Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்துமீறும் இந்திய மீனவர்களை சுடுவதில் தவறில்லை: ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

article_1425715559-raniwikma.jpg

 

'கச்சதீவு இலங்கைக்கே சொந்தம். எங்கள் மீனவர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டால் எங்கள் சட்டம் ஏற்றுக்கொள்ளும்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் 'தந்தி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,

 

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இருப்பினும், இந்தியமீனவர்கள் கோருவது போல், இலங்கையின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு அனுமதி அளிக்க முடியாது.

 

எங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அவர்கள் எப்படி உரிமை கோர முடியும். நாங்கள் ஒருவேளை இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க வேண்டும், அதுவும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் உரிமை கோரினால் அதற்கு ஒப்புதல் கிடைக்குமா? அப்படி இருக்கும்போது இந்திய மீனவர்கள் ஏன் இங்கு மீன் பிடிக்க விரும்புகிறார்கள்.

 

கச்சதீவு ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இந்திய மீனவர்கள் என்ன மாதிரியான படகுகளைப் பயன்படுத்தி அப்பகுதியில் மீன் பிடிக்கலாம் என புரிந்துணர்வு உள்ளது. அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையை தொடர முடியும்.

 

கச்சதீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு தீர்வாகும் என தமிழகம் கருதலாம். ஆனால், கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசின் நிலைப்பாடும் அதுவே. கச்சதீவு எங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதி. அங்கு மீன்பிடிப்பவர்கள் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள எங்களது மீனவர்கள்.

 

ஒப்பந்தத்தை மீறி, இந்திய மீனவர்கள் புத்தளம் வரை வந்து மீன் பிடிக்கிறார்கள். இது மிகப் பெரிய பிரச்சினை. இதனால், எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்தபோது மட்டுமே இந்திய மீனவர்கள் புத்தளம் பகுதியை விட்டுவைத்தனர்.

 

இல்லாவிட்டால் அவர்கள் தொடர்ந்து அங்கு மீன்பிடித்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். தமிழக மீனவர்கள்கச்சத்தீவுக்கு உரிமை கோருவதற்கு அங்குள்ள அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம்.

 

இந்திய மீனவர்கள் 600க்கும் மேற்பட்டோரை இலங்கைக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 2011க்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கு இந்திய மீனவர்கள் சிலர் ஆயுதங்களை வழங்கி வந்தனர்.

 

அவ்வாறு ஆயுதங்கள் வழங்க இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் மீனவர்களே சுடப்பட்டிருக்கின்றனர். 2011க்குப் பிறகு எவ்வித துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை.

 

இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறாமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடந்திருக்காது. அத்துமீறிவிட்டு மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவதில் நியாயமில்லை. ஒன்றிரண்டு அப்பாவி மீனவர்களும் சுடப்பட்டிருக்கலாம். அதை மறுக்கவில்லை. ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே அவர்கள் இருந்திருந்தால் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடந்திருக்காது.

 

என் வீட்டுக்குள் யாராவது அத்துமீறி நுழையும்போது அவரை நான் சுட்டால் என் நாட்டின் சட்டதிட்டம் அதை ஏற்றுக்கொள்ளும். மீனவர் பிரச்சினைக்கும் இது பொருந்தும்' இவ்வாறு ரணில் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

 

 

http://www.tamilmirror.lk/141163 

  • Replies 52
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவரின் படைக்கு சுடக் கற்றுக் கொடுக்கும் வட இந்தியர்கள் தான் இதற்குப் பதில் சொல்லனும்.

 

ஏன் ரணிலு.. உங்க இனம் என்ன துப்பாக்கியும் கையுமாவா பிறந்தது. மாதனமுத்தா கூட்டம் தானே.. எல்லை தாண்டி வரும் மீனவர்களை எச்சரிச்சு அனுப்பினால் குறைஞ்சிடுவியளா என்ன..?!

 

தமிழனைச் சுட்டுக் பழகிட்டூங்க.. அது பழக்க தோசம் விடாது.

