Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு

Featured Replies

இந்த அதிகாரத்தை யார் தங்களுக்கு தந்தது?

சோறு

  • Replies 157
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
செஞ்சோற்றுக் கடன்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால் என்றோ பிரித்தானிய கடவுச்சீட்டு கிடைக்கும் முன், நீங்கள் மனதளவில் புழுங்கிய படியேனும் நீங்கள் ஒரு சொறிலங்கன் என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்டே இருப்பீர்கள்.

இலங்கை என் நாட்டை ஆக்கிரமித்துள்ளது எனவே இலங்கை ஐடியை காட்டி ஏஎல் எடுக்க மாட்டேன் என்று நீங்களோ நானோ சொல்லவில்லை.

நான் இலங்கையன் இல்லை எனவே அந்த கடவுச்சீட்டை பாவித்து யூகே வரமாடேன் என்று நாம் சொல்லவில்லை.

எமக்கு, எம் சுயநலனுக்கு தேவைப்பட்ட போது, தமிழ் ஈழத்தை தூக்கி வீசிவிட்டு, நாம் சொறிலங்கன் என்பதை ஒத்துக்கொண்டே வாழ்ந்தோம்.

நீங்கள் சொல்லும் other -asian என்பது diversity information forms இல் கேட்பது. ஆனால் naturalisation செய்த பிறகு பிரிடிஸ் பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணிய சமயம் - your previous nationality என்று கேட்டிருப்பார்கள் அதில் Sri Lankan என்றுதானே எழுதினீர்கள்? இப்படி எழுதாமல் விட்டிருந்தால் உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைத்திராது. ஆனால் உயிர் இருந்திருக்கும். யூகேயில் அகால உரிமியுடன் வாழ்க்கை இருந்த்ஹிருக்கும்.

ஆனால் பிரிடிஸ் பாஸ்போர்ட்டும் அது தரும் பிராயாண இலகுதன்மைக்காகவும், மீண்டும் ஒரு முறை உங்கள் வாயாலே உங்களை முன்னாள் சிறீலங்கன் என்று சொல்லிக் கொண்டீர்கள். நாளைக்கு ஒரு செகியூரிட்டி கிளியரண்ஸ் தேவைப்படும் அரச வேலைக்கு போவீர்களானால் அங்கும் கேட்பார்கள். Did you hold any other nationalities previously, if yes list them below என்று. அப்போதும் இந்த அசிங்கத்தையே செய்வீர்கள். நானும் செய்வேன்.

இவ்வளவுதான் எங்கள் கொள்கை பற்று. இப்படி இருக்கையில் இதே ஒத்த காரணங்களுக்காக இரட்டை பிரஜா உரிமை எடுக்க நினப்பவரை துரோகியாக்குவது எப்படி நியாயம்?

அடுத்து, புலிகள் போரில் வெண்டு இப்போ தமிழீழம் இருக்கும் என்றால் - சிறிலங்கா குடியுரிமையா? தமிழ் ஈழ குடிமையா எனும் கேள்வி இருந்தால் அப்போது என் பதில் தமிழ் ஈழக் குடியுரிமை என்பதாயே இருந்திருக்கும். ஏனெண்டால் அப்போது என் ஊர் தமிழ் ஈழம் எனும் அலகில் இருக்கும். அது என் பிறந்த பொன் நாடாய் இருக்கும்.

ஆனால் இப்போ -எதுவுமில்லை என்றானபின் - என் நாடக நான் உலக வரைபடத்தில் இல்லாத ஒரு கற்பனை கருத்தியலை எப்படி கொண்டாட முடியும்?

அர்ஜூன் - இலங்கை என் நாடில்லை என்று சொல்ல சிலருக்கு இருந்தது.

இலங்கையின் இறையாண்மையை மறுத்து, இலங்கை என் நாடில்லை என்றுவரிந்து கொண்டு

போரிட்டு மடிந்து போனார்களே அவர்களுக்கு அந்த தார்மீக உரிமை இருந்தது.

தேவை பட்ட போதெல்லாம் இலங்கை பிரஜைக்குரிய சலுகை, உரிமையை பாவித்து விட்டு, இபோதும் தேவைபடும் போதெல்லாம் முன்னாள் இலங்கை பிரசை என்று சொல்லித்திரியும் எம்போர்ன்றவ்ர்களுக்தான் அந்த உரிமை இல்லை.

