Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்பிற்கு மத்தியில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரும் சுதந்திர விழாவில் கலந்துகொண்டனர்!

Featured Replies

fbe5093c383685a2c635f66e6581a2d1_L.jpg

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின அரசாங்கத்தின் பிரதான நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்கு முன்னதாக கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன.
 
எனினும், இதற்கு முன்னர் நடைபெற்ற சுதந்திர தின வைபவங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சுதந்திரம் அடைந்த இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படவில்லை என்றும் தமிழருக்குத் தீர்வு வரும் வரையில் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதில்லை என்ற முடிவில் கூட்டமைப்பு உள்ளதாகவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
சம்பந்தன் சுதந்திரத் தினக் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது, அது அவரது தனிப்பட்ட முடிவு எனக் கூறினார்.
 
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடந்த பொதுத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
சுதந்திர தின விழா வைபவத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரியையும் காண முடிந்தது.
 
  • கருத்துக்கள உறவுகள்

அது போன மாசம் .......!
நான் சொல்றது இந்த மாசம்.
  • கருத்துக்கள உறவுகள்

உந்த சிலுசிலுப்புக்களை விட்டுப் போட்டு, வாக்குகள் தந்த மக்களுக்கு, சேர்ந்து இருந்து எதையாவது வாங்கித் தரட்டுமன்.

சேர்ந்து இயங்குவதால் கண வேலைகள் நடந்து இருக்குது.

டக்கி, கருணா, சந்திரசறீ Out.

மூஞ்சியை இழுத்துக் கொண்டு ஒரு பக்கமா இருந்தா, அலுவல் நடக்காது. டக்கியர் தான் வந்து தன்ற மேளம் அடித்துக் கொண்டு நிப்பார்.

முட்டைல மயிர் புடுங்காதிருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை அழித்த ஆயுத தளபாடங்களின் அணிவகுப்புக்கும் சல்யூட் அடிப்பினமோ????

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சிலுசிலுப்புக்களை விட்டுப் போட்டு, வாக்குகள் தந்த மக்களுக்கு, சேர்ந்து இருந்து எதையாவது வாங்கித் தரட்டுமன்.

சேர்ந்து இயங்குவதால் கண வேலைகள் நடந்து இருக்குது.

டக்கி, கருணா, சந்திரசறீ Out.

மூஞ்சியை இழுத்துக் கொண்டு ஒரு பக்கமா இருந்தா, அலுவல் நடக்காது. டக்கியர் தான் வந்து தன்ற மேளம் அடித்துக் கொண்டு நிப்பார்.

முட்டைல மயிர் புடுங்காதிருப்போம்.

உங்கள்  கருத்தோடு இசைகின்றேன்...

வேறு வழி...........??

ஆனால் சிங்களம் தன்னிடமுள்ளவற்றை எதையும் இழக்காது

எதையும்  பகிராது

எதுவும் இல்லாத தமிழன்

எல்லாவற்றையும் களட்டிக்கொடுப்பது தான் புரியல...

இன்றையநிலையில் இந்த பாட்டு அடிக்கடி கண் முன்னால் வந்து போகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.

1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை.

இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை சிறி ஜெயவர்த்தனபுர, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பங்கேற்றார். ஏற்கனவே இன்றைய நிகழ்வில் சுமந்திரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது இரா. சம்பந்தனும் முக்கிய புள்ளியாக இருந்தார்.

  • TAMILWIN

mr1.jpg

Sri_Lanka_67th_Independence_Day_1.jpg

Sri_Lanka_67th_Independence_Day_2.jpg

Sri_Lanka_67th_Independence_Day_3.jpg

Sri_Lanka_67th_Independence_Day_6.jpg

Sri_Lanka_67th_Independence_Day_10.jpg

Sri_Lanka_67th_Independence_Day_11.jpg

Edited by பெருமாள்

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் சம்பந்தன் – கூட்டமைப்புக்குள் சர்ச்சை FEB 04, 2015 | 10:38by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

sampanthan-independence-day-300x200.jpgகொழும்பில் இன்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றுள்ளார்.

1972ம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக தமிழ்த் தலைவர் ஒருவர், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்தில் இருந்தே சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாக கடைப்பிடிக்கும் வழக்கம் இருந்து வந்தது.

எனினும், இம்முறை சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான எந்த உத்தரவாதமும் கிட்டாத நிலையில், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் இரா.சம்பந்தன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

sampanthan-independence-day.jpg

இந்த விவகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் இதனை வன்மையாக கண்டித்துள்ளதுடன், உடனடியாக கட்சியின் மத்திய செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/04/news/3380

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் அணி வகுப்பை ஏற்கும் அற்பத்தன அரசியலை நோக்கி சம்பந்தன் நகர்ந்திருக்கிறார். தானே தன்னை காட்டிக்கொடுக்கிறார் அவ்வளவே..! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

1972ம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் தமிழ்த் தலைமை

கிட்டத்தட்ட

தனிச்சிங்களம் வந்தபின்....