 

இலட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்திட்டு.. நூற்றுக் கணக்கில் இறந்த முஸ்லீம்களையும்... சிங்களவர்களையும் அதற்கு சமப்படுத்தும்.. உங்க சாணக்கியமோ சாணக்கியம். சம்பந்த.. சுமந்திர கூடாரம் சொல்லித் தந்திருக்கும் போல.  :icon_idea:  :rolleyes:

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ச அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
 
பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
 
இலங்கையில் கடந்த 2011-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ச அரசால் விடுதலைப்புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது. இந்திய உதவியைப் பெறுவதற்கு இலங்கையில் 13-வது சட்டப்பிரிவில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராஜபக்சே அறிவித்தார்.
 
ஆனால், அதை அவர் நிறைவேற்றவில்லை. போரில் உதவியதை இந்திய அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறுக்கலாம். ஒருவேளை இந்திய அரசியல்வாதிகளுக்கு அம்னீசியா (மறதி நோய்) ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியா உதவியது என்பதே உண்மை.
 
இலங்கைப் போரில் மனித உரிமை மீறப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவும், 1970 காலகட்டத்தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சி.விக்ணேஸ்வரன், பொறுப்பற்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
 
அவரது தீர்மானத்தின்படி விசாரணை செய்தால் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இலங்கைக்கு அனுப்பபட்ட இந்திய அமைதிப் படை (ஐ.பி.கே.எஃப்-பும்) காரணமாகும். எனவே படுகொலைகளுக்கு இலங்கையை மட்டும் காரணம் கூறுவது சரியாகாது. விசாரணை அனைத்து தரப்பினரும் மீது நடத்தப்பட வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

 
அவரது தீர்மானத்தின்படி விசாரணை செய்தால் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இலங்கைக்கு அனுப்பபட்ட இந்திய அமைதிப் படை (ஐ.பி.கே.எஃப்-பும்) காரணமாகும். எனவே படுகொலைகளுக்கு இலங்கையை மட்டும் காரணம் கூறுவது சரியாகாது. விசாரணை அனைத்து தரப்பினரும் மீது நடத்தப்பட வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

 

 

அப்பிடிப்போடு அரிவாளை.. :D நாங்க யாரு..  :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடிப்போடு அரிவாளை.. :D நாங்க யாரு..  :wub:

இலங்கை மீனவர்களின் நல்வாழ்வுக்கு குரல் கொடுப்பது யார் என்பதில் உள்ளது இங்குள்ள பிரச்சினை.  குரல் கொடுப்பது ரணிலா? எடுத்துவிடு தாக்குதலை. அண்ணன் விசுகு சொன்னதுபோல, ”இதையும் தாண்டி வருவோம்”

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மீனவர்கள் வடக்கில் வந்து மீன் பிடிப்பது பற்றி ரனில் வாயே திறக்கவில்லை. தேர்த்தல் வருவது தான் காரணமா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பிரதமராக பதவி வகிக்க ரணில் தகுதியற்றவர் – காங்கிரஸ்

 
 

குளோபல்தமிழ்ச்செய்தியாளா் கொழும்பு

abisek%20singve_CI.jpg

இலங்கையின் பிரதமராக பதவி வகிக்க ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஊடுறுவல்களையும், மீனவர்கள் எல்லை தாண்டுவதனையும் வேறுபடுத்தி அறிந்து கொள்ள முடியாத ஒருவர் இலங்கையின் பிரதமராக பதவி வகிக்க தகுதியற்றவர் என காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிசேக் சிங்கவீ தெரிவித்துள்ளார்.

