Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு உற்பத்திகளுக்கு வெளிநாட்டில் சந்தைவாய்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

d1af3c24df8816335daa3ba1eb22f884.png

வடக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் கேள்வியினை அதிகரிக்கும் நோக்குடன் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார்.

 
இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் மன்றத்தின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உற்பத்திப்பொருட்களுக்கான சர்வதேச சந்தைவாய்ப்பு என்ற தொனிப்பொருளில் ஏற்றுமதியாளர்களுக்கும் வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது. 
 
இதற்கான நிகழ்வுகள் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
photo-5.png
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
ஏற்றுமதியாளர்களையும் வடக்கு மாகாணத்தில் உள்ள உற்பத்தியாளர்களையும் நேரடியாக சந்திப்பதற்கான நல்ல சந்தர்ப்பமாக அமைகின்றது. இதனால் மிகவும் நன்மையடையப் போகின்றவர்கள் எமது உற்பத்தியாளர்களே.
 
தென்னிலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களில்  ஏழு நிறுவனங்கள் இங்கு வருகை தந்துள்ளனர். 
 
குறித்த நிறுவனங்கள் தெங்கு உற்பத்திப் பொருட்கள், பனை உற்பத்திப்பொருட்கள், சேதனவிவசாயம், உணவு வகைகள் , பழவகைகள் என்பனவற்றை இலங்கையில் உள்ள உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
 
எனினும் வெளிநாடுகளில் உள்ள வடக்கு மாகாண மக்கள் தங்களுடைய சொந்த இடங்களில் உண்ட உணவுப்பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை விரும்பி கொள்வனவு செய்கின்றனர்.
 
எனினும் தென்னிலங்கையில் இருந்தே இதுவரை பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. எனினும் வடக்கு மாகாணத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 
 
இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணத்தில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
photo-3-(1).png
அதற்கமைய இன்றைய கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது. எனவே வடக்கு மாகாணத்தில் குடிசைக் கைத்தொழிலை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய அளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய உற்பத்தியினை வழங்கினால் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய நிலை ஏற்படும்.
 
எனவே இங்குள்ள உற்பத்தியாளர்கள் சந்தர்ப்பத்தை வாய்ப்பாக பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தில் மேலும் உயர்வடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 
மேலும் இங்கிருந்து செல்லும் ஏற்றுமதிப் பொருட்கள் அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கையானதாகவும் அதிக கேள்விக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
 
எனவே தரமான தரமான உற்பத்திகளை மேற்கொள்ளுஙகள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, குறித்த ஏற்றுமதி நிறுவனங்கள்  தங்களுடைய ஏற்றுமதி பற்றியும், கொள்வனவு செய்யும் பொருட்கள் பற்றியும் தெளிவு படுத்தினர்.
 
photo-2-(1).png
 
 
அதேபோல கலந்து கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட உற்பத்தியாளர்களும் தங்களது உற்பத்திகள் குறித்தும் தெரிவித்திருந்தனர். 

http://onlineuthayan.com/News_More.php?id=259093830024136166

  • Replies 75
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  முயற்சி

அவசரமாக செய்யவேண்டிய  பணி...

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஊரில் இருந்த காலத்தில்,
"புல்டோ" என்ற பெயரில் ஒரு இனிப்பு விற்பனையில் இருந்தது, இப்போது.... அதனைக் காணவில்லை. காரணம் கேட்ட போது.... அதன் தயாரிப்பாளர் இறந்து விட்டதாகவும், அதன் செய்முறை யாருக்கும் தெரியாததால், அதனைப் போன்ற சுவையுடன் மற்றவர்களால் தயாரிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

product of Northern Lanka என அச்சிட்டிருந்தால் மட்டுமே நான் வாங்குவேன்.....I love northern Lanka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஊரில் இருந்த காலத்தில்,

"புல்டோ" என்ற பெயரில் ஒரு இனிப்பு விற்பனையில் இருந்தது, இப்போது.... அதனைக் காணவில்லை. காரணம் கேட்ட போது.... அதன் தயாரிப்பாளர் இறந்து விட்டதாகவும், அதன் செய்முறை யாருக்கும் தெரியாததால், அதனைப் போன்ற சுவையுடன் மற்றவர்களால் தயாரிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

அதன் தயாரிப்பாளருக்கு பெயர் குணசிறி

நாம் ஊரில் இருந்த காலத்தில்,

"புல்டோ" என்ற பெயரில் ஒரு இனிப்பு விற்பனையில் இருந்தது, இப்போது.... அதனைக் காணவில்லை. காரணம் கேட்ட போது.... அதன் தயாரிப்பாளர் இறந்து விட்டதாகவும், அதன் செய்முறை யாருக்கும் தெரியாததால், அதனைப் போன்ற சுவையுடன் மற்றவர்களால் தயாரிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