தவிரவும் இன்னொருவரை பார்த்து நீ இலங்கை பிரஜை இல்லை என்று சொல்லும் உரிமை எந்த கொம்பனுக்கும் இல்லை என்பதே உண்மை.

இரட்டை பிஜாவுரிமை சட்டம் இலகுவாக இருக்கும்போது எடுத்துகொள்ள முடியுமெண்டால் எடுத்து வையுங்கோ.

நீண்டகாலமா நிரந்தர வதிவிட உரிமையை வைத்திருத்த எனக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இனிமேல் நான் அவுஸ்திரேலிய பிரஜை அனாலும் இலங்கை குடியுரிமையை இழக்க வேண்டியதில்லை. 

இலங்கை நல்ல நாடா இல்ல கொடாத நாடா என்று இங்கே வந்து விவாதிச்சு பலன் இல்லை.

அறுபது வருட அரசியல் போராட்டம் அதில் முப்பது வருடங்கள் ஆயுத போராட்டம். இலட்ச கணக்கில் உயிரிழப்புகள் அவலங்கள் இதெல்லாம் இலங்கையை ஒரு நல்ல நாடாக கட்ட வில்லை, இருந்தாலும் அதுதான் எனக்கும் தேசம்.

எனது தேசத்தின் மீது எனக்கு இருக்கும் உரிமையை என்னால் கைவிட முடியாது. உலகில் எந்த தேசமும் எனது தேசம் போல் வராது. எனது தந்தை தாய் வாழ்ந்த இடத்தில் தான் எனது இறுதி காலம் இருக்கும் எனது உடல் அங்கேதான் சங்கமிக்கும். 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா மாதா சொறி சொறின்னு சொறியுறா.. இந்த தலைப்பில. பாவம்.. அவாக்கு சொறி சிரங்கு போல. :D :D

அப்பே லங்காவ என்று சிங்களவன் பெருமையா சொல்லிக்கிறான்.. காரணம்.. அதை அவனுடைய அரசே.. பெளத்த சிங்கள நாடு என்று அடையாளப்படுத்தி இருப்பதாலும் கூட. நாம ஏன் சொறிஞ்சு கொடுக்கிறம்.. சொறிலங்கா மாதாவை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சொறிலங்காவின் தீவிர விசுவாசிகளால் வந்த வினை .

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால் என்றோ பிரித்தானிய கடவுச்சீட்டு கிடைக்கும் முன், நீங்கள் மனதளவில் புழுங்கிய படியேனும் நீங்கள் ஒரு சொறிலங்கன் என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்டே இருப்பீர்கள்.

இலங்கை என் நாட்டை ஆக்கிரமித்துள்ளது எனவே இலங்கை ஐடியை காட்டி ஏஎல் எடுக்க மாட்டேன் என்று நீங்களோ நானோ சொல்லவில்லை.

நான் இலங்கையன் இல்லை எனவே அந்த கடவுச்சீட்டை பாவித்து யூகே வரமாடேன் என்று நாம் சொல்லவில்லை.

எமக்கு, எம் சுயநலனுக்கு தேவைப்பட்ட போது, தமிழ் ஈழத்தை தூக்கி வீசிவிட்டு, நாம் சொறிலங்கன் என்பதை ஒத்துக்கொண்டே வாழ்ந்தோம்.

நீங்கள் சொல்லும் other -asian என்பது diversity information forms இல் கேட்பது. ஆனால் naturalisation செய்த பிறகு பிரிடிஸ் பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணிய சமயம் - your previous nationality என்று கேட்டிருப்பார்கள் அதில் Sri Lankan என்றுதானே எழுதினீர்கள்? இப்படி எழுதாமல் விட்டிருந்தால் உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைத்திராது. ஆனால் உயிர் இருந்திருக்கும். யூகேயில் அகால உரிமியுடன் வாழ்க்கை இருந்த்ஹிருக்கும்.