அத்து மீறி வீட்டுக்குள் ஊடுறுவும் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு செய்வதில் தவறில்லை என்ற போதிலும், எனினும் வீட்டுக்கு அருகாமையில் சஞ்சரிக்கும் வழிப்போக்கர்களை சுட எத்தனித்தால் கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தொடர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்ளையும் அத்து மீறி ஊடுறுவல்களை மேற்கொள்வோரையும் பிரித்து அறிந்து கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு நாட்டின் பிரதமராக இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் கருத்து அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சகீல் அஹமட் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு ரணில் அளித்த செவ்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரணிலின் கருத்தக்கு, தமிழகம் மற்றும் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117348/language/ta-IN/----.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலுள்ள மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வருமானம் ஏதோ ஒருவேளை வயிற்றுப்பாட்டுக்கே பற்றாக்குறையாகவிருந்தாலும், அவர்களது மீன்பிடியால் இந்திய அரசுக்கு ஏற்படும் வருமானாம் சொல்லிக்கொள்ளுமளவிற்கே இருக்கின்றது அதிலும் தமிழ்நாட்டையண்டிய கடற்கரைகளில் வாழும் மக்களால் பெறப்படும் மீன்பிடி வருமானமே முழுமையான இந்தியாவுக்குமான மீன்பிடிவருமானத்தில் அதிகமாகும்.

 

ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இந்திய மாநில மத்திய அரசுகளால் செய்துதரப்பட்ட வசதிகள் வரையறைக்குள்பட்டவையாகும். ஆழ்கடலில் சென்று மாதக்கணக்கில் மீன்பிடிப்பதற்கான பயிற்சிகளோ அன்றேல் அதற்கான தொழில்நுட்ப உதவிகளோ உரிய கப்பல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கடன் உதவிகளோ அதற்கான திட்டமிடுதல்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

 

ஆனால் செவ்வாய் கிரகத்தில் மீன் இருக்கின்றதா என அறிய மங்கள்யான் எனும் விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள். அது எப்போதுபோய் அங்க மீன் இருக்கு எனக்கண்டுபிடித்து........ அதுக்குள்ள மீன் கருவாடாகுதோ இல்லையோ தமிழக மீனவன் கருவாடாகிவிடுவான்!

 

இப்படியான திட்டமிடல்கள் எதுவுமே தேவையில்லை பக்கத்தில் இலங்கைத்தீவு இருக்கு அங்குபோய் மீன் வளங்களை ஆட்டையைப் போடுங்கோ என அரசாங்கமே சொல்வதாகவே எனக்குப்படுகின்றது.

 

தமிழ்நாட்டின் கரையோரப்பகுதிகள் காணப்படும் வண்டல்நிறைந்த மீன்பிடுப்பிரதேசங்களை எந்தவித உயிரினமும் இல்லாத பாலைவனமாக்கிவிட்டாச்சு அதைத்தொடர்ந்து காணப்படும் பவளப்பாறைப் பிரதேசங்களை இல்லாதொழிச்சாச்சு. இனிமேல் அங்கு மீன்கள் உற்பத்தியாகும் என அறுதியிட்டுக்கூறமுடியாது.

 

இப்போது இலங்கைத்தீவின் கடற்பிரதேசத்திலேயே பவளப்பாறைகள் ஓரளவு காப்பாற்றப்பட்டிருக்கின்றது. அவைகளையும் பாரிய இரட்டை மடிப்பு வலைகளைப்போட்டு உடைத்தெறிந்துவிட்டால் வெளிநாடுகளில் வாழுகிற புலம்பெயர் மக்களோ இலங்கைத்தீவின் தமிழ் மீனவர்களுக்குச் சோறுபோடுவினம் என நினைக்கிறியள்.

 

சீமானோ வைக்கோவோ இலங்கைத் தமிழர்களது விடுதலைக்காக போராடுகிறார்கள் என்பதற்காக அவர்கள் செய்வதெல்லாம் சரி என எப்படிக்கூறுவது.

 

கூடன்குளத்தில் அணு உலையைக் கட்டி அங்கு சேரும் அணுக்கதிர் செறிவுள்ள தண்ணீரை மீண்டும் கடலுக்குள் கொட்டுகிறார்கள் இதை யார் அங்கு கேட்ப்பது?

 

கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கிறோம் எனக்கூறி கடலுக்குள் இருந்து உப்புச் செறிவு அதிகமாக இல்லாத நீரை எடுத்து பின்னர் நன்நீர் தயாரித்ததன் பின்னரான உப்பு அடர்த்திகூடிய நீரை மீண்டும் கடலுக்குள் விடுகிறார்களே இதை யார் கேட்பது?