 

குணசிறி புல்டோ?!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

அதன் தயாரிப்பாளருக்கு பெயர் குணசிறி

 

அதன் தயாரிப்பாளருக்கு பெயர் குணசிறி

 

அப்போ... தயாரிப்பாளர் இறக்கவில்லை,

புலம் பெயர்ந்து, ஜேர்மனியில் வசிக்கிறார் போலுள்ளது. :D 

(சும்மா... பகிடிக்கு) :lol:

குணசிறி புல்டோ விளம்பரம் முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் விளம்பரங்களில் ஒன்று. இலங்கை வானொலியின் வர்த்தக சேவை நிகழ்ச்சிகள் பலவும் விளம்பரங்கள் பலவும் இன்னும் பசுமையாக நினவில் உள்ளதால், குணசிறி புல்டோவும் ஞாபகத்தில் உள்ளது.  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ... தயாரிப்பாளர் இறக்கவில்லை,

புலம் பெயர்ந்து, ஜேர்மனியில் வசிக்கிறார் போலுள்ளது. :D 

(சும்மா... பகிடிக்கு) :lol:

 

 

அடப்பாவி

இதிலும் வியாபார யுக்தியா?? :D

(சும்மா... பகிடிக்கு)  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  முயற்சி

அவசரமாக செய்யவேண்டிய  பணி...

 

இறக்குமதியாளர்களுடன் தொடர்பு கொண்டு பாக்கலமே.

  • கருத்துக்கள உறவுகள்

இறக்குமதியாளர்களுடன் தொடர்பு கொண்டு பாக்கலமே.

 

 

தனிப்பட அன்றி

இது வடமாகாண சபையின் கூட்டுடன் செய்யப்படணும்

அப்போது தான் பொதுமக்கள் லாபமடையவர்

அல்லது  சில வியாபாரிகளின் கைகளில் போய்விடும்.

அது சரியன்று.

 

அவ்வாறு வடமாகாண சபையின் கூட்டுடன் செய்யப்படும் போது

லா சப்பலில் சில ஒழுங்குகளை  செய்யமுடியும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமை தமிழரைச் சாரும். அதுபோலவே சங்கம்வைத்துப் புகையிலை ஏற்றுமதி செய்த பெருமை வடமாகாண மக்களைச் சாரும். படுபாவிகள் புகைத்தல் உடலுக்குக்கேடு, புகைத்தல் உயிரைக் கொல்லும் என்றெல்லாம் பரப்புரை செய்து அந்த மக்களின் பொருளீட்டலுக்குப் பாடைகட்டிவிட்டனர்.  

 

img1100201013_1_1.jpg  

 

Tobacco-2-copy.jpg

product of Northern Lanka என அச்சிட்டிருந்தால் மட்டுமே நான் வாங்குவேன்.....I love northern Lanka

பாவம் கிழக்கு தமிழர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் சிக்கல் என்னவென்றால், பல வெளிநாட்டு சட்டங்களை மாற்ற வேண்டும். 'Made in Northern Sri Lanka',' NORTH, EAST Sri Lanka', 'Made by Tamils, but NOT ஒட்டுக்குழு' என்றெல்லாம் போட வழியில்லை.

 

கோதாரி வெளிநாடுகளின் சட்டதிட்டங்கள் COO (Country Of Origin) கேட்கின்றன.

 

நம்ம ருத்திரகுமாரனின் நாடு இலங்கைக்குள் வந்தால்தான் இது சாத்தியம். அப்படியும் நமக்கு வேண்டாத ஆட்களும் அதற்குள் இருக்கலாம்.

 

பேசாமல் இலங்கை பொருட்களை புறக்கணிப்பது என்ற நமது பொலிசியை வைத்திருப்பதே மேல். இப்போது வெளிநாடுகளில் எமது எதிர்ப்பால் இலங்கை தயாரிப்பு பொருட்கள் ஏதும் இல்லை அல்லவா? அதையே தொடருவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடைப்புக்குறியினுள் போடலாம் Made in Sri Lanka (North & East)

  • கருத்துக்கள உறவுகள்

இதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது....
காரணம் தமிழனின் குணம் நன்றாக தெரிந்ததால்.

மேலும் எழுதி பல எதிர் கருத்துகளை சந்தித்து நேரத்தை விரயம் ஆக்க முடியுமே தவிர உண்மை நிலை பற்றி பேச முடியாது.

வடமாகணத்தில் பெரும்பான்மை மக்கள் தேர்தலை புறக்கணித்தார்கள் ஆனால் மக்கள் சொன்னார்கள் கூட்டமைப்பு நடக்கிறது என்ற புளுகு மூட்டையில்தான் யாழ்களம் பயணிக்கிறது.

