுதிய கட்டுரையை 2015’ம் ஆண்டு கிருபன், “வேரும் விழுதும்” பகுதியில் இணைத்த போதும்…. எவரும் கருத்து எழுதப் படாமலே அந்தத் தலைப்பு பின்னோக்கி போய் விட்டது பெரும் சோகம்.

இப்படிப் பல இணைப்புக்கள் கிடப்பில் போய் இருக்கின்றன!

மூனா அண்ணாவின் ஓவியங்கள் மட்டுமல்ல, பல கட்டுரைகள், அனுபவக் குறிப்புக்களை எல்லாம் முன்னர் இணைத்திருந்தேன். அதனால்தான் என்னவோ, அவரே யாழ் இணையத்தில் வெவ்வேறு பெயர்களில் இணைந்து ஓவியங்களையும், கதைகளையும் பதிந்து வருகின்றார்.😀

அவரது மூன்று நூல்களையும் அனுப்பியிருந்தார். கிறுக்கல்களின் வண்ண அச்சுக்கு அதிகம் செலவாகியிருக்கும் என நினைக்கின்றேன்.

  • மூனாவின் கிறுக்கல்கள்
  • மறந்து போக மறுக்கும் மனசு
  • நெஞ்சில் நின்றவை

இன்னொரு பகிடி என்னவென்றால், யாழ் இணையத்தில் சின்னக்குட்டி என்ற உறவையும், அவர் பல பெயர்களில் உறுப்பினராக இருந்தவர்,  என்னையும் ஒருவர் என்று நினைத்திருந்தார்! நான் சின்னக்குட்டியை விட சின்னப்பொடியன் என்று நிரூபிக்கவேண்டியதாகப் போய்விட்டது.

இப்போதைய எனது யாழ் கள அவதார் படமும் மூனா என்ற கவி அருணாசலம் அண்ணாவின் கைவண்ணம்தான்!  மிகவும் பெருமையாகவே உணர்ந்தேன்😀 நன்றி மூனா அண்ணா🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை யார் என்று தெரியாமல் சில சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றேன்
பேசியதில்லை .
இனிமேல் சந்தித்தால் கட்டாயம் கதைப்பேன்
விக்கியில் பார்த்து அவரது திறமைகளை அறிய வேண்டியிருந்தது கவலை .
வாழ்க வளமுடன் அண்ணா 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூனா என்று கட்டுரை தொடங்கியதும் ஏதோ முஸ்லிம் பற்றித் தான் என்று எண்ணி விட்டிருப்பேன்.

உங்கள் சேவைக்கும் திறமைக்கும் பாராட்டுக்கள் @Kavi arunasalam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

220px-Muunaa1.jpg

மூனாவைப் பற்றி  விக்கிப்பீடியாவில்.....

animiertes-hand-bild-0081.gif  https://ta.wikipedia.org/wiki/மூனா  animiertes-hand-bild-0084.gif

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மூனாதான் கவி.அருணாசலம் என்பதை இப்போதுதான் அறிகின்றேன்......ஐயா உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்......!

எந்தவித அறிமுகம் இல்லாதபோதும் இந்த யாழ் இணைய உறவுக்காக உங்களது துரிகையால் நான் எழுதிய இரண்டு கவிதைகளுக்கு இரண்டு ஓவியம் வரைந்து தந்தீர்களே அது யான் பெற்ற பெரும் பேறு ........நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக நீடுழி வாழவேண்டும் .........!  💐

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. பார்ப்பாரற்று எங்கோ இருந்தமூனா என்னும் தோழமைக் கரம்பதிவை மீண்டும் கொண்டு வந்த மோகனுக்கு நன்றி.

இங்கே தங்கள் கருத்துக்களை பதிவிட்ட அனைவருக்கும் எனது நன்றியை ஒட்டு மொத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூனாவின் கிறுக்கல்கள்புத்தகத்துக்கு அதிகம் செலவாகி இருக்கும் என கிருபன் கேட்டிருந்தார். உண்மை. ஒரு பதிவாக இருக்கட்டுமே என்றுதான் அதை வெளியிட்டேன். (அதற்கும் ஒரு கதை இருக்கிறது)

 

புத்தகத்தை பார்க்க விரும்பினால் இந்தப் பக்கத்தில் pdf வடிவத்தில் இருக்கிறது.

https://noolaham.net/project/711/71035/71035.pdf

மீண்டும் ஒரு தடவை அனைவருக்கும் நன்றி.

  • Like 3
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.