ஆனால் பிரிடிஸ் பாஸ்போர்ட்டும் அது தரும் பிராயாண இலகுதன்மைக்காகவும், மீண்டும் ஒரு முறை உங்கள் வாயாலே உங்களை முன்னாள் சிறீலங்கன் என்று சொல்லிக் கொண்டீர்கள். நாளைக்கு ஒரு செகியூரிட்டி கிளியரண்ஸ் தேவைப்படும் அரச வேலைக்கு போவீர்களானால் அங்கும் கேட்பார்கள். Did you hold any other nationalities previously, if yes list them below என்று. அப்போதும் இந்த அசிங்கத்தையே செய்வீர்கள். நானும் செய்வேன்.

இவ்வளவுதான் எங்கள் கொள்கை பற்று. இப்படி இருக்கையில் இதே ஒத்த காரணங்களுக்காக இரட்டை பிரஜா உரிமை எடுக்க நினப்பவரை துரோகியாக்குவது எப்படி நியாயம்?

அடுத்து, புலிகள் போரில் வெண்டு இப்போ தமிழீழம் இருக்கும் என்றால் - சிறிலங்கா குடியுரிமையா? தமிழ் ஈழ குடிமையா எனும் கேள்வி இருந்தால் அப்போது என் பதில் தமிழ் ஈழக் குடியுரிமை என்பதாயே இருந்திருக்கும். ஏனெண்டால் அப்போது என் ஊர் தமிழ் ஈழம் எனும் அலகில் இருக்கும். அது என் பிறந்த பொன் நாடாய் இருக்கும்.

ஆனால் இப்போ -எதுவுமில்லை என்றானபின் - என் நாடக நான் உலக வரைபடத்தில் இல்லாத ஒரு கற்பனை கருத்தியலை எப்படி கொண்டாட முடியும்?

அர்ஜூன் - இலங்கை என் நாடில்லை என்று சொல்ல சிலருக்கு இருந்தது.

இலங்கையின் இறையாண்மையை மறுத்து, இலங்கை என் நாடில்லை என்றுவரிந்து கொண்டு

போரிட்டு மடிந்து போனார்களே அவர்களுக்கு அந்த தார்மீக உரிமை இருந்தது.

தேவை பட்ட போதெல்லாம் இலங்கை பிரஜைக்குரிய சலுகை, உரிமையை பாவித்து விட்டு, இபோதும் தேவைபடும் போதெல்லாம் முன்னாள் இலங்கை பிரசை என்று சொல்லித்திரியும் எம்போர்ன்றவ்ர்களுக்தான் அந்த உரிமை இல்லை.

தவிரவும் இன்னொருவரை பார்த்து நீ இலங்கை பிரஜை இல்லை என்று சொல்லும் உரிமை எந்த கொம்பனுக்கும் இல்லை என்பதே உண்மை.

பாலஸ்தீனர்களுக்கு பாலஸ்த்தீனிய அதிகார சபையால் வழங்கப்படும் கடவுச்சீட்டை அமெரிக்கா பயணப் பத்திரமாகவே கருதுகின்றது. அக்கடவுச்சீட்டை வைத்திருப்பதனால் அவர்களைப் பாலஸ்த்தீனக் குடியுரிமையுடையவர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை.

இது போலத்தான் சிறிலங்கன் குடியுரிமையையும். சிறிலங்கன் கடவுச்சீட்டு எடுக்க சிறிலங்கன் எம்பஸிக்குப் போன இருதடைவையும் அங்கிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கம் வந்தது. பிடிகாத செயலைச் செய்யும்போது உடம்பும் மனசும் கூசியது. ஆனாலும் சிறிலங்கா என்ற நாட்டில் பிறந்தமையால் சிறிலங்கன் என்ற அடையாளத்தை பயணங்களின்போது விருப்பமின்றியே பாவிக்கவேண்டிய தேவை இருந்தது. அதனால்தான் அதை எவ்வளவு விரைவில் தலைமுழுக முடியுமோ அவ்வளவு விரைவில் முழுகியிருந்தேன். ஒருபோதும் என்னை சிறிலங்கன் என பெருமையாக அடையாளப்படுத்துவதில்லை.

