Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தொடரும் இராணுவத்தினரின் அடாவடி! இராணுவத்தினரின் தாக்குதலில் குடும்பஸ்தர் படுகாயம்.

Featured Replies

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இராணுவத்தினரின் கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி எள்ளங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய செல்வராஜா ஜெகன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி எள்ளங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மைதானத்தில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வழமைபோல் இன்று மாலையும் உதைபந்து விளையாடியுள்ளனர்.

இதன்போது பந்து அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளது. இதனையடுத்து பந்தை எடுப்பதற்காக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஜெகன் என்ற இளம் குடும்பஸ்தர் இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளார்.

இதன்போது முகாமில் காவல் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய்கள் இருவர் ஜெகனை பிடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதிலிருந்து ஒருவாறு ஜெகன் தப்பி வெளியில் ஓடிவந்த நிலையில், அவரது நண்பர்களும், ஒடி தப்பியுள்ளனர்.

இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து மைதானத்தில் நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக சென்ற ஜெகன் மீது அங்கிருந்த இராணுவத்தினர் அவரைப் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இராணுவத்தினரின் கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு இலக்காக ஜெகன் படுகாயமடைந்த நிலையில், அருகிலுள்ள ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதனை அறிந்த தாக்குதலை நடத்திய இராணுவத்தினர் ஊறணி வைத்தியசாலைக்கு வந்து பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ்பெற்றுக்கொள்ளுமாறு ஜெகனை மிரட்டியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக தென்பகுதி மக்களுடன் தமிழ் மக்களும் பெருவாரியாக வாக்களித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிய போதிலும், தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவந்த கெடுபிடிகள் தொடர்ந்தும் அவ்வாறே எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/37243/57//d,article_full.aspx

  • Replies 65
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 நாய் வாலை நிமிர்த்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்களவனின் மூலம் தமிழருக்கு விடிவு பிறக்கும் என்று நம்பும் இழவு காத்த கிளிகளுக்கு இச்செய்தி சமர்ப்பணம் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரே மாற்றமா இருக்கு.. என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தைரியத்தில ஆமியின்ட முகாமுக்குள்ள போனவர்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தைரியத்தில ஆமியின்ட முகாமுக்குள்ள போனவர்

ஒரு மாற்றத்தின் நம்பிக்கையில் தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி இருக்கிறார் எண்ட தைரியத்திலதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கால் போய் அடி வாங்கினது பத்தாதென்று திரும்பிப் போய் செமையாய் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்...மோட்டார் சைக்கிளை எடுக்க யாரையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம் அல்லது வேற யாரையும் அனுப்பி எடுத்திருக்கலாம்...லூசுப்பய

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் மூலம் தமிழருக்கு விடிவு பிறக்கும் என்று நம்பும் இழவு காத்த கிளிகளுக்கு இச்செய்தி சமர்ப்பணம் .

ஒரு இராணுவ முகாமுக்குள் அனுமதியின்றி, பாதுகாப்பு அரணின் நுழைவாயில் தவிர்ந்த ஏனைய பகுதிகளால் நுழைந்தால், அமெரிக்க, கனடா, ஐரோப்பா உட்பட எந்த நாட்டிலும் சுட்டு கொன்றாலும் அது சட்டப்படியான ஒரு செயலே. அடியோடு விட்டது இன்றைய ஸ்ரீ லங்கா இராணுவத்தின் பெரும்தன்மையை காட்டுகிறது.

இவர் செய்து இருக்க வேண்டியது பந்தை எடுப்பதற்கு நுழைவாயிலில் சென்று அனுமதி கேட்பது. அப்படி கேட்க பயம் என்றால், கேட்க கூடியவர்களுடன் சென்று கேட்பது. அனுமதியில்லாமல் இராணுவ முகாமுக்குள் நுழைவதல்ல.

கனடாவிலும், அமெரிக்காவிலும் விமான நிலையங்களில் பொதுமக்களுக்கு அனுமதியற்ற பகுதிகளில் பிரவேசித்தவர்களே சுடப்பட்டு இருக்கிறார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வள்வு காலமும் நடந்துவந்த அடக்குமுறை திடீரென்று இல்லாமல்ப் போவதற்கு அப்படி என்னதான் நடந்துவிட்டது என்கிறீர்கள் ? மகிந்த இருந்த இடத்தில் மைத்திரி, அவ்வளவுதான். இருவருமே சிங்களவர்கள், இனவாதிகள். இறுதிப் போரின் நாயகர்கள்.