லைக்கா நிறுவனர்கள் போல் யாரோ ஒரு சிலர் வயிறு வளர்க்க இது பேருதவி புரியும்.
உற்பத்தியாளர்கள் விலை வீழ்ச்சி அடையும்.
இப்போ ஒரு வாழை பழத்தில் ஒரு ரூபா லாபம் என்றால்..... இந்த திட்டம் நிறைவேறும்போது 1 ரூபா லாபம் பெற 3 வாழை பழம் உற்பத்தி செய்ய வேண்டிய போட்டி நிலை மட்டுமே உள்ளூரில் உருவாகும்.
ஆக சுற்றி வளைத்து அவர்கள் மூக்கை தொடுவார்கள்.....
வடக்கு வாழை பழம் என்று இங்கும் நல்ல விற்பனை போகும்.
பணம் மட்டும் ஓரிடத்தில் குவியும்.

நல்ல சிந்தனைகளுக்கு தமிழனுக்கு அலர்ஜ்ஜி அதற்கு முதலில் மருந்து செய்யவேண்டும்.

 


உலகம் போட விட்டாலும் இவர்கள் விட மாட்டார்கள்.
  made in notheast  என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடைப்புக்குறியினுள் போடலாம் Made in Sri Lanka (North & East)

நீங்கள் வசிக்கும் நாட்டு இறக்குமதி சட்டங்களில் அது அனுமதிக்கப்படுகிறதா என்பதை தயவு செய்வு விசாரித்து சொல்லவும். சர்வதேச COO சட்டங்களில் அதற்கு அனுமதியில்லை என்று படித்திருக்கிறேன். நான் படித்தது 1991-ல் UBC-யில். இப்போது மாறியிருக்கலாம். பார்த்துச் சொல்லவும். இங்குள்ள தயாரிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்டில் அனுமதி உள்ளது என்று சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது....

காரணம் தமிழனின் குணம் நன்றாக தெரிந்ததால்.

மேலும் எழுதி பல எதிர் கருத்துகளை சந்தித்து நேரத்தை விரயம் ஆக்க முடியுமே தவிர உண்மை நிலை பற்றி பேச முடியாது.

வடமாகணத்தில் பெரும்பான்மை மக்கள் தேர்தலை புறக்கணித்தார்கள் ஆனால் மக்கள் சொன்னார்கள் கூட்டமைப்பு நடக்கிறது என்ற புளுகு மூட்டையில்தான் யாழ்களம் பயணிக்கிறது.

லைக்கா நிறுவனர்கள் போல் யாரோ ஒரு சிலர் வயிறு வளர்க்க இது பேருதவி புரியும்.

உற்பத்தியாளர்கள் விலை வீழ்ச்சி அடையும்.

இப்போ ஒரு வாழை பழத்தில் ஒரு ரூபா லாபம் என்றால்..... இந்த திட்டம் நிறைவேறும்போது 1 ரூபா லாபம் பெற 3 வாழை பழம் உற்பத்தி செய்ய வேண்டிய போட்டி நிலை மட்டுமே உள்ளூரில் உருவாகும்.

ஆக சுற்றி வளைத்து அவர்கள் மூக்கை தொடுவார்கள்.....

வடக்கு வாழை பழம் என்று இங்கும் நல்ல விற்பனை போகும்.

பணம் மட்டும் ஓரிடத்தில் குவியும்.

நல்ல சிந்தனைகளுக்கு தமிழனுக்கு அலர்ஜ்ஜி அதற்கு முதலில் மருந்து செய்யவேண்டும்.

 

உலகம் போட விட்டாலும் இவர்கள் விட மாட்டார்கள்.

  made in notheast  என்று.

மருதங்கேணி,

 

நீங்கள் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அனேகமாக விமான நிலையத்திலும் பணிபுரியலாம். உங்கள் USCS (United States Customs Service) ஆட்களை ஒருமுறை கேட்டு சொல்லுங்கள். நான் எனது கனேடிய கஸ்டம்ஸ் நண்பர்களுக்கு போன் பண்ணியபோது இப்படி செய்ய முடியாது என்கிறார்களே. உங்கள் endல் விசாரிக்கவும். 

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

போட முடியாது என்று ஒரு சட்டம் இருந்தால் ....
அது சட்டம் பற்றிய கருத்து.

 

நான் சொல்வது சில தமிழர் பற்றிய கருத்து.