இரட்டைக் குடியுரிமை எடுப்பவர்கள் தமது சொந்தக் காரணத்திற்காகவே எடுக்கின்றார்கள். பெரும்பாலும் காணிகள், சொத்துக்கள் உள்ளவர்களும், தொழில்ரீதியான தேவை உள்ளவர்களும், ஒரு மாதத்திற்கு மேல் சிறிலங்காவில் தங்க விரும்புவர்களுமாக இவர்கள் உள்ளார்கள். எனது பிறந்த மண்ணைப் பார்க்க இரண்டு கிழமைக்கு மேல் தேவையில்லை என்பதால் தனிப்பட எனக்கு இரட்டைக் குடியுரிமையில் நாட்டமில்லை.

அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு, அங்கு வாழும் தமிழர்கள் தாமும் சிறிலங்கன் என்று பெருமிதத்துடன் சொல்லும் காலம்வரும்போது நானும் இரட்டைக்குடியுரிமை வைத்திருக்க விரும்பலாம்.

அர்ஜுன், அம்மாவையும் நாட்டையும் ஒரே தராசில் வைக்கமுடியாது. அம்மா உணர்வோடு சம்பந்தப்பட்டது. நாடு அரசியலோடு சம்பந்தப்பட்டது. உங்கள் வாதத்தைப் பார்த்தபோது சாதி அடையாளத்தைக் கோரும் இந்திய விண்ணப்பப் படிவங்களின் நினைவுதான் வந்தது (இப்போதும் அந்த நடைமுறை உள்ளதா தெரியவில்லை).

சாதிகளை மறுக்கும் ஒருவரைப் பார்த்து "நீ இன்ன சாதியில் பிறந்தமையால் நீ அதுதான்" என்று சொன்னமாதிரி இருந்தது.

அரசியலோடும், அதிகாரத்தோடும் சம்பந்தப்பட்டவற்றை எப்போதும் மாற்றலாம். Ceylonese என்று இருந்தவர்கள் Srilankan என்று மாறியது போன்று இன்று சிறிலங்கன் என்று இருப்பவர்கள் நாளை Lankans, Tamils என்று அடையாளபடுத்தும் நிலை வரலாம்.

நான் சொறிலங்கா என்று சொல்லுவதில்லை. "சீ"லங்கா என்றுதான் சொல்லுவது.

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி இருக்கு என்றால் ,

அம்மா எனக்கு பால் தரவில்லை ,என்னை அடித்தார் ,துன்புறுத்தினார் ,ஒழுங்காக படிப்பிக்கவில்லை ஆனபடியால் அவர் எனது அம்மா இல்லை .

அவர் சரியான அம்மாவாக அவர் நடக்கவில்லையே தவிர அவர்தான் உங்கள் அம்மா 

அதே போல சிங்களம் சரியாக நடக்க்கவில்லை என்பதற்காக  இலங்கை எனது நாடு இல்லை என்று ஆகிவிடாது .

இலங்கை தான் இலங்கை தமிழர்களின் நாடு அதை எந்த கொம்பனாலும் இல்லை என்று சொல்லவோ மாற்றவோ முடியாது .

நீங்கள் இலங்கையில் பிறந்தால் ...
நீங்கள் இலங்கையில் பிறந்தவர்கள் !
 
இதவிட இரத்தின சுருக்கமா வேறு ஒரு கருத்தை நான் வாசித்ததில்லை.
அண்ணே சொல்கிற விடயம் பலருக்கு புரியபோவதில்லை.
அண்ணரின் அரசியல் கருத்துகள் போல் அரசியல் அறிந்தவர்களுக்குத்தான் அது புரியும்.
 
இது இன்னும் பிறக்கதவர்களுக்கே புரியக்கூடியது. 
 
நீங்கள் இலங்கையில் பிறந்தால் ....
நீங்கள் இலங்கையில் பிறந்தவர்கள் !
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு  சுயநலமானவர்கள் நாம்..

ஒரு அம்மாவின் மடியிலிருந்து

அம்மா அம்மா என்று கொஞ்சியபடி

அனைத்து வளங்களையும்

சுதந்திரங்களையும் அவளது அனுமதியுடன் அனுபவித்தபடி...

கொலைவெறியுடன் அடித்துரத்திய

இன்றும் அப்படியே இருப்பவளை அம்மா என்கின்றோம்

அவள் தான் வேண்டும் என்கின்றோம்..... :(  :(  :(

அவள் தான் வேண்டும் என்கின்றோம்..... :(:(:(

உண்மை விசுகு. உண்மையான தாயை, தாயகத்தை பழித்து கருத்து எழுதுபவர்களே சொறியை தனது தாய் தாயகம் என்று சொறிந்து கொள்கிறார்கள்.