இதில் கொள்கையும், சிங்கள அடக்குமுறையின் ஆக்கிரமிப்பு மனோபாவமும் மாறுவதற்கு என்ன நடந்துவிட்டது ??

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இராணுவ முகாமுக்குள் அனுமதியின்றி, பாதுகாப்பு அரணின் நுழைவாயில் தவிர்ந்த ஏனைய பகுதிகளால் நுழைந்தால், அமெரிக்க, கனடா, ஐரோப்பா உட்பட எந்த நாட்டிலும் சுட்டு கொன்றாலும் அது சட்டப்படியான ஒரு செயலே. அடியோடு விட்டது இன்றைய ஸ்ரீ லங்கா இராணுவத்தின் பெரும்தன்மையை காட்டுகிறது.

இவர் செய்து இருக்க வேண்டியது பந்தை எடுப்பதற்கு நுழைவாயிலில் சென்று அனுமதி கேட்பது. அப்படி கேட்க பயம் என்றால், கேட்க கூடியவர்களுடன் சென்று கேட்பது. அனுமதியில்லாமல் இராணுவ முகாமுக்குள் நுழைவதல்ல.

கனடாவிலும், அமெரிக்காவிலும் விமான நிலையங்களில் பொதுமக்களுக்கு அனுமதியற்ற பகுதிகளில் பிரவேசித்தவர்களே சுடப்பட்டு இருக்கிறார்கள்.

நம்பீட்டன், ஏனென்றால், சிறிலங்கா இராணுவம் இதுவரையில் ஒரு தமிழரையாவது சுடவில்லை. மனிதாபிமானப் போர் நடத்தியவர்கள்தானே அவர்கள்?? 2009 இல் ஒரு கைய்யில் ஐ.நா மனிதவுரிமைச் சாசனத்தையும் மற்றைய கைய்யில் துப்பாக்கியும் பிடித்துக்கொண்டு சாசனத்தை ஒவ்வொரு வாக்கியமாக வாசித்து வாசித்து யுத்தம் நடத்தி, சீரொ சிவிலியன் கசுவல்ட்டியுடன் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை செய்தவர்கள் அவர்கள். ஆகவே பந்தை எடுக்கப் போனவரையும் செல்லமாக இரண்டு தட்டுத் தட்டிவிட்டு விட்டு விட்டார்கள்.

ஆனால் ஒன்று, முகாமுக்குள் போனதால் இவர் தப்பீட்டார். அப்படியில்லாமல் சைக்கிளில பள்ளிக்கூடச் சட்டையும் போட்டுக்கொண்டு இரட்டைப் பின்னலோட போனால் குடும்பமாகக் கூட்டிக் கொண்டுபோய் விருந்தெல்லாம் வைப்பார்கள். கிருஷாந்தியைக் கேட்டால்த் தெரியும் !

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கொள்கையும், சிங்கள அடக்குமுறையின் ஆக்கிரமிப்பு மனோபாவமும் மாறுவதற்கு என்ன நடந்துவிட்டது ??

விடுதலை புலிகள் இருந்த காலத்திலும் அவர்களின் முகாம்களுக்குள் அனுமதியின்றி வேலி பாய்ந்தவர்களுக்கு அடியும் சூடும் விழுந்திருக்கிறது.

அடக்குமுறையின் ஆக்கிரமிப்பு மனோபாவம் இரு பகுதியினருக்கும் பொதுவானது என்று பலரும் கருதுகிறார்கள்.

இல்லாதவர்கள் பற்றி ஏன் கதைக்கிறீர்கள்?? எதுக்கெடுத்தாலும் புலிகள் செய்தார்கள், ஆகவே ராணுவம் செய்வதும் சரிதான் என்கிறீர்களா??

நான்தான் சிங்கள ராணுவம் ஒரு கைய்யில் ஐ.நா மனிதவுரிமைச் சாசனத்தையும் மற்றைக் கைய்யில் துப்பாக்கியும் வைத்துக்கொண்டு திரிகிறது என்று சொல்லி விட்டேனே?? பிறகேன் கோபப்படுகிறீர்கள் ?? ரிலாக்ஸ் பிளீஸ் !

  • கருத்துக்கள உறவுகள்

நம்பீட்டன், ஏனென்றால், சிறிலங்கா இராணுவம் இதுவரையில் ஒரு தமிழரையாவது சுடவில்லை. மனிதாபிமானப் போர் நடத்தியவர்கள்தானே அவர்கள்?? 2009 இல் ஒரு கைய்யில் ஐ.நா மனிதவுரிமைச் சாசனத்தையும் மற்றைய கைய்யில் துப்பாக்கியும் பிடித்துக்கொண்டு சாசனத்தை ஒவ்வொரு வாக்கியமாக வாசித்து வாசித்து யுத்தம் நடத்தி, சீரொ சிவிலியன் கசுவல்ட்டியுடன் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை செய்தவர்கள் அவர்கள். ஆகவே பந்தை எடுக்கப் போனவரையும் செல்லமாக இரண்டு தட்டுத் தட்டிவிட்டு விட்டு விட்டார்கள்.