Made in Sri Lanka  என்று தான் உற்பத்தி பொருட்களுக்கு போட முடியும். ஆனால் ஒரு பொருள் ஒரு குறிப்பிட பிரதேசத்தில் பிரசித்தி பெற்றிருந்தால் அப்பிரதேசத்தின் பெயர் லேபலில் உபயோகபடுத்தலாம். உதாரணமாக ஐரோப்பாவில் வைன் தயாரிப்பிற்கு  பிரசித்தி பெற்ற பிரான்ஸ்  Bordeaux wein ,Bourgogne wein, champagner ஸ்பெயின்  Rioja இத்தாலியின்  Toscano, Piemonte   போன்ற  பிரதேசங்கள் அந்த வைனின் trade mark ஆகவே பயன்படுத்த படுகின்றன.வைன் பல பெயர்களில் இருந்தாலும்  இவை அப்பிரதேசங்களில் விளைந்த திராட்சைகள் மூலம் அந்த பிரதேசங்களிலேயே தயாரிக்கபடுகிறதா என்பது முறைப்படி சோதனை( AOC - Appellation d’Origine Contrôlée) செய்யபட்டே சந்தைக்கு வருகின்றன.  யாழ்பாணத்தில் விளைந்த வெங்காயத்தை சந்தைபடுத்தும் போது அசல் யாழ்பாண வெங்காயங்கள் என்ற Trade Mark உடன் சந்தைபடுத்தலாம்.

 

la_rioja.gif

 

grd6248.jpg

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட முடியாது என்று ஒரு சட்டம் இருந்தால் ....

அது சட்டம் பற்றிய கருத்து.

 

நான் சொல்வது சில தமிழர் பற்றிய கருத்து.

தயவு செய்து ஒருமுறை USCS-ல் கேட்டு பார்க்கவும். நான் விக்கினேஸ்வரனுடன் தொடர்பில் உள்ளேன்.  USCSக்கு பிரச்சினை இல்லை என்றால் செய்யலாம். 

https://help.cbp.gov/app/answers/detail/a_id/492/~/requirements-for-country-of-origin-marking-on-goods-imported-into-the-u.s.

 

 

இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்க (??) வேண்டிய தேவை இனி இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தாயகத்திலிருந்து இங்கு வந்த

சமூக ஆர்வலரைச்சந்தித்தபோது

தான் பெண்களால் நிர்வகிக்கப்படும் 148 உள்ளுர் பனைஉற்பத்தி நிறுவனங்களின் தலைவியாக இருப்பதாக சொன்னார்.

புலம் பெயர் தேசங்களில் நடக்கும் விழாக்களில் பரிசளிக்கப்படும் பொருட்களை

அவர்களிடமிருந்து எடுத்து கொடுக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்

மற்றும் எல்லோரும் செய்தால்

எமது மற்றும் பிறதேசத்து புதிய தலைமுறைக்கு

எமது பொருட்களை அறிமுகப்படுத்தியதாகவும்

உள்ளுர் மக்களுக்கு பலன்கிட்டடியதாகவும் இருக்கும்

யாருக்காவது அந்த நோக்கம் இருந்தால்

அவர்களுடனான  தொடர்புகளைத்தரமுடியும்

 

 

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
 
தானாகவே இம்முயற்சிக்கு உதவ முன்வந்த விசுகுக்கும் நன்றி.
 
 
உற்பத்தி செய்யப்பட்ட நாடு நிச்சயமாக இருக்க வேண்டும் என்றே தெரிகிறது. ஆனல் உற்பத்தி செய்த ஸ்தாபனம் அல்லது ஏற்றுமதி செய்த ஸ்தாபனத்தின் விலாசத்தை பதிப்பதில் எந்த தடையும் இருப்பதாக தெரியவில்லை. மொத்தமாக ஏற்றுமதி செய்து வெளிநாடொன்றில் பைகளில் அடைக்கப்பட்டால் பைகளில் அடைத்த நிறுவனத்தின் விலாசம் பதிக்கப்பட வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட அன்றி

இது வடமாகாண சபையின் கூட்டுடன் செய்யப்படணும்

அப்போது தான் பொதுமக்கள் லாபமடையவர்

அல்லது  சில வியாபாரிகளின் கைகளில் போய்விடும்.

அது சரியன்று.

 

அவ்வாறு வடமாகாண சபையின் கூட்டுடன் செய்யப்படும் போது

லா சப்பலில் சில ஒழுங்குகளை  செய்யமுடியும்.

நன்றி

 

இதில் பொதுமக்கள் எனப்படுவோர் உற்பத்தியாளர்களே.இப்படி நடக்குமானால் பொருட்களின் விலைக்கு ஒரு நிர்னையம் கிடைக்கும்.அவர்களின் சந்தைப்படத்தலும் இலகுவாகும்.ஆனால் இவற்றை கொள் முதல் செய்து பொதி பண்ணி ஏற்றுமதிக்கு அனுப்புவதை யார் செய்வது என்பது தான் கேழ்வி.இதை மாகான சபை செய்யுமாயின் இன்னும் வசதி.தனி நபர் கொள்ளையை தடுக்கலாம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.