 

இன்று தமிழீழத்தில் மருதங்கேணியில் கடல்நீரிலிருந்து குடிதண்ணீர் தயாரிக்கிறார்களே இதற்கான தொழிநுட்பம் என்ன கழிவுநீரை என்ன செய்கிறார்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எப்படி இருக்கின்றது என யாராவது கேட்டீர்களா? இன்று தமிழீழத்தில் குடாநாட்டின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்துள்ளதே அதற்குக் காரணம் சுண்ணாக மின்பிறப்பாக்கிகள், இதற்காக ஒட்டுமொத்த தமிழர்களும் கிளர்ந்திருக்கவேணாம்?

 

என்ன நடந்தது?

 

இதே நிலை மருதங்கேணிக் கடற்கரைகளில் மீன் பாடு குறைவது ஆரம்பித்தால் தான் அங்கு பிரச்சனை இருப்பது வெளிப்படும்.

 

 

முதலில் இந்திய மீனவர்கள் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும்.

 

நீங்கள் தொப்புள்கொடி உறவாக இருக்கலாம் அதற்காக எமது வளங்களை அழிக்க்கும்வண்ணமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது.

 

எமது கடற்பரப்பில் பாவனைக்கு அனுமதிக்காத படகுகளையும் வலைகளையும் பாவித்துமீன்பிடியில் ஈடுபடுவதையும் எமது மீனவர்களது வலைகளையும்  வாழ்வாதாரத்தையும் அறுத்தெறிவதை எவராலும் அனுமதிக்க முடியாது.

 

இரண்டு வாரங்களுக்கு முன்பு வடமராட்சிக்கடலில் எமது மீனவர்களைத் தாக்கும் துணிவை எவந்தந்தான் உங்களுக்கு?

 

முதலில், தேர்தல்லில் பணத்துக்காகவும் டாஸ்மார்க் சரக்குக்காகவும் வாக்களிப்பதை விட்டொழியுங்கள்.

சினிமாக் கழிசடைகளது கட்டவுட்டுக்கு பால் வார்க்கும் வளக்கத்தை அறவே ஒழியுங்கள் (எங்கள் ஊரிலும் இப்போ இக்கலாச்சாரம் தொடங்கியிருப்பதென்பது வேறுவிடையம்)

 

சுயமாகச் சிந்தியுங்கள், உங்களது உழைப்பைச் சுரண்டும் சசிகலாக்களையும், ரி ஆர் பாலுக்களையும் இனங்காணுங்கள்.

 

இயற்கையை அழிக்க முயற்சிக்காது நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

 

 

 

 

முதலில் இந்திய மீனவர்கள் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும்.

 

நீங்கள் தொப்புள்கொடி உறவாக இருக்கலாம் அதற்காக எமது வளங்களை அழிக்க்கும்வண்ணமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது.

 

எமது கடற்பரப்பில் பாவனைக்கு அனுமதிக்காத படகுகளையும் வலைகளையும் பாவித்துமீன்பிடியில் ஈடுபடுவதையும் எமது மீனவர்களது வலைகளையும்  வாழ்வாதாரத்தையும் அறுத்தெறிவதை எவராலும் அனுமதிக்க முடியாது.

 

இரண்டு வாரங்களுக்கு முன்பு வடமராட்சிக்கடலில் எமது மீனவர்களைத் தாக்கும் துணிவை எவந்தந்தான் உங்களுக்கு?

 

முதலில், தேர்தல்லில் பணத்துக்காகவும் டாஸ்மார்க் சரக்குக்காகவும் வாக்களிப்பதை விட்டொழியுங்கள்.

சினிமாக் கழிசடைகளது கட்டவுட்டுக்கு பால் வார்க்கும் வளக்கத்தை அறவே ஒழியுங்கள் (எங்கள் ஊரிலும் இப்போ இக்கலாச்சாரம் தொடங்கியிருப்பதென்பது வேறுவிடையம்)

 

சுயமாகச் சிந்தியுங்கள், உங்களது உழைப்பைச் சுரண்டும் சசிகலாக்களையும், ரி ஆர் பாலுக்களையும் இனங்காணுங்கள்.