ஆனால் ஒன்று, முகாமுக்குள் போனதால் இவர் தப்பீட்டார். அப்படியில்லாமல் சைக்கிளில பள்ளிக்கூடச் சட்டையும் போட்டுக்கொண்டு இரட்டைப் பின்னலோட போனால் குடும்பமாகக் கூட்டிக் கொண்டுபோய் விருந்தெல்லாம் வைப்பார்கள். கிருஷாந்தியைக் கேட்டால்த் தெரியும் !

இந்தியாவின் றோவுடன் சேர்ந்து சிங்கள மக்களின் ஒரே நாட்டை ஆக்கிரமிப்பு செய்ய இந்தியாவிடம் ஆயுதம் வாங்கி அப்பாவி சிங்கள மக்களுக்கு பேருந்துகளிலும் சந்திகளிலும் எல்லை கிராமங்களிலும் தமிழர் செய்தவற்றுக்கு விருந்து வைக்காமல் வேறு எதை எதிர்பார்த்தீர்கள்?

நாங்கள் இப்போது அனுமதியில்லாமல் இராணுவ முகாமுக்குள் வேலி பாயிந்தவரை பற்றி பேசும்போது நீங்கள் வரலாறு பேசுகிறீர்கள். மேலே உள்ளதும் வரலாறு.

இல்லாதவர்கள் பற்றி ஏன் கதைக்கிறீர்கள்?? எதுக்கெடுத்தாலும் புலிகள் செய்தார்கள், ஆகவே ராணுவம் செய்வதும் சரிதான் என்கிறீர்களா??

இல்லாதவர்கள் செய்த அழிவு இன்னமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதனால் தான் அவர்களை பற்றி இன்னமும் கதைக்க வேண்டி உள்ளது.

அந்த பாதிப்புக்கான நிவாரணம் முழுவதுமாக கிடைக்கும் வரை அவர்களை பற்றி கதைக்க வேண்டிய தேவையும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் நாடா??? இது எப்போதிருந்து ??? அவர்களின் நாட்டை ஆக்கிரமிப்பு வேறையா?? இது எப்போது நடந்தது ??? இது சிங்களவனுக்குத் தெரியுமா ??

என்னை வரலாறு பேசுபவன் என்கிறீர்கள், சரி, புலி வரமுன்னார் எப்படி வரலாறு இருந்தது என்பதையும் சொன்னீர்களென்றால் நன்றாக இருக்குமே??

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, ஆரிட்ட இருந்து நிவாரணம் கேட்கிறியள்?? புலி செய்துபோட்டுது ஆகவே மைத்திரியிட்டக் கேட்கிறியளோ ??

ஆகப் புலி இல்லாமலேயே இருந்திருந்தால் எல்லாம் சுபமாக இருந்திருக்கும் என்கிறீர்கள்.

தேயிலைத் தோட்டத்திலை வேலை செய்ய வந்த எங்களுக்கே இவ்வளவு திமிர் இருக்குமெண்டால், இது அவனின்ர ஊர், அனுக்கு எவவளவு திமிர் இருக்கும் எண்டு கேட்கிறியள். சூப்பர் போங்கோ !

உங்களிட்டக் கேட்டால் அறிஞ்சுகொள்ளலாம் எண்டதால கேட்கிறன், நாங்கள் (எண்டால் கள்ளத்தோணிதான் ) எப்பதான் சிறிலங்காவுக்கு வந்தனாங்கள் எண்டு நீங்கள் நினைக்கிறியள் ? ஆங்கிலேயருக்கும் பிறகோ அல்லது தொண்டைமான் கூட்டி வந்த ஆக்களோ ??? இல்லை, சிங்களவனின்ர நாட்டை ஆக்கிரமிப்புச் செய்யிறம் எண்டு சொன்னதால கேட்கிறன்.

மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக தென்பகுதி மக்களுடன் தமிழ் மக்களும் பெருவாரியாக வாக்களித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிய போதிலும், தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவந்த கெடுபிடிகள் தொடர்ந்தும் அவ்வாறே எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/37243/57//d,article_full.aspx

மாற்றமொன்றை நிச்சயமாக இந்த ஊடக வியாபாரம் செய்யும் பதிவு விரும்பி இருக்கவில்லை. இப்படியானவொரு நிகழ்வு இது தான் முதல் தரம் நடந்ததும் இல்லை. எந்த தகவலையும் சரியாக அறியத்தரவேண்டும்.