சற்று அறிவுபூர்வமாக் உரையாடலாம் என்றால் முக்கால்வாசி அதே அதே .
 
ஓடிவந்தவர்கள் வெளிநாட்டு பிரஜை ஆனாவர்கள் எதையும் கொட்டிக்கொண்டு இருக்கலாம் .நாட்டில் இருப்பவர்கள் இன்றுவரை அரசியல் செய்வதும் போராடுவதும் இலங்கை என்ற நாட்டில் தமது உரிமைகளுகாத்தான் .
சம்பந்தர் தொட்டு விக்கி வரை அதற்கான அரசியல் தான் செய்கின்றார்கள் .
 
ஏன் விடுதலை புலிகள் பேச்சு வார்த்தைகளுக்கு போனதே இலங்கை என்ற நாட்டிற்குள் தமக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தீர்விற்காகவே.
 
வர வர அருவரிக்கு பாடம் எடுப்பது போல ஆச்சுது எனது நிலைமை .

**************

நியானி: சீண்டும் வரி தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் பாசத்தை புரிந்து கொள்ளவும் பள்ளிக்கூடமா??

அண்ணைக்கு எங்கேயோ பிரச்சினை என்று நினைக்கிறன்.....??

தானும் குளம்பி

மற்றவர்களையும் குளப்பிறார்... :(

சற்று அறிவுபூர்வமாக் உரையாடலாம் என்றால் முக்கால்வாசி அதே அதே .

ஓடிவந்தவர்கள் வெளிநாட்டு பிரஜை ஆனாவர்கள் எதையும் கொட்டிக்கொண்டு இருக்கலாம் .நாட்டில் இருப்பவர்கள் இன்றுவரை அரசியல் செய்வதும் போராடுவதும் இலங்கை என்ற நாட்டில் தமது உரிமைகளுகாத்தான் .

சம்பந்தர் தொட்டு விக்கி வரை அதற்கான அரசியல் தான் செய்கின்றார்கள் .

ஏன் விடுதலை புலிகள் பேச்சு வார்த்தைகளுக்கு போனதே இலங்கை என்ற நாட்டிற்குள் தமக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தீர்விற்காகவே.

வர வர அருவரிக்கு பாடம் எடுப்பது போல ஆச்சுது எனது நிலைமை .

***********

உங்க பிரச்சனை விடிச்சா பொழுதுபட்டா புலிய திட்டணும். இல்லாட்டிக்கு உங்களுக்கு கோபம் வரும். அது யாழ்களத்தில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் தெரிந்த விடயம்.

தனது கோபத்தை மற்றவர்களிடன்  காட்ட மற்றவர்களுக்கு அறிவு இல்லை அவர்களை இழிவாக பேசுவது  அடிமுட்டாள்கள் செய்யும் வேலை.  நீங்கள் அறிவுடையவர் என்று நீங்களே உங்களை கூறுவது உண்மை என்றால் நீங்கள்  அதை செய்யகூடாதே? ஆனால் அடிக்கடி அப்படி செய்கின்றீர்களே. ஏன்? அப்படியானால் நீங்கள் ...................................................

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

Edited by நியானி

எவ்வளவு  சுயநலமானவர்கள் நாம்..

ஒரு அம்மாவின் மடியிலிருந்து

அம்மா அம்மா என்று கொஞ்சியபடி

அனைத்து வளங்களையும்

சுதந்திரங்களையும் அவளது அனுமதியுடன் அனுபவித்தபடி...

கொலைவெறியுடன் அடித்துரத்திய

இன்றும் அப்படியே இருப்பவளை அம்மா என்கின்றோம்

அவள் தான் வேண்டும் என்கின்றோம்..... :(  :(  :(

அப்ப மாற்றான் தாய் அம்மாவாகி விட்டாவா?
 
என்னைப் பொறுத்தவரை அப்பா எத்தனை ...களை வேணும் என்றாலும் வைத்திருக்கட்டும் எனது அம்மா இலங்கைதான்.
 
அதுசரி இலங்கையே(அம்மா) தாய்நாடு இல்லை அப்புறம் ஏன் பாகப் பிரிவினை(தனி ஈழம்). அம்மா இளிச்ச வாயா? 