இலங்கை

சிறீலங்கா என மாறியதன் பின்.....

தமிழரது அனைத்து இழப்புக்களும்

தியாகங்களும்

போராட்டங்களும் 

வீணாகிப்போன நாள் இன்று

மிகவும் துக்கரமான நாள் இன்று

வரலாற்றில் பதியப்படும்..

(எழுதும் போது கண்ணீரை நிறுத்தமுடியவில்லை. இயலாமையின் இறுதிநிலை)

மனோ கணேசன் உயர்ந்து நிற்கிறார். 

அவராலேயே ஆரம்பிக்கப்பட்ட கூட்டு ஆட்சியையும் புறம்தள்ளி உண்மையை உணர்த்தமுடிவது பெரும் பாக்கியம்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.

1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை.

இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை சிறி ஜெயவர்த்தனபுர, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பங்கேற்றார். ஏற்கனவே இன்றைய நிகழ்வில் சுமந்திரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது இரா. சம்பந்தனும் முக்கிய புள்ளியாக இருந்தார்.

  • TAMILWIN

mr1.jpg

Sri_Lanka_67th_Independence_Day_1.jpg

மேடையும்போட்டு கதிரையும் போட்டால் ...........
தமிழர்களுக்கு எதிரானது என்றாலும் நம்ம தலிவர் கலந்துகொள்வார்.
நம்ம தலிவரோட தனி சிறப்பு அது.
கடந்த 40 வருடமாக அதை வெற்றிகரமாக தலிவர் செய்துகாட்டியும்.
தலிவர் சிலதை தமிழர் நலன் கருதி புறக்கணிப்பார் என்று நம்ப சில தமிழர்கள் இருக்கிறார்கள். (அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்) 
 
இதுக்குள் கரி படை களத்தில் இறங்கி என்ன ராஜதந்திரத்தை புகுத்துவார்களோ ? 

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கித் தலை குனிவோம்.

சம்பந்தரின் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி மைத்திரியை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வாக்களித்த மக்களை விட வேறு யாரும் தலைகுனியத் தேவையில்லை.

சிங்கக் கொடி ஏந்திய சிங்கத்தமிழன் எங்கள் தலைவன் ஐயா சம்பந்தன் வாழ்க

சிரியா ஆசாத்தின் பக்கம் இருக்கும் மக்களை கொன்று போட்டால் "போராளி"
எண்ணெய் உள்ள இராக் பக்கம் துவக்கை நீட்டினால் அவனே "பயங்கரவாதி"
என்பதுதான் நாட்டமையின் தீர்ப்பு 
அவர்களின் கொள்கை ஒன்றுதான் இசுலாமிய நாடு அமைத்தல்.
 
உலகத்தில் என்ன நடக்கிறது   என்பதை தெரியாமலே இறந்துபோனவன் தமிழனாகத்தான் இருப்பான்.
ஓசியில கூழ் குடிக்க நினைச்சால் உலகில் இதுதான் கிடைக்கும்.
ஆளான பாட்ட மிருகங்களே வேட்டையாடி வாழ்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி மைத்திரியை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வாக்களித்த மக்களை விட வேறு யாரும் தலைகுனியத் தேவையில்லை.

சிங்கக் கொடி ஏந்திய சிங்கத்தமிழன் எங்கள் தலைவன் ஐயா சம்பந்தன் வாழ்க

புலத்துக்கும் தாயகத்துக்குமான இடைவெளி  அதிகமாகப்போகிறது..... :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜால்ரா போடும் கூட்டத்தின் கூச்சல்களிற்கு அஞ்சாமல் சம்பந்தர் தனக்கு சரியென பட்டதை துணிவுடன் செய்தால் இனியாவது பல அழிவுகளில் இருந்து தப்ப வாய்ப்பு கிடைக்கும்.

புறக்கணிப்புக்கள் மூலம் புறக்கணிப்புக்களை உருவாக்காமல் தொலைநோக்குடன் செயற்பட்டால் நல்லதே. இதையே முஸ்லீம் அரசியல்வாதிகள் செய்து தமது சமூகத்திற்கு உதவும்போது அது ராசதந்திரம். சம்பந்தர் செய்தால் அது அவமானம்.

வரலாறு காணாத பெரும் புரட்சி ஒன்றைத் தமிழர்களின் தலைவர் ஐயா சம்பந்தன் அவர்கள் செய்திருக்கின்றார்.

இந்தப் பூரிப்பினால் சிங்கள மக்கள் மனம் திருந்தி சிங்கள அரசிற்குக் கொடுக்கும் அழுத்தங்களினால் தமிழர்களுக்கு இலவச வேட்டியும்

கூப்பன் அட்டையும் வழங்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜால்ரா போடும் கூட்டத்தின் கூச்சல்களிற்கு அஞ்சாமல் சம்பந்தர் தனக்கு சரியென பட்டதை துணிவுடன் செய்தால் இனியாவது பல அழிவுகளில் இருந்து தப்ப வாய்ப்பு கிடைக்கும்.