 

இயற்கையை அழிக்க முயற்சிக்காது நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

 

நன்றி
 
நிதர்சனமான துணிச்சலான பதிவு.

பேட்டியின் காணொளி

 


574f2dae7c13dab28cf68b32ccd4369a

இணைப்பிற்கு நன்றி நிழலி. ரணில் மீனவர் பிரச்சனை சம்பந்தமாகச் சொல்வதைப் போன்றதொரு கருத்தைதான் மோடியும் வைத்திருக்கிறார். ( எல்லை தாண்டி மீன் பிடிப்பது தவறு என்பது)

  • கருத்துக்கள உறவுகள்

சுடுவது தொடர்பில் ரணில் கூறியது கண்டனத்துக்கு உரியதுதான்.

ஆனால், இங்கே "இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் கடல் தொழிலாளர்களைத்தான் சுடுவோம்" என்கின்றார்.

அண்மையில் வடமராட்சி கடல் தொழிலாளர்கள் மீது தாக்குதலை நடத்திய தமிழ்நாட்டு கடல் தொழிலாளர்கள் தொடர்பில் எத்தகைய பதிலை யாழ். கள நண்பர்கள் வைத்து இருக்கின்றீர்கள்?

தீவுப் பகுதிக்கு நான் சென்று இருந்த போது, அங்கே உள்ள கடல் தொழிலாளர்கள் "கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் எமது கடல் தொழிலாளர்கள் என நம்புக்கின்றீர்களா" என என்னிடம் கேட்ட போது, "நானும் ஓம், அப்படித்தான் என நான் நம்புகின்றேன்" என்றேன்.

அப்போது, அங்கே நின்ற கடல் தொழிலாளர்களில் ஒருவர், "இல்லை அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு கடல் தொழிலாளர்கள், தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளை பாவித்து எமது கடல் வளங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போகின்றனர்" என கவலையோடு தெரிவித்தார்.

இந்த இடத்தில் சிறிலங்கா கடற்படையானது தமிழ் கடல் தொழிலாளர்களின் உற்ற நண்பனாகவே திகழ்கின்றது. எதனையுயே எதிர்த்து, எதிர்த்து எழுதியே பழகிய யாழ். கள நண்பர்களே, உண்மை நிலவரத்தினை அங்கே உள்ளவர்களிடம் கேட்டு அறிந்தோ அல்லது நேரில் சென்று அறிந்து வந்த பின்னர் எழுதுங்கள்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் காரைநகர் கடற்கரைக்கு வந்து இளநீர் வாங்கிக் குடித்துக் கொண்டு இருந்த போது அந்த இடத்துக்கு வந்த விடுதலைப் புலிகள் அவர்களை எச்சரித்து அனுப்பி இருந்தனர்.

தமிழ்நாட்டு கடல் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தி.மு.க. வின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு போன்றவர்களுக்காக தொழில் புரிபவர்கள். இவ்வாறு பல தி.மு.க., அ.தி.மு.க.மற்றும் பிற கட்சிகளின் தொழிலதிபர்களின் இழுவைப் படகுகளை கொண்டு வந்தே தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகள் ஊடாக தமிழர் வளங்களை அள்ளிக் கொண்டு செல்கின்றனர்.

இந்த இடத்தில் ரணில் அல்ல மகிந்த கூட இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து இருந்தால் நாம் அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

Edited by nirmalan

இணைப்பிற்கு நன்றி நிழலி. ரணில் மீனவர் பிரச்சனை சம்பந்தமாகச் சொல்வதைப் போன்றதொரு கருத்தைதான் மோடியும் வைத்திருக்கிறார். ( எல்லை தாண்டி மீன் பிடிப்பது தவறு என்பது)

 