நிர்வாகம் இந்த திரியை மூடிவிடலாமே !

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மாற்றான் தாய் அம்மாவாகி விட்டாவா?
 
என்னைப் பொறுத்தவரை அப்பா எத்தனை ...களை வேணும் என்றாலும் வைத்திருக்கட்டும் எனது அம்மா இலங்கைதான்.
 
அதுசரி இலங்கையே(அம்மா) தாய்நாடு இல்லை அப்புறம் ஏன் பாகப் பிரிவினை(தனி ஈழம்). அம்மா இளிச்ச வாயா? 

நீங்கள் சிறீலங்காவையும்

தமிழீழத்தையும்  சேர்த்து குழம்புகிறீர்கள் என நினைக்கின்றேன்....

தமிழீழத்தின் முதல் கடவுச்சீட்டை எடுக்க காத்திருக்கின்றேன்

அதேநேரம்  இலங்கை என்பது எப்பொழுது சிறீலங்கா ஆச்சோ

அன்றிலிருந்து அதை வெறுக்கின்றேன்

சிறீலங்கா என்பதற்குள் தமிழீழம் வராது....

அதை அவர்கள் அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள்

தமிழர்கள் 1977 இலிருந்து

சிறீலங்கா எமது நாடன்று என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்

புலம் பற்றி  நான் சொல்வது

பிறந்த இடத்திலிருந்து கொலைவெறியோடு கலைக்கப்பட்ட எம்மை 

அரவணைத்து

அனைத்தும் தந்து தமது பிரசைகளுக்கு உள்ள அத்தனை சுதந்திரமும் தந்து வைத்திருக்கும் நாடுகளை.

அவற்றை நாம் தூற்றினால் (சிறீலங்காதான் எனது தாய் என்பதன் மூலம்) நன்றி  மறந்தவர்களாவோம்...

சரி விசுகு எமக்குத்தான் புதியதாக ஒரு அம்மா கிடைச்சாச்சு. எனது உண்மையான அம்மாவின் பிள்ளைகளிற்கு என்ன தீர்வு. அதாவது இன்னமும் இன்னொரு அம்மா கிடைக்காத தாயக உறவுகளிற்கு.

ஏன் வெறுத்துப்போன அம்மாவின் பிள்ளைகளிற்கு உதவி செய்கிறீர்கள்.

எங்கோ லொஜிக் இடிக்குதே.

அப்ப மாற்றான் தாய் அம்மாவாகி விட்டாவா?
 
என்னைப் பொறுத்தவரை அப்பா எத்தனை ...களை வேணும் என்றாலும் வைத்திருக்கட்டும் எனது அம்மா இலங்கைதான்.
 
அதுசரி இலங்கையே(அம்மா) தாய்நாடு இல்லை அப்புறம் ஏன் பாகப் பிரிவினை(தனி ஈழம்). அம்மா இளிச்ச வாயா? 

அம்மா என்றும் ஈழம் தான். அந்த அம்மா ஆக்கிரமிபாளர்களின் கைகளில் சிக்கி அதற்காக  மீட்க விடுதலை போராட்டம் எல்லாம் நடந்து தோல்வியடைந்து ............................................. எதுவுமே தெரியாதது போல  அதை பாகப்பிரிவினை என்று சொல்கிறீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

சரி விசுகு எமக்குத்தான் புதியதாக ஒரு அம்மா கிடைச்சாச்சு.

எனது உண்மையான அம்மாவின் பிள்ளைகளிற்கு என்ன தீர்வு.

அதாவது இன்னமும் இன்னொரு அம்மா கிடைக்காத தாயக உறவுகளிற்கு.

ஏன் வெறுத்துப்போன அம்மாவின் பிள்ளைகளிற்கு உதவி செய்கிறீர்கள்.

எங்கோ லொஜிக் இடிக்குதே.

சிறீலங்காப்பிள்ளைகளுக்கு ஒரு போதும் உதவியதில்லை..

ஈழம் தான் பெற்றெடுத்த அம்மா

அதில் என் உறவுகள்

அவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வு

பொருளாதார  மேம்பாடு

அதை ஆக்கிரமித்திருக்கும் பகை ஓடணும் இதுதான் எனது கனவு....