புறக்கணிப்புக்கள் மூலம் புறக்கணிப்புக்களை உருவாக்காமல் தொலைநோக்குடன் செயற்பட்டால் நல்லதே. இதையே முஸ்லீம் அரசியல்வாதிகள் செய்து தமது சமூகத்திற்கு உதவும்போது அது ராசதந்திரம். சம்பந்தர் செய்தால் அது அவமானம்.

முதலில் இசுலாமிய அரசியல்வாதிகளை  ஆதரிக்கின்றீர்களா?

அதைவிடுவோம்

ஏன் மனோ கணேசன் போன்றவர்களை  உங்களால் உதாரணம் காட்டமுடியாதா?? :(

மற்றும்படி

விட்டுக்கொடுக்கத்தொடங்கினால் என்னவாகும் என்று எல்லோருக்கும் தெரியும்... :(

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு: சம்பந்தர்

55 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

141230102151_sampanthan_sumanthiran_512xஇலங்கையின் சுதந்திர தின விழாவில் சம்பந்தர், சுமந்திரன் பங்கேற்பு

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அவ்விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்காலம், புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக சுதந்திர தின விழாவில் பங்கேற்பது என்று முடிவெடுத்ததாக அவர் கூறுகிறார்.

அதேவேளை கூட்டமைப்புக்குளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், எனினும் இது தொடர்பில் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சிபோல் அல்லாமல், இந்த ஆண்டின் சுதந்திர தின வைபவம், இராணுவ வெற்றியை மையப்படுத்தவில்லை என்றும், அப்படியான சூழலில் இந்த நிகழ்வில் பங்குபெறுவது நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை அனுப்பும் என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/02/150204_independenceday_sampanthar

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும் வகையிலும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்கிற அடிப்படையிலேயே இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்ததன எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவரது கருத்துக்களை இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/02/150204_independenceday_sampanthar

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு கூட்டமைப்பின் முடிவல்ல: சுரேஷ்

18 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் அவரிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஆனால் இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது என அவர் கூறுகிறார்.

அவர்களின் பங்கேற்புக்கும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிறார் அவர்.

சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் கருத்தும் ஏற்புடையது அல்ல எனவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/02/150204_suresh_sampanthar

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு கூட்டமைப்பின் முடிவல்ல: 

மண்ணாங்கட்டி

இது ஒரு கட்சி

அதுக்கு ஒரு தலைவர்

அவர் மற்றவரை ஓட்டுப்போடச்சொல்வார்

ஆனால் அவரே ஓட்டுப்போடமாட்டார்

ஆனால் வெற்றி தன்னால் என்பார்

அவரே முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பார்...

யாராவது கதைத்தால்

கடிதம் வரும் கவனம்... :(  :(  :( 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு கூட்டமைப்பின் முடிவல்ல: சுரேஷ்

18 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் அவரிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஆனால் இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது என அவர் கூறுகிறார்.

அவர்களின் பங்கேற்புக்கும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிறார் அவர்.

சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் கருத்தும் ஏற்புடையது அல்ல எனவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/02/150204_suresh_sampanthar

இதையே அனந்தியோ சிவகரனோ செய்திருந்தால் கட்சியின் கொள்கை மீறல் ..... வெளியேற்றம்.......

இது பெரிய இடத்து  விசயமாக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sampanthan-slflag1.jpg

84f5f659-079f-4d6b-afdd-2a430ce66cce_zps

சிங்களக்கொடி அசைத்தலும்....சுதந்திரதின பங்கேற்பு அசத்தலும் கண்ணுக்கு தெரிகின்றன......கூட்டமைப்பின் பின்கதவு அந்தரங்கங்கள் / அரங்கேற்றங்கள் ஆண்டவனுக்கும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு கூட்டமைப்பின் முடிவல்ல: சுரேஷ்

18 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் அவரிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஆனால் இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது என அவர் கூறுகிறார்.

அவர்களின் பங்கேற்புக்கும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிறார் அவர்.

சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் கருத்தும் ஏற்புடையது அல்ல எனவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/02/150204_suresh_sampanthar

அப்ப இவர்களை கட்சியில் இருந்து நீக்குவார்களா ?

ஜால்ரா போடும் கூட்டத்தின் கூச்சல்களிற்கு அஞ்சாமல் சம்பந்தர் தனக்கு சரியென பட்டதை துணிவுடன் செய்தால் இனியாவது பல அழிவுகளில் இருந்து தப்ப வாய்ப்பு கிடைக்கும்.

புறக்கணிப்புக்கள் மூலம் புறக்கணிப்புக்களை உருவாக்காமல் தொலைநோக்குடன் செயற்பட்டால் நல்லதே. இதையே முஸ்லீம் அரசியல்வாதிகள் செய்து தமது சமூகத்திற்கு உதவும்போது அது ராசதந்திரம். சம்பந்தர் செய்தால் அது அவமானம்.

சம்மந்தர் காப்பாற்றா விட்டால் இலங்கையில் தமிழ் இனம் அழிய நிறைய சாத்தியம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.