ரணிலின் கூற்றுக்கு கண்டனத்துடன் முக்கியமான ஒரு விடயம்:- தமிழ் நாட்டு மீனவர்களின் வலைகள் உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்டவை எனக்கூறலாம்.அந்த வலையினால் றோலர் மூலமான மீன்பிடியானது  கடலில் உள்ள பவளப்பாறைகள் முதல் எல்லாவற்றையும் அழித்துவிடும் என்பது வெளியே வராத செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு ரணிலைப் பிடிக்காது என்பதற்காக இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எதுவும் செய்யக்கூடாது என்பது, அற்புதமான கருத்து. விடுங்கண்ணே.. உள்நாட்டில் நாங்க பாத்துக்கிறம்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் கருத்தில் சட்டப்படியான தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.. இலங்கையில் பயங்கரவாத சட்டம் அல்லது அவசரகாலச் சட்டம் இன்னும் இருப்பதாக நினைக்கிறேன்.. அதன்படி யாரை எது வேண்டுமானாலும் செய்யலாம்.. இந்தியா குழறுவதை விட்டுவிட்டு இத்தகைய ஜனநாயகத்துக்குப் புறம்பான சட்டங்களை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்கலாம்..

பி.கு.: ரணில் மீதான காங்கிரசின் தாக்குதலுக்கு மீனவர் பிரச்சினை காரணம் என நினைக்கவில்லை.. அமைதிப்படையை இழுத்துவிட்டதே காரணம் என நினைக்கிறேன்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறும் இலங்கை மீனவர்களையும் சுடுவதில் தவறில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறி அவுசி போபவர்களையும் சுடலாம்.

அத்துமீறும் இலங்கை மீனவர்களையும் சுடுவதில் தவறில்லை!

 

அத்து மீறுபவர்கள் தமிழர்களாயின் சுடலாமே.......அவர்கள் அனாதைகள்...........அகதிகள்.......இலங்கை இந்தியத்தமிழர்களுக்கு பொருந்தும்

Edited by BLUE BIRD

 பாகிஸ்தான் பிரதமர் 'இந்திய மீனவர்களை சுடுவேன்' என சொல்லியிருந்தால் இந்நேரம் 56" விடைச்சிக்கிட்டு கிளம்பியிருக்கும். 
பாரத் மாதா கீ ஜெய்! பாரத் மாதா கீ தனுஷ்! பாரத் மாதா கீ விஷால்! 

 

பேசியது நட்பு நாடான இலங்கை என்பதால எதையும் கண்டுக்காம அங்க டூர் போக பத்து லட்ச ரூபாய் கோட்டு போடலாமா? இல்ல வழக்கம் போல எப்பவும் போடும் துப்பட்டா இல்லாத சுடிதார் போடலாமா? என தீவிர ஆலோசனையில் இருக்கிறது 23ம் புலிகேசியின் அலுவலகம்.

பாகிஸ்தானை வைத்து அரசியல் செய்வதுபோல இலங்கையை வைத்தும் வடநாட்டில் அரசியல் செய்யலாம் என்ற நிலை இருந்திருந்தால் டெல்லியில் இந்நேரம் கடுமையான எதிர்ப்பு வந்திருக்கும்.

எமக்கு ரணிலைப் பிடிக்காது என்பதற்காக இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எதுவும் செய்யக்கூடாது என்பது, அற்புதமான கருத்து. விடுங்கண்ணே.. உள்நாட்டில் நாங்க பாத்துக்கிறம்.

உள்நாட்டு மக்கள் பார்த்துகுவாங்க என்றால் யார்? அங்கு நிரந்தரமாக கஷடத்தின் மத்தியிலும் தொழில் செய்து சீவிக்கும் மக்களா? அல்லது வெளிநாட்டில் உழைத்து அங்கு வீடும் வாங்கி தற்போது தமது இறுதிக்காலத்தில் சொகுசாக வாழ வெளி நாட்டு பணத்துடன் இரண்டு கடவுச்சீட்டுடன திரும்பியிருப்பவர்களா? அப்படியாயின் நாளை நாட்டிற்கு அவ்வாறு திரும்ப போகப்போகும் வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இங்கு கருத்துதெரிவிக்கலாம். வெளிநாட்டில் உள்ளவர்கள் கருத்து சொல்லக்கூடாது என்று இங்கு அடிக்கடி சொல்பவரகள் இந்த இரண்டு கடவுச்சீட்டு வெளிநாட்டு பேர்வளிகள் தான்.

Edited by trinco

அத்துமீறும் இலங்கை மீனவர்களையும் சுடுவதில் தவறில்லை!