சிறீலங்கா எமது தாய்நாடு 

அம்மா என்று சொல்வதன் ஊடாக 

அதன் வஞ்சனையையும்

எம்மை கொலைவெறியுடன்  கலைத்துவிட்ட பாதகத்தையும் நாம் ஒத்துக்கொள்வது மட்டுமல்ல

அந்தப்பாதிப்பிலிருந்து எம்மை அடைக்கலம் தந்து காத்து

எமது உயிரைப்பாதுகாத்தவர்களையும் கேவலப்படுத்துகின்றோம்..

சிறீலங்கா எமது தாய்நாடு

அது சொர்க்கபுரி என்பவர்களுக்கு எதற்கையா இரட்டைக்குடியுரிமை

எதற்கு இரண்டு தோணியில் கால்??

புலத்தை விட்டெறியவேண்டியது தானே...??

சுகத்துக்கு அங்க?

பணத்துக்கு இங்க...?

கேவலமாக இல்லை.... :(  :( 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணமார் அநியாயத்துக்கு எகிறி - திரிய பூட்டும் படி ஆக்கா பார்த்துக்கொள்ளவும். இது எனக்கும்தான்.

இரட்டை பிரஜா உரிமை என்பது நாம் இலங்கை குடிகள் என்பதை ஏற்கிறோமா இல்லையா என்பதில் தங்கியுள்ளது.

1) இலங்கை குடிகள் என்பதை ஏற்காதோர் - இரட்டை பிரஜா உரிமை எடாதேயுங்கோ.

2) இலங்கை குடிகள் என உணருவோர் - எடுத்து வையுங்கோ.

இதில் இவ்வளவுதான் விடயம்.

நான் பொதுவாக patriotism is the last refuge of a scoundrel ( நாட்டுப்பற்று என்பது கீழ்தரமானவனின் இறுதிப் புகலிடம்) என நம்புவவன். எனவே தமிழ், நான் தமிழன் என்று நான் ஓவராய் உணர்சி வசப்படுவதில்லை. அதே போல் நான் சிறீலங்கன் என்றும் நெக்குருகுவதில்லை. இலங்கை கொடியை ஆட்டுவதும் இல்லை. நமோ நமோ மாதா பாடும் போது கண்கள் பனிப்பதும் இல்லை. அதுக்காக இலங்கையை சொறிலங்கா என்று திட்டும் வன்மமும் என்னிடம் இல்லை.

துடுப்பாட்டத்தில் கூட இங்கிலாந்தையோ இலங்கையையையோ ஆதரிப்பதிலை - ஆப்கானிஸ்தான் தான் என் டீம்.

தவிரவும் நான் வாழும் நாட்டை எனக்கு அது தந்த வாய்ப்புகளுக்காக அது எனக்கு என் பிறந்தநாடு செய்த அநியாயங்களை செய்யாது என்னை மனிதனாய் மதிப்பதால் எப்போதும் விசுவாசமாய் இருக்கிறேன். அதுக்காக இங்கிலாந்து கொடியை காரில் பறக்க விடுவதில்லை.

சுருங்க கூறின் - இந்த உலகமயமான காலத்தில் பிரஜா உரிமை என்பது ஸ்மார்ட் போன் போன்றது. சிலருக்கு ஐபோன் பிடிக்கும். சிலருக்கு சாம்சுங். சிலருக்கு சைனா போன். சிலர் மூன்றையும் வைத்திருப்பர்.

இதைதான் வைத்திருக்கணும் வைத்திருக்க கூடாது என்பது அவரவர் தனியுரிமை.

ஆனால் ஒன்று இன்னும் concept நிலையில் இருக்கும் ஒரு போனை வாங்கும் வரை நாங்கள் இப்படித்தான் இருப்போம் என சிலர் இருப்பார்கள். இங்கே கருத்தெழுதும் யாரும் அந்தளவு கொள்கை பிடிப்பாளர் இல்லை என்பது எண் தாழ்மையான கருத்து.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயத்துக்கு எகிறி - திரிய பூட்டும் படி ஆக்கா பார்த்துக்கொள்ளவும். இது எனக்கும்தான்.

இரட்டை பிரஜா உரிமை என்பது நாம் இலங்கை குடிகள் என்பதை ஏற்கிறோமா இல்லையா என்பதில் தங்கியுள்ளது.