எத்தனையோ பொய்யான தகவல்களை வெளியிட்ட பதிவு தளத்தில் வந்த செய்தியை நம்பி யாரும் கண்டபடி கருத்தை எழுதாதீர்கள்.

தமிழ் மக்களின் விடுதலை வேட்கையையோ உரிமைப்போரையோ போலியான ஒரு பிரச்சாரத்தினால் செய்யவேண்டியதில்லை. தமிழ் மாந்தர் தமக்கு வேண்டியதையும் நடந்ததையும் நன்கு அறியாதவர்கள் இல்லை. இதை கருத்தில் கொண்டு இந்த யாழ் களமும் பதிவு தளத்தில் இருந்து வரும் செய்திகளை தடை செய்யவேண்டும். 

சிங்களத்தில் இராவய பத்திரிக்கை போல் தமிழிலும் ஆதாரம் இல்லாமல் சுத்த புனைகதை பத்திரிகைகள் ஏராளம் உண்டு.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தரை தேர்தல் முடிந்தகையோடு இரவோடு இரவாக மாலைதீவிற்கு அனுப்பியவர்கள்தானே பதிவு. இதற்கு தாம் இன்று நேற்றல்ல பத்து வருடங்களாக குப்பை கொட்டுவதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. இப்படி ஏதாவது செய்தி வராவிட்டால் எங்களுக்கும் போரிங்க், பதிவுக்கும் போரிங்க். அனந்தி சசிதரனை வைத்து அடுத்தகட்ட செய்தியை புனைவதற்கு பதிவுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகின்றது. அனந்திக்கும் சற்று ஓய்வு தேவைதானே, பாவம். எவ்வளவு காலத்திற்குத்தான் அவரை வைத்து காலத்தை ஓட்டமுடியும். இந்த கப்பில் இப்படியான செய்திகளை போட்டு தமிழ்மக்களை அலேட்டாக வைத்திருப்போம். 

இந்தியாவின் றோவுடன் சேர்ந்து சிங்கள மக்களின் ஒரே நாட்டை ஆக்கிரமிப்பு செய்ய இந்தியாவிடம் ஆயுதம் வாங்கி அப்பாவி சிங்கள மக்களுக்கு பேருந்துகளிலும் சந்திகளிலும் எல்லை கிராமங்களிலும் தமிழர் செய்தவற்றுக்கு விருந்து வைக்காமல் வேறு எதை எதிர்பார்த்தீர்கள்?

நாங்கள் இப்போது அனுமதியில்லாமல் இராணுவ முகாமுக்குள் வேலி பாயிந்தவரை பற்றி பேசும்போது நீங்கள் வரலாறு பேசுகிறீர்கள். மேலே உள்ளதும் வரலாறு.

இல்லாதவர்கள் செய்த அழிவு இன்னமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதனால் தான் அவர்களை பற்றி இன்னமும் கதைக்க வேண்டி உள்ளது.

அந்த பாதிப்புக்கான நிவாரணம் முழுவதுமாக கிடைக்கும் வரை அவர்களை பற்றி கதைக்க வேண்டிய தேவையும் உள்ளது.

நீங்க சொன்னது சரிதான் ஜூட். புலிகள் இராணுவத்தை தாக்க முன்னைய காலங்களில் சிங்களவரின் ஒரு சின்ன நக கீறு தமிழரில் பட்டிருக்குமா? எவ்வளவு அன்பாக எம்மை தடவினார்கள். எவ்வளவு எமது உரிமைகளை கேட்க முதலே தந்தார்கள். வரலாறு தெரியாமல் கருத்து எழுபர்கள் பற்றி நீங்கள் கவலைப்பாதீங்கள் ஜூட் . விட்டால் சிங்கள இராணுவம் எம்்மீது குண்டு போட்டதாக அல்லது எமது பெண்களை வல்லுறவு புரிந்ததாக கூட பொய் சொல்லுவார்கள். நல்ல காலம் நீங்கள் இல்லாவிட்டால் இந்த பொய்யர்களின் புளுகை நம்பியிருப்பேன். நன்றி ஜூட் .
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நீங்கள் இல்லாவிட்டால் இந்த பொய்யர்களின் புளுகை நம்பியிருப்பேன். நன்றி ஜூட் .

நீங்கள் நம்புவதும் நம்பாததும் பற்றி எவருக்கு அக்கறை?