அண்ணே இவ்வாறான மீன் பிடிகடல்வள பிரச்சனைகள் உலகிலே பல நாடுகளில் இருக்கின்றன. அந்தந்த நாடுகளில் அந்த மீனவர் களின் இன மக்களே ஆட்சி அதிகாரத்திலும் இருப்பதால் பிரச்சனைகள் அந்த அரசாங்கங்களால் சிறப்பாக கையாளப்படுகிறன்றன. ஆனால் இங்கு இரண்டு பக்கத்திலும் பாதிக்கப்படுவார்கள் ஆட்சி அதிகாரம் அற்ற தமிழர்கள் என்பதால் பிரச்சனையை இருபகுதி தமிழ் மீனவராகளும் ஆத்திரமடைந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் அளவிற்கு திட்டமிட்டு வளரவிடப்பட்டுள்ளது. இது இரு பகுதி தமிழ்மக்களையும் ஆத்திரமடைந்து ஒருவரை ஒருவர் எதிரிகளாக பார்க்கும் வரை இந்திய இலங்கை அரசுகளால் தொடர்ந்து சிறப்பாக கையாளப்படும். நம்ம யாழ் கள நண்பர்களும் இலங்கை இந்திய அரசுகளின் நோக்கத்தை விரைவாக நிறைவேற்ற தம் பங்கிற்கு தம்மிடம் கையிருப்பில் உள்ள எண்ணெயையை ஊற்றி அரசை மகிழ்சசிப்படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அலாஸ்காவிற்கு அருகில் ரஷய எல்லையும் உள்ளது. அதற்காக அமெரிக்கர்களும், ரஷ்யர்களும் அடித்துகொள்ளவில்லை. படகுகளில் ரேடார் பொருத்தி பிரச்சினைய முடித்துக் கொள்கிறார்கள்.

அத்துமீறும் இலங்கை மீனவர்களையும் சுடுவதில் தவறில்லை!

அதற்கான சட்ட உரிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா??

ரணில் விக்கிரமசிங்காவின் முழுமையான பேட்டி

 

 

இப்பேட்டி சம்பந்தமான கேள்விகளுக்கு  பதிலளிக்கும் காசி ஆனந்தன்.

 

தூத்துக்குடி மீனவர்கள் நாகபட்டினம் போய் மீன் பிடித்தால் வாள் வீச்சு தான் நடக்கும்.
 
மன்னார் மீனவர்கள் யாழ்ப்பாணம் போய் மீன் பிடித்தாலும் சண்டை சச்சரவு தான்.
 
அறிவுறை: மற்றவர் சொத்துக்கு ஆசைப்படாதீர்கள்.  
  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் சர்வதேசம் தடைவிதித்த பொறிகளை எல்லாம் பயன்படுத்தி வடக்குக் கிழக்கு கடலில் மீன்பிடிப்பது பற்றி ரணில் என்ன சொல்ல விளைகிறார் என்று கேட்க.. ஆசை.

 

மேலும்.. சிங்கள மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்து இந்தியாவால் கைது செய்யபட்டுள்ளார்கள். இதுவரை எவரும் சுட்டுக் கொல்லப்பட்டதில்லை.

 

மீன் வளப் பிரச்சனையை புரிந்துணர்வுகள் மூலம் தாயக தமிழக மக்கள் தீர்த்துக் கொள்வதே நல்லது. இடையில் ரணில் சிங்கள மீனவர்கள் அவர்களின் கடற்படையின் ஆதிக்கம் உள்ளது என்ற வகையில் தமிழர்களின் வளர்த்தை கபளீகரம் செய்ய அனுமதிக்க முடியாது. முதல் ரணில் அதற்கு ஒரு முடிவு கட்டட்டும்.

 

வடக்குக் கிழக்கு கரையோரங்களில்... சிங்கள கடற்படை முகாம்களுக்கு அபகரித்த காணிகளைக் கூட விட்டுக்கொடுக்க முடியாத ரணில்.. வடக்கு மீனவர்கள் மீது காட்டும்.. கருசணை என்பது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதைதான்.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.