1) இலங்கை குடிகள் என்பதை ஏற்காதோர் - இரட்டை பிரஜா உரிமை எடாதேயுங்கோ.

2) இலங்கை குடிகள் என உணருவோர் - எடுத்து வையுங்கோ.

இதில் இவ்வளவுதான் விடயம்.

நான் எடுக்க மாட்டேன்.

Edited by MEERA

முதலில் பெற்ற தாய் ,பிறந்த பொன்னாடு என்று பாட்டு பாடிய பிரசங்கியே இப்ப கீழ் இறங்கி வந்து தாய்நாடுமில்லை ஜஸ்ட் ஸ்மார்ட் போன் தான் என்ற நிலைக்கு வந்திட்டார். அப்ப இனித் திரிய பூட்ட வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

goshan_che உங்களை மாதிரி நேரத்திட்க்கு உருமாறும் கலையை தருமாறு ஆண்டவனிடம் கேட்கிறேன் உங்கள் பழைய பதிவுகளை படித்தபின் கடைசியாக எழுதிய பதிவை படிக்கவும் :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

உங்கள் பிராத்தனை நிறைவேற வாழ்த்துக்கள்.

மீண்டும் என் ஒவ்வொரு கருத்தையும் படியுங்கள் அப்போதாவது நான் சொல்லுவது விளங்குதா என்று பார்ப்போம்.

உங்களுக்கு patriotism என்பதன் பொருள் விளங்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

என் முன்னைய பதிவொன்றிலே நான் சொல்லியிருக்கிறேன் தமிழ் ஈழம் எனும் நாடு இருக்குமானால் அதுவே என் பிறந்த பொன் நாடு என்று.

இலங்கை மீதான என் உணர்வு - நாட்டுப் பற்றல்ல it's not patriotism. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இன்நாடே எனும் வரியில் வரும் அந்த உணர்வு. நான் தவழ்ந்து வளர்ந்த வீட்டில் என் மகன் மண்விளையாட காணும் போது வரும் உணர்வு.

நான் இலங்கையில் வளராமல், பிறந்தவுடன் சோமாலியாவுக்கு போய் இருந்தால் அதே உணர்வு எனக்கு மொகிடிஷ்சுவில் ஒரு வீட்டில் கால் பதிக்கும் போதும் ஏற்பட்டிருக்கும்.

அதுக்காக சோமாலியா மேல் எனக்கு நாட்டுப் பற்று இருப்பதாக அர்த்தப் படாது.

நாட்டின் கொடியை தூக்கி ஆட்டும், முகத்தில் நாட்டின் படத்தை வரையும், தேசிய கீதத்தில் கண் பனிக்கும், நாட்டின் பெயரால் மனித வதைகளை புரியும் நாட்டுப் பற்றுக்கும், நான் சொல்லும் உணர்வுக்கும் பாரிய வித்தியாசம்.

தயவு செய்து இதை சீண்டல் என்று எண்ண வேண்டாம். ஒட்டுக்குழு-புலி/துரோகி-தியாகி, இப்படி கறுப்பு-வெள்ளையாக மட்டுமே விடயங்களை பிரித்துணரும் உங்கள் போன்றோக்கு நான் சொல்லும் இந்த கறுப்புமில்லாத வெள்ளையுமில்லாத grey zone விசயம் புரியாததன் விளைவே, என் கருத்து உங்களுக்கு ஏறுக்கு மாறாக தெரியக் காரணம்.

உண்மையில் கிருபன், மருது, அர்ஜூன், ஜீவன், மீரா, இசை, மலையன், வாலி, சபேசன் போன்ற நான் சொல்ல வரும் விடயத்தை conceptualise பண்ணக் கூடிய மனிதர்களை மனதில் வைத்தே நான் கடைசியாக எழுதிய கருத்தை எழுதியிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்.. நளினியின் மகள் சிறையில் பிறந்ததால் அவவுக்கு சிறையில் காலடி வைக்கும்போது உணர்வுகள் பூத்துக் குலுங்குமா??

உங்களில் சிலரது அளவுகோல்களும், எங்களில் பலரது அளவுகோல்களும் பாரிய அளவுகளில் வித்தியாசப்படுகின்றன. விடயம் அவ்வளவே..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.