யாருக்கு அதனால் பயன்? எவருக்கும் பயன் எதுவும் இல்லை.

" நாங்கள் இராணுவ முகாம் வேலி பாய்வோம்.அது எங்கள் சுதந்திரம்." என்று நினைக்கும் முட்டாள்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள். சர்வதேச நாடுகள் அதனை அறிந்தே இந்த மக்களை கைவிட்டு விட்டன.

இந்தியாவும் இதனை நன்கு புரிந்தே தனது தேவைக்காக இந்த முட்டாள் மக்களை கழிவு மக்களாக தற்கொலை யுத்தத்தில் வகை தொகை இன்றி அழித்து முடித்தது. இன்னமும் அழிகிறேன் என்று நிற்கும் இந்த மக்களை கடவுளே இன்னும் ஒரு அவதாரம் எடுத்து வந்தாலும் காப்பாற்ற முடியும் என்று தெரியவில்லை.

இல்லாவிட்டால் இந்த அழிவுக்கு பிறகும் ஒரு பந்துக்காக இராணுவ முகாமில் வேலி பாயுமா இந்த முட்டாள் கூட்டம்?

அப்படி இராணுவ முகாம் வேலி பாய்வதை வரவேற்கும் இந்த யாழ் கள ஆதரவாளர்களே இந்த இனம் அழிய மட்டும் தகுதியான இனம் என்பதற்கு சான்று.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலைத் தோட்டத்திலை வேலை செய்ய வந்த எங்களுக்கே இவ்வளவு திமிர் இருக்குமெண்டால்,

நீங்கள் தேயிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவராக இருக்கலாம்.

யாழ்ப்பாண தமிழரில் பலர் புகையிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவர்கள்.

டச்சு காரன் இவர்களை மலபார் மக்கள் என்று தான் எழுதி வைத்தான். தமிழன் என்று எழுதவில்லை. முன்னர் போர் வீரர்களாக பாண்டிய, சோழ அரசுகளுடன் வந்தார்கள் தமிழர்கள். வணிகர்களாக மீன்பிடிப்பவர்களாக வந்தார்கள்.

  • சிங்களம் இலங்கையில் தான் தோன்றியது என்பதை எந்த ஆய்வாளரும் மறுக்கவில்லை.
  • தமிழ் இலங்கை தீவில் தான் தோன்றியது என்று ஐயம் திரிபட நிறுவ முடியுமா?
  • சிங்களவருக்கு உள்ள ஒரே நாடு இலங்கை. அவர்களுக்கு வேறு நாடு இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

  • சிங்களவருக்கு உள்ள ஒரே நாடு இலங்கை. அவர்களுக்கு வேறு நாடு இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்?

சிங்களவர்களுக்கு உலகில் ஒரே நாடு இலங்கை.

அதனால்தான் இந்தப்பாடு :D :D :lol:

சிங்களவர்களுக்கு உலகில் ஒரே நாடு இலங்கை.

எமக்கு அதுவுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

<p>நீங்கள் தேயிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவராக இருக்கலாம்.யாழ்ப்பாண தமிழரில் பலர் புகையிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவர்கள்.டச்சு காரன் இவர்களை மலபார் மக்கள் என்று தான் எழுதி வைத்தான். தமிழன் என்று எழுதவில்லை. முன்னர் போர் வீரர்களாக பாண்டிய, சோழ அரசுகளுடன் வந்தார்கள் தமிழர்கள். வணிகர்களாக மீன்பிடிப்பவர்களாக வந்தார்கள்.

  • சிங்களம் இலங்கையில் தான் தோன்றியது என்பதை எந்த ஆய்வாளரும் மறுக்கவில்லை.
  • தமிழ் இலங்கை தீவில் தான் தோன்றியது என்று ஐயம் திரிபட நிறுவ முடியுமா?
  • சிங்களவருக்கு உள்ள ஒரே நாடு இலங்கை. அவர்களுக்கு வேறு நாடு இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்?
அண்ண சுகமா இருக்கியலா,ஏதும் உதவி தேவையெண்டா கூப்பிடுங்கோ

ஆமிக்காரன் அடித்ததற்கும் மைத்திரியின் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் .

பதிவிற்கு இதுவே வேலையாய் போச்சு .சும்மா இருந்து பணம் பண்ண வழியில்லாமல் பலர் அவதிப்படுவது மட்டும் நன்றாக தெரியுது ,

எந்த தைரியத்தில ஆமியின்ட முகாமுக்குள்ள போனவர்

அந்த கூட்டத்தை சேர்ந்தவர் போலிருக்கு . :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.